பெண்களும்தங்களை காப்பாற்றி கொள்ள முன் வேண்டும். நம் இந்திய சமூகம் எல்லோரும் ஒரே போல் கல்வியறிவு பெற்று சம-அந்தஸ்தில் வாழும் சமூகம் அல்ல என்பதை உணர வேண்டும். தங்களை சுற்றி ஒரு தற்காப்பை பலப்படுத்தி கொள்ள கடமைப்பட்டுள்ளோம். நாம் நம்பி பழகும் நபர்களிடமும் ஒரு பாதுகாப்பான தூரத்தை ஏற்படுத்தி கொள்வது பாதுகாப்பிற்க்கு உகுந்தது. இல்லை என்பதை இல்லை என்றும் ஆம் என்று சொல்ல நினைப்பதை துணிவுடன் சொல்ல துணிவு இருந்தாலே தப்பிதமான எண்ணத்துடன் ஆண்கள் பெண்கள் பக்கம் அணுகுவதை தடுக்கலாம்.
உடை அலங்காரத்திலும் தங்கள் பாதுகாப்பையும் மனதில் கருத வேண்டும். உடை நமக்கு ஒரு அடையாளமாக இருக்கும் போது உடையை அணிவதிலும் தேற்வு செய்வதிலும் தனிக் கவனம் செலுத்துவது தேவையே. பல பெண்களை பெற்றோர் குறிப்பாக அப்பெண்ணின் தாய் சரியாக வழி நடத்துவது இல்லை என்பதே உண்மை. பல வீட்டுகளில் ஆண் குழந்தைகள் தங்கள் சொத்தை பாதுகாக்கும் படியும் தங்கள் வாரிசாக பெருமையாக வளர்க்கும் போது பெண் குழந்தைகளை ஆசை பதுமைகளாக வளர்க்கின்றனர். இந்த வருட கிருஸ்துமஸ் ஆலைய வழிபாடுக்கு சென்று வந்த போதும் குழந்தைகள் உடையில் இதையே கண்டு வந்தேன். பெண்கள் அணியும் அரை சாரியின் சட்டையின் கழுத்து உள் ஆடைக்கு சமமாக தைத்து அணிவித்து மகிழும் மகளை விட இதை அணிவித்து அழகு பார்க்கும் அம்மாவின் மனநிலையை எண்ணி கலங்க மட்டுமே இயலும். அதே வேளையில் அவர்கள் மகன்களுக்கு கால் சட்டையை ஓட்டையுடனோ அல்லது வயிறு, மார்பு தெரியும் போலோ ஏன் அணிவிப்பதில்லை. இந்த சமூகம் தான் பெண்ணை பொருளாக பார்க்கின்றது என்றால் பெற்றவர்களும் மதிக்க தகுந்த உயிராக நோக்காதது வருத்தமே.
இந்த நாட்டில் நடக்கும் கற்பழிப்பு வழக்குகளில் ஒரு இளம் அழகான நகர்ப்புற மங்கை பாதிக்கப்படும் போது கொள்ளும் கலக்கம் அப்பெண் ஏழையோ கிராமப்பெண்ணோ, தலிது –பழங்குடி அல்லது வயதான பெண்ணாக இருக்கும் போது கவலை துக்கம் நீதி எழுந்து வருவதில்லை. சிலருக்கு மறுக்கப்படும் நீதி, நியாயம் இப்படியான கொடிய நிகழ்வுகளை சந்திக்க காரணமாக அமைகின்றது. இச்சமூகத்தை திருத்த இயலாத பெண்கள் தங்கள் பாதுகாப்பிற்கு தங்களையும் தயார் படுத்தி கொள்வதே காலச்சிறந்தது.
இந்திய சட்டப்படி பாலியல் துன்புறுத்தலில் ஏற்ப்படும் நபர்களுக்கு 7 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை தரப்படுகின்றது. 16 வயதிற்கு கீழுள்ள ஆண்களுக்கு தண்டனை இல்லை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். இந்திய நீதித்துறை ஒரே போல் இயங்குகின்றதா என்றால் அது கேள்விக்குறியே. பணம் பலம் படைத்தவர்கள் இன்றும் சட்டத்தை ஏமாற்றியே தப்பித்து சுகமாக வாழ்கின்றனர்.பாதிக்கப்பட்ட பெண்ணோ வாழ் நாள் முழுதும் சுமையாக வாழ தள்ளப்படுகின்றாள்.
பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் பெண் உடன் செல்ல வேண்டிய இடம் காவல்நிலையம், மருத்துவமனை அல்லது நீதிமன்றமாகும். பாதிக்கப்பட்ட பெண் 48 மணி நேரம் உள்ளாக சென்றால் மட்டுமே தான் கொடுக்கும் வழக்குக்கு தகுந்த ஆதாரம் கொடுக்க இயலும்.
காவல்த்துறையை அணுகும் பெண்களை தகுந்த முறையில் மதித்து விசாரிப்பது கிடையாது. காவல்த்துறையின் அனுபவ இன்மையே இதன் காரணம். ஒரு பெண் தன் நண்பரால் தன் வீட்டில் வைத்து கற்பழிக்கப்பட்டால் காவல்த்துறை வழக்காகவே எடுத்து கொள்வது கிடையாது. தன் பழைய நண்பனை நம்பி தன் வீட்டில் பேச அனுமதிக்க அவன் திடீர் என தாக்குதல் நடத்தினால் பாதிக்கப்பட்ட நபருக்கும் குற்ற செயலில் பங்கு உண்டு என்றே காவல்த்துறை கணக்கில் எடுக்கும். அதாவது ஒரு பெண் தன் வீட்டு முன் வாசலை திறப்பது என்பது பெண் தன் உடலை திறப்பது போல் தான் சட்டம்-சமூகம் எடுத்து கொள்ள விரும்புகின்றது. காவல்த்துறையின் கேள்விக்கு பயந்தே பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதை மூடி மறைக்கவே விரும்புகின்றனர்.
வங்காளத்தில் 6 நபர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிய 16 வயது பெண் போலிஸ் வழக்கை சரியான விதத்தில் விசாரிக்கவில்லை என்ற காரணத்தால் தற்கொலை செய்து கொண்டுள்தும் சமீபத்தில் தான் நடந்துள்ளது. வேறு ஒரு பெண் சட்டத்தால் நீதி தேட முயன்று தன் பெற்றோரின் சொத்து,தன் உயிர் பாதுகாப்புக்கு வழியற்று அனாதமாக்கப்படுகின்றார். சமீபத்தில் டெல்லியில் நடந்த சம்பவத்திலும் சரியான விசாரனையை நடத்துவதை விடுத்து காவல்த்துறையும் மாநில முதலமச்சரும் சண்டையிட்டு அரசியில் நாடகம் நடத்தியதை கண்டோம்.
அடுத்து சிகித்சை கொடுக்கும் மருத்துவர் தங்கள் கொடுத்த சிகித்சையை பற்றி நீதிமன்றத்தில் தெரிவித்து பாதிக்கப்பட்ட நபருக்கு உதவலாம். நிஜத்தில் பாதிக்கப்பட்டவரை சந்தேகத்துடன் பார்த்து அவமானிப்பதே இங்கையும் நடக்கின்றது, நீதிமன்றம் வழக்கு என்பது பாதிக்கபட்ட நபர் சரியான நேரத்தில் நீதி கிடைப்பதற்க்கு வழி இல்லாதாகவே உள்ளது. 1992 வச்சாந்தியில் நடந்த பாலியல் குற்றசாட்டிற்கு 2011 ல் தண்டனை கொடுக்கப்பட்டதும் நம் தமிழகத்தில் தான் நடந்தேறியது.
90 சகவீத பாலியல் துன்புறுத்தலும் திட்டமிடப்பட்டு நடப்பதால் தங்களை பாதுகாத்து கொள்ள பெண்களும் முன் வரவேண்டும். உடலளவில் தங்களை பாதுகாக்க உடல் வலிமையை வளர்த்து கொள்வது எல்லா பெண்களுக்கு எல்லா சூழலிலும் இயலாவிடிலும் தந்திரமாக தப்பிக்க தயார் செய்யலாம்.
தன்னார்வு தொண்டுகள், சட்டவல்லுனர்கள் ஆலோசனை வழங்கலாம்.
ஏற்கனவே வெறி கொண்ட மிருகங்களிடம் வாய் கொடுத்து மாட்டுவது தவிர்த்து தப்புவது எப்படி என்ற சிந்தனையே உகுந்தது. செருப்பாலே அடிப்பேன் என்று கூறிய பல பெண்களை குறிவைத்து தாக்கிய சம்பவம் இளைஞர்கள் மத்தியில் நடந்துள்ளது. வார்த்தையால் போராட அல்லது வார்த்தையால் வம்பிளுப்பதை பெண்கள் தவிற்ப்பதே சிறந்தது.
அறிமுகம் இல்லாத நபர்களை தனி இடங்களில் சந்திப்பதை தவிற்க வேண்டும். தங்கள் பெற்றோர் பார்வையில் அனுமதி பெற்று ஆண் நண்பர்களை சந்திப்பது பாதுகாப்பும் கண்ணியமான செயலுமாகும்.
மனதளவிலும் பெண்கள் பலம் கொள்ள வேண்டும். சமூக நிகழ்வுகளை கண்டு மன பயத்தில் உழலாது சீரிய சிந்தனையுடன் மேலும் ஆக்கபூர்வமாக பிரச்சினைகளை எதிர் கொள்ள தயார்படுத்தி கோள்ளவேண்டும். இந்த குற்றவாளிகளை சிறையில் இடுவதாலோ தூக்கிலிடுவதாலோ திருந்த போவதில்லை. இவர்கள் சொத்தை கண்டுகட்டி பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்திற்கு அரசு கொடுக்க முன் வரவேண்டும். இதுவே தகுந்த தண்டனையாக இருக்கும். அல்லாது அரசு சில ல்ட்சங்கள் உயிருக்கு விலை நிர்ணயிப்பதும் சரியல்ல என்பதை உணர வேண்டும்.
ReplyDelete(இந்த சமூகம் தான் பெண்ணை பொருளாக பார்க்கின்றது என்றால் பெற்றவர்களும் மதிக்க தகுந்த உயிராக நோக்காதது வருத்தமே.) நானும் இதே போன்ற சில யோசனைகளுடன் ஒரு பதிவு எழுதி வைத்தேன் நான் ஒரு ஆண் என்பதால் நிறைய மாற்று கருத்து வரும் என்பதால் அதை பதிவேற்றவில்லை நீங்கள் பெண்ணாக இருப்பதால் அதை சற்று பொறுமையுடன் படித்து அதை பின் பற்ற வாய்ப்புகள் அதிகம். நல்ல அருமையான பதிவு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉண்மையான கருத்துக்கள்...
Well done JPJ.This detailed narration could only be given from women side. A bold narration which is great.This is the situation in the region.
ReplyDelete
ReplyDeleteபொதுவான தங்கள் கருத்தை ஏற்கிறேன்..ஆனால் பெண்களின் உடைதான் காரணம் என்ற ஆணாதிக்க மனப்பான்மைக் கருத்து தாங்கி நிற்கும் விவாதத்தை இப்போது எழுப்புவது பெண்கள் நலனுக்கு எதிராகவே இருக்கும். உயிரோடு மருத்துவமனையில் சிகிட்சை பெற்றுவரும்போதே "தினமணி" பத்தாம் பசலித்தனமான உடை பற்றிய கருத்தை எதிரொலித்துத தலையங்கம் தீட்டியது...பெண்களைக் கண்டு எந்தவித வெட்கமுமின்றி ஜொள்ளு விடும் மதுரை ஆதீனமும் இஸ்லாமியப்பெண்களைப்போல் இதரப்பெண்களை 'பர்தா' அணியச் சொல்கிறார்...என்னே 'துறவி'யின் சமூக அக்கறை!உடைதான் முக்கியப் பிரச்சினை என்றால் 3 வயதுப்பெண் குழந்தை பாலியல் வன்முறைக்குட்படுத்தப்படுவது எந்த வகையில் சேரும்?உலகமயம் ஏற்படுத்திவரும் நுகர்வுக் கலாச்சாரம் ஏற்றிய போதைக்குட்பட்ட வக்கிரப்புத்தி கொண்ட ஆண்கள்தாம் (வயது வித்தியாசமின்றி) தண்டனை மூலமோ அல்லது கவுன்சலிங் மூலமோ மாற்றப்பட வேண்டும்.ஒன்றிரண்டு விதிவிலக்குகள் கொண்ட பெண்கள் பற்றி இப்போது பேசுவது பயனளிக்காது.