நாட்டின் வறுமை, நலம் சார்ந்து பல செய்திகள் மக்களுக்கு கொண்டு சேர்க்க இருக்க; ஊடகம் இந்திராணி-போரா கொலை வழக்கிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் பலரை கோபம் கொள்ள வைக்கும் வேளையில் ஒரு நாட்டின், சமூகத்தின் அடிப்படை குடும்பம் என்பதால் குடும்பத்தில் நிகழும் சம்பவங்கள், உறவு சில்லல்கள் பல பொழுதும் பல குற்றங்களுக்கு காரணமாகின்றது அரசு கொலைகளை தடுக்க பெரிய பெரிய திட்டங்கள் தீட்டும் போது குடும்பங்களை நெறிப்படுத்த சில முயற்சிகள் எடுக்க தேவையாக உள்ளது என்றே இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன.
கடந்த தலைமுறையின் செயல்பாடுகளை ஏதோ ஒரு வகையில் குடும்பங்கள் வழி நடத்தியிருந்தது, நெறிப்படுத்தியிருந்தது, கட்டுப்படுத்தியிருந்தது. உலகலாவியல், விவசாயம், நவீய மக்கள் வேலை, பிழைப்பு என குடும்ப உறவுகளை விட்டு தனியாக வாழும் சூழலில் குடும்பத்தின் அமைப்பு அதன் தாக்கம் கெள்விக் குறியாக மாறுகின்றது.
சமூக வலைத்தளத்தில், ஊடகங்களில் எவ்விதமெல்லாம் இந்திரா முகர்ஜியை அவமதிக்க வேண்டுமோ; அவ்வளவு செய்திகள் வந்து விட்டது. அவருக்கு பல கணவர்கள், பண ஆசை கொண்டவர் என பல பல குற்றச்சாடுகளுக்கு மத்தியில் அவரை பற்றி கொஞ்சம் கருத்தாக ஆராயும் போது தன் குடும்பத்தில் சொந்த தாயின் கணவராலே அல்லது தனது சித்தாப்பா மூலமே பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிய பெண்களின் பிரதி நிதியாகவும் தெரிகிறார்.
. அவர் மகள் ஷீனா 87ல் பிறந்துள்ளதாக அவர் முதல் பாட்னர் என குறிப்பிடும் தாஸ் கூறுகின்றார். 1989 என பள்ளி சாற்றிதழில் பதியப்பட்டுள்ளது. இவர் இந்திராணி உடன் இந்திராணியின் பெற்றோருடனே 86 முதல் 89 ஆம் ஆண்டுவரை வசித்திருந்ததாகவும் கூறியுள்ளார். அப்போது அவர் கல்லூரி படிப்பில் இருந்ததாகவும் கூறியுள்ளார். ஆகையால் அந்த நபருக்கு 19 முதல் 21 வயது இருந்திருக்க வேண்டும். இந்தாராணியின் பிறப்பு 1972 என்று சொல்லப்பட்டுள்ளதால் அந்நேரம் இந்திராணிக்கு 14 முதல் 16 வயது தான் இருந்திருக்க வேண்டும். அவர் பள்ளிப் படிப்பை முடித்து உயர் பள்ளிப்ப டிப்பிற்கு அல்லது ஜூனியர் கல்லூரியை எட்டியிருக்கவே இயலும்.
தற்போது நவீனத்துவத்தின் அடையாளமாக லிவிங் டுகதர் வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருக்கும் வேளையில். இந்திராணிக்கு, அவர் பெற்றோர் 1986 காலயளவிலலிது போன்ற சூழலை அமைத்து கொடுத்துள்ளனர். பெண் குழந்தைகளுக்கு திருமண வயது 18 என்றிருக்க ஒரு குழந்தையான இந்திராணி பெற்றோராலே மோசமான வாழ்க்கை சூழலுக்கு இட்டு செல்லப்பட்டுள்ளார். இந்திராணியின் அம்மா தன் கணவர் ஓடிப்போன நிலையில் தன் கணவர் தம்பியுடன் வாழ்ந்துள்ளார். அந்நிலையில் தன் மகளை சரியான முறையில் கவனிக்காத வளர்க்காத; பாசப்பரிவுடனோ நடத்தாது தன் சுகம் மட்டுமே எதிர் நோக்கிய தாயாகத்தான் இருந்திருக்க கூடும் இந்திராணியின் கூற்றை எடுத்து கொண்டால்.
இந்திராணி வீட்டில் ஒன்றாவது கணவராக /பாட்னராக வாழ்ந்த தாஸ்; சமூக அங்கீகாரவும் பெறாத சூழலில் குறிப்பிட்ட வேலைவாய்ப்பு வருமானம் கூட அற்ற நிலையில் ஒரு மாணவராக இருக்கும் பருவத்தில் இரண்டு குழந்தைகளை இந்திராணிக்கு கொடுத்துள்ளார். இவர் இந்திராணி பெற்றோருக்கு எடுபிடியாகத்தான் இருந்திருக்க வேண்டும். சட்டப்படி வயதுக்கு வராத பெண்ணுக்கு இரண்டு குழந்தைகளை கொடுத்த சித்தார்த்த தாஸும் தண்டிக்கப்பட வேண்டியவரே.
இந்த சூழலை இந்திராணியின் வளர்ப்பு தகப்பனார், தனக்கு சாதகமாகவும் பயண்படுத்தி இருக்க பெரும் வாய்ப்பு உண்டு. இந்திராணி கூற்றுப்படி கூட ஷீனா என் மகளும் என் தங்கையும் தான் என்று கூறியுள்ளார். இந்திராணி தாயார் பெரும் செல்வ செழிப்புள்ள குடும்பத்தை சேர்ந்தவராக இருந்துள்ளார் என தகவவல்கள் தெரிவிக்கின்றன, இருந்தும் தன் பதின்ம வயது மகளுக்கு பாதுகாவலராக இருக்க தவறி உள்ளார். அவ்வகையில் அவரும் தண்டிக்கப்பட வேண்டியவரே. மேலும் இந்திராணிக்கு பிறந்த பிள்ளைகளுக்கு தகப்பன் தாய் இடத்தில் தங்கள் பெயர்களை பதிந்து அரசையும் ஏமாற்றியுள்ளனர் இந்திரா முகர்ஜியின் பெற்றோர்..
இந்நிலையில் இந்திராணி இரு பிள்ளைகளையும் தன் தாய் தந்தையிடம் விட்டு விட்டு ஊரை விட்டே ஓடி வந்தவர் கல்வி அறிவு, பேச்சு வல்லமை, அதீத துணிவு இருந்திருந்தால் மேலும் கல்வி கற்று . குறிப்பிட்ட நாட்களுக்குள் நல்ல வேலைக்கு வருகின்றார். 93 ல் அப்போது 21 வயது இருந்திருக்க வேண்டும் ஒருவரை திருமணம் செய்துள்ளார். 1997ல் மகள் பிறக்கின்றார். மகளுக்கு 5 வயது இருக்கும் நிலையில் பெரும் பணக்காரரரை; மூன்றாவதாக மணம் புரிகின்றார். ஊடகங்கள் புகழாரவம் சூடி பெரும் சமூக அந்தஸ்துடன் வலம் வந்தவர் தனது முதல் இரண்டு பிள்ளைகளை தன்னுடன் இணைத்து கொள்ளும் சூழலில், சிக்கல்கள் வர ஆரம்பிக்கின்றது.
இந்திராணியின் இரண்டாவது கணவரால் பிறந்த மகள்; தன் தாய் பாசமுள்ளவர் என்றே கூறியுள்ளார். ஆனால் இந்திராணி தனது பதின்ம வயதில் பிறந்த குழந்தைகளை தன் பிள்ளைகளகாவே ஏற்று கொள்ள இயலாத மனநிலையில் தான் இருந்திருக்க வேண்டும்.
ஒருவரின் ஆளுமை; குழந்தைப்பருவத்தில் தான் நிர்ணயிக்கும் படுகின்றது என்பதிற்கு இணங்க இந்திரா தனது குழந்தைப்பருவத்தில் எதிர்கொண்ட எதிர்மறையான வாழ்க்கை பிற்காலத்தில் எந்த வழியையும் கையாண்டு தனக்கு சுற்றி ஒரு ஆளுமையை உருவாக்கி ஆட்சி செய்து தனது வீழ்ச்சியையும் அதை விட வேகமாக அமைத்து கொண்டு விட்டார். . இந்திராணிக்கு பின்பற்ற தகுந்த நல்ல ஆளுமைகள் வீட்டிலும் பெறவில்லை. ஒரு வித அச்ச உணர்வுடன் தான் குழந்தைப்பருவம் கடந்திருக்க வேண்டும்
ஒருவரின் ஆளுமை; குழந்தைப்பருவத்தில் தான் நிர்ணயிக்கும் படுகின்றது என்பதிற்கு இணங்க இந்திரா தனது குழந்தைப்பருவத்தில் எதிர்கொண்ட எதிர்மறையான வாழ்க்கை பிற்காலத்தில் எந்த வழியையும் கையாண்டு தனக்கு சுற்றி ஒரு ஆளுமையை உருவாக்கி ஆட்சி செய்து தனது வீழ்ச்சியையும் அதை விட வேகமாக அமைத்து கொண்டு விட்டார். . இந்திராணிக்கு பின்பற்ற தகுந்த நல்ல ஆளுமைகள் வீட்டிலும் பெறவில்லை. ஒரு வித அச்ச உணர்வுடன் தான் குழந்தைப்பருவம் கடந்திருக்க வேண்டும்
இந்திராணி மோசமான தந்தையால் வளர்க்கப்பட்டவள் , தாஸ் என்ற பொறுப்பற்றவனுக்கு இரு பிள்ளைகளை பெற்றவர். தன் வாழ்க்கையை எல்லா நெறிகளையும் அச்சத்தையும் மீறி உருவாக்க விளைய சீட்டு கெட்டுபோல் வீழ்ந்து நொறுங்கி சின்னா பின்னமாக கிடக்கின்றது அவர் வாழ்க்கை!.
இன்று தொழில் , வெற்றி, பதவி அதிகாரம் என்ற நிலையில் நெறிகளை மீறுவதை ஒரு பொருட்டாகவே பல பெண்கள் எடுத்து கொள்வதில்லை. அழகும் திறமையும் இருந்தால் எந்த காரியவும் கைகூடி விடலாம் என்ற மிதப்பில் திரியும் பல பெண்களுக்கான பாடம் தான் இந்திரா முகர்ஜி. பீட்டர் முகர்ஜி போன்றோர். வேலைக்கு வந்த பெண்ணை மனைவியாக்கி தன் பெற்ற பிள்ளைகளின் பாதுகாப்பு மற்றும் நிம்மதிக்க்கும் பங்கம் விளைவிக்கின்றனர்.
இந்திரா முகர்ஜி தன்னை யாரும் மிஞ்ச இயலாது என இருமாப்பு கொண்டிருக்க தன் மகள் தனக்கு போட்டியாக வருகின்றாள் என்றதும் கொலைக்கு துணிந்து உள்ளார் . இந்திராணி ஒரு மோசமான சமூக அமைப்பின் இரையாகி பலரை இரையாக்கும் தருணத்தில் சட்டத்தின் பிடியில் மாட்டியுள்ளார். எவ்வளவு வேகமாக வாழ்க்கை என்ற ஏணிப்படியில் ஏறினாரோ அதை விட வேகமாக சறுக்கி அகலபாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றார். ஆனால் இவரை பகடையாக அல்லது இரையாக அனுபவித்த இவர் வளர்ப்பு தகப்பன், முதல் கணவன், இவர் தாய், போன்றோருக்கும் தண்டனை கிடைக்கச் செய்ய வேண்டும் இச் சட்டங்கள்.
இந்திரா மகனும் தனது வீட்டில் மோசமாக சில நடைவடிக்கைகளில் ஈடுபட்டு இருப்பதாகத்தான் அயல்வீட்டு ஜனங்கள் கூறியுள்ளனர். மோசமான பால்ய குழந்தைப்பருவம் இந்திராணி போன்றோரை ஜெயில் வரை எட்ட வைக்கின்றது. அவர்கள் நடைவடிக்கைகளில் மனித இயல்பு குறைந்த மிருக இயல்பே மேல் ஓங்கி வருகின்றது. தனக்கு இடைஞ்சலாக வருபவர் மகளாக இருந்தால் கூட அவர்களை இல்லாது செய்யவே துணிந்துள்ளார். ஷீனாவும் தாறுமாறான வழியை தேர்ந்தெடுத்து பரிதாபமான முடிவை அடைந்தவர் என்றே புலன்படுகின்றது/.
தேசிய குற்றவியல் தரவுகள் கூட உணர்த்துவது இதையே ஆகும். இந்தியாவில் தினம் 93 பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். 94% பெண்களும் தங்களுக்கு மிகவும் தெரிந்து அறிமுகம் ஆனவர்களாகவே பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர். குழந்தைப்பருவம் ஒரு மனிதனுக்கு மிகவும் முக்கியமான காலமாக உள்ளது. ஆனால் அந்த காலயளவில் தான் பல குழந்தைகள் புரக்கணிக்கப்ப்டுகின்றனர் பாதிப்பிற்கு உள்ளாகுகின்றனர். இவர்கள் கொண்டதை திரும்பி தர ஆரம்பித்தால் சமூகம் இது போன்ற அவலங்களுக்கு தான் சாட்சியாக மாறும்..இந்திராணி கூட அவ்வித அவலத்தின் பிரதிபலிப்பு தான்.
மிகவும் தரமாக வந்திருக்க வேண்டிய கட்டுரை இது. சரி விடுங்கள், விமர்சித்தால் அதற்க்கு எதிராக ஏதாவது சொல்வீர்கள்! இருப்பினும் கட்டுரையின் பல இடங்களில் இருக்கும் முதிர்ந்த கருத்துக்களை மற்ற கருத்துக்கள் அமிழ்த்தி விடுகின்றன.
ReplyDeleteபெயரில்லா பின்னூட்டம் இட்ட நண்பருக்கு வணக்கம். உங்கள் கருத்துக்களையும் பதியுங்கள். உங்கள் பார்வையிலும் சிந்திக்க இயலும். நன்றி வணக்கம்.
ReplyDelete