அமெரிகாவில் சிக்காகோ நகரத்தில் மத்திய தர பணக்காரகுடும்பத்தில் மருத்துவரின் ஆறு குழைந்தைகளில் இரண்டாவது மகனாக பிறந்தார் இவர். தந்தை அறிவிலும் வீரத்திலும் மகனை வளர்த்திய போது தாய் கடவுள் நம்பிக்கையிலும் பக்தியிலும் வளர்க்கின்றார். தன்அப்பாவிடமிருந்து வேட்டை, மீன் பிடித்தல் கற்றது போலவே தாயின் உன்றுதலால் ஆலைய பாடகக்குழுவிலும் பக்தியிலும் கடவுள் நம்பிக்கையிலும் வளர்க்கப்படுகின்றார். பிற்காலத்தில் இவருடைய கதைத்தளமாக இவையும் உருமாறுகின்றது என்பதும் எடுத்து கொள்ளப்பட வேண்டியது. இவருக்கு நோபல் விருது வாங்கி தந்த கதை The Old Man and The Sea. என்ற குறும் நாவலில் மீன்களை பிடிக்கும் ஒரு மீனவனின் சிந்தனைகளை அருமையாக இயல்பாக, நுணுக்கமாக விவரிப்பது இவர் தனது தந்தையிடம் இருந்து குழந்தைப்பருவத்தில் கற்ற வித்தயே!
தன் பெற்றோருக்கு தன் மகன் தாங்கள் நினைக்கும் நிலைக்கு எட்டவில்லை என்ற வருத்தம் வாட்டியது. இதனார் அச்சுறுத்தல் கொடுத்து கொண்டே இருந்ததால் இரண்டுமுறை தன் வீட்டை விட்டு ஓடுகின்றார். தனது 19 வதுவயதில் ராணுவ பயிற்சியில் தீவிர ஆற்வம் கொண்டு, முதல் உலகப்போரில் பங்குபெற தானாக முன் வந்து விருப்பம் தெரிவிக்கின்றார். கண்ணில் பார்வை குறை பாடுஉண்டு என புரக்கணிக்கப்பட்டாலும் சாரணியர்இயக்கம் வழியாக அமெரிக்கா-இத்தாலி படையுடன் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக போர்தளத்தில் பணிபுரிகின்றார். ஆனால் இரண்டே மாதத்தில் போர்களத்தில் காயமுற்றுவெளியேறும் சூழல் வந்து சேருகின்றது. அங்கு தான் 19வது வயதில் ராணுவ மருத்துவமனையில் பணிபுரியும் தாதியுடன் முதல் காதல் அரும்புகின்றது. போரால் சாதாரண மக்கள் கொள்ளும் துயர், காதல் கைகூடாத வீரர்களின் துயர், போர் அரசியல் பற்றி மிக அருமையான கதைகள் எழுதி பிற்காலத்தில் பாராட்ட பெறப்படுகின்றார்.
கால் ஒடிந்த நிலையில் காயங்களுடன் வீட்டில் வந்து சேர்ந்த ஏர்னெஸ்டுக்கு பெற்றோரில் இருந்து பரிவோ இரக்கமோகிடைக்கவில்லை மேலும் புரக்கணிக்கப்படுகின்றார். தாய் மிகவும் இரக்கம் அற்றவராக நடந்து கொள்கின்றார். மேல்படிப்பிற்கு செல் அல்லது வேலைக்கு போ என கடிந்து கொள்கின்றார். இராணுவத்தில் கிடைத்த 1000 டாலர்இருந்ததால் ஒரு வருட காலம் எழுத்து வாசிப்பில் நாட்கள் கடத்திய ஏர்னெஸ்ட் ஒரு கனடா பத்திரிக்கையில் வேலைக்கு சேர்கின்றார். நண்பன் வீட்டில் சந்தித்த தன்னை விட எட்டு வயது முதியவரான பெண்னை மணம் முடிக்கின்றார். கணவருக்கு உளவியலாகவும் எல்லா பணக் கஷ்டங்களிலும் தாங்குபவராகவும் அவருடைய இலக்கிய பணிக்கு துணிபுரிபவராகவும் உள்ளார். தன் காதல் மனைவியுடன் பாரிஸில் வாழ்ந்த தினங்களை எண்ணி அவர் எழுதிய நாவலாகும் The Paris Wife. மனைவியுடன் வாழ்ந்து முதல் நாலு வருடங்கள் அவருடைய இலக்கிய பயணத்திற்கு புது பரிணாமங்கள் நல்கிய காலமாக மாறுகின்றது. இக்காலயளவில் அவர் எழுத்துலைகில் பெயர் பெற்ற நபராக மாறுகின்றார். ஜாக் என்ற மகனுடன் மகிழ்ச்சியாக இருந்த குடும்பத்தில் தன் மனைவியின் நண்பியான பேஷன் பத்திரிக்கையார் பவுளில், பூஜைக்குள் புகுந்த கரடியாக நுழைகின்றார். மனைவியை விவாகரத்து செய்து விட்டு தன்னை விட 4 வயது முதியவராக பவுளினுடனான வாழ்கை 12 வருடம் நீடிக்கின்றது.ஏர்னெஸ்டின் எழுத்தை மெருகூட்ட இத்திருமணம் உதவுகின்றது. பாட்ரிக் என்ற மகனுடன் நிம்மதியாக வாழ மார்த்தா என்ற மூன்றாவது நபருடனான தொடர்பு திருமண பந்ததில் அடுத்த விரிசலுக்கு வெடிக்கின்றது.
ஏற்னெஸ்டு தேற்தெடுத்த மூன்றாவது மனைவி மார்த்தா போர்க்களத்தில் செய்தி சேகரிக்கும் செய்தியாளர் ஆவார். இவர் மனநிலையை பெரும் துன்பத்திற்கு உள்ளாக்கிய மனைவி இவர் ஆவார். இவருடன் வாழ்ந்த 10 வருடங்களில் இலக்கிய வாழ்கை முற்றும் ஸ்தம்பிக்கின்றது. தன்னை எப்போதும் குற்றம் கூறுவதே கடமையாக கொண்ட மார்த்தாவுடனான தொடர்பு விரைவில் கசந்து நாலாவது மனைவி மேரியில் தஞ்சம் அடைகின்றது வழியாக மீழ்கின்றார். இக்காலயளவில் தான் பல விருதுகள் பெறுகின்றார். இவருடைய புத்தகங்கள் பல எதிர்பார்க்காத அளவு விற்கப்படுகின்றது.
தன் அடுத்த புத்தகப்பணிக்காக மகிழ்ச்சியுடன் ஆப்பிரிக்கா நாட்டை நோக்கி பயணிக்கும் வேளையில் எதிர் கொண்ட விமான விபத்தால் மிகவும் சோர்வுக்குள்ளாகின்றார். இந்த உடல் நலம் சூழலே பிற்காலத்தில் இவரை தற்கொலை செய்து மரணிக்க வைக்குகின்றது. மேலும் அமெரிக்கா அரசியல் கொள்கையுடன் எப்போதும் எதிர்ப்பு கொண்ட இவர் க்யூபாவில் தஞ்சம் புகுந்திருந்தார். ஆனால் அரசியல் பிரச்சனையால் பிடரல் காஸ்டோ அரசில் இருந்து பல வகைகளில் மன அழுத்தம் கொண்டு நாட்டை விட்டு வெளியேற நிற்பந்திக்க படுகின்றார். 1960ல்அங்கிருந்து வெளியேறி அமெரிகாவில் குடியேறிய ஏர்னெஸ்ட் தனது தகப்பனார் போன்றே கைதுப்பாக்கியால் தன்னை தான் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொள்கின்றார். இது ஒரு விபத்தாக எண்ணி கத்தோலிக்க முறைப்படி அடைக்கம் செய்யப்படுகின்றார். ஐந்து வருடம் பின்பே இவருடைய நாலாவது மனைவி மேரி இவர் தற்கொலை செய்து கொண்டதாக ஒரு நேர்முகத்தில் தெரிவிக்கின்றார். இவருடைய ஒரு சகோதரும் சகோதரியும் கூட தற்கொலை செய்து கொள்கின்றனர் பிற்காலத்தில். நடிகையான இவருடைய பேத்தியும் 90களில் தற்கொலையை தேடுகின்றார்.
இவருடைய பல நாவல், சிறு கதைகளில் கதைத்தளம் இவர் வாழ்கையே. அதனால் இக்கதைகள் உயிர் ஓட்டம் நிறைந்ததாக மக்கள் மனதில் நிலைத்து நிற் கசெய்தது. இவருடைய எழுத்து பாணி தன்னை ஒரு கதாபாத்திரமாக கொண்டு நேரடியாக கதை சொல்வதாக இருந்தது. இதுவே இவருடைய எழுத்துலக வெற்றிக்கும் பலருடைய விமர்சனத்திற்க்கும் காரணமாகின. ஏர்னெஸ்ட் ஈகோ பிடித்த எழுத்தாளர் தன் கதாபாத்திரம் மட்டும் நல்ல, சிறந்த, போராட்ட குணமுடைய வெற்றி வாகை சூடும் கதாபாத்திரமாக புனையுவார். மற்று கதபாத்திரங்களை தன் நண்பரை கூட நம்பிக்கை துரோகியாக காட்டுகின்றார் என்று விமர்சிப்பவர்களும் உண்டு.
நல்ல கட்டுரை. இன்னும் தகவல் சேர்த்திருக்கலாம்!
ReplyDeleteR u a lecturer in English? U r writing abt English writers?
ReplyDelete
ReplyDeleteஓல்டுமேன் அன்டு தி ஸீ.....
தோல்விகளைப் பகுத்துப்பார்க்க இன்றுவரை வாழ்வில் வழிகாட்டும் அற்புதக் காவியம்!
அதாவது வெற்றிக்குத் தகுதியான திறமையும் அளவைத்தாண்டிய உழைப்பையும் மீறியும் தோல்வி வந்து சேரக்கூடும்! அப்படிப்பட்ட தோல்வியானது வெற்றி தரும் விருதைவிட மகத்தானது என்று மனதைத் தேற்றிக்கொள்ளச் சொல்லிக்கொடுத்த கதையது! :-)
அவரது வாழ்க்கை பற்றி இதுவரை தெரியாது...... நாம் சிலாகித்த அவரது கதைகளுக்கான களங்களையெல்லாம் தொட்டுச்சொல்கின்றது அவரது வாழ்க்கை பற்றிய இந்தக் குறிப்பு.... கதை மாந்தர்களை மீண்டும் சந்தித்ததுபோன்ற உணர்வு.... :-)
நன்றி...
இதயம் நிறைந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்!
ReplyDeleteAnonymous said...
ReplyDeleteR u a lecturer in English? U r writing abt English writers?
எல்லோருக்காகவும் எழுதப்பட்டது தானே அவருடைய கதைகள்.