9ஆம் நூற்றாண்டு வரையிலான காலக்கட்டத்தில், அசோக மன்னனின் பிரசாரகர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு ஊக்குவிக்கப்பட்ட #பௌத்தம் முழு கேரளத்திலும் பரவலாகவும் முக்கியமான மதமாக இருந்தது. இம் மதம், பெருமாள்களில் ஒருவரை உட்படப் பெருமளவிலான மக்களை மாற்றச் செய்யும் அளவுக்கு வெற்றி பெற்றது.
10 Aug 2025
பயணம் பேச்சி பாறை நீர்த்தேக்கம்!
8 Aug 2025
பிரான்சிஸ் சேவியர், இயேசுவின் சபையின் பொதுச் செயலாளரான அருட்தந்தை இக்னேஷியஸ் லொயோலாவிற்கு எழுதிய கடிதம்- கொச்சி, ஜனவரி 14, 1549
ரோம்
இயேசுவின் சமூகத்தின் பொதுச் செயலாளரான
#அருட்தந்தை இக்னேஷியஸ் லொயோலா அவர்களுக்கு,.
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின்
கிருபையும் அன்பும் எப்பொழுதும் எங்களோடு இருப்பதாக! ஆமென்.
என் சொந்தமும், கிறிஸ்துவின்
இருதயத்தில் ஒரே பிதாவுமான அருட்தந்தையே,
சமீபத்தில் இந்த இடத்திலிருந்து
ரோமுக்குச் சென்ற பல கடிதங்கள், உங்கள் ஜெபங்களாலும்
தேவனுடைய நன்மைகளாலும் இங்குள்ள மதப்பணிகள் எவ்வளவு சிறப்பாக நடைபெறுகின்றன என்பதை
உங்களுக்கு அறிவித்திருக்கும் என நினைக்கிறேன்.
ஆனால், ரோமிலிருந்து இவ்வளவு தொலைவில் உள்ள இந்தப் பகுதிகள் குறித்து நான் நேரடியாக
உங்களிடம் கூற வேண்டிய சில விஷயங்கள் உள்ளன என்று நினைக்கிறேன். எனவே, இவ்விடங்களைச் சில அம்சங்களைச் சுருக்கமாகத் அனுப்புகிறேன்.
முதலில், என் பார்வைக்கு வந்தவரையில், இந்தியர்களின் முழு
இனமும் மிகவும் காடத்தனமுடையவர்கள். தங்கள் சொந்த
பழக்கவழக்கங்களுக்கும் மரபுகளுக்கும் விரோதமான எதையும் கேட்க அவர்கள்
விரும்புவதில்லை; அந்த மரபுகள், நான் கூறியபடி, காட்டுமிராண்டித்தனமானவையே.
தெய்வீக விஷயங்கள், இரட்சிப்புக்கான விஷயங்கள் குறித்தும் அவர்கள் பெரிதாகக் கற்றுக்கொள்ள
விருப்பம் கொள்வதில்லை. பெரும்பாலான இந்தியர்கள் தீய இயல்புடையவர்கள்; நல்லொழுக்கத்திற்கு விரோதமானவர்கள். அவர்கள் மனதின் நிலையின்மை, அசட்டுத்தனம், நிலைத்தன்மையின்மை
ஆகியவை நம்ப முடியாத அளவிற்கு அதிகமாக உள்ளது. பாவமும் மோசடியும் நிறைந்த
பழக்கவழக்கங்களால், நேர்மையெனும் குணம்
அவர்களிடம் அரிதாகவே காணப்படுகிறது.
இங்குள்ள கிறிஸ்தவர்களை நல்வழியில்
நிலைநிறுத்துவதிலும், இன்னும்
விசுவாசிக்காதவர்களை விசுவாசத்திற்கு அழைப்பதிலும் எங்களுக்கு கடினமான உழைப்பு தேவை இருக்கிறது.
இந்த நாடு கோடையில் கடும் வெப்பத்தாலும், குளிர்காலத்தில் அதிக
காற்று, மழையாலும் வசிப்பதற்கே கடினமானது. சொகோத்ரா, மொலுக்காஸ், குமரிப் பகுதியில் உணவு, பொருட்கள் மிகவும் குறைவு; மக்களின்
மனப்போக்கினால் உடல், மன உழைப்புகள் நம்ப
முடியாத அளவு கடினமானவை.
இந்த மக்களின் மொழிகளும்
கற்றுக்கொள்ள சுலபமல்ல; உடலுக்கும்
ஆன்மாவுக்கும் ஆபத்துக்கள் அதிகம்.
ஆனாலும், தேவனின் கிருபையால், இங்கு உள்ள எங்கள்
சங்கத்தார் அனைவரும் ஆவி, உடல் இரண்டிற்கும்
பாதிப்பில்லாமல், போர்த்துகீசர்களாலும், (அரசு அதிகாரிகளும், மதத் தலைவர்களும்), இந்தியர்களாலும் (கிறிஸ்தவர்களும் புறமதத்தாரும்) நேசிக்கப்படுகிறோம்
என்பதே விசித்திரமானது.
மீண்டும் சொல்கிறேன், இந்தியர்கள் புறமதத்தாராக இருந்தாலும், முஸ்லிம்களாக இருந்தாலும் மிகுந்த அறியாமையில் உள்ளவர்கள் என்று நான்
கண்டுள்ளேன். ஆகவே, இங்கு சுவிசேஷத்தைப் பரப்ப வருவோர் கல்வியை விட நல்லொழுக்கத்தைக் கொண்டிருக்க
வேண்டும் அதுவும் கீழ்ப்படிதல், மனோத்திடம், பொறுமை, அன்பு, பாவத்துக்கு எதிரான
விசேஷமான தூய்மை; மேலும், விவேகம், புத்திசாலித்தனம், வலிமையான உடல், மன உறுதி வேண்டும், உழைப்பையும்
துன்பங்களையும் தாங்குவதற்காக வேண்டும்.
இதனால், இனி இந்தியாவுக்கு வருவோரின் நல்லொழுக்கங்களைப் பரிசோதித்துப் பார்க்க
வேண்டிய அவசியம் உண்டு என நினைக்கிறேன்.
நம்பிக்கையுடன்
அனுப்பக்கூடிய ஆட்கள் தேவை விசேஷ
தூய்மையும் தாழ்மையும் உடையவர்கள், பெருமையோ, அகம்பாவமோ இல்லாதவர்கள் ஆக இருக்க வேண்டும்..
கோவா கல்லூரி முதல்வராக
வருபவருக்கு, பொதுவாக முதல்வருக்கு தேவையான பண்புகளுடன் இரண்டு
விசேஷ குணங்கள் அவசியம் .
1. முதலில், கீழ்ப்படிதலில் சிறந்தவரும் , அரசாங்க அதிகாரிகளின், மதத் தலைவர்களின் மனதை வெல்ல வேண்டும்.
இங்கு
அவர்கள் கட்டளைகளை நாங்கள் கடைப்பிடிப்பதைப் பார்த்தால், எங்களை அன்போடு நடத்துவார்கள்; இல்லையெனில், முற்றிலும் விரோதமாக மாறுவார்கள்.
2. இரண்டாவது, அவர் எளிமையான, நயமுள்ள நடத்தை
உடையவராக இருக்க வேண்டும்; மாணவர்களையும், சகோதரர்களையும் பயமுறுத்தாமல், அன்பால் இணைக்க
வேண்டும்.
வலுக்கட்டாயமாக
யாரையும் குழுவில் வைக்க வேண்டாம்; விருப்பமில்லாதவர்கள்
வெளியேறட்டும். ஆனால், தகுதியானவர்களை அன்பின்
பிணைப்பால் வைக்க வேண்டும். சங்கத்தார் அன்பு, ஒற்றுமையால் நிறைந்த ஒன்றாகும்; கசப்போ, அடிமைத்தனமான பயமோ அதற்கு முற்றிலும் வேறானவை.
எனது அனுபவத்தில், இங்கு உள்ளூர் மக்களால் சபை
நிலைநிறுத்த முடியாது; நாங்கள் இல்லாமல்
போனால் கிறிஸ்தவம் இங்கும் குறைந்து போகும்.
ஆகவே, ஐரோப்பாவில் இருந்து தொடர்ந்து எங்கள் குழுவினரை அனுப்பப்பட வேண்டும்.
இப்போது எங்கள் சங்கத்தினர் இந்தியாவின் பல பாகங்களிலும் உள்ளனர் . மொலுக்காஸ் 4, மலாக்கா 2, குமரி முனை 6, குலம் 2, பசாயின் 2, சொகோத்ரா 4.
இவ்விடங்களின் தூரங்கள்
மிகப் பெரியவை — மொலுக்காஸ் கோவாவிலிருந்து ஆயிரம் லீக், மலாக்கா 500, குமரி 200, குலம் 120, பசாயின் 60, சொகோத்ரா 300.
ஒவ்வொரு இடத்துக்கும்
ஒரு மேற்பார்வையாளர் இருக்கிறார்; அவர்கள் சிறந்த
புத்திசாலித்தனம், நல்லொழுக்கம்
உடையவர்கள் ஆவார்கள்.
போர்த்துகீசர்கள் கடலும், கடற்கரையும் மட்டுமே கட்டுப்படுத்துகின்றனர்; உள்நாட்டில் தாங்கள்
வசிக்கும் நகரங்கள் மட்டுமே இவர்களிடம் உள்ளது.
உள்நாட்டு
மக்கள் தீய பழக்கங்களில் ஆழ்ந்திருப்பதால், கிறிஸ்தவத்தை ஏற்க
விரும்புவதில்லை.
புதிய மாற்றுமதத்தாரை
போர்த்துகீசர்கள் அன்போடு நடத்தினால், பலர் கிறிஸ்தவம்
ஏற்றுக் கொள்வார்கள்; ஆனால், அவர்கள் இகழப்பட்டதைப் பார்த்து, பலரும் ஏற்க விரும்புவதில்லை.
இந்தக் காரணங்களால், நான் இங்கு உழைப்பதை விட, சீனாவிற்கு அருகில்
உள்ள, முஸ்லிம்களோ யூதர்களோ தொட்டுப் பார்க்காத, தெய்வீக, இயற்கை அறிவு அறிய ஆர்வமுள்ள ஜப்பான் நாட்டுக்கு போக முடிவு செய்துள்ளேன். அந்த
மக்களிடையே உழைப்பது நல்ல, நிலையான பலனைத் தரும்
என நம்புகிறேன்.
கோவா கல்லூரியில் மூன்று ஜப்பான்
மாணவர்கள் உள்ளனர்; அவர்கள் கடந்த ஆண்டு
மலாக்காவில் இருந்து என்னுடன் வந்தனர்.
அவர்கள் நல்வழி
உடையவர்கள், கூர்மையான புத்தி உடையவர்கள்; குறிப்பாக பவுல், இவர் உங்களுக்கு ஒரு
நீண்ட கடிதம் அனுப்புகிறார்.
அவர் எட்டு மாதங்களில்
போர்த்துகீசு மொழியை வாசிக்க, எழுத, பேச நன்றாகக் கற்றுள்ளார். இப்போது கிறிஸ்தவ போதனையில் நன்றாக பயிற்சி
பெற்றுள்ளார். தேவனின் உதவியால், ஜப்பானில் பலர்
கிறிஸ்தவம் ஏற்றுக் கொள்வார்கள் என எனக்கு நம்பிக்கை உள்ளது.
முதலில் அந்நாட்டின் மன்னரிடம்
சென்று, பின்னர் பல்கலைக்கழகங்களிலும், கற்றல் மையங்களிலும் போதிக்க எண்ணுகிறேன்.
பவுல் கூறுவதாவது, ஜப்பானில் உள்ள மதங்கள் ‘சிங்சிங்குவோ’ என்ற நகரத்தில் இருந்து வந்தவை; அது சீனா, கதாய் நாடுகளுக்கு அப்பால், ஜப்பானிலிருந்து ஆண்டு
பாதி பயணம் தூரத்தில் உள்ளது. ஜப்பானை அடைந்தவுடன், அங்குள்ள மக்களின்
பழக்கங்கள், இலக்கியம், மதம், சிங்சிங்குவோவின்
போதனைகள் ஆகியவற்றை உங்களுக்கு எழுதுகிறேன்.
சீனப் பேரரசிலும் கதாயிலும், அங்குள்ள பிரபலமான பல்கலைக்கழகத்தின் போதனைகள் மட்டுமே பரவலாக உள்ளன
எனப்படுகிறது. அவற்றை நன்கு அறிந்த
பின், உங்களுக்கும், பாரிஸ்
பல்கலைக்கழகத்துக்கும் எழுதுவேன், அங்கேயிருந்து
ஐரோப்பாவின் பல்கலைக்கழகங்களுக்கு இவற்றின் செய்தி சென்றடையும்.
இங்கு இருந்து நான், ஒரே ஒரு ஐரோப்பியரை — வலென்சியாவின் கோஸ்மோ டோரஸ், மற்றும் அந்த மூன்று ஜப்பான் இளைஞர்களை மட்டுமே அழைத்துச் செல்கிறேன்.
இந்தியாவின் இப்பகுதிகளில், போர்த்துகீசர்களுக்குச் சொந்தமான நகரங்கள் பதினைந்து உள்ளன. அவற்றில், மன்னர் பொதுத் தொகையில் இருந்து ஆரம்ப நிதியைக் கொடுத்தால், எங்கள் சபையின் பல இல்லங்களைத் தொடங்கலாம். இதைப் பற்றிக் கடிதத்தில் மன்னரிடம் ஏற்கனவே
சொன்னேன். மேலும், எல்லாவற்றையும் சைமன்
ரொட்ரிக்சிடம் தெரிவித்தேன்; அவர், உங்களின் அனுமதியுடன், அதிக அளவில் எங்கள்
சங்கத்தினரையும், ஒரு பெரிய போதகர்
குழுவையும் கொண்டு இங்கே வருமானால், மன்னரின் ஆதரவுடன்
எங்கள் சபையின் பலக் கல்லூரிகளை நிறுவ முடியும்; இது மதத்தின் நலனுக்கே
மிக உகந்ததாக இருக்கும் என்று கூறினேன்.
எனக்குத் தோன்றுவது, மன்னரின் சிறப்பு நம்பிக்கையில் உள்ள சைமனின் இந்தியா வருகை மிகவும் ஏற்ற
காலத்தில் நடைபெறும். அவர், மன்னரின் அதிகாரத்துடன், கல்லூரிகளை நிறுவவும், கிறிஸ்தவர்களுக்கு
உதவவும் வருவார் . ஏற்கனவே உள்ளவர்களுக்கு அவர்களுக்கு அன்பு காட்டினால் கிறிஸ்தவம் ஏற்கத்
தயாராக இருப்பவர்களுக்கும் உதவும்.
இந்த விவகாரத்தில் நீங்கள்
சைமனுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எழுதி அனுப்பினால் நலம்; ஏனெனில் ஆண்டோனியோ கோமேஸ் கூறியதாவது, சைமன் கோயம்ப்ராவில்
இருந்து எங்கள் பலரையும் கூட்டிக் கொண்டு இந்தியா வர முடிவு செய்துவிட்டார்.
ரோமிலும், வேறு இடங்களிலும், போதனைக்கும்
இலக்கியத்திற்கும் அதிகமாக ஈடுபடாத எங்கள் குழுவினர் உங்களிடம்
குறைவில்லை. இவர்கள், போதுமான அனுபவத்துடன், புறமதத்தாருக்கு உதவும் தேவையான நல்லொழுக்கங்களுடன், குறிப்பாக விசேஷமான தூய்மையுடன், வலுவான உடல்-மன
உறுதியுடன் வந்தால், இங்கு மதப்பணிக்கு
மிகவும் பயனுள்ளதாக இருப்பார்கள். ஆகவே, உங்களுக்குச் சிறந்தது
என்று தோன்றும் வகையில், எங்களுக்கு
அப்படிப்பட்ட உழைப்பாளர்களை அனுப்புங்கள்.
மேலும், எங்கள் சபையினர் அனைவருக்கும், உங்களின் ஆன்மிக
உபதேசங்களால் நிறைந்த ஒரு கடிதத்தை உங்கள் பிள்ளைகளுக்கு தந்தை விட்டுச் செல்லும்
சாசனமாக அனுப்பினால், நாங்கள் உங்களை நேரில்
காண முடியாத தூரத்தில் இருந்தாலும், தேவன் உங்களுக்கு
கொடுத்த ஆன்மிகச் செல்வங்களைப் பெறுவோம். இதை உடனே செய்ய வேண்டிய அவசியமில்லை; ஆனாலும் எப்போது ஒருநாளாவது இந்த அருளை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக்
கொள்கிறேன்.
என்ரிக்கோ என்ரிக்கெஸ்
என்ற போர்த்துகீசு ஆசாரியர், எங்கள் குழுவை சேர்ந்தவர், மிகச் சிறந்த நல்லொழுக்கம் உடையவர்; தற்போது குமரிக்குப்
பகுதியில் இருக்கிறார். அவர் மலபார் மொழியை மிக நன்றாகப் பேசவும் எழுதவும்
தெரிந்தவர். தனியாகவே பலரின் உழைப்பைச் செய்துவிடுகிறார். அவரின் பிரசங்கங்களாலும்
தனிப்பட்ட உரையாடல்களாலும் அங்குள்ள கிறிஸ்தவர்கள் அவரை மிகுந்த பாசத்துடனும்
மரியாதையுடனும் நேசிக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒருவருக்கு “நாளின் வெப்பத்தையும்
சுமையையும் சுமக்கிற அவருக்கு ” (மத்தேயு 20:12) — நீங்கள் தனிப்பட்ட ஒரு
கடிதம் எழுதி அனுப்பி அவருக்கு ஆறுதல் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
கொச்சியிலிருந்து சுமார் 20 மைல் தொலைவில், போர்த்துகீசர்களுக்குச்
சொந்தமான “கிரங்கனூர்” என்ற ஊர் உள்ளது. அங்கு மிகப் புனிதமான செயின்ட் பிரான்சிஸ்
சமய ஒழுங்கைச் சேர்ந்த, மற்றும் கோவா மறைமாவட்ட
ஆயரின் துணையாக உள்ள, எங்கள் குழுவிற்கு மிக உண்மையான
நண்பரான பிதா வின்சென்சோ, ஒரு மிக அழகான
செமினாரியை நிறுவியுள்ளார். அதில் நூறு மாணவர்கள் தங்கவைக்கப்பட்டு, பக்தியிலும் கல்வியிலும் பயிற்சி பெறுகிறார்கள்.
எங்கள் சங்கத்திற்கான அவரது
அன்பில், பிதா வின்சென்சோவையும் விட கோவா ஆயர் தாமே முன்னிலையிலிருக்கிறார்; இந்தியா முழுவதிலும் அவர் ஆட்சிச் சிறப்பும், எங்கள் சங்கத்துடன் அன்பும் கொண்டவர்.
அவர் உங்கள் நட்பையும் விரும்புகிறார். ஆகவே, அவருக்கும் நீங்கள் கடிதம் எழுதினால் நலம்.
மீண்டும் பிதா வின்சென்சோவுக்குத்
திரும்புகிறேன். எங்கள் நட்பினால், அவர் தனது செமினாரியை
எங்கள் சங்கத்திடம் ஒப்படைக்க விரும்புவதாகவும், அங்குள்ள மாணவர்களுக்கு
இலக்கணம் கற்பிக்கவும், ஞாயிற்றுக்கிழமைகளிலும்
பண்டிகை நாட்களிலும் மக்களுக்கும் செமினாரி வாசிகளுக்கும் போதனை செய்யவும் எங்கள்
சங்கத்திலிருந்து ஒரு ஆசாரியரை அனுப்புமாறு கேட்டுக் கொண்டார்.
ஏனெனில் அப்பகுதியில்
போர்த்துகீசர்கள் மட்டுமல்ல, சுமார் அறுபது
கிராமங்களில், புனிதர் செயின்ட் தோமா
கிறிஸ்தவமாக்கியவர்களின் சந்ததியினர் வாழ்கிறார்கள். செமினாரி மாணவர்கள்
உயர்ந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அந்த ஊரில் செயின்ட் தோமாவிற்கும்
செயின்ட் ஜேம்ஸிற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு ஆலயங்கள் உள்ளன. பிதா வின்சென்சோ, இவ்விரு ஆலயங்களுக்கும் ஆண்டுதோறும் ஒருமுறை முழு தண்டவிலக்கு (Plenary Indulgence) பெறும்படி, அத்துடன் பண்டிகை நாள்
மற்றும் அதற்குப் பின் ஏழு நாட்களுக்கு, அருட்த் தந்தையிடம் தொடர்பு கொள்ள நீங்கள் முயற்சி
செய்வீர்கள் என நம்புகிறேன். இது, செயின்ட் தோமாவின் மற்றும் மாற்றுமதத்தாரின் சந்ததியினரின் பக்தியை
அதிகரிக்கும். மேலும், அவர், அப்பகுதிக்கு ஒரு ஆசாரியரை போதகராகவும் கற்பிக்கவும் அனுப்புமாறு
எதிர்பார்க்கிறார். இந்த ஆசிகள், அவர் எங்களை வாழ்நாளும், மரணத்திற்குப் பின்னும் எங்கள் நண்பராக வைத்திருப்பார். இதைப் பற்றிய பொறுப்பை
அவர் மிகக் விருப்பமாக எனக்கு ஒப்படைத்துள்ளார். இந்த தண்டவிலக்குகளுக்காக அவர் எவ்வளவு ஆவலாக
உள்ளாரோ, சொல்ல முடியாது.
எனக்காக ஒரு விஷயத்தை கேட்டுக்
கொள்கிறேன் ரோமிலுள்ள செயின்ட் பியெத்ரோ இன் மொண்டோரியோ ஆலயத்தில், தூதர் செயின்ட் பேதுரு சிலுவையில் அறையப்பட்டதாகக் கூறப்படும் புனிதத்
தலத்தில், எங்கள் ஆசாரியர்களில் ஒருவரால் ஆண்டுதோறும் மாதத்திற்கு ஒருமுறை திருப்பலி
நடத்தப்பட வேண்டும்.
மேலும், ரோமில் உள்ள எங்கள் சங்கக் கல்லூரிகள், தொழில்முறை ஆசாரியர்கள், அவர்களின் கடமைகள், சங்கத்தின் பணி மற்றும்
அதன் பலன்கள் ஆகியவற்றைப் பற்றித் தொடர்ந்து முழுமையான தகவல்களை எங்களுக்கு அனுப்ப
எவரையாவது பொறுப்பேற்கச் செய்யவும்.
கோவாவில் இருந்து, ரோமில் இருந்து வரும் கடிதங்கள் மலாக்காவுக்கு அனுப்பப்படவும், அங்கிருந்து அவை பல பிரதிகளாகக் காப்பி எடுக்கப்பட்டு, ஜப்பானில் உள்ள எனக்கு அனுப்பப்படவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.
என் ஆத்துமாவின் தந்தையே, உங்களை முழு மனதுடன் வணங்குகிறேன்; நான் முழங்காலில்
மண்டியிட்டு எழுதுகிறேன் . உங்களை முன்னிலையில் வைத்துக் கொண்டு, என் வாழ்நாளெல்லாம் தேவனின் மிகப் புனிதமான சித்தத்தைத் தெளிவாக அறிந்து, அதை முழுமையாக நிறைவேற்றும் கிருபையை அவர் எனக்குக் கொடுக்கும்படி, உங்கள் புனித பலிகளிலும் ஜெபங்களிலும் எனக்காக வேண்டிக் கொள்ளுங்கள். எங்கள்
மற்ற சகோதரர்களையும், எனக்காக இதேபோல்
ஜெபிக்கச் சொல்லுங்கள்.
இப்படிக்கு
உங்கள் மிகச் சிறியதும்
பயனற்ற பிள்ளை,
பிரான்சிஸ்
சேவியர்
கொச்சி, ஜனவரி 14, 1549
27 Jul 2025
Silenced" (கொரியப் பெயர்: "도가니" – Dogani)
ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கொரிய திரைப்படமான "Silenced" (கொரியப் பெயர்: "도가니" – Dogani) .
காங் இன்-ஹோ (Kang In-ho) என்பவர் ஜா-ஏ அகாடமி (Ja-ae Academy) எனும் சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளுக்கான பள்ளியில் கலை ஆசிரியராகப் பணியேற்க, வட ஜியோல்லா மாகாணத்தில் அமைந்துள்ள முஜின் நகரம் செல்கிறார்.
பள்ளியில் வந்து சேர்ந்ததும், அவர் பள்ளித் தலைமையாசிரியர் லீ காங்-சொக் மற்றும் அவரின் இரட்டை சகோதரரான நிர்வாகத் தலைவர் லீ காங்-பொக் ஆகியோரை சந்திக்கிறார்.அது கிறிஸ்தவ அடிப்படைவாதிகளால் நடத்தப்படும் பள்ளி.
தனது புதிய மாணவர்களுக்கு கலை கற்பிப்பதில் உற்சாகம் கொண்டிருந்த #இன்-ஹோ, அந்த மாணவர்கள் தன்னை ஒதுக்கி, விலகிச் செல்வதை கவனிக்கிறார். இருப்பினும், அவர் மாணவர்களிடம் அக்கறையுடன் நடந்து கொள்கிறார்.
சிறிது காலத்திற்குப் பிறகு, மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை பகிர தொடங்குகிறார்கள். அப்போது, இன்-ஹோ ஒரு அதிர்ச்சிகரமான உண்மையை அறிகிறார் –பள்ளி ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகத்தினரால்.அந்த பள்ளியின் மாணவர்கள் உடல் மற்றும் பாலியல் வன்முறைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளனர், இன்-ஹோ, பள்ளியில் நடைபெறும் இந்த கொடுமைகளை வெளிக்கொணரத் தீர்மானிக்கிறார். இதற்காக மனித உரிமை போராளி #சோ யூ-ஜின் (Seo Yoo-jin) உடன் இணைந்து செயல்படுகிறார்.
ஆனால், பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், ஊழியர்கள் மட்டுமல்லாமல், போலீசார், அரசு வழக்கறிஞர்கள் மற்றும் உள்ளூர் சமூகம்கூட இந்த கொடுமைகளை மூடிமறைக்க ஒன்றிணைந்துள்ளனர் என அவர்கள் விரைவில் உணர்கிறார்கள் –
இன்-ஹோ தன் பணியிலிருந்து நீக்கப்படுகிறார். ஆனாலும், அவர் முஜின் நகரத்தில் தங்கி, அந்தக் குழந்தைகளுக்கான நீதி கோரி போராடத் தொடர்கிறார்.
வழக்கறிஞர், குற்றவாளிகளுக்காக "முந்தைய பதவியின் சிறப்புரிமைகளை" (Jeon-gwan ye-u) பயன்படுத்துகிறார். குற்றவாளிகள் நேரடியாக பொய் பேசுகிறார்கள், லஞ்சம் கொடுத்து சலுகை தண்டனை பெற்று விடுகிறார்கள்.
தண்டனை வழங்கப்படுவதற்கு முந்தைய இரவில், லீ சகோதரர்கள் மற்றும் பாலியல் வன்முறை செய்த ஆசிரியரான பார்க் போ-ஹ்யூன் (Park Bo-hyun) ஆகியோர், தங்களது வழக்கறிஞருடன் மகிழ்ச்சியாக சிரித்து பேசி கொண்டாடுகிறார்கள்.
################################################################################
#திரைப்படத்தால் சமூக மாற்றம்
இலக்கியமும் திரைப்படமும் கொண்டிருக்கும் சக்தி விவரிக்க முடியாதது. அவை நம் சிந்தனைகளை மாற்றி, சமூகத்தையே மாற்றும் திறன் கொண்டவை. அதனால்தான் ஒரு சிறந்த இலக்கியம் அல்லது திரைப்படம் என்பதை நாம் ஒரு மதிப்புமிக்க பண்பாட்டு உரையாகவும், முக்கியமான சமூக ஆவணமாகவும் கருக்கிறோம். “The Crucible” போன்ற நாவல்களையும், “Silenced” போன்ற திரைப்படங்களையும் தொடர்ந்து காணக்கூடிய நிலை இருக்க வேண்டும், அப்படி இருந்தால் நாம் நல்ல மனிதர்களாகவும், நல்ல சமுதாயத்தில் வாழக்கூடியவர்களாகவும் மாற முடியும். இந்தப் படம் வெளியான பிறகு நீதிமன்ற தீர்ப்புகளின் மென்மையான தன்மையை எதிர்த்து பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து காவல்துறையினர் வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்டனர்.
#குவாஞ்சு இன்ஹ்வா பள்ளியின் ஆறு ஆசிரியர்களில் நால்வருக்கு கல்வித்துறை கடுமையான தண்டனை பரிந்துரை செய்திருந்தது. இருப்பினும், குற்றத்திற்கான வரம்புச் சட்டம் (Statute of Limitations) காரணமாக அவர்கள் தண்டனையின்றி தப்பியதுடன், பின்னர் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டனர். அவர்களில் இரண்டு பேர் மட்டுமே எட்டு சிறுமிகளை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டனர் அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கும் குறைவான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
#உண்மை சம்பவம் கதை
முன்னாள் ஆசிரியர் கிம் யோங்-இல் (வயது 71) 1964 ஆம் ஆண்டில் நடந்த இக்குற்றத்தால் இரண்டு குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறினார். அதன்பின், துணைத் தலைமையாசிரியரால் அடிக்கப்பட்டு, வேலையிலிருந்து வலுக்கட்டாயமாக விலகச் செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
#படம் வெளியாகி இரண்டு மாதங்களுக்குள், #2011 நவம்பரில் குவாஞ்சு நகராட்சி அந்த பள்ளியை அதிகாரப்பூர்வமாக மூடிவிட்டது.
2012 ஜூலையில், குவாஞ்சு மாவட்ட நீதிமன்றம் #அந்தப் பள்ளியின் 63 வயதான முன்னாள் நிர்வாகியை, 2005 ஏப்ரலில் 18 வயது மாணவியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததற்காக 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. மேலும், குற்றம் நடந்ததை சாட்சியமாகப் பார்த்த 17 வயது மாணவியை உடல் ரீதியாக வன்முறைக்கு உட்படுத்தியதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது (இருவரும் தற்கொலை செய்ய முயற்சித்தனர் என்ற தகவலும் உண்டு. குற்றவாளி கிம் என்ற பெயரால் அடையாளம் காணப்பட்டவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு 10 ஆண்டுகள் #மின் கண்காணிப்பு காலணி அணிய உத்தரவிடப்பட்டது.
மேலும், மிகவும் பலவீனமானவர்களின் மனித உரிமைகளை பாதுகாக்க புதிய #சட்ட மசோதாக்களை சட்டமன்ற உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தினர். 2011 ஆம் ஆண்டு, கொரிய தேசிய சட்டமன்றம், இந்தப் படத்தின் கொரிய பெயரை அடிப்படையாகக் கொண்டு #“டோகானி சட்டம்” (Dogani Law) என்ற பெயரில் ஒரு முக்கிய #சட்டத்தை இயற்றியது.
இச்சட்டம் 13 வயதிற்குள் உள்ள குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டால், அதற்கான குற்றவரம்புச் சட்டத்தை (Statute of Limitations) நீக்குகிறது. மேலும், சிறுவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீது பாலியல் வன்முறைக்கு வாழ்நாள் சிறை வரையில் அதிகபட்ச தண்டனையை வழங்குகிறது. அதேபோல், “தனது மாற்றுத்திறன் காரணமாக எதிர்க்க முடியாத நிலை” என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற பிரிவையும் ஒழித்தது.
இத்திரைப்படம் பல விருதுகளை வென்றது. இந்தக் கோரிய திரைப்படத்தின் பன்னாட்டு தலைப்பு "Silenced" ஆகும்.
2011 நவம்பர் 4ஆம் தேதி, இந்த திரைப்படம் கீழ்க்கண்ட அமெரிக்க மற்றும் கனடிய ,லாஸ் ஏஞ்சல்ஸ், சான் ஹோசே, ஹண்டிங்க்டன் பீச், நியூ ஜெர்சி, பிலடெல்பியா, அட்லாண்டா, டல்லாஸ், சிகாகோ, சீட்டில், போர்ட்லாண்ட், லாஸ் வேகாஸ், டொராண்டோ மற்றும் வான்கூவர். நகரங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது:
இந்த படம் வெளியான பிறகு The Wall Street Journal, The Economist, மற்றும் The New York Times போன்ற புகழ்பெற்ற பத்திரிகைகளால் விமர்சிக்கப்பட்டது.
2019 ஆம் ஆண்டு, இந்த திரைப்படம் Netflix தளத்தில் வெளியிடப்பட்டது.
#################
இயக்குனர் கருத்து!
இத் திரைப்படம் குழந்தை பாலியல் வன்கொடுமை சம்பவங்களை மீண்டும் உயிர்ப்பிக்கிறது 2000 முதல் 2005 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், சிறப்புக் குழந்தைகளுக்காக இயங்கிய ஒரு சிறப்புப் பள்ளியில் நடந்த பாலியல் குற்றங்கள் குறித்து வெளிவந்ததற்கு ஆறாண்டுகளாகியும், அவை இன்னும் தீர்க்கப்படாமல் இருவந்தன. இது சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் கோபத்தை உருவாக்கி இருந்தது.
#2009 ஆம் ஆண்டு, #எழுத்தாளர் கொங் ஜி-யங், இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு நாவலை வெளியிட்டார். அது அந்த வழக்கில் மீண்டும் நாட்டின் கவனத்தை ஈர்த்தது. இப்போது, அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட புதிய திரைப்படம் மீண்டும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளார்கள்.
#திரைப்பட இயக்குநர் ஹ்வாங் டொங்-ஹ்யோக், இது குறித்து கூறுகையில்: "இந்த படம் விவாதத்தையும் கவனத்தையும் தூண்டும் என எதிர்பார்த்தேன். ஆனால் இத்தனை விரைவாகவும் வெடித்துவிடும் நான் நினைக்கவில்லை. "படத்தில் காட்டப்பட்டுள்ள குழந்தை பாலியல் வன்முறை, காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளின் ஊழல் தொடர்புகள், அதிகாரிகளின் புறக்கணிப்பு இவை கட்டுக்கதையல்ல. இவை நாள்தோறும் செய்திகளில் நாம் காண்பவை."
"இந்த சமூக அநியாயங்களை மக்கள் மீண்டும் மீண்டும் கேட்கும்போது அவர்களிடம் ஏற்படும் வெறுப்பு மற்றும் கோபம் இந்தப் படத்தின் மூலம் வெடித்து விட்டது." எனக் கூறி இருந்தார்
இத் திரைப்படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அதில் காணப்படும் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறையின் தோராயமான காட்சிகள், மற்றும் மிகவும் மனமுடைந்த முடிவு ஆகியவை காரணமாக, இது ஒரு மனச்சோர்வூட்டும் படம் என்று கூறப்பட்டது.
பலரும் இயக்குநரிடம் முடிவை மாற்றி, நாயகர்கள் வழக்கில் வெல்வதை போன்று காட்டும்படி கேட்டனர். ஏனெனில் மக்கள் சந்தோஷமான முடிவுகளை விரும்புகிறார்கள். ஆனால் இயக்குநர் சம்மதிக்கவில்லை
"நான் ஒரு உணர்ச்சி தூண்டும் படம் எடுக்கவில்லை; உண்மையைச் சொல்ல விரும்பினேன்." இது மக்களுக்கு அனுகூலமற்ற உணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பதற்காகத் தான் இப்படிச் செய்தேன். இரண்டு விஷயங்களை நினைத்தேன் — ஒன்று, இந்தச் சம்பவம் உலகத்திற்கு தெரியவேண்டும்; இரண்டாவது, இந்த வழக்கு எப்படிக் குழைப்ப பட்டது என்பதிலிருந்து, சமூகத்தின் கட்டமைப்பின் குறைபாடுகளை வெளிக்கொணர வேண்டும்." இந்த வழக்கால் பாதிக்கப்பட்டோருக்காக போராடும் குழுவினர், இந்தப் படம் உண்மையை முழுமையாக வெளிக்கொணரவில்லை என்றும் கூறினர்:
"எழுத்தாளர் கொங் ஜி-யங் என்னிடம் சொன்னார், நாவலில் அவரால் உண்மையில் நடந்தவற்றில் மூன்றில் ஒரு பங்கையே மட்டும் எழுத முடிந்தது. என் படம், அந்த நூலில் இருந்த அனைத்தையும் கூட கையாள இயலவில்லை," என இயக்குநர் கூறினார்.
இயக்குனர் ஹ்வாங் #சூல் தேசிய பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறைப் பட்டம் பெற்றவர் :"மாணவராக இருந்தபோதே சமூகப் பிரச்சனைகளில் மிகுந்த ஆர்வம் இருந்ததால், நிறைய போராட்டங்களில் பங்கு பெற்றுள்ளதே படங்களை எடுக்க ஆரம்பித்ததற்குக் காரணம் என்கிறார். இந்த தீர்க்கப்படாத சமூக பிரச்சனைகள் மீது இருந்த நிராசை தான்." இப்படம் என்கிறார்.
"ஒரு படம் மூலம் சமூகத்தை மாற்ற முடியாது. ஆனால் இந்தப் படம் வெளிவந்து ஏற்படுத்திய தாக்கத்தை பார்த்தால், திரைப்படங்கள் சமூகத்தை நேர்மறையாக பாதிக்கக்கூடிய சக்தி உள்ளன என்று நாம் எண்ணிக் கொள்ளலாம்."என்கிறார்.
"இந்த வழக்கை மீண்டும் திறந்து குற்றவாளிகளை மறுபடியும் விசாரணைக்கு உட்படுத்தி தண்டிக்க முடியாது. ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் எவ்வாறு வேதனைப்பட்டனர் என்பதைக் காட்டலாம்; ஏனெனில் அவர்கள் இன்னும் மன்னிப்பே கேட்கவில்லை என்கிறார்.
21 Jul 2025
பிரான்சிஸ் சேவியர் கடிதம் 1548 ஜனவரி 20ஆம் தேதி கொச்சியில் இருந்து சைமன் ரோட்ரிகஸ்
1548 ஜனவரி 20ஆம் தேதி கொச்சியில் இருந்து சைமன் ரோட்ரிகஸ் அவர்களுக்கு எழுதிய கடிதம்:
சைமன் ரொட்ரிகுஸ்: Simon Rodriguez.
எங்கள் ஆண்டவரான இயேசு கிரிஸ்துவின் அருள் மற்றும் அன்பு எப்போதும் உங்களுக்கு துணைபுரியட்டும்!
என் அன்பே சகோதரரே, இயேசுவுக்கான உங்கள் அன்பிற்காக, தயவு செய்து நம் சமூகவாசிகளுள் சிறந்த பிரசங்கிகளைக் கப்பலிலே இந்தியாவுக்கு அனுப்புங்கள். இங்கே இத்தகைய நபர்களுக்கு மிகுந்த தேவை இருக்கிறது.
நீங்கள் இதுவரை அனுப்பியவர்களில் நான் நேரில் பார்த்தவர்கள் ஜோம் பெயிரா, ஃபாதர் ரிபெரோ மற்றும் சாதாரண உறுப்பினரான நிக்கோலோ நுனஸ் ஆகியோர் மட்டுமே சரியான நபர்களாக உள்ளனர். அவர்கள் தற்போது மொலுக்காசில் உள்ளனர். ஆடம் ஃப்ரான்சிஸ் கொச்சியில் இருக்கிறார். மற்றவர்களிடம் பற்றிச் சொல்லவேண்டுமானால், அவர்களில் யாரும் சிறப்பாகப் பிரசங்கிக்க வல்லவர்கள் அல்ல என்று நான் அறிகிறேன்.
தயவு செய்து, எதிர்காலத்தில் அனுப்ப விரும்பும் நபர்களை மிகவும் கவனத்தோடு தேர்வு செய்யுங்கள். அவர்கள் பல ஆண்டுகளாக தங்களையே வென்றவர்கள், சுய கட்டுப்பாட்டில் வாழ்ந்தவர்கள், உடல்நலத்துடனும் உள்ளவர்கள் ஆகியிருக்க வேண்டும். இந்தியாவில் பணிகள் சுலபமல்ல; உடல் மற்றும் ஆன்மா இரண்டும் வலிமையானவர்களாகவே இருக்க வேண்டும்.
ஆம், நிச்சயமாக. இந்தியர்கள் மிகவும் அறியாமை கொண்டவர்கள். தேவனுடைய வார்த்தையை அவர்களிடம் கொண்டு செல்ல நல்ல பிரசங்கிகள் அவசியமாக இருக்கின்றனர். இந்த நெருக்கடிகளைப் பார்த்து பயந்து நாம் பின்வாங்கக்கூடாது. உண்மையில், பெரும் தடைகள் நமக்குள்ளேதான் இருக்கின்றன.
இவ்வருடம் முடியுமுன் எங்களைச் சென்றடையச் சில நல்ல பிரசங்கிகளை அனுப்புங்கள். மொலுக்கா, சீனா, ஜப்பான், பெகுவின் இராச்சியம் என்று எங்கு வேண்டுமானாலும் இவர்களை அனுப்ப இயலும் வகையில் இருக்கவேண்டும். அவர்கள் பெரிய ஞானிகள் இல்லையெனில் கூட பரிசுத்த வாழ்க்கை கொண்டவர்கள் என்றால் போதும்.
மன்னர் எப்போதும் மனதில் கொள்ள வேண்டியது:
“ஒருவன் உலகத்தையே வென்று, தன் ஆன்மாவை இழந்தால் என்ன பயன்?” என்று அன்றாட ஜெபங்களில் நினைவுகூறட்டும்.
இந்தியாவில் உள்ள ஆட்சியாளர்கள் கிறிஸ்துவ சமய பரப்பினை ஊக்குவிக்க வேண்டும் என்று கட்டாயமாக மன்னர் ஒரு சட்டத்தைக் கொண்டுவர வேண்டும். அவர்கள் எப்போதும் சமய பரப்புக்காக செயல்பட வேண்டும், இல்லையெனில் அவர்கள் மீதான கடும் நடவடிக்கை அறிவிக்கப்பட வேண்டும். அதுதான் உண்மையாகவும் பலனுள்ளதாகவும் இருக்கும் வழி.
என் அனுபவத்தின் அடிப்படையில் எழுகிறது. இந்தியாவில் கிறிஸ்தவ சமயம் வெகுவாக பரவ, இரண்டு முக்கியமான விஷயங்கள் தேவையாக உள்ளன:
மன்னரின் கட்டளையை சரியாக செயல்படுத்தும் ஆட்சியாளர்கள்.
ஒவ்வொரு நகரங்களிலும் சிறந்த பிரசங்கிகள்.
இந்த இரண்டும் நிறைவேறினால், தேவனுடைய நற்செய்தி இந்தியாவில் பிரகாசிக்கும்.
இயேசு கிரிஸ்து எங்களை பாதுகாத்து நடத்தட்டும்!
ஆமேன்.
கொச்சி, ஜனவரி 20