27 Feb 2014

பெண்ணே உன் நிலை தான் என்ன?


உமா மகேஸ்வரி மரணம் பெண்கள் உலகை நடுங்க வைப்பது சிந்திக்கவைக்க வேண்டியது. ஒரு புறம் கொடூரத்தின் உச்சம் மறுபுறமோ கொடும் புறக்கணிப்பின் நிலை!  சமூக பண்பாட்டு சூழல், லாபம் மட்டுமே கண்ணோக்கும் வர்த்தக நிறுவனக்களின் அலட்சியம் என இந்த நிகழ்ச்சி மனித மனசாட்சியை தட்டி எழுப்பவேண்டியது; சிறப்பாக தமிழக அரசின்  கண்ணை திறக்க வேண்டியது.

இப்பெண் காணாமல் போய் விட்டார் என்ற போது காவலர்கள் காதலர்களை தேடவும் அலுவலம் உடன்பணியாற்றுபவர், தெரிந்தவர் தான் செய்திருக்க கூடும் என பல ஊகாபோகங்களுடன்  ஒரு இளம் பெண்ணை சந்தேகப் பார்வையும் இளக்கார தொனியிலும் தான் நோக்கினர். ஒரு மதிப்பு மிக்க நிறுவனத்தில் பணிபுரிகிறவர்; தந்தையில் புகார் பெற்றும் போலிஸ் துரிதமான தேடுதலை முடுக்கவில்லை. அவர்கள் சந்தேகம் முழுதும் இளம் பெண், அதுவும் வேலைக்கு போகும் பெண், திருமணம் ஆகாதவர் என்ற குறுகிய பார்வையிலே இருந்தது. குற்றத்தை தடுக்க இயலாது போயிருந்தாலும் அந்த உடலைக்கூட கண்ணியமான முறையில் பெற்று கொடுக்க இயலவில்லை என்பது நம் சமூக பாதுகாப்பு அற்ற தன்மையை தான் காட்டுகின்றது. எல்லாம் முடிந்து 10 நாட்களாகி விட்ட நிலையில் இவர்கள் புலணாய்வு திறமையை பறக்கும் ஆளில்லா விமானம், ஏடிம் வங்கி என புல்லரிக்கும் கதைகளை அவிழ்த்து விட்டு கொண்டு இருக்கின்றனர். பெற்றோருள்ள, கல்வியறிவு பெற்ற வேலையிலுள்ள பொறியாளரான பெண் நிலையை இவ்வகை என்றால் சாதாரண தெருவோர பெண்கள் நிலை என்னவாக இருக்கும்!

 இரவு நேரம் தனியாக பாதுகாப்பாக செல்ல தகுந்த வழியா? என்று சிந்தித்து அலுவலகத்தில் இருந்து அனுமதி பெற்று கிளம்பி இருக்கலாம். அல்லது  இவர் நண்பர்களிடமோ பெற்றோரிடமோ தன் நிலத்தகவலை சரியான நேரம்  அறிவித்திருந்தால் தேவையற்ற ஊகங்களை தவிர்த்து தேட இயன்றிருக்கலாம்.  இளம் வயதில் வேலைக்கு போகும் இவ்வித பொறியாளர் பெண்களுடன் சில காலம் தங்கியிருந்து அவர்கள் தினசரி வாழ்க்கையை காணும் சூழல் எனக்கிருந்ததால் என்னை இச்சம்பவம் மிகவும் நிலகுலைய செய்தது. 

பொறியாளர் படிப்பே மிகவும் கடினமானது. மிகவும் அறிவாற்றலுள்ள பெண்கள் குழைந்தைகளை, பொறியாளர்களாக உருவாக நேரடியான விருப்பம் இவர்களுக்கு உள்ளதோ இல்லையோ காளான் போன்று முளைத்த பொறியல் கல்லூரியில் இவர்களை சேர்த்து கொள்ளவும் குடும்ப கவுரவத்திற்கு என பெற்றோரும் படிப்பிக்க ஆவல் கொள்கின்றனர். பல பெண் குழந்தைகளால் இந்த படிப்பை எளிதாக படித்து கரையேற முடிவதில்லை. மேலும் இவர்கள் பாடத்திட்டத்திலும் இவர்களை சிறந்த இயந்திர மனிதர்களாக மாற்ற கொடுக்கும் உற்சாகம் அவர்கள் உடல் உளவியல் நலனில் கொடுப்பதில்லை. பல பொறியாளர் பெண்களுக்கு சமூகத்தை பற்றிய பெரிய புரிதல் இல்லை. இதனால் தான் பாட்டு பாடி கிண்டல் அடித்தவன் அவன் தரம் என்ன எச்சூழலில் வாழ்பவன் என பார்க்காது  செருப்பை கழற்றி அடிக்கும் உளவியல் கொடுத்ததும். என்ன தான் பொறியியல் வல்லுனர்கள் ஆகினும் சாதாரண மனிதர்களுடன் வாழ தகுந்த சில பாட திட்டங்கள் அவர்களுக்கு புகுத்துவதும் நல்லது.


இக்கால பெண் உடை நடையில் "மாடேன்" ஆக இருந்தாலும் அவர்கள் அவர்களாக வளருவதற்கான தளங்களும் குறைவு. பல பொறியாளர் பெண்கள் பெற்றோர்களும் படித்தவர்கள் வசதியானவர்கள்  என்பதால் இவர்களை கைபேசி ஊடாக 'ரிமோட் controll' போன்று தங்கள் வளையத்திற்குள் வைத்துள்ளனர். ஒரு சிறு நோய் வந்தாலோ ஏன் தங்கள் துணி மணிகளை கூட சுத்தமாக வைக்க தெரியாதவர்களாக குழந்தைகள் போன்றே வளர்க்கப்படுகின்றனர். இவர்களாக தங்களை வளர்த்து கொள்ளவும் நேரமோ பொறுமையோ இல்லை.  வாரம் ஒரு தேற்வு அதன் போட்டி என இவர்கள் 4 வருடம் உருண்டு ஓடுகின்றது. 5 வருடம் முன் 30-40 ஆயிரம் என்று ஆசை காட்டி ஆள் பிடித்து வேலை கொடுத்த நிறுவனங்களும் இவர்கள் எண்ணம் பெருகப் பெருக 6 ஆயிரம் முதல் 15 ஆயிரம் முதலே கொடுக்கின்றனர்.  வேலையில் கொஞ்சம் சோடை போனாலும் வேலை போய் விடும் என்ற சூழலில் தினம் 10 முதல் 14 மணி நேரம் உழைக்கின்றனர். இவர்கள் தங்கி இருக்கும் விடுதிகளோ உணவோ போதிய சத்தோ சுகாதாரமோ ஆனது அல்ல. இவர்களுக்கு விடுமுறை என்பது ஞாயிறு மட்டுமே. இவ்வளவு சிக்கலிலும் வேலையை விட மனம் வருவதில்லை என்று மட்டுமல்ல முடிவதில்லை. மிக பெரும் கல்லூரி கட்டணத்தில் படித்த இந்த இளம் பெண்கள் தலையில் படிப்பு கடனும் இருக்கும். இவையும் மீறி சில பெற்றோர்கள் இவர்கள் இங்கு கஷ்டப்படுவதை ஊருக்கு வரும் போது கரைவச்ச சேலை வாங்கி வா, தம்பிக்கு பீஸ் கட்டனும் என்ன போனே எடுக்க மாட்டுதே என்ற திட்டு வேற.

உற்றோர் உறவினர் இல்லாத இந்த சென்னை பட்டிணத்தில் அவர்களுக்கு ஒரே பொழுது போக்கு சரவண ஸ்டோரில் போய் பர்சேஸ் பண்ணுவது இன்னும் பல பெண்கள் தங்கள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுவது. . வயதில் திருமணம் என்பதை எல்லாம் சிந்தித்து பார்க்கா இயலாத அளவிற்கு சூழலின் விதியில் தள்ளப்படுகின்றனர்.

ஒரு காலம் 6 மணிக்கு மேல் வீட்டிற்கு வெளியில் அனுமதிக்காத பெற்றோர் இன்று  சமூக அந்தஸ்து கருதி ”என் பொண்ணும் வேலைக்கு போறா”, ”அதும் சென்னையில் வேலையில் இருக்கிறா” என்பதை பெருமையான உள்ளத்துடன் ஏற்று கொள்கின்றனர். இங்கோ வேலையிடத்தில் நெருக்கம், தங்கும் இடத்தில் நெருக்கம், தனிப்பட்ட மனப்போராட்டம் என பாலாவில் படத்தில் காணும் தேயிலை தோட்ட கல்வியறிவு அற்ற பெண்களை விட கொடும் துயரில் இக்கட்டில் வாழ்கின்றனர்.

இந்த கொலையை நிகழ்த்தியிருக்கும் அன்னிய மாநில அந்த மனித மிருகங்கள் வாழ்க்கை அதை விட கொடுமையானது. தொழிலுக்காக தன் சொந்தம் பந்தம் வீடு உறவு எல்லாம் விட்டு வந்த இவர்கள் சென்னையிலுள்ள 50 ஆயிரம் தெருவோர மனிதர்களுடன்  இவர்களும் சென்னையை நிரப்பி விடுகின்னர். கேரளாவில் தமிழனை நடத்துவதையும் ஈழத்தை நம் சகோதர்கள் நடத்தப்படுவதையும் கண்டு இரத்த கண்ணீர் வடிக்கும் மனித நேயர்கள் கொண்ட மாநிலத்தில் பீகார், வங்காளக்காரர்களை மனிதர்களாகவே பார்ப்பதே இல்லை. மற்று மாநிலத்தான் வீட்டில் வளர்க்கும் நாயை விட கேவலமாக நடத்தப்படுகின்றான். பல உணவங்களில்  இதே மாற்று மாநில சிறுவர்கள் வேலை செய்கின்றனர். இந்தியனுக்கு துபாய் போல தமிழகம் துபாயாக  தெரிவதால் வந்து சேரும் இந்த மனிதர்கள் இங்கு மனிதர்களாக நடத்தப்படாது மிருங்களாக நடத்தி மிருகமாகவே மாறி போனவர்கள். சென்னையில் நடக்கும் கட்டிடப்பணியில் ஏற்பட்டிருக்கும் இவர்கள் வேலை நேர விபத்தில் இறந்தால் சொந்த தேசத்தை திரும்ப காண முடியாதவர்கள் என்று மட்டுமல்ல இங்கே அனாதை பிணங்களாக புதக்கப்படுகின்றவர்கள்.வழியோரங்களிலும் ஒதுக்குபுறங்களிலும் தங்கி தங்களுக்கான ஜீவனை நடத்துவர்கள்.

ஒன்று தமிழக அரசு இவர்களுக்கான மனித உரிமைகளை பெற்று தந்து  சகமனிதனாக வாழ வழி செய்ய வேண்டும்.  அல்லது இவர்கள் எல்லோரையும் தமிழக எல்கையை விட்டு விரட்ட வேண்டும். அல்லாது இது போன்ற துயருக்கு முடிவில்லை. இங்குள்ள தமிழர்கள் அனாதமாக அன்னிய நாட்டில் வேலை செய்ய எங்கோ இருந்து இங்கு அகதியாக இன்னும் சில மனிதர்கள் வேலை செய்ய என்பது முதளித்துவ சுரண்டல் மட்டுமே நாம் காணும் சமூகமெங்கும். அரசியல், சமூக, பொருளாதார என எல்லா சுரணலும் ஒன்றாய் ஆட்டிப்படைக்க பாவம் ஒன்றுமறியா பெண்கள் உயிர்கள் அநியாயமாக கொல்லப்படுகின்றன.Migrated labour

இதில் மிகவும் என்னை வருந்தச் செய்தது இந்த மீடியாவின் செய்தி ஆக்கமாகும். அந்த பெண்ணுக்கு நேர்ந்தது தன் உடன் பிறந்தவருக்கு அல்லது தனக்கு தெரிந்தவருக்கு நேர்ந்திருந்தால் வரிக்கு வரி விடாது எழுதி அவரின் மாண்பை கெடுக்க முனையுவார்களா? அப்பெண்ணின் பெற்றோர் உடன் பிறந்தோர், அறிந்தவர்கள் எல்லோரையும் அவமதிக்கின்றனர் விளாவாரியான செய்தியூடாக. செய்தியை நோக்கும் போது ஒரு கொடியவன் இன்னும் தூண்டப்பட்டு பெண் உடல் இவ்வளவு மலிவானதா என்ற எண்ணத்தில் தான் எட்டுவான். பத்திரிக்கை செய்திகளுக்கும் ஒரு  மனித நேயம் வேண்டும். அச்சடிப்பது இயந்திரமாக இருந்தால் கூட அதில் பணி செய்யும் தோழனே உனக்கும் அந்த கொடிய மிருகத்திற்கும் என்ன வேறுபாடு?  

6 comments:

  1. வேலைக்கு செல்லும் பெண்கள் படும் பாடு கொஞ்சம் நஞ்சமல்ல... இந்த சம்பவம் கொடூரம்... இனி மேல் இதுபோல் நடக்கவே கூடாது...

    ReplyDelete
  2. மிக சரியான பார்வையுடன் எழுதப்பட்ட பதிவு... உங்கள் பதிவு அத்தி பூத்தாற் போல வந்தாலும் அற்புதமாகவும் அதே நேரத்தில் தெளிவான சிந்தனையுடனும் வருகிறது, பாராட்டுக்கள்
    tha.ma 2

    ReplyDelete
  3. சரியான பார்வையுடன் நல்லா எழுதறிங்க...
    என்னை உங்களுக்கு தெரியுமான்னு தெரியாது.. ஆனா கட்டுரை ரொம்ப தெளிவா இருக்கறதை தொடர்ந்து படிச்சிட்டு வர்றேன்......
    பத்திரிக்கை ஒன்றிர்க்காக இந்த கேள்விக்கான கருத்தை விருப்பமிருந்தால் பதில் அனுப்புங்கள்..............

    இன்றைய சூழலில் பெண்களுக்கெதிராக நடக்கும் பெண் வன் கொடுமைகளிலிருந்து பெண்கள் பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும்?

    பதில் மூன்று பத்திக்குள் இருந்தால் போதும்.பதிலை முடிந்தால் நாளைக்குள் உங்கள் புகைப்படத்துடன் என் மின்னஞ்சலுக்கு அனுப்புங்க.. மின்னஞ்சல்-uavaikarai@gmail.com

    ReplyDelete
  4. அன்பின் சகோதரி.. நல்ல கருத்துக்களின் பதிவு - தங்களுடையது.

    //அச்சடிப்பது இயந்திரமாக இருந்தால் கூட அதில் பணி செய்யும் தோழனே உனக்கும் அந்த கொடிய மிருகத்திற்கும் என்ன வேறுபாடு?//

    வக்ரம்!..
    அது மனிதனைத் தவிர வேறெந்த உயிர்களுக்கும் கிடையாது.

    ReplyDelete
  5. அன்பின் சகோதரி.. நல்ல கருத்துக்களின் பதிவு - தங்களுடையது.

    //அச்சடிப்பது இயந்திரமாக இருந்தால் கூட அதில் பணி செய்யும் தோழனே உனக்கும் அந்த கொடிய மிருகத்திற்கும் என்ன வேறுபாடு?//

    வக்ரம்!..
    அது மனிதனைத் தவிர வேறெந்த உயிர்களுக்கும் கிடையாது.

    ReplyDelete
  6. Govi Lenin · Works at Nakkheeran Publications ·March 11, 2014 4:35 pm


    சிந்திக்க வைக்கும் பதிவு.. ஊடகத்தினர் உள்பட அனைவரும் படிக்க வேண்டிய பதிவு

    ReplyDelete