சென்னையில் பொது பார்க்குகளிலும் மற்றும் மெரினா பிச் போன்ற பொது
இடங்களில் தன்னை மறந்த நிலையில் முத்தம்
பரிமாறிகொண்டு இருக்கும் ஜோடிகளை கண்டு சமூக ஆவலரான தோழியிடம் பகிர்ந்த போது; முத்தமிட்டு கொள்ள கணவன் மனைவிக்கே வீட்டில் இடமில்லை என்ற சூழலையும் எடுத்துரைத்தார்கள். சமூக நல்லொழுக்கத்தில் நம் உணர்வுகளை பங்கிட இடமும் வேண்டும் என்ற அக்கறையுடன் ஜோடிகளுக்கு தனி இடம் ஒதுக்கி (பறவைகளுக்கு சரணாலயம் என்பது போல்) கொடுக்கலாம். நம் நாட்டில் தலைவர்கள் சமாதிக்கு தான் பல நூறு ஏக்கர் இடங்களை பாழ்படுத்துகின்றனர்.
யானைகளுக்கு கூட புத்துணர்வு முகாம் அமைத்து கொடுக்கப்படுகின்றது. ஆனால் சாதாரண மனிதர்கள்
உணர்வுகளை பரிமாறி கொள்ள இடம் இல்லாது தத்தளிக்கின்றனர். வரும் தலைமுறை இதை கண்டு கெட்டு விடுமோ என பண்பாட்டு காவலர்கள் பயப்பட தேவையில்லையே. ஆனால் இதே பண்பாட்டு காவலர்களால் மேடையில் நடிகர்கள்
மற்றும் பெரும் புள்ளிகள் பரிமாறிகொள்ளும் தறிகெட்ட செயலை சகித்து கொள்ள இயல்கின்றது.
ஆனால் சமூகம் ஏதோ ஒரு மன கொந்தளிப்பில் தத்தளிப்பது தான் இது போன்ற சம்பவங்கள் நமக்கு
உணர்ந்தும் செய்தி.
. முதம் நெற்றியில் கன்னத்தில் உதட்டில் என கொடுக்கும் இடம் பொறுத்து
அதன் அர்த்தவும் வகையும் மாறுபடுகின்றது. இருப்பினும் அன்பை வெளிப்படுத்த மனிதன் இயல்பாக
தேர்ந்த ஒரு குறியீடு தான் முத்தம் என்பதில் சந்தேகம் இல்லை. மனிதனின் மெல்லிய உணர்வை
வெளிப்படுத்த பயண்படுத்த வேண்டிய முத்தம் பொது போராட்டத்தில் முன் வைத்த போது அதன்
அர்த்தவும் மாண்பும் தவறுதலாகி விடுமோ என்று அச்சம் உள்ளது. சமூக அக்கறை கொண்டு முத்தம் பற்றிய விழிப்புணர்வு
மக்களுக்கு மிகவும் தேவை. முத்தம் என்பது இளைஞர்களுக்கான மட்டுமான ஆயுதமல்ல இது உலகலாவிய சகல மனிதனின் ஆயுதமே. ஒரே
முத்தம் தான் அன்பையும், காமத்தையும், காட்டி கொடுப்பையும் உணர்த்துகின்றது. யேசுவின் வரலாற்றை படித்தால் முப்பது காசுக்காக
முத்ததால் காட்டி கொடுத்த யூதாசை காண்கின்றோம். யேசுவின் காலடியில் இருந்து தன் பாபத்தை
நினைத்து கண்ணீர் விட்டு அழுது முத்தமிட்ட ஏழை பெண்ணை காண்கின்றோம். கேரளாவில் பக்தர்களுக்கு
முத்தமிட்டு அணைக்கும் சுவாமினி அமிர்தானந்தாவையும் காண்கின்றோம்.
சரியான முத்தம்
சரியான நேரம் சரியான நபர்க்கு கொடுப்பது தான் மனித நேயம்.. மருத்துவ நீதியாக நோக்கினால்
முத்தம் மன அழுத்தம் மனச்சோர்வு, போன்ற பல நோய்களுக்கு மருந்தாகுகின்றது என்று மருத்துவர்கள்
கூறுகின்றனர். முத்தம் பற்றிய சரியான விழிப்புணர்வு தேவை. விழிப்புணர்வு தேவை என்ற
காரணத்தால் தான் நம் முன்னோர்கள் மக்கள் செல்லும் ஆலய முகப்பில் சில படங்கள் மூலமாக
பல மெல்லிய உணர்வுகளை பற்றி வடித்து வைத்திருந்தனர். வல்லுறவுக்காக மற்றவர் விரும்பாத
நேரம்போக்கான விளம்பர நோக்கம் கொண்ட முத்தம்(ஹாலிவுட்
நடிகர் சில்பா ரெட்டிக்கு கொடுத்த முத்தம்) பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.http://www.youtube.com/watch?v=rfw0vhoAkwE
நவீன யுகத்தில் குடும்பம் என்ற அமைப்பு உடைந்து கொண்டிருக்கும் இந்த காலயளவில், எப்போதும் ஏதோ ஒரு தொழில்நுட்பத்தோடு உரையாடி கொண்டிருக்கும் நம் இளைஞர்களுக்கு முத்தம் பற்றிய புரிதல் வெறும் காமத்தோடு முடிந்து விடக்கூடாது. ஒரு பாலியல் தொழிலாளியான ஜமீலா தன் புத்தகத்தில் கூறி இருப்பது “பழம் கால ஆண்களை போன்று தற்கால ஆண்களுக்கு பெண்களை பண்பாக கண்ணியமாக நடத்த தெரியவில்லை” என்பதாகும். மனிதன் விவாசாயியாக இருந்த போது மண்ணோடு மல்லிட்டு மனிதனாக இருந்தான் ஆனால் இன்று தொழிநுட்பங்களோடு வாழும் மனிதன் அடிப்படை மனிதத்தை இழந்து மிருகமாக மாறி கொண்டிருக்கின்றான் என்ற உண்மையும் உணர வேண்டியுள்ளது. இந்தியாவின் தொழிநுட்ப பூங்கக்களின் சொர்கபுரியான பெங்களூருவில் தான் நாலு வயது குழந்தையை பாலியல் வல்லுறவு கொள்ளும் அரக்கத்தனவும் அரங்கேறுகின்றது. கல்வி கண் திறக்க வேண்டிய இடத்தில் காமகண் கொண்ட முத்ததை பற்றியும் ஆராய வேண்டியுள்ளது.
தற்கால அரசியல் சமூக நெருக்கடியால் கல்வியாலும் வேலை
வாய்ப்புகளாலும் பெரிதும் பாதிக்கப்படுவது இளைஞர்கள் தான். நமது சமீப கால செய்தியில்
பல பிரச்சினைகளை எதிர் கொள்ளும் சமூகவும் இதுவே.
விலைவாசி உயர்வு, கல்வி கொள்ளை, வேலைக்கு லஞ்சம், வேலை இல்லா திண்டாட்டம், குழந்தைகள்
மனித உரிமைகள் மீறப்பட்டது, விவாசாய விளை நிலங்கள் கார்ப்பரேட் முதலாக மாறியது இப்படியே
அடுக்கி கொண்டு போகலாம்தீவைகளை எல்லாம் தள்ளி வைத்து விட்டு முத்தம் கொடுத்து போராடின இளைஞர்கள் மனநிலை எதை நோக்கி
செல்கின்றது. கலாச்சாரம், கல்வி என வாழ்ந்தாலும் அவன் அடிப்படையான உணர்வை தேடிய ஓட்டம் தானோ? அல்லது மனிதனின் மெல்லிய
உணர்வை பற்றிய புரிதல் இன்மையா? உங்கள் பதில்
தான் இனி தேவை……………
கஜுராஹோவையும்,காமசூத்ராவையும் உருவாக்கிய நாட்டில் பாலியல் கல்வி பற்றிய புரிதல் ஒருசிறிதும் இல்லை...ஒன்று பெண்ணைத் தெய்வமாக்கிப் பூசித்தல் அல்லது கீழே போட்டு மிதித்தல் என்பதுதான் நடக்கிறது. எம் எப் ஹுசைனை சாகடித்ததும் இந்தக் கலாசாரக்காவலர்கள்தாம். பெரும்பான்மையான தம்பதியர் பரஸ்பர உடல் கையாள்வது பற்றிய குறைந்தபட்ச அறிவில்லாமலேயே செத்தும் போகின்றனர்...இதன் காரணமாக இன்னொருபுறம் பாலியல் வன்முறை வெடிக்கிறது... என்ன முரண்!
ReplyDeleteMuttham pothuidathil pirar parkumbadi vendam!
ReplyDeleteஇந்தியாவில் முத்தம் ஆரம்பித்தது ... கமலஹாசன் சொன்ன கட்டிப்புடி வைத்தியமும் முத்தம் தான் ...
ReplyDelete· Top Commenter · Chennai, Tamil Nadu
ReplyDeleteமாட்டு இறைச்சிக்கு எதிராக, ஜீன்ஸ் ஆடைக்கு எதிராக இந்த கலாச்சாரக் காவலர்களின் கூச்சல் சற்று அதிகமா கேட்கிறது.
ஆடை, உணவு என தனிநபர் விசயங்களில் மூக்கை நுழைக்கும் சாதிய, மதவாத அடிப்படைவாதிகளும், கலாச்சாரக் காவலர்களும் கண்டிக்கப்பட வேண்டும்.
இப்படியே போனால் திருக்குறளில் காமத்துப்பாலுக்கும் இவர்கள் தடை கேட்பார்கள்