பாலி 8 குற்றவாளிகளுக்கு
இந்தோநேஷியா அரசு நிறைவேற்றிய தண்டனை உலக மனசாட்சியை உலுக்கிய கொடும் துயர் நிகழ்வாகும். மரணம் என்பது
உலகில் பிறந்த அனைத்து ஜீவ ராசிகளுக்கும் பொதுவானது என்ற உண்மை ஒரு புறம் இருக்க அம்மரணத்தை
சில மனிதர்களுக்கு தண்டனையாக கொடுத்து தங்கள் அதிகாரத்தை நியாயத்தை நிறுவியது ஏற்று
கொள்ள தகுந்தது அல்ல. தன் இள,ம் வயதில் புரிந்த குற்றத்திற்காக 10 வருடம் சிறைத்தணடனை பெற்ற
பின்பும்; குற்ற மனநிலையை விட்டு விலகி, தான்
வாழும் சமூகத்திற்கு தன்னால் ஆன மிகவும் ஆக்கபூர்வமான செயல்கள் ஆற்றி திருந்தி வாழ முடிவெடுத்த நபர்களுக்கு தண்டனை கொடுத்தது மிகவும் கண்டிக்க தக்கது.
மயூரன் சுகுமார்
என்பர் ஒரு சிறந்த உழைப்பாளி, தலைமை பண்பு
கொண்டவர் என்பதை அவருடைய கடந்த 10 வருட சிறைச்சாலை
வாழ்க்கை அனைவருக்கும் எடுத்து காட்டியது. சிறைச்சாலையிலும் வியாபாரம், கலை, கல்வி சார்ந்த சேவைகள்
புரிந்து சக மனிதர்களுக்கு உதவும் பண்பிலே
இருந்துள்ளார். பொதுவாக குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை ஒப்பு கொள்வதில்லை. இவரோ தன்
குற்றத்தை ஏற்று தன் வாழ்க்கையை திருத்தி வாழ்ந்த ஈர இதயம் கொண்ட மனிதராக தான் வாழ்ந்து வந்துள்ளார்..
“நான் என்னை பற்றி மட்டுமே நினைத்திருந்தேன். இப்போது அப்படியல்ல, என்னை வாழ அனுமதியுங்கள்
எனக்கு இன்னும் நிறைய விடையங்கள் சிறைவாசிகளுக்காக
செய்து முடிக்க வேண்டியுள்ளது என்று தன் உயிருக்காக கெஞ்சியும் எந்த காதுகளும் கேட்டு கொள்ளவில்லை.. தன் மன போராட்டத்தை
தன் ஓவியங்கள் ஊடாகவே வெளிப்படுத்தியிருந்தார். கொலைக்களத்திற்கு கொண்டு போகும் முன்
அவரின் கடைசி பார்வை ஒவ்வொரு இதயத்தையும் ஊடுருவி தாக்க செய்வது. சட்டம் என்ற பெயரில் உன்னதமாக வாழ முடிவு செய்த
ஒரு மனிதனை கொன்று போட்டது. அவர் தாயார் சகோதரி சகோதரன் துயர் சொல்லி மாளாதது.
ஒரு மனிதனை இன்னொரு
மனிதன் கொல்வதை போன்றே அவனை காப்பாற வேண்டிய அரசே திட்டமிட்டு மிகவும் கொடூரமாக மனிதர்களை படுகொலை
செய்ததை எந்த வகையிலும் நியாயபடுத்த இயலாது. இந்த 8 மனிதர்களை படுகொலை செய்ததால் மயக்கு
மருந்து விற்பனை அழியாது என அரசுக்கு தெரியும்.
வருடம்
தோறும் 30 ஆயிரம் பேர் மயக்கு மருந்து கடத்தல் விற்பனை என்ற குற்ற செயல் புரிவதாக
கைது செய்யப்படுகின்றனர். இதில் 32% குற்றவாளிகள் அமெரிக்கா தேசத்தை சார்ந்தவர்கள்.
அமெரிக்கா அரசாங்கம் மயக்கு மருந்து கடத்தலை தடுக்க வேண்டும் என 1970 துவங்கியே திட்டம்
தீட்டியுள்ளது. ஆனால் அமெரிக்காவில் உளவாளி அமைப்பு மயக்கு மருந்து வியாபாரத்தில் உள்ளது
என அந்நாட்டு எழுத்தாளர்கள் ஊடகவியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
பொதுவாக பல நாடுகளில்
தங்கள் இளைஞர்கள் கேள்வி கேட்கா மடைமை குடிகளாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அரசுக்களே
மறைமுகமாக மயக்கு மருந்து போன்ற போதை பொருட்கள் பயண்படுத்த மறைமுகமாக உதவது உண்டு என
பல சமூக ஆவலர்கள் குற்றசாட்டியுள்ளனர். இந்தியாவில் சீக்கிய இன இளைஞர்களுக்கு மயக்கு
மருந்து தடை இல்லாது கிடைக்க அரசு உதவுகின்றது என எழுத்தாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதே போல் மிசோராம் போன்ற மாநில இளைஞர்களும் திட்டமிட்டு மயக்க நிலையில் வைத்துள்னர்
என்ற குற்ற சாட்டும் உள்ளது. இது இந்தியாவின் நிலை!
மயக்கு மருந்து பயன்பாட்டாளர்கள்,
வியாபாரிகள் அவர்களுக்கு உதவும் கடத்தல்காரர்கள் மற்றும் உற்பத்தி செய்கின்றவர்கள்
என மூன்று நிலைகள் சேர்ந்து ஒன்றாக இயங்குவது தான் மயக்கு மருந்து உலகம். உற்பத்தியை
தடை செய்தால் தான் அதன் வியாபாரிகளும் /ஏஜன்றுகளும், பயன்பாட்டாளார்களும் மறைய வழியுண்டு. உற்பத்தியாளர்களை
விட்டு விட்டு கடத்தலுக்கு உதவும் குருவி போன்றோரை தண்டிப்பது ஒரு வகையில் அநீதி தான்.
மயக்கு மருந்து கடத்தலால்
மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு நாடாகும் மெக்ஸிக்கோ. இங்கு 2006 முதலுள்ள காலயளவில் மட்டும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட
மக்கள் மயக்கு மருந்து சார்ந்த வன்முறையால் கொல்லப்பட்டுள்ளனர்..
நம்ம ஊரில் அரசே டாச்மார்க்
கடை வைத்து விட்டு நாடு முழுக்க கிட்னி மருத்துவ மனைகள் மற்றும் காப்பீடுகள் தந்து
ஏழைகளுக்கு உதவுவது போல் நாடகமாடுவதை கண்டு வருகின்றோம். அதே போல் பிளாடிக் விற்கும் கடைக்காரர்களை தண்டித்து விட்டு உற்பத்தியாளர்களை
விட்டு வைத்திருக்கும் அரசியலும் நாம் கண்டதே. உற்பத்தியை நிறுத்தாது விற்பனையை அழிக்க
இயலாது. விற்பனை இருக்கும் மட்டும் பயணாளர்கள் இருக்க தான் செய்வார்கள். விற்க ஏஜன்றுகளும்
இனியும் வரத்தான் போகின்றனர்.
0 Comments:
Post a Comment