header-photo

மாணவர்கள்- குரங்கு கையில் கிடைத்த பூமாலை!


10 ஆம் வகுப்பு தேற்வுத் தாள் திருத்த  பழனி தேற்வு மையத்திற்க்கு தாமதமாக வந்த ஆசிரியர்கள், பூட்டியிட்ட நுழைவு வாசலை கண்டதும் ஆர்பாட்டம் செய்துள்ளனர்.   நேரத்திற்க்கு வகுப்பிற்க்கு வராத மாணவர்களுக்கு விதவிதமான தண்டனை கொடுத்து மகிழும் ஆசிரியர்கள் தங்களுக்கு தண்டனை கிடைத்த போது தாங்கி கொள்ள இயலவில்லை என்பதில் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.  இருப்பினும் ஆசிரியர்கள் தங்கள் மன சாட்சிக்கு எந்த விதம் மதிப்பு கொடுக்கின்றனர் என்று புரிய வைக்கின்றனர். 

அரசு பள்ளியில் நேரத்திற்க்கு வரும் ஆசிரியரை காண்பதே அரிது என்றாகி விட்டது. வந்ததும் இவர்களுக்கு என்றே திறந்து வைத்துள்ள திண்-பண்ட கடையை நோக்கி படை எடுத்து விடுவார்கள்.  வடை காப்பி என கடையில் பேசி பேசி சாப்பிட்டு முடிக்கவே பெரும் வாரியான நேரம் விரையப்படுத்துகின்றனர். ஊதியம் வாங்கும் அளவிற்க்கு வேலையில் முனைப்புடன் ஊக்கத்துடன் செயல் படுகின்றார்களா என்றால் அது கேள்விக் குறி மட்டுமே. சமீபத்தில் ஒரு ஆசிரியர் என்னிடம் கூறினார்  75 % ஆசிரியர்கள் தெம்மாடிகளும் புறம்போக்குகளுமாக தான் உள்ளனர் என்று. இதை கேட்டவுடன் எந்த ஆசிரியரும்; அரசியல்வாதிகள் பாபா ராம்தேவிடம் கோபம் கொண்டது போல் என்னை திட்ட வேண்டாம்.  இது உண்மையும் தான்!

சமீபத்தில் ஒரு அரசு பள்ளிக்கு சமீபம் நிற்க வேண்டிய சூழல். காலை 10 மணி ஆகிய போது ஒவ்வொரு ஆசிரியையாக கணவர் வாகனத்தில் வந்த அரக்க பறக்க வந்து இறங்குகின்றனர்.  தாமதித்து தான் வந்தது வந்தாகி விட்டது என்றால் கையிலுள்ள தூக்கு சட்டி , தோள் பையை கீழை வைக்க மறந்து கதைத்து கொண்டிருக்கின்றனர்!  எப்போது  வகுப்பறைக்கு சென்றனர் என்று எனக்கு தெரியவில்லை என் புலனாய்வை முடித்து நான் செல்லும் இடத்திற்க்கு நேரத்திற்க்கு செல்ல வேண்டியதாயிற்று.
போட்டி பொறாமைக்கு புகலிடம் என்றால் அது ஆசிரியர் சமூகமே என்றால் மிகை அல்ல. உடுத்தும் உடையிலிருந்து கிடைக்கும் பதவிக்கு வரை கழுத்தறுக்கும் போட்டி நடந்து கொண்டே இருக்கும்.  கல்லூரி ஆசிரியர்கள் எப்படியோ  கெட்ட வார்த்தையில் மாணவர்களை திட்டுவதில் பள்ளி ஆசியர்கள் போலிஸையும் முந்தி விடுவர்.  இவர்கள் பேச்சுக்கும் நடை முறை வாழ்கையும் ஒன்றோடு ஒன்று சம்பந்தம் இருப்பதாகவே இல்லை.  ஆசிரியர்களுக்கு தாங்கள் எழுத வேண்டிய தகுதி தேற்வு செய்தியை கூட தன்னுடன் வேலை செய்பவர்களுக்கு தெரியாது நுட்பமாக மறைத்து விடுவார்கள்.  புதியதாக தெரிந்து கொள்ளும் ஆசை அற்று; அரைகல் ஆட்டுகல் போல் வாழ்கின்றனர் என்றால் அது ஆசிரியர் பெருமக்கள் மட்டுமே ஆகும். அவர்களுக்கு மகிழ்ச்சி தருவது என்றால் தங்கள் சொந்த பிள்ளைகள் சாதனைகள் மட்டுமாகவே இருக்கும். ஆசிரியர்கள் சில கலை நிகழ்ச்சிகளுக்கு கலந்து கொள்வதே கண்டுள்ளேன்.  அப்படியே இருந்த இடத்தில் இருந்து தூங்குவார்கள். அடுத்தவர் சொல்லும் அறிவுரையை கேட்க பொறுமை, மனம் இருப்பதில்லை; ஆனால் தங்கள் மாணவர்கள் தான் சொல்வதை கேட்க வேண்டும் என பேராவல் கொள்வதை காணலாம்.

இந்த ஆசிரியர்கள் திருந்த போவதே இல்லையா என்றால், மாணவர் சமுதாயத்தையே தங்கள் செயல்பாடுகளால் கெடுத்து கொண்டு  தான் இருக்கின்றனர்.  மாணவர்களுடன் மது அருந்தும் ஆசிரியர்கள் பிடித்தவர்களுக்கு மதிப்பெண் இடுவது பிடிக்காதவர்களை பள்ளிக்கே வரவிடாது செய்வதில் இருந்து  இவர்கள் செய்யும் அட்டகாசங்களுக்கு அளவே இல்லை எற்று ஆகி விட்டது.  தற்கால மாணவர்களுக்கு நல்ல வழி காட்டுதல் இல்லை என்பது பெரும் குறையே. உண்மையான ஆக்கபூர்வமான எண்ணங்களுடன் ஆசிரியர் பணியை நோக்குபவர்கள் மிகவும் குறைவாகி விட்டனர்.
ஒழிங்கீனமாக தாமதித்து வந்து விட்டு பேப்பர் திருத்த எங்களுக்கு நல்ல மன நிலை இல்லை, தண்ணீர் இல்லை இப்படி பல குற்ற சாட்டுகள் பொழிபவர்களால் தன் வகுப்பறைக்கு தாமதித்து வரும் மாணவனே எப்படி கண்டிக்க இயலும்? 10 ஆம் வகுப்பு என்று தேவைக்கு அதிகமான பயம் காட்டி உளைவியலாக பயம்முறுத்தி படிக்க வைத்து தேற்க்கு அனுப்பும் நம் குழந்தைகளின் தேற்வு தாளை திருத்திகின்றேன் என்று  எத்தனை மாணவர்கள் வாழ்கையை பாழ்கிணறுகளில் தள்ளுகின்றார்கள் என பொறுத்து இருந்து பார்ப்போம்.

ஆசிரியர் தேற்வுகள் பணம் ஆள்பலம் பேசுவது போல் இவர்கள் தனி தன்மை, தகுதி கணக்கில் எடுப்பதில்லை.  பல ஆசிரியர்கள் சமூக அக்கரை உள்ளவர்களோ பன்பாக பேச தெரிந்தவர்களோ மாணவர்களை சிந்திக்க தூண்டுபவர்களோ அல்ல.  குறைந்த பட்சம் மனித நலம் பேனுபவர்கள் மனித நலம் விரும்புவர்கள் கூட இல்லை என்பதே மிகவும் வருந்த தக்க நிலை! கடந்த ஆட்சியில் சீனியோரிட்டி பிரகாரம் எடுக்கப் பட்ட பல நபர்கள் ரிட்டயர்மென்று வயதை எட்டியவர்கள்.  இப்படியாக அரசியல் ஞானத்தையும் ஆள நினைக்க, வரும் தலைமுறை குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக தான் இருக்க போகின்றது.


  

7 comments:

priyarajan said...

socially responsible thought is reflecting in your words. eventhough you are a teacher you didn't fear for others and boldly spoken about the negative side of the teachers in current society. congrats for that sister

Seeni said...

kavalaikuriya visayam!
neengal thairiyamaaka sonnathukku-
nantri!

பழனி.கந்தசாமி said...

வருந்தத்தக்க நிகழ்வுகள்.

Subi Narendran said...

ஆசிரியர்களை ஒரு சாடு சாடி இருக்கிறீர்கள். பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல அவர்களோடு ஒருவராகி அனுபவப் பட்டு உண்மைகளை எழுதி இருக்கிறீர்கள். உங்கள் துணிவைப் பாராட்டுகிறேன். விழிப்புணர்வுப் பகிர்வு. ஆசிரியர்கள் தாங்களாகத்தான் திருந்த வேண்டும். நன்றியும் வாழ்த்துக்களும் தங்கை. தொடரட்டும் உங்கள் சமூகப் பார்வை.

வீடு சுரேஸ்குமார் said...

தெம்மாடிகளாக இருக்கிறார்கள்......ஹிஹி!

ஷார்ப்பா இருக்கு கட்டுரை! உரைக்கிற மாதிரி! உங்கள் ஆதங்கம் நியாயமானதே!

Subi Narendran said...

ஆசிரியர்களை ஒரு சாடு சாடி இருக்கிறீர்கள். பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல அவர்களோடு ஒருவராகி அனுபவப் பட்டு உண்மைகளை எழுதி இருக்கிறீர்கள். உங்கள் துணிவைப் பாராட்டுகிறேன். விழிப்புணர்வுப் பகிர்வு. ஆசிரியர்கள் தாங்களாகத்தான் திருந்த வேண்டும். நன்றியும் வாழ்த்துக்களும் தங்கை. தொடரட்டும் உங்கள் சமூகப் பார்வை.

சொல்கேளான் ஏ.வி.கிரி · Subscribed · Works at சென்னையில் நம்பர்1 மெழுகுவத்தி தயாரிப்பாளர் · 253 subscribers said...


உங்கள் உணர்வுகள் நியாயமானவை.. தெளிவானவை..ஆழமானவை... இளம் தலைமுறையினரை சரியான பாதையில் பயணிக்க வைக்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை... மாதா பிதாவிற்குப் பிறகு குருதான். இந்தக் காலக் கட்டம் எல்லா துறைகளும் அரசியல் வாதிகேளால்..சுயநலவாதிகளால் நோய்வாய்ப்பட்டிருக்கிறது.. இது எப்போது எப்படி யாரால் சரி செய்யப்படும் என்பதுதான் கவலைக்குரிய கேள்வி...

Post Comment

Post a Comment