ஒரு இயக்கத்தின் உருவாக்கம் அன்று நிலவிய கல்லூரி ஆசிரியர்களின் நிலை பின்புலமாக இப்புத்தகம் எழுதப்பட்டு உள்ளது. இந்த புத்தகம் ஒரு பேராசிரியரின் வாழ்க்கை சரிதை என்ற பிரிவிலும் வருகிறது.
1967 ஆம் ஆண்டில் கல்லூரிப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்த பேராசிரியர் நடராஜன், சில ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் பெற்றார். ஆனால், அந்நாள்களில் பணிநிரந்தரம் என்பது பெயரளவிலேயே இருந்தது என்று அவர் நினைவுகூர்கிறார்.
கல்லூரி நிர்வாகம் விரும்பினால் பணிநீக்கம் செய்ய முடியும் என்ற அச்சம் நிலவியது. ஊதியத் தாமதம், பதவி உயர்வில் நிச்சயமின்மை, நிர்வாக அழுத்தம், பணிப் பாதுகாப்பின்மை இவை அனைத்தும் அன்றைய உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்களின் அன்றாட வாழ்க்கையின் ஓர் அங்கமாக இருந்தன. இந்தச் சூழல்தான் ஒரு வலுவான ஆசிரியர் இயக்கத்தின் தேவையை உணர வைத்தது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
1967 ஏப்ரல் மாதம் முதலே கல்லூரி ஆசிரியர்களுக்கென ஒரு தனி அமைப்பை உருவாக்க வேண்டும் என்ற கருத்து பல்வேறு சந்திப்புகளிலும், ஆசிரியர் அறைகளிலும், மைய மதிப்பீட்டு முகாம்களிலும் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வந்தது. அந்த உணர்விலிருந்தே ஒரு புதிய சிந்தனை உருவானது. "ஒவ்வொருவருடும் தனித்தனியாகக் குரல் கொடுத்தால் அது பேராசிரியர்களுக்கு அச்சுறுத்தலாகவே முடியும்; அனைவரும் ஒன்றினைந்து பேசினால்தான் அது ஒரு இயக்கமாக மாறும்." உயர்கல்வி ஆசிரியர்கள் பிரச்சினை தனிநபர் பிரச்சினைகள் அல்ல; மாநிலம் முழுவதும் கல்லூரி ஆசிரியர்கள் எதிர்கொண்ட பொதுவான சிக்கல்கள் என்பதைப் படிப்படியாகத் உணர்ந்தனர். மதுரைப் பல்கலைக்கழகத்தின் ஆளுமைக்குட்பட்ட கல்லூரிகளில் பணியாற்றிய ஆசிரியர்கள், தாங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தனித்தனியானவை அல்ல, அனைவருக்கும் பொதுவானவை என்பதை ஆழமாக உணரத் தொடங்கினர்.இறுதியாக, 1970 ஏப்ரல் 19-ல் மூட்டாவின் தோற்றமும் வளர்ச்சியும் (1970–1972) 19 ஏப்ரல் 1970 – மூட்டாவின் பிறப்பு. அந்த இயக்கமே பின்னர் மூட்டா என்ற வரலாற்றுப் பெயரால் அறியப்பட்டது.
மூட்டாவின் தொடக்கக் காலப் போராட்டங்களிலும் வளர்ச்சிப் பயணத்திலும் பெரும் பங்கை வகித்தவர் என்பதனால், இந்த இடைவெளி அவருடைய பணியிலிருந்து விலகல் அல்ல; பொதுப்பணியின் மற்றொரு தளத்தில் அவர் ஆற்றிய சேவையாகவே அமைந்தது.
இரண்டாவது மாநாடு, மூட்டாவின் வரலாற்றில் ஒரு வலிமையான திருப்புமுனையாக நிறைவடைந்திருக்க வேண்டிய ஒன்று.
சிறிய ஆசிரியர் ஒன்றுகூடலாகத் தொடங்கிய அமைப்பு, இப்போது தன்னம்பிக்கை மிக்க இயக்கமாக வளர்ந்திருந்தது. மதிப்பு மிக்க கல்லூரி வளாகங்களில் மாநாட்டை நடத்தியது. தேசிய ஆசிரியர் இயக்கத்தின் தலைவர்களையும், அண்டை மாநில ஆசிரியர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் வரவேற்றது. ஆசிரியர்களின் முக்கியக் கோரிக்கைகளைத் தெளிவாக வடிவமைத்து அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்றது. எல்லா வகையிலும் அது வெற்றிகரமான மாநாடாக அமைந்தது.ஆனால், அந்த மாநாடு இன்று நினைவுகூறப்படுவது அதன் வெற்றிக்காக மட்டுமல்ல.
அது தாங்கிய ஆழ்ந்த துயரத்திற்காகவும் தான் .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
1971–72 ஆம் ஆண்டுகளில், காமராஜ் கல்லூரியில் சுமார் பதினாறு பேராசிரியர்கள் ஒன்றிணைந்து மூட்டா இயக்கத்தை உருவாக்கினர். அதன் நிறுவனர் தலைவராகப் பேராசிரியர் நடராஜன் பொறுப்பு பெற்றார். இது ஒரு சாதாரண நிர்வாகச் செயல் அல்ல.
மூட்டா போன்ற மாநில அளவிலான இயக்கம், இத்தகைய சிறிய கல்லூரி வளாகங்களின் ஒற்றுமையால்தான் வளர்ந்தது என்பதை அவரது நினைவுகள் உணர்த்துகின்றன. ஒவ்வொரு கல்லூரியிலும் சிலர் முன்வந்தனர்.
அவர்கள் தங்கள் சக பேராசிரியர்களைச் சந்தித்தனர். அச்சத்தில் இருந்தவர்களுக்குத் துணையூட்டினர். ஒற்றுமையின் அவசியத்தை எடுத்துரைத்தனர். அப்படித்தான் மூட்டா வேரூன்றியது.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
.jpeg)
இக்காலத்தில் நடந்த துன்பியல் சம்பவம் ஆகும் லூர்து நாதனின் மறைவு. முக்கியமாக லூர்த் நாதனின் வரலாறு வசிப்பவர்கள் ம்னதைக் கனக்கச்செய்கிறது. 1972 நவம்பர் 19ஆம் தேதி இரவு என்பது பேராசிரியர் அ. சீனிவாசன் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது பிரச்சினைக்கு தொடக்கமாக மாறியிருந்தது.
21ஆம் நவம்பர் தேதி, தூய சவேரியார் கல்லூரி, தூய யோவான் கல்லூரி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் பிற கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர் சீனிவாசன் மீதான தாக்குதலும் காவலில் வைப்பும் குறித்து தங்களது மனுவைச் சமர்ப்பிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். ஆசிரியர்களின் போராட்டமாகத் தொடங்கிது மாணவர்களின் நீதியுணர்வும் விசுவாசமும் கலந்தபோராட்டமாக மாறியிருந்தது.
ஆசிரியர்கள் ஏற்கனவே தங்கள் மனுவைச் சமர்ப்பித்து திரும்பியிருந்தனர். இப்போது மாணவர்கள் தனியாக ஊர்வலமாகச் சென்றனர். காவல்துறை கண்காணித்தது. உள்ளூர் மக்கள் தங்கள் வீடுகளின் முன் நின்று நிகழ்வுகளைப் பார்த்தனர்.
பேராசிரியர் ஞானராஜ் இந்தப் பிரச்சினையை ஆசிரியர்களின் கைகளுக்குள் வைத்திருக்க முயன்றிருந்தனர். ஆனால் மாணவர்கள் தங்கள் சொந்த நீதி உணர்வின் பேரில் தனித்துப் புறப்பட்டிருந்தனர். ஊர்வலம் முன்னேறியது. சுலோச்சனா முதலியார் பாலம் அருகே வந்தடைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஒழுங்காக நகர்ந்து கொண்டிருந்த அணிவகுப்பு, கணநேரத்தில் குழப்பமாக மாறியது.
அந்தக் குழப்பத்தின் நடுவில் லூர்துநாதனும் ஓடினார். லூர்துநாதன் நேரடியாக அடிக்கப்பட்டு ஆற்றில் தள்ளப்பட்டவர் அல்ல. அவர் காவல்துறையின் நடவடிக்கையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றுகொண்டிருந்தார். சுலோச்சனா முதலியார் பாலம் அருகே ஆற்றங்கரையை நோக்கி நகர்ந்தபோது, தண்ணீரின் வேகமான ஓட்டமும் சுழலும் நீரோட்டமும் அவரை இழுத்துச் சென்றன. அவர் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தார்
அரசின் மீது அழுத்தம் தொடர்ந்து அதிகரித்தது. இறுதியில் அரசு டி. சி. ஆர். கோதண்டராம ராஜு விசாரணைக் கமிஷனை நியமித்தனர். 1972 நவம்பர் 19 இரவு பாளையங்கோட்டையில் பேராசிரியர் அ. சீனிவாசன் மீது நடத்தப்பட்ட தாக்குதலிலிருந்து தொடங்கி, 1972 நவம்பர் 21 அன்று தாமிரபரணி ஆற்றில் லூர்துநாதன் உயிரிழந்த சம்பவம் வரை நடந்த நிகழ்வுகளின் முழுத் தொடர்ச்சியையும் விசாரிப்பதே கமிஷனின் பணியாக இருந்தது
இந்த அறிக்கை 103 பக்கங்களைக் கொண்டதாக அமைந்து அரசின் அதிகாரப்பூர்வ பதிவுகளில் இடம்பிடித்தது. பேராசிரியர் சீனிவாசன் மீதான தாக்குதலில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த அறிக்கையின் ஒரு பிரதியை ராஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் 76283 என்ற காப்பக எண்ணின் கீழ் பாதுகாத்து வைத்துள்ளனர்
லூர்துநாதனின் நினைவிற்கு நிலையானதொரு அடையாளத்தை உருவாக்க வேண்டும் என்று மாணவர்கள் முடிவு செய்தனர். முதலில், அவரது நினைவுச் சிலையைத் தூய சவேரியார் கல்லூரி வளாகத்திற்குள் நிறுவ வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக இருந்தது. அப்போது பாளையங்கோட்டை நகராட்சித் தலைவராகப் பொறுப்பு வகித்த திரு. நாராயணன், தெற்கு பஜார் சந்திப்பில் (S. Bazar Junction) சிலை அமைப்பதற்கான இடத்தை ஒதுக்கிக் கொடுத்தார்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்த மாணவர் லூர்துநாதனின் நினைவுச் சிலையைத் திறந்து வைக்கப் பெருந்தலைவர் கு. காமராஜரை அழைக்க வேண்டும் என்று மாணவர்கள் விரும்பினர். கல்விக்கும் மாணவர்களின் எதிர்காலத்திற்கும் தன்னை அர்ப்பணித்த தலைவராகத் தமிழகம் முழுவதும் போற்றப்பட்ட காமராஜரின் வருகை, இந்த நினைவுச் சின்னத்திற்கு உரிய கண்ணியத்தையும் பொதுமக்களின் கவனத்தையும் பெற்றுத்தரும் என்று அவர்கள் நம்பினர்.
குறிப்பாக, இந்தக் கொடூரச் சம்பவம் கருணாநிதி முதலமைச்சராகப் பொறுப்பு வகித்த ஆட்சிக் காலத்தில் நடைபெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜோ தனராஜும், ஜஸ்டினும் ஒரு டாக்சியில் விருதுநகருக்குச் சென்றனர். அங்கு டி.வி.எஸ். விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த காமராஜரை நேரில் சந்தித்து, நினைவுச் சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுத்தனர். மாணவர்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட காமராஜர் விழாவில் பங்கேற்கச் சம்மதித்தார்.
1975 பிப்ரவரி 26 அன்று நினைவுச் சிலை திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் ஜோ தனராஜ் நிகழ்ச்சி நடத்துநராகப் பொறுப்பேற்றார். தூய யோவான் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் வேதசிரோமணி தலைமை தாங்கினார். லூர்துநாதனின் தந்தையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
அன்று பாளையங்கோட்டை தெற்கு பஜார் சந்திப்பில் நிறுவப்பட்டிருந்த மாணவர் லூர்துநாதனின் நினைவுச் சிலையைப் பெருந்தலைவர் கு. காமராஜர் திறந்து வைத்தார். பேராசிரியர் அ. சீனிவாசன் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அவருக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு, அதைத் தொடர்ந்து நிகழ்ந்த ஒரு மாணவனின் மரணம் எனத் தொடர்ந்த துயர நிகழ்வுகளின் வரலாற்றுச் சாட்சியாக இந்த நினைவுச் சிலை அமைந்தது.
சிலை திறப்பு விழாவில் விடுபட்ட தகவல்கள் – சில கேள்விகள்!
இந்த வரலாற்றைப் படிக்கும்போது சில முக்கியமான தகவல்கள் விடுபட்டிருப்பது கவனத்திற்குரியது.
முதலாவதாக, பேராசிரியர் அ. சீனிவாசன் இந்தச் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றதாக எந்தத் தகவலும் புத்தகத்தில் இல்லை.
இரண்டாவதாக, கொல்லப்பட்ட மாணவர் தூய சவேரியார் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்தவர் என்றிருக்க, . அவர் பயின்ற கல்லூரியின் சார்பில் யார் யார் இந்த நினைவுச் சிலை திறப்பு விழாவில் கலந்துகொண்டனர் என்ற விவரமும் தெளிவாகப் பதிவாகவில்லை.
தூய யோவான் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசிரியர் வேதசிரோமணி விழாவிற்குத் தலைமை தாங்கியது, கல்வி நிறுவனங்களைக் கடந்த மனிதநேயத்தின் வெளிப்பாடாகப் புரிந்துகொள்ளத்தக்கது. ஆனால், மாணவர் கல்வி பயின்ற கல்லூரியின் நிர்வாகம், பேராசிரியர்கள், சக மாணவர்கள் ஆகியோரின் பங்களிப்பு குறித்த தகவல்கள் இல்லாதது ஒரு முக்கியமான வரலாற்றுக் குறையாகவே தோன்றுகிறது.
மேலும், இந்தப் புத்தகத்தின் முக்கியமான வரலாற்றுப் பாத்திரங்களில் ஒருவராகக் குறிப்பிடப்படும் பேராசிரியர் ஞானராஜின் பங்களிப்பு குறித்த தகவல்களும் சிலை திறப்பு விழைவைப் பற்றிய பதிவில் இடம்பெறவில்லை.
இவை வெறும் தகவல் விடுபாடுகள் மட்டுமல்ல. ஒரு மாணவனின் மரணத்தைத் தொடர்ந்து உருவான மாணவர் எழுச்சி, கல்வி நிறுவனங்களின் எதிர்வினை, ஆசிரியர்களின் நிலைப்பாடு, சமூகத்தின் மனிதநேயப் பங்களிப்பு ஆகியவற்றைப் புரிந்துகொள்வதற்கு அவசியமான வரலாற்றுத் தகவல்கள் ஆகும். எனவே, இந்த நிகழ்வில் யார் பங்கேற்றார்கள் என்பதோடு மட்டுமல்லாமல், யாருடைய பங்களிப்பு இடம்பெறவில்லை என்பதையும் புத்தகத்தில் இடம் பெற்று இருக்க வேண்டும்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
நவம்பர் 1975 – ஏப்ரல் 1976: சட்டப் பாதுகாப்பு பெற்ற ஆசிரியர் இயக்கம்
ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக முன்வைத்து வந்த கோரிக்கைகளில் பலவற்றிற்கு சட்டரீதியான வலிமை அளித்த முக்கியமான முன்னேற்றமாக தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்குமுறை) சட்டம், 1976 அமைந்தது.
இந்தச் சட்டம் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களின் சேவைப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இயற்றப்பட்டது. குறிப்பாக, நிர்வாகத்தின் தன்னிச்சையான பணிநீக்கம் அல்லது பணியிடை நீக்கத்திற்கு எதிராகச் சட்டப் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மேலும், ஊதியம் முறையாகவும் காலவரையறைக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கும் சட்ட அடித்தளம் ஏற்படுத்தப்பட்டது.
இந்தச் சட்டத்திற்கு 1976 ஏப்ரல் 16 அன்று இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தது. மறுநாள், ஏப்ரல் 17 அன்று தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டது. இருப்பினும், அதன் நடைமுறை அமல்படுத்துதல் 1975 நவம்பர் 21 முதல் நடைமுறைக்கு வந்தது.
இது ஆசிரியர் இயக்கத்தின் கோரிக்கைகள் அரசின் கொள்கையாகவும், பின்னர் சட்டமாகவும் மாறிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்.
1976 – ஆளுநரிடம் மூட்டாவின் நேரடி முறையீடு
தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமலில் இருந்த காலகட்டத்தில், மூட்டாவின் நிர்வாகிகள் ஆளுநர் கே.கே. ஷா அவர்களை நேரில் சந்தித்து விரிவான கோரிக்கை மனுவை அளித்தனர்.அந்த மனுவில் அரசு உதவி பெறும் கல்லூரி பேராசிரியர்களின் பணிப் பாதுகாப்பு, சேவை உரிமைகள், கல்விக் கொள்கை மாற்றங்களால் உருவாக்கக்கூடிய பாதிப்புகள் ஆகியவை தெளிவாக எடுத்துரைக்கப்பட்டன.
@@@@@@@@@@@@@@@@@@@@
தூய சவேரியார் கல்லூரி அவருக்கு அநீதி இழைத்ததாக அவர் ஒருபோதும் கூறியதில்லை. வேதியியல் துறையில் பேராசிரியருடன் கற்பித்தார். குறிப்பாக கரிம வேதியியல் அவருக்குப் பிரியமான பாடமாக இருந்தது. கிராமப்புற மாணவர்களை ஊக்குவித்தார். கல்விச் சுற்றுலாக்களை ஏற்பாடு செய்தார். ஒழுக்கத்தையும் கல்வித் தரத்தையும் உயர்வாக மதித்தார். அவரது சொந்தக் கல்லூரியே அவருடைய போராட்டத்திற்கு காரணமாக இருந்ததில்லை. ஆனால் அவரது மனச்சாட்சி கல்லூரி வளர்ச்சியின் சுவர்களுக்குள் மட்டும் அடைந்து நிற்கவில்லை. பிற கல்லூரிகளில் நடந்த அநீதிகளையும் அது கண்டது. அவர்களை மெளனமாகக் கடந்து செல்லவும் அது சம்மதிக்கவில்லை. இவ்வாறு தனது தகப்பனார் மன நிலையைக் குறித்து எழுத்தாளர் குறிப்பிட்டு உள்ளார்
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
மூட்டா இயக்கம் வலுப்பெற்றுக் கொண்டிருந்த காலத்தில், பேராசிரியர் ஞானராஜ் அதன் பணிகளில் மிகவும் ஆழமாக ஈடுபட்டு வருவது தூய சவேரியார் கல்லூரி நிர்வாகத்தின் கவனத்திற்கும் வந்தது. அது இயல்பான கவலைதான். மூட்டா ஒரு இலக்கிய மன்றம் அல்ல. கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள், தேர்வு புறக்கணிப்புகள், அரசை எதிர்கொண்ட போராட்டங்கள் இவற்றை முன்னின்று நடத்திய இயக்கம் அது. அதன் தலைவர்கள் பலர் சிறைத் தண்டனையும் அனுபவித்திருந்தனர். இத்தகைய இயக்கத்தின் மையத்தில் தங்கள் கல்லூரியின் மதிப்பு மிக்க பேராசிரியர் ஒருவர் இருப்பது நிர்வாகத்திற்கு கவலை அளிப்பது இயற்கையே. ஒருநாள் கல்லூரியுடன் தொடர்புடைய வயதில் மூத்த ஒரு கத்தோலிக்க அருட்தந்தையும் பேராசிரியர் , பேராசிரியர் ஞானராஜை அழைத்து அன்போடும் அக்கறையோடும் பேசினார். "உங்களுக்கு உங்கள் கல்லூரியில் எந்தக் குறையும் இல்லையே! ஊதியம் சரியாகக் கிடைக்கிறது. நல்ல மரியாதையும் இருக்கிறது. மாணவர்கள் உங்களை நேசிக்கிறார்கள். அப்படியிருக்க, ஏன் பிற கல்லூரிகளின் பிரச்சினைகளில் இவ்வளவு ஆழமாக ஈடுபட வேண்டும்?"
இப்படியாக பக்கம் 127 ல் குறிப்பிட்டு உள்ள எழுத்தாளர்.
செனட்டிலிருந்து சில ஆசிரியர்கள்
சிண்டிகேட்டிற்கும் முன்னேறினர்.
வி.ஒ.சி. கல்லூரி முதல்வர் பேராசிரியர் சீனிவாசன்,
குற்றாலம் பராசக்தி கல்லூரியின் பேராசிரியர் திருமதி பாகீரதி,
ஆதித்தனார் கல்லூரியின் பேராசிரியர் கனகசபாபதி ஆகியோர் செனட்டிலிருந்து சிண்டிகேட்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அவர்களைப் பாராட்ட மூட்டா ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தியது.
கல்லூரி ஆசிரியர்களின் பிரச்சினைகள் பல்கலைக்கழகத்தின் முடிவெடுக்கும் அமைப்பிற்குள் எடுத்துச் செல்லப்படுகின்றன என்ற நம்பிக்கையை அது பேராசிரியர்களுக்கு அமைத்து கொடுத்து பதவிக்கு வந்த பின்......
அருட்திரு. அருட்தந்தை எஸ். எம். அந்தோணிசாமி, எஸ்.ஜே. அவர்கள் தலைமையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிண்டிகேட் உறுப்பினர்களைப் பாராட்டும் விழா நடைபெற்றது.
மூட்டாவை கல்லூரிப் பேராசிரியர்களின் நலன்களையும் கல்வி முன்னேற்றத்தையும் பாதுகாக்க உருவாக்கப்பட்ட அமைப்பாக அறிமுகப்படுத்துகிறது. அதே நேரத்தில், அது அரசியல் சார்பற்றதும், கட்சி சார்பற்றதுமான அமைப்பு என்றும் தெளிவாகக் குறிப்பிடுகிறது. மேலும், மாநாடு பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியுடன் தொடர்புடையது என்பதையும், மாநாட்டுக் குழுவின் பொருளாளரின் பெயரையும் பதிவு செய்கிறது.
மாநாடு நிறைவடைந்த பின்னர் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. பேராசிரியர் பா. ஞானராஜ், பேராசிரியர் பி. கே. ராஜன் அவர்களின் பெயரை பொதுச் செயலாளர் பதவிக்காக முன்மொழிந்தார்.அதே நேரத்தில், பேராசிரியர் ந. தர்மராஜன் தொடர்ந்து தலைவராகப் பொறுப்பு வகிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.இந்தப் பதவிகளுக்காக எந்தவிதப் போட்டியும் ஏற்படவில்லை. வாக்கெடுப்பும் நடத்தப்படவில்லை.
சிறைக்குள் பேராசிரியர்கள் என்ற தலைப்பில், தமிழ்நாட்டில்,கல்வித்துறையில் நீதிக்காகப் போராடிய மூட்டா இயக்கத்தின் உண்மைக் கதையை பேராசிரியர் பா.ஞானராஜ் அவர்களின் பார்வையில் அவருடைய மகள் டாக்டர் லதா கிறிஸ்டி எழுதிய புத்தகம் ஆகும் இது.. சுந்தரராஜன் தமிழில் மொழிபெயர்த்துள்ளர். 2026 ல் இப்புத்தகம் KB பதிப்பகத்தால் வெளியாகி உள்ளது.
அனைவரின் ஒருமித்த ஒப்புதலுடன் அந்த முடிவு ஏற்கப்பட்டது.
மூட்டா உருவானது யாருடைய உரிமையை நிலை நாட்ட
எளிய பேராசிரியர்கள் குரலாக
இவர்கள் பிற்பாடு செனட்டு, சிண்டிக்கேட் போகிறார்கள்.
பேராசிரியர்கள் உரிமையை பெற்றுத் தர போகிறார்கள்.
சரி இதில் அருட்திரு. அருட்தந்தை எஸ். எம். அந்தோணிசாமி, எஸ்.ஜே. அவர்கள் தலைமையில், எதற்கு பாராட்டு கூட்டம்?
மூட்டா எதற்கு?
நியாயமான ஊதியம் பெற
வேலை உறுதி பெற
பாதிரியார்கள் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள்.
பேராசிரியர்கள் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள். ( ஊதியம் பெறுவதால் )
அப்போ துவக்கத்திலே மூட்டா ஹைஜாக் செய்யப் பட்டு ஸ்லீப்பர் cell ஆகி விட்டதா? என்ற கேள்வி எழ அடுத்த பக்கங்களில் அடுத்தடுத்த நிகழ்வுகளில் சேவியர் கல்லூரி நிர்வாக பாதிரிகளின் இயக்கத்தின் அடிவேராக இயங்குவதற்கு புகைப்படத்துடனே சான்று வழங்கி உள்ளார்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
கல்லூரி நிகழ்வுகள். மாவட்ட அளவிலான பொறுப்புகள். பல்கலைக்கழகச் செனட் விவாதங்கள். பொதுப் போராட்டங்கள். சிறைவாசம். பேச்சுவார்த்தைகள்.
அவற்றின் தொடர்ச்சியான பணிகள். இவை அனைத்தும் அவரது வாழ்க்கையின் பெரும்பகுதியை எடுத்துக்கொண்டன. ஆனால் அவர் வீட்டிற்கு வெளியே செலவிட்ட ஒவ்வொரு மணி நேரத்தையும், வீட்டிற்குள் யாரோ ஒருவர் தாங்க வேண்டியிருந்தது.
குழந்தைகள் பசியோடு இருக்க முடியாது. குழந்தைகளின் கல்வி நிறுத்தப் பட முடியாது. துணிகள் துவைக்கப்படாமல் இருக்க முடியாது. வீடு சிதறிப் போக முடியாது. குடும்பத்தின் மனநிம்மதி குலையக் கூடாது. அந்தப் பொறுப்பின் முழுச் சுமையையும் அம்மா தன் தோள்களில் சுமந்தார்என்று தன் அன்னையை னினைவு கூறுகிறார் எழுத்தாளர்.
மூட்டா இயக்கம் ஆயிரக்கணக்கான பேராசிரியர்களின் வாழ்க்கையை மாற்றியதைப் பார்க்கும்போது, அந்த மாற்றத்திற்காக ஒரு இல்லம் செலுத்திய விலையையும் நாம் மறந்துவிடக் கூடாது.
ஊதியப் பாதுகாப்பு,
பணிப்பாதுகாப்பு,
பணிமாற்ற உரிமை,
விடுப்புரிமைகள்,
பேராசிரியைகளுக்கான மகப்பேறு நலன்கள்,
ஓய்வுதியம்,
பணிச்சுமைச் சீரமைப்பு,
தொழில்முறை கண்ணியம்
இவை அனைத்தும் இயக்கத்தின் வெற்றிகள்.
ஆனால் அந்தப் போராட்டத்தின் அதிர்வுகள் தலைவர்களின் இல்லங்களையும், சாதாரண உறுப்பினர்களின் குடும்பங்களையும் சென்றடைந்தன.
மனைவியரின் காத்திருப்பிலும்,
குழந்தைகளின் கேள்விகளிலும்,
குடும்பங்களின் ஜெபங்களிலும்,
அந்தப் போராட்டம் வாழ்ந்தது.
எங்கள் இல்லத்தில், அந்த உண்மைக்கு முகமாக இருந்தவ[ர்]
அம்மா.
(@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
உரிமைகள் இன்று இயல்பாகத் தோன்றுகின்றன; சுதந்திரங்கள் இன்று சாதாரணமாகப் பயன்படுத்தப்படுகின்றன...
ஆனால் அவை யாரோ ஒருவர் செய்த தியாகத்தின் விலையாக நமக்குக் கிடைத்தவை என்பதை நினைவில் கொள்ளாத வரை, அந்த உரிமைகளின் உண்மையான அருமை முழுமையாகத் தெரியாது...
இன்று நம் கைகளில் மலராக வந்து சேர்ந்த உரிமைகள், நேற்று எண்ணற்ற காலடிகள் இரத்தம் சிந்தி கடந்த முள் பாதைகளின் விளைச்சல் என்பதை மறந்துவிடாதிருக்கச் செய்வதே இந்த அத்தியாயத்தின் நோக்கம்...
பெரிய மக்கள் இயக்கங்கள் நினைவுகூரப்படுவது முதலில் அவற்றின் பரபரப்பான நிகழ்வுகளின் வழியாகத்தான் கருப்புச் சின்னங்கள், உண்ணாவிரதங்கள், பேரணிகள், கைது நடவடிக்கைகள், சிறைவாசங்கள், பேச்சுவார்த்தைகள், அரசாணைகள். ஆனால் ஒரு இயக்கத்தின் உண்மையான மரபு அவற்றில் மட்டுமல்ல. காலம் கடந்தபின், அமைதியாக மாறிய அன்றாட வாழ்க்கையில்தான் அதன் வெற்றி அளவிடப்படுகிறது.
அது அச்சமின்றி ஊதியம் பெற்ற பேராசிரியரின் வாழ்க்கையில் அளவிடப்படுகிறது.
அது மகப்பேறு விடுப்பு உரிமையைப் பெற்ற பேராசிரியையின் வாழ்வில் அளவிடப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட சங்கமாக, ஆவணங்களைக் காப்பாற்றும் நிர்வாக மரபைக் கொண்ட, பொறுப்புணர்வும் தொடர்ச்சியும் உள்ள ஒரு வலுவான அமைப்பாக வளர்ந்திருந்தது. சில காலம், மூட்டாவின் ஆரம்பகால வளர்ச்சிக்காகத் தனது தோள்களில் பெரும் பொறுப்பைச் சுமந்திருந்த அந்த மனிதர், அதன் அன்றாடச் செயல்பாடுகளிலிருந்து சற்று ஒதுங்கி நின்றார். வெற்றியின் முடிவில் விரிந்த துயரம். அந்தக் காலகட்டத்தில், லயன்ஸ் சங்கம் (Lions Club) அவரைத் தனது தலைவராகப் பொறுப்பேற்குமாறு அழைத்தது. அந்த அமைப்பிலும் சில முக்கியப் பொறுப்புகளை அவர் ஏற்றுக்கொண்டார்.
.jpeg)
.jpeg)

.jpeg)


No comments:
Post a Comment