3 Jan 2022

”விருந்தாவனத்தில் விதவைகள் ஹோலி கொண்டாடுவதை வரவேற்கிறோம்”

         


   உலகெங்கிலும், வாழும் சமூகத்தின் நம்பிக்கையின்படி கணவரை இழந்த பெண்களை வித்தியாசமாக அவலனிலையில்  நடத்தத்துகின்றனர். இவர்களை விதவைகள் என பொதுவாக அழைக்கின்றனர். விதவை என்ற வார்த்தை சம்ஸ்கிருதம் மொழியிலுள்ள வித்வா என்ற வார்த்தையில் இருந்து வருகிறது. இதன் பொருள் புரக்கணிக்கப்பட்டவர்கள் என்பதாகும்.  இந்தியாவில், இன்னும் மோசமாக நடத்தப்படுகின்றனர்.   மாமியார், உறவினர்கள் மற்றும் தன் சொந்த குழந்தைகள்  போன்ற குடும்ப உறுப்பினர்களால் பாதிப்பிற்கும் உள்ளாகும் இழிய நிலையில் பல பெண்கள் வாழ்ந்து வருகின்றனர். குடும்பத்தில் துரதிர்ஷ்டவசமான நபராக கருதப்படுகிறவர்கள்  விதவைகள்   தான். துக்க சடங்குகள் என்ற பெயரில் உடைகளில் கட்டுப்பாடு, அழகுசாதனப் பொருட்கள் பயன்படுத்த தடைவளையல் அல்லது மூக்குத்தி, பூ, குங்குமம் மற்றும் நகைகள் அணிய தடை,  திருமணம் போன்ற சமூகக் கூட்டங்களைத் தவிர்க்க செய்தல், கோயில்களில் அனுமதிக்காது இருப்பது என பல பல பிரச்சினைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும்  எதிர்கொள்ளும் சூழலில் தான் தற்போதும் உள்ளனர்.

 


விதவைகள் ஒரு துறவியைப் போல வாழ்க்கையை வாழ வேண்டும்புதிய ஆடை, நல்ல உணவு, பண்டிகைகளை புறக்கணித்தல் போன்ற  சமூக  ஒடுக்குமுறையில் இருந்தனர், இப்போதும் இருக்கின்றனர்.

 

1829 இல் வில்லியம் பென்டிங்க் பிரபு என்பவரால் சதி வழக்கம் ஒழிக்கப்பட்டது. அதன் பிற்பாடு  ஜூலை 16, 1856 ல்  விதவைகளின் மறுமணச் சட்டம், இயற்றப்பட்டது. இந்த சட்டம்  விதவைகளின் மேம்பாட்டுக்கான  ஒரு சமூக சீர்திருத்தமாகும் ஒரு பெண் தனது முதல் திருமணத்தின் போது இருந்த அனைத்து உரிமைகளையும் பெறச் செய்தது இச்சட்டம்இச்சட்டம்  பணக்கார இந்து குடும்பங்களில் நடைமுறையில் இருந்த  மறுமணத்தை சட்டப்பூர்வமாக்கியது. விதவை மறுமணம் என்பது தாழ்த்தப்பட்ட அல்லது ஏழை மக்களிடையே பரவலாக இருந்ததையும் மனதில் கொள்ள வேண்டும். இந்தச் சட்டம் விதவைகளுக்கு திருமணம் செய்ய  போகும்  ஆண்களிடம் இருந்து  சட்டப்பூர்வ பாதுகாப்பையும் உறுதி செய்தது.

 

19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் ஏற்பட்ட முக்கிய சமூக மாற்றங்களில் முன்னோடியாக விளங்கிய ஒன்றாகும்.  பெண்களின் நேர்மை மற்றும் ஒழுக்கத்தைப் பாதுகாக்க இதுபோன்ற பல சட்டங்கள் நாட்டில் இயற்றப்பட்டுள்ளன. ஆனால் 2021 ஆம் ஆண்டிலும் விதவைகளின் துயர் நீங்கியதா என்றால் இல்லை என்பதே உண்மை.

 

விதவையின் நிலை

2010 துவங்கி சர்வதேச, விதவைகள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை கண்டறிந்து, உதவவும், அவர்கள் பாதுகாப்பை  உறுதி செய்யும் நோக்கில்  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையால் அங்கீகரிக்கப் பட்ட தினமாகும் விதவைகள் தினமான டிசம்பர் 21.   இந்தியாவில்  40 முதல் 55 மில்லியன் பெண்கள் கணவனை இழந்த நிலையில் வாழ்ந்து வருகிறதாக  கணக்கெடுக்க பட்டுள்ளது.

விதவைகள் மறுமணச் சட்டம் 1956, சொத்தில் பெண்களுக்கு  சமமான பங்கைப் பெற அனுமதித்தாலும், விதவைப் பெண்கள் கணவர் வழி சொத்து உரிமைகளை பெற  சட்ட உரிமைகள் பெறாத நிலையில் தான் வாழ்ந்து வருகின்றனர்.  வாழ்க்கை ஆதாரத்திற்கான  பணமில்லாமல், ஒரு விதவை தனித்து விடப்படுகிறாள், அவள் தன் தந்தைவழி வீட்டிற்கும்   திரும்ப அனுமதிக்கப்படுவதில்லை.

 

”விருந்தாவனத்தில் விதவைகள் ஹோலி கொண்டாடுவதை வரவேற்கிறோம்” என சமீபத்தில் கேட்ட குரல்  "விதவைகள் நிலை இன்றும் மாறவில்லை என்பதையே குறிக்கிறதுtown of widow

 

இந்தியாவின் புனித நகரம் என்று அழைக்கப் பட்டிருந்த விருந்தாவனம் இந்துக் கடவுளான கிருஷ்ணரின் பிறப்பிடமாக நம்பப்படுகிறது. நகரத்தில் 4,000க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளன. ஏறக்குறைய 60,000 ஆயிரம் மக்கள்தொகை கொண்ட இந்த நகரத்தில் 20,000 விதவைகள் வாழ்கின்றனர் என்று கணக்குகள் சொல்கிறது. தற்போது விருந்தாவனம் 'விதவைகளின் நகரம்'என்ற பெயரில் மாறியுள்ளது. குடும்பத்தால் கைவிடப்பட்ட  ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த  நகரத்தில் வறுமையில் பரிதாபமான வாழ்க்கை வாழ்ந்து வருவதை காணலாம். வறிய மற்றும் புறக்கணிக்கப்பட்ட  விதவைகள் தங்கள் மரணம் வரை வாழும் இல்லங்கள், தங்குமிடங்கள் மற்றும் நெருக்கடியான குடியிருப்புகள் நிறைந்த நகரமாக மாறியுள்ளது பிருந்தாவன்.

அனைவருக்கும் கவுரவமான வாழ்க்கை அடிப்படை உரிமை என்று கூறியுள்ள அரசியல் அமைப்பு கொண்ட நாட்டில் தான்  விதவைளுக்கான தனி ஊரும் அமைத்து வைத்துள்ளனர்பல ஆண்டுகளாக இந்த விதவைகளில் பெரும்பாலோர் வறுமை மற்றும் தனிமையில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

மூடநம்பிக்கை கொண்ட உறவினர்கள்;  விதவைகள் துரதிர்ஷ்டத்தை கொண்டு வருவதாகவும், அவர்களின் கணவர்களின் மரணத்திற்கு காரணமாக  பெண்களைக் குற்றம் சாட்டும் நிலையும் உள்ளது.  வயது முதிர்ந்த நிலையிலும், தனது உணவைத் தாங்களே சமைத்து, வருமானத்திற்கு என  பிச்சை எடுக்கும் நிலையில் தான்  தள்ளப்பட்டுள்ளனர். வாழ்க்கையின் பெரும்பகுதியைச் ஆதரவற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

 அனைவருக்கும் கவுரவமான வாழும் உரிமை என்று கூறிய அரசியலமைப்பு சட்டம் இப்பெண்களுக்கு கொடுக்கும் பதில் தான் என்ன?

 

 


பிருந்தாவனத்தில் உள்ள பெண்களின் மோசமான வாழ்க்கை நிலைமைகள் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளுக்குப் பிறகு, அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துமாறு இந்திய உச்ச நீதிமன்றம் அரசு மற்றும் சிவில் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. சமூக-பொருளாதார நிலைமைகள் குறித்த தரவுகளை சேகரிக்க உத்தரபிரதேச அரசு இப்போது ஒரு குழுவை நியமித்துள்ளது.

2020 தொகுதிக்கு வருகை தந்த ஹேமா மாலினி, விருந்தாவனத்தில் சுமார் 40,000 விதவைகள் நிரம்பி வழிவதாகவும் தனது தொகுதிக்குள் இனி  விதவைகள் வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியதாக விமர்சனங்களுக்கு உள்ளானார். ஹேமாலினியின் கூற்றுப்படி மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் ஏற்கனவே நல்ல கோவில்கள் இருக்கிறது, அவர்கள் அங்கு  தங்கலாம் என்றும் மேற்கு வங்கம் மற்றும் பீகாரில் இருந்து  மதுராவில் வரும் விதவைகளின் வருகையை தடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
 

கிருஷ்ணர் பிறந்த ஊரில் இறந்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கையே விதவைகளை மதுரா விருந்தாவனுக்கு கொண்டு சொல்லப்படுகிறது.

 

இந்தியாவில் விதவைகளுக்கு ஆன சட்டங்கள் இருப்பினும் அதை நடைமுறைப்படுத்தும் சமூக சூழலும் இல்லை;   இதை  சிறப்பாக முன்னெடுக்க நேர்மையான அரசு அதிகாரிகளும் இல்லை.  
 
ஹேமாலினி போன்ற ஒரு பெண் சட்ட மன்ற உறுப்பினரால் விதவைகளை, குடும்பங்கள் புரக்கணிக்க கூடாது என்று சொல்லக்கூடிய அறிவு இல்லை, அரசு உதவிகளை உயர்த்த வேண்டிய தேவையை பற்றி சொல்லவில்லை. புரக்கணிக்க பட்ட பெண்களை பாதுகாக்க வேண்டிய அரசின் கடமைகளை பற்றி எடுத்து சொல்லாது, அதற்கு பதில் நாடு எங்குமுள்ள கோயில்களில் விதவைகளுக்கு அடக்கலம் கொடுக்க பணிகிறார். 
 
விதவை என்ற வார்த்தையை கைபெண் என்று மாற்றுவதாலும் விதவைகளுக்கு எந்த நலனும் கிடைக்கபோவதில்லை. விதவை பெண்கள் பாதுக்கப்புக்கான ஆக்கபூர்வமான நடவடிக்கை அரசின் பக்கம் இருந்து வருவது மிகவும் அவசியம். வேலை வாய்ப்புகளில் தொழில் புரிய முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். வெளிநாடுகளில் என்பது போல கணவன் இறந்தால் சொத்தின் பங்கு மனைவிக்கு வந்தடைய எளியசட்ட முறைகள் அவசியம்.  பெண்கள் சுயசார்பாக நிற்கும் வரை எந்த முன்னேற்றவும் பெண்கள் வாழ்க்கையில் வரப்போவதில்லை. 
விதவை, கைபெண் என்ற வார்த்தை-மாற்ற மாஜிக்குகளில் நம்பாது தங்கள் பார்வையிலும் மனநிலையிலும் உருவாகும் மாற்றங்கள் ஆக்கபூர்வமான செயல்பாடுகளும் சுயசார்பான வாழ்க்கை முறைகள் மட்டுமே சமூக அவலங்களில் இருந்து காப்பாற்ற வலுவானது. 
http://www.francescabraghetta.com/en/2018/03/04/la-citta-delle-vedove/
https://www.inuth.com/india/international-widows-day-the-city-of-widows-in-india/

ஷிகாரா’

விது வினோத் சோப்ராவின் திரைப்படம்  ‘ஷிகாரா’.   இது 2020 ல் வெளிவந்தது. 1990 ல் காஷ்மீர் பண்டிதர்கள் வெளியேற்றப்பட்டதை பின்புலனாக கொண்டு   இளம்  தம்பதிகளான சிவ்குமார் தார் மற்றும் சாந்தி தார் வாழ்க்கையைத் மையமாகச் சொன்ன  கதை இது. காஷ்மீரி பண்டிதர்களின் அவலநிலையையும், துன்பங்களை எதிர்கொள்ளும் அவர்களின் தீர்க்கமுடியாத வலிமையையும் தைரியத்தையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்த முயற்சியாகும் இத்திரைப்படம்.

பல தசாப்தங்களாக இருக்கும் தங்கள் சொந்த பூர்வீக ஊரில், அக்கம் பக்கத்தின் ஆதரவுடன் பாதுகாப்பாக இருப்பதாக  நம்பிக் கொண்டு இருக்கிறார்கள் ஆசிரியரும், இலக்கிய ஆர்வலர் சிவ் மற்றும் அவரது மனைவி சாந்தியும்.  திருமணம் ஆகி ஒரு ஆண்டு ஆகிய நிலையில்  அழகிய காஷ்மீர் பள்ளத்தாக்கில் வகுப்புவாத பதற்றம் ஒவ்வொரு நாளிலும் அதிகரித்து வருகிறது தம்பதியினரை கலக்கம் கொள்ள செய்கிறது.  சிவ்வின் உயிர் நண்பன் லத்தீப்பின் அரசியல்வாதியான தகப்பனார்  கொல்லப்படுகிறார்.  அத்துடன் கிரிக்கட் விளையாட்டு வீரரான  லத்தீப், தீவிரவாத இயக்கங்களில் இணைந்து கொள்கிறார்.

 தங்களுக்கு தினம் பால் கொண்டு வரும் பால் வியாபாரி ”இனி உங்கள் வீடுகளில் நாங்கள் குடியிருப்போம், நீங்கள் தில்லிக்கு போக வேண்டியது தான்” என்கிறான் குடூரச்சிரிப்புடன்.பைத்தியக்காரன் புலம்புகிறான் என எண்ணி ஆறுதல் அடைகின்றனர்.  ஆனால் ஜனவரி 19, 1990 இன் கொடூரமான இரவு தங்கள் உயிரை  காப்பாற்றிக் கொள்ள,  பல்லாயிரம்  காஷ்மீரி பண்டிதர்களுடன் தங்கள் பிறப்பிடத்தை விட்டு வெளியேறி அகதிகளாக தில்லி வந்து சேர்கின்றனர்.   

முனைவர் பட்டத்திற்கு சேர இருந்த சிவ், அகதிமுகாமில் ஆசிரியராக தன்னார்வத்துடன் பணிசெய்து கொண்டு தனது காதல் மனைவியுடன், எல்லாவித துன்பங்களையும் எதிர்கொண்டு வாழ்ந்து வருகிறார்.  அத்துடன் முப்பது வருடமாக அமெரிக்கா அதிபருக்கு தங்கள் நிலையை குறிப்பிட்டு  தொடர்ந்து  கடிதங்களும் எழுதி வருகிறார்.   இத்தனை துன்பத்திலும் தங்கள் குழந்தைகள் கல்வி பெற வேண்டும், மனித நேயர்களாக இருக்க வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார்.

காஷ்மீரில், ஆப்பிள் மலிவாக கிடைக்க பெற்றவர்கள், தில்லியில் தக்காளிப் பழத்தை உண்டு வாழும் சூழலுக்கு தள்ளப்படுகின்றனர். ஒரு திருமண நிகழ்விற்கு பங்கு கொள்ளும் தம்பதிகள், தங்கள் தனித்த காஷ்மீர் கலாச்சாரம் மறைந்து, சினிமா கேளிக்கை கலாச்சாரத்திற்குள் புதுத்தலைமுறை வந்தடைந்ததை கண்டு வருந்துகின்றனர்.


30 வருடம் ஆகிவிட்ட நிலையில் இந்திய அரசாலும் தீர்வை கொடுக்க இயலவில்லை, அமெரிக்கா அரசும் எந்த பதிலும் தரவில்லை.  அப்படி இருக்க தனது மனைவி, மூளை சம்பந்தமான நோய்க்கு தாக்கப்பட்டதை அறிந்து கொள்கிறார் சிவ்.  என்றாவது தாயகம் திரும்பி போவோம் என்ற நம்பிக்கையில் விற்காது வைத்து இருந்த தனது பூர்வீக வீட்டை விற்று சிகித்சை மேற்கொள்ள முடிவெடுத்த நிலையில் மனைவியும் இறந்து போகிறார். மனைவியின் அஸ்தியை பூர்வீக வீட்டில் சேர்ப்பதுடன் கதை முடிகிறது.

இந்த திரைப்படத்தில் ஒரு கருத்தாக ‘தலைமை’ என்பது மக்களை பிரித்து ஆள்வது அல்ல, ஒற்றுமையாக சேர்த்து வைத்து ஆள்வதே என்ற கருப்பொருளை முன்நிறுத்த துணிகிறார் இயக்குனர்.  முஸ்லீம் தீவிரவாதியான தனது நண்பன் லத்தீபுடன் கடைசி வரை நட்பு பேணுகிறார் சிவ். ஆயுத வியாபாரிகளான அமெரிக்காவால் தான்; சகோதர்கள் போல் வாழ்ந்த இஸ்லாமியர்களும் காஷ்மீர் பண்டிதர்களுக்கும் இடையில் தொடர்ச்சியான மோதல் உருவானது  என்று  சொல்கிறார் இயக்குனர்.

1980 இல், அப்துல்லா காஷ்மீரின் இஸ்லாமியமயமாக்கலைத் தொடங்கினார். அவரது அரசாங்கம் சுமார் 2,500 கிராமங்களின் பெயர்களை அவற்றின் உண்மைப் பெயர்களிலிருந்து புதிய இஸ்லாமிய பெயர்களாக மாற்றியது.

செப்டம்பர் 14, 1989 வக்கீல் மற்றும் பாஜக தலைவரான டிக்கா லால் தபூவை அவரது இல்லத்திற்கு வெளியே கொடூரமாக கொலை செய்யப்பட்டது;  சிறுபான்மை சமூகமான பண்டிட்டுகளுக்கு   அச்சத்தை ஏற்படுத்தியது.  மூன்று வாரங்களுக்குப் பிறகு, ஜே.கே.எல்.எஃப் இன் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான மக்பூல் பட்டுக்கு  மரண தண்டனை விதித்திருந்த  ஓய்வுபெற்ற நீதிபதி நிகலந்த் கஞ்சூ  பகலில் கொல்லப்பட்டார்.  டிசம்பர் 8, 1989 அன்று, ஜே.கே.எல்.எஃப் உறுப்பினர்களால் அப்போதைய வி.பி.சிங் அரசாங்கத்தில்  உள்துறை அமைச்சராக இருந்த முப்தி முகமது சயீத்தின் மகள் ரூபையா சயீத்  கடத்தப்பட்டார்.  அப்துல்லா தலைமையிலான அரசின் சிறையில் அடைக்கப்பட்ட 13 தீவிரவாதி உறுப்பினர்களை விடுவித்த பின்னர் ரூபையா சயீத்   விடுவித்தனர்.

இதற்கிடையில், செய்தித்தாள்கள், சுவரொட்டிகள் மற்றும் மசூதிகள் மூலமாக காஷ்மீரி பண்டிதர்களுக்கு  இஸ்லாத்திற்கு மாறவும், காஷ்மீரை விட்டு வெளியேறவும் அல்லதுகொல்லப்படுவீர்கள் போன்ற மூன்று வாய்ப்புக்களை அறிவித்து சுவரொட்டிகள் காணப்பட்டன.   ஒரு உள்ளூர் உருது தினசரி, அப்தாப் இந்துக்களை வெளியேறுமாறு அச்சுறுத்தும் செய்திகளையும் எடுத்துச் சென்றது.

 ஜனவரி 19 அன்று, ஃபாரூக் அப்துல்லா அரசாங்கத்தை அகற்றி , ஆளுநரின் ஆட்சி அமலுக்கு வந்தது.  அத்துடன் பண்டிட் சமூகம் ஜனவரி 20 ஆம் தேதி,   காஷ்மீர்  பள்ளத்தாக்கிலிருந்து முதன்முதலாக வெளியேறத் தொடங்கியது.  ஜனவரி 21 அன்று, காஷ்மீர் மோதலில் சி.ஆர்.பி.எஃப், 160 காஷ்மீர் முஸ்லீம் எதிர்ப்பாளர்களை சுட்டுக் கொன்றது.  காவல்துறையினர் தங்கள் பதவிகளை விட்டு வெளியேறியதால் பண்டிதர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழல் உருவானது.  ஸ்ரீநகரில், பிப்ரவரி 13 ஆம் தேதி, தூர்தர்ஷன் நிலைய இயக்குநர் லாசா கவுல் சுட்டுக் கொல்லப்பட்டார். பி.எஸ்.எஃப் பணியாளரின் மனைவி எம்.என். பால் என்ற அரசாங்க அதிகாரியின் மனைவி கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பகவத் கீதையை காஷ்மீரிக்கு மொழிபெயர்த்த பிரேமி, தனது மகனுடன் அவரது வீட்டின் அருகே கொல்லப்பட்டார். அதன்பின் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இரண்டாவது, பெரிய வெளியேற்றம் நிகழ்ந்தது.  அரசியல் போட்டிகள், தீவிர இஸ்லாமியமயமாக்கல் மற்றும் கொடூரமான கிளர்ச்சியின் மத்தியில், சிறுபான்மை சமூகமான  காஷ்மீர்  பண்டிதர்களுக்கு தங்கள் தாய் நாடு, சொத்துக்கள், வேலைகள், பண்ணைகள் மற்றும் கோயில்களை விட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை..  இந்தியாவின் வரலாற்றில் முன்பு இல்லாத வகையில் நடந்த வெளியேற்றங்களில் ஒன்றாகும்.

 அரசியல் ஆய்வாளர் அலெக்சாண்டர் எவன்ஸின் கூற்றுப்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் வசிக்கும் காஷ்மீர் பண்டிதர்களில் 95 சதவீதம் (1,50,000 முதல் 1,60,000 )  பேர் 1990 ல் வெளியேறினர் என்கிறது.  மறுபுறம், நோர்வே அகதிகள் கவுன்சிலின் உள்ள இடப்பெயர்வு கண்காணிப்பு மையத்தின்  அறிக்கையின் படி  2,50,000 பண்டிதர்கள் இடம்பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளனர்.  இதற்கிடையில், ஒரு சிஐஏ அறிக்கையின் படி  மொத்த மாநிலத்திலிருந்து 3,00,000 பேர் இடம்பெயர்ந்ததாகக் கூறுகின்றனர்.  


காஷ்மீர் பத்திரிகையாளர் கோவர் கிலானி, சில காஷ்மீர் முஸ்லிம்களின் வேண்டுகோளின் பேரில், இந்திய மூத்த நிர்வாகி ஜக்மோகனிடம் பண்டிதர்களை பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறவிடாமல் தடுக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். அதற்கு பதிலாக, பண்டிதர்கள் வெளியேற முடிவு செய்தால், அவர்களுக்காக அகதி முகாம்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், புறப்படும் அரசு ஊழியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்படும் என்றும் ஜக்மோகன் கூறினார்.  அவர்கள் வெளியேறுவதில் இருந்து பின்வாங்கினால் அவர்களுடைய பாதுகாப்பிற்கு தன்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது என்றும் அவர் அறிவித்து இருந்தார்.

 தங்கள் சொந்த நாட்டில் அகதிகளாக மாற்றப்பட்டு ஜம்மு மற்றும் டெல்லியில் உள்ள அகதி முகாம்களில் ஆயிரக்கணக்கான காஷ்மீர் பண்டிட் அகதிகள் சிறிய அறைகளில் குடியேறி, மோசமான நிலைமைகளுக்கு உள்ளாகினர். அவர்களில் பலர் தங்கள் மூதாதையர் நிலத்திற்குத் திரும்புவதாக 30 வருடங்களாக நம்பிக்யோடு  இருக்கின்றனர்.

2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டபோது, ​​காஷ்மீர் பண்டிதர்களை உள்ளடக்கிய 64 குடிமக்கள் “இதை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டனம் செய்தனர்..

இப்படி வரலாறு இருக்க, கதையில் காதல் வாழ்க்கைக்கு கொடுத்த முக்கியம்  வரலாற்றில் நிகழ்ந்த கொடூர சம்பவங்களூக்கு கொடுக்கவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.  ஒரு சில  குறிப்புகளுக்கு அப்பால்  படம் துயர் சம்பவங்களை பற்றி செல்லவில்லை, திரைக்கதையின் சில பகுதிகள்  அவசரமாக எழுதப்பட்டதைப் போல கடந்து சென்றது என்றும்  சிலர் குறை கூறினர். .

அறிமுக ஜோடிகளான சாடியா மற்றும் ஆதில் கான் ஆகியோர் திரையில் ஒரு அழகான  ஜோடியாக திறம்பட நடித்துள்ளனர்.  ‘ஷிகாரா’வின் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சந்தேஷ் ஷாண்டில்யாவின்  இசை மற்றும் பின்னணி இசை  இதமாக கதையை கொண்டு செல்ல உதவுகிறது. காட்சி அமைப்பு சிறப்பாக செய்ட்திருந்தனர்.  திரைக்கதையிலும் தேவையான ஆழம் இருந்தது. 

திரைப்படம் கற்பனை என்ற் பெயரில் திரைப்படம் எடுப்பவர்கள் மத்தியில் ஒரு வரலாற்றை மிகவும் அழகியலுடன் ஆழமான கருத்தாங்களுடன் ஒரு சில வரலாற்று சம்பவங்குளடன் எடுத்த இந்த திரைப்படம் அனைவரும் பார்க்க வேண்டிய வரலாற்று திரைப்படம். 


https://www.ceylonmirror.net/46049.html?fbclid=IwAR3J4dvKjLzARdxIe4kI-RzOi0aAbyj-Ixov54z7wGjJv4CsUGoNsLFrofI

 

 


1 Jan 2022

தமிழன் சொல்ல மறந்த காட்சிமொழி-கிருஷ்ண கோபால்


தாலம் வெளியீட்டில், எழுத்தாளர் மற்றும் ஊடகவியாளர் கிருஷ்ண கோபால் எழுத்தில் 2018 ல் வெளிவந்த திரைப்படங்கள் பற்றிய புத்தகம் ஆகும் ”தமிழன் சொல்ல மறந்த காட்சி மொழி”.


சினிமாவை பற்றிய பல முன்னணி இதழ்களில் பிரசுரிக்கப் பட்ட கட்டுரைகளில், தேர்ந்தெடுத்த         பதினோரு  கட்டுரைகள் அடங்கியது இப்புத்தகம்.

 

திருவனந்தபுரத்தில் நடக்கும் உலகத்திரைப்படம் நிகழ்வு பற்றிய நல்லதொரு அறிமுகம் தந்துள்ளார் ஆசிரியர். பாலாவின் பரதேசி திரைப்படம் அதன் ஆதாரமான நாவல் எரியும் பனிக்காட்டை முன்நிறுத்தி, பாலாவின் கபட முகத்திரையை கிழித்துள்ளார். அடுத்த கட்டுரை தமிழரான மலையாளத் திரைப்பட தந்தை ஜெ.சி டானியேல் பற்றிய திரைப்படம் குறித்தது.   திரைப்படத்தின் பின்புலன், அன்றைய வரலாறு கலந்த  ஒரு சிறப்பான கட்டுரை.


அடுத்தும் திருவனந்தபுர உலகத்திரைப் படவிழாவில் வெளியிடப்பட்ட  திரைப்படங்கள் பற்றிய அரிய தொகுப்பு.  உலக சினிமாக்களின் உருவம், தயாரிப்பு அதன் தாக்கம் உள்ளடங்கி விரிவான பல தகவல்கள் அடங்கிய  கட்டுரை இது.


தமிழ் இயக்குனர்களின் காட்சி மொழி சார்ந்த வளர்ச்சி இன்மையை, தோல்வியை அதன் காரணத்தைப்பற்றியும் குறிப்பிட்டுள்ளார் அடுத்த கட்டுரையில்.


பல சில முக்கியமான ஆவணப்படங்களை  பற்றி எடுத்துரைத்த கட்டுரை. முக்கியமாக எச்சம் மிச்சம் என்ற பெயரிலுள்ள ஆவணப் படத்தில் தேவையும் ஆக்கவும் அதன் சமூகத்தேவை பற்றி மிகவும் விரிவாக சொல்லியுள்ளார்.

https://www.youtube.com/watch?v=YFxd8HKzrlg&t=4s (ஆவணப் படம்)

அடுத்து ஐரோப்பிய  படங்களல்லாத உலகத்திரைப்படங்கள் ஜப்பானிய மற்றும் பல உலக மொழியிலுள்ள  திரைப்படக்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறார் எழுத்தாளர் கிருஷ்ணகோபால்.

கேரளாவில்     ஆலயமாக மாறிய திரைஅரங்கு பற்றி ஒரு சுவாரசியமான கட்டுரை உள்ளது. அதில் தமிழர்கள் மேல்  மலையாள சினிமா  தங்கள் காட்சி மற்றும் கருத்து கதை ஊடாக செலுத்தும் காள்ப்புணர்வை பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.

செழியனின் சினிமாவைப் பற்றிய புத்தகம் பற்றிய ஒரு அறிமுகம் கிடைக்கிறது இப்புத்தகம் வழியாக.

கடைசி பாடத்தில் மலையாள திரைப்பட இயக்குனர் அடூர் கோபாலகிருஷனன் பற்றிய ஒரு  சிறப்பான கட்டுரை இடம் பெற்றுள்ளது.

 

 இப்படியாக திரைப் படங்கள் சார்ந்த கலைத்துவமான , மற்றும் சமூகம் சார்ந்த  மனித நேயம் கொண்ட பார்வை இப்புத்தகத்தில் உண்டு. சினிமாவை ஆக்கபூர்வமாக துதிபாடல்கள் இல்லாது சரியாக  அணுகிய நல்ல புத்தகம்.

 

புத்தக வடிவமைப்பு, அட்டைப்படம் சிறப்பாக இருந்தது. எழுத்தும் எளிய நடையூடாக சிறப்பான ஆக்கபூர்வமான கருத்துக்களை பதித்துள்ளார் புத்தக ஆசிரியர்.

book shop


 

 

 

31 Dec 2021

நினைவுகளின் உயரங்கள்(ഓർമ്മകളുടെ പടവുകൾ !)

 

நினைவுகளின் உயரங்கள்(ஓர்மயுடை படவுகள்) என்ற பெயரில் எங்கள் உயர் பள்ளி ஆசிரியர் டோமி சிரியக் எழுதிய ஒரு நினைவுத் தொகுப்பு ஆகும் இப்புத்தகம்.

கேரளா மலையோர பிரதேசம் ஆன இடுக்கி மாவட்ட மக்கள் கதை சொல்லிய புத்தகம்.  பெருவாரி மக்கள் குடியேறிகளாக இருந்தாலும் இயற்கையுடனும் வன விலங்குகளுடனுன் சமூக அமைப்புடனும் போராடி வாழும் மக்கள் உள்ளடங்கிய பகுதி ஆகும் கட்டப்பனை தொடங்கி,  பீர்மேடு மற்றும் வண்டிப்பெரியார், குமளி நிலைப்பகுதியை மக்கள் வாழ்க்கையை பற்றி அறிய தந்த புத்தகம் என்றால் மிகையாகாது.  கொஞ்சம் வரலாறு, எங்கள் ஆசிரியரின் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பு, அன்றைய சமூக சூழல், கல்வி நிலை , வறுமை, மக்களின் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு பகுதிக்கான பயணம்,  தமிழ் மலையாளம் இரு மொழி கலந்த மக்களின் வாழ்வியல் , எங்கள் ஊரில் பணியாற்றிய ஆசிரியர்கள் பற்றி  தகவல் கிடைத்த புத்தகம்.

 காலம் மறக்க வைத்த இடப்பெயர்கள், மனிதர்கள், பிறந்து வளர்ந்த ஊரைப் பற்றிய அறியா தகவல்கள் மற்றும் சில வரலாறுகள் பற்றியும் தெரிந்து கொள்ள இயன்றது. எங்கள் பள்ளியில் படித்து பிற்பாடு வாழ்க்கையின் பல நிலைகளில் பிரகாசித்த மாணவர்கள், அகாலத்தில் மரணித்த எங்கள் பள்ளி தோழர்கள், மறைந்த ஆசிரியர்கள் பற்றியும் நினைவு கோர வைத்த புத்தகம்.

எங்கள் ஆசிரியர் என்னையும் நினைவு கூர்ந்து கண்டு ஒரு பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆசிரியர்களின் பாராட்டை ஊரை விட்டு வந்து 20 வருடங்கள் பின்பு பெறுதல் பெரும் பாக்கியம் அல்லவா! என் ஆசிரியரை நன்றியோடு வணங்குகிறேன்.

பொதுவாக எங்கள் ஆசிரியர் -டோமி சர் யாரையும் புறம் கூறாதவர், மிகவும் அன்பான, அமைதியான ஆசிரியர். அதனால் இப்புத்தகத்தில் அவருடைய மற்றவர்களை பற்றிய விசாலமான பார்வையும் அவர்களை பற்றிய நல்ல நினைவுகள் மட்டுமே உள்ளது.

அண்ணன்- தம்பி மரம், நாங்கள் பாடசாலைக்கு நடந்து சென்ற பாதைகள், அன்றைய கல்வி அமைப்பு எங்களுடைய  மலைக்கும், மழைக்கும் பனிக்கும் இடையே வாழ்ந்த எங்கள் வாழ்க்கையை பிரதிபலித்த சிறந்த படைப்பு இது.

எங்கள் ஆசிரியர் தன்னுடைய எழுத்து வழியாக தன்னுடைய வாழ்க்கையை மட்டுமல்ல அன்றைய காலம் வாழ்ந்த பல மனிதர்களின் கதையை சொல்லிய புத்தம் இது. 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


ഓർമ്മകളുടെ
പടവുകൾ (ഓർമ്മകളുടെ ഉയരങ്ങൾ) എന്ന പേരിൽ ഞങ്ങളുടെ ഹൈസ്കൂൾ അധ്യാപകൻ ടോമി സിറിയക് എഴുതിയ ഓർമ്മക്കുറിപ്പുകളുടെ ഒരു സമാഹാരമാണ് പുസ്തകം.

കേരളത്തിലെ മലയോര മേഖലയായ ഇടുക്കി ജില്ലയിലെ ജനങ്ങളുടെ കഥയാണ് പുസ്തകം പറയുന്നത്. കുമളി പ്രദേശമായ പീരുമേട്, വണ്ടിപ്പെരിയാ    ഭൂരിഭാഗം ജനങ്ങളും കുടിയേറ്റക്കാരാണെങ്കിലും ജനജീവിതത്തിലേക്ക് ഒരു നേർക്കാഴ്ച്ച നൽകിയ പുസ്തകമാണ് എന്ന് പറഞ്ഞാൽ അതിശയോക്തിയില്ല. ചെറിയ ചരിത്രം, നമ്മുടെ അധ്യാപകൻ ടോമി സിറിയക് സാറിൻറെ സ്കൂൾ- കോളേജ് വിദ്യാഭ്യാസം, അന്നത്തെ സാമൂഹിക ചുറ്റുപാടുകൾ, വിദ്യാഭ്യാസ നിലവാരം, ദാരിദ്ര്യം, ഒരിടത്ത് നിന്ന് മറ്റൊരിടത്തേക്കുള്ള ആളുകളുടെ യാത്ര ഇവയൈ  കുറിചാണ്  പ്രതിപാദിച്ചു  ഇരിക്കുന്നത്.

കേരളത്തിലെ മലയോര മേഖലയായ ഇടുക്കി ജില്ലയിലെ ജനങ്ങളുടെ കഥയാണ് പുസ്തകം പറയുന്നത്. കാലം മറന്നുപോയ സ്ഥലനാമങ്ങൾ, ആളുകൾ, ജനിച്ചു വളർന്ന പട്ടണത്തെക്കുറിച്ചുള്ള വിവരങ്ങൾ, ചില ചരിത്രങ്ങൾ എന്നിവയെക്കുറിച്ചും അറിയാൻ കഴിയും. നമ്മുടെ സ്കൂളിൽ പഠിച്ച് ജീവിതത്തിന്റെ പല ഘട്ടങ്ങളിലും തിളങ്ങി നിന്ന വിദ്യാർത്ഥികളെയും, അകാലത്തിൽ മരണമടഞ്ഞ സഹപാഠികളെയും, അന്തരിച്ച അധ്യാപകരെയും ഓർമ്മിപ്പിക്കുന്ന പുസ്തകം.

നമ്മുടെ അധ്യാപകൻ ടോമി സിറിയക് സാർ  എന്നെയും ഓർത്തു, ഒരു പേജിൽ  ​​കണ്ടപ്പോൾ സന്തോഷത്തോടെ ആശ്ചര്യപ്പെട്ടു! ഞാൻ എന്റെ ഗുരുവിനെ നന്ദിയോടെ നമിക്കുന്നു.

സാധാരണയായി ഞങ്ങളുടെ അധ്യാപകൻ - ടോമി സാർ വളരെ സ്നേഹമുള്ള, ആരെയും കുറ്റം പറയാത്ത പ്രകൃതമാണ്, ശാന്തനായ അധ്യാപകനാണ്. അതിനാൽ പുസ്തകത്തിൽ അദ്ദേഹത്തിന് മറ്റുള്ളവരെക്കുറിച്ചുള്ള വിശാലമായ വീക്ഷണവും അവരെക്കുറിച്ചുള്ള നല്ല ഓർമ്മകളും മാത്രമേ ഉള്ളൂ.

 


ചേട്ടൻ - അനിയൻ മരം, ഞങ്ങൾ സ്കൂളിലേക്ക് നടന്ന വഴികൾ, അന്നത്തെ വിദ്യാഭ്യാസ സമ്പ്രദായം , മലകൾക്കും മഴയ്ക്കും മഞ്ഞിനും ഇടയിൽ ജീവിച്ച നമ്മുടെ ജീവിതത്തെ പ്രതിഫലിപ്പിക്കുന്ന ഒരു മാസ്റ്റർപീസ് ആണ്.

 

എഴുത്തിലൂടെ സ്വന്തം ജീവിതം മാത്രമല്ല, അവിടെ ജീവിച്ച അനേകം മനുഷ്യരുടെ കൂടെ കഥ  പറഞ്ഞ പുസ്തകം ആണ്.

30 Dec 2021

சமூக நாவல் 'தேரியாயணம்'-ஆறுமுகப் பெருமாள் என்ற கண்ணகுமர விஸ்வரூபன்



அக்டோபர் 2021 ல் பாவை பதிப்பகம் ஊடாக வெளிவந்த சமூக நாவல் தேரியாயணம் . இதை எழுதியவர் தேரிக்காட்டு இலக்கியவாதி என்று அழைக்கப்படும் ஆறுமுகப் பெருமாள் என்ற கண்ணகுமர விஸ்வரூபன்.  இவர் நாசரேத்தை சேர்ந்தவர். பாளையம்கோட்டையை சேர்ந்த  நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் முனைவர் நா. இராமசந்திரன் முன்னுரை வழங்கி உள்ளார்.

 ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே கல்வி பெற்ற எழுத்தாளர், 300 க்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதி சிற்றிதழ்களில் பிரசுரித்து உள்ளார்.  நான்கு சிறுகதைத் தொகுப்பை வெளிக் கொண்டு வந்துள்ளார்.

தேரி மண் நிலத்தைத் தேரிக்காடு என்று அழைக்கப்படுகிறது .  இந்த தேரிக் காட்டை நம்பிப் பிழைக்க வந்தவர்கள், தனது சக சனங்களின் செம்மண் புழுதிவெளி வாழ்நிலையை நாவல் வடிவத்தில் எழுதியுள்ளார்.

கதை நாசரேத் தூய யோவான் ஆலைய மணியோசையுடன் ஆரம்பிக்கிறது.

கதை  அன்றைய சமூக நிலை, கல்வி நிலை, பண்பாட்டுத் தளம், அரசு அதிகாரிகளின் ஊழல் என படம் பிடித்து காட்டுகிறது.

அன்றைய சமூக கட்டமைப்பு, தன் குழந்தைகளுடன் தனி மனுஷியாக வாழ்ந்து காட்டிய சுப்பம்மா, சாதாரண மக்கள் மத்தியில் மனசாட்சியாக, சில போது நீதிபதியாக சிலபோது முதியவராக வழிநடத்தும் சொடலையாண்டி கிழவர் எப்படியும் பணம் ஈட்ட வேண்டும் என்று வாழும்; அரசு அதிகாரிகளின் கையாளான அரைகுறை கல்வியறிவு பெற்ற சடையன், அன்பு காட்டுவதன் மூலம் ஆளுமை செலுத்தும் குழுவின் தலைவி மாரி, பொல்லாதவளான பேச்சி, சுயநலம் கொண்ட கோசலை, கோசலையின் காதலன் மற்றும் சொடலையாண்டி கிழவரின் பேரன் வள்ளி முத்து காக்கையன், ராசபாண்டி,சாமைக் கோழி, செல்லக்கனி போன்ற இளைஞர்கள், என ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் சிறப்பான  அம்சங்களுடன்   படைத்துள்ளார்.

 

உச்சி வெயிலிலும், தங்கள் கஞ்சி பாத்திரங்களை தேரி மண்ணுக்குள் வைத்து பருகும் பழையவர்களின் நுட்பம் , அன்றைய நாட்களில் துட்டளவு ஒப்பந்தம், தொகையளவு ஒப்பந்தம், போன்ற கைலஞ்சம் கொடுப்பு என  எளிய மக்கள் வாழ்க்கையையும் இயற்கையை வேரறுக்கும் வளமழிப்பு ஒப்பந்தம் போன்றவற்றை பற்றியும் குறிபிட்டுள்ளார்.  கல்வியின் தேவையும் பெண்கள் படித்திருக்க வேண்டிய அவசியத்தை பற்றியும் குறிப்பிடுகிறார்.

 

 

இந்த நாவலில் கையாளப் பட்டுள்ள  வட்டார மொழிப் பிரோயகம் தனித்துவமான நாவலாக மாற்றுகிறது. மற்றும் கருத்தாக்கம், கதைப்பின்னல், கதையின் அமைப்பு சிறப்பாக உள்ளது. கதையின் பின்புலன் தேரிக்காடு என்பது மிகவும் புதுமையும் எளிய மனிதர்களின் வாழ்வியல் அறிவது சுவாரசியமாகவும் உள்ளது.

 

குடும்பம் என்ற அமைப்பு எப்படியாக ஒருவர் நலனை இன்னொருவர் மிதித்து ஏற காரணமாக அமைகிறது, குடும்ப உறவின் உச்சம் தாய்மை என்ற நிலை, தன்  ஆண் மகன் நலனை நாடி பெண் வாரிசின் வாழ்க்கையை பலி கொடுக்க தயங்காததையும் சுட்டி உள்ளார்.


முடிவு பல கம்யூனிஸ்டு நாவல்கள் என்பது போல் குடும்பம் என்ற கட்டமைப்பில் மாட்டுவதை விட துறவறம்  ஏற்க நினைத்த மாரி கதாப்பாத்திரம் சில கேள்விகளையும் இட்டு செல்கிறது.

ஒரு விருது பெறுவதற்கான எல்லா தகுதியும் உள்ள நாவல் இது.

https://www.ceylonmirror.net/66517.html