தாலம் வெளியீட்டில், எழுத்தாளர் மற்றும் ஊடகவியாளர் கிருஷ்ண கோபால் எழுத்தில் 2018 ல் வெளிவந்த திரைப்படங்கள் பற்றிய புத்தகம் ஆகும் ”தமிழன் சொல்ல மறந்த காட்சி மொழி”.
சினிமாவை பற்றிய பல முன்னணி இதழ்களில் பிரசுரிக்கப் பட்ட கட்டுரைகளில், தேர்ந்தெடுத்த பதினோரு கட்டுரைகள் அடங்கியது இப்புத்தகம்.
திருவனந்தபுரத்தில் நடக்கும் உலகத்திரைப்படம் நிகழ்வு பற்றிய நல்லதொரு அறிமுகம்
தந்துள்ளார் ஆசிரியர். பாலாவின் பரதேசி திரைப்படம் அதன் ஆதாரமான நாவல் எரியும் பனிக்காட்டை
முன்நிறுத்தி, பாலாவின் கபட முகத்திரையை கிழித்துள்ளார். அடுத்த கட்டுரை தமிழரான மலையாளத்
திரைப்பட தந்தை ஜெ.சி டானியேல் பற்றிய திரைப்படம் குறித்தது. திரைப்படத்தின் பின்புலன், அன்றைய வரலாறு கலந்த
ஒரு சிறப்பான கட்டுரை.
அடுத்தும் திருவனந்தபுர உலகத்திரைப் படவிழாவில் வெளியிடப்பட்ட திரைப்படங்கள் பற்றிய அரிய தொகுப்பு. உலக சினிமாக்களின் உருவம், தயாரிப்பு அதன் தாக்கம்
உள்ளடங்கி விரிவான பல தகவல்கள் அடங்கிய கட்டுரை
இது.
தமிழ் இயக்குனர்களின் காட்சி மொழி சார்ந்த வளர்ச்சி இன்மையை, தோல்வியை அதன் காரணத்தைப்பற்றியும்
குறிப்பிட்டுள்ளார் அடுத்த கட்டுரையில்.
பல சில முக்கியமான ஆவணப்படங்களை பற்றி
எடுத்துரைத்த கட்டுரை. முக்கியமாக எச்சம் மிச்சம் என்ற பெயரிலுள்ள ஆவணப் படத்தில் தேவையும்
ஆக்கவும் அதன் சமூகத்தேவை பற்றி மிகவும் விரிவாக சொல்லியுள்ளார்.
https://www.youtube.com/watch?v=YFxd8HKzrlg&t=4s (ஆவணப் படம்)
அடுத்து ஐரோப்பிய படங்களல்லாத உலகத்திரைப்படங்கள்
ஜப்பானிய மற்றும் பல உலக மொழியிலுள்ள திரைப்படக்களை
நமக்கு அறிமுகப்படுத்துகிறார் எழுத்தாளர் கிருஷ்ணகோபால்.
கேரளாவில் ஆலயமாக மாறிய திரைஅரங்கு
பற்றி ஒரு சுவாரசியமான கட்டுரை உள்ளது. அதில் தமிழர்கள் மேல் மலையாள சினிமா தங்கள் காட்சி மற்றும் கருத்து கதை ஊடாக செலுத்தும்
காள்ப்புணர்வை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
செழியனின் சினிமாவைப் பற்றிய புத்தகம் பற்றிய ஒரு அறிமுகம் கிடைக்கிறது இப்புத்தகம்
வழியாக.
கடைசி பாடத்தில் மலையாள திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷனன் பற்றிய ஒரு சிறப்பான கட்டுரை இடம் பெற்றுள்ளது.
இப்படியாக திரைப் படங்கள் சார்ந்த கலைத்துவமான
, மற்றும் சமூகம் சார்ந்த மனித நேயம் கொண்ட
பார்வை இப்புத்தகத்தில் உண்டு. சினிமாவை ஆக்கபூர்வமாக துதிபாடல்கள் இல்லாது சரியாக
அணுகிய நல்ல புத்தகம்.
புத்தக வடிவமைப்பு, அட்டைப்படம் சிறப்பாக இருந்தது. எழுத்தும் எளிய நடையூடாக
சிறப்பான ஆக்கபூர்வமான கருத்துக்களை பதித்துள்ளார் புத்தக ஆசிரியர்.
0 Comments:
Post a Comment