13 Nov 2010

தமிழ் ஈழ வலைப்பதிவுகள் : ஓர் ஆய்வு முடிவு



திருநென்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகதொடர்பியல் துறை தலைவர் மற்றும் மதிப்பிற்க்குரிய பேராசிரியர் முனைவர் பே.கோவிந்த ராஜு அவர்கள்  வழி காட்டுதலில் ஈழ வலைப்பதிவுகளை பற்றி ஓர் ஆய்வு என்னால் மேற்கொள்ள பட்டது.  வாய் மொழி தேற்வு (vivavoce) முடிந்த நிலையில் எனது ஆய்வு முடிவுகளை பற்றி உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆயத்தமாக இருக்கின்றேன். உங்கள் கருத்துக்கள் அறியவும் ஆவலுடன் உள்ளேன்.


நாலாவது ஈழபோர் சூழலில் வெகுசன ஊடகங்களால் செய்திகள் இருட்டடிக்கபட்ட போது ஈழ வலைப்பூக்கள்(வலைப்பதிவுகள்) ஈழ மக்களின் கலந்துரையாடல், மற்றும் ஈழ மக்கள் என அடையாளம் கொள்வதற்க்கும் , தங்கள் கருத்துக்களை பரிமாறி கொள்ளுவதற்க்கும் ஆக்க பூர்வமான ஒரு பங்கு அளித்துள்ளது என கண்டு பிடிக்க பட்டுள்ளது.



வலைப்பதிவுகள்(Weblogs)



வலைப்பதிவுகள் என்பது இணையதளத்தின் ஒரு பகுதியான நவீன ஊடகம் ஆகும். இவை நம் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை எழுத்து படம், படக்காட்சிகள், மூலம் பகிர்ந்து கொள்ள உதவுகின்றது. ஆண்டனி மே பீல்டு (Antony Mayfield, What is Social Media?) சமூக ஊடகம் என்றால் என்ன ? என்ற தனது புத்தகத்தில் வலைப்பூக்கள் என்பது ஊடகத்தின் மற்றொரு உருவம் என குறிப்பிட்டுள்ளார். வலைப்பூக்கள் பயன்படுத்துவோரை விரைவில் இணைப்பதும் ஒன்றுகொன்று தொடர்புபடுத்துவதும், படைப்பாளிகளால் தாங்கள் உருவாக்கும் படைப்புகளை எளிதில் வெளியிட தகுந்தாகவும் இருக்கின்றது என ஹேறிங்,ஸ்கேடிப், போனஸ், நைட்;2005. (Herring,Schedt, Bonus&Write 2005) கூறியுள்ளார். சேத் காடின்(Seth Godin) என்ற புத்தக ஆசிரியர் தனது புத்தகத்தில் தனி மனிதனின் ஆழ்ந்த மற்றும் தீவிரமான கருத்துக்களை இணையதளம் வழியே பலநபர்களிடம் குறுகிய நேரத்துக்குள் சென்றுசேர்க்க முடிகின்றது என்பதால் வலைப்பதிவுகளை ஒரு திரும்புமுனை என்று குறிப்பிட்டுள்ளார்.


வலைப்பதிவு 1991 ஆண்டு அமெரிக்கர்களால் அறிமுகப்படுத்த பட்டிருந்தாலும் தமிழ் மக்கள் மத்தியில் 2000 ஆண்டு அறிமுகமான ஓர்  இணைய ஊடக கருவி ஆகும்.  1999 ல் வெறும் 23 வலைப்பதிவுகள் ஆக துவங்கிய வலைப்பதிவுகள் தற்போது 133 மிலியன் வலைப்பதிவுகள் கொண்டதாக மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது.   66 உலகநாடுகளை சேர்ந்தவர்கள் வலைப்பதிவர்களாக உள்ளனர்.  ஒரு கணிணியும் இணைய வசதியும் உள்ள யாராலும் வலைப்பதிவராகலாம் என்பதே இதன் சிறப்பு.




வலைப்பதிவுகள் அதன் உள்ளடக்கம், எழுதுபவர்களின் சிறப்பு சார்ந்து பலவிதமாக வகைப்படுத்தலாம்.  இருப்பினும் ரெபேக்கா பிளட்டு என்ற ஆராய்ச்சியாளரின் கருத்துப் படி தனி நபர்அல்லது நாட்குறிப்பேடு(personal journal) , தேற்தெடுக்க (filter)பட்ட வகை, புத்தக வகை(note book) என வகைப்படுத்தலாம் என குறிப்பிட்டுள்ளார்.  நாட்குறிப்பேடு வகையில்  வலைப்பதிவரின் தன் நிலை விளக்கங்கள் அவருடைய எண்ணம்,கருத்துக்கள்  சார்ந்ததாக இருக்கும் போது தேற்தெடுக்க (filter)பட்ட வகையில் தான் சாராத மிகவும் சமூகம் சார்ந்த அல்லது ஆழமான சில கோட்பாடுகள், கருத்துக்கள்  உள்பட்ட சில குறிப்பிட்ட நோக்கங்கள் கொண்ட பதிவுகளாக இருக்கும்.  ஆனால் மேல் கூறிய இரண்டுவகையும் கலந்த  வகை வலைப்பதிவுகளே புத்தக வகையில்  அடங்குவது.



வலைப்பதிவுகள் சிறப்பு
 அரசியல், முதலீடு, விளம்பரம், ஊடக நெறி என அச்சுறுத்தல் அற்று மக்களுக்கு தரமான செய்திகளை கொண்டு சேர்ப்பது மட்டுமல்லாது பின்னூட்டம்(comment) வழி பொது விவாதம், கலந்துரையாடலுக்கும் வழி செய்கின்றது வலைப்பதிவுகள்.



ஆராய்ச்சியின் நோக்கம்
இன்றுள்ள ஊடகச்சூழலில் உண்மையான செய்தி வெகுசன ஊடகம் வழி பெறுவது என்பது இயலாத காரியம் என  வரும்போது சாதாரண மக்களால் எழுதப்ப்டும் வலைப்பதிவின் சிறப்பை உற்று நோக்குவதே இவ் ஆராய்ச்சியின் நோக்கம் ஆகும். பொதுவாக ஊடகம் என்பது மக்களின் எண்ணம், கலாச்சாரம், வாழ்க்கை , அரசியல் போன்றவயை பிரதிபலிப்பவையாக இருப்பினும் போர் மற்றும் இக்கட்டான சூழலில் அதிகார வர்கத்தின் ஊது குழலாகவே நிலை கொள்கின்றது. ஊடகத்தின் தரம் ஒரு தலையான விறுப்பு வெறுப்பு போன்றவையால் 
மூழ்கடிக்கபடுகின்றது.




ஸ்ரீ லங்கா 1948-ல் ஆங்கிலயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றது முதல் தமிழ் இன மக்கள் பெரும் வாரியான சிங்கள அரசால் பல சட்டதிருத்தங்களால் ( அரசியல் மொழி சட்டம், குடியுரிமை சட்டம்) வேலை வாய்ப்பு, கல்லூரி அனுமதி என பல விதமாக பாகுபடுத்தபட்டு ஒடுக்க பட்டனர்.  1977 கலவரம், 1983 ல் கருப்பு ஜூலை எனும் இனகலவரம் போன்றவற்றால் 10 லட்சத்திற்க்கும் மேற் பட்ட மக்கள் தங்கள் உடமைகளை இழந்து 16 உலக நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கடந்த 26 வருடங்களில் 1 லட்சம் மக்கள் கலவரம் போர் போன்றவற்றால்  மாண்டுபோயுள்ளனர். தமிழர்களுக்கு என ஒரு நாடு இருந்தால் ஒழிய தன்மானத்துடன் வாழ இயலாது என முடிவெடுத்து ஆரம்பிக்க பட்ட ஈழம் என்ற தேசம் ஸ்ரீ லங்கா வின் வட கிழக்கில்  பிரபாகரன் தலைமையில் ஆட்சி நடந்தது என புகழ் மிக்க பெண் பத்திரிக்கையாளர் அனிதா பிரதாப் கூறியுள்ளார். நோம் சாம்ஸ்கி போன்ற அமெரிக்கா சமூகவியாளர்களும் ஒத்து போக இயலாத வித்தியாச சமூக கலாச்சார அமைப்பை கொண்ட இரு இனங்கள் இரு நாடாக இருப்பதே சிறந்தது என கூறியுள்ளனர்.
4 வது ஈழப்போர் 2006 ஆண்டு தொடங்கபட்டது. ஆனால் 2005 ஆண்டு துவங்கியே ஆளும் வர்கத்தால் பத்திரிக்கை சுதந்திரத்திற்க்கு தடை விதிக்க பட்டது. மீறும் பத்திரிக்கையாளர்களை அரசின் அடியாட்களால் கொல்லபட்டனர் அல்லது விரட்டி அடிக்க பட்டனர். பல வேளைகளிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளே தரபட்டது. Reporters without borders index ன் கூற்றுப்படி ஸ்ரீ லங்காவின் தரவரிசை 173 நாடுகளின் வரிசையில் 165 வது இடத்தில் நிலைகொள்கின்றது. களப்பணியில் உலக பத்திரிக்கையாளர்களையோ மனித நேய பணியாளர்களை கூட அனுமதிக்காது, 4 வது ஈழப் போர் இலங்கை அரசால் நடத்த பட்டது. இத்தருணத்தில் தனிநபர்களால் கைய்யாளப்படும் ஈழ வலைப்பதிவுகளின் சிறப்பு மேல் ஓங்குகின்றது.   23 உலகநாடுகளுடைய சிறப்பாக இந்தியா, சீன போன்ற நாடுகளின் துணையுடன் போர் புரிந்து ஈழ நாட்டை வென்றதாக இலங்கை அரசு எக்காளம் இட்டபோதும் ஈழ மண்ணின் மக்களின் கருத்து அவர்களின் ஆசை கனவுகள் எவ்வாறு மறைக்க பட்டது என ஈழ வலைப்பதிவுகள் வழியே நாம் அறிய இயலும்.



ஈழ வலைப்பதிவுகள்


தமிழ் வலைப்பூக்களில் ஈழம் சார்ந்த வலைப்பூக்கள் முக்கிய பங்கு பெருகின்றது. இன பிரச்சனையால் உலகெங்கிலுமுள்ள பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள ஈழத்தமிழர்களை ஒன்றிணைக்கவும், ஒரே இனம் என அடையாளப்படுத்திக்கொள்வதற்க்கும் தங்களுக்குள் கலந்துரையாடுவதற்க்கும், தங்கள் அனுபவங்கள், கனவுகள் மற்றும் கருத்துக்களை பரிமாறி கொள்ளுவதற்க்கும், தகுந்த தளமாக வலைப்பூக்களை பயன்படுத்துகின்றனர் . தமிழ் சசி என்ற இந்திய தமிழர், இக்கட்டான சூழலின் வலைப்பூக்கள் கருத்துக்கள் மற்றும் ஈழ செய்திகள் பரிமாறிகொள்வதற்க்கு நம்பகதன்மையான மாற்று ஊடகமாக இருந்தது என கூறுகின்றார். தமிழக ஊடகங்களால் அரசியல் காரணங்கள் கொண்டு ஈழ செய்திகள் தர மறுக்கபட்ட போது தமிழ்மணம் போன்ற வலைபதிவு திரட்டிகள் வழியாக உண்மை செய்திகள் மக்களிடம் வந்து சேர்ந்தது . தமிழ்மணம் வலைப்பூ அரங்கத்தில் 6929 வலைப்பூக்கள் உள்ளன. ஈழம் சார்ந்த வலைப்பூக்கள் 400 க்கு மேல் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.


இவ் ஆராய்ச்சிக்கு தமிழ்மணம் வலைப்பூ அரங்கத்திலுள்ள வெகுசனங்களால் கவரபட்ட ஈழ செய்திகள் கொண்ட தனி நபர் சார்ந்த 5 வலைப்பதிவுகள், மற்றும் 1குழு வலைப்பதிவு எடுக்கபட்டுள்ளது. ஏப்ரல் 2008 துவங்கி ஏப்ரல் 2010 எழுதபட்ட தேற்தெடுக்கபட்ட வலைப்பூக்களை மாதிரிகளாக (cases) கணக்கில் கொண்டு உள்ளடக்க பிரிந்தாய்வு முறையில்(content analysis) பண்பார்ந்த, மற்றும் அளவு சார்ந்த மதிப்பீடுகளை கொண்டு ஆராய்ச்சி மேற்கொள்ளபட்டுள்ளது. செய்தி பெற மாற்று ஊடகமான வலைப்பதிவு வழியே பெறப்பட்ட செய்தியின் தேவை, சிறப்பு, வலைப்பதிவரின் வாழ்க்கை வரலாறு(profile), வலைப்பதிவின் கட்டமைப்பு, வலைப்பூவின் உள்ளடக்கம் இவை சமூகசூழலுக்கு தகுந்து எவ்வாறு உருமாறுகின்றது என்பதும் மேலும் இலங்கை போர் சூழலில் மக்கள் மத்தியில் ஈழச் செய்தி பெற வலைப்பதிவுகளின் தாக்கம் எவ்வாறு இருந்தது என ஆராயபட்டுள்ளது.




முன் நிகழ்ந்த ஆராய்ச்சிகள்(Review of Literatures)



வலைப்பதிவுகளை பற்றியுள்ள பல ஆராய்ச்சியாளர்களின்  கட்டுரைகள் ஆராயபட்டிருந்தாலும் பாலிஷ் மொழி வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் சார்ந்து ஆராயபட்ட டிராமலின் (Trammel)கட்டுரை, கே ஜாண்சனின் (Kay Johnson) அரசியல் வலைப்பதிவுகளின் நம்பக தன்மை பற்றியுள்ள கட்டுரை, சூசன் ஹேரிங்கின்(Susan Herrings) வலைப்பதிவுகளின் உள்ளடக்கம், ச்ஷீமிடிட்ன் (Schmidt.J) பகுந்தாய்வு முறையில் வலைப்பதிவுகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்ட கட்டுரைகள் இவ் ஆராய்ச்சிக்கு பின்புலனாக எடுக்கப்பட்டுள்ளது.


அடிப்படை கோட்ப்பாடு.(Theoretic Perspective.)பயன்பாடு மற்றும் மனமகிழ்ச்சி கோட்பாடு: (பிளாமர் மற்றும் காட்ஜ்;1974. (Uses & Gratification Theory: Blumler & Katz  1974)
ஊடகத்தை தங்கள் மனமகிழ்ச்சிகாக எவ்வாறு பயன்படுத்துகின்றனர் ஊடகத்தை பயன்படுத்த தூண்டும் காரணிகள் ஏது ஊடகத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் நேர்மறை மற்றும் எதிர்மறையான விளைவுகள் ஏது என்று அறிவதை இந்த கோட்பாட்டின் அடிப்படை ஆகும். மக்கள் ஊடகத்தை பயன்படுத்துவது; குறிப்பட்ட இலக்கு உள்ளடக்கம் மற்றும் திருப்தியை சார்ந்து அமைகின்றது என கண்டுள்ளனர்.




ஆராய்ச்சி 6 கேள்விகளும் அதன் விடை பெறுவதுமாக செல்கின்றது .


ஈழ வலைப்பதிவுகளின் உள்ளடக்கம் கட்டமைப்பு என்ன?
ஈழ ப்பதிவர்கள் பெறும் மன மகிழ்ச்சி மற்றும் திருப்தி யாவை?
ஈழ வலைப்பதிவர்களை பற்றி ஓர் ஆய்வு, ஈழப்பதிவுகள் ஈழ மக்களின் தொடர்பாடலுக்கு உதவியதா? மேலும்
தொடர்பாடலுக்கு வலைப்பதிவுகள் சிறந்த கருவியா?
ஈழப்போர் வேளைகளிலும் அதன் பின்பும் வலைப்பதிவுகளில் உள்ளடம் பண்பு மாறியுள்ளதா?
ஈழ போர் வேளையில் வெகுசன ஊடகங்கள் மவுனித்த போது அரசியல் மற்றும் செய்தி பெற வலைப்பதிவுகளீன் பங்கு யாவை ?
என அறியும் எண்ணத்துடன் இவ் ஆராய்ச்சி மேற்கொள்ள  பட்டுள்ளது.
மாதிரிகள் தேற்வு செய்ய குறிகோள் உடைய சில நுட்பங்கள்(Purposive Sampling Method)  வழி காட்டி பேராசிரியரின் துணை கொண்டு கைய்யாண்டுள்ளேன்.



வலைப்பதிவுகள் 2008 ஏப்ரல்-2010 ஏப்ரல் காலளவில் எழுதபட்டதாக இருக்க வேண்டும், தற்போதும் தொடர்ந்து எழுத படுதல் வேண்டும். சமூக அரசியல் கலாச்சாரம் அடங்கிய ஈழப் பதிவுகள் ஆக இருக்க வேண்டும். வலைப்பதிவர்களே கைய்யாளும் தன்மை உடையதாக இருக்க வேண்டும். வலைப்பதிவர் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவு வைத்திருப்பார் என்றால் அதிகம் பதிவுகள் உள்ள வலைப்பதிவாக எடுத்து கொள்ளுதல். மேலும் வலைப்பதிவு அறிஞ்சர்கள் ரெபேக்கா பிளட், ஹேரிங்,ஷீடிட் கருதும் அமைப்பு கொண்ட வலைப்பதிவுகளாக இருக்க வேண்டும். இவ்வாறாக பெறபட்ட மாதிரிகள் 517 பதிவுகள் கொண்ட 6 வலைப்பதிவுகள் இவ் ஆராய்ச்சிக்கு பயண்படுத்த பட்டுள்ளது.



ஆராய்ச்சி முடிவு


1.ஈழ வலைப்பதிவுகளின் உள்ளடக்கம்
ஈழ வலைப்பதிவுகள் பொதுவாக புத்தக வகை(note book) என வகைப்படுத்தலாம். ஈழ மக்களின் வாழ்க்கை, கலாச்சாரம் எண்ணம் மட்டுமல்லாது ஈழ அரசியல் வெளிநாடுகளில் வசிப்பதால் அயல் நாட்டு மக்களின் சிறப்பு, காணும் திரைப்படம் என அவர்கள் வாழ்க்கையோடு பின்னியிணைந்த எல்லாவற்றையும் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.
தனி நபர்களின் வலைப்பதிவுகளை பற்றி எடுத்து கொண்டால் ஈழத்தை பற்றியுள்ள அவர்களின் கருத்தும் எண்ணவுமே முன் நிற்கின்றது. ஆனால் குழு வலைப்பதிவை எடுத்து கொண்டால் அவர்களின் கலாசாரம், வாழ்க்கை சார்ந்த வலைப்பதிவுகள் பிரதானமாக வருகின்றது.
2.ஈழ வலைப்பதிவுகளின் கட்டமைப்பு
ஈழ வலைப்பதிவுகள் வெறும் எழுத்து மட்டுமல்லாது புகைப்படங்கள், காணொளிகள், ஒலி நாடாக்கள், ஓவியங்கள், நிலப்படம், இணைப்புக்கள் என முழுவீச்சில் தொடர்பாடலை பேணுகின்றது.
ஈழ வலைப்பதிவர்களின் மன மகிழ்ச்சி மற்றும் திருப்தி கலந்துரையாடல் சார்ந்தும் வலைப்பதிவை மாற்று ஊடகமாக காண்பதே ஆகும். கலந்துரையாடலுக்கென வலைப்பதிவு கருவிகளை முழுவதுமாக பயண்படுத்தி மிக வேகமான கருந்துரையாடல், தொடர்பாடல் கொள்கின்றனர்.
வலைப்பதிவர்களின் சரித்திரம்(profile) பரிசோதித்தால் 78 சதவீதம் பேர் வயது வெளியிட விரும்பவில்லை, தொழில் போன்றவயும் 55 சதவீதம் பேர் வெளியிடவில்லை. இருப்பினும் பெரும் வாரியான வலைப்பதிவர்கள் இளஞ்ராகவும் கல்வி அறிவு பெற்றவர்கள் ஆகவும் உள்ளனர். 72% பேர் ஆண் வலைப்பதிவர்களே, வலைபதிவர்களில் 28% பேர் ஸ்ரீ லங்கா விலும் 15% பேர் கானடா, 5% பேர் ஆஸ்திரேலியாவிலும் குடியிருக்கின்றனர். தங்களது புகைப்படங்களை 17% பேர் மட்டுமே பயண்படுத்துகின்றனர். பெரும் வாரியானோர் சுவரோவியத்தையே பயண்படுத்துகின்றனர்.
வலைப்பதிவுகளின் உருமாற்றத்தை பற்றி எண்ணும் போது பொதுவாக ஒரு கருத்தாக்கம் கொள்ளல் ஆகாது. குழு வலைப்பதிவு 'ஈழத்து முற்றம்' போரின் கடைசி நாட்களில் உருவாக்க பட்டதே. ஈழம் என்ற தேசத்தை அழித்தாலும் அவர்களுடைய கலாச்சாரம், வாழ்வை அழியா வண்ணம் இணையத்தில் பதிய வேண்டும் என்ற நோக்குடனும் ஈழ மக்கள் ஒருவருக்கொருவர் உரைவாடி கொள்ள வேண்டும் என்ற நோக்கிலும் கானா பிரபா அவர்களின் தலைமையில்  32 பேரால் தொடங்க பட்டது.
தனி நபர்கள் வலைப்பதிவை எடுத்து கொண்டால் கானடா நாட்டில் தஞ்சம் புகுந்துள்ள பெண் வலைப்பதிவர் தமிழ் நதி ஈழ தேசத்தின் மேலுள்ள உளைவியல் மற்றும் அரசியல் அதிகாரத்தையும் ஆயுதப்போராட்டத்தின் அவசியத்தை தனது எழுத்து மூலமாக வலியுறுத்தி வந்துள்ளார். இந்திய அரசிடம் தங்களது சகோதர உணர்வை நினைவுப்படுத்தும் படியாகவே அவரின் எழுத்து அமைந்தது. ஆனால் மே 2009 க்கு பின்பு அவரின் எழுத்து இன்னும் ஒரு படி அதிகமான ஈழ தாக்கத்தை கொண்டு இருந்தது. இந்திய அரசியல் மற்றும் தமிழக அரசியல் கொள்கையை முற்றும் சவால் விடும் அளவுக்கு அவர் எழுத்து உருமாறியது. இப்போது ஈழம் என தேசம் அழிக்க பட்டாலும் மலரும் என்ற உணர்வுடன் எழுதிகொண்டிருக்கின்றார்
ஆஸ்த்ரேலியா வானொலியில் பகுதி நேர நிகழ்ச்சி
தயாரிப்பாளராக இருக்கும் கானா பிராபாவின் எழுத்துக்கள் பெரிய
மாற்றம் என காணாவிடிலும் ஈழ தேசம் என்ற கொள்கை, தேவையை
எடுத்து கூறும் விதமாக பல பதிவுகள் வந்தன. இருப்பினும்
ஈழ மக்களின் கலாச்சாரம் வாழ்க்கை, மக்கள்,
ஈழப் போராளிகள் என போரால் அழிக்க
பட்ட பல பொக்கிஷங்களை வலைப்பதிவுகளால்
பதிந்து கொள்ளவே விரும்புகின்றார்.



அமெரிக்கா நியூ-ஜெர்ஸீயை சேர்ந்த இந்திய தமிழரான தமிழ் சசி மே 2009 முன்பு அவருடைய வலைப்பதிவுகள் ஈழம் சார்ந்தே இருந்தது, ஈழப்போர் பின்பு மிகவும் உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்க பட்ட நபர் இவரே. வலைப்பதிவு எழுதுவதயே தவிர்த்த தமிழ் சசி பின்பு ஏப்ரல் 2010 துவங்கியே எழுத ஆரம்பிக்கின்றார். பின்பு ஈழ செய்திகளை விட மற்று அரசியல் செய்தி எழுதவே விரும்புகின்றார்.
தீபச் செல்வன் தனக்குரிய கவிதை எழுத்துக்களால் அங்குள்ள நிலவரத்தை அப்படியே பதிவு செய்து கொண்டுவருகின்றார். அவருடைய பார்வை என்பதைவிட அங்குள்ள மக்களுடைய உணர்வுகள், ஆதங்கம், கவலைகள் பகிர்ந்து கொள்ளும் விதமாகவே அவருடைய வலைப்பதிவுகள் உள்ளது. போருக்கு பின்பு தன்னுடைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் என்பதே குறிப்பிடதக்க மாற்றம்.
எம்.ரிஷான் ஷெரிஃப் ஈழபோருக்கு பின்பு ஈழ செய்திகளை பல பகிர்ந்து கொண்டு வருகின்றார். அவர் பத்திரிக்கையாளர் என்பதால் அவருடைய கருத்தை நுட்பமாக  எழுத்தால் பகிர்ந்து வருகின்றார். அவருடைய எழுத்து கலந்துரையாடல் என்ற இலக்கை நோக்கியே உள்ளது.
ஈழ போர் 3 கட்டமாக முன்னேறி மே 18 2009 முடிவு பெற்றதாக இலங்கை அரசால் அறிவிக்க பட்டது.  7000 பொதுமக்கள் கொல்லபட்டதாகவும் 2 65,300 மக்கள் முள்கம்பிக்குள் முடக்க பட்டதாகவும் கணக்கிடபட்டுள்ளது.தமிழர்களின் பகுதிக்குள் செல்லும் போது ஒரு அலைபேசிக்கூட எடுத்து செல்ல இயலாது என உலகலாவிய சேவை நிறுவன உறுப்பினர் கூறியுள்ளார். பத்திரிக்கையாளர்கள் மிக சாதுரியமாக அடையாளம் காணபட்டு தடுத்து வைக்க படுகின்றனர். அனுமதி பெரும் பத்திரிக்கையாளர்களும் ராணுவ வாகனத்தில் மக்களை சந்திக்க இடம் நல்குகின்றனர். ஊடகத்தினர் பெறுவதும் அரசின் மக்கள் தொடர்பு செய்தி மட்டுமே. மேலும் வெகுசன ஊடகவும் களச்செய்தியல்லாது மற்று இணைய செய்திகள், அல்லது வலைப்பதிவுகளில் இருந்து பெறும் செய்தியே தனது செய்தி போல் தருகின்றனர். பத்திரிக்கைக்கு பத்திரிக்கை மாறு பட்ட கருத்து கொண்ட செய்தியாகவே உள்ளது. இத்தருணத்தில் லாப இச்சையற்று தங்கள் கருத்தை பகிர வேண்டும் அல்லது தங்கள் மன பாரத்தை இறக்கி வைக்கும் தளமாகவும் கண்டுள்ளனர். வலைப்பதிவுகள் ஊடாக பெறப்படும் செய்தி உண்மைதன்மை வெகுசன பத்திரிக்கையை விட நாம் கண்டு உணர இயலும்.
முடிவுரை
இவ் ஆராய்ச்சி சரித்திர முக்கியம் வாய்ந்த காலயளவில்(4 வது ஈழ ப்போர் நடைபெற்ற போதும் முடிந்து ஒருவருடம் ஆகிவிட்ட நிலையில்) சமர்ப்பிக்க பட்டுள்ளது.ஆராய்ச்சி தொடங்கபட்டபோது குழு வலைப்பதிவில் 32 என்றது தற்போது 59 ஆக உயர்ந்துள்ளது. தமிழர்கள் ஸ்ரீலங்கா அரசு ராணுவத்தால் அராஜகமாக அடக்கபட்டு ஆட்சிஐ கைபற்றிய போதும் ஐக்கிய நாட்டு சபையில் முறையிட்டும் நீதி கிடைக்க ரஷியா சீனா போன்றா நாடுகளால் தாமதிக்கபடும் போது வலைப்பதிவுகள் மட்டுமே இயல்பான கவலைகளையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தும் உபாதியாக நிலை கொள்கின்றது. வெகுசன ஊடகங்களால் கொண்டு வர இயலாத மற்றும் மழுங்கலடிக்க பட்ட செய்திகள் வலைப்பதிவு வழியே பெற முடிகின்றது.  இந்த ஆராய்ச்சியில் பின்புலன் மொழி சார்ந்த ஒரு குழுவே அதாவது ஈழ தமிழர்கள், அவர்களின் தாய் மொழி –தமிழ் ஒரு மிக முக்கியமான பொருளாக பார்க்க பட்டுள்ளது. தமிழர்கள் மத்தியில் குறிப்பாக ஈழ தமிழர்கள் மத்தியில் நடைபெறும் தொடர்பாடல் ஆராய்ச்சிக்கு மைய கருத்தாக உள்ளது


.
மாதிரிகளை தேற்வு செய்வதில் ஒரு பெரும் கருதல் வேண்டியிருந்தது. தமிழ்மணம் திரட்டி எடுக்கும் வலைப்பதிவுகள் என கட்டுக்குள் கொண்டுவரபட்டுள்ளது.வலைப்பதிவுகளை பற்றியுள்ள நம்பகதன்மை சார்ந்தும், வலைப்பதிவர்கள் அடையும் மன மகிழ்ச்சியின் வேறுபாடையும் வரும் ஆராய்ச்சியில் பின் தொடரலாம்.
photoes from blogs .






10 Nov 2010

என்கவுண்டர் சிலருக்கு மட்டும் தானா?

 என்கவுண்டர் என்று கேள்விபட்டுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தது.  இது ஒரு பாடமாக இருக்கும் என தோன்றியது. இந்த வருடம் மட்டுமே எவ்வளவு குழந்தைகள் கடத்தல், கொலை,  கற்பழிப்பு!!
நேற்றுள்ள பத்திரிக்கையிலும் ஒரு 10 வயது சிறுமி அடித்து கொல்ல பட்டதாக செய்தி இருந்தது.  இருப்பினும்  மோகன கிருஷனன் என்ற கேரளா, பாலகாட்டை சேர்ந்தவன் மட்டுமே எதிர்கொண்டுள்ளான் என்கவுண்டரை?

பல சிறுமிகள் சாவை எதிர்கொள்ளாவிட்டாலும் அதன் பக்கத்திலே போய் வ்ரும் சூழலுக்கு தள்ள படுகின்றனர். கும்பகோணத்தில் 94 குழந்தைகளை கொன்ற பள்ளி நிறுவாகத்திற்க்கு எப்போழுது என்கவுண்டர், மேலும் 3 கல்லூரி மாணவிகளை உயிருடன் எரித்து கொன்றவர்களுக்கு  என்கவுண்டர் உண்டா? காம காதலுக்கென இரண்டு வயது குழந்தையை கொன்ற பெண்ணுக்கு எப்போழுது என்கவுண்டர்? கல்லூரிகளில் ராகிங் என்ற பெயரில்  நடமாடும்  கொலைகாரர்களுக்கு  எப்போது என்கவுண்டர்? புதுமண பெண்ணை கொடூரமாய் கொன்றவனுக்கு என்கவுண்டர்  எப்போது?

ஒரு அயோக்கியனை கொன்றவுடனையோ, புகைப்பட கருவிகளை  பள்ளிகளில் பொருத்தியது கொண்டோ, பள்ளி வாசலில் போலிஸ் அதிகாரிகளே நிறுத்தியது கொண்டோ இவ்விதம் நடவாது தடுக்க இயலுமா?

சுய ஒழுக்கம் என்ற நெறியை வறியவனில் இருந்து வலியவன் வரை, என்று தன்னகமாக்கி கொள்கின்றானோ அன்றே இவ்விதமான கொடிய செயல் முடிவுக்கு கொண்டுவர இயலும்!

பேருந்துக்களில் பகல் நேரங்களில் கூட பயணிப்பது சிக்கலாகின்றது.  சில குடிமகனுகள் காப்பி குடிப்பது போல் பேருந்து நிறுத்தங்களில் குடித்து விட்டு பேருந்துகளில் பயணிக்கின்றனர்.  பாலியல் தொழிலும் ரகசியமாக செய்ய பட்டது இன்று வெளிச்சத்தில் செய்யபடுகின்றது .  வெட்கம், நாணம் அற்ற ஒரு சமூகம் உருவாகி கொண்டிருக்கின்றது.

 கொத்தனார்கள்-வேலையிடங்களில் கேட்க்கபடும் கேளிக்கை பேச்சுக்கள் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் அது போலவே  கொச்சயாகவே ஒலிக்கின்றது.
பொதுவாக, அயோக்கியனை கண்டு ஒதுங்கி பயந்து  போகும் சூழலே  தற்போதுள்ள  சமூகத்தில் நிலவுகின்றது.

நியாயம் தர்மம் கடைபிடிப்பவர்கள் வாழதெரியாத முட்டாளாகவும், எவ்விதமாகிலும் பணம் சம்பாதிப்பவன்- ஏமாற்றுகாரனுகள் புத்திசாலியும் வாழத்தெரிந்தவனாகவும் தெரிவதும் இச் சமூக நடப்பாகி விட்டது!

திரைப்படம் என்ற பெயரில் நடிகர்கள் பேச்சும், களியாட்டவும் என்று மறையில்லாது திரையிடப்பட்டதோ அன்றே  ஆரம்பித்தது சமூக சீரழிவும்.
விஜய் போன்ற நடிகர்கள் கெட்ட வார்த்தைகள்  பேசினால் அது ஹீரோயிசமாகவும், வைரமுத்து எழுதும் மகா கெட்டவார்த்தை பாடல்கள் எல்லாம் கவிதையாகும் எண்ணும் போது அந்த பாட்டின் வரிகளில்  பின்பற்றுபவர்களுக்கு மட்டும் என்கவுண்டர் கொடுத்தால் நியாயம் ஆகுமா?

7 Nov 2010

ஒபாமா வந்துட்டாங்கய்யா!! வந்துட்டாங்க!

ஒபாமா  அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு கிளம்ப ஹெலிகாப்ரரை நோக்கி நடக்க துவங்கியதில் இருந்து ஆங்கிலம் ஹிந்தி ஊடகங்கள் ஒபாமாவின் வருகையை பற்றி கதைக்க ஆரம்பித்து விட்டனர்.  ஒபாமா இந்தியா வருவதில்  என்ன லாபம் எதற்க்கு வருகிறார் அவர் கையெழுத்து இடும் திட்டங்கள் ஏது என  அலசி கொண்டிருந்தனர்.  மலையாள சேனல் கொஞ்சம் முன் சென்று அவர் வருவது வியாபர நோக்கத்திற்க்கே எனவும்,  மேலும் 3000 தொழில் வல்லுனர்கள் மற்றும் 30 கார் அணிவகுப்பு, மக்லேனின் கூற்று என பின்னி விலாசி கொண்டிருந்தனர்.   நம் தமிழ் சேனலில் செய்தியுடன் முடித்து கொண்டனர்.  அங்குள்ள சேனலில்  ஒபாமாவின் வருகையை பற்றி காரசாரமான விவாதம் நடை பெறும் போது நம் ஆட்கள் சரவெடி சரவணனுடன்  விவாதித்து  கொண்டிருந்தனர் இப்படியாக அவர் அவ்ருடைய ஆசிரியரை எந்த பட்ட பெயர் வைத்து அழைத்தார், பள்ளிக்கு மட்டம் போட்டாரா என!

ஒபாமா வரும் போது    தரப்படும் பரபரப்பான செய்தியின் போக்கு நமது அரசு தலைவர்கள் வெளிநாடு செல்லும் போது  "இவர் இந்த தேசத்திற்க்கு சென்றுள்ளார், திரும்ப இன்று வருகின்றார்  என்றதுடன் முடித்து கொள்கின்றனர்.  நமது தலைவர்கள் இதே போன்று ஒரு திட்டத்துடன்  அன்னிய நாட்டுக்கு சென்று வந்தார்களா எனவும் தெரியவில்லை.
பிரதிமா பாட்டில் கணவர், உறைவினர்கள், படைத் தளபதிகளுடன் கோயிலுகளுக்கு சென்று வந்த செய்தி தான் சித்திரத்துடன் பார்வையில் அடிபட்டது.  பிரதமர் சென்ற போது கூட மகள் மருமகன் மனைவியுடன் சென்று வந்ததை காண முடிந்தது.  மேலும் மேற்கு அயிரோப்பிய நாடுகளுக்கு பிரதமர், ஜனாதிபதி போன்றவர்களும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு துணை ஜனாதிபதியை அனுப்புவதாகவும் தெரிகின்றது. எம் மக்களுக்கு வேலை வாய்ப்பு பெற்று தர சென்றுள்ளேன் என யாரும் சூளுரைத்து சென்றதாக ஒரு போதும் கண்டிருக்க வில்லை.

 எது எப்படியோ எனக்கு  ஒபாமா மற்றும் அவருடைய மனைவி ஹெலிகாப்ரில் ஏறுவதை ரசித்து பார்த்து கொண்டிருந்தேன். கைகளை வீசி கொண்டு இரண்டு பெயரும் அழகாக தாவி ஏறி  கொண்டிருந்தனர். மனம் விட்டு சிரிக்கின்றனர் பேசுகின்றனர் நம் தலைவர்களின் பிளாஸ்டிக் சிரிப்பு, கீழ் விழி பார்வை போன்று அல்லாது; ஒரு வேளை தள்ளு வண்டி, ரோபோ போன்ற தலைவர்களை கண்ட கழைப்பாக இருக்குமோ எனவும் தெரியவில்லை!
 மகாராஷ்டா அமைச்சர்கள் வரவேற்ப்பை அழகாக பெற்று கொண்ட அவர்கள் அவர்கள் நாட்டு அதிகாரிகளே கண்டுடன் அவர்கள் கலாச்சாரப் படி கட்டி தழுவி அன்பை பகிர்ந்து கொண்டு  அதிக நேரம் பேசி கொண்டிருந்தனர்.  இத்தருணத்தில் நமது தலைவர்கள் இலங்கை சென்று நம் சகோதரர்களே கண்டு சென்று வந்த  காட்சிகள் உங்கள் மன கண்ணில் கொண்டு வர வேண்டுகின்றேன்.

பின்பு பள்ளி, கல்லூரி மாணவர்களே சந்திக்கின்றார். பெரிய அரசியல் செய்திகள் மும்பை சவேரியார் கல்லூரி மாணவர்களிடம் பேசி உள்ளார். அதிலும் ஒரு மாணவி வடிவேலு அண்ணே கேட்பது போல் ஒரு கேழ்வியும் கேட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டை ஏன் தீவிரவாத நாடு என அறிவிக்க வில்லை என?  அதை தீவிரவாத நாடாக ஆக்குவதே நம் இந்தியாவும் அமெரிக்காவும் தான்  என தெரியாதோ,  என்னவோ? எல்லாம் பள்ளிப் பாட  அரசியல் தான். பாப்பாவுக்கு   போபால் பற்றியெல்லாம் ஏன் சொல்லி கொடுக்கவில்லை என தெரிய வில்லை?  மேலும் ஹெட்லி விஷயத்தை  மறைந்து விட்டாரே, அமைச்சர் சிதம்பரத்திற்க்காவது பயனுள்ளதாக இருந்திருக்கும்!  அமெரிக்கா நாட்டு அதிபரிடம் கேழ்வி கேட்க ஊடகவியாளர்கள், சமூக ஆவலர்கள் என யாரையும் நம்பாது  மும்பை மாணவிகளிடம் பணியை கொடுத்து விட்டார்கள் அதன் மர்மவும் தெரியவில்லை.

  நான் இந்தியாவின் கலாச்சாரத்தை, இயற்கை அழகை காண செல்கின்றேன், என பொய் சொல்லாது,  போத்திகீஸ்காரர்கள், கிழக்கி இந்திய ஈஸ்ட்டு இந்தியன் கம்பனி போல இந்தியா நாட்டிற்க்கு  வியாபார நோக்கத்திற்க்காவே வந்திருக்கின்றேன்  என தைரியமாக சொல்லி வந்திருக்கும் ஒபாமா அவர்களே  வருக வருக!!! உங்களே போன்ற உண்மை பேசும் தலைவர்களே எங்களுக்கும் தேவை.

இன்னும் ஒரு செய்தி, அவுட் சோர்சிங் (வெளி நாட்டு பணி -BPO) என்பது நம்மவர்களே கொண்டு இங்கிருந்தே குறைந்த ஊதியத்தில்  அங்குள்ள வேலையை செய்ய வைப்பதே.  நமது அமைச்சர்களின் பணியையும் இம்முறையில் அமெரிக்கர்களால் அவுட் சோர்சிங் என்ற முறையில்  எடுத்து கொண்டால் நாம் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கலாமோ? அவர்களுக்கும் வேலை வாய்ப்பும் கிட்டும்!

4 Nov 2010

ஒரு கொடூர கொலையும் அதை தொடந்த சில சிந்தனைகளும்!!!



கடந்த மூன்று- நாலு நாட்களாக மனதை உலுக்கிய சம்பவமே கோவை பள்ளி குழந்தைகள் கொடூர கொலை!  நாளுக்கு நாள் வரும் செய்தி இது மனித உலகமா என எண்ணம் கொள்ளும் அளவுக்கு சிந்தனை கொள்ள செய்தது.  இதே போன்றே டெல்லியே சேர்ந்த ஆருஷி என்ற சிறுமி கொல்லபட்டபோதும், ஒரு கட்டத்தில் போலிஸ் தந்தையே மகளை கொன்றது போல் மாயதோற்றம் உருவாக்கி பின்பு மீடியா வழியாக ஒரு விவாதமே நிகழ்த்த பட்டு கடைசியாக வேலைக்காரர்களால் கொல்ல பட்டதாக கண்பிடிக்க பட்டது. பெற்றோர்களுக்கு சில அறிவுரைகளை கூறுவதுடன் போலிஸ் தன் வேலையை முடித்து கொள்கின்றது. கோவையில் பாட்டியிடம் விடை பெற்று வாகனத்தில் சென்ற குழந்தைகளே கொல்லபட்டதும்!
கொலைகாரன் கொலையை நடத்திய விதம் காணும் போது பணம் பறிப்பது அல்ல நோக்கம் எனவும் தற்செயல் அல்லாது திட்டமிடபட்டு நிகழ்த்தபடுத்த பட்டுள்ளதாகவே தோன்றுகின்றது.  யாருடைய தூண்டுதலோ, அல்லது தொழில் போட்டி, வேறு சில காரணங்களும் உண்டா எனவும் ஆராயபடவேண்டியுள்ளது.  காரணம் கொலைகாரன் ஒரு தடவை கூட பெற்றோரை பணத்திற்கென தொடர்பு கொண்டது போல் தெரியவில்லை. கயிரு, பிளாஸ்டிக் பை,சாணப்பொடி, பால் இவைகள் கருதி வைத்திருந்தது தெரிந்திருக்கின்றது.  கொலையாளியை பாட்டி பார்த்துள்ளதால் கண்டிப்பாக பிடிபடுவோம் என அவனுக்கும் தெரிந்திருக்கும்.  கூட்டாளியை தப்பிக்க வைக்க முயன்று அவன் மட்டும் போலிஸ் கைய்யில் சீக்கிரமாகவே மாட்டியுள்ளான்.  பத்திரிக்கை செய்தி பார்ப்பினும்  நாளுக்கு நாள் புது புதியதாக செய்தி வந்து கொண்டிருக்கின்றது.
பத்திரிக்கை செய்தி கூட கண்டிக்க தக்க விதமாகவே உள்ளது. கொடூரன் கூறியதை எல்லாம் வெளியிட தேவையில்லாததே.  வேறு சில காடனுகளுக்கும் பாடம் நடத்தவா?.  வாசிக்கும் பெற்றோரின் மனம் மேலும் நிலை குலைய செய்யவே இது உதவும் என ஊடகவியிளார்களுக்கு தெரியாதா!!
இதில் சிலவற்றை நாம் வசதியாக மறந்து போகின்றோம். கொலையாளியே உடனே கொலை செய்ய வேண்டும் எனதோன்றினாலும் அவனின் பின் புலன் பெற்றோர், வாழ்ந்த சூழல் ஆராயபட்டால் மேலும் இவ்விதமான காடையனுகளைஅடையாளம் காண வசதியாக இருக்கும். இக்கொலையில் கூட குழந்தை கொல்லபட்ட விதத்தை ஆராய்ந்து செய்திக்கு மேல் செய்தி வெளியிட்டு பெற்றோரின் மனநிலையை குலைக்கும் ஊடகம் கூட ஆக்க பூர்வமான கருத்தையோ செய்தியோ வெளியிட வில்லை.
சாதாரணமான ஒருவனால் இவ்விதம் செய்யவே இயலாது. அவன் பெற்றோர்களால் துண்புறுத்தபட்டு வளரபட்டிருக்க வேண்டும் அல்லது அவனுடைய தாயின் தகாத வாழ்க்கையை கண்டு வளரபட்டவனாக இருக்க வேண்டும் அல்லது குடிகார தந்தையிடம் வளர்ந்தவனாக இருக்க வேண்டும்.  சமீபத்தில் ஒரு அனாதை ஆசிரம் சென்ற போது பெரும் வாரியான குழந்தைகள் பெற்றோர்களின் காமக் களியாட்டத்தால் அனாதர்களாக மாற்றபட்டவர்களே, அல்லது இரண்டு பெரும் வேறு யாருடனும் ஓடிபோனவுடன் இக்குழந்தைகள் அனாதை ஆசிரமத்துக்கு வரப்படுகின்றனர். அவர்கள் வாழ்க்கையில் பிறந்தது முதல் எதிர்கொள்ளும் இரக்கமற்ற சூழல் வளர்ந்த பின்பு தான் பெறபட்டதே சமூகத்திடம் திருப்பி தரும்போது நம்மை போன்ற சாதாரண மக்களால் எதிர்கொள்ள முடியாமல் போகின்றது.  நியூட்டன் தியரியை பொருத்தி பார்க்க தோன்றுகின்றது.

 
முதலில் கள்ள காதலர்களே தண்டிக்கும் வழியாக மனித விஷங்கள் பூமியில் வருவதயே தடுக்க இயலும். மேலும் குழந்தைளை அனாதர்களாக்கும் பெற்றோரை சட்டத்தால் தண்டிக்காது இது போன்ற கொடூர நிகழ்ச்சிகள் வருவதை தடுக்க இயலாது.
இந்தியாவின் சமூகச் சூழலும் இதற்க்கு காரணம் ஆகின்றது. ஒரு பக்கம் பெரிய மனிதர்கள் என எண்ணும் அதிகாரம் படைத்த வர்கம் மக்களின் இரத்ததை ஊழல் என உறிச்சி குடிக்க படும் போது இதே பார்த்தே பழக்க பட்ட கீழ் எண்ணம் கொண்ட சில மனித மிருகங்கள் தன்னுடைய கொடூரத்தை இவ்விதம் நிகழ்த்துகின்றது.

 
ஒரு பக்கம் பணக்காரர்கள், படித்தவர்கள் ,கலாச்சாரம் முள்ள மக்கள் பெருகுவது போலவே மறுபக்கம் ஒரு பெரும் கூட்டம் மக்கள் மனிதனின் மான்பற்று வாழ்கின்றனர்,வாழதள்ளபடுகின்றனர்.  சமீபத்தில் 'இரக்கம்', 'சமூக நீதி' என்ற பெயரில் திரைப்படங்கள் வழியே பணக்காரர்கள் என்றால் கொடூரமானவர்கள் எனவும் ஏழைகள் பரம சாதுவாகவும், அல்லது அவ்ர்களின் அடாவடித்தனங்களுக்கு நியாயம் கொள்வது போலவும் பல திரைப்படங்களில் காட்டி மோசமான கலாச்சாரத்தை வளர்க்கின்றனர். விஜய் போன்ற முன்னனி நடிகர்கள் நடிக்கும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தை பலவிதமாக சித்திரிகரிச்சு இவ்விதமான செயல்களே திரைகளில் காட்டி காட்டி எவ்விதமான கொடூரமன செயலையும் மக்களின் மனதில் ஒன்றுமில்லாததுபோல் பதியவைக்கின்றனர்.
பள்ளி குழந்தைகளுக்கு பேருந்து வசதி தற்போது இல்லை என்பதும் ஒரு பெரும் குறையே. கல்லூரி மாணவர்களுக்கு என அரசு பேருந்துகளே இயங்கும் போது தினம் தினம் பேருந்து பின்னால் ஓடியே களைத்து போய் தங்கள் பள்ளி படிப்பை தொடருகின்றனர். திருநெல்வேலியில் கூட சாப்டர் பள்ளி, சாரா தக்கர் பள்ளி அருகில் இருந்து பள்ளி குழந்தைகள் எவ்விதம் பேருந்து பயணம் செய்கின்றனர் என காணலாம்.
முதலில் எப்போழுதும் எங்கு வேண்டுமானாலும் சாராயம் வாங்கலாம் விற்க்கலாம் என்ற நிலை மாறினாலே நமது சமூகத்தின் பெரிய கலாச் சார சீரளிவை தடுக்கலாம். நெல்லையில் திருநெல்வேலி ஜங்ஷன் பேருந்து நிலையத்திலே டாஸ்க்கு மார்க்கு கடை உள்ளதை என்ன என சொல்ல!
பலபோதும் குழந்தைகள் கொல்லப்படும்போது கொள்ளும் பரபரப்பு அவர்கள் அரை உயிருடன் தாக்க பட்டு தப்பிக்கும் போது காணபடுவது இல்லை. சமீபத்தில் நெல்லை வண்ணார் பேட்டையில் ஒரு 8 வயது சிறுமி எதிர்  வீட்டு கொடியவனால் சீரளிக்க பட்டாள்.

சட்டங்களையும் கடுமைப்படுத்த வேண்டும். சிறுவர்களிடன் கொடுமையாக நடத்துபவர்களே ஒரு கை, கால் என வெட்டி எடுத்து விட்டால் இவ்விதமான கொடூரமானவர்களே அடையாளம் காணப்படவும் குறைந்த பட்சம் குழைந்தைகளுக்கு எளிதாக தப்பிக்கயாவது இயலும்.

 
என்னுடைய பள்ளித் தோழி 2 வகுப்பு படிக்கும் போது இவ்விதம்மாக ஒருவனால் தாக்க பட்டு தேயிலை தோட்டத்தில் குழிக்குள் உயிருடன் புதைக்க பட்டாள். அவளுடைய உயிரை காப்பாற்ற முடிந்தாலும் 8 வகுப்பு படிக்கும் போதும் அவளுடைய சரீரத்திலுள்ள மனதிலுள்ள தழும்புகள் மறையபடவில்லை. யாருடனும் பேச திராணியற்றவளாக , பதறும் மனதுள்ளவளாக ,பயம் கொண்ட கண்ணுடையளாகவே அவளுடைய வாழ்க்கை இருந்தது.

 
அரசும் காவல் துறையும் மக்களுக்கு தரும் உபதேசத்தை எண்ணி அழுவதா சிரிப்பதா என தெரிய வில்லை. பெற்றோரை பள்ளியில் கொண்டுவிட வேண்டும் என்று கூறுகின்றனர். இரண்டு பெயரும் வேலைக்கு செல்லும் சூழலில் பல வீடுகளில் பெற்றோர்கள் அதிகாலையில் பஸ்ஸை பிடித்து ஓடுகின்றனர். பல வாகன ஓட்டுனர்கள் பல பொழுதும் மிகவும் பொறுப்பாகவே குழந்தைகளே பள்ளிக்கு கொண்டு சென்று கூட்டி வரும் மகத்தான பணியை சிறப்பாகவும் செய்கின்றனர்.

 
மேலும் ராபகலாக மக்களை கண் விழித்து பாது காக்கும் காவல் துறைக்கு இந்த கொலைக்கு காரணமான பொறுப்பு எந்த அளவு உள்ளது எனவும் ஆராய வேண்டியுள்ளது!!!!

1 Nov 2010

அருந்ததிராய் உங்களுக்கு என் வந்தனம்!


சமீபத்தில் இணையம் மற்றும் வெகுசன ஊடகம் வழியாக மிகவும் புகழபட்டவர், அலச பட்டவர் மட்டுமல்ல கடுமையாக குற்றம் சாட்டபட்டவரும் அருந்ததிராயே!  இந்தியாவின் ஒற்றுமைக்கு அருந்ததியால் பெரும் பாதிப்பு வருவது போல் மாய தோற்றம் உருவாக்குகின்றனர். சமீபத்தில் ஒருவர் விமர்சிக்கயில் அருந்ததிராய் அறிவாற்றலுள்ளவர் அல்ல என்றும் மேலும் இவர் ஒரு மேல் தட்டு கிருஸ்தவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

 
என்னுடைய ஆதங்கம் அவர் எந்த அளவு கோல் கொண்டு அருந்ததியின் அறிவாற்றலை அளந்தார் என்பதே; அல்லது பெண் என்றவுடன் இவ்வாறு கூறுகின்றாரா எனவும் தெரியவில்லை.   அருந்ததியின் அம்மா மேரி ராய்http://en.wikipedia.org/wiki/Mary_Roy கேரளா பெண் எழுத்தாளர்களில் பிரபலமான ஒருவர்.  அவர் மிகச்சிறந்த பள்ளிக்கூடம் ஒன்றும் நடத்துகின்றார் கோட்டயம் என்ற இடத்தில். கோட்டயம் http://en.wikipedia.org/wiki/Kottayam
கேரளாவில் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் கொண்ட இடம். கலாச்சாரமான மக்கள் அடைங்கிய பகுதியே இது. கேரளா, தலைநகரம் (திருவனந்தபுரம்) மக்களை விட பண்பாக பழக தெரிந்தவர்கள், அழகான மலையாளம் பேசுபவர்கள், மற்று மாநிலத்தவர்கள், சிறப்பாக தமிழர்களை மதிக்கும் பண்பு கொண்ட மக்கள் வசிக்கும் இடம்.  அருந்ததியின் அம்மா சிறியன் கத்தோலிக்கர் சமூக அமைப்பை சேர்ந்தவர்கள்.  கேரளாவின் கல்வி, சமூக, அரசியல் மற்றும்  ஊடக மாற்றங்களுக்கு பெரும் அளவு பங்களித்தவர்கள்  இச்சமூகத்தில் உள்ளனர்.http://en.wikipedia.org/wiki/Saint_Thomas_Christians
அவருடைய அம்மா அறுபதுகளிலே பங்களாதேஷ் நாட்டவரை திருமணம் செய்தவர்!  அவர் பெண்களுக்கும் பெற்றோரின் சொத்தில் பங்கு உள்ளது என உச்ச நீதி மன்றம் வரை சென்று  போராடி வெற்றி பெற்று தந்தவர்.

அருந்ததியும் தன் வாழ்க்கையில் அசாதாரணமான சூழலில் கடந்து சென்றவர்.  உடன் படித்த தோழனை மணம் முடித்து சாப்பாடுக்கு வழியின்றி வீடற்று தெருவில் வசித்து, பின்பு விவாகரத்து பெற்று தற்போது கிறிஸ்தவர் அல்லாத ஒருவரை மணம் செய்து வாழ்ந்து வருபவர்.  தனது முதல் நாவலுக்கே புக்கர் பரிசு பெற்றவர்.http://en.wikipedia.org/wiki/The_God_of_Small_Things.அவர் எழுதும் செய்தி கூட வீட்டிலிருந்தோ குளிரூட்ட பட்ட அலுவலங்களிலோ இருந்து எழுதாது மக்களின் மக்களாக அவர்களில் ஒருவராக அவர்களுடன் தங்கி அவர்களை பற்றி ஆராய்ச்சி செய்தே எழுதியுள்ளார். ஒரு பெண்ணிடம் இதை விட என்ன அறிவாற்றல் துணிவு எதிர்  பார்க்க இயலும். தற்போதுள்ள பல பெண் ஊவியாளர்களில் இருந்தும் வித்தியாசமான பல கருத்துக்களை அவரின் கட்டுரையில் காணலாம். மக்களின் இதய துடிப்பை தனது எழுத்தால் கொண்டுவரும் அருந்ததியால் இந்தியாவுக்கு ஆபத்தா? அல்லது பணத்திற்க்காக அன்னிய நாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளுக்கு நமது காட்டின் கனிம வளங்களை விற்க்க துடிக்கும் அதிகார வர்கத்தால் நாட்டுக்கு கேடா?
மேலும் அருந்ததி கிருஸ்தவர் என அறிக்கையிடுவது வழியாக இந்தியா நாடு மேல் இந்துக்களுக்கு மட்டுமே அக்கரையுள்ளது போல் காட்டி கொள்கின்றனர். சுதந்திரம் காந்தியின் கொழ்கையான சத்தியாகிரகத்தாலே கிடைத்தது என பரைசாற்றியது வழியாக மற்று மதஸ்தரின் பங்கை சுதந்திர போராட்டத்தில் இருந்து வசதியாக மறைத்து கொண்டனர். மேலும் ஆயுத போராட்டமான சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களுடைய பங்கை கூட காந்தி என்ற பெரிய போர்வயால் மறைத்து விட்டனர் என்பதே உண்மை. காந்தியின் பக்கமிருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோர் பெரும் மதவாதிவளாக இருந்துள்ளனர். மேலும் நேருவே வளர்ச்சி என்ற பெயரில் 'ஊழல்' என்ற பேய்க்கு முதல் அனுமதி சீட்டு கொடுத்துள்ளார். அருந்ததி கிருஸ்தவர் என நிலை நாட்டி கொள்ள விரும்பியிருந்தால் கிருஸ்தவரை திருமணம் செய்து ஊர் ஊராக போதனை செய்து கொண்டிருந்திருப்பார், அல்லாது பழங்குடியினருடன் தங்கியிருந்து செய்தி சேகரித்து கொண்டிருந்திருக்க மாட்டார். மேலும் கிருஸ்தவர்களும் மேல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய பட்டவர்களா?  அவர்களும் இந்திய மண்ணின் மைந்தர்களாக இருந்து தங்களுக்கான உரிமைகள் மதம் என்ற பெயரில் மறுக்க பட்ட போது ஒரு மதத்தை களைந்து தங்களை மதிக்கும் மதங்களை தாவி சென்றவர்களே.

 
மேலும் பெண்கள் என்றாலே பொதுத்தளத்தில் கூடஇளக்காரமாக பேச தயங்குவதில்லை என்பதையே காட்டுகின்றது இப்பிரச்சனை. காஷ்மீர் என்பது இந்தியாவுடையது என்பது அரை உண்மையே என அரசியில் எழுத்தாளர் கிருஷ்ணா ஆனந்த் இந்த வாரம் ஞாயிரு செய்திமலர் 31-10-10 P- 5 ல் கூறியுள்ளார்.  அரை பொய்யை பற்றி அருந்ததி போன்றோர் கூறும்போது மட்டும் ஏன் கோபம் வருகின்றது
இதே போன்று ஈழப்போருக்கு அவர் குரல் கொடுப்பதையும், புலிகள் செய்த கொடுமையை பற்றி ஏன் கூற வில்லை என எதிர் கேள்வி  கேட்டு கொண்டு வருகின்றனர்.  புலிகளை பற்றியும் அனிதா பிரதாப் என்ற பெண் பத்திரிக்கையாளர் நேரில் சென்று ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டிருந்தார். அவரையும் இவ்விதமாகவே எதிர் கொண்டனர். களத்தில் சென்று செய்தி சேகரிக்க தொடைநடுங்கும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இது போன்ற பெண் பத்திரிக்கையாளர்களின் பணி மெச்ச கூடியதே போற்றா விட்டாலும் தூற்றாமலாவது இருக்கலாம்!

30 Oct 2010

எனது வீடு?

 எனக்கு திருமணம் நிச்சயம் ஆன போது, என் வீட்டை பிரிந்து செல்வதை நினைத்து தான் மிகவும் கவலை கொண்டேன்.

  விடுதியில் தங்கி படித்ததை தவிர்த்து வீட்டைவிட்டு பிரிந்ததே இல்லை. சிறு பிள்ளையாக இருந்த போது அத்தை வீட்டிற்கு ஆசையாக செல்வோம். அத்தை ஒரு ஜாலி பேர்வழி . என் அம்மா போல் இறுகிய முகம் இல்லாது எங்களுடன் நரி – கோழி, போலிஸ்-கள்ளன்  விளையாட்டுக்கு வருவார்.  நிறைய தின் பண்டங்கள் செய்து தருவார், மேலும் நல்ல கோழியாக பிடித்து சமைத்து தருவார். இருப்பினும் தூங்கும் நேரம் என் வீடு நினைவு வந்து அழுதுள்ளேன்.


எனக்கு 3 வயதாக இருந்த போது அப்பா எங்கள் வீட்டை வாங்கியதாக
கேள்விபட்டுள்ளேன்.  பின்பு ஒவ்வொரு அறையாக கட்டி பெரிது படுத்தினார்கள். முன் பக்கம் கடை, கடையோடு சேர்ந்துள்ள பின் அறையில் கூரையிலிருந்து வெளிச்சம் வருவதர்க்கென ஒரு கண்ணாடி பொருத்தபட்டிருக்கும் அந்த அறை நடுபகுதியில் இரு தூண்கள் உண்டு. அதில் சேட்டைக்கார தம்பியை கட்டி வைத்து, அம்மா அடித்தது நினைவுள்ளது. 

முன் பக்க அறையில் யேசுநாதரின் படம், ஜெபம் செய்யும் போது மெழுகுவத்தி பொருத்தி வைக்கும் நிலை,  பேயை துரத்தும் மிக்கேல் சம்மனசின் படம் என  பக்தி மயமாக இருக்கும் எங்கள் வீடு.  


 சுவரில் எங்கள் உறவினர்கள் மற்றும் எங்களுடைய புகைப்படங்கள் வரிசையாக  ஆணியறைந்து  மாட்டப்பட்டிருந்தது.  மேல் கூரை ஓடு என்பதால் கார்டு-போர்டால் தட்டி போன்று அடிக்கப்பட்டிருந்தது. விடுமுறை நாட்களில் எங்களுக்கு விளையாடும் கூடாரம் மட்டுமல்ல பெருச்சாளி, பூனை போன்றவை குட்டி போட்டு பெருக்கவும் அவ்விடத்தை பயன்படுத்தியது.
  
மழைவேளைகளில் சிறு பானைகளில் தண்ணிர் பிடிக்கும் அளவுக்கு, வீட்டின் அறைகள் ஒழுக ஆரம்பித்ததால் நான் 8 வகுப்பு படிக்கும் வேளையில் எங்கள் வீட்டை இரண்டு நிலையாக கட்ட அப்பா முடிவெடுத்தார்.

முன் பக்கம் கடை, பின் பகுதியில் வரவேற்பறை, அடுக்களை, சாப்பாட்டு அறை;  மேல் நிலையில் படுக்கை அறைகளும் குளியல் மற்றும் கழிவறையும் இருந்தது. 

 மொட்டை மாடியில் வித விதமான செடிகள், கிளிகள், முயல் என வளர்த்தோம். 

வீடு கட்டிமுடித்தவுடனே எனக்கு என ஒரு அறையை எடுத்து கொண்டேன்.  நெருங்கிய உறவினர்கள் வரும் போது எனது அறையை கொடுக்க வேண்டி வருவது தான் மிகப்பெரிய சோதனையாக இருந்தது.

அடுக்களையில் விறகு அடுப்பு இருந்தது.  விறகு அடுப்புக்கு மேல் நேத்திர பழக்குலை, ஆட்டு கால், உறியில் கருவாட்டு மீன் கட்டி போட்டிருப்பார்கள். எங்கள் பகுதி குளிர் பிரதேசம் என்பதால் அடுப்பில் தீயும்  பானையில் வெந்நீரும் எப்போழுதும்சேர்ந்தே இருக்கும்.  எழுந்த உடன் பூனையை போன்று அடுப்பு கரையில் கொஞ்சம் நேரம் சுருண்டு இருந்து தீ காய்ந்த பின்பு தான் மற்று வேலைக்கு நான் செல்வேன்.

அப்பாவுக்கு தேக்கு மர சாமான்கள் மேல் அலாதி பிரியம் இருந்ததால் எங்கள் வீட்டிலுள்ள சன்னல் – கதவுகள் கலை நயத்தோடு டிசைன் செய்ய பட்டிருக்கும். இப்பொருட்களை சுத்தமாக  பாதுகாப்பது என் பொறுப்பாக இருந்தது. சுவரில் அழுக்கில்லாது பார்த்து கொள்வோம். மாமி ஊரில் இருந்து வந்து தும்மி தும்மி சளியை சுவரில் தேய்த்து வைப்பதும் பின்பு அவர் சென்றது நாங்கள் கழுவதும் நினைவில் உள்ளது.

எனது முதல் மகன் பிறக்கும் வரை என் அறை எனக்கு என்றே இருந்தது. பின்பு குழந்தை நலன் எனக் கூறி வேறு ஒரு அறை தரபட்டது.   எ
தம்பியின் திருமணத்தின் போது வீட்டின் அமைப்பை மாற்றி அமைத்த வேளையில் எனது அறை முழுதுமாக பறிபோனது.

 எங்கள் மாட்டு பெண் வந்த சில நாட்களில் ஒரு பெரும் சுழல் காற்று எங்கள் வீட்டை தாக்கியது.  எனது பெற்றோர் கூட அந்த காற்றில் அடித்து ஒதுக்கப்பட்ட ஒரு குப்பை போன்று ஒரு மூலையில் முடக்க பட்டபோது, வாழ வந்தவர்களுக்கு வழிவிடும் சூழலில், வாழ்ந்து வந்த நானும் எனது தங்கையும் வீட்டிற்கு வெளியில் தள்ளபட்டோம்.  பின்பு வீடு என்பது எண்ணங்களிலும் கனவுகளில் மட்டும் ஒதுங்கியது.

இப்போழுதும் விடுமுறைகளுக்கு வீட்டிற்கு  செல்லும் போது, முன்பு விரும்பாத விருந்தாளிகளுக்கு கொடுக்கப்படும் அறை எங்களுக்கு தரபட்டதை  கண்டுகொண்டோம்.  

எங்கள் வீட்டில் ஒரு முகம் பார்க்கும் ஆளுயர கண்ணாடி  ஒன்று இருந்தது. அந்த கண்ணாடியை நோக்கி நாங்கள் அலங்காரம் செய்ததை விட அக்கண்ணாடியை நாங்கள்  அலங்காரம் செய்ததே மிகையாக இருந்திருக்கும்.  விபூதி இட்டு தேய்த்து ,பேப்பரால் துடைத்து மினு மினுப்பாக வைத்திருப்போம். அதன் அறைகளை பங்கு இடுவதில் எனக்கும் என் தங்கைக்கும் ஒரு மகாபாரதப் போரை நடக்கும்.  அந்த காண்ணாடி இப்போழுது எங்கள் வீட்டு மூலையில் அரவணப்பு அற்று  முடக்க பட்டபோது இன்னும் வேதனையாக இருந்தது.

மொட்டை மாடியில் துணி காயப்போடும் அசைக் கம்பியை இணைக்கும் ஒரு இருப்பிடம் இருந்தது. நான் படிப்பது, எனது பட்டணத்தை பார்த்து ரசிப்பது என என் உலகமே அதை சுற்றி இருந்தது. நாலு புறவும் தேயிலை தோட்டங்களால் சூழபட்ட எங்கள் பட்டணம், வீட்டிம் முன் பக்கம் கோட்டயம்–மதுரை ரோடு,  நாங்கள் செல்லும் ஆலயம், படித்த தொடக்க பள்ளி, மேல் நிலைபள்ளி, பேருந்து நிலையம்,  மழை வேளைகளில் பெருக்கெடுத்து ஓடும் எங்கள் பெரியார் நதியையும்  காணலாம்.
சமீபத்தில் சென்றபோது எங்கள் வீட்டு சொந்த வாரிசு அந்த கம்பியில் தொங்கி நின்று கொண்டு இது என்னுடையது அத்தை என கூறிய போது எனது அம்மாவும் சிரித்து கொண்டு எல்லாம் உன்னுடையது தான் என கூறிய போதும் மனதில் ஒரு முலையில் ஒரு முள் குத்துவதை போன்று உணர்ந்தேன். 
இப்போழுது என் வீட்டின் நினைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது போல் தோன்றுகின்றது, இல்லை  மறக்க ஆரம்பித்து விட்டேன்.  சில வேளைகளில் பழைய புகைப்பட ஆல்பமே சில நினைவுகளை மனதில் கொண்டு வருகின்றது.

 13 வருடம் முன்பு பிரிய மனம் இல்லாது இருந்த , என் உயிர் மூச்சாக இருந்த என் வீடு இன்று எனக்கு அந்நியமாகப் படுகின்றது.  நான் எனது குழந்தை பருவத்தில் கண்ட இன்பமான என் வீடு இன்று எனக்கு விருந்து வீடாகி விட்டது. 

இப்போழுது எங்களது வீட்டு முற்றத்தில் இருந்து கொண்டு, என் அறை சன்னல் வழியாக எங்கள் தென்னை மரம், மாமரம், பிச்சியை கண்டு கனவு காண ஆரம்பித்துள்ளேன்!!.










11 Oct 2010

கன்னியாகுமாரி செல்வோமா?

கன்னியாகுமாரி   எத்தனை முறை சென்றாலும் நம் அலுக்காது வரவேற்கும் அழகிய கடற்கரை.  எனது கணவர் அவருடைய இந்து  நண்பர்களுடன் ச்ல்ன்லெல்ல மிகவும் விரும்பும் இடம் ஆகும். என்னவரின் அப்பா சொந்த ஊர் கன்னியா குமாரி பக்கம் என்பதால் கன்னியாகுமாரி மேல் கொஞ்சம் பாசம் அதிகமே.


 திருவள்ளுவர்  அனுதாபிகள் என்னை அடிக்க வரலாம். ஆனால் என்னை போன்றவர்களின் கடல் காணும் ஆசையை திருவள்ளுவர் சிலையால் தடை செய்து விட்டனர் என்பதே உண்மை. நாகர்கோயில் செல்லும் வழியில் இருக்கும் பெரும்   பாறைகள் "குண்டப்பன்" மாதிரி நிற்பதே கவனித்துள்ளேன் . இதை சிற்பியால் கொத்தி வள்ளுவரும், பாரதியாருமாக வடிவமைத்திருக்கலாம். 



இன்று  சிவாஜி என்று கேட்டவுடன் சிவாஜி நினைவு வராது பல வேளைகளில் குச்சி ஸ்ரேயா,  மொட்டை ரஜனி தான் வருகின்றனர்.  திரை உலகில் 'சிவாஜி' என்ற படம் வழியாக சிவாஜி என்ற  மாபெரும் நடிகரின் பெயர், புகழ் எல்லாம் சாயம் பூசப்பட்டது போன்று திருவள்ளுவர் சிலையால் விவேகானந்தப் பாறையில் மவுசு இழந்து உள்ளது.   பிரசித்தி பெற்ற விவேகானந்த தியான மண்டபம்  இப்போழுதோ மலை அருகில் நிற்கும் சிறு மான் போல் காட்சியளிக்கின்றது. இருப்பினும் உலகு  எங்குமுள்ள மக்கள் சூரிய உதயம் காண கன்னியாகுமாரியை நோக்கி படையெடுக்க காரணமாகும் இயற்கையின் தலைவா "சூரியன்" உனக்கு ஒரு நமஸ்க்காரம்!!!

இங்கு விற்கும் பொருட்கள் விலை அதிகமே.  தின் பண்டங்கள் அல்வா போன்றவை வயறு சுத்தம் செய்யும் மருந்து போல் பயண்படுத்தலாம்.
சிப்பிகள் துணி மணிகள் வெளிநாட்டு பயணிகளுக்கு என தனி விலையுடன் விற்க படுகின்றது. இருப்பினும் கைவினை பொருட்கள் அழகுடன் காட்சி தருகின்றதை காணலாம்.

மூன்று கடல்கள்  சங்கமம் ஆகும் பகுதி இருப்பதால் இந்து சகோதரர்கள் மத்தியில் கன்னியாகுமாரி என்றும் கன்னி போல் விளங்குகின்றது. எனது கணவரின் நண்பர்களும் தண்ணீரை தலையில் தளித்து ஜெபித்தாக கூறினார். 

10 Oct 2010

4 Oct 2010

திருட்டு முதலாளிகள்.....

                                                                                                                                                     நாடு வளம்பெற மக்களுக்கு தொழில் வாய்ப்பு பெருகும் என ஒரு கூற்றுண்டு. ஆனால் போல் சமீப காலமாக தமிழகத்தில் எங்கு நோக்கினும் உழவர் சந்தை என்பது போல் வேலை வாய்ப்பு சந்தை என ஒன்று நடத்துகின்றனர்.  அரசியல்வாதிகள் வேறு வந்து,  வேலை தருவதை சும்மா த்ர்மத்திற்க்கு பிச்சை போடுவது போல் பேசி செல்கின்றனர். ஆனால் இதன் உண்மை நிலைவரம் கண்டால் பரிதாபமே.                                                                                                                              எங்கள் பகுதியில் ஒரு துப்புரவு தொழிலாளிக்கு ஒரு கழிவறைஐ சுத்தம் செய்ய 300 ரூபாய் தர வேண்டும். அதே போல் தோட்டம் சுத்தப்படுத்த 250 ரூபாய், ஒரு கொத்தனாருக்கு 300-500 ரூபாய், ஒரு வீட்டு பணிபெண்ணுக்கு ஒரு வாளி துணி துவக்க 50 ரூபாய், ஆனால் ஒரு  பட்டதாரி ஒரு மாதத்திற்க்கு 3-4 ஆயிரம் ரூபாய்க்கு அடிமையாக எளிதாக கிடைப்பான். அவனை வைத்து மேலாளருக்கு காப்பி வாழ்கி வர வைக்கலாம்; முதலாளி அம்மா  துணி இஸ்திரி கொடுத்ததை கூட வாங்கி வர வைக்கலாம்.                                                                                                                 ஆறு மாதம் முன்பு நடந்த வேலை வாய்ப்பு சந்தையின் மறு நாள் தொடங்கி இளம் பெண்கள் 3- 4 பேராக திருநெல்வேலி கார்ப்பரேஷன் எல்லையோரமுள்ள எங்கள் பகுதிக்கும் படயெடுத்தனர் பம்பு செட்டு, மின் துடைப்பம் போன்றவை விற்பதற்க்காக. வீணாபோன வெயிலில் பேசக்கூட திராணியற்று மேடம்,மேடம் என கூவி அழைத்து நிற்பதை பார்க்க எங்கள் ஊர் கீரக்கார அக்காவை விட பரிதாபமாக இருந்தது.                                                                                                                      
                                                                                                                                       முதுகலை பட்டம் பெற்ற என்னுடைய நண்பர்கள் 4 ஆயிரம் ரூபாய்க்கு 2 வருடமாக ஊடகத்துறையில் வேலை செய்து வருகின்றனர்.  அவர்கள் கூறுவது என்னவெற்றால் நாங்கள் படித்த படிப்புற்க்கும் வேலைக்கும் சம்பந்தமேயில்லை. எங்களை மனிதர்களாக கூட மதிப்பதில்லை ஊதியம் பெறும் அடிமைகளாகவே பார்க்கின்றனர் என்பதே.                                                                                                                                                                        ஒரு முறை எங்கள் பல்கலைகழகத்திற்க்கு வேலை  தருவதாக வந்தவர்கள் ஒரே வேலைக்கு சென்னை என்றால் ஒரு ஊதியமாம், திருநெல்வேலியென்றால் அதன் அரைப்பகுதி ஊதியமாம்.  உண்மையில் சென்னையை விட பொருட்கள் இங்கு விலை அதிகமாகவே உள்ளது. இங்குள்ள ஆசிரியர்களுக்காகவே விலைஐ அதிகமாக வசூலிக்குகின்றனர்.  மேலும் தமிழகத்திற்க்குள்ளே சென்னை தமிழர்களுக்கு ஒரு நியாயம் மற்ற தமிழர்களுக்கு ஒரு நியாயம் என்றால் என்ன சொல்ல?                                                                                                                                                                                      எனது கணவர் 3 வருடம் முன்பு ஒரு கனேடிய கணக்கு நிறுவனத்தில் தணிக்கையாளராக (internal auditor)பணிபுரிந்தார்.  இங்குள்ள அலுவலகமும்  கனடாவிலுள்ள அலுவலகவும் இணைந்து வேலை செய்யும். அங்குள்ள ஒரு நபருக்கும் தரும் 2000 டாளர் வைத்து இங்கு 10 பேருக்கு ஊதியம் தந்தனர்.  தென் தமிழக முதலூர் என்ற கிராமத்தை  சேர்ந்த முதலாளி ஒவ்வொரு முறை வரும் போதும் ஊதியம் உயரலாம் என எதிர்பார்த்திருப்பார்கள். அந்த முதலாளியோ வாய்க்கு கனடா நாட்டு மிட்டாய் , தலைக்கு போட தொப்பி, போட்டு தூங்க டீ ஷர்ட் கொண்டு கொடுப்பார். போவதற்க்கு முன்பு ஊழியர்களை அழைத்து ஒரு உயர்ரக உணவகத்தில் உணவு வாங்கி தருவார்.  பின்பு விடைபெரும் வேளையில்  தற்போது உலகளவில் நிதிநிலை மோசமாக உள்ளது.  கடவுள் அனுமதித்தால் அடுத்த முறை ஊதியம் உயர்த்தபடும் என கூறி செல்வார்.அவ்வாறே மூன்று வருடம் ஓடியது.  வேலை நேரவும் மாலை 5 தொடங்கி காலை 2 வரை, பின்பு காலை 9 முதல் மதியம் 2 வரை. போதாதற்க்கு கண்காணிக்கும் காமரா, உளவு சொல்வதற்க்கு என்றே முதுகெலும்பில்லா சில அலுவலர்கள் மேல்ப் படியாக முதலாளியின் இந்திய உறவு கண்காணிகள் என பட்டயை தீட்டுவார்.  இந்தியா  உறவின- முதலாளிகளின் கொட்டகம் தாங்காது.  அவர்கள் வீட்டு கைப்பிள்ளை கூட உதவி இயக்குனர், நிறுவன அதிகாரி என பதவி பெற்றிருக்கும்.  இங்குள்ள விடுமுறை கிடையாது, பஞ்சபடி,போனசு என கேட்பதே பெரும் குற்றம்!.     அதற்க்கு எங்கள் ஏழை!! இந்திய முதலாளிகள் எவ்வளவோ மேல் தாத்தா, பாட்டி செத்தால் விடுமுறையுண்டு, காதுகுத்து,கோயில் கொடைக்கெல்லாம் அனுமதியுடன் செல்லலாம், தீவாளிக்கு கொஞ்சம் பணவும் தருவர்.   சில இரக்க குணமுள்ளோர் குழந்தைகள் கல்வி கட்டனத்தைக்கூட ஏற்று கொள்வர்.(எல்லோருக்கும் பொருந்தாது,உயர் நிலை அலுவலகர்களுக்கு மட்டும், முதலாளி விருப்பினாலும் இந்த விசுவாசமான அதிகாரிகள் கீழ் நிலை வேலையாட்களுக்கு தர அனுமதிக்க மாட்டார்கள்)                                                                                                                       தற்போது இந்திய பத்திரிக்கையை எடுத்தால்  தனியார் ஊழியர்கள் கோடிகள் வாங்குவது போலவும் கலாச்சாரத்தை அளிப்பது போலவும் நம்ம ஊர் கலக்டரை விட ஊதியம் வாங்குவதாகவும் கதை எழுதுகின்றனர்.  சென்னையில் கூட தனியார் நிறுவனங்களில் 30 ஆயிரம் என எழுதிகொடுக்க பட்டிருக்கும் ஆனால் பெறுவதோ 15 ஆயிரம் மட்டுமே. பெரும் சம்பளம் பெறுவது மிக சொற்ப்ப தமிழர்களே. தமிழ் பேச தெரியாதா மலையாளம்,வட மாநிலத்தவர்க்கே மவுசு. சென்னையில் கூட வணிகத்தில் பட்டம் பெற்ற பெண்கள் 3 ஆயிரம் ரூபாய்க்கே வேலை செய்கின்றனர்.                                                                                                                                                   காற்றோட்டம் அற்ற குளிரூற்ற பட்டஅறைகளில் வேலை செய்து ஆரோக்கியமான வாழ்வை இழப்பது மட்டுமே மிச்சம்!!.

3 Oct 2010

சமரசம்

சமரசம் பற்றி விசரன் அண்ணா அவருடைய பதிவில் கதைத்திருந்தார். 




நான் மேற்கொண்ட சில சமரசத்தை பற்றி அப்போழுது ஞாபகம் வந்தது. சமரசம் செய்து கொள்வது அவ்வளவு எளிதோ மகிழ்ச்சியானதோ ஆன  செயல் அல்ல என்பதே உண்மை. துன்பத்திலும் துன்பமாக இருப்பினும் சூழல்,  கலவரம் அற்று வாழும் ஆசை, என பல காரணங்கள் நாம் சமரசப்படுத்தி கொண்டு வாழகொள்ள நிற்பந்திக்கபடுகின்றோம்.


 3 வயதிலே தம்பி தங்கையிடம் சமரசத்துடன் வாழு வேண்டிய கட்டாயத்தில் என் அம்மாவின் மடியை அவர்களுக்கு விட்டு கொடுத்தேன். வளர வளர சமரசமே வாழ்க்கையாகி போனது. அம்மாவிடம் சமரசத்துடன் வாழ வேண்டுமென்றால் அம்மா விரும்புவதுபோல் உடையணிய வேண்டும், அம்மா ஆசைப்படுவது போல் சடை கட்ட வேண்டும், அம்மா அனுமதிப்பவர்களிடம் பேச வேண்டும், அம்மா சொல்லும் போது தூங்க வேண்டும் அம்மா எழுப்பும் முன் எழும்பவேண்டும் என ஆகியது.
“வீட்டு சூழலே பார் தம்பி தங்கை வாழ்க்கையும் பார் “ என கூறியபோது கனவு காண துவங்கும் முன்னே திருமணத்திற்கும் சம்மதித்தேன்.                            
பின்பு புகுந்த வீட்டிலும் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் மாமியார் விருப்படி பூ வைக்க வேண்டும் நகையணியவேண்டும், அவர் சொல்வது போலவே  எண்ணவேண்டும் , ஏன் சாப்பிட கூட வேண்டும் என கற்று கொண்டேன்.
இப்போழுது கூட என் மகன்களிடம் சமரசம் கொள்ள வேண்டுமென்றால்  ஒருவனுக்கு என் கணிணியை தர வேண்டும் அடுத்தவனுக்கு என் அலை பேசியை தரவேண்டும்.
எங்கெல்லாம் சமரசமாக போக மனம் ஒத்துழைக்கவில்லயோ அங்கெல்லாம் பெரும் சண்டை வெடித்தது, எங்கெல்லாம் சமரசத்துடன் வாழ வேண்டுமென முடிவெடுத்தேனோ அங்கெல்லாம் வெடித்தது என் இதயமே!!!.  சமரசபட்டு வாழ்ந்ததில் வருத்தவுமில்லை, சமரசம் கொள்ளாது இருந்ததால் தனிமைப்படுத்த பட்டதில் துயரவுமில்லை.


சமரசப்படாது வாழத்துடிக்கும் மனிதர்களை உற்றார் உறவினர் நண்பர்கள் மட்டுமல்ல வாழும் சமூகம் மட்டுமல்லாது சில வேளைகளில் நாடுகள் கூட சேர்ந்து  ஒடுக்குவதை கண்டு என் மனம் கலவரம் கொள்கின்றது.

27 Sept 2010

பார்வை பலவிதம்........

காமன்வெல்த் விளையாட்டு கிராமத்தில் சுத்தம் இல்லை என வெளிநாட்டு பிரநிதிகளின் 
புகாருக்கு பதிலளிக்கும் வகையில் போட்டி ஒருங்கிணைப்பு குழு செய்தி தொடர்பாளர்லலித்
 பனோட் அளித்த பேட்டியில் “ தூய்மை தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு.


 எங்களை பொருத்தவரை சுத்தமாக இருக்கின்றது. ஆனால் வெளிநாட்டை சேர்ந்தவர்களின்
 பார்வைக்கு அது சுத்தமற்றதாக தெரிகிறது என்றார்”. அதிகாரிகளின்  மெத்தனபோக்கு 
 மனநிலைக்கு  மிக துல்லியமான எடுத்து காட்டான வார்த்தையாக இது உள்ளது. 
 நாம்  நம் நீர் நிலைகள் , அரசு ஆஸ்பத்திரி, அரசு பள்ளியின் தூய்மையை பற்றி கதைக்கும் போதும் இவ்விதம் தான் அதிகாரிகளின்  நிலைபாடாக இருக்கும் போலும்.


ரெட்டியார் பட்டி அரசு பள்ளியை கடந்தே எனது வீட்டிற்க்கு செல்ல வேண்டியுள்ளது. 
 பள்ளியை சுற்றி சுற்று மதிலுக்கு பதிலாக பற்றிகள் மேயும் சாக்கடையை உள்ளது.  
மாணவர்களுக்கு கற்ப்பிக்கும் ஆசிரியர்களும், படிக்கும் புத்தகம் மட்டுமல்ல  ஆரோக்கியமான மனதிற்க்கும் உடல் நலத்திற்க்கும்  காற்றோட்டமான  சுற்று சூழலும் அவசியம் என  பள்ளி அதிகாரிகளோ  ஆசிரியரோ புரிந்து கொள்ளும் நாட்கள் அருகில் இல்லை என்பது மட்டும் தெளிவாகின்றது.


அதே போன்றே அரசு ஆஸ்பத்திரிக்கைகளின் நிலையும். ஆஸ்பத்திரிக்குள்ளும் சுற்றியுள்ள பகுதிகள்   துர்நாற்றம் நிறைந்ததாகவே காணபடுகின்றது. நோயை தீர்க்கும் இடம் என்பதை விட நோயை பெற்று கொள்ளும் இடமாகவே காணபடுகின்றது. சமீபத்தில் என் கணவருக்கு தெரிந்த ஒரு நபர் வாகன விபத்தில் சிக்கி  நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ளார் என கேள்வி பட்டு காண செல்ல வேண்டியது ஆயிற்று. ஆஸ்பத்திரியில் எந்த அறையில் உள்ளார் என தெரியாததால் ஆஸ்பத்திரியின் பல அறைகளை கடந்து காண செல்ல வேண்டி வந்தது. எந்த ஒரு அறையும் துளியும் சுத்தம் இல்லாது இருந்தது . மூச்சடக்கியே  நாங்கள் காண சென்ற நபரின் அறையின் அருகில் செல்ல முடிந்தது.  வெத்தலை எச்சில், காயித துண்டுகள்,இரத்த கறை என நோயாளிகளின் அறைகள் காண- சொல்ல முடியாத வண்ணம் அசுத்தமாகவும் 
நாற்றம் கொண்டதாகவும் இருந்தது.


திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரரிஐ  கணக்கிடும் போது நாகர்கோயில் அரசு ஆஸ்பத்திரி 
சுத்தத்தில் நல்ல நிலையில் உள்ளது என சிகித்சை மேற்கொண்ட மக்களிடம் இருந்து 
கேள்விபட்டுள்ளேன். திருநெல்வேலி கார்ப்பரேஷன் சேர்ந்த பகுதியுள்ள ‘டவுண்’  பகுதியை கடந்து பேருந்தில் கூட பயணிக்க முடியாத சூழல்.  பெரும் வியாபாரிகள் மற்றும் மக்கள் கூடும் இடமே அது. இருப்பினும் மூக்கை பொத்தாது கடந்து செல்ல இயலாது இயலாத சூழல். அரசின் கடமை வரிகள் வசூலிப்பது மட்டும் தானோ.  ஒருவேளை சுத்ததை பற்றி இவர்களின் பார்வை எப்படி இருக்குமோ. எல்லாம் பராபரனுக்கு மட்டுமே வெளிச்சம்! 

26 Sept 2010

“ஈழ வலைப்பதிவுகளை பற்றி ஓர் ஆய்வு”.


கடந்த ஓராண்டு காலமாக இளம் ஆராய்ச்சியாளர் பட்டத்திற்க்கென ஈழம் வலைப்பதிவுகளை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டு பேராசிரியர் முனைவர் பே.கோவிந்தராஜ் அவர்களின் வழிகாட்டுதலில், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்திற்க்கு சமர்ப்பித்துள்ளேன்.   
                                         பேராசிரியர் முனைவர் கோ. ரவிந்தரன் அவர்களால் மூன்று வருடம் முன்பு அறிமுகமான வலைப்பதிவுகள் எனது வாழ்வில் ஒரு பெரும் வாசிப்பு தளமாக அமைந்தது. தமிழ் ஊடகங்களால்  ஈழ செய்திகள்  தர இயலாத சூழலில் தமிழ்மணம் வழி உண்மையான செய்தி அறியமுடிந்தது என பேராசிரியரின் வலைப்பதிவில் வாசித்திருந்தேன். இந்த மைய்ய கருத்தை தேடும் பணியாகவே இவ் ஆராய்ச்சி  என்னை  இட்டு சென்றது.
வலைப்பதிவுகள் முதல் முதலாக பாட பகுதியின் பாகமாகவே எங்களுக்கு அறிமுகமாகியது.  வகுப்பு-தேற்வுக்கென வாசிப்பாளராகிய நான் பின்பு வலைப்பதிவுகளுக்கு என என் நேரத்தை நிறையவே செலவிட்டேன். சில வலைப்பதிவுகளை வாசிக்கும் போது நாம் பத்திரிக்கைகளில்  இருந்து பெறும் செய்தியை விட ஆழவும் சாரமுள்ளதாக இருந்தது. மேலும் தனி மனிதர்களின் பார்வை  நம்மை வாசிப்பின்  மற்றொரு தளத்திற்க்கு இட்டு செற்றதை காணமுடிந்தது.                                                                                                                                                                                                           ஈழப்போர் செய்திகளை பத்திரிக்கையின் வாசித்த போது நான் கண்டது  ஈழ செய்தி பத்திரிக்கைக்கு பத்திரிக்கை அதன் அர்த்தம் கொள்ளுதல் மாறுபட்டு கொண்டே  இருந்தது.  அத்தருணத்தில் என்னுடைய பார்வை வலைப்பதிவுகளை நோக்கி சென்றது.  பத்திரிக்கைகள் ஈழத்தை  பற்றி கதைப்பதை தவிர்த்து, வலைப்பதிவர்களான சாதாரண மக்கள், என்ன கூறுகின்றனர் என்ற அறியும் நோக்குடன் ஈழ வலைப்பதிவுகளை தேடி சென்றேன்.  தனி  மனிதர்களின், சிறப்பாக அம்மண்ணின் மக்களான ஈழ மக்களின் கருத்து எண்ணங்கள் ஆசைகள், விருப்பங்கள், அரசியல் பார்வை,  அறிய முடிந்தது.  அவர்களுடைய கலாசாரம், ஆசைகள், உரிமை எவ்வாறு புரக்கணிக்கபடுகின்றது,  அரசியல் மற்றும் அதிகார மோகத்தால் ஒரு இனமக்கள் எவ்வாறு நசுக்க படுகின்றனர் என காண இயன்றது. ஜனநாயகத்தின் மூன்றாவது தூண் என அறியப்படும் ஊடகங்களால் அரசியல் மற்றும் சில காரணங்களுக்காக உண்மை மறைக்கபட்டு  திரிக்க பட்ட செய்திகள் தரப்படும் சூழலில் தனி மனிதர்களால் எழுதப்படும் வலைப்பதிவின் தேவை, தாக்கம் அதிகமாகின்றது என கண்டுகொண்டேன்.
எனது பாடப்பிரிவும் ஊடகத்துறை சார்ந்து இருந்ததால் இக்கருத்தை தேடும் விதமாகவே எனது ஆராய்ச்சியை அமைத்துகொள்ள முடிவெடுத்தேன். மிகவும் விருவிருப்பான நாட்களாக இருந்தது. எனது   ஆராய்ச்சிக்கு என  6 வலைப்பதிவுகளை தேர்ந்து  எடுத்துள்ளேன்.   இவ்வலைபதிவுகள் தனி மனிதர்களின் எண்ணங்களாக இருக்க வேண்டும் மேலும் ஈழசெய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்படுவதாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும்  எச்சரிக்கையாக இருந்தேன்.  உள்ளடக்க பகுந்தாய்வு முறையில் பண்பார்ந்த மற்றும் அளவுசார்ந்த மதிப்பீடுகள் கொண்டு ஆராய்ச்சி முடிவுக்கு எட்டியுள்ளேன்.
தலைப்பை  தேர்ந்தெடுக்கும் உரிமை தந்தது, மேலும் ஆராய்ச்சியை நடத்த வழிகாட்டி  உற்சாகப்படுத்திய   எங்களது துறைத் தலைவர்
பெ. கோவிந்தராஜு அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைபட்டுள்ளேன்.  தனி மனித சுதந்திரத்தை என்றும் மதிப்பவர் எங்கள் துறைத்தலைவர்.
இவ்வாராய்ச்சிக்கு என 517 பதிவுகளை மிகவும் ஆழமாக வாசிக்க பட்டாலும் இதன் பொருட்டால்  பல உலக நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள பல ஈழ தமிழர்களின்  வலைத்தளங்களுக்கு செல்லும் வாய்ப்பை பெற்றேன்.  மிகவும் அருமையான  அறிவுசார்ந்த மக்களிடன் கலந்துரையாடல் மிக்க மகிழ்ச்சியை தந்தது.  எனது ஆராய்ச்சிக்கென நான் சில விளக்கங்களை இணையம் வழியாக வலைப்பதிவர்களிடம் ஆராயும் போது, எவ்வித தயக்கவும் இன்றி மிக சிறிய கால அளவுக்குள் சில வேளைகளில் 2 அல்லது 3 மணி நேரத்திற்க்குள்ளாக  எனக்கு  பதில் தந்து உதவியுள்ளனர்.  மேலும் சில நல்ல வலைப்பதிவுகளை  எனக்கு அறிமுகபடுத்தியுள்ளனர். அவர்களுடய பண்பார்ந்த எழுத்து,சிந்தனை எனக்கு உற்சாகமூட்டியுள்ளது.  நண்பர்களாகவும் சகோதர்களாகவும் என் வாழ்வில் வந்து சென்ற என் ஈழ சகோதர்களை வணக்குகின்றேன். அவர்களின் சிந்தனை வளம், சுதந்திர தாகம், தனிமனித ஆளுமை என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றது. சிறப்பாக நான் தேர்ந்தெடுத்த வலைப்பதிவுகளின் ஆசிரியர்களாம் -வலைப்பதிவர்கள் கானா பிரபா, தமிழ் சசி, தீபச்செல்வன், தமிழ் நதி, ரிஷான் ஷாரீப் போன்ற என் இனிய வலைப்பதிவர்களுக்கு என் நன்றிஐ காணிக்கையாக்குகின்றேன்.
மேலும் ஆக்கபூர்வமான சொல்களால் என்னை உற்சாகப்  படுத்திய பேராசிரியர் முனைவர் கோ. ரவீந்திரன், பேராசிரியர் முனைவர் வெ நடராஜன், பேராசிரியர் நடராஜன் பொன்னம்பலம், சவேரியார் கல்லூரி ஆங்கிலத்துறை விரிவுரையாளர் ஜேசன் பிர்ஸ்லி ராஜ் நண்பர் ராம்ஜி, தூபாயில் பணிபுரியும் நண்பர் சய்யப்துள்ளா, சஞ்சயன் மாணிக்க ராஜ், முனைவர் மு இளங்கோ,  தோழி கிருஸ்டி சில்வெஸ்டர், போன்ற சான்றோரையும் இத்தருணத்தில் நினைவு கூறுகின்றேன்.
மேலும் எனது எழுத்தை சரிபார்த்து தந்த   சிவந்தி ஆதித்தனார் கல்லூரி ஆங்கிலத்துறை பேராசிரியர் சேவியர் பெஸ்கி க்கும் நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன்.                                                                                                                                                எனது துறை பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், என் வகுப்பு தோழர்கள், என் பெற்றோர், என் தங்கை, தம்பி, என் கணவரின் சகோதரிகள், கணவரின் நண்பர்கள், இவர்களின் நல் எண்ணமே என்னை முன் நடத்தியது.
இவ்ஆராய்ச்சியின் தாக்கத்தால், பூவுடன் சேரும் நாரும் மணம் பெறும் என்பது போல்  நானும் ‘ஜோசபின் கதைக்கிறேன்’  என ஒரு வலைப்பதிவை உருவாக்கி எனது சிந்தனையும் பதிவுசெய்து கொண்டு வருகின்றேன். மேலும் எனது ஆராய்ச்சிக்கு என வலைப்ப்திவர்களை எழுத தூண்டும் காரணிகள் மற்றும் மனமகிழ்ச்சி ஏது என அறிய முற்பட்டேன். மறுஇடுக்கைகள் வழியாக வலைபதிவர்கள் எழுத உந்தபடுவதை என் வலைபதிவுக்கு நான் பெறும் மறு இடுகை வழியாக  அனுபவ பூர்வமாக உணரமுடிந்தது.
மேலும் எனது அன்பு கணவரை நினைத்து பார்க்கின்றேன். அவருடைய இக்கட்டான சூழல் மத்தியிலும்  வெறும் ஆசை என நான் கண்ட கனவை நனைவாக்கியவர்.  முதுகலை பட்ட படிப்பு மேலும் இளம் ஆராய்ச்சி பட்ட படிப்பு ,  என  என்னையும்  இரு பிள்ளைகளுடன் சேர்த்து மூன்றாவது பிள்ளையாக நினைத்து படிக்க வைத்தார்.   என்னவரின் அன்புக்கும் தியாகத்திற்க்கும்  எனது ஆரய்ச்சியை சமர்ப்பிக்கின்றேன்.                                        என் குழந்தைகளுக்கும் நன்றி செலுத்த கடமைபட்டுள்ளேன்.  பல வேளைகளில் அவர்களுடன் விளையாடும் நேரம் வலைப்பதிவுகளில் ஆழ்ந்து அவர்களை எரிச்சலுக்கு உள்ளாக்கியுள்ளேன்.  பல வேளைகளில் கணிணிக்கென எங்களுக்குள் சமரசம் ஏற்ப்படாது  பெரும் வழக்கிட்டு, என்னவர் வந்து பஞ்சாயத்து செய்து வைக்கும் அளவுக்கு எங்கள் சண்டையை கொண்டுசென்றுள்ளோம். இருப்பினும் என்னை உருவாக்கும் என் சிற்பிகள்-என் குழந்தைகளையும் நினைத்து கொண்டு எனது ஆராய்ச்சி கட்டுரையை முன்னுரை, முன்நிகழ்ந்த புனராய்வு(Review of Literature), ஆராய்ச்சி,  ஆராய்ச்சி முடிவு, முடிவுரை, நான் சென்ற பாதைகள் என பிரித்து பல  பதிவுகளாக பதிந்துள்ளேன். 
தங்களின் கருத்தையும்  அறிய  ஆவலுடன் அன்பு தோழி,
சகோதரி ஜோசபின் பாபா.

19 Sept 2010

சில ஆண்கள்..........

நேற்று   எனது கணவரும் நானும் ஒரு மடிக்கணிணியின் தரத்தை சோதனை செய்து கொண்டிருந்தோம்.  புகைப்படங்கள், காணொளிகள்., பாட்டுக்கள் என கணிணி முழுக்க ஒரே கலவரமாக இருந்தது.  சில ஆலயங்களின் படங்கள் அருமையாக இருந்ததால்  எங்களுக்கு தேவயானவயே சுருட்டி கொண்டிருந்தோம்.  முதல் சில ஆல்பங்களில் அவர் ஆசை மனைவி, குழந்தை என குடும்பபடங்களாக ஓடி கொண்டிருந்தது. நான் சொல்ல வரும் நபர் கோட் சூட்டுடம் மிகவும் பவ்வியமாக  மனைவி,குடும்பத்துடுடன் காட்சி கொடுத்து கொண்டிருந்தார்.  போக  போக சாயம் வெளுப்பது போல அவருடைய பணியிடத்திலுள்ள சில புகைப்படங்கள் அவரே புடமிட்டு காட்டியது.  அப்படியே அம்பியாக காட்சியளித்தவர் ரோமியோ-வாக மாறிகொண்டிருந்தார். 

 அவரும் அவருடைய நண்பருகளும் கப்பலில் வேலை செய்வார்கள் போலும். கப்பலில் உள் அமைப்பை புகைப்படம் எடுத்து கொண்டிருந்தவர் அப்படியே சாப்பாடு  ,பிராந்தி பார் என கேமரவே வைத்து சிவதாண்டம் ஆடி கொண்டிருந்தார்.  ஒரு கட்டத்தில் பார் பெண்ணெயும் சுத்தி சுத்தி படம் எடுக்க ஆரம்ப்பித்து விட்டனர்.  அப்பெண்ணை  ஒவ்வொரு ஒருவராக சர்க்கசில் போன்று தூக்கி போட்டு விளையாடுகின்றனர்.  என் பார்வை அவர், அவரின் மனைவியுடன் நிற்க்கும் படங்கள் பக்கம் சென்றது.  மனைவி பூச்சூடி நகையணிந்து பட்டு சேலையணிந்து, பார்க்க துடிக்கும் ஆண் மனம் ஏன் அடுத்த பெண்களை இவ்வாறாக காண தோன்றுகின்றது .  இன்னும் வெறு விதமாக நினைக்க தோன்றியது. அவருடைய மனைவியும் கணவர் தான் மிகவும்  தாராளமாக மனதுடன் நடந்து கொள்கின்றாரே  நாமும்  மற்று ஆண்களுடன் தாராளமாக  நடந்து கொள்ளலாம் என எண்ணினால் விட்டு தான் வைப்பார்களா?

சமீபத்தில் ஒரு பெண் அலைபேசியில் அதிக நேரம் கதைத்து கொண்டிருந்தாள் என்ற காரணத்திற்க்காக மிகவும் கொடூரமாக எரித்து கொல்லபட்டார்.  அதிலும் பெரும் சோகம் இச்செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை தர்மமான எழுத்தாகும்.  அப்பெண் அலைபேசியில் பேசுவதை நிற்த்தும்  படி அவளுடைய கணவர் பணிந்ததாகவும் அவள் பணியாததால் தன் குடும்பத்தில் மானம் கப்பல் ஏறிவிடுமோ என நினைத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டாராம்.  ஒரு வேளை இவருடைய நேரத்தை இன்னும்  அதிகமாக மனைவிக்காக  செலவிட்டிருந்தால் அலைபேசியில் கதைப்பதை குறைத்து குடும்பத்துடன் ஐக்கியமாகி இருப்பாள்.  அதிலும் ஒத்து வரவில்லை என்றால் அவளின் விருப்படி அவளின் வாழ்க்கையை அமைத்து கொடுத்து இவரும் நலமாக வாழ்ந்திருக்கலாம். ஓர் கொலை  ஒரு பிரச்சைனக்கு தீர்வாகுமா. ?அதுவும் இரு குழந்தயின் தாய் அப்பெண்?


அதே போன்று சமீபத்தில் எனக்கு தெரிந்த ஒரு பெண் ஒரு பெரும்  மதிப்பிற்க்குரியவரின் வீட்டில் பணி செய்து கொண்டிருந்தார். அவர் சமீபகாலமாக அவர் வீட்டிற்க்கு  போவதில்லை. விசாரித்தபோது சின்ன அம்மை வந்துவிட்டதாகவும் அவர்கள் வீட்டில் வர வேண்டாம் என சொல்லி விட்டதாகவும் கூறினார். நான் அவரிடம் பணம் உதவி கிடத்திருக்கும் அல்லவா என விசாரித்தேன்.  அந்த நபர் அரை லட்சத்திற்க்கும் மேல் சம்பளம்  வாங்கும் நபர், அப்பெண் ஒரு இளம் விதவை, மேலும் 1,3 வகுப்பில் படிக்கும் குழைந்தைகளும்  உள்ளனர். அக்குழந்தைகளும் சின்னம்மையால் பாதிக்க பட்டிருந்தனர் அச்சமயம். அப்பெண்  கூறிய சில விஷயங்கள் மிகவும் கொடியதாக இருந்தது. அப்பெரியவரின் மனைவிக்கு இவரின் நடைவடிக்கையை கண்காணித்து  கொண்டுயிருப்பதாம் வேலை.  இப்பெண்  தமது எண்ணமாக இருக்கலாம் என வெளிக்காட்டாமல் வேலை பார்த்து வந்தாராம்.  அப்பெரும்  மனிதர் ஒரு நாள் இப்பணிப்பெண்ணை அழைத்து, என் மனைவி  சந்தேகபடுகின்றாள்; உன்னை ஒன்றும் கூறமாட்டாள், நீ போன பின்பு என்னை திட்டுவாள்.  ஆகயால் என்னை கண்டாலும் காணாதது போல் நடந்து கொள் என அறிவுரை கூறினாராம்.  என்ன கொடுமை பாருங்கள்.  தன் தாலி கட்டின மனைவியிடம் உரையாடி தன் நிலையை வெளிப்படுத்த தைரியம் இல்லாது அவ் ஏழை பெண்ணை மேலும் மன உளச்சலுக்குள் உள்ளாக்கியுள்ளார்.  தன் மனைவி செய்வது தப்பு என்று தெரிந்தும் வக்காலத்து வாங்கி மனைவியிடம் காட்டும் கரிசனை மற்று பெண்கள் என்பதால் இளக்காரமா? மேலும் கணவனை சந்தேக கண்ணோடு பார்க்கும் பெண்களுக்கு தன் வேலைசெய்ய பணிபெண்கள் தான் அமர்த்த வேண்டுமா என சிந்திக்க வேண்டும்.


இவ்விதமாக குடும்ப சூழல், ஏழ்மை என பல காரணங்களுக்காக வீட்டு படி தாண்டி பணிக்கும் வரும் பெண்கள் இவ்விதமான கொடியவர்களை எதிர் கொள்ள வேண்டியுள்ளது.


நான் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்ந்தபோதும் இச்சூழலே உணந்தேன். பெண்களை மேலாளர் அந்தஸ்த்தில் உள்ள ஆண்கள் படுத்தும் பாடு சொல்லி ஆகாது.  நான் ஒரு போதும் பசி கொடுமை என்ற காரணத்திற்க்காக பணிக்கு செல்லும் சூழல் இல்லாததால் மேலாளகர்களிடம் பல முறை சண்டையிடுள்ளேன்.  மேலாளர்கள் பேச்சு மிகவும் கீழ்த்தரமானதாக இருக்கும்.  தன் மனைவியிடம் கை கட்டி பணிந்து போகும் பல ஆண்கள், அவர்கள் வேலையிடங்களில் அபலை பெண்களை இவர்கள் அடிமை போன்று நடந்துகின்றனர்.


  வேலையிடங்களில் என்று மட்டுமல்ல கல்வி கற்க்கும் இடங்களில் கூட இச்சூழலே!  ஒரு இளம் விரிவுரையாளர் எங்கள் துறையில் இருந்தார். நான் 10 வருடம் கடந்து கல்வி கற்க்கும் நோக்கத்துடன் சென்றதால் இளம்பேராசிரியர்கள் என்னை விட இளையவர்களாகவே இருந்தனர். அதில் ஒருவர் என்னை எங்கு கண்டாலும் கேலி பண்ணுவதையே பொழுதுபோக்காக கொண்டிருந்தார்.  திருமணத்திற்கு  பின்பு உங்களை போன்றோர்  படிப்பதால் எங்கள் பாட ப்பிரிவுக்கை மதிப்பு குறைவு என அலுத்துகொள்வார்.  துறை சார்ந்த மாணவர் கூடுகை நடைபெறும் போதும் என்னை வம்புக்கு இழுக்காது இருப்பது கிடையாது. நம் மத்தியில் இருக்கும் ஜோசபின் நம்மில் வயதில் மூத்தவர் அவரின் அறிவுரையை நாம் கேட்போம்...... என ஆரம்பிப்பார்! ஒரு முறை இச்செயலை பற்றி என் பேராசிரியரிடம் முறையிட்ட போது சில ஆசிரியர்களுக்கு சில மாணவர்களை சகித்து கொள்ள முடியாது ஆகயால் நீ படிப்பு என உன் லட்சியத்தை நோக்கி செல் தேவையற்ற கூட்டத்திற்க்கு பங்கு பெற  வேண்டாம் என கட்டளையிட்டார். அதன் பின் அவ்விளம் விரிவுறையாளரின் பேச்சிலிருந்து தப்பித்து கொண்டோம் என எண்ணிகொண்டேன்.  ஆனால் அந்த ஆசிரியரோ ஒரு நிகழ்ச்சிக்கு பணம் முழுவதுமாக கொடுக்க வில்லை என கூறி எனது தேர்வு சீட்டை வைத்துகொண்டு, தேற்வு எழுதும் கால் மணிநேரத்திற்க்கு முன்பு அந்த ஆள் என்னை என்னவெல்லாம் பேசவேண்டுமென்று நினைத்தாரோ அவ்வாறாக திட்டினார்.  அதில் ஒரு வார்த்தை “நீ என்ன பெரிய இவ்வளோ”,  கேட்டதும் நான் எதிர் பார்க்காதளவு என் பெண்மை சினம் கொண்டு  எழுந்தது.  நானும் பதில் அதே நாணயத்தில் கொடுத்திருந்தும்  ஒரு மாத காலம் மன உளர்ச்சலுக்கு ஆளானேன்.
 இவ்விதம்மாக பெண்கள் பலவிதத்தில் பலரால் சூரையாரைப்படுகின்றனர்.  அவ்விதம் மனபோங்குள்ள  ஆண்களை திருத்தவே முடியாது.  பெண்கள் தான் வளர்க்கும் மகன்களை செம்மையாக, மற்றவர்களை பெண் -ஆண் பேதமின்றி மதிக்கும் பண்பை வளர்க்க வேண்டும்.  அது கூட சாத்தியமா என தெரியவில்லை. தாய்மார்கள் கூட தன் மகன் அடாவடியாய் பேசுவதை ரசிக்கும் சூழல் இன்று காணப்படுகின்றது.