12 Jul 2022

"பாதிக்கப்பட்ட மனநிலை" கொண்ட பெண்கள்

 


அப்தேக்கர் அன்றைய பெண்களுக்கு சொன்ன ஒரு அறிவுரையை இப்போதும் கவனிக்க  வேண்டியதும்   அதை செயல்படுத்த வேண்டிய கட்டத்தில் உள்ளோம். அப்தேக்கர் கருத்துப்படி   ” தாங்கள் முன்னேறிவிட்டோம் என்பதில் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் முதலில் பெண்கள் மனதில் கொள்ள வேண்டும்” என்கிறார் .

 

பெண்கள் நேர்மையாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறும் அப்தேக்கர். பெண்கள் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி  மட்டுமல்ல அவர்கள் மனதில் லட்சியத்தையும் விதைக்க வேண்டும் என்கிறார். குழந்தைகள் மனதில் உள்ள தாழ்வு மனப்பான்மையை நீக்கி, உயர்ந்த இடத்தில் எட்ட வேண்டும் என்பதை குழந்தைகள் மனதில்  பதியவைக்க சொல்கிறார். ஒவ்வொரு குழந்தைக்கும்,  அதன் பெற்றோரைக் காட்டிலும் சிறந்த தொடக்கத்தைக் கொடுப்பதில் பெற்றோரின் கடமை உள்ளது என்கிறார்.

 

இன்றைய பெரும் பிரச்சினையை குழந்தைகள் மனப்பான்மை மற்றும்  மன எண்ணத்தை பெற்றோர்கள் எப்படி வளர்க்கிறார்கள் என்பதே.   இநிலையில் பெண்களுக்கு அப்தேக்கர் கொடுக்கும் அறிவுரை மிகவும் தேவையானதாக உள்ளது.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எப்படி  நம்பிக்கையும் மகிழ்ச்சியும் விதைப்பது? அடுத்து தாழ்வு மனப்பான்மையை களையச் செய்து  தங்களால் உயர்ந்த இடத்தை அடைய முடியும் என்று குழந்தைகள் மனதில் பதிய வைப்பது எவ்வாறு ?;  என்றும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாக  உள்ளது. 

பல தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களா என்பதை விட பக்கத்து விட்டு குழந்தைகளுடன் ஒப்பிட்டு;  வளரும் குழந்தைகளின் மகிழ்சியை மட்டுமல்ல அவர்கள் நம்பிக்கை எனும்  சிறகுகளையும் ஒடித்து பறக்க விடாது செய்து விடுகின்றனர். இந்த பெண்கள் மனப் பான்மையின் உறவிடம் எங்கிருந்து என ஆராயும் போது பெண்கள் வளர்ந்த சூழல், சமூக கட்டமைப்பு நினைவிற்கு வருகிறது. 

பெண்கள் விடுதலை, வளர்ச்சி, மேம்பாடு  என்பதை பற்றி உரையாடும் போது பெண்கள் மனப்பான்மையும் தங்கள் வளர்ச்சிக்கு எவ்விதம்  தடங்கலாக இருக்கிறதையும்  அவதானிக்க வேண்டியது அவசியமாகும்


பொதுவாக ஊடகவும் இன்றைய சமூகவும் பெண்களை ஒரு விக்டிம் அதாவது ஒரு பாதிக்கப்பட்டவர், பாதிக்கப்பட கூடியவர், வலுவற்றவர், என்ற நிலையில் கட்டமைத்து வைத்து உள்ளது.  இதில் சினிமா மற்றும் இலக்கியங்களின் பங்கும் சிறிது அல்ல. பல திரைப்படம் மற்றும் புனைவுகளில்  பெண்கள் பாதிக்கப்படுவதையை எழுதி பிரபல்யம் தேடிக்கொள்கின்றனர்.  வெகு ஜென ஊடகங்களிலும் பெண்களை பற்றிய வெற்றி செய்திகளை விட பெண்கள் பாதிப்படைந்த  சம்பவங்களைத் தான் பிரதான செய்தியாக கொடுத்து வருகின்றனர். இதில் சில இசங்களும் அதன் கருத்துக்களும் பெண்கள் மேம்பாட்டு என்பதை பெண்களின் தனித்துவமான செயல்பாடுகளை முன் நிறுத்த மறந்து விட்டது.

 தீவிரப் பெண்ணியம் Radical feminism கருத்துப்படி பெண்ணின் எல்லா பிரச்சினைக்கும் காரணம்  சமூகத்தின் கட்டமைப்பு என்கிற போது  மார்க்சிஸ்ட் பெண்ணியம் முதலாளித்துவ அமைப்புகளை அகற்றுவதன் மூலம் மட்டுமே பெண்களின் விடுதலையை அடைய முடியும் என்கிறது. இதுபோன்ற இசங்களை தீவிரமாக நம்பும் பெண்கள் தங்கள் மனநிலையில் கொண்டு வரவேண்டிய மாற்றங்களை பற்றி சிந்திப்பது இல்லை.

 

தொடர்ந்து பெண்கள்  விளிம்பு நிலையில் நிறுத்தப் பட்டுள்ளதால் பெண்கள்   வெற்றிப் பெற்ற (victorious) மனப்பான்மையை இழந்து பாதிக்கப்பட்ட (விக்டிம்) மனப்பான்மை என்ற நிலையில் வீழ்ந்து கிடக்கின்றனர்.

 

பாதிக்கப்பட்ட மனப்பான்மை என்பது ஒரு வகையான  நோய்க்குறி . ஆனால் இது ஒரு மரபுவழி நோய் அல்ல; மாறாக, வாழ்க்கை பாதையில் பெண்களே  கற்று கொள்ளும் அல்லது பலியாகி போகும் சூழல் தான் இது.  பாதிக்கப்பட்ட மன நிலையில்( victim)உள்ளவர்கள்  எப்போழுதும் தங்கள் வாழ்க்கையை  குற்றம்  கூறிக் கொண்டு இருக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.  தங்களுக்கு ஏற்பட்ட  எல்லா தோல்விகளுக்கும் துன்பங்களுக்கும்  மற்றவர்களே காரணம் என்று  குற்றம் சாட்டுவதை வழக்கமாக கொண்டு இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மனப்பான்மை கொண்டவர்கள் தங்களுக்கு மட்டுமே கெட்ட விஷயங்கள் தொடர்ந்து நடப்பதாகவும், உலகமே அவர்களுக்கு எதிராக செயல்படுவதாகவும் நம்பி  கொள்கிறார்கள்.  அதே போல  தாங்களாகவே குழப்பமான மனநிலையால்  பல பிரச்சினைகளில் பிணைக்கப்படுகிறனர், இது மேலும் ஆக்கபூர்வமாக சிந்திக்கும் சூழலை தடுத்து மேலும் பெண்களை பிரச்சினைக்குள் வைக்கிறது .

 

பாதிக்கப்பட்ட மனநிலை கொண்டவர்கள் பொதுவாக  மூன்று நம்பிக்கைகளைக் தீர்க்கமாக நம்புகின்றனர்:

 

1) தனக்கு கடந்த காலங்களில் நடந்துள்ள மோசமான விடயங்கள் இனியும்   தொடர்ந்துநடக்கும்.

2)    என்  துரதிர்ஷ்டத்திற்கு காரணம் மற்றவர்களே.

3) எந்த மாற்றவும் என் வாழ்க்கையில் நடக்க போவதில்லை, எந்த  முயற்சி எடுப்பதிலும் பலனில்லை என்ற எதிர்மறை மனநிலையில் மூழ்குவதை கண்டு கொள்ளலாம்.

பாதிக்கப்பட்ட மனநிலையின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று, தொடர்ந்து சுயமாக அழிக்க முற்படுகின்றனர் . ஒரு பாதிக்கப் பட்டவர்களின் தற்போதைய சூழ்நிலைக்கு மற்றவர்களைக் குற்றம் சாட்டுகிறனர்.

0 Comments:

Post a Comment