சமீபத்தில் இணையம் மற்றும் வெகுசன ஊடகம் வழியாக மிகவும் புகழபட்டவர், அலச பட்டவர் மட்டுமல்ல கடுமையாக குற்றம் சாட்டபட்டவரும் அருந்ததிராயே! இந்தியாவின் ஒற்றுமைக்கு அருந்ததியால் பெரும் பாதிப்பு வருவது போல் மாய தோற்றம் உருவாக்குகின்றனர். சமீபத்தில் ஒருவர் விமர்சிக்கயில் அருந்ததிராய் அறிவாற்றலுள்ளவர் அல்ல என்றும் மேலும் இவர் ஒரு மேல் தட்டு கிருஸ்தவர் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
என்னுடைய ஆதங்கம் அவர் எந்த அளவு கோல் கொண்டு அருந்ததியின் அறிவாற்றலை அளந்தார் என்பதே; அல்லது பெண் என்றவுடன் இவ்வாறு கூறுகின்றாரா எனவும் தெரியவில்லை. அருந்ததியின் அம்மா மேரி ராய்http://en.wikipedia.org/wiki/Mary_Roy கேரளா பெண் எழுத்தாளர்களில் பிரபலமான ஒருவர். அவர் மிகச்சிறந்த பள்ளிக்கூடம் ஒன்றும் நடத்துகின்றார் கோட்டயம் என்ற இடத்தில். கோட்டயம் http://en.wikipedia.org/wiki/Kottayam
கேரளாவில் சிறந்த பள்ளிகள், கல்லூரிகள் கொண்ட இடம். கலாச்சாரமான மக்கள் அடைங்கிய பகுதியே இது. கேரளா, தலைநகரம் (திருவனந்தபுரம்) மக்களை விட பண்பாக பழக தெரிந்தவர்கள், அழகான மலையாளம் பேசுபவர்கள், மற்று மாநிலத்தவர்கள், சிறப்பாக தமிழர்களை மதிக்கும் பண்பு கொண்ட மக்கள் வசிக்கும் இடம். அருந்ததியின் அம்மா சிறியன் கத்தோலிக்கர் சமூக அமைப்பை சேர்ந்தவர்கள். கேரளாவின் கல்வி, சமூக, அரசியல் மற்றும் ஊடக மாற்றங்களுக்கு பெரும் அளவு பங்களித்தவர்கள் இச்சமூகத்தில் உள்ளனர்.http://en.wikipedia.org/wiki/Saint_Thomas_Christians
அவருடைய அம்மா அறுபதுகளிலே பங்களாதேஷ் நாட்டவரை திருமணம் செய்தவர்! அவர் பெண்களுக்கும் பெற்றோரின் சொத்தில் பங்கு உள்ளது என உச்ச நீதி மன்றம் வரை சென்று போராடி வெற்றி பெற்று தந்தவர்.
அருந்ததியும் தன் வாழ்க்கையில் அசாதாரணமான சூழலில் கடந்து சென்றவர். உடன் படித்த தோழனை மணம் முடித்து சாப்பாடுக்கு வழியின்றி வீடற்று தெருவில் வசித்து, பின்பு விவாகரத்து பெற்று தற்போது கிறிஸ்தவர் அல்லாத ஒருவரை மணம் செய்து வாழ்ந்து வருபவர். தனது முதல் நாவலுக்கே புக்கர் பரிசு பெற்றவர்.http://en.wikipedia.org/wiki/The_God_of_Small_Things.அவர் எழுதும் செய்தி கூட வீட்டிலிருந்தோ குளிரூட்ட பட்ட அலுவலங்களிலோ இருந்து எழுதாது மக்களின் மக்களாக அவர்களில் ஒருவராக அவர்களுடன் தங்கி அவர்களை பற்றி ஆராய்ச்சி செய்தே எழுதியுள்ளார். ஒரு பெண்ணிடம் இதை விட என்ன அறிவாற்றல் துணிவு எதிர் பார்க்க இயலும். தற்போதுள்ள பல பெண் ஊவியாளர்களில் இருந்தும் வித்தியாசமான பல கருத்துக்களை அவரின் கட்டுரையில் காணலாம். மக்களின் இதய துடிப்பை தனது எழுத்தால் கொண்டுவரும் அருந்ததியால் இந்தியாவுக்கு ஆபத்தா? அல்லது பணத்திற்க்காக அன்னிய நாட்டு மற்றும் உள்நாட்டு முதலாளிகளுக்கு நமது காட்டின் கனிம வளங்களை விற்க்க துடிக்கும் அதிகார வர்கத்தால் நாட்டுக்கு கேடா?
மேலும் அருந்ததி கிருஸ்தவர் என அறிக்கையிடுவது வழியாக இந்தியா நாடு மேல் இந்துக்களுக்கு மட்டுமே அக்கரையுள்ளது போல் காட்டி கொள்கின்றனர். சுதந்திரம் காந்தியின் கொழ்கையான சத்தியாகிரகத்தாலே கிடைத்தது என பரைசாற்றியது வழியாக மற்று மதஸ்தரின் பங்கை சுதந்திர போராட்டத்தில் இருந்து வசதியாக மறைத்து கொண்டனர். மேலும் ஆயுத போராட்டமான சுபாஷ் சந்திர போஸ் போன்றவர்களுடைய பங்கை கூட காந்தி என்ற பெரிய போர்வயால் மறைத்து விட்டனர் என்பதே உண்மை. காந்தியின் பக்கமிருந்த சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றோர் பெரும் மதவாதிவளாக இருந்துள்ளனர். மேலும் நேருவே வளர்ச்சி என்ற பெயரில் 'ஊழல்' என்ற பேய்க்கு முதல் அனுமதி சீட்டு கொடுத்துள்ளார். அருந்ததி கிருஸ்தவர் என நிலை நாட்டி கொள்ள விரும்பியிருந்தால் கிருஸ்தவரை திருமணம் செய்து ஊர் ஊராக போதனை செய்து கொண்டிருந்திருப்பார், அல்லாது பழங்குடியினருடன் தங்கியிருந்து செய்தி சேகரித்து கொண்டிருந்திருக்க மாட்டார். மேலும் கிருஸ்தவர்களும் மேல் நாட்டில் இருந்து இறக்குமதி செய்ய பட்டவர்களா? அவர்களும் இந்திய மண்ணின் மைந்தர்களாக இருந்து தங்களுக்கான உரிமைகள் மதம் என்ற பெயரில் மறுக்க பட்ட போது ஒரு மதத்தை களைந்து தங்களை மதிக்கும் மதங்களை தாவி சென்றவர்களே.
மேலும் பெண்கள் என்றாலே பொதுத்தளத்தில் கூடஇளக்காரமாக பேச தயங்குவதில்லை என்பதையே காட்டுகின்றது இப்பிரச்சனை. காஷ்மீர் என்பது இந்தியாவுடையது என்பது அரை உண்மையே என அரசியில் எழுத்தாளர் கிருஷ்ணா ஆனந்த் இந்த வாரம் ஞாயிரு செய்திமலர் 31-10-10 P- 5 ல் கூறியுள்ளார். அரை பொய்யை பற்றி அருந்ததி போன்றோர் கூறும்போது மட்டும் ஏன் கோபம் வருகின்றது
இதே போன்று ஈழப்போருக்கு அவர் குரல் கொடுப்பதையும், புலிகள் செய்த கொடுமையை பற்றி ஏன் கூற வில்லை என எதிர் கேள்வி கேட்டு கொண்டு வருகின்றனர். புலிகளை பற்றியும் அனிதா பிரதாப் என்ற பெண் பத்திரிக்கையாளர் நேரில் சென்று ஆய்வு நடத்தி செய்தி வெளியிட்டிருந்தார். அவரையும் இவ்விதமாகவே எதிர் கொண்டனர். களத்தில் சென்று செய்தி சேகரிக்க தொடைநடுங்கும் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் இது போன்ற பெண் பத்திரிக்கையாளர்களின் பணி மெச்ச கூடியதே போற்றா விட்டாலும் தூற்றாமலாவது இருக்கலாம்!
பகிர்ந்தமைக்கு நன்றிகள்
ReplyDeleteநல்ல இடுகை. நன்றி.
ReplyDeleteமேலும் அருந்ததி கிருஸ்தவர் என அறிக்கையிடுவது வழியாக இந்தியா நாடு மேல் இந்துக்களுக்கு மட்டுமே அக்கரையுள்ளது போல் காட்டி கொள்கின்றனர்.
ReplyDelete----------
:)
விமர்சனங்களௌக்கு அஞ்சாதவர் அருந்ததி ராய் ..
ஆக கவலை வேண்டாம்..
இந்தியா எனும் செயற்கை ஏற்பாடு விரைவில் உடையும்.
ReplyDeleteகாஷ்மீர் குறித்த புரிதல்கள் தவறுதலாக கற்பிக்கப்பட்டுள்ள ஒரு நாட்டில் இதுபோன்ற குரலுக்கு என்ன மரியாதை இருக்கமுடியும்..
ReplyDeleteBravo...Brilliant Write up.
ReplyDeletehello jose please remove word verification option from your comment section.it may iritate others.
ReplyDelete//இந்தியா எனும் செயற்கை ஏற்பாடு விரைவில் உடையும்//
ReplyDeleteathu unga kanavuleyum nadakkaathu.
ஜோசபின் அக்கா வாழ்க! பெண்கள் வாழ்க!
ReplyDeleteஏதோ சில அற்பர்கள் சொன்னார்கள் என்பதற்காக நாங்கள் அருந்ததிராயை குறைவாக மதிப்பிடவில்லை.அவர் மேதா பட்கருடன் சேர்ந்து இந்த சமுகத்திற்கு செய்து வரும் சேவையை நன்கு அறிவோம்.பன்னாட்டு கம்பெனிகளின் சதியை,அமெரிக்க நாட்டின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து அவர் எழுதியும்,பேசியும் வருவதை எந்த இந்திய குடிமகனும் செய்ததில்லை என்பதை உறுதியாக கூரிகிரோம்.அவருக்கு நிகர் அவரே.
ReplyDelete