header-photo

பாலியல் குற்றத்தில் இந்தியா மூன்றாம் இடத்தை கைப்பற்றியது!!!!பாலியல்-அரசியல் நாடகம்பாலியல் துன்புறுத்தலில் அமெரிக்கா, தெற்கு ஆப்பிரிக்காவுக்கு முதல், அடுத்த இடம் கொடுத்து விட்டு இந்தியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது. பெண்ணை தேவி தெய்வம்  என ஒரு புறம் பூஜித்து கொண்டு கொலை பாலியல் துன்புறுத்தலிலும் விட்டு வைப்பதில்லை. இதில் ஒரு வரலாறே இந்தியாவுக்கு உண்டு. அதன் முன் கற்பழிப்பு அல்லது பாலியல் துன்புறுத்தல் என்றால் என்ன என்று புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

கற்பழிப்பு அல்லது பாலியல் துன்புறுத்தல் என்ற சொல்லாடல் விருப்பம் இல்லாத ஒரு பெண்ணிடம் உடல் நீதியாக உறவு வைத்து கொள்ள ஆண் வன்முறையாக துணிவதையே குறிக்கின்றது. களவாணுதல், தூக்கி  செல்லுதல், கடத்துதல் என்ற அர்த்தமுள்ள இந்த சொல்(rape) லாற்றின் மொழியில் இருந்தே வந்துள்ளது. மனைவியின் விருப்பத்திற்கு மீறி உறவு வைத்து கொள்ள கணவர் துணிந்தாலும் பாலியல் அத்து மீறல் என்ற தண்டனைக்கு உள்ளாகுகின்றனர் என்பதையும் நாம் அறிய வேண்டும்.

இந்த சமூக அமைப்பு ஆகட்டும் யார் இந்த குற்ற செயலில் ஏற்படுகின்றனர், எதனால் என்று பார்க்க தவறி விடுகின்றது . உணர்ச்சி வேகத்தால் இந்த சமூக நோயின் அடி வேரை வெட்டி எரிக்க தவறுகின்றனர்.  ஒவ்வொரு நிகழ்வு நடக்கும் போதும் போராட்டம், வருத்தம், கோபம் என நின்று விடுகின்றது.
பெண்கள் மேலுள்ள ஆண்களின் ஆதிக்க சிந்தனையே இதன் காரணம் என பெண்ணியல் சிந்தனையாளர்கள் கொதித்து எழுகின்றனர். ஆனால் அதுமட்டுமா காரணம்? இதில் சமூக, குடும்ப, கலாச்சார பாதிப்பு உண்டு என்று விளங்க வேண்டும். இந்தியா போன்ற ஊழல் நாட்டில் பாலியல் துன்புறுத்தல் என்பதும் தவிற்க இயலாத குற்றமாக மாறியுள்ளதை கவனிக்க வேண்டியுள்ளது.  30 சதவீதம் மக்கள் செல்வ செழிப்பிலும் மீதமுள்ள 70 சகவீதமக்கள் வறுமை துன்பத்திலும் வாழும் போது, சமூக கட்டுப்பாடு  மேல் நம்பிக்கை அற்று ஒரு வித பொறாமை இயலாமைக்கு தள்ளப்படுகின்றனர் பெருவாரி மக்கள். கற்பழிப்பு குற்றவாளிகளை நோக்கினால் தாய் தகப்பன் அற்று தகப்பனுடன் நல்ல உறவற்று வளரும் நபர்களாகவே உள்ளனர். இவர்கள் பாதிப்புக்கு உள்ளாக்குவதும் இவர்களை விட நல்ல நிலையில் வாழும் மக்களையே. கோயம்பத்தூர் 10 வயது குழந்தையை பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கி கொன்ற வாகன ஓட்டுனரின் பின்புலன் பொறாமையும் தனிநபர் ஒழுக்க இல்லாய்மையுமே.
தனிநபர் ஒழுக்கம் பற்றி சிந்தனையில்லாத நாட்டும்மக்களே நாம். அமெரிக்கா இத்தாலி போன்ற நாட்டில் தங்களை ஆள்பவர்கள் தனி நபர் ஒழுக்கத்தில் தவறக்கூடாது என உறுதியாக உள்ளனர். சொந்த மனைவியை தவிர்து தகாத உறவுகள் வைத்து கொள்பவர்கள் அதிகாரத்தில் நிலை கொள்வது கடினமே. அதுவே கிலிண்டனை விரும்பிய மக்கள், துக்கி எறியவும் தயங்கவில்லை. சர்கோஸிஸ் மக்கள் வெறுப்பை பெற்றதும் இதனால் தான். ஆனால் நம் நாட்டின் சட்ட சபை நிலை என்ன. சட்ட சபை உறுப்பினரே குழந்தையை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கி கொலை செய்கின்றனர், தற்கொலைக்கு காரணமாக இருக்கின்றனர். விசாரணை இல்லாமலே பல வழக்குகள் முடக்கப்படுகின்றது. 162 குற்றவாளிகள் சட்டமற்ற உறுப்பினர்களாக கொண்ட நாட்டில் அறம் எங்கு நிலைக்க வாய்ப்பு உள்ளது!

இந்தியா- பாக் பிரிவினை நேரம் மட்டும் 1 லட்சம் பெண்கள் மனபங்கப்படுத்த பட்டுள்ளனர். ஜம்மு-காஷ்மீரில் சமீபத்தில் ராணுவத்தால் ஆயிரத்திற்கு மேல் பெண்கள் கற்பழிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.  குனன் போஷ்போரா என்ற கிராமத்தில் புகுந்த இந்திய ராணுவம் 30ல் இருந்து 100 பெண்களை 13க்கும் 70 வயதுக்கிற்கு உள்பட்ட பெண்களை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.

 ஜாதிய சிந்தனையால் ஒதுக்கி வைக்கப்பட்ட தலித் பெண்களையும் விட்டு வைக்கவில்லை. 10 மிலியனுக்கு மேல் பெண்கள் இதுவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர் என்கின்றனர் சமூக ஆராய்ச்சியாளர்கள். பாலியலாக துன்புறுத்தப்படும் பெண்கள் 90% தலிதுகள் என்று மட்டுமல்ல 85% பெண்கள் வயதுக்கு வராத சிறுமிகள் என்ற அதிற்சி உண்மையும் நோக்க வேண்டியுள்ளது. பழன்குடி பெண்களுக்கு நேர்ந்த கொடுமையை கேட்க போன பெண்கள் இன்னும் கொடூமையாக துன்புறுத்தப்பட்டதை ஊடகம் வழியாக கண்டோம். எல்லா மாநிலங்களிலிலும் போட்டி போட்டு கொண்டு பெண்கள் மேல் பாலியல் பலாத்காரம் நடந்தியுள்ளது.  இதில் ஏற்பட்டவர்கள் பொறுக்கிகள், காவாளி பசங்கள், குற்ற பின்னணியுள்ளவர்கள்  மட்டுமல்ல காவல்த்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், என எல்லா அந்தஸ்தில் உள்ளவர்களும் இடம் பிடிக்கின்றனர்.

Photo: புனிதா போன்ற ஏழைக் குழந்தைகள் கொடூரமாக பாலியல் சித்திரவதைச் செய்யப்பட்டு கொல்லப்படுவதற்கெல்லாம் ஊடகங்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை.  மத்திய வர்க்க இழப்புகளும், பணக்காரர்களும் கொல்லப்படும் போது மட்டுமே அதை பரபரபாக்கி செய்தியாக்குகின்றன ஊடகங்கள். மெழுவர்த்தி ஏந்தும் தகுதி வேண்டுமெனில் பிறப்பால் இக்குழந்தைகள் பண்ணைகளாக பிறக்க வேண்டும் போல.கற்பழிப்பு என்றதும் பெண்கள் உடை பாதுகாப்பில்லாது தனியாக பயணிப்பது என்ற முட்டு காரணம் சொல்லப்படுகின்றது. ஆனால் மேற்கு வங்காளத்தில் கணவருடன் வேலை முடித்து வந்த பெண்ணின் கணவரின் வாயில் ஆசிட்டை ஊற்றி காயப்படுத்தி விட்டு அப்பெண்ணை பக்கத்திலுள்ள புதரில் இழுத்து சென்று பாலியலாக துன்புறுத்தி கொன்ற சமூகம் நம்முடையது. 1973 ல் மருத்துவ மனையில் வேலை நோக்கிய அருணா ஷான்பாங்கு என்ற பெண் அந்த மருத்துவமனை வார்டு வேலையாளால்  பாதிக்கப்பட்டு இன்றும் வாழும் இரத்த சாட்சியாக இருந்து வருவதையும்; கருணை கொலை கொடுங்கள் என அவருடைய தோழி எழுத்தாளர் பிங்கி வழக்கு தொடுத்ததையும் நாம் அறிவோம். புனிதா என்ற சிறுமியை கொன்றவர் போதை பழக்கத்தில் வாழ்பவனும், கூடா உறவுகளை ஏற்படுத்த விளைந்த கொடூர குற்றவாளி!  அவன் குற்றம் நிகழ்த்தும் போதும் போலிஸ் தேடும் குற்றவாளி பட்டியலில் தான் இருந்துள்ளான். இவனை போன்றோருக்கு மனித மூளையின் செயல்பாட்டிலுள்ள குறைபாடு இருந்திருக்கும். அவனுக்கு இரையான குழந்தை காலையில் எழுந்து ½ மைல் பள்ளிக்கு நடந்து வந்து இரயில் பயணப்பட்டு கல்வி கற்று வந்த ஏழை விதவை பெண்ணின் மகள். இவனுடைய அந்நேர மிருகம் எதையும் சிந்திக்காது அக்ககுழந்தையை பலி வாங்கியது. அவன் ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் காவல்த்துறை தண்டனை சரியான விதத்தில் கொடுத்திருந்தால் அவனுக்கு ஒரு குழந்தையின் உயிரை எடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்காது.
பெண்கள் உளவியல் ஆராய்ச்சி செய்தவர்கள் கூற்றுப்படி தான் பாலியலாக தாக்கப்பட்டு விடுவோமோ என்ற பயத்தில் தான் வாழ் நாள் முழுதும் பெண்கள் வாழ்கின்றார்கள். ஆண் உளவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்வது என்னவென்றால் ஆண் அடிப்படையாகவே வேட்டையாடும் வேட்கை கொண்டவன். பெண்ணிடம் ஒரு பாலியலாக மகிழ்ச்சியூட்டும்  சக்தி உள்ளதாக தப்பிதமான கணக்குடனே வாழ்கின்றான். அவனுக்கு என்ற வாய்ப்பு கிடைக்கும் போது வேட்டையாட மறுப்பதில்லை. இந்த இடத்தில் தான் அவனுடைய வளர்ப்பு பரம்பரை மரபணு, அறம் சார்ந்த சிந்தனை மனிதனா அல்லது மிருகமா என்ற கேள்விக்கு விடை கொடுக்கின்றது.
பாலியல் துன்புறுத்தல்லால் ஒரு பெண் கொள்ளும் துயரை அவன் விளங்குவதில்லை. கேடான பாடத்தால் இதில் பெண்ணும் மகிழ்ச்சி கொள்கின்றாள் என்ற சிந்தனையே மேல் ஓங்கி நிற்கின்றது. சமீபத்தில் கேரளாவில் 16 வயது சிறுவன் 12 வயது சிறுமியை பாலியலாக துன்புறுத்தி கொலை செய்து விட்டான். போலிஸ் விசாரித்த போது தன் தகப்பன் தினம் காணும் நீலப்படங்களை இவனும் தந்தைக்கு தெரியாது நோக்கி வந்துள்ளான். இதுவே இவனை இக்கொடிய செயல் செய்ய தூண்டியுள்ளது. வேறு ஒரு இளைஞனாகட்டும் வெளிப்புறமாக மிகவும் நல்லவன். ஆனால் முதல் பிரசவத்திற்கு வந்த நண்பன் தங்கையே  இரவில் வீட்டு கதகை  கடற்பறையால் உடைத்து உட்புகுந்து அப்பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி கொலை செய்தது மட்டுமல்லாது அவனை தடுத்த வயதான தாயையும் கொன்று சென்றான்.  இவன் ஒரு பெரும் பணக்கார தமிழ் மனிதனின் மலையாள கள்ளக்காதலியின் மகன். தகப்பன் பெயர் சொல்ல இயலாது வளந்தவனுடைய  மூளை ஒரு கட்டத்தில் மிருமாக மாறுகின்றது.

பல ஆண்கள் பாலியலாக திருப்தியான வாழ்கை வாழ்வதில்லை என ஆராய்ச்சியாளார்கள் கூறுகின்றனர். தற்போதைய சமூக சூழலும் காரணமாகின்றது. அடிப்படையாக சமூகமாக கூட்டமாக வாழ்ந்தவன் வேலை விசயமகாவும் வாழ்வாதாரம் தேடி குடும்பத்தை விட்டு பிரிந்து தனிமையில் வாழ்கின்றான், போதிய கவனிப்பற்று வாழ உந்தப்படுகின்றான். மேலும் குடும்பங்கள், குடும்ப உறவுகள் சிதந்ததும் பெரும் பிரச்சினையாக உள்ளது. இதையும் கடந்து உலகமயமாக்கல் என்ற பெயரில் பெரும்வாரியான மக்கள் தங்கள் வாழும் உரிமையை இழக்குகின்றனர், கல்வி மறுக்கப்படுகின்ரனர், பெற்றோர் புரக்கணிப்பும் சேர்ந்து அனாதர்களாக வளர்கின்றனர்.

9 comments:

Seeni said...

nalla alasal.....

Palaniappan Kandaswamy · Subscribed · University of Madras, Chennai said...


பாத்துட்டே இருங்க, 2013 ல்லே முதல் இடத்தைப் பிடிச்சுடமாட்டம்?

Vigil Anbiah · Assistant Professor in Animal Husbandry at Annamalai University, Chidambaram said...


Excellent write-up Mrs. Josephine. I must appreciate your courage to express the pit falls existing among the females. Yes, I do agree with your views. Parents have the greatest responsibility to raise their boys /girls in the society.

Micro problems that occur within the family must be viewed suitably and appropriate solutions should be provided by suitable friends / relatives. We may think a husband & wife are very happy in their life...but I have seen the real cases.....within the four walls, they are not happy and cordial. These issues should be redressed properly by adopting permissible interference and remedy. Working at this level may reduce the incidents of rape in a larger extent.

There is no use in arguing Male is responsible or a Female is responsible, I would like to say WE ARE RESPONSIBLE.....with responsibility, let us step into this new year 2013 so that let us be concerned about our society. I am sure, by joint action, India would stand pride as a Rape free country! Good Luck!

கே.எஸ். சுரேஷ்குமார் · Subscribed · சின்னத்திரை ,உள்ளூர்த்தொலைக்காட்சி ஒளிபரப்பாளன். at Entertrainer said...


புனிதா விசயத்தில் தேடப்பட்டுவரும் குற்றவாளிக்கு முறையான தண்டனை கொடுத்திருந்தால் இது நடந்திருக்கவே முடியாது.அதைத்தான் நாங்களும் வலியுறுத்துகிறோம்.ஆனால்,தண்டனை என்று எதைசொல்லுகிறீர்கள்.வெற்று அறையில் அடைத்துவைப்பதுமட்டுமா அந்த அறை அவனுக்கு என்ன கற்றுக்கொடுத்துவிடும்?

கே.எஸ். சுரேஷ்குமார் · Subscribed · சின்னத்திரை ,உள்ளூர்த்தொலைக்காட்சி ஒளிபரப்பாளன். at Entertrainer said...


அருமையான பதிவு.நிறைய சம்பவங்களை தெரிந்துகொள்ள முடிந்தது.தொடரட்டும் உங்கள் பதவுகள்.

Rathnavel Natarajan said...

இதில் ஏற்பட்டவர்கள் பொறுக்கிகள், காவாளி பசங்கள், குற்ற பின்னணியுள்ளவர்கள் மட்டுமல்ல காவல்த்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள், ஆசிரியர்கள், என எல்லா அந்தஸ்தில் உள்ளவர்களும் இடம் பிடிக்கின்றனர்.

வேதனையாக இருக்கிறது.

thanigai said...

collection of information and gathering of incidents in no way find out the solution to the problems. anyhow thank u to the post and sharing of thoughts.

Subi Narendran · Top Commenter · Works at M&S said...


வேதனை தரும் பகிர்வு. உண்மையான தகவல்களை கதைத்திருக்கிறீர்கள். நாம் யாவரும் வெக்கித் தலை குனியவேண்டிய உண்மைகள். நல்ல பகிர்வுக்கு நன்றி ஜோஸ்.

Kirubanandan Palaniveluchamy · Subscribed · Top Commenter · TAMINAD POLYTECHNIC MADURAI said...


சென்சார் அமைப்பு உள்ளது அதில் பதவியில் இருப்பவர்கள் சமூக சிந்தனையுள்ளவர்களாக இருக்கவேண்டும் அதை பெண்ணுரிமை ஆணையங்களின் கீழ் கொண்டு வந்தால் அவர்கள் வலைதளங்கள் ஊடகங்களில் கைவைத்தால் வக்கிர பிரச்சாரங்கள் கட்டு படும்!

Post Comment

Post a Comment