2 Sept 2025

கிறிஸ்தவத்தில் ஜாதி இல்லை. @#########🙊🥹

#பிரிட்டிஷ் ஈஸ்ட் இந்தியா கம்பெனி, திருவிதாங்கூர் இராச்சியத்திலும் #மதராஸ் பிரெசிடென்சியிலும் பிராட்டஸ்டண்ட் கிறிஸ்தவசபை வளர வழி செய்தது.

இவை, சர்ச் மிஷனரி CMS சொசைட்டி மற்றும் லண்டன் மிஷனரி சொசைட்டி (LMS) ஆகிய மிஷனரிகளின் பணிகளின் மூலம் வளர்க்கப்பட்டன.
கிறிஸ்தவத்தில்
1.ரோமன் கத்தோலிக்க தேவாலயம் (லத்தீன் சடங்கு),
2. தென்னிந்திய சபை (Church of South India),
3.லண்டன் மிஷன் காங்கிரகேஷனல் தேவாலயங்கள் (L.M.S.),
4.இந்திய அசெம்பிளிஸ் ஆப் காட்,
5.இந்திய பெந்தெக்கொஸ்து தேவாலயம்,
6.தி பெந்தெக் கொஸ்தல் மிஷன்,
7.தி சால்வேஷன் ஆர்மி தேவாலயம்,
8.சீரோ-மலபார் கத்தோலிக்க தேவாலயம்,
9.யாக்கோபைட்
10.சிரியன் கிறிஸ்தவ சபை,
11.சீரோ-மலங்கர கத்தோலிக்க தேவாலயம்,
12.மலங்கர என பல பிரிவுகள் உள்ளன.
1818 ஆம் ஆண்டில், சுமார் 3,000 நாடார் சமூகத்தினர் கிறிஸ்தவ மதத்தைத் தழுவியதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் கிறிஸ்தவர்கள், மொத்த மக்கள் தொகையில் சுமார் 6% ஆக சிறுபான்மை சமூகமாக இருக்கின்றனர் என்கிறது தரவு.
ஆனால் கத்தோலிக்கர் மட்டுமே 6 சதவீதம் உள்ளனர் . மற்றைய பிரிவுகள் சீர்திருத்த கிறிஸ்தவர்கள் அல்லேலூயா கிறிஸ்தவர்களையும் கணக்கில் சேர்த்தால் 12 சதவீதத்திற்கு மேல் வரும் என்கின்றனர். கிரிப்டோ கிறிஸ்வர்களையும் சேர்த்தால் இன்னும் சதவீதம் உயர வாய்ப்பு உண்டு.
கேரளாவுக்குப் அடுத்தபடியாக இந்தியாவில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
2011-ஆம் ஆண்டு கணக்குப்படி, தமிழ்நாட்டில் 44 லட்சம் கிறிஸ்தவர்கள், (கேரளாவில் 61 லட்சம் கிறிஸ்தவர்கள்) உள்ளனர் என்கிறது தரவு.
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கிறிஸ்தவர்கள் பெரும்பாலும் வசித்து வருகின்றனர் .
2011 சென்சஸ் படி கிறிசஸ்தவ மக்கள் தொகையின்
கன்னியாகுமரி 47.7%,,
தூத்துக்குடி 19%, மற்றும்
திருநெல்வேலி 15% கிறிஸ்தவர்கள் உள்ளனர் .
உறுப்பினர்களின் எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய பிரிவு தென்னிந்திய சபை (CSI) ஆகும்.
இதில் 10 சதவீதம் நாடார் இன மக்கள் கிறிஸ்தவத்தை தழுவியவர்கள் ஆவர்.
மூன்றாவது இடத்தில் பெந்தெக்கொஸ்து பிரிவினர்கள் உள்ளனர்.இவர்கள் தரவுகள் கிடைப்பது அத்தனை எளிது அல்ல. அமீபா மாதிரி ஒவ்வொரு தலைமையின் கீழ் பெருகிக் கொண்டே போகும்.
கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில், நாடார் மற்றும் பறையர் சமூகங்களில் பெரிய அளவில் மதமாற்றங்கள் நடைபெற்றன.
எதனால் நாடார்கள் இனம் மதம் மாறினது என்பதர்கான பதில் வேலை, கல்வி என்பன ஆகும்.ஆனால் அது மட்டுமல்ல. நாடார் இனமும் எளிய நாடார்களான பனை தொழில்களை நடத்திய விதமும் உள்ளடங்கும்.
அத்துடன் மத வியாபாரிகளும் திட்டமிட்டு
நாடார்களுடன் பனையை பொருத்தி தாழ்வு மன நிலையை உருவாக்கிய கால்டுவெல் போன்ற மிஷனரிகள் நாடார்கள் மதம் மாறுவதிலும் காரணமாக இருந்ததுடன் நாடார் என்ற அடையாளம் பயன்படுத்த கூடாது என்பதில் உறுதியாக இருந்தனர். நாடார் மக்களை அடிமை நிலையில் வைத்திருந்தார் என அருமைனாயகம் சட்டாம்பிள்ளை நாடார் கால்டுவெல் மேல் குற்றம் சாட்டி வழக்கு தொடர்ந்ததும் இல்லாமல் பிரிந்து போய் புது கிறிஸ்தவ சபையை உருவாக்கினார்.
#நாடார்கள் ஆண்ட பரம்பரை என்பதில் வரலாறு பூர்வமாக சான்றுகள் மிகவும் குறைவு. அதை சொல்லி வெற்று பேச்சில் இருமாப்பு கொள்வதில் அர்த்தமும் இல்லை. ஆனால் சிறுநாடுகளின் தலைவராக இருந்து இருக்கலாம்.
தொழில் அதிபர்களாக வியாபாரத்தில் தனித்துவம் மிக்கவர்களாக உழைப்பை மட்டுமே நம்பி பிழைத்த குடி. வில் வித்தை கற்றுக் கொடுத்த ஆசான்கள் , கடல் கடந்து பயணம் செய்து சொத்துகள் ஈட்டினவர்கள் என்பதற்கு நிறையவே சான்றுகள் உள்ளன. நாடார் இனத்திலுள்ள எளிய மக்கள் பனத்தொழிலில் இருந்தனர். அதே போல சாராய தொழிலில் அப்காரிகளாக இருந்து ஆங்கிலேயர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்த #பொறையார் நாடாரும் இருந்துள்ளனர்.
இத்தனை இருந்தும் நாடார்களை பற்றி கால்டுவெல் எழுதி வைத்துள்ளவை நாடார் குடியை ஏதோ நலிந்த குடியாகவே அடையாளப்படுத்தி வைத்துள்ளது..
தமிழகம் போன்றே
கேரளாவில் கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் பல வகை ஜாதி பிரிவுகள் உண்டு. ரோமன் லாட்டின்,சிரியன்,
கினாயா,
சீரோ மலபார், யாகோபா கிறிஸ்தவர்கள், இதில் ரோமன் லாட்டின் கிறிஸ்தவர்கள் வரிசையில் அடிமட்ட கத்தோலிக்கர்கள் ஆவர்.
இவர்களுக்குள் கலப்பு திருமணங்களுக்கு வரவேற்பு இல்லை. முக்கியமான கினாயாகாரர்கள் மற்றைய பிரிவுடன் உள்ள திருமண பந்தங்களை கடுமையான சட்டங்கள் ஊடாக தடுத்து வைத்துள்ளனர்.
அரசில் சிறப்பு சலுகை கிடைக்கும் என்ற ஆசையை காட்டி, நாடார் கிறிஸ்தவர்களை லாட்டின் கிறிஸ்தவர்கள் என குறிப்பிட பாதிரிகள் கட்டாயப்படுத்தி வருகின்றனர். சில கிறிஸ்தவ நாடார்கள் பணிந்தும் விட்டனர்.
தமிழ்நாட்டில்
சீர் திருத்த கிறிஸ்தவத்தில் நாடார்கள் எண்ணிக்கை முதல் இடத்தில் என்றாலும் கத்தோலிக்கத்தில் எண்ணத்தில் பறவர்கள் முதலிடத்தில் உள்ளனர்.
பொதுவாக எல்லா கிறிஸ்தவ சபைகளிலும் நாடார் இனம் பின் தள்ளபட்டு விட்டது. அதிகாரத்தில் இருந்து பிய்த்து எறியப்பட்டுள்ளனர்.
இதில் பெருவாரியாக உள்ள தலித் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவத்தை தழுவி இத்தனை வருடமாகியும் சமூுக நீதி மற்றும் மனித நேயம் பேசும் பாதிரி கும்பலால் நல்லது செய்ய இயலவில்லை. அரசிடம் தலித் என்ற பெயரில் கிடைக்க வேண்டிய சிறப்பு உரிமை மைனாடிட்டி என்ற பெயரில் பறி போனது ஒரு புறம் இருக்க, அரசு கிறிஸ்தவ மக்கள் உரிமைக்கு என கொடுத்த மைனாரிட்டி உரிமைகளையும் தங்கள் சபை நிறுவன வளர்ச்சிக்கு பயன்படுத்தி விட்டு தனிநபர் கிறிஸ்தவ வாழ்க்கையை அடிமைகள் போன்று தான் நடத்தி வருகின்றனர்.
கிறிஸ்தவ பள்ளிகளில் கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்விக்கு இடம் கொடுக்க சொல்லி அரசு , சபை நிறுவனத் தலைமைகளை பரிந்துரைத்து வருகிறது , சட்டம் ஊடாக கட்டாயப்படுத்துகிறது. 50 சதவீதம் மைனாரிட்டிகளுக்கு கல்வி கொடுக்கும் நிலையில் இல்லை என்கின்றனர் மத தலைமைகள்.
கிறிஸ்தவ மக்கள் உரிமையும் மைனாரிட்டி உரிமைக்குள் இருக்க இலவச கல்வியோ, சலுகை கல்வியோ கிடைக்க இயலாத சூழலில் தான் கிறிஸ்தவர்கள் உள்ளனர். கிருஸ்த பள்ளிகளில் கிறிஸ்தவர்களுக்கு கல்வி சலுகைகளோ கட்டண சலுகைகளோ கிடைப்பது இல்லை.
இதில் தலித் கிறிஸ்தவர்கள் அரசிடம் இருந்து பெறக் கூடிய சலுகைகளும் கிடைக்க இல்லாது போக இவர்களின் கிறிஸ்தவ மதமாற்றம் ஒரு காரணமாக உள்ளது. தந்திர சாலிகள் ஆன பாதிரிகள் தங்கள் கடமையை உதறிக் கொண்டு ,மதம் மாறின தலித்துகள் மற்றும் பழக்குடியினரை உதவ தற்போது அரசை கேட்டு வருகின்றனர். அதுவும் மக்களுக்கான கேள்வி அல்ல, மக்கள் கிறிஸ்தவ மதத்தை விட்டு போனால் மைனாடிட்டி அதிகாரங்களை வைத்துக் கொண்டு மிரட்டி பிழைக்க இயலாது.
கிறிஸ்தவ மக்கள் கிறிஸ்தவ பாதிரிகள் சொல்கிறவர்களுக்கு தான் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கும் வரை கிறிஸ்தவ தலைமைக்கு கொண்டாட்டம் தான்.
16 ஆம் நூற்றாண்டு முதல் மதம் மாற்றம் என்ற ஆயுதத்தை வைத்து ஆதிக்கம் செலுத்தி
300 வருடங்களாக ஆங்கிலேய அரசின் உதவியுடனும் மதம் மாற்ற வைத்தும் தற்போதும் நிழல் அரசாங்கம் நடத்தி வரும் கிறிஸ்தவம் யாருக்கானது என்ற கேள்வி உண்டு.
பலர் பதில் கிடைக்காது அல்லேலூுயா கும்பலில் சேர்ந்து விட்டனர். அங்கு இங்கைய வாழ்க்கையை பற்றி கவலை கொள்ள இடம் இல்லை. பரலோகத்தில் கர்த்தருடன் ஆடிப் பாடி இருக்கலாம் என்ற நம்பிக்கையில் பேயை விரட்டிக் கொண்டு வேறு உலகத்தில் வாழ்கின்றனர்.
ஆனால் கிறிஸ்தவர்கள் எண்ணிக்கை கூடுவதன் காரணம் ரொட்டி ஜாதீய அடுக்குகள் தீண்டாமை என்பன மட்டுமல்ல.
இந்திய அரசு மக்களின் வாழ்வியல் மனித உரிமை நலன் சார்ந்து இயங்க துவங்கினால் மதமாற்றம் இனியாவது தொடராது, உயராது .
ஆனால் அரசும் கிறிஸ்தவ மக்கள் பற்றி சரியான தகவல்கள் திரட்டவோ அம்மக்கள் வாழ்வியல் பற்றி படிக்கவோ அக்கறை இல்லாமலே இருப்பதால் மதமாற்றம் அதை தொடந்த நிழல் அரசின் நடவடிக்கைகளுக்கு ஆக்கம் கூடுகிறது.
கிறிஸ்தவத்தின் நிழல் அரசை பற்றி அடுத்து பார்ப்போம்.

0 Comments:

Post a Comment