நாம் படித்த, வேலை செய்யும் பள்ளி, கல்லூரி, பல்கலைகழங்கள் மேல் உணர்வு பூர்வமான ஒரு தொடர்பு நமக்கு எப்போதும் உண்டு. பயணங்களில் நாம் செல்லும் போது நாம் படித்த பள்ளி கல்லூரியை ஒரு முறையேனும் திரும்பி பார்க்காது இருப்பது இல்லை, பெருமையாக மற்றவர்களிடம் சொல்லுவது மட்டுமல்ல நமக்கு ஒரு மதிப்பு தரக்கூடியது. நம் குடும்ப உறவினர்கள் போல் நம் சொந்த வீடு போல் நம் நண்பர்கள் போல் நாம் படித்த கல்வி நிலையங்களுடன் ஒரு அழியாத பந்தம் நம்மை ஆட்கொள்கின்றது.
ஆனால் சமீபத்திய பத்திரிக்கை செய்தி வழியாக தினம் ஒரு கெட்ட செய்தி என கல்வி நிலையங்கள் பற்றி வருகின்றது. பாலியல் துன்புறவு என மனோன்மணியம் பல்கலைகழகம் வந்தால், மாணவர் தற்கொலை என அண்ணா பல்கலைகழகம் இடம் பிடித்துள்ளது. இன்று இது எல்லாம் போதாது என்று வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் மேல் ஊழல் புகார்!
இது எல்லாம் பொய் புகார் என்றால் ஏன் மெத்தை படித்தவர்களால் சட்ட உதவி கொண்டு நேர் கொள்ள இயலவில்லை. படித்தவர்கள் எல்லா வித அடிமைத்தனத்தில் இருந்தும் கல்வியால் விடுதலை பெற்றவர்கள் என்றால் சமீப காலமாக பதவிக்கும் பணத்திற்க்கும் அடிபணிந்து கிடப்பதாலே இந்த விதமான சிக்கலுகளில் உள்ளாகுகின்றனர் என்றே தோன்றுகின்றது. துணைவேந்தர் தேர்வில் இருந்து பட்டம் கொடுக்கும் விழா என எல்லா நிலைகளிலும் அரசியல் விளையாடுவதால் எளிதாக எல்லா சிக்கலுகளிலும் மாட்டிகொள்கின்றனர். சமூகத்திற்க்கு எது சரிஅல்லது தவறு என்று எடுத்து கூற வேண்டிய பேராசிரிய பெருமக்கள் ஊழலில் முட்டி மோதி அல்லாடுவது கண்டு வேதனையும் வெட்கமாகவும் உள்ளது. அடிப்படை தகுதியான நேர்மை கூட கல்வி தரவில்லை என்றால் படித்து பதவியில் வந்து என்ன பிரயோசனம்?
மனோன்மணியம் பல்கலைகழகத்தில் சமீபத்தில் பாலியல் வழக்கில் ஒரு பேராசிரியரை உடன் வெளியேற்ற வேண்டும் என மாணவ சமூகம் கொதித்து எழுந்தது. இதன் உண்மை தன்மை பற்றி பின் வந்த செய்திகளில் தகவல்கள் கிடைக்கவில்லை. ஒரு பக்கம் மட்டும் தவறு என்று எடுக்காது பல்கலைகழகத்தில் பயிலும் மாணவர்கள் முதுகலைபட்டம் பெறும் மாணவர்கள் என்பதால் இவர்கள் பங்கும் எடுத்து கொள்ள வேண்டி வருகின்றது. மதிபெண் பெறவேண்டும் என்ற நோக்குடன் பேராசிரியர்களிடம்; உடன் படிக்கும் மாணவர்களை கோள் மூட்டி ஒட்டி உறவாடும் மாணவர்களை காண இயலும். இந்த விடயங்களில் மாணவர்களுக்கும் தன்மானம் தன்நம்பிக்கை இருப்பது அவசியம்.
இன்னும் ஒரு பேராசிரியர் பல அவமானங்களுக்கு உள்ளாகினார். அவர் காலை வந்து தன் பையை தன் இருக்கையில் வைத்து விட்டு வெளியில் சென்றதும் சிலர் அறையை பூட்டியிட்டு அவரை 2 மணி நேரம் வெளியில் காத்து நிற்க வைத்தனர். அப்பேராசிரியர் படமுடன் செய்தியும் வந்தது அடுத்த நாள் பத்திரிக்கையில். இப்பேராசிரியர் ஆங்கிலத்துறையிலே ஆங்கிலத்தை மிகவும் எளிதாக கற்று கொடுக்க வல்லவர். இவர் வகுப்பில் ஒரு பருவம் இருந்துள்ளேன் என்பதால் இவரின் வேலையின் மேலுள்ள ஈடுபாடு சுறுசுறுப்பை கண்டுள்ளோம். பொதுவாக ஆங்கில ஆசிரியர்கள் என்றாலே ஏதோ லண்டனில் இருந்து குடியேறியது போல் நடந்து கொள்ளும் சூழலிலும் மாணவர்கள் மன நிலையை புரிந்து துன்புறுத்தாது பாடம் எடுப்பவர். ஆனால் பல்கலைகழக ஆட்சிக்குழு இவரை போன்ற கல்வி கற்று கொடுக்கும் திறைமையான பேராசிரியர்களுக்கு நிர்வாக பதவிகளை கொடுத்து மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் நேரத்தை திருடி விடுகின்றனர். இந்த பேராசிரியரோ முதுகலைப்பட்டம் தங்க பதக்கத்துடன் வெற்றவர் என்று மட்டுமலல முனைவர் பட்டத்தில் உலக அளவிலுள்ள தரவரிசையில் இடம் பிடித்து தேர்வாகியவர். ஆனால் பதவி போட்டியில் மாட்டி இவர்களின் வாழ்கை மட்டுமல்ல இவரால் சிறப்பாக கல்வி கற்க கூடிய பல மாணவர்களின் உரிமையும் பறிக்கப்படுகின்றது. தேற்வில் ஜெயித்தவர்களால் வாழ்க்கை என்று வரும் போது சிறப்பாக முன்மாதிரியாக வர இயலவில்லை என்பது நம் சமூக சீரழிவா, கல்வி நிலைகளில் இழிவு நிலையா அல்லது தனி மனித சறுக்கலா என்று சிந்திக்க வேண்டியுள்ளது.
ஊடகவும் தீர விசாரித்து கல்வி செய்தியை தர முன் வரவேண்டும். கல்வி சம்பந்தமாக பொதுவான மக்கள் துன்புறும் பல பிரச்சைகள் ஊடகம் வாயிலாக வெளி வராது சில பிரச்சனைகள் மட்டும் வெளிவருவதில் அரசில் உள்ளது என்று தான் கவலையாக உள்ளது ஒரு பெரும் வாரியான படித்த மக்களை வெட்கத்திற்க்கு உள்ளாக்குகின்றனர் இச்செய்திகளால் என்று கல்வி நிலையங்கள் புரிந்து கொண்டால் சரி. சாமியார் மடங்களுக்கு கோடிகள் புரண் போது என்ன வீழ்சி அடைந்ததோ அதே மாபெரும் வீழ்சி கல்வி வியாபாரம் ஆன போது நாமும் கண்கூடா காண்கின்றோம்!
நீங்க விமரிசனம் எழுதியிருப்பதால் படத்தை எப்படியாவது (திருட்டு சிடியில்தான்) பார்த்துவிடுகிறேன்.
ReplyDeleteடாக்டர் ஐயா வணக்கம். நேற்று விஜய் தொலைக்காட்சியில் பார்க்கவில்லையா?
ReplyDeleteநம்மை பாதிக்கும் விஷயங்கள் குறித்து நாம் அமைதி காக்க நினைப்பது சரியோ?
ReplyDeleteஜோசப்பின் தங்கள் விமர்சனம் ஏறக்குறைய நான் என் மனைவியுடன் படம் பார்த்துவிட்டு சொன்ன கருத்தை பிரதிபலிக்கிறது, ஆனால் இதையெல்லாம் ஏதோ நல்ல படம் என்று தலையில் தூக்கிக் கொண்டாடும் இன்றைய சமுதாயத்தை நினைத்தால் கவலையாக இருக்கிறது.
ReplyDeleteசரியில்லாததை சரியில்லை என்று சொல்வதில் எந்தத் தவறும் இல்லை
ReplyDeleteநண்பன் படம் சரியில்லை என்றால் அது பற்றியே எழுதியிருக்கக் கூடாது என்பது என் கருத்து.
ReplyDeleteவணக்கம் அக்கா,,,, நான் அதிக நாட்களாக உங்கள் தெளிவான யதார்த்த கருத்துக்களை பார்க்கவில்லை ,இன்று வாசிக்க வேண்டும் என்ற ஒரு அவாவில் வாசித்தேன் ,,நான் எழுதுவதை நிறுத்தி வாசிக்கலாம் என்று தோன்றுகின்றது ,,,அந்தளவுக்கு ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் கொடுத்துள்ளீர்கள் ,,நான் சினிமா படம் பார்ப்பதை மிகவும் குறைத்து கொண்டேன் அதனால் இந்த படம் பார்க்கவில்லை உங்கள் கருத்தில் மூலம் சினிமா உலகம் ,சமுதாயத்துக்கு தேவையானதை சொல்வதில்லை என்பதை மீண்டும் புரிந்து கொள்கின்றேன் ,,,,,தொடர்ந்தும் உங்கள் வாசகியாக இருக்க ஆசை ,,,,,,,உங்கள் எழுத்து பணிக்கு என் வாழ்த்துக்களும் நல்லாசிகளும் ,,,,
ReplyDelete