18 Oct 2022

நெல்லையப்பர் கோயில் பெயர் வரலாறு!

 

பெருவாரி தென் இந்திய கோயில்கள் கடல், மலை மற்றும் காடுகள் அருகில் இருப்பதாகவே உள்ளது. பழம் நாட்களில், மனிதர்கள் மரங்களில் கடவுள் இருப்பதாக எண்ணி மரங்களை வணங்கி வந்துள்ளனர்.  அதன் நீட்சியாகவே உயரமான கோயில்கள் உருவாகி இருக்கலாம் என்கின்றனர். பிற்காலம் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு மரம், ஸ்தலவிருக்ஷங்கள்  ஆகின.

நெல்லையப்பர் ஆலயம் உருவான காலம் பற்றி ஒரு திட்டமான தகவல் இல்லை.  ஆனால்  ஒரு கோயிலின் காலதின் வரலாறு, இலக்கியம் மற்றும் பக்தி கிரந்தங்களில் உள்ளவையோ அல்லது கட்டிட கலையின் அமைப்பை வைத்தோ கண்டு பிடிக்க இயலும். அவ்வகையில் நெல்லையப்பர் கோயில் காலம் ஏழாம் நூற்றாண்டு எனக் கணக்கிடுகின்றனர்.

 

இக்கோயிலின் கற்பகிரகத்திலுள்ள சிறு விக்கிரகம்  மற்றும் அரை மண்டபம் , ஏழாம் நூற்றாண்டில் சேந்தன் மாறன் உருவாக்கியுள்ள ’மலையாண்டி குறிச்சி’ கோயில் மாதிரி இருக்கிறது என்கின்றனர். அதனால் இந்த இரு கோயில்களும் ஒரே காலயளவில் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது..

நெல்லையப்பர் கோயில், காந்தியம்மை மற்றும் சிவனுக்கும் என  850 நீளம் 756 வீதி என்ற அளவில் சமமாக பிரிக்கப்பட்ட இரட்டை கோயில் ஆகும்.  இக்கோயிலில் ஏழாம் நூற்றாண்டில் வணங்கிய மூர்த்தி  மூல மகாலிங்கம் ஆக இருக்கவே வாய்ப்பு உள்ளது  என்கின்றனர்.

திருவிளையாடல் மற்றும் ரெட்டை புலவர் வென்பாவில், இக்கோயிலின் மூல மூர்த்தி மூங்கில்களின் முத்து  என்ற பொருளில் வெய்முத்தார் என்றே குறிக்கப்பட்டு உள்ளது.  இக்கோயில் மூர்த்திக்கு அரிகேசரி பராக்கிரம பாண்டியன் ஒரு தங்க கிண்ணம் கொடுத்தாக  குறிப்பு உள்ளது .

13 ஆம் நூற்றாண்டில் மூங்கில் காட்டுக்கு இடையில் இருந்து வந்தால் வெய்முத்தார் அல்லது வேணு வனநாதர் ன்றும் அழைக்கப்பட்டுள்ளார். 17 வது நூற்றாண்டில் எழுதப்பாட்டகிளை வீடு தோது’ என்ற குறிப்பிலும் வெய்முத்தார் என்றே குறிப்பிட்டு உள்ளனர்.

 

இன்று அழைக்கும்  நெல்லையப்பர் என்ற பெயர் சுந்தர பாண்டிய 1 குறிப்பில் மட்டுமே உள்ளது. மற்றய பல குறிப்புகளில் இம்மூர்த்தியை

 திருநெல்வேலி தேவர்

திருநெல்வேலியுடைய தம்புரான்

திருநெல்வேலியுடைய நாயனார்

வேணுவனனேஸ்வரர் ,  வ்ரிகிவரிஸ்வரர், மற்றும்

திருகம்மகொட்டடு ஆளுடைய நாச்சி என்றே அழைழைத்துள்ளனர்.

 

மாறவர்மன் கொனெரின்மை கொண்ட பெருமாள் சுந்தர பாண்டியன் குறிப்பில்பூசம் பிரண்ட திருனெல்வேலி பெருமால்என்று அழைத்துள்ளனர். 17 வது நூற்றாண்டில் ஆட்சி செய்த மாறவர்மன் பொன்னின் பெருமாள் என்றும் அழைத்துள்ளார். அவ்வகையில் நெல்லையப்பர் காந்திமதி என்ற கடவுள் பெயர்கள் பிற்பாடு கொடுக்கப்பட்டது என்றே முடிவாகுகிறது.

 

அதே போல கோவிலில் கட்டிட அமைப்பை அவதானிக்கையில் அரமணிமண்டம் வரைநிற சீர் நெடுமாறன்’ கட்டியிருக்க வேண்டும் என்கின்றனர். மணிமண்ட இசை தூண்கள் மற்றும் நாயகமன்னர்கள் காலத்தையது என்கின்றனர்.

 

எப்படி இருந்தாலும் ஒரு சிறு மூர்த்தியுடன் நிலைகொண்ட கோயில்  பாண்டிய காலம் துவங்கியே ஆரம்பிக்கப்பட்டாலும் நாயகக்க காலத்தில் நிறைவு பெற்றுள்ளது.

1 comment:

  1. நன்றி மேம், அருமையான தகவல்கள் அடங்கிய போஸ்ட்...

    ReplyDelete