இந்தியாவின் பொய் முகம் கிழிக்கப்படும்
நாட்கள் வெகு தூரமில்லை. சுதந்திரம் அடைந்து
60 ஆண்டுகள் கடந்த பின்பும் மக்களின் வறுமையை ஒழிக்க இயலாத இந்தியா அரசால் மக்களுக்கு
என்ன பிரயோசனம் என்று சிந்திக்க வைக்கின்றது.
26 ஆப்பிரிக்க நாடுகளில் குடிகொள்ளும்
வறுமையை எதிர்கொள்ளும் மக்களை விட அதிகமான மக்கள் பீகார், மத்தியபிரதேஷ் , மேற்க்கு பங்ளாதேஷ், உத்தர
பிரதேஷ், ஒரிசா, உள்பட 8 மாநிலங்களை சேர்ந்த 420 மிலியன் மக்கள் வறுமையின் பிடியில் உள்ளனர்
என்று கணக்குகள் தெரிவிக்கின்றன. காந்தியின்
காங்கிரசாலோ உழைப்பாளிகளின் கம்னிஸ்டு ஆட்சியாலோ, எழைகளின் காவலன் லல்லு பிசாத், பாசமிகு அக்கா
மமதா பானார்ஜியாலோ எழ்மையை ஒழிக்க இயலவில்லை!
இந்தியாவில் 42 % மக்கள் (650
மிலியன்) வறுமையில் வாழ்கின்றனர் இதில் 340 மிலியன் மக்கள் மிகவும் கொடியதான
வறுமையில் வாழ்கின்றனர் என்பது மிகவும் துயர் தரும் உண்மை! வறுமையை அளக்க என ஒரே அளவீடுகள் இல்லை என்பதும் நம் அதிகாரிகளின் மக்கள் பற்றிய அக்கறையை தெரிந்து கொள்ளலாம்.
அர்ஜுன் சென் குப்தா ஆய்வுப் படி 70 % மக்கள்,
20 ரூபாய்க்கு குறைவான தின வருமானத்தில் வாழ்கின்றனர்
என்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
வறுமைக்கு காரணம் உலக பொருளாதாரம்,
இந்தியாவின் பொருதாளாதார கொள்கை என்று பல பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இந்தியாவில்
நிலைகொள்லும் கொள்ளக்கார அரசியல் கூட்டத்தின் பங்கும் மிகபெரிதாக உள்ளது. 55% மக்கள் கையூட்டு கொடுத்தே தங்கள் தேவைகளை அரசு
இயந்திரங்களில் இருந்து பெற்று கொள்கின்றனர்.
இந்த கேவலமான நிலையிலுள்ள இந்தியாவை
ஆளும் அதிகாரிகள் பக்கத்து நாடுகளுக்கும் தாங்கள் உதவி செய்வது போல் காட்டி கொண்டு வெளி நாடு
பயணம் மேற்கொண்டு ஏழைகளின் பணத்திலே சுற்றி
வருகின்றனர் என்பதும் இன்னும் மோசமான வருந்த தக்க செயல் . மேலும் இந்த அளவு ஏழைகள் வசிக்கும் நாட்டின் அதிபருக்கு பயண செலவு மட்டும்
205 கோடிகள், 181 மிலியன் மக்கள் வசிக்க சொந்தமாக வீடு இல்லாது துயர் கொள்ளும் போது
ஓய்வு பெறப்போகும் அதிபருக்கு வசிக்க 8 கோடி செலவில் 5 ஏக்கர்(2,60,000 சதுர அடி நிலப்பரப்பு) இடம் கொண்ட குடியிருப்பு! என ஊழலை எண்ணி
கொண்டே போகலாம்.
இன்றைய பத்திரிக்கை செய்திப்படி இந்தியா 3.10 கோடி ரூபாய்
உதவி தருகின்றதாம் ஸ்ரீலங்காவுக்கு. 1970 களில் இலங்கை மேற்கு நாடுகளிலும்
சிறப்பாக இருந்துள்ளது. மக்கள் செழிப்பாக வாழ்ந்துள்ளனர் என்ற சான்று உள்ளது. ஆனால்
இந்தியாவின் குள்ளை நரி அரசியலால் போர் முகத்லே கழித்து இன்றைய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இருப்பினும்
இப்போதும் இலங்கையை சுற்றி பார்த்து வரும் நண்பர்கள் கருத்துப் படி சுகாதாரத்திலும்
பண்பிலும் இந்தியாவை விட சிறப்பாக உள்ளதாகவே சொல்கின்றனர்.
ஈவு இரக்கமின்றி ஈழ மக்களின் இழிய நிலைக்கு காரணமாகி; பெரும் பகுதியான மக்களை அழித்து துன்பத்திற்க்கு உள்ளாக்கி விட்டு எத்தகைய முகத்துடன் மறுமடியும் அம்மக்களை சந்திக்க இந்திய அரசியல் கூட்டத்திற்க்கு துணிவு வருகின்றது. ஈழத்தை பற்றி கவலை கொள்ளும் இந்திய அரசு தன் சொந்த நாட்டு மக்களின் நலனில் எவ்விதம் ஆற்வமாக உள்ளது என்பது நிகழ்கால பல சம்பவங்கள் உணர்த்துவதே. பட்டிணி மரணம், சத்து குறைவான குழந்தைகள், உடல் நலம் குற்றிய இளம் பெண்கள் என இந்தியா தன் மக்களை மாபெரும் இன அழிப்புக்கு அழைத்து செல்கின்றது என்றால் பிழை ஆகாது. ஈழத்தில் 50 ஆயிரம் வீடு கட்டி
கொடுத்தாக சொல்லப் பட்டாலும் ஈழத்தவர்களின் விருப்பத்திக்கும் கலாச்சாரத்திற்க்கும் ஒத்த
வீடா என்பதும் கேள்விக்குறியே. வியாபாரம் நோக்கம் கொண்டு அண்டைய நாட்டை மட்டுமல்ல தன் சொந்த நாட்டு மக்களையும் அழித்தது என்ற வரலாறு எழுத உள்ளது என்பது தான் துயரான உண்மையும்!