10 Aug 2025

சேர பெருமாளின் மதம் !

 

பெருமாளின் மதம் குறித்து நம்ப  முடியாத சில மர்ம கதைகளும்  சூழ்ந்துள்ளது. கிறிஸ்தவர்கள், அவரைத் தங்கள் ஆரம்பக் கால மதமாற்றியவரில் ஒருவராகக் கூறுகிறார்கள்; முஸ்லிம்கள், இந்திய நிலத்தில் மதம் மாறிய முதல் நபராகக் கருதுகிறார்கள்; அதே நேரத்தில் இந்துக்கள், அவரைத் தங்கள் புனிதர்களில் ஒருவராக மதிக்கிறார்கள். சில அறிஞர்கள், அவரது ஆட்சிக் காலத்தின் இறுதியில் அவர் ஜைன மதத்தைத் தழுவியதாகக் கருதுகிறார்கள்.

அவர் முதலில் சிவபக்தராக இருந்தது சந்தேகமற்றது. சேக்கிழாரின் குறிப்பின்படி, சிறு வயதிலிருந்தே பெருமாள் நடராஜரின் வடிவில் சிவபெருமானைப் பூஜிப்பதில் பெரும்பாலும் நேரத்தைச் செலவிட்டார். பெரியபுராணத்தில் வரும் இரண்டு கதைகள் ஒரு துவைப்பாளியை, அவர் சிவனை நினைவூட்டியதால் வணங்கியது, மற்றும் வழக்கம்போல் நடனமாடும் சிவனின் சிலம்பொலி வழிபாட்டின் போது கேட்டிடாததால் தன்னைத் தானே பலியிட முயன்றது. அவர் இளமையில் கொண்டிருந்த அதீத பக்தி மற்றும் கடவுள் விருப்பத்தை வெளிப்படுத்துகின்றன.


ஆனால் கேரளோற்பத்தி மற்றும் தொஃபுத்-உல்-முஜாஹிதீன் போன்ற முஸ்லிம் நூல்கள், அவர் வாழ்க்கையின் இறுதியில் இஸ்லாமை ஏற்றுக்கொண்டு, மெக்கா நோக்கிப் புனித யாத்திரை சென்றதாகவும் அங்கு முஸ்லிம் புனிதராக இறந்ததாகவும் கூறுகின்றன. தொஃபுத் கூறுவது, "மலபாரின் முஸ்லிம்களிடம், அந்த மன்னன் இரவில் கனவில் நிலவு பிளவுபட்ட அதிசயக் காட்சி கண்டதால், நபியைச் சந்திக்க மெக்காவுக்குப் பயணமானார்; இது நபியின் காலத்திலேயே நடந்தது" என்ற நம்பிக்கை உள்ளது. கலிக்கோட்டின் முஸ்லிம்கள், பெருமாள் மெக்காவில் நபியைச் சந்தித்தார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் 9ஆம் நூற்றாண்டில் நபி இறந்திதுருக்க  300 ஆண்டுகள் கழித்து அவரைச் சந்திப்பது சாத்தியமற்றது.  கேரளோற்பத்தி, அவர் கி.பி. 355-இல் மெக்கா சென்றதாகக் கூறுகிறது; இது நபியும் இஸ்லாமும் தோன்றுவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பாகும். எனவே, அந்த "மதம் மாறிய மன்னனும், இஸ்லாமின் தூதருமான நபியும் சந்தித்தது" என்பது முஸ்லிம்களின் பக்தி சார்ந்த கற்பனையாக இருக்க வேண்டும்.

இப்னு பதூதா (1342) மலபாரின் முஸ்லிம்களைப் பற்றிய விரிவான பதிவுகளைத் தந்து, அதிசயங்கள் ஏற்பட்டதாகக் கூறப்படும் மதமாற்றக் கதைகளைச் சொல்கிறார். ஆனால் அவர் எங்கும் "நிலவு பிளந்த காட்சி" அல்லது 9ஆம் நூற்றாண்டில் மலபாரின் மன்னன் மதம் மாறியது பற்றிய கதையைச் சொல்லவில்லை. அதற்கு 100 ஆண்டுகளுக்கு பிறகு அப்துர் ரசாக் கலிக்கோட்டைச் சென்றபோது, சாமூதிரியை இஸ்லாமில் மாற்றுவதே நோக்கம் இருந்தது என்கிறார். 1974 ஆம் ஆண்டு மசூதி புதுப்பிக்கப்பட்ட பின்னர் 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இந்த வரலாறு மீண்டும் தலைதூக்கத் தொடங்கியது. 2005 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் இந்த மசூதியைப் பார்வையிட்டபோதும், பிரதமர் நரேந்திர மோடி 2016  ஆம் ஆண்டு சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் அஜீஸ் அல் சவுத்துக்கு தங்க முலாம் பூசப்பட்ட மசூதியின் பிரதியை பரிசளித்தபோதும் இது ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.  இந்த சம்பவங்களுக்குப் பிறகு, சேரமானாக மம்மூட்டி நடிக்கும் மலையாளப் படமும் 2014 இல் அறிவிக்கப்பட்டது, ஆனால் அதன் பிறகு படத்தின் தொடக்கம் குறித்த எந்த செய்தியும் வரவில்லை. 


பாதி நூற்றாண்டிற்கு பின்னர் போர்த்துகீசியர்கள் கோழிக்கோட்டில் வந்தபோது அந்தக் கதையை கேட்டனர். இருந்தாலும், 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பக்தியுள்ள முஸ்லிமான செயினுத்தீன், அந்தக் கதையை முழுவதும் மறுத்தாலும், அதிசயக் காட்சியை விவரிக்கிறார்; 18ஆம் நூற்றாண்டில் விஸ்சர், அக்கதையை புரக்கணிக்கிறார்.  எனவே, அந்தக் கதை மிகவும் பின்னரே பிரபலமானதாகத் தெரிகிறது.

9ஆம் நூற்றாண்டு மலபாரில் பௌத்தம் வேகமாக வீழ்ச்சி அடைந்த காலம். எனவே, பெருமாள் அதை ஏற்றுக்கொண்டு, ஏற்கனவே வீழ்ச்சியடைந்த மதத்தின் ஆதரவாளராக இருந்திருக்க வாய்ப்பு இல்லை.


பெருமாள் கிறிஸ்தவ மதம் ஏற்றார், மேலும் மயிலாப்பூரில் புனித தோமையார் திருத்தலத்துக்குச் சென்றார் என்ற கருத்தும் நிலைநிறுத்தமுடியாதது. இந்தக் கதையை ஆதரிக்கும்  இரண்டு எழுத்தாளர்கள்—டீ கௌட்டோ மற்றும் பாரியா-டி-சோசா  ஒருமித்தமில்லாமல் கூறுகின்றனர். டீ கௌட்டோ, அதை  4ஆம் நூற்றாண்டிலா அல்லது 6ஆம் நூற்றாண்டிலா நடந்தது என்பதை உறுதியாகச் சொல்லவில்லை. பாரியா-வை-சோசா, பெருமாள் இயேசு பிறந்தபோது பேத்லகேமுக்கு வந்த மூன்று மன்னர்களில் ஒருவராக இருந்தார் எனக் கூறுவதால், அந்தக் கதையின் அடிப்படையே குலைக்கிறார்.


இளமையில் சிவபெருமானின் மீது கொண்டிருந்த அவரது ஆழ்ந்த பக்தியே, அவர் வேறு மதம் ஏற்றிருக்க முடியாது என்பதற்கான உறுதியான சான்று. அவரது ஆட்சியின் இறுதியில் அவர் ஒரு புனித யாத்திரைக்கு சென்றது உண்மை. அவர் நடன வடிவில் சிவனை வணங்கியதானது, பெரியபுராணத்தில் கூறியபடி, அவர் மெக்காவோ மயிலாப்பூரோ அல்ல, சிதம்பரத்திற்குச் சென்றார் என்பதைக் உறுதிப்படுத்துகிறது.

 

0 Comments:

Post a Comment