3 Aug 2011

உறுமும் "உறுமி"! மலையாளத் திரைப்படம்




உறுமி என்பது போரில் பயன்படுத்தும் ஒரு ஆயுதம் ஆகும்.       சந்தோஷ் சிவம் இயக்கத்தில் பிரத்வி ராஜ், பிரபு தேவா, ஜெனிலியா  நடிப்பில் கேரளக் கரையில் இருந்து மார்ச் 2011 மலையாளம் மொழியில் வெளிவந்த திரைப்படம் ஆகும் றுமி .
வாஸ் கோ டா காமா என்ற மேல்நாட்டு பயணி லிஸ்பனில் இருந்து 15ஆம் நூற்றாண்டில் ஒரு குழுவாக ஆப்பிரிக்கா கண்டம் வழி கேரளா கோழிக்கோடு வந்து சேர்ந்தார்.  கேரளாவிலுள்ள அளவில்லா வளங்கள் கண்டு சிறப்பாக குருமிளகு வியாபரம் செய்யும் நோக்குடன் அடுத்தடுத்து  இரு முறை ஆயுதங்களுன் வந்து  கொச்சின் நாட்டு மன்னரை கைப் பாவையாக வைத்து கொண்டு குறும்நில மன்னர்களான சாமூதிரிகளை அடக்கி கேரளா நாட்டு மக்களை கொன்றும் துன்புறுத்தியும் கேரளா மண்ணை எவ்வாறாக கையகப்படுத்தினர் என்பதே கதைத் தளம்.  அதையும் தற்கால பன்னாடு நிறுவன்ங்களின் ஊருடவலையும் அழகாக ஒப்பிட்டு காட்டியுள்ளனர்.


சாதாரண திரைப்படம் போன்று அல்லாது நிழலையும் நிஜத்தையும் பின்னி கதைசொல்லியுள்ள பாணி வித்தியாசமாக உள்ளது.  காட்சி அமைப்புகள்  சில இடங்களில் நெருடலாக இருப்பினும் கூட சிவம் சந்தோஷின் கேமரா அழகாக படம் பிடிக்கின்றது .  பின்னிசையும்  நன்றாகவே உள்ளது ஆனால் மனதில் நினைக்கும் படி இல்லை என்பது ஒரு குறையே!  திரைக்கதையும் மெச்சும்படி இல்லை தமிழும் அல்லாது மலையாளமும் அல்லாது கதைப்பது ரசிக்கும்படியாக இல்லை தான்.

கதை இப்படியாக தொடங்குகின்றது கேரளாவை சேர்ந்த கோவாவில் வேலை செய்யும் இளைஞர்கள் வாழ்க்கையில் ஒரு கோட்பாடும், கட்டுபாடும் இன்றி கிடைக்கும் பணத்தை செலவழித்து போதாதற்க்கு கடனும் வாங்கி செலவழித்து  டிஸ்கோத்தை ஆட்டவும் போட்டு நாட்களை கடத்தி செல்கின்றனர்அவரில் ஒருவர் ராஜ குடும்பத்தை சேர்ந்த பிரித்வி ராஜும் மற்றொருவர் அவர் நண்பரும் இஸ்லாம் இளைஞருமான பிரபு தேவாவும்.

ஒரு நாள் கேரளாவில் இருந்து ஒரு கட்டிடக் கலை பன்னாட்டு நிறுவனத்தின் ஆட்கள் வந்து பிரத்வி ராஜிடம் உங்கள் அம்மா வழி சொத்து  உங்கள் பெயரில் உள்ளது ஒரு கையெழுத்து மட்டும் இட்டு தந்தால் பணத்தை பெற்று கொள்ளலாம் என்கிறது.  பிரத்வி ராஜும் தான் வசிக்கும் நகரத்தில் இருந்து தன் மூத்த குடிகள் வசித்த கிராமத்திற்க்கு வருகின்றார்.  அங்கு அம்மாவின் நிலத்தில் ஒரு பள்ளி இயங்குகின்றது.  பள்ளி நடத்துபவர் வித்தியா பாலன் பிருத்வியிடம் சில உண்மைகள் புரிய வைக்கின்றார் மேலும் தெரிந்து கொள்ள அந்த மண்ணின் மக்களாம் பழம்குடி மக்களிடம் செல்ல பணிகின்றார்.  அங்கு ஆரியா சில கேள்விகள் வைக்கின்றார் உன் அப்பா யார் உன் அப்பாவின் அப்பா அவரின் முன்னோர்கள் யார் என  தெரியுமா என்று! சிறப்பாக இளைஞனின் முன்னோரான கேளு நாயனாரும் அவர் அப்பாவும் வாஸ்கோடி காமாவிடமும் அவன் மகனிடவும் போராடி உயிர் தியாகம் செய்ததை சொல்கின்றார்.  இளைஞரும் தன் சுயநலனுக்காக தன் பூமியை விற்பது இல்லை என உறுதி எடுக்கின்றார்.  விரும்பிய பணம் அல்ல; தன்  சொந்த நாட்டு மக்கள் வளமாக வாழவேண்டும் தன் முன்னோர்கள் ஆசைப்பட்டது நடக்க வேண்டும் என்று நினைத்து, கிடைக்க போகும் பணத்தை புரக்கணித்து விட்டு செல்கின்றார்.

 கதைக் கரு அழகானது தான்.  தற்காலைய அரசியல் வாதிகளையும் அக்கால மன்னர்களின் மந்திரியையும் சரியாக பொருத்தி பார்த்துள்ளனர்.  அதே போல் நாட்டுக்கு வெறும் பயணி போல் வந்து நாட்டை பிடித்த அயல்நாட்டவருடன் தற்காலைய பன்னாட்டு நிறுவங்களின் செயல்பாட்டையும் தராதரபடுத்தியுள்ளார்.    

பிருத்துவியின் நடிப்பு குறை சொல்லும் படி இல்லை பழைய காலத்து ஆண்களின் வலிமையை உடல் மொழியில் நடை, பார்வை வழியாக சிறப்பாக வெளிப்படுத்துகின்றார்ஆனால் இஸ்லாமிய தமிழ் நண்பனாக வரும் பிரபு தேவாவின் நடிப்பு தான் 'காமடி பீஸ்' போல் உள்ளது; நம் தமிழகப் படங்களில் வரும் விவேக் போன்று!   வீர- சூரத்திற்க்கு பெயர் போன தமிழர்கள் 15 நூற்றாண்டில் இப்படியாகவா இருந்திருப்பார்கள் என்று கேள்வி கேட்க வைக்கின்றது பல இடங்களில் அல்லது மலையாளிகளின் மேட்டுக்குடி பார்வையா என்றும் தெரியவில்லை?

 சொல்லும் கதை-கருத்துக்கு என சரித்திர உண்மைகளை பல இடங்களில் உடைத்து நெளித்துள்ளனர் என்று விமர்சர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   குதிரைகள் அக்காலத்தில் இல்லை என்றும் சில சம்பவங்களை வரலாறையும் மீறி பொய்யாக கதைத்துள்ளதாக ஆய்வாளர்கள் தங்கள் வருத்தத்தை தெரிவித்துள்ளனர்.  மேலும் ராஜ குடும்பம் என்று பிரத்வி ராஜை அடையாளப்படுத்துவதிலும் பிழை உள்ளது என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அந்நாளைய பெண்களின் பார்வை நடை உடை தான் சகிக்கவில்லை!  தற்காலைய  உலக அழகிகளில் பூனை நடை நடக்கின்றனர். இயக்குனர் சந்தோஷ் சிவன் ஒளிபதிவாளராகவும் இருந்துள்ளதால் காமரா கண் வழியாக அழகாக படம் பிடித்திருந்தாலும் இயக்குனர் என்ற நிலையில் பல இடங்களிலும் சறுக்கி விழுந்துள்ளார். சர்க்கரை பொங்கள் ருசியானது என்று சர்க்கரை அளவுக்கு அதிகம் சேர்த்து சாப்பிட்டு திகட்டி மக்கு பிடித்தது போலவே   உள்ளது பல இடங்களில் காட்சிகள்.  பல காட்சிகளும் கலை நயம் என இருட்டில் படம் பிடித்துள்ளது படம் பார்த்து கொண்டிருக்கும் நம் நிலையை மறக்க செய்து ஓவிய அருங்காட்சியகம் உள் நுழந்தது போன்ற ஒரு உணர்வு.

                                                                                                                                                                    
பாடல் காட்சிகள்http://www.youtube.com/watch?v=7LsDvcAcV88 கதைக்கு ஒட்டாது நிற்கின்றது என்று மட்டுமல்ல தபு, விந்தியா பாலன், புது நடிகை ரம்யா நாயர், ஜெனிலிசா போன்றவர்களை அழகான காவியமாக என்பதற்க்கு பதிலாக வாழைப் பழத்தை உரிப்பது போல் காட்டப் பட்டுள்ளனர்.   பட்டு போன்ற பெண்களை இப்படி அடித்து துவைத்து கிழித்து காயப் போட்டுள்ளதை ரசிக்க இயலாது   என்று இயக்குனர்கள் வரும் காலங்களிலாவது உணர வேண்டும்.  பெண்ணின் மார்பு அழகை படம் பிடித்து காட்டியே தீர்வேன் என்று பல இடங்களில் கவர்ச்சி தான் புகுந்துள்ளது.  ஜெனிலியா ஆயிஷா பீகம் என்ற இஸ்லாமிய அரண்மனை வாரிசாக வருகின்றார் அவர் மூடிய உடையுடன் வருவதும் திடீர் என எல்லாம் களைந்து வருவதும் உண்மையும் மீறி படம் பார்க்க தூண்டில் போட்டு மக்களை பிடிக்க உதவும் தந்திரம் மட்டுமே. ஆர்யா சில காட்சிகளில் வந்து போவார் நான் கடவுள்-பிதாமகன் சேர்ந்த கலைவையாக வருவது எரிச்சல் தான் தரவைக்கின்றது.
                                                                                                                                                                          
 இந்த படம் 200 மில்லியன் செலவில் தெலுங்கு ஹிந்தி தமிழ் ஆங்கிலம் மொழிகளிலும் எடுத்துள்ளனர் என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். படம் பார்த்து முடித்த போது ஏதோ ஒரு மனநிறைவு இன்மை!  இயக்குனர் நல்ல கதை சொல்லியாக இன்னும் உருவாகவில்லையோ?

23 comments:

  1. வணக்கம் சகோதரி,
    இருங்க படிச்சிட்டு வாரேன்.

    ReplyDelete
  2. நானும் படிச்சிட்டு வரேன்

    ReplyDelete
  3. சாதாரண திரைப்படம் போன்று அல்லாது நிழலையும் நிஜத்தையும் பின்னி கதைசொல்லியுள்ள பாணி வித்தியாசமாக உள்ளது.>>>>

    அப்படியா...ரைட்டு

    ReplyDelete
  4. விமர்சனமே படம் பார்த்த மாதிரி இருக்கு....

    ReplyDelete
  5. நண்பா தமிழ்வாசி மகிழ்ச்சிகள்!

    ReplyDelete
  6. படம் பார்க்க ஆசையைத் தூண்டியுள்ளது உங்கள் விமர்சனம் ...

    ReplyDelete
  7. காட்டமான விமர்சனம். படத்தில் உள்ளதை உள்ளபடி தெளிவாக விமர்சித்து சொல்லி இருக்கும் விதம் அருமை.

    ReplyDelete
  8. விமர்சனம் அருமையாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.விமர்சனம் அருமையாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அன்புத்தோழி ஜோஸபின் உங்களது துணிச்சலான விமர்சனத்துக்கு.முதலில் ஒரு பூச்செண்டும்,கரசேவையும்.மிகவும் இயல்பாய் எழுதி இருக்கீங்க.யதார்தமான சொல்லாடல்.படிப்பது போலவே தெரியவில்லை,ட்ரெய்லர் பார்த்த மாதிரியே இருந்தது.நான் படிச்ச சில மலையாளப்பட விமர்சனங்களும், பார்த்தவைகளும் உயிரோட்டமுடன் இயல்பு மாறாமல் எடுக்கப்பட்டவைகள். உங்களது விமர்சனத்தின் வாயிலாக மலையாளிகளும் கலைத்தன்மையை இழந்துவிட்டார்கள் போல தோன்றுகிறது.காட்சிப்படுத்தவோ கதை சொல்லவோ தெரியாதவர்களால் கலைக்கு கண்ணைக்கட்டி காட்டில் விடப்பட்டுள்ள நிலை.மொத்தத்தில் உறுமி உங்களின் பார்வையின் நான் பார்த்தவரை,ஒரு கோழையின் கையில் உள்ளது.இது வெற்றுச்சத்தம்...சரி தானே...:)

    ReplyDelete
  10. விமர்சனம் அருமை..Josephine..
    வாழ்த்துக்கள்..
    மலையாளத்தில் ஒரு டாப் 10 படங்கள் பதிவிடுங்களேன்...கடைசியாய் மழை எத்தும் முன்பே...மணிசித்ர தாழ் பார்த்தது...

    ReplyDelete
  11. மணிச்சித்திரதாழ் வந்து தான் 15 வருடம் இருக்குமே அதன் பின் வந்த படங்கள் நிறையவே உண்டு. ஆனால் சமீபகாலமாக தமிழ்ப் படம் சாயல் அங்கும் அடிக்க ஆரம்பித்து விட்டது..நான் முயல்கின்றேன் சகோதரா.

    ReplyDelete
  12. யாரப்பா அது மிட் நைட்ல பதிவு போட்டு தொந்தரவு பண்றது..

    ReplyDelete
  13. >> பாடல் காட்சிகள்http://www.youtube.com/watch?v=7LsDvcAcV88 கதைக்கு ஒட்டாது நிற்கின்றது என்று மட்டுமல்ல தபு, விந்தியா பாலன், புது நடிகை ரம்யா நாயர், ஜெனிலிசா போன்றவர்களை அழகான காவியமாக என்பதற்க்கு பதிலாக வாழைப்பழத்தை உரிப்பது போல் காட்டப் பட்டுள்ளனர்.


    இது எல்லா வணீக ரீதியான படங்களீல் காட்டப்படும் நடை முறை தானே. காம்ப்ரமைஸ் என சால்ஜாப் சொல்வாங்க

    ReplyDelete
  14. படக்கதையை மட்டும் விரிவா விளக்கி இருக்கீங்க.. காட்சி அமைப்புகள், இயக்கம், நடிப்பு பற்றி அதிகம் காணோமே?

    ReplyDelete
  15. >>இஸ்லாமிய தமிழ் நண்பனாக வரும் பிரபு தேவாவின் நடிப்பு தான் காமடி பீஸ் போல் உள்ளது;

    ஹா ஹா நிஜம் தான் காமெடின்னு இவங்களா நினைச்சுக்கறாங்க

    ReplyDelete
  16. மீண்டும் வணக்கம் சகோதரி,
    நானும் நீண்ட நாட்களாக உங்கள் பதிவுகளினைப் படிக்க வேண்டும் எனும் ஆவலோடு காத்திருப்பேன். ஆனால், இன்றைய தினம் தான் புதிய ஓர் பதிவினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    மலையாளப் படங்களைப் பார்க்க வேண்டும் எனும் ஆவலும், ஆர்வமும் என் மனதில் எப்போதும் இருக்கும், ஆனால் நேரத்தினை மீதப்படுத்திப் படத்தினைப் பார்க்குமளவிற்கு வேலையும், என் சூழலும் இடங்கொடுக்கவில்லை.

    இன்று, வரலாற்றுத் திரைக் காவியத்தின் விமர்சனத்தைப் பகிர்ந்திருக்கிறீங்க. இப் படத்தினைப் பார்க்க வேண்டும், எப்படி எம் நாடுகள் வியாபார நோக்கத்திற்காக வந்த மேல் நாட்டவர்களால் சூறையாடப்பட்டன எனும் உண்மையினை இப் படம் கண்டிப்பாகச் சொல்லும் என்பதற்குச் சான்றாக உங்கள் விமர்சனம் அமைந்திருக்கிறது.

    விமர்சனப் பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  17. நல்ல விமர்சனம் .படத்தை நேரில் பார்த்த உணர்வு

    ReplyDelete
  18. பெண்கள் வாழ்க.. அக்கா வாழ்க..

    ReplyDelete
  19. சிறப்பான விமர்சனம். குறைகள் இருந்தாலும் சந்தோஸ்சின் கமராவிற்காகப் பார்க்க வேண்டும். நன்றி.

    ReplyDelete
  20. அந்தப் படத்தை பார்க்காமல் என்னால் கருத்து சொல்ல இயலவில்லை.
    சரித்திரம் கலந்த படங்கள் அல்லது கலைப்படங்கள் வேகமான ஓட்டத் தடையாக இருக்கும்.
    பொழுது போக்கு சினிமா குணாதிசயம் இங்கே இருக்காது.

    சந்தோசின் ஒளிப்பதிவு மற்றும் இயக்கம் சிறப்பானவை.
    அவரது டெரரிச்டு தான் மணிரத்தினத்தின் திலசே (டப்பிங் உயிரே) மற்றும் உயிரே ஆகிய இரு மொழிப்படங்களாகும்.

    சில பகுதிகள்:
    Dil Se
    http://www.youtube.com/watch?v=6HW3VG2cq7s&feature=related

    Uyre
    http://www.youtube.com/watch?v=0-YusGDffAk

    டெரரிச்டு :
    http://www.youtube.com/watch?v=NnP4vMyyy_c

    சகோதிரியின் விமர்சனம் உறுமியை பார்க்க தூண்டியுள்ளது.
    பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  21. வணக்கம் சகோதரி... என்னை நினைவிருக்கிறதா..

    ReplyDelete
  22. சந்தோஷ் சிவன் நன்றாக படம் பிடிக்கிறார், எடுக்கத் தான் தெரியவில்லை.

    ReplyDelete
  23. படம் பார்க்கலாம்னு நெனச்சேன் ...இப்போ அந்த எண்ணம் போய்டுச்சு.. "சிம்மி சிம்மி ..." பாட்டு பிடிச்சிருந்தது..

    ReplyDelete