வங்கி மேலாளர் அறையை உற்று நோக்கினேன். அவர் வெகுநேரமாக ஒரு இளம் பெண் மற்றும் குடும்பத்தினரிடம் பேசி கொண்டே இருக்கின்றார். பணத்தை சேமிக்க வந்தவர்களாக தான் இருப்பார்கள். பணம் கடம் கேட்டு வருபவர்களுக்கு இந்த மரியாதையும், வசப்படுத்தல் நேரங்களும் கிடைப்பதில்லை, தர்ம சங்கடத்துடன் வெளியேறுவது தான் தெரிந்தது.
மாமி தான் பணக்கூண்டுக்குள் இருகின்றார். 94 எண் டோக்கன் நபர் சென்று பணம் பெற்று கொண்டிருந்தார். என் டோக்கன் எண் 93! மறந்திருப்பாரோ என்று எண்ணி என் டோக்கன் எண் 93 என்றேன். அவர் மூக்கு கண்ணாடிக்கு கீழ் வழியாக நோக்கி கொண்டு டோக்கனா, என்ன? என்றார். கேள்வியில் கேலி, நக்கல், விக்கல் எல்லாம் தெரிகின்றது. இருந்தாலும் காட்டி கொள்ளாது மேடம் என் டோக்கன் எண் 93 என்றேன். மின்சாரம் போய் விட்டது. பணத்தை இருட்டிலா எண்ண இயலும், மின்சாரம் வரும் வரை இருக்க வேண்டியது தானே என்று பள்ளி தலைமை ஆசிரியை மாதிரி சொன்னார். ஆகட்டும் மின்சாரம் வரும் வரை காத்து இருக்கின்றேன் என்று சொல்லி விட்டு என் இருக்கையில் வந்திருந்த போது, என்னவர் மாமியிடம் பேசிக் கொண்டிருப்பதை கண்டேன். மாமி பணத்தை சில நொடிகளில் எண்ணி கொடுத்து விட்டார். ஆணும் பெண்ணும் சமமா என்பதை மாமி படிப்பித்து தந்தார்.
மன்மோகன் சிங்கு போன்று ஒருவர் வாய் திறக்காது, வெட்டி பேச்சு இல்லாது குனிந்த தலை நிவராது வேலையில் மும்முரமாக இருந்தார். ஐயா கணணி பயண்படுத்துவதை கண்ட போது தான் வங்கியில் வேகத்தின் காரணம் புரிந்தது. மனிதர் ஆள் காட்டி விரலை வைத்து அடித்து கொண்டு நத்தை வேகத்தில் இருந்தார்.
இன்னும் ஒரு நபர் தான் ஓயாது சத்தம் போட்டு பேசி கொண்டு வங்கி பணியாளரா என்று கேட்கும் வண்ணம் அரசியல் பேச்சாளர் போல் சத்தமாக பேசிக் கொண்டே இருந்தார்.
வேலையில் இருந்து ஓய்வு பெற்ற வயதான ஆசிரியை பாட்டி வந்து 9.5 வட்டி விகிததை 9 % என்று எழுதியுள்ளனர் என்றார். பாட்டியிடம் நாளை வந்து திருத்தி பெற்று செல்ல சொன்னார்கள். வீடு அருகில் இருக்கும் போல். பாட்டியும் குடையை விரிக்க இப்போதே தயார் ஆகி கொண்டு புறப்பட தயார் ஆகினார். பாட்டியிடம் செய்திபரப்பாளர் போன்று இருந்த வங்கி அதிகாரி; நாங்க கொடுத்தவுடனே பைக்குள்ள வைக்காமே திறந்து பார்த்து சரியா என்று பார்த்து கொள்ள வேண்டும். வாடிக்கையாளர் உரிமையல்லவா? தப்பாக எழுதி கொடுத்து பாட்டியை நடக்க வைப்பதற்க்கு என்ன உரிமை என்று சொல்வதாம் என்று தெரியவில்லை?
வேறொரு கூண்டுக்குள் இருந்து ஒரு பெண் அதிகாரி தமாஷ் பேச்சுடன் இன்னொரு பணியாளருடன் செல்ல சண்டையில் இருந்தார்! அம்மணி அப்படியே நடந்து வந்து புதிதாக வேலையில் சேர்ந்திருக்கும் ஒரு இளம் பெண் பின்னால் நின்று கொண்டு வேலை செய்யும் விதத்தை பார்த்து கொண்டு நலம் விசாரித்து கொண்டிருந்தார். இந்த இளம் பெண் ஒரு வித பய உணர்வில் வேலை செய்து கொண்டிருக்கின்றாள். அவள் கண்களில் அப்படியொரு மிரட்சி. பக்கத்து இருக்கையில் இருப்பவர் சொல்வதும் அவளுக்கு புரிந்தது மாதிரியும் இல்லை. சீனியர் பெண் அதிகாரியின் பேச்சில், சிரிப்பில்; எள்ளாடல், கிண்டல் எல்லாம் நிறைந்து நிற்கின்றது. அந்த இளம் பெண் தன் இருக்கையில் இருந்து தர்மசங்கடத்துடன் நெளிகின்றாள்.
இது போன்று பல பெண்கள் துன்புறுத்தலுக்கு உள்ளாகின்றனர் என்பதை அறிந்தேன். கல்வி கற்று சுதந்திரம், தனி உரிமை எல்லாம் தெரிந்து கொண்டு, இவ்விதமான ஆதிக்க மனோபாவமான ஜென்மங்களிடம் வேலை இடங்களில் மாட்டி தவிப்பது இன்று பல படித்த பெண்களுக்கு சொல்ல இயலாத பிரச்சனையே. இது போன்றவர்கள் ஆண்களாக இருந்தால் ஆண் ஆதிக்கம் என்று குரல் கொடுக்கலாம், இந்த வகை பெண்களை எப்ப்படி சமாளிப்பது. இவர்கள் ஆசை நிறைவேற அழுது கண்ணீர் விடுவது மட்டுமல்ல, தோள் பையை எடுத்து தன் சித்து வித்தைகளை கையிலெடுத்து கொண்டு கோள் மூட்டி திரியவும் தயங்குவது இல்லை.
பொறியியல் கல்லூரியில் வேலை பார்க்கும் மூன்று வயது குழந்தையின் தாயான என் தோழியும் இதே நெருக்கத்தில் தான் வேலை செய்து வருகின்றார். காலை 8 மணி பேருந்தை பிடிப்பவர் மாலை 6 மணிக்கும் வீட்டிற்கு வரவிடாது மாலை சிறப்பு வகுப்பு நடத்தியே செல்ல வேண்டும் என கட்டளை இடுகின்றாராம் அவருடைய துறைத்தலைவியான பெண். ஆனால் துறைத் தலைவி முதல் பேருந்தில் வீட்டுக்கு போய் விடுவாராம்.
போலிஸ் மனைவியான இன்னொரு தோழியும் இந்த கொடூரத்திற்க்கு விதிவிலக்கல்ல. உயர்த்தர வகுப்பு ஆசிரியையான தோழி பெறும் ஊதியம் 6 ஆயிரம் ரூபாய். ஆனால் பள்ளி நிர்வாகம் விதிக்கும் விதிகள், வேலையை வேண்டாம் என துறக்கும் அளவுக்கு கொண்டு சென்றது.
ஒன்று சீனியராக அல்லது அரசுத்துறையில் பணிபுரிய வேண்டும். தனியார் துறையில் வேலை செய்யும் பெண்கள் நிலை சொல்ல இயலாத துன்பம் கொண்டு பெண் மேல்- அதிகாரிகளால் காவு வாங்கப்படுகின்றது.
உங்களின் போன பதிவுக்கே பின்னூட்டம் போடவென நினைத்து நேரமின்மையால் விட்டு விட்டேன். இரு பதிவுகளிலும் சொல்லப்படும் முடிவுகளும் பிழையானமை என்பது எனது தாழ்மையான கருத்து.
ReplyDeleteஇப்பதிவில் சொல்லப்பட்டிருக்கும் சம்பவங்களை ஏன் மேலதிகாரிகள் தமது பதவிகளால் வரும் சக்தியை தகாத வழியில் உபயோகிக்கிறார்கள் என்று யோசிக்கக்கூடாது. அவ்வாறான மேலதிகாரிகளில் ஆண்களும் இருக்கிறார்கள் பெண்களும் இருக்கிறார்கள். ஏன் சில பெண் மேலதிகாரிகள் தகாத முறையில் தமக்குக் கீழுள்ளவர்களை நடத்தினால் எல்லாப் பெண் மேலதிகாரிகளும் அவ்வாறே இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? நிச்சயமாக இது எல்லாப் பெண் மேலதிகாரிகளினதும் ஏன் எல்லா ஆம் மேலதிகாரிகளினதும் கூட இயல்பு அல்ல. All your examples show is that some bosses can and do really abuse their powers.
இலங்கை இந்தியப் பெண்களில் பெரும்பாலானோர், குடும்பத்தில் கூட, கணவர் விட்டுக் கொடுப்பவராக இருந்தால், பதவியை எடுத்து விட்டு மற்றவர்களை ஆட்டிபடைக்கும் psychopath ஆகவே இருக்கிறார்கள்... நீங்கள் மாட்டுப்பட்டதும் ஒரு psychopath இடம் தான்.. அவர்களிற்கு இடம் கொடுக்காமல் தொடக்கத்தில் இருந்தே கவனமாக இருப்பது மிகக் கடினம்.. நீங்கள் அந்தப் பெண்ணை விட்டு ஒதுங்கியது நன்மைக்கே..எல்லாம் நன்மைக்கே...
ReplyDeleteNan pala kudumbangalil parthathundu ,kanawarai oru adimai bavikum pengal .
ReplyDeleteAwargal kudambathil ewaru amaidi nilavum?
பின்னூட்டத்துடன் என் பதிவுக்கு வலு சேர்த்த என் நண்பர்களுக்கு நன்றி வணக்கங்கள். The Analyst கருத்துக்கள் சிந்தக்க வைத்தன.
ReplyDeleteஎல்லாப் பெண் மேலதிகாரிகளும் அவ்வாறே இருப்பார்கள் என நினைக்கிறீர்கள்?//// உண்மையுண்டு உங்கள் கேள்வியில். ஆனால் கடந்த 6 மாத கால என் அனுபவம் என்னை அவ்வாறு சிந்திக்க வைத்தது.
என்னுடன் பணி செய்த 2 ஆண்கள் என் மேலதிகாரி ஆண்கள் எவ்விதத்திலும் தீங்கு செய்யவில்லை.
இது போல் ஒரு நபரை திட்டமிட்டு அவதிக்குள்ளாக்க ஆண்கள் மெனக்கெடுவார்களா என்பது சந்தேகமே.
தங்கள் சிந்திக்க வைத்த பின்னூட்டத்திற்க்கு நன்றி மகிழ்ச்சிகள். வாழ்கை மாற்றங்கள் கொண்டது. உங்களை போன்ற எண்ணங்கள் வரலாம்.
Sagothiriku vanakkam,
ReplyDeleteNeengal itta aakkam nandraga irundathu. Enakkau acharyamagavum thondriathu. Enenil, non velai seyum aluvalagm mutrilum aangale irupathal ithu pola parthirkiren. Aanal oru pen adikariye evvaru seivar endru ungal ezthu moolam therinthukondan.
Nandri
Karunakaran
Chennai