ட்ரெயின் ஆஃப் சில்ட்ரன் திரைப்படத்தை ட்ரெனோ டீ பாம்பினி மற்றும் கிறிஸ்டினா கொமென்சினி இணைந்து எழுதி, கிறிஸ்டினா கொமென்சினி இயக்கி உள்ளார். இது வயோலா ஆர்டோனின் 2019 ஆம் ஆண்டு வெளியான நாவலை அடிப்படையாகக் கொண்டது. தற்போது திரைப்படமாக நெட்ஃபிக்ஸ் தளத்தில் உலகளவில் கிடைக்கிறது.
தாய்மை, தாய்க்கும் மகனுக்குமான
உறவு, அவர்களில் உருவாகும் மோதல் இவையை மையமாக கொண்டு இத்திரைப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. wஆட்டின்
வறுமை, குடும்ப நிலை குழந்தைகளின் குணநலத்தை
எவ்விதம் நிர்ணயிக்கிறது என ஆராய்கிறது இச்சினிமா. போர்
காரணத்தால் வறுமையில் ஆன நிலத்திலுள்ள பெண்களின் உரிமைகள் மற்றும்
அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில் பற்றி சொல்லும்
படமாகும் இது .
ஆண்டு 1946, போரினால் பேரழிவிற்குள்ளான நேபிள்ஸிலில் குழந்தைகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளானர். பசியால் எலிகளை உண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டனர். , கொடுமையான இச்சூழலில் இருந்து குழந்தைகளை மீட்கும் விதம், கம்யூனிஸ்ட் கட்சியின் பகுதியான இத்தாலிய பெண்கள் சங்கம் ஊடாக ஒரு சமூகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தின் ஊடாக தெற்கு இத்தாலியில் உள்ள 70,000 ஏழைக் குழந்தைகளை வடக்கில் உள்ள பணக்கார குடும்பங்களுடன் குளிர்காலத்தைக் கழிக்க அங்கு அவர்கள் வரவேற்கப்பட்டு, உணவளிக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு, சில காலம் கழிந்து தங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்பும் நம்பிக்கையுடன் வளர்கின்றனர். அமெரிகோவும் இச்சிறுவர்களில் ஒருவன்.
அவனது உயிரியல் தாய், பல சிரமங்கள் இருந்தபோதிலும், அவனைத் தானே வளர்க்க முயற்சிக்கிறாள், ஆனால் தன்னால் வறுமையற்ற வாழ்க்கை வழங்க முடியாத நிலைய்யில் தனது மகனுக்கு நல்வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இன்னொரு
ஊருக்கு அனுப்பவும் ஒப்புக்கொள்கிறாள். அங்கு அவனுக்கு
ஒரு அன்பான தாய் , வளர்ப்பு தாயின் சகோதரர் குடும்பம் கிடைக்கிறது.
வளர்ப்புத் தாய் ஆரம்பத்தில்
"தாய்மை" பாத்திரத்தை தயக்கத்துடன் ஏற்றுக்கொள்கிறாள், ஆனால் இறுதியில் அவரது வாழ்க்கையை
மாற்றும் குழந்தையாக அமெரியாவுடன் ஒரு ஆழமான பிணைப்பு உருவாகுகிறது. வளர்ப்பு மகனை
பிரிய மனமில்லாது திரும்ப அனுப்புகிறாள்.
மறுபடியும் சொந்த தாயுடன் வாழும் சூழல் வந்தாலும் தாய்க்கும் மகனுக்குமான உறவு மிகவும் தொலைவாகி விடுகிறது. தனது தாய் தான் ஒரு இசைக் கலைஞனாக இருப்பதை தடை செய்ததும் தன்னை ஒரு குழந்தை தொழிலாளியாக வேலைக்கு அனுப்பியதும் அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. குறிப்பாக தனது இசைக்கருவி வயலினை தாய் விற்று விட்டார் என அறிந்தும் அவளை மிகவும் வெறுக்கிறான். தப்பித்து மறுபடியும் வளர்ப்பு தாயிடம் சேர்வதுடன் படம் நிறைவு பெறுகிறது.
வறுமை குழந்தைகளின்
குணத்தில் வருவிக்கும் மாற்றத்தை மிகவும் தெளிவாக சொல்கிறது இப்படம். எலிக்கு கூட வண்ணம்
பூசி விற்று பணம் ஈட்டும் இடத்தை எட்டுகிறது குழந்தை வாழ்க்கை. மற்றொரு நிலைப்பகுதிக்கு
இடம் பெயரும் போது அவர்களுக்கு உருவாகும் அடையாளச்
சிக்கல், மற்றவர்கள் தங்களை துன்புறுத்தி விடுவார்களோ என்ற அச்சம் தொடர்ந்து பயணிக்கிறது.
தனது தந்தை அமெரிகோவின் மேல் கொள்ளும் பாசத்தைப் பார்த்து பொறாமைப்படும்
லூசியோவுடன் முதலில் அமெரிகோ மோதலில் ஈடுபடுகிறான். பிற்பாடு நண்பர்களாக இணைகின்றனர்.
அல்சைடின் குடும்பத்தினர் அமெரிகோவை
அடுப்பில் ரொட்டி சுட அழைக்கும்போது, அவர்கள் தன்னை அடுப்பில் வைத்து சமைக்க போகிறார்கள் என்று அஞ்சுகிறான். பிற்பாடு நம்பிக்கை
கொண்டு அக்குடும்பத்துடன் மகிழ்ச்சியில் வாழ ஆரம்பிக்கிறான். அவனது வளர்ப்பு தாய் கோதுமை
அறுவடையின் முடிவில் வீட்டிற்குச் செல்வதாக உறுதியளிப்பது அவனுக்கு கொஞ்சம் ஆறுதலை கொடுக்கிறது.
உங்கள் கருணை தேவை
இல்லை என ஒரு பெண் குழந்தை வளர்ப்பு பெற்றோரிடம் சொல்வதும், எங்களை உங்கள்
இரக்கத்தால் தான் தத்து எடுத்து வளர்க்கிறீர்களா என்று கேட்பதும் மிகவும் முக்கிய பகுதி.
தன்மானமுள்ள குழந்தைகள் இரக்கம், கருணையை விட மனித நேயம், மனித உரிமையே விரும்புகின்றனர் எனச்
சொல்லும் திரைப்படம் இது.
அமெரிகோ பள்ளியில் படிக்கிறார், அங்கு அவன் தெற்கத்தியன் என்பதால் கேலிக்கு உள்ளாகிறான், அதே நேரத்தில் லூசியோவால் பாதுகாக்கப்படுகிறான். ஒரு மே தின விழாவில், லூசியோ தனது தாயைப் பற்றி கேலி செய்தான் என்பதாl அமெரிகோ, இதனால் அமெரிகோ லூசியோவுடன் மல்லுக்கட்டி சண்டையிடுகிறான்,
இந்நிலையில் தனது வலர்ப்பு தாயை தேடி வரும் போது ஆணாதிக்கவாதியான சக ஊழியரால்
டெர்னா தாக்கப்படுவதைக் கண்டு கலங்குகிறான். தனது தாய் என்றால் திரும்ப அடித்து இருப்பாள் என்று
தைரியம் சொல்கிறான்.
1994 ஆம் ஆண்டில், தற்போது
வெற்றிகரமான வயலின் கலைஞராக இருக்கும் ஒரு வயது வந்த அமெரிகோவுக்கு தனது தாய் அன்டோனியெட்டாவின்
மரணம் குறித்து தகவல் தெரிவிக்கப்படுகிறது. சொந்த ஊர் நேபிள்ஸுக்கு வந்த அவர், தனது பழைய வயலின் தனது வீட்டில்
இருப்பதை கண்டுபிடித்து, வளர்ப்பு தாயிடம்
போக அனுமதித்த தாயை எண்ணி கண்ணீர் விடுகிறான்.
0 Comments:
Post a Comment