எக்கோ ஒரு மர்ம த்ரில்லர் மலையாள திரைப்படமாகும்.
இப்படத்தை தின்ஜித் அய்யத்தன் இயக்கியுள்ளார், பாகுல் ரமேஷ் திரைக்கதை எழுதி ஒளிப்பதிவு செய்துள்ளார். எம்.ஆர்.கே. ஜெயராம் 'ஆராத்யா (Aaradyaa Studios) ஸ்டுடியோவின் முதல் தயாரிப்பாகும். இப்படத்தில் சந்தீப் பிரதீப், வினீத், நரேன், பினு பப்பு மற்றும் பியானா மோமின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இதில் நாய்கள், குறிப்பாக இந்தியாவின் சொந்த இனமான தமிழ்நாட்டை சேர்ந்த கோம்பை (Kombai) நாய்கள் , கதையை நகர்த்தும் முக்கியமான பாத்திரங்களாகவே இடம்பெற்றுள்ளன.
திரைப்படம் நம்ப முடியாத கதை சொல்லல் (unreliable narrative), நேர்மறையற்ற (non-linear) கதை அமைப்பு, மற்றும் ஒலி–சுற்றுச்சூழல் மீது கொண்ட கவனம் ஆகியவற்றை பயன்படுத்தி, பார்வையாளர்களை ஆழமாக இழுத்துச் செல்லும் அனுபவத்தை உருவாக்கி உள்ளது.
இந்த திரைப்படம், சுற்றுச்சூழல், த்ரில்லர் பின்னணியில், நாய்களின் யஜமானோடுள்ள விசுவாசம், புத்திசாலித்தனம், தங்களது பகுதியை பாதுகாக்கும் இயல்பு ஆகியவற்றை கதைப்பின்னலாக கொண்டு கதையை நடத்தும் விதம் விருவிருப்பானது.
காணாமல் ஆன குரியச்சனை தேடும் பயணம், மனிதன்–விலங்கு உறவு , சிக்கலான கடந்த காலத் துரோகம், மற்றும் பரஸ்பர இணைப்புகள் ஆகியவற்றை மெதுவாக காட்சியூடாக வெளிப்படுத்துகிறது
நாய்களை பாதுகாப்பிற்காகவும் அதே நேரத்தில் கட்டுப்படுத்தவும் பயன்படுத்தப்படலாம் என்ற படத்தின் மையக் கருத்தையும் உட்படுத்தி உள்ளனர்
எளிமையான ஒரு கதை தான். . . காணாமல் போன நாய் வளர்ப்பாளர் குரியனின் மலேஷியா மனைவி ம்லாத்தி, தனது பயிற்சி பெற்ற நாய்களை பயன்படுத்தி, குரியச்சனை மலைப்பகுதிகளில் எங்கோ சிறைபிடித்து வைத்திருக்கிறாள் என்ற கதை முடிவை, பார்வையாளர்களுக்கு எல்லாவற்றையும் நேரடியாக சொல்லாமல் சிந்திக்க வைக்கும் விதமாக பார்வையாளர்களிடமே கொடுத்துள்ளனர்.
நாய் பயிற்சியாளர் ஜிஜேஷ் எஸ் (Jijesh S) ஒன்பது கோம்பை நாய்களையும் ஒரு ஹஸ்கி நாயையும் பயிற்சி அளித்து, திரைப்படப் படப்பிடிப்பு தளத்தின் அறிமுகமற்ற சூழலில் நாய்களை நடிக்க தயார்படுத்தியுள்ளார். , அவற்றின் நடிப்பு திரைப்படத்தில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
Eko (2025) என்ற திரைப்படத்தின் தலைப்பு “Eko” என்பது “எதிரொலி (echo)” அல்லது “முதல் குழந்தை” என்ற அர்த்தங்களை கொண்டது. மனிதர்களின் செயல்களின் எதிரொலி, அடிப்படை உறவுப் பிணைப்புகள் போன்ற கருப்பொருள்களை இது பிரதிபலிக்கிறது.
இதில் கதாபாத்திரங்களும் பார்வையாளர்களும் சேர்ந்து, மறைந்த கடந்தகாலத்தின் நீட்சியான உண்மைகளை மெதுவாக ஒன்றிணைக்க முயல்கிறார்கள்.
எக்கோபெமினிசம் (Ecofeminism) என்பது பெண்களின் ஒடுக்குமுறையும் இயற்கையின் ஆதிக்கமும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்று வாதிடும் ஒரு கோட்பாடும் இயக்கமும் ஆகும்.
ஆணாதிக்க அமைப்புகள் பெண்களையும் இயற்கையையும் கட்டுப்படுத்த வேண்டிய வளங்களாக பார்க்கின்றன; கலாச்சார ரீதியாக உருவாக்கப்பட்ட வனவிலங்குகளின் ஒடுக்குமுறையும் பெண்களின் ஒடுக்குமுறையும் இடையிலான ஒப்பீடுகளின் அரசியல் விளைவுகளை ஆராய்கின்றன. பெண்களையும் இயற்கையையும் சொத்தாகக் காண்பது, கலாச்சாரத்தின் பாதுகாவலர்களாக ஆண்களையும், இயற்கையின் பாதுகாவலர்களாக பெண்களையும் கருதுவது, பெண்களை ஆண்கள் ஆதிக்கம் செலுத்துவது போல மனிதர்கள் இயற்கையை ஆதிக்கம் செலுத்துவது ஆகியவை அடங்கும்.
ஈகோபெமினிசம், பெண்களுக்கும் இயற்கைக்கும் சமமான மரியாதை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
இதுவும் இத்திரைப்படத்தில் காணலாம். ஒரு பெண்ணின் கணவனை சட்டசிக்கலில் சிக்க வைத்து , அவளை காப்பாற்றுவது போல சிறைப்படுத்தி வைத்து அவளுக்கு அன்பு பாராட்டி வந்தாலும் அதன் முடிவு அவளின் கட்டுபாட்டில் அந்த மனிதனின் வாழ்க்கை சிறப்படுகிறது என்பதாக முடித்துள்ளது தனித்துவமாகுகிறது .
கதாநாயக பிம்பம் தேவையற்ற பாடல் ஆடல் இல்லாமல், கவர்ச்சி பெண்கள் என்ற மாயாசாலம் எதுவும் இல்லாது சுவாரசியமான கதை , சிறப்பான திரைக்கதை ஊடாக சிறப்பான ஒரு திரைப்படம் தரலாம் என நிரூபித்து உள்ளனர்.
இப்படம் 2025 நவம்பர் 21 வெளியானது. விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்கள் என இருதரப்பிலிருந்தும் பெரும் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது.
₹5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இப்படம், உலகம் முழுவதும் ₹50 கோடிக்கும் மேல் வசூல் செய்து வணிக ரீதியான பெரும் வெற்றியைப் பெற்றது.
பாகுல் ரமேஷின் 'விலங்கு முத்தொகுப்பின்' (Animal Trilogy) மூன்றாவது மற்றும் இறுதிப் பகுதியாக 'எகோ' திரைப்படம் அமைகிறது. இந்தத் தொடரின் முந்தைய படங்கள்: கிஷ்கிந்தா காண்டம் (Kishkindha Kaandam - 2024) கேரளா க்ரைம் ஃபைல்ஸ் 2 (Kerala Crime Files 2 - 2025)
தமிழகத்தின் கோம்பை நாய்கள் என்று அறியப்படுவையின் பூர்வீகம் மலேஷியா என்று கட்டமைக்கும் போதும் தமிழக கோம்பை நாய் வரலாற்றை குறிப்பிடாமல் கதை முடிக்கப்பட்டது எதனால் என்ற கேள்வியும் மனதில் தங்குகிது,
பெண்களும் இயற்கையும் ஒன்று. இயற்கைக்கு கொடுப்பது போன்ற மரியாதை பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை எக்கோ பெமினிசம் வலியுறுத்துகிறது
இரு அன்னிய ஆண்களை வீட்டுக்கு அழைத்து வருகிறான் கணவன், தன் மனைவியை மகள் போல நேசிக்கிறேன் என்கிறான் வந்தவர்களிடம்.
வந்தவன் இருவரும் இப்பெண்னை கடத்தி கொண்டு போக மோகம் வருகிறது. முதலில் நுட்பமாக உன் கணவனுக்கு உன்னை விட அவன் தொழில் மேல் தான் விருப்பம் என்று கூறி அவள் கணவன் மேல் வெறுப்பை உருவாக்குகின்றனர்.
அவளை போராடி காப்பாற்றுவது போல அவளுக்கு இயல்பாகவே அமைத்து வைத்து இருந்த பாதுகாப்பை உடைத்து அவன் பகுதிக்கு கொண்டு வந்து அவனுக்கு மட்டும் என்று சிறைப்படுத்துகிறான். அதை தெரிந்து கொள்ளும்போது அவள் வயோதிகத்தையும் அடைகிறாள். .
அவளை காப்பாற்றுவது போல சிறைப்படுத்தி வைத்து இரு மகன்களையும் கொடுத்து அங்கும் அவளை தனது தனித்த அன்பு அன்பு போல பாராட்டி வந்ததும் அவளைச் சிறப்படுத்தவே என்று அறிந்த போது அவள் கவலை கொள்கிறாள்.
முடிவு அவளின் கட்டுபாட்டில் அந்த மனிதனின் வாழ்க்கை முழுதும் சிறப்படுகிறது என்பதாக முடித்துள்ளது
மலையாளம் திரைப்படம் எடுக்க இளைஞர்கள் மேனக்கெடுகின்றனர் . சினிமா என்ற கலைத் தன்மையை சரியான வகையில் பயன்படுத்துகின்றனர். காட்சி ஊடகமான சினிமா காட்சிகள் ஊடவே பார்வையாளர்களில் சேர்க்கின்றனர். உரையாடல்கள் மிகவும் குறைவாக பயன்படுத்துகின்றனர்.
ஒரே பெண் கதாப்பாத்திரம் கதை அத்தனை விருவிருப்பாக நகத்தும் உத்தி தெரிந்து வைத்துள்ளனர்.
எக்கோ.பெமினிசக் கருத்தை மிகவும் நுட்பமாக கதையில் வைத்துள்ளனர்.தங்களது சுய லாபங்களுக்காக இயற்கையும் இயற்கை வழங்களையும் அழிப்பது போல பெண்களை அழிப்பதற்கும் தயங்குவது இல்லை.
இயற்கை தங்கள் கட்டுபாட்டில் கொண்டு வருவது போலவே பெண்களுக்கு அன்பு ஆதரவு விடுதலை கொடுப்பதாக தங்கள் கட்டுப்பாட்டில் வைக்க துணியும் ஆண்கள் இயற்கையின் சீற்றம் போன்றே அதே இயற்கையால் அழிகின்றனர்.
இந்த ஆண்கள் யார் என்றால் நாயர்களாக பாதுகாவலர்களாக அதிகாரிகளாக பாவலாகாட்டும் ஆண்களே.
.jpg)

.jpg)

0 Comments:
Post a Comment