5 Sept 2014

ஆசிரியர் தின சிந்தனைகள்!


ஆசிரியர்கள் என்றதும் ஒரு புறம் இறைவனுக்கு ஒப்பாக மதிக்கப்பட வேண்டியவர்கள் என்றிருந்தாலும் அதே  போன்று வெறுப்பையும் வாங்கி கொண்டவர்கள் தான் ஆசிரியர்கள். ஒவ்வொரு மனிதன் மனதிலும் நேற்மறையான அல்லது எதிர்மறையான நீங்காத இடம் பெற்ற மனிதர்கள் என்பவர்கள்  ஆசிரியர்களாகத்தான் இருப்பார்கள். ஆசிரியர்கள் இவ்விதம் அன்பிற்கும் பாசத்திற்கும் வெறுப்பிற்கும் உள்ளாகுவது  அவர்கள் ஏதோ வகையில் மாணவர்களுக்கு பாதிப்பு உருவாக்குகின்றனர் என்பதால் தான்.


இன்றைய சூழலில் சமூகத்தில் வெறுக்கப்படும் இடத்தில் தள்ளப்படும் காரணம் சமூக அநீதிக்கு பல வகையில் துணை போகின்றனர் என்பதாலே. இன்றைய ஆசிரியர்கள் சமூகத்தில் பெரும் ஊதியம் பெற்று பணக்காரர்களால் வலம் வருவதால் அவர்கள் கூறும் அறம் புறம் போக்காக பல போதும் தெரிகிறது இச்சமூகத்திற்கு!. ஒரு காலத்தில் சமூகத்தில் எல்லா இன்ப துன்பங்களையும் சகித்து கல்வி என்பதை ஒரு சமூகப்பணியாக செய்த காலம் போய்; இன்று வெறும் ஊதியம் என்ற கண்ணோட்டத்தில் இத்துறைக்கு வருகை தரும் நபர்கள் பலர் உண்டு. 

ஆசிரியர் பணிக்கு ஒரு முறை தேற்வாகி விட்டால் பின்பு எந்த கவலையும் அற்று; வேலையில் இருந்து விடுதலை பெறும் வரை பல சலுகைகளை பெற்று குறைந்த நேரம் வேலை செய்து பெரிய அளவில் ஊதியம் பெறும் தொழிலாக மாறினதும் இன்னொரு காரணமே.

இன்று அரசு ஆசிரியர் என்றால் மாதம் 50 ஆயிரம் பெறும் பெரும் பணக்காரர்களாக சமூகத்தில் வாழ்கின்றனர். இதே வேலை செய்யும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் இவர்களை கொண்டு நோக்கும் போது பத்தில் ஒரு மடங்கு அல்லது நான்கில் ஒரு பங்கு என்ற நிலையில் தான் உள்ளது. இந்தியா போன்ற ஏழை சமூகத்தில் " போதும் எனக்கு கிடைத்த ஊதியம்"  என்று எந்த ஆசிரியனும் திருப்தி கொள்வதில்லை.  இரண்டு ஆசிரியர்கள் கூடும் இடத்தில் தனக்கு கிடைக்கும் ஊதியம், கிடைக்க வேண்டிய சலுகைகளை பற்றி மட்டும் பேசி கொண்டிருக்கின்றனர். ஆனால் தன்னை போன்ற தகுதியுள்ளவர்களுக்கு கிடைக்காமல் போன வாய்ப்பை பற்றி சிந்திப்பதே இல்லை. 

எவ்விதமேனும் ஒரு அரசு ஆசிரியராக வேண்டி பல லட்சம் கொடுக்க தயங்காத ஆசிரிய உலகம் பிடித்த ஊருக்கு இடம் மாற்றலாகி செல்ல அதை போன்று சில லட்சங்கள் கொடுக்க தயங்குவதில்லை. ஊழலுடன் வேலைக்கு புகிர்வதால் உண்மையாக வேலை செய்வதை விடுத்து கொடுத்த லஞ்சம் பணத்த மீட்க மறுபடியும் வட்டிக்கு பணம் கொடுக்கின்றனர்.  சமூகத்தில் முன் மாதிரியாக இருக்க வேண்டிய ஆசிரிய உலகம் பெரும் ஒழிங்கீனத்திற்கு துணை போகிறவர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். பள்ளி ஆசிரியர்கள் என்று மட்டுமல்ல கல்லூரி ஆசிரியர்கள் நிலையும் இதுவே தான். பள்ளி ஆசிரியர்கள் மாநில அரசின் ஊழலுக்கு துணை போகும் போது கல்லூரி ஆசிரியர்கள் மத்திய அரசின் நல திட்டத்துடன் இணைந்து பல ஊழல்களில் ஏற்படுகின்ரனர்.

புதிதாக உருவாகும் திருவாரூர் பல்கலைகழகம் பற்றி அனைவரும் செய்திகள் ஊடாக அறிந்ததே. பல்கலைகழகம் சிறப்பாக இயங்க ஆரம்பிக்கும் முன் கல்வி வளர்ச்சிக்கு என ஒதுக்கிய பணத்தில் ஆடம்பரமான வசிப்பிடங்கள் கட்டுவதில் முனைப்பாக இருந்துள்ளனர். ஒரு பேராசிரியருக்கு 1500 சதுர அடி வீடு என்ற அளவை தங்களது வசதிக்கு என 3000 அடி என மாற்றி கட்டிடங்கள் கட்டியிருந்தனர்.

இந்திய பொருளாதார நிலை அகோர பாதாளத்தில் விழுந்த நேரம் தான் 6ஆவது திட்ட கமிஷன் வழியாக ஒவ்வொரு பேராசிரியரும் 40ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் மாதம் வருமானம் பெரும் நபர்களாக மாறினார். ஒரு  பல்கலைகழக ஆசிரியர் பணி கிடைக்க 30 லட்சம் கைலஞ்சமாக கொடுக்க  தயங்காத பேராசிரியர் உலகம் தான் இயங்குகின்றது. \

ஆகையால் ஆசிரியர்களுக்கு வேலை பெறும் போட்டியில் சமூக அக்கறை, அறம், உண்மை நேர்மை எல்லாம் விலைக்கு விற்று வேலை பெறுவதால் உண்மையாக வேலை செய்யும் மனபாங்கையும் இழந்து விடுகின்றனர்.

அரசு விதித்த தகுதி தேற்வில் தேர்வாக தைரியம் இல்லாது மூப்பு அடிப்படையில் வேலை கேட்பது ஆசிரியரின் நேர்மையை எடுத்துரைக்க வில்லை. ஆசிரியர் பேராசிரியர் தேர்வையும் 5 வருடத்திற்கு ஒரு முறை நடத்தினால் தகுதியற்ற ஆசிரியர்கள் வெளியேறவும் தகுதியுள்ளோர் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் ஒரு முறை தேர்வு எழுதி ஜெயித்து வேலை பெற்று வாழ் நாள் முழுக்க அதன் சலுகைகளை பெற அநியாய வழியில் நுழைவதும் சலுகையை மட்டும் நம்பி தேர்ந்தெடுத்த பணியை ஒழுங்காக செய்யாது இருப்பதிலும் ஆச்சரியமில்லை!  ஆனால் இசூழல்களுக்கு ஆசிரியர்கள் மட்டும் தான் காரணமா ?//////////////////////////////////////////////////////

3 comments:

  1. ///ஆசிரியர் பேராசிரியர் தேர்வையும் 5 வருடத்திற்கு ஒரு முறை நடத்தினால் தகுதியற்ற ஆசிரியர்கள் வெளியேறவும் தகுதியுள்ளோர் ஆசிரியர் பணியை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்புள்ளது. வாழ்க்கையில் ஒரு முறை தேர்வு எழுதி ஜெயித்து வேலை பெற்று வாழ் நாள் முழுக்க அதன் சலுகைகளை பெற அநியாய வழியில் நுழைவதும் சலுகையை மட்டும் நம்பி தேர்ந்தெடுத்த பணியை ஒழுங்காக செய்யாது இருப்பதிலும் ஆச்சரியமில்லை! ////

    மிக மிகச் சரி.....ஆசிரியரின் தகுதிகளை அடிக்கடி சோதிப்பது மாணவர்களுக்கு மட்டுமல்ல ஆசிரியர்களும் நல்லதுதான்

    ReplyDelete
  2. Christopher Raja Kumar · St.Xavier's College PalayamkottaiSeptember 07, 2014 8:08 am


    Sevai seithathu anthakalam ,Panam panna pala kurukku vazhigal theduvathu inthakalam!

    ReplyDelete
  3. teaching is not a job its a responsibility. a teacher has to evolve herself constantly in physical, emotional, intellectual and sometimes spiritually also.

    ReplyDelete