2 Sept 2025

ராபர்ட் கால்ட்வெல் - மதம் பரப்ப வந்த அன்னிய நாட்டு ஏஜன்று.

#போர்துகீஸ் நாட்டினர் கடலோடிகளுக்கு உதவுவது மாதிரி நமது நிலப்பரப்பை கையடக்கினர். அதை தக்க வைக்க பின்னால் பாதிரிகளை அனுப்பி மதம் மாற்றமும் செய்தனர்.

#ஆங்கிலேயன் East Indian நிறுவனம் ஊடாக நமது நாட்டில் வியாபாரம் என்ற பெயரில் நுழைந்து பின்பு அரசியல் அதிகாரத்தையும் எடுத்துக் கொண்டதுடன் தங்கள் திட்டம் தெரியாமல் இருக்க முற்போக்கு மதம் என்று நிரூபிக்க கால்டுவெல் போன்றோரை அனுப்பினர்.
இதில் எவனும் #போரிட்டு வரவில்லை.
மதம் பரப்ப வந்த கால்டு வெல் எதற்காக இனங்களின் குணம் தன்மைகளை பற்றி ஆராய்ச்சி செய்ய வேண்டும்?

கால்டுவெல் வாழ்ந்த காலத்திலே அருமைநாயகம் சத்தம்பிள்ளை நாடார் பதில் கொடுத்து விட்டார். சொல்லப்போனால் கால்டுவெல்லால் சாகும் வரை நெல்லையில் கால் வைக்க இயலவில்லை. கால்டுவெல்லின் பணம் கையாடல் பற்றி கால்டுவெல் காலமே புத்தகங்கள் வந்து விட்டது. கால்டுவெல் எத்தகையா பொறாமைக்காரர் என்பது நாசரேத் தந்தை என அறியப்படும் #மார்காசிஸ் ஐயர் வாழ்க்கையை வாசித்தால் விளங்கும்.
நெல்லையில் மதமாற்றம் செய்ய என்ன வித்தைகள் எல்லாம் கையாண்டனர் என்பதை #டோனாவூர் கார்மைக்கேல் அம்மையார் புத்தகங்களில் இருந்து அறியலாம்.


நாடார் பெண்கள் சுவாரசியமான கதை கேட்க விரும்புகிறவர்கள். வெள்ளைகாரிகள் வந்ததும் கதை கேட்பது அவர்கள் வழக்கம். அதே நேரம் மற்றைய இனப் பெண்கள் முக்கியமாக பிராமண பெண்கள் தங்கள் குடியிருப்புக்குள் விடவே இல்லை.
எளிய நாடார் ஆண்களுக்கு வேலை தருகிறோம் பெண்களுக்கு கல்வி தருகிறோம் எனக் கூறி மதம் மாற்றினர். அதன் தாக்கம் ஆசிரியை பணியில் இருக்கும் பெண்கள் மற்றும் அரசு பணிகளில் வர முடிந்த ஆண்கள் எண்ணம் வைத்து கணக்கில் கொள்ளலாம்.
முக்கியமாக கன்யாகுமாரி பகுதியில் வேணாட்டு மன்னர்கள் ஆட்சியின் கீழ் சமூுக ஒடுக்குதலில் இருந்த பனையேறிகள் மற்றும் மதுரை நாய்க்கர்கள் கொடுமையால் தேரிக்காட்டில் பஞ்சம் பிழைக்கும் சூழலில் தள்ளப் பட்ட திருநெல்வேலி ,தூுத்துக்குடி , திருச்செந்தூர் பகுதி சாணார் என்று விளிக்கப்பட்ட நாடார்கள் மதம் மாற்றத்திற்கு உந்தபட்டனர்.
#சிவகாசி விருது நகர் , நாடார்களில் இது போன்ற மத மாற்றம் நடை பெற வில்லை.
அதாவது 14 ஆம் நூற்றாண்டு முன்புள்ள நாடார் சமூுக நிலையை ஆராய்ச்சி செய்யாது கால்டுவெல் சொன்ன நாடார் வரலாறு கதையை இன்றைய அரசியல் தேவைக்காக நிறுவ பார்க்கின்றனர்.
மதம் மாற்ற அன்னிய சக்திகள் #நமது பண்பாட்டை, #பின்பற்றியிருந்த மதத்தை, இனமக்களின் குணநலங்களை பற்றிய மிகவும் கீழ்மையாக புகுத்தி ஒரு தாழ்வு நிலையை புகுத்தி மதம் மாற்றினார்.
மதம் மாற்றத்திற்கு இன அடையாளம் மிகவும் தடையாக இருக்கிறது என்றதும் கிறிஸ்தவர்களுக்கு ஜாதி இல்லை என்றனர்.
மத மாற்றத்தால் நாடார் இனத்தின் வியாபாரத் தொழில் நலிந்தது. ஒற்றுமை இல்லாமல் போனது, குடும்ப உறவுகள் குடும்ப கட்டமைப்பு இல்லாமல் போனது.
பத்திரகாளி அம்மனையும் சிவனையும் தெய்வமாக வழி பட்டவர்களுக்குள் கிருபை, சாத்தான் போன்ற பெயரில் பிரிவினை உருவானது..
#நாடார்கள் பொதுவாக ஒரு கூட்டுக் குடும்பமாக தொழில்களை நடத்துக்கிறவர்கள். அவர்கள் வேதக்காரர்கள், பெண் கொடுக்க மாட்டோம் பெண் எடுக்க மாட்டோம் என்று சொல்லி பிரியும் அளவிற்கு பிரிவினையை உருவாக்கினர்.
நாடார்கள் பொதுவாக #ஆண்கள் உழைப்பில் பெண்கள் வீட்டிலிருந்து குடும்பத்தையும் கவனித்து வியாபாரத்திற்கு முதுகு எலும்பாக இருக்கும் தன்மை கொண்டவர்கள்.
பிற்பாடு பெண்கள் வேலைக்கு போய் நாடார் ஆண்கள் இருசக்கிற வாகனத்தில் பெயருக்கு ரியல் எஸ்டேட் செய்கிறோம் என்ற நிலை வரை வந்து விட்டது. இன்று புது தலைமுறை ஆண்களுக்கு உழைப்பு என்பது எட்டாகனியாகி உள்ளது.
@தமிழகத்தில் உள்ள #ஊழியக்காரர்கள் என்ன இனம் என விசாரித்து பாருங்கள். உழைப்பு சவுடால் பேச்சில் முடிந்த அவலம் காணலாம்.
#வைகுண்ட சாமிகள் மட்டும் கன்யாகுமரியில் இல்லாமல் போயிந்தால் மொத்தமும் இன்று கிறிஸ்தவர்கள் ஆகி இருப்பார்கள்.
இன்று கன்னியாகுமாரி மலைகள் கேள்வியே அற்று காணாமல் போக மதமாற்ற மனநிலையும் ஒரு காரணம் தான். #கிறிஸ்தவர்களுக்கு உலக வாழ்க்கை என்பது கர்த்தரை துதித்து ஆடம்பரமான வாழ்க்கைக்கு மட்டும் தான். அவர்கள் நிரந்தர வாழ்க்கை பரலோகம் தான்.
மதம் என்பதை வெறும் கடவுளோடு மட்டும் இணைத்து பார்க்க இயலாது. நமது பண்பாடு வாழ்வியல் எல்லாம் மாற்றி விடும்.
இன்றைய கிறிஸ்தவ கல்யாண வீடுகள் கண்டால் தெரியும். அவர்களுக்கு மாமன் மச்சான், பங்காளி குடும்பம் எவரும் தேவையில்லை. பணம் இருந்தால் #பாதிரிகள் வந்து கல்யாணத்தை முடித்துப் கொடுப்பார்கள்.
#ஒரு இளைஞர் நாடார் இனம் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்து கட்டுரை வெளியிட்டுள்ளார் . நாடார்கள் வாழ்வியல் பண்பாடு எல்லாவற்றுக்கும் #கால்டுவெல் குறிப்பிட்ட மேற்கோளை குறிப்பிடுகிறார்.

கால்டுவெல் கோட்பாடு மத மாற்றம் சார்ந்தது அடிமை மன நிலை உருவாக்குவது.
திருநெல்வேலியில் மற்றைய இனங்கள் முக்கியமாக #சைவப் பிள்ளைகள், தேவர் இனம், மற்றைய மண்ணின் இனம் பற்றி எதனால் ஆராய்ச்சி செய்து கதை விடவில்லை.
வெள்ளைகாரர்களுக்கு தேவையான நெளிவு சுழிவு உழைக்கும் #அடிமைகள் நாடார் இனம் தான் என கண்டு கொண்டது தான். தேயிலை தோட்ட அதிகாரிகள் ஆக பெருவாரி நாடார்களை கன்யகுமரி பக்கம் இருந்து பல பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அத்துடன் ஆங்கிலேயர்களின் டாம் , சாலைகள் போன்ற கட்டுமானப் பணிக்கும் நாடார்களை இடம் பெயர்த்தி உள்ளனர்.
ஆனால் கால்டுவெல் சொல்லிய நாடார் வரையறையை அன்றே உடைத்து எழுதியதில் முக்கியமானவர் #அருமைனாயகம் சட்டாம் பிள்ளை என்பதை இன்றைய தலைமுறை மறக்க கூடாது.
ராபர்ட் கால்ட்வெல்லின் நாடார்கள் பற்றிய விளக்கம்:
அவர்கள் #உழைப்பாளிகள், எளிய மனம் கொண்டவர்கள், ஆனால் #நாகரிகத்தில் குறைந்தவர்கள், #திறமையற்றவர்கள், உடம்பிலும் பழக்கவழக்கங்களிலும் கொஞ்சம் கடினமானவர்கள். இருந்தாலும் அவர்கள் #புத்திசாலித்தன மற்றவர்களாகவும், அன்பை உணராதவர்களாகவும் இல்லை. #பெரும்பாலும் கூலித்தொழிலாளிகள். பொதுவாக அவர்கள் ஏழைகள் தான்; ஆனால் அந்த ஏழ்மை அளவுக்கு அதிகமில்லை. அவர்களில் சிலர் நல்ல பொருளாதார நிலையில் உள்ளவர்களும் ஆவர். அந்தக் குடியின் ஒரு பிரிவினரிலிருந்து ஒருவர் சமீந்தாராகவும் உள்ளார்.
எனது பார்வையில், சாணார்கள் அவர்கள் பங்கு கிடைத்த #மணற்பாலைவன நிலங்களை வைத்து விரக்தியடையாமல், மாறாக அவற்றை பயனுள்ள பனைமரங்களாலும் அழகும் பயனும் கொண்ட வாழைமரங்களாலும் நிரப்பியதற்காகப் பெரிதும் பாராட்டத்தக்கவர்கள்.”

0 Comments:

Post a Comment