உலகெங்கிலும், வாழும் சமூகத்தின் நம்பிக்கையின்படி கணவரை இழந்த பெண்களை வித்தியாசமாக அவலனிலையில் நடத்தத்துகின்றனர். இவர்களை விதவைகள் என பொதுவாக அழைக்கின்றனர். விதவை என்ற வார்த்தை சம்ஸ்கிருதம் மொழியிலுள்ள வித்வா என்ற வார்த்தையில் இருந்து வருகிறது. இதன் பொருள் புரக்கணிக்கப்பட்டவர்கள் என்பதாகும். இந்தியாவில், இன்னும் மோசமாக நடத்தப்படுகின்றனர். மாமியார், உறவினர்கள் மற்றும் தன் சொந்த குழந்தைகள் போன்ற குடும்ப உறுப்பினர்களால் பாதிப்பிற்கும் உள்ளாகும் இழிய நிலையில் பல பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தில் துரதிர்ஷ்டவசமான நபராக கருதப்படுகிறவர்கள் விதவைகள் தான். துக்க சடங்குகள் என்ற பெயரில் உடைகளில் கட்டுப்பாடு, அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்த தடை, வளையல் அல்லது மூக்குத்தி, பூ, குங்குமம் மற்றும் நகைகள் அணிய தடை, திருமணம் போன்ற சமூகக் கூட்டங்களைத் தவிர்க்க செய்தல், கோயில்களில் அனுமதிக்காது இருப்பது என பல பல பிரச்சினைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் எதிர்கொள்ளும் சூழலில் தான் தற்போதும் உள்ளனர்.
விதவைகள் ஒரு துறவியைப் போல வாழ்க்கையை வாழ வேண்டும், புதிய ஆடை, நல்ல உணவு, பண்டிகைகளை புறக்கணித்தல் போன்ற சமூக ஒடுக்குமுறையில் இருந்தனர், இப்போதும் இருக்கின்றனர்.
1829 இல் வில்லியம் பென்டிங்க் பிரபு என்பவரால் சதி வழக்கம் ஒழிக்கப்பட்டது. அதன் பிற்பாடு ஜூலை 16, 1856 ல் விதவைகளின் மறுமணச் சட்டம், இயற்றப்பட்டது. இந்த சட்டம் விதவைகளின் மேம்பாட்டுக்கான ஒரு சமூக சீர்திருத்தமாகும் ஒரு பெண் தனது முதல் திருமணத்தின் போது இருந்த அனைத்து உரிமைகளையும் பெறச் செய்தது இச்சட்டம். இச்சட்டம் பணக்கார இந்து குடும்பங்களில் நடைமுறையில் இருந்த மறுமணத்தை சட்டப்பூர்வமாக்கியது. விதவை மறுமணம் என்பது தாழ்த்தப்பட்ட அல்லது ஏழை மக்களிடையே பரவலாக இருந்ததையும் மனதில் கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் விதவைகளுக்கு திருமணம் செய்ய போகும் ஆண்களிடம் இருந்து சட்டப்பூர்வ பாதுகாப்பையும் உறுதி செய்தது.
19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஏற்பட்ட முக்கிய சமூக மாற்றங்களில் முன்னோடியாக விளங்கிய ஒன்றாகும். பெண்களின் நேர்மை மற்றும் ஒழுக்கத்தைப் பாதுகாக்க இதுபோன்ற பல சட்டங்கள் நாட்டில் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் 2021 ஆம் ஆண்டிலும் விதவைகளின் துயர்
நீங்கியதா என்றால் இல்லை என்பதே உண்மை.
விதவையின் நிலை
2010 துவங்கி சர்வதேச, விதவைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கண்டறிந்து, உதவவும், அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அங்கீகரிக்கப் பட்ட தினமாகும் விதவைகள் தினமான டிசம்பர்
21. இந்தியாவில் 40
முதல் 55 மில்லியன் பெண்கள் கணவனை இழந்த நிலையில் வாழ்ந்து வருகிறதாக கணக்கெடுக்க பட்டுள்ளது.
விதவைகள்
மறுமணச் சட்டம் 1956,
சொத்தில் பெண்களுக்கு சமமான பங்கைப் பெற அனுமதித்தாலும், விதவைப் பெண்கள் கணவர் வழி சொத்து உரிமைகளை பெற சட்ட உரிமைகள் பெறாத நிலையில் தான் வாழ்ந்து வருகின்றனர். வாழ்க்கை ஆதாரத்திற்கான பணமில்லாமல், ஒரு விதவை தனித்து விடப்படுகிறாள், அவள் தன் தந்தைவழி வீட்டிற்கும் திரும்ப அனுமதிக்கப்படுவதில்லை.
”விருந்தாவனத்தில் விதவைகள் ஹோலி கொண்டாடுவதை வரவேற்கிறோம்” என சமீபத்தில் கேட்ட குரல் "விதவைகள் நிலை இன்றும் மாறவில்லை என்பதையே குறிக்கிறது. town of widow
இந்தியாவின் புனித நகரம் என்று அழைக்கப் பட்டிருந்த விருந்தாவனம் இந்துக் கடவுளான கிருஷ்ணரின் பிறப்பிடமாக நம்பப்படுகிறது. நகரத்தில் 4,000க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. ஏறக்குறைய 60,000
ஆயிரம் மக்கள்தொகை கொண்ட இந்த நகரத்தில் 20,000
விதவைகள் வாழ்கின்றனர் என்று கணக்குகள் சொல்கிறது. தற்போது விருந்தாவனம் 'விதவைகளின் நகரம்'என்ற பெயரில் மாறியுள்ளது. குடும்பத்தால் கைவிடப்பட்ட ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த நகரத்தில் வறுமையில் பரிதாபமான வாழ்க்கை வாழ்ந்து வருவதை காணலாம். வறிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட விதவைகள் தங்கள் மரணம் வரை வாழும் இல்லங்கள், தங்குமிடங்கள் மற்றும் நெருக்கடியான குடியிருப்புகள் நிறைந்த நகரமாக மாறியுள்ளது பிருந்தாவன்.
அனைவருக்கும் கவுரவமான வாழ்க்கை அடிப்படை உரிமை என்று கூறியுள்ள அரசியல் அமைப்பு கொண்ட நாட்டில் தான் விதவைளுக்கான தனி ஊரும் அமைத்து வைத்துள்ளனர். பல ஆண்டுகளாக இந்த விதவைகளில் பெரும்பாலோர் வறுமை மற்றும் தனிமையில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மூடநம்பிக்கை கொண்ட உறவினர்கள்; விதவைகள் துரதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாகவும், அவர்களின் கணவர்களின் மரணத்திற்கு காரணமாக
பெண்களைக் குற்றம் சாட்டும் நிலையும் உள்ளது. வயது முதிர்ந்த நிலையிலும், தனது உணவைத் தாங்களே சமைத்து, வருமானத்திற்கு என பிச்சை எடுக்கும் நிலையில் தான் தள்ளப்பட்டுள்ளனர். வாழ்க்கையின் பெரும்பகுதியைச் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.
அனைவருக்கும் கவுரவமான வாழும் உரிமை என்று கூறிய அரசியலமைப்பு சட்டம் இப்பெண்களுக்கு கொடுக்கும் பதில் தான் என்ன?
பிருந்தாவனத்தில் உள்ள பெண்களின் மோசமான வாழ்க்கை நிலைமைகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குப் பிறகு, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துமாறு இந்திய உச்ச நீதிமன்றம் அரசு மற்றும் சிவில் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சமூக-பொருளாதார நிலைமைகள் குறித்த தரவுகளை சேகரிக்க உத்தரபிரதேச அரசு இப்போது ஒரு குழுவை நியமித்துள்ளது.
2020 தொகுதிக்கு வருகை தந்த ஹேமா மாலினி, விருந்தாவனத்தில் சுமார் 40,000 விதவைகள் நிரம்பி வழிவதாகவும் தனது தொகுதிக்குள் இனி விதவைகள் வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியதாக விமர்சனங்களுக்கு உள்ளானார். ஹேமாலினியின் கூற்றுப்படி மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் ஏற்கனவே நல்ல கோவில்கள் இருக்கிறது, அவர்கள் அங்கு தங்கலாம் என்றும் மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் இருந்து மதுராவில் வரும் விதவைகளின் வருகையை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
கிருஷ்ணர் பிறந்த ஊரில் இறந்தால் மோட்சம் கிடைக்கும்
என்ற நம்பிக்கையே விதவைகளை மதுரா விருந்தாவனுக்கு கொண்டு சொல்லப்படுகிறது.
இந்தியாவில் விதவைகளுக்கு ஆன சட்டங்கள் இருப்பினும் அதை நடைமுறைப்படுத்தும் சமூக சூழலும் இல்லை; இதை சிறப்பாக முன்னெடுக்க நேர்மையான அரசு அதிகாரிகளும் இல்லை.
ஹேமாலினி போன்ற ஒரு பெண் சட்ட மன்ற உறுப்பினரால் விதவைகளை, குடும்பங்கள் புரக்கணிக்க கூடாது என்று சொல்லக்கூடிய அறிவு இல்லை, அரசு உதவிகளை உயர்த்த வேண்டிய தேவையை பற்றி சொல்லவில்லை. புரக்கணிக்க பட்ட பெண்களை பாதுகாக்க வேண்டிய அரசின் கடமைகளை பற்றி எடுத்து சொல்லாது, அதற்கு பதில் நாடு எங்குமுள்ள கோயில்களில் விதவைகளுக்கு அடக்கலம் கொடுக்க பணிகிறார்.
விதவை என்ற வார்த்தையை கைபெண் என்று மாற்றுவதாலும் விதவைகளுக்கு எந்த நலனும் கிடைக்கபோவதில்லை. விதவை பெண்கள் பாதுக்கப்புக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை அரசின் பக்கம் இருந்து வருவது மிகவும் அவசியம். வேலை வாய்ப்புகளில் தொழில் புரிய முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். வெளிநாடுகளில் என்பது போல கணவன் இறந்தால் சொத்தின் பங்கு மனைவிக்கு வந்தடைய எளியசட்ட முறைகள் அவசியம். பெண்கள் சுயசார்பாக நிற்கும் வரை எந்த முன்னேற்றவும் பெண்கள் வாழ்க்கையில் வரப்போவதில்லை.
விதவை, கைபெண் என்ற வார்த்தை-மாற்ற மாஜிக்குகளில் நம்பாது தங்கள் பார்வையிலும் மனநிலையிலும் உருவாகும் மாற்றங்கள் ஆக்கபூர்வமான செயல்பாடுகளும் சுயசார்பான வாழ்க்கை முறைகள் மட்டுமே சமூக அவலங்களில் இருந்து காப்பாற்ற வலுவானது.
http://www.francescabraghetta.com/en/2018/03/04/la-citta-delle-vedove/
https://www.inuth.com/india/international-widows-day-the-city-of-widows-in-india/
0 Comments:
Post a Comment