15 Sept 2026

கால்டுவெல் திருநெல்வேலி வரலாறு

 கால்டுவெல் திருநெல்வேலி வரலாறு (The History of Tinnevelly), திருநெல்வேலிச் சாணார்கள் (The Tinnevelly Shanars, 1849) என்னும் நூல்களை ஆங்கிலத்தில் எழுதி வெளியிட்டுள்ளார்.

(1856) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் ஆங்கிலத்தில் எழுதி பல பாராட்டுக்கள் பெற்றார்.
கி.பி. 1857 - இல் திருநெல்வேலிச் சமயப் பணிகள் பற்றிய விரிவுரைகள் (Lectures on the Tinnevelly Mission) என்ற நூலையும் ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்.
இவர் செய்த அகழ்வாராய்ச்சிக்காகவும், மொழி ஆராய்ச்சிக்காகவும் ஆங்கிலேயர் ஆட்சியில் உயர் பட்டங்களைப் பெற்றார்.
சென்னைப் பல்கலைக்கழகம் , கல்வி மற்றும் தமிழ் மொழியியல் ஆய்வுத் துறைகளில் அவர் ஆற்றிய விரிவான பங்களிப்புகளைப் பாராட்டும் வகையில், 1879ஆம் ஆண்டு நடைபெற்ற பல்கலைக்கழகத்தின் 22ஆம் பட்டமளிப்பு விழாவில் உரையாற்ற அவரை அழைத்தது.
கிளாஸ்கோ பல்கலைக்கழகப் பட்டம்: இவரது முக்கியமான படைப்பான A Comparative Grammar of the Dravidian or South Indian Family of Languages (திராவிட அல்லது தென்னிந்திய மொழிக் குடும்பங்களின் ஒப்பிலக்கணம்) என்ற நூலின் மூலம் ஆற்றிய குறிப்பிடத்தக்க மொழியியல் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், கிளாஸ்கோ பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ LL.D. (சட்ட முனைவர்) பட்டம் வழங்கியது.
நீண்டகாலமாக அவர் மேற்கொண்ட சமயப் பணிகள், கிறித்தவ மறைப்பணி மற்றும் மொழிபெயர்ப்புப் பணிகளை அங்கீகரிக்கும் வகையில், டர்ஹாம் பல்கலைக்கழகம் அவருக்கு கௌரவ Doctor of Divinity (D.D.) பட்டம் வழங்கியது.
ஆயினும் முரண்பாடான சமய வரலாற்றுப் பண்பாட்டுப் பதிவுகளின் மூலம் நாடார்களின், குறிப்பாக நிலைமைக்கார நாடார்களின் எதிர்ப்புகளுக்கும் கிறித்தவ சமயத்தினர் சிலரின் எதிர்ப்புகளுக்கும் ஆளானவர்.
கால்டுவெல் குத்தகைக்கு எடுத்துத் தங்கிய ஊரின் பெயர் இடையன்குடி. இடையன்குடியைச் சுற்றிலும் நிலைமைக்கார நாடார்கள் வாழும் ஆனைக்குடி, குட்டம், அச்சம்பாடு, படுகாப்பற்று, செட்டியாப்பற்று, கொம்மடிக்கோட்டை, காரிகோவில் போன்ற ஊர்கள் இருந்தன.
பிற நாடார்களிடையிலும் நிலைமைக்காரர்களிடையிலும் முரண்பாடுகளை உருவாக்கி, சாதாரணக் குடிகளுக்கு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைப் பெருமளவில் மதமாற்றம் செய்யத்தொடங்கினார்.
நிலைமைக்காரர்களின் குடிகளிடம் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அப்பகுதி நிலைமைக்காரர்களின் குடிகளிடம் ஜோடி வரி என்ற Quit Rentஐ வசூலிக்கும் உரிமை குட்டத்து மார்தாண்ட நாடாருக்கு உரியதாக இருந்தது.
இதிலும் கால்டுவெல்லுக்கும் நிலைமைக்கார நாடார்களுக்கும் முரண்பாடுகள் ஏற்பட்டன.
கால்டுவெல் தாம் வாழ்கின்ற பகுதியில் ஏழ்மை நிலையிலிருந்த நாடார்களின் வாழ்வாதாரங்களைக் குறித்து எழுதிய திருநெல்வேலிச் சாணார்கள் என்ற ஆங்கில நூல் பெரும் கிளர்ச்சியைத் தூண்டிவிட்டிருந்தது.
இக்கிளர்ச்சிக்கு முதல் காரணமாக அமைந்தவர் கிறித்தவரான அருமைநாயகம் என்ற சட்டாம்பிள்ளை ஆவார்.
அதைத்தொடர்ந்து கால்டுவெல் மற்றும் கிறித்தவ சமயப் போதகர்களான சில வெளிநாட்டவர்களாலும் வெளியேற்றப்பட்ட கிறித்தவர்கள் சேர்ந்து நாட்டார் வேதம் என்ற கிறித்தவ சபையைத் தோற்றுவித்தனர்.
அத்துடன் 'நாடார்கள் கால்டுவெல் கருதுவதுபோன்று தகுதி குறைந்தவர்கள் அல்லர்; தகுதி உடையவர்கள்' என்ற அடிப்படையில் ஆராய்ச்சி நூல்கள், கட்டுரைகள், வெளியீடுகள், பத்திரிகைச் செய்திகள் வெளிவரக் காரணமாகச் சட்டாம்பிள்ளை போன்றோர் அமைந்தனர்.
சட்டாம்பிள்ளையைத் தொடர்ந்து அவருடைய மகன்களாலும் அவ்வட்டார நிலைமைக்கார நாடார்களின் தகுதிகள் வெளிவரலாயின.
சட்டாம்பிள்ளையின் இரு மகன்களான ரபி பாண்டியன், பி.ஜே.எம். குலசேகரராஜ் போன்றோரும் நாடார்களின் வரலாறுகளை எழுதிவெளியிட்டனர்.
முன்னவரான ரபி பாண்டியன் என்பவர் #எட்கர் தர்ஸ்டனுக்குத் தம் குறிப்புகளை அனுப்பியிருந்தார். பின்னவரான குலசேகரராஜ் கி.பி. 1918இல் #நாடார்குல வரலாறு என்ற நூலை வெளியிட்டார்.
கால்டுவெல்லின் சமகாலத்திலேயே #எஸ். வின்பிரெட், #எச். வின்பிரெட் ஆகியோரால்
📍சான்றோர் மரபு,
📍சான்றோர் மரபு காத்தல் எனும் இருநூல்கள் வெளிவந்தன.
சாமுவேல் சற்குணர் 1880ல் திராவிடச் சத்திரியர் என்ற நூலும் 1883 கால்டுவெல் (திருநெல்வேலிச் சாணார்கள் என்று ஆங்கிலத்தில் வெளியிட்ட நூலை தமிழில் வெளியிட்டார்.
சாமுவேல் சற்குணருக்குப் பிற இனத்தவராலும் சமயத்தவராலும் எதிர்ப்புகள் ஏற்பட்டன. அவருக்குத் தண்டனையும் கிடைத்தது. ஆயினும், நிலைமைக்கார நாடார்களின் தகுதிபற்றிப் பரவலாக அறிந்துகொள்ளும் வகையிலும் மேலும் அவர்கள் பற்றி ஆராய்ச்சிகள் பெருகும் வகையிலும் சற்குணருடைய நூல்கள் அமைந்தன.
📍தடை செய்யப்படட கால்டு புத்தகம் இன்றும் இணையத்தில் பல தளங்களில் கிடைக்கிறது. ஆனால் உள்ளூர் வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய புத்தகம் அல்லது அவர்கள் புகைப்படங்கள் மறைக்கப்பட்டு உள்ளது..
ஆங்கிலேயர்கள் மிகவும் நுட்பமாக நா டார் இனத்தை மதம் மாற்றி உள்ளனர். அதற்கு என ஒரு திட்டம் வகுத்து உள்ளனர். வரலாற்றை வாசித்து அறிந்து
நாடார்கள் வாழ்வியலில் சிக்கலை உருவாக்குவது, மற்றைய இனவுமாக மோத விடுவது, வழியில்லாமல் சொத்தையும் உயிரையும் காப்பாற்ற தஞ்சம் புகிர வைத்து மதம் மாற்றம் நிகழ்த்தப் பட்டுள்ளது.
எதனால் நாடார் இனத்தை குறி வைத்தனர்.! நாடார்கள் நிலத்தில் பணத்தில் கட்டமைப்பை உருவாக்கி உள்ளனர்.
நாடார்கள் மத மற்றம் என்பது நாய்கரிடம் போராடி மறவர்கள், பிள்ளைமார்களில் இருந்து தங்கள் நிலத்தை காப்பாற்றவும் ஆங்கிலேயர் உதவி நாடி உள்ளனர்.

இதில் கால்டுவெல்லின் நரித்தனம் மிகவும் பிரயோசனமாக இருந்து உள்ளது. அதனால் ஆங்கிலேயர்கள் பட்டப் படிப்பு முடிக்காது இறையியல் கல்வியுடன் இந்தியா வந்த மிஷநரிக்கு பல பட்டங்கள் கொடுத்து ஆதரித்து உள்ளது


கால்டுவெல், 1849இல் எழுதிய நூலுக்குப் பின்பாக, நாடார்கள் பற்றி 15 நூல்களும் பிற குறிப்புகளும் வெளியிடப் பெற்றுள்ளது.

📍சற்குணரைத் தொடர்ந்து, 📍ஞானமுத்துநாடார் கால்டுவெல் நாடார்களைப் பற்றிக் குறைவாக மதிப்பிட்டு எழுதிய நூலைத் திரும்பப் பெறவேண்டும்' என இங்கிலாந்தின் அப்போதைய பிரதமருக்கும் பிறருக்கும் கடிதம் எழுதினார்.
1871-ம் #வருஷத்தில் சென்னை இராஜதானியில் எந்த எந்த சாதியார் இருக்கிறார்கள் என்றும், அந்த அந்தச் சாதியார் தங்கள் தங்கள் குலத்தைப் பற்றிய ஆதி பூர்வ விவரத்தைத் தெரிவிக்க வேண்டும் என்றும், அந்தப்படி தெரிவியாதவர்கள் தங்கள் தங்கள் குலமேன்மையை இழந்து போவார்கள் என்றும் இங்கிலீஷ் அரசு உத்தரவு பிறப்பித்தார்கள்.
முதன்முதலில், 📍சாரடக்கர் அம்மையார் எழுதிய தென் இந்தியன் ஸ்கெச்சஸ் (South Indian Sketches) என்ற நூலில் நிலைமைக்காரர்பற்றி எழுதியுள்ளார்.
கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள், ஓலைச்சுவடி ஆவணங்களின் அடிப்படையில்
நிலைமைக்கார நாடார்களைப் பற்றி , 📍பி.ஜே.எம். குலசேகரராஜ் 1918இல் எழுதிய நாடார்குல வரலாறு குறிப்பிடத்தக்கது ஆகும்.
📍கார்னிலியஸ் நாடார் என்பவர் அமரர் புராணத்தை (1901) எழுதி, நாடார்கள் பற்றிய தொன்மங்களை வெளியிட்டார்.
அதே ஆண்டில் 📍அரசகுமார நாடாரும் 📍கண்ணாயிர நாடாரும் இணைந்து தமிழ் சத்திரியகுல விளக்க வினா விடை என்ற நூலை வெளியிட்டனர்.
இதனைத் தொடர்ந்து தமிழ்ப்பேராசிரியர் 📍தா. மாசில்லாமணி நாடனால் 1931இல் பாண்டிய தேச ஆதித்தவம்ச வரலாறு எனும் நூல் வெளியிடப்பெற்றது. முழுக்க முழுக்க இந்நூல் காயாமொழி ஆதித்த நாடார்களின் வரலாற்றையும் பண்பாட்டையும் 1930 வரையிலான ஆதித்த நாடன்களின் வமிசாவளிப் பட்டியலையும் ஆராய்ந்து வெளியிட்டுள்ளது. (இந்நூல் தமிழ் ஓலைச்சுவடிகள் பாதுகாப்பு மையத்தால் 1997லும் 2006லும் மறுபதிப்புச் செய்யப்பட்டுள்ளது.)
நாடார்களைப் பற்றிய வரலாற்று ஆவணங்கள் மிகுந்திருந்தாலும், சுதந்திரப் போராட்டம் மற்றும் அரசியல் காரணமாக நாடார்கள் அவற்றிலிருந்து ஒதுங்கித் தம் தொழில்களிலும் கல்வியிலுமே கருத்தைச் செலுத்தி வந்துள்ளனர்.
கி.பி. 1937 ஆம் ஆண்டில், பெருநாழியிலிருந்து காயாமொழிக்கு வந்த 📍கவிராயர் வெ.ஆ. குமரய்ய நாடன் என்பவர் காயாமொழி ஆதித்தன் திருமுகவிலாசம் எனும் தலைப்பில் எழுதி உள்ளார்.
மேலும் 📍வெ.ஆ. குமரய்ய நாடான் 📍 இராமலிங்கக் குருக்களுடன் இணைந்து 1937-ஆம் ஆண்டில் நாடார் மன்னரும் நாயக்க மன்னரும் எனும் நூலை வெளியிட்டார்.
📍👆ஆங்கிலேயர்களின் ஜாதி வழி ஆட்சி -1871-ம் ஆண்டு சென்னை இராஜதானியில் நடைபெற்ற சாதிவாரி கணக்கெடுப்பு.
இந்தியாவில் சாதிகளின் வரலாறு, அடையாளம் மற்றும் மக்கள்தொகை விவரங்களை முறையாகவும் விரிவாகவும் பதிவு செய்ய பிரிட்டிஷ் காலனிய நிர்வாகம் மேற்கொண்ட முதல் முயற்சியாக இது அமைந்தது.
இந்த உத்தரவு தென்னிந்தியாவில் மிகப்பெரிய சமூக–அரசியல் மாற்றத்திற்கான தொடக்கமாக அமைந்து, ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக சாதி இயக்கங்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு செயல்முறையை உருவாக்கியது.
உள்ளூர் நிர்வாகத்தில் கணக்கெடுப்பு கண்காணிப்பாளராக (Census Superintendent)📍 W. R. Cornish செயல்பட்டார்.
ஆயிரக்கணக்கான உள்ளூர் உட்சாதிகள் (ஜாதிகள்) கொண்டிருந்த மிகப்பெரிய மக்கள்தொகையை நிர்வாக ரீதியாக வகைப்படுத்தி, அரசு ஆவணங்களில் பதிவு செய்வதே பிரிட்டிஷ் நிர்வாகத்தின் நோக்கமாக இருந்தது. இந்த சிக்கலான சாதிப் பிரிவுகளை வகைப்படுத்துவதற்காக, ஒவ்வொரு சமூகத்தினரின் தலைவர்களும் தங்கள் சமூகத்தின் பாரம்பரிய தோற்றம், தொழில், குலவரலாறு மற்றும் வம்சாவளி குறித்த தகவல்களை உள்ளடக்கிய மனுக்கள், நூல்கள் மற்றும் வரலாற்று ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
📍1871-க்கு முன்னர் தென்னிந்தியாவில் சாதி அடையாளங்கள் பல இடங்களில் நெகிழ்வானதாகவும், பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபட்டதாகவும் இருந்தன.
ஆனால், இந்தச் சமூகங்கள் அளித்த தகவல்களை அதிகாரப்பூர்வ அரசு அறிக்கைகளில் முறையாகப் பதிவு செய்து வகைப்படுத்தியதன் மூலம், பிரிட்டிஷ் நிர்வாகம் அக்காலத்திய சமூகப் படிநிலைகளை ஒரு குறிப்பிட்ட நிர்வாக வடிவத்தில் நிலைப்படுத்தியது.
இதன் மூலம் குறிப்பிட்ட சாதிகள் குறிப்பிட்ட தொழில் குழுக்களுடனும், சமூக அந்தஸ்துடனும், சில சமயங்களில் சட்டரீதியான உரிமைகளுடனும் வெளிப்படையாக இணைக்கப்பட்டன. இவ்வாறு உருவாக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வகைப்பாடுகள், பின்னாளில் தென்னிந்தியாவின் சாதி அடையாளங்கள் மற்றும் சாதி அரசியலின் வளர்ச்சியிலும் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தின.

சட்டாம்பிள்ளை அருமைநாயகம் குடும்பம் கி.பி. 1642ஆம் ஆண்டில் கொற்றகையை அடுத்த 📍வெள்ளக்கோயில் என்ற ஊரில் குடிகளுடன் பெரும் நிலக்கிழாராக வாழ்ந்துவந்த #வலங்கை உய்யக்கொண்டார்கள் ஆவர்.
திருமலைநாயக்கரின் பிரதானி #வடமலையப்ப பிள்ளையின் நடவடிக்கைகள் காரணமாகத் தமது நிலங்களைக் கொற்றகைக் காணியாளரான வேளாளர்கள் வசம் விற்றுவிட்டுக் குடிபெயர்ந்து ஓட்டப்பிடாரம் அருகிலுள்ள ராஜாவின் கோயில் என்ற ஊரில் குடியேறினர்.
19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் நாசரேத் நகரம் உருவாக்கப்பட்டபின், அவ்வூரை ஒட்டி அமைந்துள்ள #பிரகாசபுரம் 📍மூக்குப்பேரியில் குடியேறினர்.
தம் சான்றோர் குல கல்வியறிவு பிரிவுகளைச் சேர்ந்த பலரிடமும் கால்டுவெல்லின் மேற்படி நூலின் பிரதியைக் கொடுத்துப் படிக்கச் சொல்லியும், பிரச்சாரம் செய்த சட்டாம்பிள்ளை, 📍சான்றோர் சமூகத்தவர் பலர் மத்தியில் ஒரு கொந்தளிப்பினை உருவாக்கினார்.
📍கால்டுவெல்லின் இந்நூலைத் தமிழாக்கம் செய்து அச்சிட்டு, ஆங்கிலம் அறியாத சான்றோர் சமூகத்தவர் மத்தியிலும் பரப்பினார்.
இதன் விளைவாக 1857 ஆம் ஆண்டில் Hindu Church of Jesus (📍இந்து ஏகரட்சகர் சபை) அல்லது 'நாட்டார் வேதம்' (Native Church) என்ற தனிப்பிரிவே இவ்வூரை மையமாக வைத்து உருவாகினார். பிரகாசபுரம் மூக்குப்பேரியைச் சுற்றியுள்ள உய்யாங்குடி, குளத்துக்குடி, சாலைப்புதூர், வாழையடி, பாட்டக்கரை, வகுத்தான்குப்பம் முதலிய ஊர்களைச் சேர்ந்த சான்றோர் குலக் கிறிஸ்தவர் அனைவரும் 'நாட்டார் வேதம்' எனப்பட்ட இச்சபையில் இணைந்தனர்.
சான்றோர் குலத்தவர் பற்றிய கால்டுவெல்லின் அவதூறுகள் தளர்ச்சியின்றித் தொடர்ந்து நடந்துவந்த நிலையில் செல்வாக்கு மிகுந்த சான்றோர் குலத்தவர் சிலரும் சட்டாம்பிள்ளையுடன் சேர்ந்து செயல்படத் தொடங்கினர்.
1855ஆம் ஆண்டில் நாசரேத்தையடுத்த பிரகாசபுரம் என்ற ஊரைச் சேர்ந்த மதுரநாயகம் என்ற மூக்கந்தர் பிரிவுச் சான்றோர்,சர்ச் மிஷனரி சொசைட்டி பிரச்சாரக் குழுவின் சார்பில் தாமஸ் கஜெடன் ராக்லாண்டு மிஷனரியுடன் இரண்டு மாதங்கள் தம்முடைய சொந்தச் செலவில் ஊழியம் புரிந்துவந்தவர்.
பிற்பாடு மதுரநாயகமும் விரைவில் சி.எம்.சி. திருச்சபையிலிருந்து விலகிச் சட்டாம்பிள்ளை ஐயாவின் நாட்டார் வேதத்தில் இணைந்தார்.
ஐரோப்பிய உயர்வு மனப்பான்மைக்கு எதிரான தன்மான உணர்ச்சியும் மிகுந்த
குலப் பெருமிதமும் கொண்ட கிறிஸ்தவச் சான்றோர்கள் ஐரோப்பிய மிஷனரிமார்களின் அடாவடி நடவடிக்கைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டுச் சுயேச்சையாகச் செயல்படத் தொடங்கினர். இதனால் இவர்களின்மீது ஆத்திரங்கொண்ட கால்டுவெல் முதலானோர் குற்றவியல் நடவடிக்கைகள் உட்பட அனைத்துவித நடவடிக்கைகளும் மேற்கொண்டு இவர்களை மிரட்ட முயன்றனர்.
கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய சான்றோர் சமூகத்தவருள் பெரும்பாலானோர் கால்டுவெல்லை எதிர்த்துக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.
இவர்களுள் சிலர்
கால்டுவெல்லின் வக்கிரச் செயல்களையும், அடாவடித்தனத்தையும் பற்றி இங்கிலாந்துக்கே புகார் தெரிவித்தனர்.
1883ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ஆம் தேதி, #ஓய். ஞானமுத்து நாடார் என்பவர்
கால்டுவெல்லின் நூலினை வாபஸ் பெறவேண்டும் என்ற கோரிக்கையுடன் இங்கிலாந்துப் பிரதமர் டபிள்யூ.பி. #கிளாட் ஸ்டோனுக்கு மனு ஒன்றை அனுப்பினார். இவர் சட்டாம்பிள்ளையின் நாட்டார் வேதத்தைச் சேர்ந்தவர் அல்லர் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய எதிர் நடவடிக்கைகளுக்குப் பின்னரும் கால்டுவெல் தம்முடைய செயல்பாட்டை மாற்றிக் கொள்ளாததால் தன்மான உணர்ச்சி மிக்க நாடார் குலத்தவர்கள் மத வேறுபாடு கருதாமல் ஒன்றிணைந்தனர். கால்டுவெல்லுக்கு எதிரான பகிரங்கமான 📍கொலை முயற்சிகளும் நடந்தேறத் தொடங்கின. ஆனால் அம்முயற்சிகள் வெற்றி பெறாத நிலையில் ,உயிருக்கு அஞ்சிய கால்டுவெல் நெல்லையை ( இடயங்குடியை ) விட்டு கொடைக்கானலுக்குக் குடிபெயர்ந்தார்.
தனது குற்றத்தை உணராத கால்டுவெல், நாடார் இன மக்களிடம் நல்லுறவை பேணி வந்த நாசரேத் மர்க்காஷிஸ் ஐயருக்கு பல துன்பங்களை விளைவிக்க ஆரம்பித்தார். மர்க்காஷிஸ் ஐயர் நாடார்களுக்கு உதவுதாக சந்தேகம் கொண்டார். மார்காஷிஸ் ஐயர் நடத்தின பள்ளியை மூட வைத்தார். சபை தலைமைகளிடம் மார்க்கஷிஸ் ஐயர் பற்றி பல புகார்களை செய்தார்.
யூத இனத்தவரும், திருமணம் செய்யாது சமயப் பணியை சமூகத் தொண்டாக செய்துவந்த மர்காஷிஸ் ஐயர் கால்டுவெல்லால் மன துன்பத்திற்கு ஆளானார்...
கொடைக்கானில் தஞ்சம் அடைந்த கால்டுவேல், இறந்த பின்பு தான் இடையங்குடிக்கு கொண்டு வந்து அடக்கம் செய்தனர்..
இடையக்குடியின் தந்தை என நினைத்து கொண்டு பணி செய்த பிஷப் கால்டுவெல்லை விட நாசரேத் ஊருக்கு பல முன்னேற்ற பாதையை அமைத்தவர் மர்க்காஷிஸ் ஐயர்.இனம் மதம் வேற்றுமை பார்க்காது மக்கள் பணி செய்து நாசரேத் மக்களின் வருமானம் பெருக ரெயில்வே போன்றவை வர முயற்சித்தவர் மர்க்கஷிஸ் ஐயர்.
வன்மத்தின் உச்சத்தில் செயல்பட்ட கால்டுவெல்லை திராவிட தந்தை என்பதால் உயத்தி எழுதும் கட்டாயத்தில் கூலி வரலாற்று ஆசிரியர்கள் சட்டாம்பிள்ளையை குறைத்து எழுதி வருவதும் மர்காஷிஸ் ஐயர் பற்றி பதியாது வருவதிம் கண்டு வருகிறோம். இடையங்குடியில் ஆலயத்தை விட பெரிய மாளிகை கட்டி குடியிருந்தவர் கால்டுவெல்.
ஆனால் நாசரேத்தின் தற்போதையை தூய யோவான் ஆலயத்தின் விரிவுப்படுத்திய கட்டிட அமைப்பிற்கு மர்க்காஷிஸ் ஐயர் பங்காற்றி உள்ளார். நாசரேத் ஊரின் மக்கள் குடியிருப்பு கட்டமைப்பை சுகாதாரமாக உருவாக்கினவர் மர்காஷிஸ் ஐயர். ( தற்போது நாசரேத் குப்பை கூடமாக இருப்பது தற்போதைய சபை அமைப்பின் தன்மை, நோக்கம், மற்றும் அவ்வூர் அரசியல் சமூக தலைமைகள் திராவிட கட்சிகளுடன் இணைந்து தங்கள் குடும்பங்களை தங்கள் அடையாளத்தை மட்டும் வளர்த்து கொண்ட சுயநலம் தான்.) சீர் திருத்த சபைகள் உருவாக்கின குடியிருப்புகள் 15 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவம் குடியிருப்புக்ளை உருவாக்கினா கத்தோலிக்க பாதிரிகளை விட மக்கள் நலம் சார்ந்ததாக விசாலமான பாதைகள் இயற்கை மாறாத்த மரங்கள் கொண்டு உருவாக்கியிருந்தனர்.. ( கத்தோலிக்க்க குடியிருக்கும் தூத்துக்குடி, கடற்கரை பகுதிகள் ஸ்ரீவைகுண்டம். கவனிக்க. )
சட்டாம்பிள்ளை வாரிசுகள் மற்றும் நாடார் இனம் எதிர்வினை ஆற்றவில்லை என்பது கவலைக்குறிய விடயம்.
---_---=======-=-----------------======
11 தற்கால வரலாற்று ஆணிகள் கருத்து 😌
"🤣நீ என்ன பெரிய சட்டம்பிள்ளையா?"_
இந்து கிறிஸ்துவ ஏக இரட்சகர் சபை,
மூக்குப்பீறி
அருமைநாயகம், இந்து கிறிஸ்துவ ஏக ரட்சகர் சபையைத் தோற்றுவித்து, அதை யூத-தமிழ் பாரம்பரியப்படி வழிநடத்தியது வரலாறு.
... அருமை நாயகம், இந்து கிறிஸ்துவ ஏக ரட்சகர் சபையைத் தோற்றுவித்து, அதை யூத-தமிழ் பாரம்பரியப்படி வழிநடத்தியது வரலாறு. இந்து-கிறிஸ்தவ ஏக இரட்சகர் சபை எவ்வாறு இந்திய ஏக இரட்சக சபையாக மாறியது என்பது புரியவில்லை.(😂 அதை கேட்டு விசாரித்து கேட்டு புரிந்து எழுதுவது தான் வரலாற்று ஆசிரியர் பணி 🙏)
ஒரு சமயம் மூக்குப்பீறியில் இரு குடும்பத்தாருக்கு இடையே நேர்ந்த சண்டையில் தலையிட்டு, சமரசம் செய்த அருமை நாயகத்தின் பணியை ஊர் மக்கள் வெகுவாகப் பாராட்டினார்கள். '🤣ஆவியின் கிருபை' இருந்ததால் அவரால் இந்தச் சிக்கலை சரிசெய்ய முடிந்தது எனவும் நினைத்தார்கள். கால்டுவெல்லின் திருநெல்வேலி சாணார்கள் புத்தகத்தை தனக்கு 🤣சாதகமாக்கிக் கொள்ள முடிவெடுத்த சட்டாம்பிள்ளை, அதை மூக்குப்பீறி, பிரகாசபுரம் பகுதி நாடார்களிடம் வாசித்தே கொண்டுசேர்த்தார். அங்கு மிஷனரிகளுக்கு எதிரான அலை வீசியது. புதிய ஏற்பாட்டிலிருந்து மக்களை திருப்பி, பழைய ஏற்பாடே சிறந்தது எனவும் அதன் யூத முறைப்படி வழிபாடு செய்வதே கடவுளுக்கு உகந்தது எனவும் சட்டாம்பிள்ளை மக்களுக்கு போதித்தார்.
சனிக்கிழமை ஓய்வு - சாபத் (Shabbat), பாஸ்கு, மாதப்பிறப்பு போன்றவை கொண்டாட வேண்டிய பண்டிகைகள் என மக்களின் மனதை மாற்றினார்.
தங்களைப் போன்ற ஒருவர், அறிவில் சிறந்தவர், மிஷனரிகளையே எதிர்த்துக் கேள்விகேட்டவர் 😁என சட்டாம்பிள்ளையின் சொல்லுக்கு அம்மக்கள் கட்டுப்பட்டார்கள். 1857ம் ஆண்டு இந்தியாவே ஆங்கிலேயருக்கு எதிராகத் தன் முதல்.....
1867ம் ஆண்டு கலெக்டருக்கு விண்ணப்பித்தார்கள். இதனால் சந்தை செவ்வாயன்று நாசரேத்திலும், வெள்ளிக்கிழமை மூக்குப்பீறியிலும் கூட்டுவது என ஆணை கிடைத்தது. தங்கள் ஓய்வு நாளுக்கு ஏற்றவாறு சந்தையையே மாற்றி அமைக்கும் அளவுக்கு இந்த மக்கள் அதிகாரம் மிக்கவர்களாக அப்போதே இருந்திருக்கின்றனர்.🤪
1883ம் ஆண்டு சட்டாம்பிள்ளைக்கும் சங்கத்தினருக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு இருந்துள்ளதாகத் தெரிகிறது. கோயிலுக்குள் பிரசங்கம் செய்யும்போது தலைப்பாகை அணிவது, தன் வீட்டு 😌ஆண் பிள்ளைகளை மட்டும் உயர்கல்வி கற்கவைத்தது, பலியாடு, போக்காடு என இரண்டு ஆடுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றில்🙊 ஒன்றை பலியிட்டும் மற்றதை😭 கண்களைத் தோண்டி காட்டில் அலையவிட்டார் எனவும், வீட்டுக்கிணற்றில் பொது மக்கள் தண்ணீர் எடுக்கத் தடையாக அதைச் சுற்றி சுவர் எழுப்பினார் எனவும் இவர்மேல் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் சபை மீண்டும் பிளவுபட்டது.
பிரிந்து போன மக்கள் பிரகாசபுரம் தேவ ஈசாக்கு நாடார் தலைமையில் 1883ம் ஆண்டு முதல், 15 ஆண்டுகளுக்கு அவரது வீட்டு முற்றத்தில் ஆராதனை நடத்தினார்கள். பின்னர் மூக்குப்பீறி மாடுமந்தை கூடிய இடத்தில் ஓலைவேய்ந்த கோயில் ஒன்றைக் கட்டி வணங்கினார்கள். 28.09.1886 ( இது உண்மையா கட்டுக்கதையா என்று ஊர் மக்கள் தான் சொல்ல வேண்டும். அருமைநாயகம் சட்டாம் பிள்ளையின் வாரிவுகள் பதில் சொல்ல வேண்டும்

0 Comments:

Post a Comment