நான் மேற்கொண்ட சில சமரசத்தை பற்றி அப்போழுது ஞாபகம் வந்தது. சமரசம் செய்து கொள்வது அவ்வளவு எளிதோ மகிழ்ச்சியானதோ ஆன செயல் அல்ல என்பதே உண்மை. துன்பத்திலும் துன்பமாக இருப்பினும் சூழல், கலவரம் அற்று வாழும் ஆசை, என பல காரணங்கள் நாம் சமரசப்படுத்தி கொண்டு வாழகொள்ள நிற்பந்திக்கபடுகின்றோம்.
3 வயதிலே தம்பி தங்கையிடம் சமரசத்துடன் வாழு வேண்டிய கட்டாயத்தில் என் அம்மாவின் மடியை அவர்களுக்கு விட்டு கொடுத்தேன். வளர வளர சமரசமே வாழ்க்கையாகி போனது. அம்மாவிடம் சமரசத்துடன் வாழ வேண்டுமென்றால் அம்மா விரும்புவதுபோல் உடையணிய வேண்டும், அம்மா ஆசைப்படுவது போல் சடை கட்ட வேண்டும், அம்மா அனுமதிப்பவர்களிடம் பேச வேண்டும், அம்மா சொல்லும் போது தூங்க வேண்டும் அம்மா எழுப்பும் முன் எழும்பவேண்டும் என ஆகியது.
“வீட்டு சூழலே பார் தம்பி தங்கை வாழ்க்கையும் பார் “ என கூறியபோது கனவு காண துவங்கும் முன்னே திருமணத்திற்கும் சம்மதித்தேன்.
பின்பு புகுந்த வீட்டிலும் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் மாமியார் விருப்படி பூ வைக்க வேண்டும் நகையணியவேண்டும், அவர் சொல்வது போலவே எண்ணவேண்டும் , ஏன் சாப்பிட கூட வேண்டும் என கற்று கொண்டேன்.
பின்பு புகுந்த வீட்டிலும் நிம்மதியாக வாழ வேண்டுமென்றால் மாமியார் விருப்படி பூ வைக்க வேண்டும் நகையணியவேண்டும், அவர் சொல்வது போலவே எண்ணவேண்டும் , ஏன் சாப்பிட கூட வேண்டும் என கற்று கொண்டேன்.
இப்போழுது கூட என் மகன்களிடம் சமரசம் கொள்ள வேண்டுமென்றால் ஒருவனுக்கு என் கணிணியை தர வேண்டும் அடுத்தவனுக்கு என் அலை பேசியை தரவேண்டும்.
எங்கெல்லாம் சமரசமாக போக மனம் ஒத்துழைக்கவில்லயோ அங்கெல்லாம் பெரும் சண்டை வெடித்தது, எங்கெல்லாம் சமரசத்துடன் வாழ வேண்டுமென முடிவெடுத்தேனோ அங்கெல்லாம் வெடித்தது என் இதயமே!!!. சமரசபட்டு வாழ்ந்ததில் வருத்தவுமில்லை, சமரசம் கொள்ளாது இருந்ததால் தனிமைப்படுத்த பட்டதில் துயரவுமில்லை.
GREAT! WRITE MORE ABOUT PEOPLE,PLACES AND YOUR EXPERIENCES!!!
ReplyDeleteThank You Sir.
ReplyDeleteவித்தியாசமான சிந்தனைகள் உங்களுக்குண்டு.
ReplyDeleteஅதைப் பதிவில் உணர்கிறேன். தொடருங்கள். வாழ்த்துக்கள்.
நன்றி Doctor ஐயா!
ReplyDeleteexcellent
ReplyDeleteThanks a lot Chandravathanaa.
ReplyDeleteசமரசம் என்ற வார்த்தையை ஆண்களின் பார்வையில் மட்டும் பார்க்கக் கூடாது என்பதற்கு ஜோசபினின் எழுத்து எடுத்துக்காட்டு. பெண்களின் உலகத்துக்குள் இருக்கும் தாபங்கள், சின்ன சின்ன ஆசைகள் முதலானவற்றை ஆண்களும் சரி, அதை அப்படியே அங்கீகரிக்கும் பெண்களும் சட்டை பண்ணியதே இல்லை. எதிர்நீச்சல் போட்டுவரும் பெண்எழுத்துக்கு ஜோசபின் உதாரணம். மெல்லிதாக அவர் கோடு காட்டும் நாடுகள் பற்றியும் நாம் அறிய வேண்டியுள்ளது.கதெரீனா புயல் தாக்கப்பட்ட போது உடனடியாக மருந்துப்பொருட்கள்,மருத்துவர்களுடன் தயார் ஆக இருந்த கியூபக் கப்பலை அமெரிக்கா தன் நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை.ஆனால் புஷ் நிர்வாகம் என்ன செய்தது தெரியுமா? புயல் தாக்கப்பட்ட பகுதிகளில் வாழும் கருப்பு அமெரிக்கர்களை போக்கிரிகள் என்று சொல்லி நிவாரணம் அளிக்கத் தவறியது! அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொள்ளாத கியூபா , 'இன்னா செய்தாரை ஒறுக்கும் நன்னெறி செய்து' கொண்டே தமது சமூகப் பணியைத் தொடர்கிறது.
ReplyDeleteஅண்ணா உங்கள் வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றி!
ReplyDelete