19 Apr 2018

பாலியலாக துன்புறுத்தல் என்பது ஒரு உலகலாவிய தீரா நோய்



குழந்தைகள் பாலியலாக துன்புறுத்தப்படுத்தும் சூழல் வளர்ந்த நாடு, வளராத நாடு, ன்றில்லை பெண் என்ற பாலினம் இருக்கும் இடத்தில் எல்லாம் தாக்கப்படுகின்றனர்.

அமெரிக்காவில் ஒவ்வொரு 6.2 நிமிடத்திற்கும் ஒரு பாலியல் வன்புணர்வு நடப்பதாக தெரிகின்து. அந்த தேசத்திலும் 4 வயது பச்சிளம் குழந்தை முதல்  83 வயோதிக பெண் வரை பாலியவல்லுறவிற்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு வருடவும் 63,000 குழந்தைகள் பாலியல் வல்லுவு செய்யப்பட்டதாக அமெரிக்காவில் வழக்கு பதிவாகியுள்ளது. குழந்தைகள் கொல்லப்படுவதில் அமெரிக்க முன் நிலையில் நிற்கின்றது. கிடைத்த தரவுப்படி வளர்ந்த நாடான ஸ்வீடன் முன்னித்தில்  நிற்கின்றது. மேற்கு நாடுகளில்  இந்தியாவை போன்று அல்லாது பெரும்வாரியான வழக்குகளும் பதிவாகின்றது கணவர் அனுமதி மீறி பாலியல் உறவு கொண்டு இருப்பினும் வழக்காக பதியப்படுகின்றது..


இந்தியாவை எடுத்து கொண்டால் பெண்கள் முன்னேற்ற கழகத்தின் செயலர் கவிதா கிருஷ்ணன் கூற்றுப்படி இந்தியாவில் பாலியல் வல்லுறவு மிகவும் குறைவாகவே பதிவாகின்றது. பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் நலன் கருதியும் தங்கள் குடும்ப கவுரவம் கருதியும்  வெலியே சொல்வதில்லை. இது போன்ற சட்டத்தின் முன் கொண்டுவருவதும் இல்லை.

இந்தியாவின் ண் ஆதிக்க சமூக கட்டமைப்பு,   காலாகாலாமாக புராண இதிகாசங்கள் மத நம்பிக்கைகள் ஊடாக ண்களுக்கான சுகிக்கும்  பொருளாகவே பெண்ள் சித்தரிகரிக்கப்படுதல், பெண்கள் ஆண்களின் அடிமை என்பவை ஆண்கள் மனதில் ஆழத்தில் பதிந்ததால் பெண்களை துன்புறுத்துவது ஒரு வழக்கமாக, வாழ்க்கை பாகமாகவே பார்க்கப்படுகின்றது.  பெண் உடலை, அவள்  விருப்பத்தையும்  மீறி ஆட்சி செய்யும் உரிமையாக எடுத்து கொள்கின்னர்.

ஒரு பெண் சுயசார்பாக, சுதந்திரமாக வாழ்கின்றார் என்றால் அவர் மோசமான பெண் என  ஆண்களால் அடையாளப்படுத்தப்படுகின்றார். தன் விருப்பத்திற்குளிதாக வளைத்து விடலாம் என நினைத்து நற்பாசை கொள்கின்றனர், அல்லது அவளை ஆட்கொள்வது தங்கள் ஆண்மையின் இலக்காக நினைத்து கொள்கின்றனர். சமூகம் பாலியல் படங்களின் வயது வரம்பற்ற மீறிய பயண்பாடு  , மதுபானங்கள், பொறுப்பற்ற சமூக வாழ்க்கை, இரவு கேளிக்கை விடுதிகளின் பெருக்கம் போன்றவையும்  பெண்கள் மீதான  அத்து மீறல்களுக்கான  காரம் என்பதையும் மறுக்கல் ஆகாது. வாழ்க்கை நெறியிலுள்ள பார்வையிலுள்ள மாற்றங்களும் காரணமாகின்றன

2012, ல் குழந்தை  பாதுகாப்பிற்கு என முதல் சட்டம் வகுக்கப்பட்டது. டைமுறைப்படுத்த  மேலும் இரண்டு ஆண்டுகள் எடுத்து கொண்டனர். இந்த சட்டத்தின் கீழ்  13,766  குழந்தை வல்லுறவு, 11,335 குழந்தைகள் மாண்பை கெடுக்கும் விதம் நடந்து கொள்ளுதல் 4,593 பாலியலாக துண்புறுத்தப்படுதல் 711திட்டமிட்டு சமூக  குற்றவாளிகளால் குழந்தைகளை தாக்குவது; 88 பாலியல் இச்சைக்காக படம் பிடித்து  பயன்படுத்துவது  மேலும் 1,091 தொல்லை தருவதாக.பதியப்பட்டுள்ளது.

WHO உலக ஆரொக்கிய மையத்தின் கருத்துப்படியும் பெண்கள் பாலியலாக துன்புறுத்தப்படுவது ஒரு உலகலாவிய பிரச்சினையாகவே காணப்படுகின்றது. குழந்தைள் பாலியலாக துன்புறுத்தல் என்பது ஒரு உலகலாவிய தீரா நோய் என அறியலாம். 70 % குழந்தைகள்  தங்கள் சொந்த குடும்ப உருப்பினார்களாலே பாதிக்கப்படுகின்றனர்.  கடந்த வருடம் பதிவான வழக்கில் 15,000 வழக்கில்  4 % குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர்.
 சமூக சீர்கேட்டுப் பிரச்சனைகளினால் பாதிக்கப்படுவோரில் பெரும்பாலானோர் குழந்தைகள் என கண்டறியப்பட்டுள்ளது. குடும்ப பாலியல் வல்லுறவுகள் கடந்த ஐந்தாண்டுகளில் அதிகரித்திருப்பதாக புள்ளி விவரங்கள் காட்டுகின்றன. அவர்களில் பெரும்பாலானோர் சொந்த தந்தையாலே பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். மாற்றான் தந்தை, உறவினர்கள் என நன்கு அறிமுகமானவர்களாலேயே குழந்தைகள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

ஆஸ்தேரிலியா நாட்டில் 2014 வாக்கில் பாலியல் குற்ற விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவில்  மத காரியங்களுக்கான கட்டாய பிரம்மசரியம்,  குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கான முக்கியமான  காரணமா என கண்டுபிடிக்கப்பட்டது.   இந்த விசாரண முடிவு இப்படியாக வெளிவந்தது.  60 % மேல் பாதிக்கப்பட்ட பாலகர்கள் 10க்கும் 14 க்கு இடையிலுள்ள ஆண் குழந்தைக்ளாகவே இருந்துள்ளனர். இதில் பெரும்வாரியோனர் மதகாரியங்களுக்கு உதவிய ஆண் குழந்தைகள் ஆவர்.  அதில்  36 % பாதிக்கப்பட்ட குழந்தைகள் பல நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளனர்.  கிறிஸ்தவ மதத்தலைமை, குழந்தைகளை வல்லுவில் இருந்து காப்பாற் தவறியதாகவும் தெரிவித்துள்து.

மேற்குலகு நாடுகள் 30 வருடங்களுக்கு முன்பு குழந்தைகள் மேல் நடந்த அத்துமீறல்களை  ஆற அமர ஆராய்ந்து உண்மையான ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

 அந்த நாடுகளில் சுதந்திரமாக விசாரிக்கவும் அறிக்கை வெளியிடவும் சுதந்திரவும்,  சமூக சூழலும் இப்போது தான் கூடி வந்துள்ளது. ஆனால் இந்தியா போன்ற பன்முகதன்மை கொண்ட சமூக சூழலில், குழந்தை உரிமை பற்றியே புரிதல் இல்லா சமூகத்தில் அவ்விதம் விசாரணை எல்லாம் எதிர்பார்க்கவே இயலாது. மத சண்டைகளுக்கும் சமூக பிரச்சினைகளுக்குமே வழி வகுக்கும். இவ்விதமான சமூக சூழலில் தான் சமூக விழிப்புணர்வு அற்ற பெற்றோர்கள்; குழந்தைகளை மதவாதிகளை நம்பி மடங்களுக்கு குழந்தைகளை எந்த உத்தரவாதத்தில் அனுப்பி வைக்கின்றனர் என சிந்திக்க வேண்டி உள்ளது.

சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யாதி குழந்தை நலன் சார்ந்து விழிப்புணர்வு கொடுக்கும் நோக்குடன் இந்தியா முழுக்க ஒரு பயம் மேற்கொண்டார்.  கடுமையான சட்ட திட்டங்கள் மற்றும் சமரசமற்ற ண்டனைகள் கொடுப்பது ஊடாக மட்டுமே குழந்தைகளை கொடியவர்களிடம் இருந்து காப்பாற்ற இயலும் என தெரிவித்திருந்தார்.

குடும்ப பொருளாதாரம் நிலையற்றதாகவும், வலுவிழந்தும் இருக்கும் போது அக்குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் மிக எளிதாக பாலியல் வல்லுறவுகளினால் பாதிக்கப்படுகின்றனர்.

வட கிழக்கில் ஆகட்டும் பாலியல் தொழிலுக்கு, வீட்டு வேலைக்கு, குழந்தை திருமணம் என பல காரணங்களால் குழந்தைகள் கடத்தப்படும் கொடிய சூழல் நிலவுகின்றது.

அதுவரையிலும் பெற்றோர் குழந்தைகளுக்கு தகுந்த விழிப்புணர்வு தருவது, குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், தகாத தொடுதல் பற்றி புரிய வைப்பது, வெளி நபர்களுடன் பழகும் போதும் கருதலாக செயல்படுவது, தங்கள் பார்வைக்குள் தங்கள் கட்டுபாட்டுக்குள் குழந்தைகளை பேணுவதே அவர்கள் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும்.

சமீபத்தில் என் தோழி வசிக்கும் குடியிருப்பில் நடந்த சம்பவம் இப்படியாக இருந்த்து.  விளையாடி கொண்டிருந்த குழந்தைகளில் ஒரு குழந்தையை பாலியல் செயலுக்கு உட்படுத்த  ஒருவன் துணிந்துள்ளான். இரு குழந்தைகளின் தகப்பன், படித்தவன், நல்ல வேலையில் உள்ளவன் இருந்தும் குடித்திருந்தேன் அதனால் சபலப்பட்டு விட்டேன் என கூறியுள்ளான், குழந்தை வீட்டில் சென்று தெரிவித்ததும் அந்த நபர் மனைவிக்கு தெரிவித்ததுடன் அந்த நபரை அந்த குடியிருப்பை விட்டு வெளியேற்றினர். இது போன்ற சமூக புரக்கணிப்பு மட்டுமே தவறு செய்யும் நபர்களுக்கு கொடுக்கும் சிறந்த தண்டனையாக இருக்க முடியும்.

இது போன்ற ஈனச்செயல்களில் ஈடு படும் நபர்கள் நிச்சயமாக மனநோயாளிகளாகத்தான் இருப்பார்கள். அவ்விதம் கண்டு அறியும் நபர்களுக்கு சரியான சிகித்சை அளிக்க வேண்டும் அல்லது சமூகத்தில் இருந்து வெளியேற்றி தனி தீவுகளில் குடியேற்றி விட வேண்டும். அல்லாது ஆசீபா, கோயம்பத்தூர் குழந்தை, சென்னை குழந்தை என யாராலும் காப்பாற்ற இயலாது
 
போரில், குடும்ப சண்டைகள், இனச்சண்டை குழுச்சண்டை என எல்லா வன்மச்செயலுக்கும்  பெண் குழந்தைகள் உடலை போர்க்களமாக கருதும் நிலையும் மாற வேண்டும்.


டுத்த பதிவில் குழந்தைகளை பாலியல் துன்பத்திற்கும் உள்ளக்கும் நபர்களின் உளவியல் பற்றி பார்ப்போம்

1 comment:

  1. பாலியலாக துன்புறுத்தல்கள் பற்றிய உண்மை தகவல்களை பாரபட்சம் பார்க்காம நியாயமாக தெரிவித்துள்ளீர்கள்.
    //இந்தியாவின் ஆண் ஆதிக்க சமூக கட்டமைப்பு காலாகாலாமாக புராண இதிகாசங்கள் மத நம்பிக்கைகள் ஊடாக ஆண்களுக்கான சுகிக்கும் பொருளாகவே பெண்கள் சித்தரிகரிக்கப்படுதல் பெண்கள் ஆண்களின் அடிமை என்பவை ஆண்கள் மனதில் ஆழத்தில் பதிந்ததால் பெண்களை துன்புறுத்துவது ஒரு வழக்கமாக வாழ்க்கை பாகமாகவே பார்க்கப்படுகின்றது. பெண் உடலை அவள் விருப்பத்தையும் மீறி ஆட்சி செய்யும் உரிமையாக எடுத்து கொள்கின்றனர்.//
    மறுக்க முடியாத உண்மை.
    ஆளுநர் ஒருவர் பெண் பத்திரிகையாளரின் கன்னத்தை தொட்டதை ஆதரித்து நியாயபடுத்துபவர்கள் கொண்ட ஒரு சமுதாயத்தில் பாலியல் கொடுமைகள் எந்தளவில் நடைபெறும் என்பதை ஊகித்து கொள்ளலாம்.
    மனிதர்களை கொல்ல வேண்டும் தூக்கில் ஏற்ற வேண்டும் என்பவர்களை திருப்திபடுத்துவதற்காக அவர்கள் ஆதரவை தான் பெற்று கொள்வதிற்காக அரசு கொண்டுவந்ததே பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை சட்டம்.அரசுக்கும் வேறு வழியில்லை. இந்தோனிய அரசு போதை பொருள் கடத்துபவருக்கு மரணதண்டனை என்று மயூரன் சுகுமாரனை கொன்று தனது நாட்டுமக்களை திருப்தி படுத்தியதோ அதே போன்று நமது அரசும் மக்களை திருப்திபடுத்தவே முயல்கிறது. பாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டணை என்பதும், தமிழ்நாட்டில் பலருக்கு விருப்பமானா மனிதர்களை கொலை செய்வது என்பதும் அல்லது போட்டு தள்ளுவது என்பதும் பாலியல் கொடுமைகளுக்கு ஒருபோதுமே தீர்வாகாது.

    ReplyDelete