8 Mar 2026

இதழியல் துறையை அழித்த வரலாறு!

 


தமிழக ஊடகப் பேராசிரியர்கள் என்ன சொல்கிறார்கள்? ஊடகவியாளர்களை உருவாக்கும் ஊடக ஆசான்கள் பற்றிய தகவல்களை அறிய ஆர்வம் உள்ளது.

ஒரு காலத்தில் இதழியல் துறையை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் ஊடக மாணவர்கள் பெருமளவில் ஆக்கிரமித்திருந்தனர். அந்த வரிசையில் இருந்தவர்களில் ஒருவர்தான் இன்று அரசின் ஊடகவியாளராக உள்ள மனுஷ்.
இப்போது எழுத்தர் பணி தான் ஊடகப் பட்டதாரிகளுக்கு கிடைக்கும் நிலை உருவாகியுள்ளதால், ஒருநாள் ஊடகப் படிப்பே தேவையற்றதாகிவிடுமோ என்ற கேள்வி எழுகிறது. ஏனெனில், இன்று யாரும் தங்களை ஊடகவியாளராக அறிவிக்கும் சூழல் உருவாகிவிட்டது.
இதழியல், ஊடகம், மீடியா என்று இருந்த ஊடகப் படிப்பு மெதுவாக மருவி “விஷுவல் கம்யூனிகேஷன்” (விஸ்காம்) என்ற பெயரில் பரவியது ஒரு பெரிய தவறாகவே உள்ளது.
செய்தித்தாளை வாசிக்காதவர்கள்,
தொலைக்காட்சிச் செய்திகள் பார்க்காதவர்கள்,
அரசியல் அறிவு இல்லாதவர்கள் கூட
ஊடகத் துறையில் முனைவர் பட்டம் பெறும் நிலை ஏற்பட்டிருப்பது
இந்தக் காலத்தின் மற்றொரு விசித்திரமான பரிதாபமாக தோன்றுகிறது.
ஊடக கற்பிக்கும் ஆசான்களுக்கும் அறம் வேண்டும். அத்தகைய ஆசான்கள் மறைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் பத்திரிகையியல் கல்வி மற்றும் ஊடகப் படிப்புகளின் வரலாறு பல கட்டங்களை கடந்து வளர்ந்துள்ளது.


ஆனால் நிரந்தரமான பத்திரிகையியல் கல்வி அமைப்புகள் உருவாகும் முன்பே தமிழ்ப் பத்திரிகைகளின் வளர்ச்சி தொடங்கியிருந்தது.

ஆரம்ப கால தமிழ் இதழ்கள்

1831 ஆம் ஆண்டு Tamil Patrika என்ற மாத இதழ் Religious Tract Society மூலம் வெளியிடப்பட்டது. அரசின் ஆதரவு இருந்தாலும் அது நீண்ட காலம் நிலைக்கவில்லை.

1865 ஆம் ஆண்டு Viveka Vilasam என்ற இதழ் வெளிவந்தது. கிறிஸ்தவ மிஷனரிகளின் பிரச்சாரத்திற்கு எதிராக தமிழ் அறிஞர்கள் தொடங்கிய இதழாக இது கருதப்படுகிறது.

1885 ஆம் ஆண்டு Rajavritti Bodhini என்ற இதழ் வெளிவந்தது. இங்கிலாந்திலிருந்து வந்த செய்தித்தாள்களில் இடம்பெற்ற செய்திகளை தமிழில் மொழிபெயர்த்து வெளியிடுவது இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

Dinavarthamani என்ற வார இதழை Peter Percival ஆசிரியராக இருந்து வெளியிட்டார். இது Dravidian Press மூலம் வெளியிடப்பட்டது.

அதே காலகட்டத்தில் Jana Vinodhini என்ற இதழும் வெளிவந்தது. பிரிட்டிஷ் ஆதரவுடன் வெளிவந்த இந்த இதழில் இராமாயணம் தொடராக வெளியிடப்பட்டதால் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அந்த காலத்தில் Madras நகரம் பத்திரிகையியல் வளர்ச்சியின் முக்கிய மையமாக இருந்தது. 1876 ஆம் ஆண்டில் மட்டும் சென்னை நகரிலிருந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய நான்கு மொழிகளில் மொத்தம் 19 இதழ்கள் வெளியிடப்பட்டன.

 G. Subramania Iyer 1882 ஆம் ஆண்டு Swadesamitran  வார இதழாகத் தொடங்கினார். பின்னர் 1899 ஆம் ஆண்டு இது தினசரி செய்தித்தாளாக மாறி 1934 வரை தமிழ்ப் பத்திரிகையியலில் முக்கிய பங்கு வகித்தது. இந்த செய்தித்தாளில் சிறிது காலம் துணை ஆசிரியராக பணியாற்றியவர் Subramania Bharati.

1917 ஆம் ஆண்டு V. Kalyanasundara Mudaliar தொடங்கிய Desabhaktan மற்றும் Navasakthi போன்ற இதழ்கள் அரசியல் மற்றும் இலக்கிய தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

1926 ஆம் ஆண்டு P. Varadarajulu Naidu அவர்கள் சென்னை நகரிலிருந்து Tamil Nadu என்ற தினசரி செய்தித்தாளை வெளியிட்டார்.

1931 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆதரவாளர்களால் India என்ற செய்தித்தாள் தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டில் பத்திரிகையியல் /இதழியியல் கல்வியின் தொடக்கம்

தமிழ்நாட்டில் பத்திரிகையியல் கல்வி 1920 ஆம் ஆண்டு தொடங்கியது.  Annie Besant அவர்கள் சென்னை அடையாரில் உள்ள National University, Adyar என்ற கல்வி நிறுவனத்தில் பத்திரிகையியல் பாடநெறியை அறிமுகப்படுத்தினார். இதுவே தமிழ்நாட்டில் பத்திரிகையியல் கல்வியின் ஆரம்பமாகக் கருதப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1947 ஆம் ஆண்டு University of Madras முதன்முறையாக Diploma in Journalism என்ற டிப்ளமோ பாடநெறியை அறிமுகப்படுத்தியது. பின்னர் பத்திரிகையியல் மற்றும் தொடர்பியல் துறையை நிறுவியது. ஆசியாவில் (ஜப்பானைத் தவிர) பத்திரிகையியல் கல்வி வழங்கிய முதல் துறைகளில் இதுவும் ஒன்றாகும். பின்னர் தமிழ்நாட்டில் பத்திரிகையியல் மற்றும் தொடர்பியல் துறைகளில் Bachelor’s, Master’s, MPhil, PhD போன்ற உயர்கல்வி படிப்புகளை அறிமுகப்படுத்திய முன்னோடி பல்கலைக்கழகமாகவும் சென்னை பல்கலைக்கழகம் திகழ்ந்தது.

2005 ஆம் ஆண்டு Madras Christian College பத்திரிகையியல் தொடர்பான சிறப்பு பட்டப்படிப்பை தொடங்கியது.

2008 ஆம் ஆண்டு Periyar University-யில் Journalism and Mass Communication Department நிறுவப்பட்டது.

தற்போது தமிழ்நாட்டில் பத்திரிகையியல் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் தொடர்பான கல்வி வழங்கும் நிறுவனங்கள் சுமார் 30–40 வரை உள்ளன. இவற்றில் பெரும்பாலான கல்லூரிகள் சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற நகரங்களில் அமைந்துள்ளன.

விஷுவல் கம்யூனிகேஷன் படிப்பின் உருவாக்கம்

தமிழ்நாட்டில் Visual Communication பாடநெறியின் தொடக்கம் 1970 களில் Loyola College, Chennai-இல் இயங்கிய Loyola Art Club மூலம் ஏற்பட்டது. 1979 ஆம் ஆண்டு இது டிப்ளமோ பாடநெறியாக வளர்ந்து, 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் முழுமையான பட்டப்படிப்பாக மாற்றப்பட்டது.

1990-களின் இறுதி மற்றும் 2000-களில் தமிழ்நாட்டில் பல கல்வி நிறுவனங்கள் விஷுவல் கம்யூனிகேஷன்  துறையை தொடங்கின. இன்று தமிழ்நாட்டில் விஷுவல் கம்யூனிகேஷன் படிப்புகளை வழங்கும் கல்லூரிகள் 100-க்கும் மேல் உள்ளன. இதில் 60-க்கும் மேற்பட்டவை தனியார் நிறுவனங்கள் ஆகும்.



பத்திரிகையியல் ஏன் முக்கியமாகிறது?

பத்திரிகையியல் ஆராய்ச்சி, ஒழுக்கநெறிகள் மற்றும் எழுத்து வழி தகவல் பரிமாற்றத்தில் கவனம் செலுத்துகிறது. உண்மையைத் தேடும் திறன், நேர்மை மற்றும் துணிவு ஆகியவை இதன் அடிப்படை பண்புகள்.

விசுவல் கம்யூனிகேஷன் காட்சிகளின் மூலம் தகவலை எளிதாக பரப்பும் திறன் கொண்டது. ஆனால் அது பெரும்பாலும் அழகியல், வடிவமைப்பு மற்றும் பயனர் அனுபவம் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்துகிறது.

ஒரு சமூகத்தில் மக்கள் சரியான தகவல்களை அறிந்து முடிவெடுக்க உதவுவது பத்திரிகையியலின் முக்கிய பணி. காட்சிகள் வேகமாக உணர்ச்சியைத் தூண்டும் சக்தி கொண்டாலும் உண்மையை சரிபார்த்து விளக்குவது பத்திரிகையியலின் அடிப்படை பொறுப்பு.

பத்திரிகையியல் Clarity, Context, Coherence, Completeness என்ற நான்கு முக்கியக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது. ஆனால் ஒரு படம் அல்லது வீடியோ சூழலை விட்டு பிரிக்கப்பட்டால் உண்மையை மாற்றிக் காட்டும் அபாயம் உள்ளது.

பத்திரிகையியல் சமூகத்தில் தவறுகளை வெளிக்கொணரும் watchdog போல செயல்படுகிறது. அநீதி, ஊழல் போன்றவற்றை வெளிப்படுத்தி சமூக மாற்றத்திற்கும் அரசியல் பொறுப்புக்கும் வழிவகுக்கிறது.

பாடத்திட்ட மாற்றங்களின் சிக்கல்கள்

முன்னர் புகைப்படம் போன்ற பாடங்கள் பத்திரிகையியல் துறையில் கற்பிக்கப்பட்டபோது, ஒரு படத்தை எடுக்கும் போது பின்பற்ற வேண்டிய ஒழுக்கநெறிகள், வரலாற்றுப் பார்வை மற்றும் சமூகப் பொறுப்பு போன்ற அம்சங்கள் முக்கியமாக கற்றுக்கொடுக்கப்பட்டன.

ஆனால் தற்போது  பாடத்திட்டங்களில், படத்தை எடுப்பதற்கான ஒழுக்கநெறிகளை விட  கவர்சியாக படம் எடுப்பது, படத்தை எவ்வாறு மாற்றுவது, பின்புலத்தை எவ்வாறு மாற்றுவது போன்ற தொழில்நுட்பங்கள் அதிகமாக வலியுறுத்தப்படுகின்றன.

இதனால் ஒரு காலத்தில் உயர்ந்த மதிப்புடன் இருந்த ஊடகப் படிப்புகள்  சமூகப் பொறுப்பை விட தொழில்நுட்ப திறன்களை மட்டும் மையமாகக் கொண்ட படிப்புகளாக மாறிவிட்டன .

இதனால் சமூக அக்கறையுள்ள ஊடகவியாளர்கள் உருவாகுவது நின்று போனது. ஊடகத்துறை கார்ப்பரேட் ஆக மாறிப்போனது.மனித உரிமைக்கு குரல்கொடுப்பது, மக்களுக்காக பேசுவது போய்  லாபம் ஈட்டுவது என மாறி விட்டது.

விஷுவல் கம்மூனிகேஷனை வைத்து இதழியல் படிப்பை ஒடுக்கி விட்டனர். 

வரலாறு அரசியல் பாடதிட்டம் போல நமது பல்க்லைகழகங்களில் இருந்து விரைவில் காணாமலும் போகும் வாய்ப்பும் உண்டு. 


0 Comments:

Post a Comment