புகாருக்கு பதிலளிக்கும் வகையில் போட்டி ஒருங்கிணைப்பு குழு செய்தி தொடர்பாளர்லலித்
பனோட் அளித்த பேட்டியில் “ தூய்மை தொடர்பாக ஒவ்வொருவருக்கும் ஒரு பார்வை உண்டு.
எங்களை பொருத்தவரை சுத்தமாக இருக்கின்றது. ஆனால் வெளிநாட்டை சேர்ந்தவர்களின்
பார்வைக்கு அது சுத்தமற்றதாக தெரிகிறது என்றார்”. அதிகாரிகளின் மெத்தனபோக்கு
மனநிலைக்கு மிக துல்லியமான எடுத்து காட்டான வார்த்தையாக இது உள்ளது.
நாம் நம் நீர் நிலைகள் , அரசு ஆஸ்பத்திரி, அரசு பள்ளியின் தூய்மையை பற்றி கதைக்கும் போதும் இவ்விதம் தான் அதிகாரிகளின் நிலைபாடாக இருக்கும் போலும்.
ரெட்டியார் பட்டி அரசு பள்ளியை கடந்தே எனது வீட்டிற்க்கு செல்ல வேண்டியுள்ளது.
பள்ளியை சுற்றி சுற்று மதிலுக்கு பதிலாக பற்றிகள் மேயும் சாக்கடையை உள்ளது.
மாணவர்களுக்கு கற்ப்பிக்கும் ஆசிரியர்களும், படிக்கும் புத்தகம் மட்டுமல்ல ஆரோக்கியமான மனதிற்க்கும் உடல் நலத்திற்க்கும் காற்றோட்டமான சுற்று சூழலும் அவசியம் என பள்ளி அதிகாரிகளோ ஆசிரியரோ புரிந்து கொள்ளும் நாட்கள் அருகில் இல்லை என்பது மட்டும் தெளிவாகின்றது.
அதே போன்றே அரசு ஆஸ்பத்திரிக்கைகளின் நிலையும். ஆஸ்பத்திரிக்குள்ளும் சுற்றியுள்ள பகுதிகள் துர்நாற்றம் நிறைந்ததாகவே காணபடுகின்றது. நோயை தீர்க்கும் இடம் என்பதை விட நோயை பெற்று கொள்ளும் இடமாகவே காணபடுகின்றது. சமீபத்தில் என் கணவருக்கு தெரிந்த ஒரு நபர் வாகன விபத்தில் சிக்கி நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் உள்ளார் என கேள்வி பட்டு காண செல்ல வேண்டியது ஆயிற்று. ஆஸ்பத்திரியில் எந்த அறையில் உள்ளார் என தெரியாததால் ஆஸ்பத்திரியின் பல அறைகளை கடந்து காண செல்ல வேண்டி வந்தது. எந்த ஒரு அறையும் துளியும் சுத்தம் இல்லாது இருந்தது . மூச்சடக்கியே நாங்கள் காண சென்ற நபரின் அறையின் அருகில் செல்ல முடிந்தது. வெத்தலை எச்சில், காயித துண்டுகள்,இரத்த கறை என நோயாளிகளின் அறைகள் காண- சொல்ல முடியாத வண்ணம் அசுத்தமாகவும்
நாற்றம் கொண்டதாகவும் இருந்தது.
திருநெல்வேலி அரசு ஆஸ்பத்திரரிஐ கணக்கிடும் போது நாகர்கோயில் அரசு ஆஸ்பத்திரி
சுத்தத்தில் நல்ல நிலையில் உள்ளது என சிகித்சை மேற்கொண்ட மக்களிடம் இருந்து
கேள்விபட்டுள்ளேன். திருநெல்வேலி கார்ப்பரேஷன் சேர்ந்த பகுதியுள்ள ‘டவுண்’ பகுதியை கடந்து பேருந்தில் கூட பயணிக்க முடியாத சூழல். பெரும் வியாபாரிகள் மற்றும் மக்கள் கூடும் இடமே அது. இருப்பினும் மூக்கை பொத்தாது கடந்து செல்ல இயலாது இயலாத சூழல். அரசின் கடமை வரிகள் வசூலிப்பது மட்டும் தானோ. ஒருவேளை சுத்ததை பற்றி இவர்களின் பார்வை எப்படி இருக்குமோ. எல்லாம் பராபரனுக்கு மட்டுமே வெளிச்சம்!
0 Comments:
Post a Comment