17 Nov 2026

நாடார் இனத்தின் வரலாறும் மிஷனரிகளால் மறைக்கப்பட்ட உண்மைகளும் சமகாலக் கேள்விகளும்📍


உலகிலேயே மிகவும் மோசமான நோய் தாழ்வு மனப்பான்மை. அந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் தாங்களும் மனநிம்மதியின்றி வாழ்வதோடு, மற்றவர்களையும் நிம்மதியாக வாழவிட மாட்டார்கள். தங்களுடைய தாழ்வு மனப்பான்மையை மறைப்பதற்காகப் பிறரின் அடையாளங்களையும் வரலாற்றையும் இழிவுபடுத்தத் தொடங்குவார்கள். ஒருகட்டத்தில் சமூகத்தின் அமைதிக்கே எதிரானவர்களாக மாறிவிடுவார்கள்.

நாடார் இனத்தின் வரலாற்றை ஆராய்வதில் ஆர்வம் கொண்டுள்ள ஓர் அமெரிக்க இளைஞருக்கு The Nadars of Tamilnad; the political culture of a community in change
by Hardgrave, Robert L, அந்த ஆர்வத்தை ஏற்படுத்தியவர்களில் ஒருவர், மதம் மாறாமல் பத்ரகாளியின் புத்திரனாகவே வாழ்ந்து மறைந்த பெருந்தலைவர் காமராஜர் தான் .

நாடார் சமூகத்தின் வரலாறு என்பது வெறுமனே ஒரு சாதியின் வரலாறு அல்ல. அது நிலம், வணிகம், கல்வி, சமூகப் போராட்டம், அரசியல் அதிகாரம், பண்பாடு, தன்னம்பிக்கை ஆகியவற்றின் வரலாறு.
கால்டுவெல் போன்ற மிஷனரிகளின் சமூகப் பார்வைக்கும் செயல்பாடுகளுக்கும் எதிராக, இங்கிலாந்து நாடாளுமன்றம் வரையிலும் குரல் எழுப்பியவர் அருமைநாயகம் நாடார் (சட்டாம்பிள்ளை) என்று குறிப்பிடப்படும் வரலாற்று ஆளுமை. காலனிய ஆட்சியையும் மிஷனரி நிறுவனங்களையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுக வேண்டியதன் அவசியத்தை இத்தகைய வரலாற்றுச் சம்பவங்கள் உணர்த்துகின்றன.
ஆனால் இன்று அருமைநாயகம் எழுதின 35 புத்தகங்களும் மக்கள் வாசிப்பில் கிடைக்காத வண்ணம். மறைத்து வைக்கப்பட்டு உள்ளது.


கால்டுவெல் போன்ற மிஷனரிகள் இப்பகுதியின் சாதிய அமைப்புகளை வெறுமனே எதிர்கொண்டவர்கள் மட்டுமல்ல; சில நேரங்களில் அவற்றைத் தங்களுடைய மதப் பரப்புதல் நோக்கங்களுக்கேற்ப மறுவடிவமைத்தவர்களாகவும் இருந்தனர்.

உள்ளூர் சமூகங்களுக்கிடையிலான வேறுபாடுகளைத் தீவிரப்படுத்தி, சமூக முரண்பாடுகள் தொடர்ந்து நிலவுவதற்கு மிஷனரி நிறுவனங்களின் செயல்பாடுகள் எவ்வாறு துணைபோயின என்பதையும் ஆராய வேண்டியுள்ளது.

உள்ளூர் மக்களின் வளங்கள், நிலம், சமூக அதிகாரம் ஆகியவற்றின் மீது ஐரோப்பிய காலனிய நிறுவனங்கள் எவ்வாறு ஆதிக்கம் செலுத்தின என்பதற்கும் வரலாற்று ஆவணங்களில் பல சான்றுகள் உள்ளன.

அதேவேளையில், அனைத்து மிஷனரிகளையும் ஒரே அளவுகோலில் மதிப்பிட முடியாது. இந்தப் பின்னணியிலும் மக்களின் நலனுக்காகத் தங்களுடைய வாழ்வை அர்ப்பணித்து, இந்த மண்ணிலேயே உயிர் நீத்த சில மிஷனரிகளும் இருந்தனர். நாசரேத்தின் தந்தை மார்க்கஷிஸ் ஐயர், நெல்லைப் பகுதியில் வாழ்ந்து  கிறிஸ்தவ சபையால் கல்லறை இடம் கூட
மறுக்கப்பட்ட ரேனியஸ் ஐயர், கன்னியாகுமரிப் பகுதியில் சோமர்வெல் போன்றவர்களை அதற்குச் சான்றாகக் குறிப்பிடலாம்.


சமீபத்தில் தூத்துக்குடியின் வரலாற்றை வாசித்தபோது . 1910ஆம் ஆண்டு வரையிலும் அப்பகுதியில் எடுப்பு கழிப்பறைகள் நடைமுறையில் இருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது. அந்தச் சூழலை மாற்றுவதற்கான முனைப்பு உள்ளூர் தலைமை குரூஸ் பர்னாந்து அவர்களிடம் இருந்தே  உருவாகி  உள்ளது. .


போர்த்துகீசியர்கள் பதிநான்காம்  நூற்றாண்டின் இறுதியில் இந்தியக் கடற்கரையை அடைந்ததிலிருந்து தங்களுடைய வணிக மற்றும் மதப்பரப்புரை நடவடிக்கைகளை விரிவுப் படுத்தினர். கடற்கரை மீனவ மக்களை மதமாற்றம் செய்வதோடு, கடல் வணிகத்தின் மீதான தங்களுடைய  நாடு போர்ட்டுகலின் ஆதிக்கத்தையும் வலுப்படுத்தினர்.


போர்த்துகீசியர்களின் சொத்துக் குவிப்பையும் கடல் வணிக ஆதிக்கத்தையும் கவனித்த டச்சுக்காரர்களும் பின்னர் ஆங்கிலேயர்களும் இப்பகுதியில் தங்களுடைய செல்வாக்கை விரிவுபடுத்தினர்.


மற்றய அந்நிய தேச சக்திகள் போலவே ஐரோப்பியர்களின் வருகையும்  வணிகம், கடல் வழி ஆதிக்கம், நிலவளம், அரசியல் அதிகாரம் ஆகியவை ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருந்தன.


📍நாடார் சமூகத்தின் மீது ஆங்கிலேயர்களின் கவனம்


தென்னிந்தியாவிற்கு வந்த ஐரோப்பியர்கள் இங்குள்ள அரசியல், சமூக, பொருளாதார அமைப்புகளைப் புரிந்துகொள்ளத் தொடங்கினர். அதற்கு முன்னே சவேரியார் எழுத்துக்களையும் வாசித்து உள்ளனர்.


மதுரை நாயக்கர் ஆட்சியின் நெருக்கடிகளையும் பல்வேறு அரசியல் மாற்றங்களையும் கடந்து, நெல்லை, தென்காசி மற்றும் தேரிக்காடு பகுதிகளில் நிலம், சொத்து, வணிகம் ஆகியவற்றுடன் வாழ்ந்த நாடார் சமூகத்தின் மீது அவர்களுடைய கவனம் திரும்பியது.


குறிப்பாக, நிலைமைகாரர்கள் தலைமையில் அமைந்திருந்த சமூகக் கட்டமைப்புகளும், நாடார் குடும்பங்களின் பொருளாதார வலிமையும் அவர்களுடைய கவனத்தை ஈர்த்திருக்கலாம்.


நாடார் குடும்பங்களுக்குள் மதமாற்ற நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன, குறிப்பாகப் பெண்கள் வழியாகக் குடும்பங்களுக்குள் மதப்பரப்புதல் எவ்வாறு திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப் பட்டது என்பதைப் பற்றி டோனாவூர் அம்மா தனது எழுத்துகளில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய ஆவணங்களை நாம் விமர்சனக் கண்ணோட்டத்துடன் வாசிக்க வேண்டியது அவசியம்.


இதற்கிடையில், நாடார் பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி வளர்த்த கிறிஸ்தவ ஊழியத்தை , தேவதாசி மரபு போன்றவற்றையும் இணைத்துப் பல்வேறு கதையாடல்கள் உருவாக்கப்பட்டன. அவற்றில் எவை ஆவண ஆதாரங்களைக் கொண்டவை, எவை மிஷனரி நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டவை என்பதைத் தனித்தனியாக ஆராய வேண்டும்.


இன்று சில பாஸ்டர்கள் முன்வைக்கும் வரலாற்றுக் கதையாடல்களை மட்டுமே உண்மையாக ஏற்றுக்கொண்டால், நாடார் சமூகத்தின் சொந்த வரலாற்றையும் பண்பாட்டு அடையாளங்களையும் நாம் இழந்துவிடுவோம்.


ஆங்கிலேய ஆட்சியும், மிஷனரி நிறுவனங்களும் அத்துடன் பஞ்சமும் சுகாதாரமும்.


ஆங்கிலேயர்களின் ஆட்சியும் மிஷனரிகளின் பணிகளும் உண்மையிலேயே இம்மண்ணின் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காக அமைந்திருந்தால், ஏன் இப்பகுதிகளில் பஞ்சங்களும் வறுமையும் சுகாதாரக் கேடுகளும் தொடர்ந்து நிலவின?


கல்வி நிறுவனங்களையும் மருத்துவமனைகளையும் தொடங்கியதை மட்டும் சமூக முன்னேற்றத்தின் முழுமையான அளவுகோலாகக் கொள்ள முடியாது. அந்த நிறுவனங்கள் உருவாக்கிய சமூக மாற்றம் என்ன? உள்ளூர் மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவிற்கு உயர்ந்தது? அதிகாரமும் வளங்களும் யாருடைய கைகளில் குவிந்தன? என்பதையும் ஆராய வேண்டும்.


நாசரேத் என்பது இன்று நாம் அறிந்திருக்கும் ஓர் ஊரின் பெயர் மட்டுமல்ல. சாண்பத்து மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் உள்ளடக்கிய பரந்த வரலாற்றுப் பின்புலம் அதற்கு இருக்கிறது.


அந்தப் பகுதியின் வெகுஜன மக்களிடம் இன்னும் முழுமையாகச் சென்றடையாத மானவீக வளநாட்டின் வரலாறும், நாடார்களின் வாழ்வியலும், நிலம் சார்ந்த சமூக அமைப்புகளும் ஆழமாக ஆராயப்பட வேண்டியவை.


ஆனால் நாசரேத் பகுதியைச் சேர்ந்த ஒரு நாடார் இளைஞரே, 'நாம் முன்பெல்லாம் உடை அணியாமல், பஞ்சப் பரதேசிகளாக வாழ்ந்தோம்; மிஷனரிகள் வந்துதான் நமக்குக் கால்சட்டை வாங்கிக் கொடுத்தார்கள்' என்று இன்றைய ஊழியர்களின் தூண்டுதலால்,  வரலாற்று அறியாமலே  பேசுவது நாடார் இனத்திற்கே அவமானம். இப்படி நீங்கள் நசுக்கின பித்துக்கின கதை பேசுவதால் தான் இந்து நாடார்கள் உங்களை நாடார்கள் என்று சொல்ல தயங்குவது. . 


இது ஒரு தனிப்பட்ட கருத்துப் பிரச்சினை அல்ல. ஒரு சமூகத்தின் சொந்த வரலாற்றைப் பற்றிய புரிதல் எவ்வாறு மாற்றியமைக்கப் படுகிறது என்பதற்கான எடுத்துக்காட்டு. இது ஒருவகை பண்பாட்டு அழிப்பு ஆகும். 


 ஆண்ட பரம்பரைக் கதை எவ்வளவு பொய்மை நிறைந்ததோ அத்தகைய சுயமரியாதை அற்றது  நாடார்களுக்கு மிஷநரிகள் தான் வாழ்க்கை கொடுத்தார்கள் என்பது. உண்மையில் நாடார்களின் பண்பாட்டு தளத்தை திட்டமிட்டு அழித்தனர். 


நாடார்கள் கட்டிய கோயில்கள், அவர்களுடைய குலதெய்வ வழிபாட்டு மரபுகள், நிலம் சார்ந்த அடையாளங்கள், வணிகப் பின்னணிகள், குடும்ப வரலாறுகள் ஆகியவற்றை வாசிக்கவும் ஆராயவும் வாய்ப்பளிக்காமல், மிஷனரிகள் வந்த பிறகுதான் நாகரிகம், உடை, கல்வி, வாழ்க்கைத் தரம் ஆகியவை உருவானதாகக் கூறுவது முற்றிலும் பிழையும் இன்றைய சபைகளின்  இருப்பை தக்கவைக்க எழுப்படும் பொய்  குரலாகும். 


ஒரு வாதத்திற்காக நாசரேத் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்வோம்.


இன்று அந்த ஊரின் மேற்குப் பகுதியில் இந்து நாடார்கள் சிறுபான்மையினராக வாழ்கின்றனர். அதே ஊரில் கிறிஸ்தவ நாடார்கள் பெரும்பான்மையினராக உள்ளனர்.


எனவே, பெரும்பான்மையாகவும் அரசியல் மற்றும் நிறுவன அதிகாரங்களைக் கொண்டவர்களாகவும் இருந்தவர்கள், அங்குள்ள சிறுபான்மை இந்து நாடார்களின் கல்வி, பொருளாதாரம், சமூக வளர்ச்சிக்காக என்ன செய்திருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது.


அரசியல் அதிகாரமும் நிறுவனங்களின் நிர்வாகமும் பெரும்பான்மையினரிடம் இருந்தபோது, எளிய நாடார் குடும்பங்களின் வாழ்வாதாரமாக இருந்த மில்லை இன்னும் திறக்க முடியாததற்குக் காரணம் என்ன?


மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்கள் ஏன் முடங்கிக் கிடக்கின்றன? அவற்றை மீண்டும் செயல்படுத்துவதற்கான நிர்வாகத் திறனும் அரசியல் துணிவும் ஏன் வெளிப்படவில்லை?


மார்க்கஷிஸ் ஐயரின் காலத்திலேயே தொடங்கப்பட்ட லூக் மருத்துவமனை, வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைப் போன்ற ஒரு சிறந்த மருத்துவ நிறுவனமாக ஏன் வளரவில்லை?


மார்க்கஷிஸ் ஐயர் உருவாக்கிய கல்விப் பாரம்பரியத்தைக் கொண்டிருந்த இந்தப் பகுதியில், மாநில அளவில் முன்னணியில் இருந்த பள்ளியின் இன்றைய நிலை என்ன?


பிள்ளையாமனையில் கட்டப்பட்ட கல்லூரியின் வளர்ச்சி எந்த நிலையில் இருக்கிறது? நாசரேத் மாணவர்கள் தங்கள் உயர் படிப்பிற்கு சென்னை கோயம்பதூர் பாளையம் கோட்டையை தான் நாடுகின்றனர். 


இத்தகைய நிறுவனங்கள் ஏன் எதிர்பார்த்த வளர்ச்சியை அடையவில்லை? அவற்றின் நிர்வாகக் குறைபாடுகளுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்?


இவற்றுக்கெல்லாம் நிர்வாகம், பிஷப் தலைமையிலான அமைப்புகள் மற்றும் சமகாலத் திருச்சபை நிர்வாகங்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.


வேலைவாய்ப்புகளுக்காகப் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. தகுதியான மருத்துவர்களை நியமிப்பதில் வெளிப்படைத்தன்மை இல்லாத நிலை குறித்தும் கேள்விகள் உள்ளன.


திராவிடக் கட்சிகளின் அரசியல் ஆதரவாளர்களாகச் செயல்பட்டு, இலவச மருத்துவ முகாம்களை நடத்தும் நிலையை அடைந்து இருப்பதை கவனிக்க வேண்டி உள்ளது. ஆனால் , அதே ஊரில் சாராயக்கடைகள் செயல்படும்  முரண்பாடுகளையும் நாம் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.


📍மதமாற்றமும் சாதி அடையாளமும்: கால்டுவெல், மார்க்கஷிஸ் ஐயர்

 பார்வைகள📍


மதம் மாறிய பிறகு நாடார் என்ற சாதி அடையாளத்தைப் பயன்படுத்தக் கூடாது என்ற கருத்தை கால்டுவெல் முன்வைத்த போது, அதற்கு மாறாக, மார்க்கஷிஸ் ஐயர் போன்றவர்கள் இன அடையாளத்தை முற்றிலுமாகத் தடை செய்ய வேண்டியதில்லை என்ற பார்வையைக் கொண்டிருந்தனர். 


மார்க்கஷிஸ் ஐயரின் யூதப் பின்னணியையும் இங்கு கவனிக்க வேண்டும். யூதர்களின் வரலாற்றில் இன அடையாளம், நிலம், பண்பாடு, மதம் ஆகியவை எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புபட்டிருக்கின்றன என்பதை அவர் அறிந்திருந்திருக்கக்கூடும்.


இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான உண்மை ஒன்று இருக்கிறது.


இயேசுவின் மீது நம்பிக்கை வைப்பது என்பது ஒருவர் தனது பூர்வீக இன அடையாளத்தையும் பண்பாட்டையும் கைவிட வேண்டும் என்பதல்ல.


'இயேசு முக்கியமா?

 இன அடையாளம் முக்கியமா?' என்று கேள்வி எழுப்புவது வரலாற்றையும் மதத்தையும் புரிந்துகொள்ளாத அணுகுமுறை.


இயேசு யூத சமூகத்தில் பிறந்து, அந்தச் சமூகத்தின் வரலாற்றுப் பின்னணியில் வாழ்ந்து, 

தனது சமூகத்தின் மாற்றத்திற்காக போதனைகளை முன்வைத்தவர்.


 கிறிஸ்தவத்தின் தோற்றத்தையும் அதன் யூதப் பின்னணியையும் மறுத்துவிட்டு கிறிஸ்தவத்தைப் புரிந்துகொள்ள முடியாது.


அப்படியிருக்க, மதம் மாறியதற்காக ஒருவர் தனது பூர்வீக வரலாற்றையும் சமூக அடையாளத்தையும் மறுக்க வேண்டும் என்று வலியுறுத்துவது எந்த வகையில் நியாயமானது?


நாசரேத், முதலூர், நெல்லை போன்ற பகுதிகளில் 'அசனம்' என்ற உணவு விருந்து ஒரு முக்கியமான சமூகப் பண்பாட்டு நடைமுறையாக இருந்துள்ளது.


இந்த உணவு விருந்தின் பின்னணியில் உணவு, சாதி, சமூக உறவு, ஒன்றாக அமர்ந்து உண்ணுதல் போன்ற பல்வேறு சமூகப் பரிமாணங்கள் உள்ளன.


நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த நாடார்கள் இந்தப் பண்பாட்டு நடைமுறையைப் பெரிதாக கண்டு கொள்ளவில்லை.  


அந்த விருந்தில் யார் சமைக்க வேண்டும்? யாருடன் அமர்ந்து உணவு உண்ண வேண்டும்? நாடார் சமூகத்தினரை எவ்வாறு ஒரே உணவு விருந்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும்? போன்ற திட்டங்கள் அன்றைய மிஷனரிகளின் முக்கியமாக கால்டுவேல் மதப்பரப்பல் நடவடிக்கைகளோடு தொடர்புடையவையாக இருந்தன. இதற்கான சான்று 1903ஆம் ஆண்டைச் சேர்ந்த மிஷனரி ஆவணங்களின் அடிப்படையில் ஆராயலாம்.


இவை வெறும் உணவு முறைகள் குறித்த விவாதங்கள் அல்ல. சமூகத்தில் நிலவிய சாதிய இடைவெளிகளையும், மதமாற்றத்திற்கான உத்திகளையும் புரிந்துகொள்வதற்கான வரலாற்றுத் தடயங்கள்.


நாடார் சமூகத்தின் வரலாற்றைத் திரித்தெழுதுவதற்கு நாடார் சமூகத்தைச் சேர்ந்தவர்களே துணைபோவது வேதனையளிக்கிறது.


ஒருபுறம், தங்களுடைய முன்னோர்கள் நிலம், சொத்து, வணிகம், கோயில்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றை உருவாக்கிய வரலாற்றை மறந்துவிடுகிறார்கள். மறுபுறம், தாங்கள் ஒடுக்கப்பட்டோம், நசுக்கப்பட்டோம், எதுவுமற்றவர்களாக இருந்தோம்; வெளியிலிருந்து வந்தவர்கள்தான் தங்களுக்குத் தன்மானத்தையும் வாழ்க்கையையும் கொடுத்தார்கள் என்ற ஒருபக்கக் கதையாடல்களைத் தொடர்ந்து பரப்புகிறார்கள்.


ஒரு சமூகத்தின் மீது நிகழ்ந்த ஒடுக்குமுறைகளை மறுக்க வேண்டிய அவசியமில்லை. அதே நேரத்தில் அந்தச் சமூகத்தின் சொந்த உழைப்பு, பொருளாதார வலிமை, பண்பாட்டு அடையாளம், எதிர்ப்புணர்வு, வரலாற்றுச் சாதனைகள் ஆகியவற்றையும் மறைத்துவிடக் கூடாது.


மிஷனரிகளின் கல்வி, மருத்துவப் பங்களிப்புகளை நாம் மறுக்கவில்லை. ஆனால் அந்தப் பங்களிப்புகளின் பின்னணியில் இருந்த மதப்பரப்பல், காலனிய அரசியல், சமூக அதிகாரம், பொருளாதார நோக்கங்கள் ஆகியவற்றையும் ஆராய வேண்டும்.


இன்றைய பாஸ்டர்களும் பிஷப்புகளும் தங்களுடைய நிறுவனங்களின் வரலாற்றையும் நிர்வாகத்தையும் வெளிப்படையாக விவாதிக்கத் தயாராக இருக்க வேண்டும்.


நாடார் சமூகமும் தனது வரலாற்றை மிஷனரி ஆவணங்களிலிருந்து மட்டுமே தேடாமல், தங்களது முன்னோர்கள் உருவாக்கி வைத்துள்ள கோயில் கல்வெட்டுகள், குடும்ப ஆவணங்கள், நிலப் பதிவுகள், வாய்மொழி வரலாறுகள், வணிகப் பதிவுகள், பழைய நூல்கள் ஆகியவற்றிலிருந்தும் மீட்டெடுக்க வேண்டும்.


ஒரு சமூகத்தின் வரலாற்றை அந்தச் சமூகத்தின் பெருமைகளையும் குறைகளையும் சேர்த்துத்தான் எழுத வேண்டும். பிறர் எழுதிய வரலாற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதும் தவறு; மிஷநரிகளுக்கு  சாதகமான வரலாற்றை உருவாக்குவது இன்றைய பாஸ்டர்கள் ஊழலை கேள்வி கேட்காமல் வைக்கும் யுக்தி தான் என புரிதல் வேண்டும். 

நாடார் சமூகத்தின் வரலாறு என்பது மதமாற்றத்திற்கு முன்பும் இருந்தது; மதமாற்றத்திற்குப் பிறகும் தொடர்ந்தது. அந்த வரலாற்றின் உரிமையாளர்கள் நாடார் மக்களே.


அதை ஆராயவும், கேள்வி கேட்கவும், ஆவணப்படுத்தவும், அடுத்த தலைமுறைக்கு உண்மையை கொண்டு செல்லவும் வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.


1. 📍அருமைநாயகம் நாடார் (சட்டாம்பிள்ளை) இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பிய சம்பவத்தின் காலம் மற்றும் ஆவணம்.


2. 📍டோனாவூர் அம்மாவின் எழுத்துகளில் நாடார் பெண்கள் வழியாக மதமாற்றம் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பகுதிகள்.


3. 📍1903ஆம் ஆண்டு மிஷனரி ஆவணங்களில் அசனம், உணவு முறை, நாடார் சமூகப் பங்கேற்பு குறித்த பதிவுகள்.







No comments:

Post a Comment