12 Jul 2022

அழகுமித்ரன் நாடகங்கள்- ஊசலாடும் உள்ளங்கள் மற்றும் சுகமான சுமைகள்’

 

கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பி பிறப்பிடமாக கொண்ட அழகு மித்ரன் இதழியலில் முதுகலை பட்டம் பெற்றவர். நாடகம், கவிதைகள், கதைகள் எழுதி வருபவர்.  ஆவணப்படங்கள் இயக்கியுள்ளார்.  தற்போது வனத்துறையில் பணியாற்றி வருகிறார். இப்புத்தகம்  உரிமை ஆசிரியரிடமே உள்ளது. நாடகம் எழுத்து மேல் பாரிய பார்வை இல்லாத வேளையில் தனது எழுத்து இயக்கத்தில் உருவாகி உள்ள  நாடகத்தை புத்தகமகா வெளியிட்டு உள்ளார்.

 

ஊசலாடும் உள்ளங்கள்

ஊரில் பணக்காரரான பரசுராமன் உழைப்பாளி மட்டுமல்ல சிறந்த மனிதர். இவருக்கு மகன் பஞ்சவர்ணம் மற்றும் மகள் மித்திரா  உள்ளனர். மகள் மித்ரா ஒரு கல்லூரியில் பட்டப் படிப்பு படித்து வருகிறாள். பஞ்ச வர்ணம் அப்பாவின் உழைப்பில் வாழும் ஊதாரி மகன்.

காத்தமுத்து பரசுராமனின் தங்கை மகன். காலில் ஊனம் உள்ள காத்தமுத்து தனது மாமா வீட்டில் வளர்கிறான். பஞ்சவர்ணத்தின் எடுபிடியாக காலத்தை ஓட்டி வருகிறான். தனது மாமா மகள் மித்ராவை திருமணம் செய்யும் ஆசையில் உள்ளான்.

இக்கிராமத்திலுள்ள ஏழை செல்வம் வேலை கிடைத்து வெளிநாடு  செல்ல இருந்த இருந்த  நிலையில், தனது அக்காள் சுதந்திராவின் பாதுகாப்பை கருதி பரசுராமன் வீட்டில் வேலைக்கு சேர்த்து விட்டு செல்கிறான். அங்கு சுதந்திராவிற்கு பஞ்சவர்ணம் மேல் காதல் வருகிறது. கல்யாணம் முடித்த கையோடு மாமனார் மற்றும் மித்ராயை வீட்டை விட்டு வெளியேற்றுகிறாள்.

இன்னிலையில் மித்ரா காதலித்து வந்த சூரியாவும் கைவிட்டு விடுகிறான். வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பின செல்வத்திற்கு தனது அக்கா செயல் ஆத்திரத்தை மூட்டுகிறது. செல்வம் தனது அத்தானுக்கு தைரியம் கொடுத்து அடாவடியான தனது அக்காவையே கொலை செய்ய துணிகிறான். அத்துடன் சுதந்திரா திருந்தி நல்ல மருமகளாக வாழ ஆரம்பிக்கிறாள்.  செல்வம் மித்திராவை திருமணம் செய்ய வாய்ப்பு இருந்தும், காத்தமுத்து காதலிக்கும் பெண் என அறிந்ததும் விலகி நிற்கிறான்.  ஆசைப்பட்டது மாதிரி காத்தமுத்து மித்ராவை திருமணம் செய்து கொள்கிறான்.  

 

அடுத்த கதை ’சுகமான சுமைகள்’.

இது கிறிஸ்தவ பின்புலம் கொண்ட கதை. அலெக்ஸ் ரோசி ஒரு கிறிஸ்தவ தம்பதிகள் ஆவர். அடாவடியான ரோசிக்கு முரடனான ஜோசப் என்ற சகோதரன் உள்ளான். அவனுக்கு அலெக்சின் தங்கை மேரியை திருமணம் செய்ய ஆசை. ஆனால் மேரிக்கோ சேவியர் மேல் காதல். சேவியர் பாதிரியார் பாதுகாப்பில் வளர்ந்த பெற்றோர் அற்றவன். தனது அண்ணன் அலெஸ், ஜோசப்பை தனக்கு வரனாக தேர்ந்தெடுத்த நிலையில் சேவியருடன் தலைமறைவாகி விடுகிறாள் மேரி.

பின்பு சேவியருக்கு மருத்துவ உதவிக்கு தனது அண்ணனை நாடுகிறாள். அண்ணன் தனது தங்கைக்கு உதவ முன் வருகிறான்.

ஜோசப்புக்கு நண்பனாக எடுபிடியாக கால் முடமான வேலப்பன் உள்ளான். வேலப்பன்  திருந்தி வாழ, ராஜேஷ் என்பவனை கொலை செய்த ஜோசப் ஜெயிலுக்கு போவதுடன் கதை முடிகிறது.

இரு கதைகளும் கதை துவக்கம், சம்பவங்கள் முடிவு என நேர்பாதையில் பயணிக்கிறது. இரு நாடகங்களும் குடும்ப கதைகள். இரு நாடகத்திலும் மருமகளாக வந்த பெண்கள் கொடூர பெண்களாக உள்ளனர். இரு நாடகத்திலும், கால் முடவு உள்ள நபர்கள் எடுபிடிகளாக உள்ளனர். இரு நாடகத்திலும் அவசரப்பட்டு காதலில் விழும் பெண்கள் உள்ளனர்.

சுவாரசியமாக வாசகர்களை வாசிக்க வைத்து செல்கிறது நாடகம்.  இரு நாடகமும் 19 ஆம் நூற்றாண்டு ஆணாதிக்க சமூக கட்டுப்பாடு பாணியில் உள்ளது.

பெண்கள் தங்களுக்கு தகுதியற்ற நபர்களை காதலிப்பது, காதலிப்பவன் கிடைக்காவிடில் சாகப்போறேன் என சொல்லும் உரையாடல்கள் காலத்தால் புறம் தள்ளக்கூடியவை.

ஆண் அடிப்படைவாதம் போலவே நாடகம் முழுதும் பெண்கள் அடாவடித்தனம் சொல்லபட்டுள்ளது. ஆண்கள் தங்கள் நிலையை மறந்து பெண்களுக்கு அடிமைகைளாக கையாலாகாத நிலையில் உள்ளது இரு கதையிலும் பொதுவாக உள்ளது.

நாடகம் எழுத விளைபவர்களுக்கு, உரையாடல் அமைக்க விரும்புகிறவர்கள் வாசித்து பலக வேண்டிய புத்தகமாக இருக்கும். சில தமிழ் சொல்லாடலை, பழமொழிகளை தாங்கி நிற்கும் புத்தகம் இரண்டும்.

இரு புத்தகங்களும் அமேசோனில் கிடைக்கிறது. amazon


0 Comments:

Post a Comment