6 Sept 2015

ஒரு கொலையும் அதன் பிண்ணனியும்

Indrani Mukherjee. (Photo: Twitter)நாட்டின் வறுமை, நலம் சார்ந்து பல செய்திகள் மக்களுக்கு கொண்டு சேர்க்க இருக்க; ஊடகம் இந்திராணி-போரா கொலை வழக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம்  பலரை  கோபம் கொள்ள வைக்கும்  வேளையில் ஒரு நாட்டின், சமூகத்தின் அடிப்படை குடும்பம் என்பதால் குடும்பத்தில் நிகழும் சம்பவங்கள், உறவு சில்லல்கள்  பல பொழுதும் பல குற்றங்களுக்கு காரணமாகின்றது  அரசு கொலைகளை தடுக்க பெரிய பெரிய திட்டங்கள் தீட்டும் போது  குடும்பங்களை நெறிப்படுத்த சில முயற்சிகள் எடுக்க தேவையாக உள்ளது என்றே  இச்சம்பவங்கள்  உணர்த்துகின்றன.  

கடந்த தலைமுறையின் செயல்பாடுகளை ஏதோ ஒரு வகையில் குடும்பங்கள் வழி நடத்தியிருந்தது, நெறிப்படுத்தியிருந்தது, கட்டுப்படுத்தியிருந்தது. உலகலாவியல், விவசாயம், நவீய மக்கள் வேலை, பிழைப்பு என குடும்ப உறவுகளை விட்டு தனியாக வாழும் சூழலில் குடும்பத்தின் அமைப்பு  அதன் தாக்கம் கெள்விக் குறியாக மாறுகின்றது.

சமூக வலைத்தளத்தில், ஊடகங்களில் எவ்விதமெல்லாம் இந்திரா முகர்ஜியை அவமதிக்க வேண்டுமோ; அவ்வளவு செய்திகள் வந்து விட்டது. அவருக்கு பல கணவர்கள், பண ஆசை கொண்டவர் என பல பல குற்றச்சாடுகளுக்கு மத்தியில் அவரை பற்றி கொஞ்சம் கருத்தாக ஆராயும் போது தன் குடும்பத்தில் சொந்த  தாயின் கணவராலே அல்லது தனது சித்தாப்பா மூலமே பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிய பெண்களின் பிரதி நிதியாகவும் தெரிகிறார்.

Photo of Indrani's parents - Upen and Durga Rani Bora - three years before Mikhail Bora came back to live with them..  அவர் மகள் ஷீனா 87ல் பிறந்துள்ளதாக அவர் முதல்  பாட்னர் என குறிப்பிடும் தாஸ் கூறுகின்றார்.  1989 என பள்ளி சாற்றிதழில் பதியப்பட்டுள்ளது.  இவர்  இந்திராணி உடன் இந்திராணியின் பெற்றோருடனே  86 முதல் 89 ஆம் ஆண்டுவரை வசித்திருந்ததாகவும் கூறியுள்ளார். அப்போது அவர் கல்லூரி படிப்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார்.  ஆகையால் அந்த நபருக்கு 19 முதல் 21 வயது இருந்திருக்க வேண்டும்.  இந்தாராணியின் பிறப்பு 1972 என்று சொல்லப்பட்டுள்ளதால் அந்நேரம் இந்திராணிக்கு 14 முதல் 16 வயது தான் இருந்திருக்க வேண்டும். அவர் பள்ளிப் படிப்பை முடித்து உயர் பள்ளிப்ப டிப்பிற்கு அல்லது ஜூனியர் கல்லூரியை எட்டியிருக்கவே இயலும். 

indrani-family tree-update
தற்போது நவீனத்துவத்தின் அடையாளமாக லிவிங் டுகதர் வாழ்க்கையை  பற்றி பேசிக்கொண்டிருக்கும் வேளையில். இந்திராணிக்கு, அவர் பெற்றோர் 1986 காலயளவிலலிது போன்ற சூழலை அமைத்து கொடுத்துள்ளனர்.  பெண் குழந்தைகளுக்கு திருமண வயது 18 என்றிருக்க ஒரு குழந்தையான இந்திராணி பெற்றோராலே மோசமான வாழ்க்கை சூழலுக்கு இட்டு செல்லப்பட்டுள்ளார்.  இந்திராணியின் அம்மா தன் கணவர் ஓடிப்போன நிலையில் தன் கணவர் தம்பியுடன் வாழ்ந்துள்ளார். அந்நிலையில் தன் மகளை சரியான முறையில் கவனிக்காத வளர்க்காத;  பாசப்பரிவுடனோ நடத்தாது தன் சுகம் மட்டுமே எதிர் நோக்கிய தாயாகத்தான் இருந்திருக்க கூடும் இந்திராணியின் கூற்றை எடுத்து கொண்டால்.


இந்திராணி வீட்டில் ஒன்றாவது கணவராக /பாட்னராக வாழ்ந்த தாஸ்;  சமூக அங்கீகாரவும் பெறாத சூழலில்  குறிப்பிட்ட வேலைவாய்ப்பு  வருமானம் கூட அற்ற நிலையில் ஒரு மாணவராக இருக்கும் பருவத்தில் இரண்டு குழந்தைகளை இந்திராணிக்கு கொடுத்துள்ளார். இவர் இந்திராணி பெற்றோருக்கு எடுபிடியாகத்தான் இருந்திருக்க வேண்டும். சட்டப்படி வயதுக்கு வராத பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளை கொடுத்த சித்தார்த்த தாஸும் தண்டிக்கப்பட வேண்டியவரே.


இந்த  சூழலை இந்திராணியின் வளர்ப்பு தகப்பனார், தனக்கு சாதகமாகவும் பயண்படுத்தி இருக்க பெரும் வாய்ப்பு உண்டு. இந்திராணி கூற்றுப்படி கூட ஷீனா என் மகளும் என் தங்கையும் தான் என்று கூறியுள்ளார். இந்திராணி தாயார் பெரும் செல்வ செழிப்புள்ள குடும்பத்தை சேர்ந்தவராக இருந்துள்ளார் என தகவவல்கள் தெரிவிக்கின்றன, இருந்தும் தன் பதின்ம வயது மகளுக்கு பாதுகாவலராக இருக்க தவறி உள்ளார்.  அவ்வகையில் அவரும் தண்டிக்கப்பட வேண்டியவரே. மேலும் இந்திராணிக்கு பிறந்த பிள்ளைகளுக்கு தகப்பன் தாய் இடத்தில் தங்கள் பெயர்களை பதிந்து அரசையும் ஏமாற்றியுள்ளனர் இந்திரா முகர்ஜியின் பெற்றோர்..


இந்நிலையில் இந்திராணி இரு பிள்ளைகளையும் தன் தாய் தந்தையிடம் விட்டு விட்டு ஊரை விட்டே ஓடி வந்தவர்    கல்வி அறிவு, பேச்சு வல்லமை, அதீத துணிவு  இருந்திருந்தால் மேலும் கல்வி கற்று . குறிப்பிட்ட நாட்களுக்குள் நல்ல வேலைக்கு வருகின்றார்.  93 ல் அப்போது 21 வயது இருந்திருக்க வேண்டும்      ஒருவரை திருமணம் செய்துள்ளார். 1997ல் மகள் பிறக்கின்றார். மகளுக்கு 5 வயது இருக்கும் நிலையில் பெரும் பணக்காரரரை;  மூன்றாவதாக  மணம் புரிகின்றார்.  ஊடகங்கள் புகழாரவம் சூடி பெரும் சமூக அந்தஸ்துடன் வலம் வந்தவர் தனது முதல் இரண்டு பிள்ளைகளை தன்னுடன் இணைத்து கொள்ளும் சூழலில், சிக்கல்கள் வர ஆரம்பிக்கின்றது. 


இந்திராணியின் இரண்டாவது கணவரால் பிறந்த மகள்; தன் தாய் பாசமுள்ளவர் என்றே கூறியுள்ளார். ஆனால் இந்திராணி தனது பதின்ம வயதில் பிறந்த குழந்தைகளை தன் பிள்ளைகளகாவே ஏற்று கொள்ள இயலாத மனநிலையில் தான் இருந்திருக்க வேண்டும்.

ஒருவரின் ஆளுமை; குழந்தைப்பருவத்தில் தான் நிர்ணயிக்கும் படுகின்றது என்பதிற்கு இணங்க இந்திரா தனது குழந்தைப்பருவத்தில் எதிர்கொண்ட எதிர்மறையான வாழ்க்கை பிற்காலத்தில் எந்த வழியையும் கையாண்டு தனக்கு சுற்றி ஒரு ஆளுமையை உருவாக்கி ஆட்சி செய்து தனது வீழ்ச்சியையும் அதை விட வேகமாக அமைத்து கொண்டு விட்டார். . இந்திராணிக்கு பின்பற்ற தகுந்த நல்ல ஆளுமைகள் வீட்டிலும் பெறவில்லை. ஒரு வித அச்ச உணர்வுடன் தான் குழந்தைப்பருவம் கடந்திருக்க வேண்டும்

இந்திராணி மோசமான தந்தையால் வளர்க்கப்பட்டவள் , தாஸ் என்ற பொறுப்பற்றவனுக்கு இரு பிள்ளைகளை பெற்றவர். தன் வாழ்க்கையை எல்லா நெறிகளையும் அச்சத்தையும் மீறி உருவாக்க விளைய சீட்டு கெட்டுபோல் வீழ்ந்து நொறுங்கி சின்னா பின்னமாக கிடக்கின்றது அவர் வாழ்க்கை!. 


இன்று தொழில் , வெற்றி, பதவி அதிகாரம் என்ற நிலையில் நெறிகளை மீறுவதை ஒரு பொருட்டாகவே பல பெண்கள் எடுத்து கொள்வதில்லை. அழகும்  திறமையும் இருந்தால் எந்த காரியவும் கைகூடி விடலாம் என்ற மிதப்பில் திரியும்  பல பெண்களுக்கான பாடம் தான் இந்திரா முகர்ஜி.   பீட்டர் முகர்ஜி போன்றோர். வேலைக்கு வந்த பெண்ணை மனைவியாக்கி தன் பெற்ற பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும்  நிம்மதிக்க்கும்  பங்கம் விளைவிக்கின்றனர். 

இந்திரா முகர்ஜி தன்னை யாரும் மிஞ்ச இயலாது என இருமாப்பு கொண்டிருக்க தன் மகள் தனக்கு போட்டியாக வருகின்றாள் என்றதும் கொலைக்கு  துணிந்து உள்ளார் . இந்திராணி ஒரு மோசமான சமூக அமைப்பின் இரையாகி பலரை இரையாக்கும் தருணத்தில் சட்டத்தின் பிடியில் மாட்டியுள்ளார். எவ்வளவு வேகமாக வாழ்க்கை என்ற ஏணிப்படியில் ஏறினாரோ அதை விட வேகமாக சறுக்கி அகலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றார். ஆனால் இவரை பகடையாக அல்லது இரையாக அனுபவித்த இவர் வளர்ப்பு தகப்பன், முதல் கணவன்,  இவர் தாய், போன்றோருக்கும் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும்  இச் சட்டங்கள். 

இந்திரா மகனும் தனது வீட்டில் மோசமாக சில நடைவடிக்கைகளில்  ஈடுபட்டு இருப்பதாகத்தான்  அயல்வீட்டு ஜனங்கள் கூறியுள்ளனர்.  மோசமான பால்ய குழந்தைப்பருவம் இந்திராணி போன்றோரை ஜெயில் வரை எட்ட வைக்கின்றது. அவர்கள் நடைவடிக்கைகளில் மனித இயல்பு குறைந்த மிருக இயல்பே மேல் ஓங்கி வருகின்றது. தனக்கு இடைஞ்சலாக வருபவர் மகளாக இருந்தால் கூட அவர்களை இல்லாது செய்யவே துணிந்துள்ளார். ஷீனாவும்  தாறுமாறான வழியை தேர்ந்தெடுத்து பரிதாபமான முடிவை அடைந்தவர் என்றே புலன்படுகின்றது/.

தேசிய குற்றவியல் தரவுகள் கூட உணர்த்துவது இதையே ஆகும். இந்தியாவில் தினம் 93 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 94% பெண்களும் தங்களுக்கு மிகவும் தெரிந்து அறிமுகம் ஆனவர்களாகவே பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர்.  குழந்தைப்பருவம் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான காலமாக உள்ளது. ஆனால் அந்த காலயளவில் தான் பல குழந்தைகள் புரக்கணிக்கப்ப்டுகின்றனர் பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர். இவர்கள் கொண்டதை  திரும்பி தர ஆரம்பித்தால் சமூகம் இது போன்ற அவலங்களுக்கு தான் சாட்சியாக மாறும்..இந்திராணி கூட அவ்வித அவலத்தின் பிரதிபலிப்பு தான்.

3 Sept 2015

ஆறாத சோகங்கள் கொண்ட சில மரணங்கள்!

என் மாணவர் மனம் குமுறி அழுதது இன்று மறக்க இயலாத துக்கமாக மாறி விட்டது. அந்நேரம் அவரை ஆறுதல்ப்படுத்தி அவர் கவலையை துலைப்பதை தடுப்பதை  விட அவர்  அழுது தீர்க்கட்டும் என விட்டு விட்டேன். பார்க்க தெனாவட்டாக எதையும் சந்திக்கும் துணிவுள்ளவர்கள் போல் காட்டி கொள்ளும் இளம் குழந்தைகள் மனதில் கிடக்கும் துக்கங்கள் என்னை ஆச்சரியத்தில்,ஆழ்த்தியது, மறுபுறம் சிந்திக்க வைத்தது. .

அவருக்கு பத்தாம் வகுப்பு படிக்கும் வேளையில் ஓர் புது தோழன் கிடைத்துள்ளான். ஏதோ சில காரணங்களுக்காக அவர் நண்பரிடம் சில நாட்களாக பேசவில்லை. நண்பன் பேருந்து பயணத்தின் போது பேச முயன்றுள்ளார்.  இவரோ தவிர்த்து விட்டார்.   ஏமாற்றமடைந்த நண்பன் பேருந்து படிக்கட்டில் நின்று  பயணிக்க நினைக்க, தவறுதலாக கீழை விழுந்து இறந்து விட்டார்.  நண்பனின் தாய் அழுதது, நண்பன் இறந்து கிடந்த கோர  காட்சி மறக்க இயலாது என் மாணவனை ஆறுதல் கொள்ளாத வண்ணம் கவலையில் ஆழ்த்தி விட்டது.   ஒரு வேளை நண்பனிடம் தான் பேசியிருந்தால் நண்பன் தன் அருகில் நின்றிருப்பானோ, விபத்து நடந்திருக்காதோ என்ற சிந்தனை அவர் மனதை குத்தி நோகடிக்கின்றது. அவர் குமுறி அழுத போது வகுப்பு தோழர்கள் இனி பேச வேண்டாம் என தடுத்தும் அவர் தன் சோகத்தை கொட்டி தீர்த்து விட்டு சென்றாலும் தன் இருக்கையில் சென்றும் அழுது கொண்டிருந்தார்.

அவர் நண்பர் இறந்தது  நண்பனின் கவனக்குறைவான பயண முறையால் மட்டுமே. ஆனால் பேசக்கூடாது என்ற தன் பிடிவாதம் தன் நண்பனின் மரணத்திற்கு காரணமாகி விட்டது என்று எண்ணி இப்போதும் அழுது புலம்புவது மனதை கனக்க செய்வதாகத்தான் இருந்தது.

என் மாணவனின் நிலைவிட்ட அழுகை என் 20 வருடங்களுக்கு முன் என்னுடன் படித்த  தோழிகளை நினைவுப்படுத்தியது. ஒல்லியான அழகானவள் என் தோழி. அவள் பெயர் 'ரஞ்சனி' என்றிருந்தது . எப்போது சிரித்து கொண்டிருக்கும் போலுள்ள அவள் முகம் இன்று நினைவில் உள்ளது. அவள் சுருண்ட முடிகள் சுருளுகளாக அவள் கழுத்தை ஒட்டிய வண்ணமே இருக்கும். ஒரு நாள் வீட்டிற்கு அருகிலுள்ள சுற்று மதிலற்ற குணற்றில் கால் வழுதி இறந்து கிடந்தாள் என அறிந்தோம்.   இனி அவள் வர மாட்டாள் என்ற உண்மையை புரிந்து கொள்ள  மிகவும் கடிமனபட்டோம். 

ஜெயாவை நினைத்தால் இன்றும் ஆச்சரியம். அவள் ஆண்களை போன்று தைரியமான பெண்.  நடப்பதில், பேசுவதில், அவள் செயல்களில் ஒரு வீரம் இருக்கும். உயரம் குறைந்து இருந்தாலும் ரவுடி பசங்களை அடித்து விடுவாள். செம்பட்டை  நிறத்திலுள்ள கூந்தலை குத்தலாக கட்டியிருப்பாள். அவள் சகோதரி ஒரு சம்மனசு போல் தோற்றம் கொள்ளும் முகம். நீளமான கால் எட்டும் வரையுள்ள முடி கொண்ட பெண். அவள் என் சகோதரர் வகுப்பு தோழி என்பதால் சிரித்து கொண்டே செல்லும் முகம் நிதம் கண்டுள்ளேன்.  .அவர்கள் சகோதரர்கள் பள்ளிக்கு வருவதே ஓர் அழகு. அவளுடைய இளைய  தம்பி புத்தககட்டை இவளே சுமந்து வருவாள்.  அவர்கள் பள்ளிக்கு சேர்ந்தே வருவார்கள். தம்பியும் தங்கையும் ஆங்கில பள்ளியில் படித்தனர். இவள் அரசு பள்ளியிலும் எங்களுடன் படித்தாள். அவளும் அவள் சகோதரிகள் மூன்று பெயரும் ஒரே நாள் தற்கொலை செய்து இறந்தது  இன்றும் நடுக்கும் நினைவுகளாகவே உள்ளது.  ஒரு தாயிமன் மேலுள்ள கோபம் இந்த நிலைக்கு இவர்கள் நாலு பேரையும் எட்ட வைத்தது  மகா துயரே!

அந்த எஸ்டேற்றில் இருந்த பாசனவசதிக்கான குளத்தில் சாடும் முன் அவர்கள் உடைகள் விலகாத வண்ணம் செப்டி பின்னால்(ஊக்கால்) உடையை சரி செய்து வைத்திருந்தனர்.  இருந்தும் அவர்கள் இறந்த போது அவர்களை கரையில் கொண்டு இட்டு பரிசோதித்ததும் அவர்கள் அணிந்த உடைகள் பற்றி பின்பு சிலர் கதைத்த கேட்டு அவர்கள் மரணப்பட்டதை விட வருந்தினேன். பல காரணங்கள் கொண்ட பல மரணங்கள் நம் வாழ்க்கையில் கண்டிருந்தாலும் நம் பள்ளிப் பருவத்திலுள்ள சில மரணங்கள் அழுத்தமான சில நினைவுகளை நமக்கு தந்து தான் செல்கின்றது.  நினைவுகளுடன் சில குற்ற உணர்ச்சியும் சேர்ந்து தத்தளிக்கும் என் மாணவரை தேற்ற வழியற்று நானும் துன்புறுகின்றேன்  இன்று !

30 Aug 2015

கின்னி கோழி முட்டையும் ரத்னா பாய் பாட்டியும்



என் அப்பா வழி பாட்டிக்கு தன் 65 வயது என்பது,  தன் நினைவாற்றலை இழந்து வரும் காலமாக இருந்தது. யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது என்ற கொள்கை உடையவரான தாத்தா பாட்டியை தாத்தாவின் பராமரிப்பில் வைத்து தனியாகவே கவனித்து வந்த காலம் அது.  பாட்டிக்கு ஒரே  ஒரு வேலை அதுவும் பிடித்த வேலை கின்னி கோழியை வளர்ப்பதாக  தான் இருந்தது. அவரால் மண்ணெய், சமையல் எண்ணையை வேற்படுத்தி பார்க்கும் தெளிவு இல்லை. எப்போதும்  கோழிகளை விரட்டுவதற்கு என கரண்டியை கையில் வைத்திருப்பார் . பாட்டி வாய் திறந்து பேசினதே நினைவில்லை. ஆனால் கோழிகளுடன் கதைப்பதை திட்டுவதை கண்டுள்ளேன். எப்போது பார்க்க சென்றாலும் பாட்டி கோழியின் பின்னால் நடந்து கொண்டே இருபார். கின்னி கோழி தன் முட்டைகளை காட்டில் இடும் வழக்கம் உள்ளது. பாட்டி அதை தேடி சென்று எடுத்து வருவதுடன் ஒவ்வொரு முட்டையும் அழகாக ஒரு கண்ணாடி  பெட்டியில் அடுக்கி வைத்திருபார். வீட்டு வழி,  நடைபாதை,   படிகட்டுகள்  என நடக்கும் இடங்களில் எல்லாம் அதன் எச்சத்தால் நிரப்பி இருந்தது.  

அவர்கள் தங்கி இருந்த வீடு ரோட்டு ஓரத்தில் இருந்தது. முன் பக்கத்தை 4 கடைகளாக வாடகைக்கு விட்டிருந்ததால் வீட்டிற்கு செல்ல பின் வழியாக ஒரு குறுகிய பாதையில் இறக்கத்தில் நடந்து சென்று சில படிகள் இறங்கி இன்னும் 20  படிகள்  ஏறி வீட்டிற்குள் செல்ல வேண்டும்.  எங்கள் ஊரோ எப்போது மழையும் வழுக்கும் பாதைகளாக இருந்ததால் தாத்தா வீட்டிற்கு செல்வதை தடை விதைத்திருந்தார் அம்மா! அம்மாவின் தடை என்பது அது 144 தடைசட்டம் போன்றது. ஆனால் கின்னி கோழி முட்டை ஆசை என்னை விட்டு வைப்பதில்லை. சில நேரம் அம்மாவின் அனுமதி இல்லாதும், தங்கை தம்பியை அழைத்து சென்றால் காட்டி கொடுத்து அடி வாங்கி தருவார்கள்; என்பதால் தோழி ஒருவரை துணைக்கு அழைத்து சென்றுள்ளேன்.

முட்டையை கண் வைத்தே அங்கு செல்வது  பாட்டிக்கும் தெரியும். முட்டையை பார்க்க பெட்டிக்கு அருகில் சென்றதுமே "எடுத்து விடாதே தாத்தாவிற்கு" என கட்டளை பறந்து வரும்.  பாட்டி பெட்டி அருகிலே மிகவும் கவனமாக நோட்டமிட்டு கொண்டே அமர்ந்திருப்பார்.

பாட்டியின் உலகம் முழுக்க தாத்தா தான் இருந்தார். ஆனால் ஒவ்வொரு பிள்ளையையும் பேரப்பிள்ளைகளையும் நேசித்து இருக்க வேண்டும்.  பெரியப்பா காதல் மணம் முடித்தார் என  பெரியப்பா பிள்ளைகள் வீட்டிற்கு வரத் தடை இருந்தது. தாத்தா இல்லாத நேரம் நோக்கி அங்கு செல்லும் என் பெரியப்பா மகன்களுக்கு   பழம் கஞ்சி கொடுத்துள்ளார் என கூறியுள்ளனர். என் பாட்டி எப்போது ஒரு மயான அமைதியில் பைபிள் வாசிப்பதை மட்டுமே வழக்கமாக கொண்டிருந்தார். அவர் முகத்திலோ கண்களிலோ எந்த உணர்வையும் காட்டி கொள்வதில்லை. கண்கள் மட்டுமே சலித்து கொண்டிருக்கும்.  அவர் உணர்வுகள் என்பது, வெத்தலை இடிக்கும் கல் ஓசையுடன் முடித்து இருந்தது.


தாத்தாவிற்கு நான் மிகவும் பிடித்தமான பேத்தி. அவருடைய துணிமணிகளை அவராக தைத்து அணிவது தான் பிடிக்கும். வெள்ளை சட்டை,  அரைகை வைத்த உள் பனியன் தைத்து அணியுவார். வயதாகிய வேளையில் நூல் கொருப்பது, உண்ணிப்பாக கவனித்து தைப்பது சிரமம் என்பதால் அவர் வெட்டி வைத்திருக்கும் துணியை தாத்தாவின் கட்டளைக்கு இணங்க தைத்து கொடுப்பது என் வேலையாக இருந்தது.   


கின்னி கோழி முட்டை சாதாரண கோழி முட்டையை விட மஞ்சள் நிறத்தில் சிறிதாக இருக்கும்.  4-5 முட்டைகளை ஒரே பாத்திரத்தில் உடைத்து போட்டு தோசைக்கல்லில் ஊற்றி அதன் மேல் மிளகும் உப்பும் போட்டு  ரொட்டி போன்று சுட்டு தருவார். நான் பல போதும் முட்டை சாப்பிட்டதை வீட்டில் சொல்வது கிடையாது. ஒவ்வொரு முறை கின்னி கோழிகளை பார்க்கும் போது பாட்டி நினைவு வராது இருப்பதில்லை.



தாத்தா வேட்டைக்கு போகும் வழக்கம் இருந்ததால் காட்டு இறச்சி சமைத்து எனக்காக கொண்டு கொடுப்பார். கொல்லாண்டி சீசனில் ஒரு சின்ன பையில் எனக்கான பங்கு வந்து சேரும்.  அதை தீயில் சுட்டு எடுப்பதே தனிக்கலை. கங்கு தீயில் இட வேண்டும். அதன் பால் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....... என்ற சத்ததுடன் எரிந்து போன பின்பு கொல்லம் கொட்டயை லாவகமாக குறுக்கலாக வைத்து கொண்டு உடைக்கவேண்டும்.  கொஞ்சம் அசந்தால் கையில் கருப்பு அடையாளங்களுடன்  பல போதும் சுட்டு விடும். பொதுவாக வியாபாரி வீடுகளில் நல்ல காயை விற்று விடுவதால் பொக்கு தான் வீட்டு தேவைக்கு வரும். சுடும் போது சில நேரம் பருப்பு இல்லை என்றால் அம்மா திட்டி கொண்டே எடுத்து தந்தாலும் தாத்தா கொண்டு வந்து கொடுத்த கொல்லாண்டி நினைவுகள் தான் தற்போது ஆக்கிரமித்துள்ளது.  

Image result for grandparents painting
பாட்டி இறந்து 28 வருடங்கள் ஆகி விட்டன.  தாத்தா இறந்தும் 20 வருடங்கள் ஆகி விட்ட நிலையில் என்னுடன் முட்டை தின்று வந்த   தோழி அம்மாவிடம் சென்று வந்த கதைகளெல்லாம் கூறி உள்ளார் என்று அறிந்த போது இனி அம்மாவிடம் அடிபடப்போவதில்லை என அறிந்தாலும் என்னை அறியாத பயம் தொற்றியது. 

தாத்தாவின் அன்பை கூறும் போது என் மகன்கள்  கேட்பார்கள் "ஜோசப் தாத்தா இப்போது எங்கு இருப்பார்"  அம்மா என்று. அப்போதெல்லாம் நான் வானத்தை காட்டி அங்க பார் ஓர் நச்சத்திரம் நம்மை பார்த்து நின்று கண் சிமிட்டுகின்றது  என காட்டி கொடுப்பேன்.சமீபத்தில் என் மகன்களின் தாத்தா இறந்தார். என் மகன்கள் அவர் எங்கு இருபார்  என கேட்டதே இல்லை. என் மகன்களுக்கு என்னுடைய தாத்தாவின் நினைவுகள் போல் ஏதோ சில நினைவுகளை இட்டு சென்றுள்ளனரா என்று எனக்கு தெரியாது.

'கவர்னரின் ஹெலிகாப்டர்'- எஸ் கேபி கருணா

கவர்னரின் ஹெலிகாப்டர்'
'கவர்னரின் ஹெலிகாப்டர்' வம்சி பதிப்பகத்தில் வெளியாகியுள்ள புத்தகம் இது. சமீபத்தில் வாசித்த  சுவாரசியமான எழுத்து  நடை கொண்ட புத்தகம். இதன் புத்தக வெளியீட்டுகிற்கு பங்கு பெற்றபோது ஓர் புத்தகவும் வாங்கி திரும்பினேன்.  

வாசகர்களை வாசிப்பில் மயங்க செய்யும் எழுத்து நடை கொண்ட இப்புத்தகத்தை  ஒரே நாளில் வாசித்து முடிக்கலாம். 18 கட்டுரை-கதைகள் அடங்கிய 224 பக்கங்கள் அடங்கிய புத்தகம் இது. எழுத்தாளர் தன் வலைப்பதிவு ஊடாக வெளியிட்ட முதல் கதையை புத்தகத்திலும் முதல் கதையாக சேர்த்திருப்பது சிறப்பாக உள்ளது.

எழுத்தாளர் மறைந்த எழுத்தாளர் சுஜாதவின் தீவிர ரசிகராக இருந்துள்ளார் என்பதை இரண்டாவது கதை தெரிவிக்கின்றது. இவருடைய ஆதர்ச எழுத்தாளர் தற்போது கனடா நாடு ரொறொன்ரோவில் வசித்து வரும் பிரபல ஈழ எழுத்தாளர் அ. முத்து லிங்கம் முன்னுரை அளித்திருப்பது மிகவும் சிறப்பு. தனது முன்னுரையில் எழுத்தாளருக்கு எழுத்து இயற்கையாகவே கைகூடுகின்றது என குறிப்பிட்டுள்ளார். இவருடைய கதையில் எழுத்தில் சகல நுட்பவும் நிறைந்து உள்ளதாக அ முத்துலிங்கம் பறைசாற்றுகின்றார்.



புத்தக ஆசிரியர் தன்னுடைய 40வது வயதில் எழுத்தை ஒரு விளையாட்டாக துவங்கி உள்ளதாக  குறிப்பிட்டுளார். இருப்பினும் எழுத்தாளனுக்கு உரிய பொறுப்புடன் தான் எழுத விரும்புவதாகவே குறிப்பிட்டார் தனது ஏற்புரையில். 


கதையா கட்டுரையா என்ற விவாதம் கடந்து தன் நினைவில் நின்ற உண்மைக் கதைகளை  சில புனவுகள் கலந்து கட்டுரையாக;  இயல்பான மொழியில் எழுதியிருக்கும் சிறப்பு என்னை கவருகின்றது. பொதுவாக சில புத்தகங்களில் கதைகள் ஊடாக செல்லும் போது  அதன் நிகழ்வுகளில் மனம் லயிக்க பல தடைகள் எழுத்தில் வருவது உண்டு.  ஆனால் இப்புத்தகம்; வாசிப்பு என்பதை மறந்து நாம் அந்த சம்பவத்தில் நம்மை அறியாது உருகும், மயங்கும் அல்லது லயித்து  போகும் சூழலை  உருவாக்குகின்றது. 



கதைகள் வெறும் கற்பனை கதைகள் அல்லாது அதில் வாழ்க்கையும் அடங்கி இருப்பதால் ஓர் உயிரோட்டமான உணர்வை தருகின்றது. மேலும் கதைகளில் நாம் காணும் சின்ன சம்பவங்களிலும் நம் கலாச்சாரத்தின் அறம் பொதிந்து உள்ளது நம் சிந்தனையை மேம்படுத்துகின்றது. 

சாமந்தி போன்ற கதைகள்  கதையல்ல உண்மையான அரசியல் நிலைவரத்தை;  மண்ணின் மைந்தர்க இளிச்சவாயர்களாக மாற்றப்படுவதை அழகாக படம் பிடித்து காட்டியுள்ளார். 


சைக்கிள் டாக்டர் கதை காட்சிகள் சத்திய ஜித் ராயின் திரைப்படத்தில் சில காட்சிகள் மறுபடியும் நம் நினைவலகளில் புகுந்து  துன்பப்படுத்துவது போல் டாக்டர் நினைவுகள் நம்மை அறியாது வந்து செல்கின்றது. 

மதுரை வீரன் போன்ற கதைகள் மிகவும் மனித நேயமிக்க கதைகள். நாம் வாழும் சமூகம் இன்னும் ரொம்ப மோசமடையவில்லை என நம்பிக்கை கொள்ள வைத்த பல சம்ப்வங்கள் இடம் பெற்றிருந்தது.  ஆனாலும் இறந்தவர் நிலவரம் என்னவானது என மனம் கேட்டு கொண்டிருந்தது

பிரியாணி கதை, ரசித்து சிரித்து வாசித்த கதை. கதை ஆசிரியரின் ஆர்வக் கோளாறு பாராட்டப்பட வேண்டியதே. விளையும் பயிர் முளையிலே தெரியும் என சிறு குழந்தையாக இருக்கும் போதே எழுத்தாளரின் பார்வை, அறியும் ஆர்வம் தன்னை சுற்றி நிழலும் சமூகத்தை பற்றி  அறிய வேண்டிய ஆர்வம் கண்டு கொள்ளலாம். 

மரங்கள் போன்ற கதைகள் ஒரு படைப்பாளி முதலில் இயற்கை நேசிப்பவனாகவே இருப்பவனாகவே இருக்க இயலும். இயல்பாகவே இயற்கையுடன் ஓர் புரிந்துணர்வுள்ள ஆசிரியருக்கு மனிதர்களை அணுகுவதும் புரிந்து கொள்வதும்  பார்க்கப்பதும் எளிதாக அமைகின்றது.


எல்லா வாசகர்களையும் கவர்ந்த 'கவர்னரின் ஹெலிகாப்டர்' சுவாரசியமான  கதை என நான் எடுத்து சொல்வதற்கு இல்லை. ஓர் உண்மை சம்பவத்தை ஓர் கதை போன்று எழுதிய விதம் சிலாக்கிக்க தகுந்தது.  சம்பவங்களை தொகுத்த விதம் அருமை. கதை முடிவில் கவர்னரை பற்றி ஓர் இரு வார்த்தைகள் பதிந்து செல்வது எழுத்தாளரின் புத்தி சாதுரியத்தையும் காட்டுகின்றது.

அட்சயப் பாத்திரம் என்ற கதை இலங்கை தமிழர்கள் மற்றும்  தமிழக தமிழர்கள் உறவை பதிவு செய்து வைத்துள்ள அருமையான நிகழ்வு. மேலும் அவர்கள் போராட்ட குழு அரசியலை சொல்லாது சொல்லி சென்றுள்ளது.  .

எஸ் கே.பி பொறியியல்  கல்லூரியின் தாளாளராக இருந்து கொண்டு கடுமையான வேலைப்பளு மத்தியில் ஒரு புத்தகம் வெளியிட்டிருப்பது என்பது அவரின் வளமான பால்ய கால நினைவுகளின் வெளிப்பாடு என்று இருந்தாலும்  ஒரு சிறந்த படைப்பாளி ஒரு போதும் றைந்திருக்க இயலாது என்றும் வெளிப்படுகின்றது. மலைப்பிரதேசங்களில் உயரமான் வறண்ட கரும் பாறைகளில் இருந்து ஊற்றாக கொப்பளிக்கும் நீர், பூமியை வந்தடைந்து அருவியாக பாய்வது போல் அவரின் படைபாற்றலில் வாசகர்களை சிறப்பான சிந்தனைக்குள் சம்பவங்களுக்குள் அழைத்து செல்கின்றது இப்புத்தகம். ஒவ்வொரு கதையும் சிறந்த  உத்தியுடன்  சமூக அக்கறையுடன்; எந்த ஓர் அதிமேதாவித்தனவும் இல்லாது  இயல்பாக எளிமையாக அழகாக கவித்துவமாக அழைத்து செல்கின்றது  என்பதாக்கும் இதன் சிறப்பு. 

புத்தக வெளியீட்டில்  வாழ்த்துரைத்த வண்ணதாசன் தன் எழுத்தை பல இடங்களில் நினைவூட்டுவதாக குறிப்பிட்டார். அதே போன்று கவிஞர் கலாப்பிரியாவும் எடுத்து கூறவேண்டிய புத்தகம்  என குறிப்பிட்டார். வெறும் விளையாட்டாக வலைப்பதிவில் பதிந்து வந்த  பதிவுகள் புத்தகமாக மாற பதிப்பாசிரியர் பவா செல்லத்துரை மற்றும் அவருடைய மனைவி ஷைலஜாவின்  ஊக்கம்,    உறுதுணையாகியுள்ளது என புரிந்தது. 


 அ முத்துலிங்கம் கூறியிருப்பது போல் மாணவர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும். நிச்சயமாக என் மாணவர்களுக்கு இக்கதை அமைப்பை பற்றி கூற வேண்டும் என புத்தகத்தை மிகவும் கவனமாக என் நூலகத்தில் வைத்துள்ளேன். புத்தக ஆசிரியரின் வலைப்பதிவு  

புத்தகம் கிடைக்குமிடம்,புத்தகம்