10 Aug 2025

9ஆம் -17ஆம் நூற்றாண்டு -

 9ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில், அசோக மன்னனின் பிரசாரகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட #பௌத்தம் முழு கேரளத்திலும் பரவலாகவும் முக்கியமான மதமாக இருந்தது. இம் மதம், பெருமாள்களில் ஒருவரை உட்படப் பெருமளவிலான மக்களை மாற்றச் செய்யும் அளவுக்கு வெற்றி பெற்றது.

ஆனால், #சங்கரரின் போதனைகள், மதத்தின் தன்மையில் ஏற்பட்ட நிலைமாற்றம் ஆகிய காரணங்களால், இந்தியாவின் பிற பகுதிகளிலும் போலவே, ம்லபாரிலும் பௌத்தம் விரைவில் வீழ்ச்சியடைந்தது.
பௌத்தத்தை ஒதுக்கி #பிராமணியத்தின் செல்வாக்கு அதிகரித்தது. , முன் காலத்தின் தந்தை வழித் தமிழர்கள் ஆட்சியான #சேர மன்னராட்சிககுளுக்கு எதிராகத் தாய் வழி மரபை பின்பற்றிய #நாயர்களின் முக்கியத்துவம் அதிகரித்தது. சேர மன்னராட்சி முடிவுற்றதும் , அதன் அமைச்சர்கள் மற்றும் ஆட்சி வம்சத்தில் இருந்தவர்கள் சுதந்திரத்தை ஏற்றுக்கொள்வது என்பது, நம்பூதிரிகள் ஆதிக்கம் நாட்டிலும் மக்களிலும் ஒரு #மதஅரசை (theocracy) நிறுவ முயற்சித்தது.
இவை அனைத்தும் 9ஆம் நூற்றாண்டின் முக்கிய அம்சங்களாக, ஒரு பழைய ஒழுங்கின் முடிவையும், புதியதொன்றின் துவக்கத்தையும் குறிக்கின்றன. உண்மையில், இது கேரளத்தில் இருண்ட காலத்திலிருந்து #மத்தியக்காலத்துக்கான மாற்றக் கட்டமாகும்.
#நாயர் குடியினரின் அதிகாரத்தை திருவிதாங்கூரில் மார்த்தாண்ட வர்மாவும், மலபாரிலும் கொச்சியிலும் #ஹைதர் அலியும் டீப்பூ சுல்தானும் முறியடிக்கும் வரை, குடியாட்சி மற்றும் இராணுவ அமைப்பின் அடிப்படையாக நிலத்துடைமைக் கோட்பாடு (Feudalism) தொடர்ந்து கொண்டு இருந்தது.
அந்நியர்கள் இந்தியக் கடல்பரப்பில் வந்தது கேரள அரசியல் வரலாற்றில் நிச்சயமாக பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது; ஆனால் அது மக்களின் வாழ்க்கையில் எந்தத் மாற்றத்தையும் கொண்டுவராததால், அதனை ஒரு புதிய யுகத்தின் தொடக்கமாகக் கருத முடியாது.
இந்த காலகட்டத்தில் #அந்நியர்கள் வந்தது அரசியல் வரலாற்றின் முகத்தை முற்றிலும் மாற்றியது; ஆனால் அது நவீன காலத்தின் தொடக்கமாகக் கருதப்பட முடியாது. ஒரு மக்களின் வாழ்க்கையில் நிகழும் தனித்துவமான மாற்றங்களே காலப்பிரிவின் அடிப்படையாக இருக்க வேண்டும். வாஸ்கோட காமாவும் அவரது தொடர்வார்களும் மக்களின் வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. #போர்ச்சுகீசர் பீரங்கிகளின் முன் தங்கள் எளிய வாள்களால் தடுக்க முயன்ற வீர நாயர் படைவீரர்களிள், ஒருவருடனொருவர் இடைவிடாமல் சண்டையிட்டு அழிய காரணமானது.
மத்தியக்காலத்தின் பிரிக்கமுடியாததும் நிலத்துடைமை ஆட்சியும் மதஅரசும் முக்கியமானவை. மத்தியக்காலம் 1792 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆக்கிரமிப்புவரை கேரள அரசியலில் பெரும் செல்வாக்கைச் செலுத்தின. ஆகவே, மலபாரில் மத்தியக்காலம் #பொதுவாக 825 முதல் 1800 வரை நீடித்தது.
மத்தியகாலக் கேரளத்தின் வரலாற்றை இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது
#முதல் பகுதி (சுமார் கி.பி. 825–1500) போர்த்துகீசர் வருகையோடு முடிவடைந்தது;
#இரண்டாவது பகுதி (1500–1800) மத்தியகாலத்தின் முடிவோடு நிறைவடைந்தது.
முதல் பகுதியில், #சேரமான் பெருமாளின் ஆதிக்கத்திலிருந்து விலகி, அவரது கீழமைப் பிரபுக்கள் தன்னாட்சியைப் பெற்றனர்; சாமூதிரிகளின் எழுச்சி உச்சம் பெற்றது;
#அரபு வணிகர்களும் மாப்பிள்ளை படையினரும் அளித்த உதவியால், சாமூதிரிகள் விரைவாக அதிகாரம் பெற்றனர். மாமாங்கத்தின் பாதுகாவலர் அல்லது ரக்ஷாபுருஷர் என்ற நிலையை அடைந்த சாமூதிரி, இந்தக் காலப்பகுதியில் கேரள வரலாற்றின் மையப் பாத்திரமாக உயர்ந்தார்.
சேரமான் பெருமாள் ம்றைந்த பின் தன்னாட்சி அனுபவித்த பல குடியரசுத் தலைவர்களும் பிரபுக்களும், அவரது மேன்மையையும் ஆட்சியையும் ஒப்புக்கொண்டு, சாமூதிரிக்கு கட்டணம் செலுத்தத் ஆரம்பித்தகனர்.
#திருவிதாங்கூரின் ரவி வர்ம குலசேகரனின் வீரச் செயல்கள் அவரின் புகழார்ந்த சாதனைகள், ரவி வர்மாவின் ஆட்சியை மத்தியகால திருவிதாங்கூரின் மிகச் சிறப்பான காலமாக மாற்றினாலும், அது மொத்தக் கேரள வரலாற்றில் பெரிதும் தாக்கம் ஏற்படுத்தவில்லை. ரவி வர்மா, சாமூதிரிகளையோ கோலத்திரிகளையோ விட, பாண்டியர்களுடனான தொடர்புகளிலேயே அதிகம் ஈடுபட்டிருந்தார்.
15ஆம் நூற்றாண்டில், சாமூதிரியின் கேரளத்தின் தெற்கு பகுதி — கொச்சி மற்றும் திருவிதாங்கூர் நோக்கி — தடையின்றி முன்னேற்றம், கேரளத்தின் அரசியல் ஒருங்கிணைப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், அவரது இந்த முன்னேற்றம் திடீரெனவும் எதிர்பாராத விதமாகவும் போர்த்துகீசர் வருகையால் தடுக்கப்பட்டது.
இந்தக் காலகட்டத்தில் மதத்தின் மூலம் அரசியலைப் பாதுகாத்த நம்பூதிரிமார்களின் எழுச்சியும் நடைபெற்றது. ஆனால் பெருமாள் ஆட்சியின் காலத்தில் நம்பூதிரிமார்கள் அரசியலில் இருந்த தாக்கத்தை சில அளவில் இழந்தனர். ஆனால் 9ஆம் நூற்றாண்டில், சங்கராச்சாரியரின் ஆன்மிக வெற்றியின் விளைவாக , மீண்டும் தங்கள் முக்கியத்துவத்தைப் பெற்றனர். தாங்கள் கடைப்பிடித்த கடுமையான, தனித்துவமான சடங்குகள் சங்கராச்சியர் வகுத்தவையெனக் கூறினர். நடுக்கால முழுவதும் அரசியலில் அவர்கள் பெரும் செல்வாக்கைச் செலுத்தினர்.
இந்தக் காலம் மற்றொரு காரணத்தாலும் முக்கியமானது — கேரளமும் தமிழ்நாட்டும் இடையிலிருந்த நெருங்கிய தொடர்பு இத்துடன் முடிவடைந்திருந்தது. கேரளம் அண்டை நாடுகளிலிருந்து சில தனித்துவமான அம்சங்களால் வேறுபட்டது. காணம் முறை நில உரிமை, சிதறிய குடியிருப்புகள் கொண்ட கிராமங்கள், மருமக்கத்தாயம் எனும் மரபுவழி உரிமைமுறை ஆகியவை நடுக்காலக் கேரளத்தின் சிறப்பம்சங்களாக இருந்தன. இந்தக் கலாச்சார ஒருமைப்பாடு படிப்படியாக பல ஆண்டுகளில் உருவாகி, இக்கால முடிவில் முழுமையடைந்தது.
இரண்டாம் பகுதி கேரள வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்வொன்றால் தொடங்குகிறது — போர்த்துகீசர்கள் காலிக்கட்டில் வந்தடைதல். அவர்கள் சாமூതിരியின் விரிவாக்கக் கொள்கையைத் தடுத்து, கொச்சின் ராஜாவின் உதவியுடன் சாமூதிரியின் பிரதேசங்களைத் தாக்குவதாகவும் மிரட்டினர். ஆரம்பத்தில் இந்நாட்டில் வாழ்வதற்கு, வர்த்தகம் செய்வதற்கான உரிமைக்கே போராடிய போர்த்துகீசர்கள், ஆஃபோன்சோ டி அல்புகெர்க் ஆட்சி காலத்தில் ஆற்றலும் புகழும் பெற்றனர். கடலின் ஆதிக்கம் மற்றும் மலബாரின் பல அரசர்களுக்கும் தலைவர்களுக்கும் மேலான ஒரு வகை பொது கட்டுப்பாடு தங்களுக்கு உண்டு எனக் கோரினர். இந்தக் கோரிக்கைகளை சாமூதிரி எதிர்த்ததால், இரு தரப்பினருக்கும் இடையில் நீண்டகாலப் போர் ஏற்பட்டது. இதன் முடிவில் போர்த்துகீசர்கள் தோல்வியை ஒப்புக்கொண்டு தங்கள் கோரிக்கைகளை கைவிட்டனர்.
சாமூதிரி கடலில் போர்த்துகீசர்களின் ஆதிக்கத்தை எதிர்த்துக் கொண்டிருக்கும் வேளையில், ஐரோப்பாவில் இருந்து புதியவர்கள் டச்சுக்காரர்கள் போர்த்துகீசர்களின் வர்த்தக ஏகாதிபத்தை சவாலிட்டனர்.
17ஆம் நூற்றாண்டில் மலபார், இந்த இரு ஐரோப்பிய சக்திகளின் போர்க்களமாகி, அதன் விளைவாக போர்த்துகீசர்களின் வீழ்ச்சி ஏற்பட்டது
1729ஆம் ஆண்டு திருவிதாங்கூரில் மார்த்தாண்ட வர்மர் ஆட்சிக்கு வந்தது, கேரள அரசியலின் மையத்தை வடபக்கத்திலிருந்து தெற்கிற்கு மாற்றியது. அவருடைய ஆட்சி, மத்தியக்காலத்தின் முடிவின் தொடக்கமாக அமைந்தது.
சக்திவாய்ந்த நாயர் செல்வந்தர்களை முற்றிலும் அழித்தல், வலுவான மத்திய அரசை நிறுவல், அண்டை நாடுகளையும் சிற்றரசுகளையும் இணைத்தல் ஆகியவை இந்த திறமையான மன்னரின் குறிப்பிடத் தகுந்த சாதனைகளாகும்.
கேரளத்தை அரசியல் ரீதியாக ஒன்றிணைக்க வழிவகுத்திருக்கும்; ஆனால் மைசூர் படையெடுப்பு இந்த விருப்பத்தை முறியடித்தது. இதுபோலவே, இரு சந்தர்ப்பங்களிலும் வெளிநாட்டவர்களின் தலையீடு கேரளத்தின் ஒருங்கிணைப்பைத் தடுத்தது.
மைசூர் படையெடுப்பு சாமூதிரி மற்றும் கோலத்திரி வம்சங்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக, மலபாரில் நாயர்களின் இராணுவ மற்றும் குடியாட்சி அமைப்பையும் முடிவுக்குக் கொண்டுவந்தது. பின்னர், பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பு நாயர் செல்வந்தர்களுக்கும் மத்தியகாலத்துக்கும் இறுதியான அழிவை வழங்கியது.

0 Comments:

Post a Comment