14 Sept 2010

கேரள கரையில் அல்லோலப்படும் எங்கள் வாழ்க்கை

எங்கள் பகுதி இடுக்கி மாவட்டத்தை சார்ந்ததால் கல்வி, வசதி வேலை வாய்ப்பு என எல்லா விதத்திலும் பின் தங்கியிருந்தோம். கேரளாவில்  மற்ற மாவட்டகாரர்கள் கூட இடுக்கியா என காட்டுவாசி மக்களை பார்ப்பதை போன்று எங்களை நோக்கினர்.  நாங்கள் 10 வகுப்பு பரீட்ச்சையை எதிர் கொள்ளும் விதமே அலாதியானது. மாதிரி தேற்வு ,சோதனை தேற்வு என எல்லாமே எங்களுக்கு பொது பரீட்சை தான்.  எங்கள் பள்ளியில் 40% தான் மிக சிறந்த வெற்றி விகிதம். தேற்வில் முதலாவது வருவது, குத்தகைக்கு என்பது போல் ஆசிரியர் பிள்ளைகளே!  அவர்கள் குழந்தைகளை 7 ம் வகுப்பு வரை தரமுள்ள பள்ளியில் அனுப்பி படிப்பித்து விட்டு, 8 வகுப்பு முதல்  எங்கள் அரசு பள்ளிக்கு கொண்டு வருவின். தேற்வுக்கு என அவர்களுக்கு மட்டும் கணக்கு, ஆங்கிலம், அறிவியல்  என மிக சிறந்த  பயிற்ச்சி நடைபெறும். எங்களை போன்ற மாணவர்கள் அனுமதி பெறுவதும் அவ்வளவு எளிது அல்ல.
எங்கள் பள்ளி முதல்வர் கூட ஒரு நாயர் சமுதாயத்தை சேர்ந்த  ஒரு பெண்மணியாவார். அவருக்கு தமிழர்கள் என்றாலே  ஒரு அருவருப்பு, பூச்சி புழு போல நோக்குவார்.  நான் மலையாள  வழி கல்வி கற்பினும் 'அவள் தமிழரா?' என என்னை மட்டம் தட்டாது இருந்தது இல்லை.  எங்கள் அடையாளத்தை பாதுகாக்கவும் களையவும் இயலாமல் நாங்கள் படும் துன்பம் எண்ணிவிடல் ஆகாது.
 அவருடைய தங்கைதான் கணக்கு  பாடம் எடுத்தார்.  அவர் ஒரு நோட்டு புத்தகத்தில்  விடைகளை செய்து வைத்திருப்பார்.  அப்படியே அதை பார்த்து பலகையில்  எழுதியிடுவார்.   எனக்கு கணக்கு விருப்ப பாடம்!    7ஆம் வகுப்பில் ஹரிகரன் என்ற ஆசிரியர் சரியான  வழிமுறையுடன் கணக்கு நடத்தியிருந்தார்.    மேலும் டூஷன் செல்வதால் கணக்கு அத்து படியாக இருந்த்து.   அதனால் பலமுறை கரும்பலைகயில் நான்  கணக்கு பாடம் செய்துள்ளேன்.   என்னை பாராட்டுவதை கூட “தமிழச்சி கூட நன்றாக கணக்கு செய்கின்றாள் உனக்கு முடியாதா என என் மலையாளி தோழிகளை கிண்டல் செய்வார்”.   எனக்கு மிகவும் அவமானமாக தோன்றும்.   என் தோழிகளும் தமிழர் என்றாலே  முட்டாள் எனவும்   உன்  வழி சொந்தம் மலையாளிகளோ என்ற தோரணையில் வினவுவர்.  ,  ராமானுஜர்   தமிழ் மேதை தானை என பல அறிஞர்களை என் இன துணைக்கு  தேட வேண்டி வரும்.   3 வருடப்படிப்பும் எனக்கு மிகவும் கொடியதாக இருந்த்து.   விளையாட்டாக மலையாள வழி கல்வியை தேர்ந்து எடுத்ததின் பலனை அனுபவித்து  கொண்டிருந்தேன்.   பல வேளைகளில்  ஒரு சில ஆசிரியைகளால் தனிமையாக்கபட்டேன்.   ஆலிஸ் என்ற ஆசிரியைக்கு என்னிடம் குற்றம் கண்டு பிடிக்க முடிய வில்லை என்பதால் என் தம்பியை குறை கூறி என்னை மட்டம் தட்டுவார்.  எனது ஆளுமையை வளர்க்க  வேண்டிய வயதில் ஒரு வித பய-காழ்ப்புணற்ச்சியால் எனக்குள் ஒளிந்துகொள்ள பழகி கொண்டேன்.   சில விளையாட்டான பேச்சு கூட இன மொழி வெறியாக மாறுவதை கண்டு தோழிகளிடம் பேசுவதை தவிர்த்து எனக்குள்  பேசிகொள்ள ஆரம்பித்தேன்.
எனக்கு  மிகவும் பிடித்த  மோன்சி என்ற  ஒரு தோழி இருந்தாள் . அவளுடைய அப்பா  எங்களுக்கு கணக்கு பாடம் நடத்துவார்.  மோன்சி மற்று எல்லா பாடத்திலும் முதலாவது வந்து விடுவாள்.  ஒவ்வொரு பாடவும் பாடலாக படித்து வைத்திருப்பாள்.  ஆனால் கணக்கு மட்டும் மக்கப் செய்ய இயலாததால்  மிகவும் கஷ்டபடுவாள் .  அவளுடைய அப்பா வரிசையாக கேள்வி கேட்டு கொண்டே வருவார், நான் சொல்லி அவள் சொல்லாவிடில் கை மொழியில் அடிப்பார், கடுமையான வார்த்தைகளால்  அவளை திட்டுவார்.  போக போக இச்செயல் என்னிடம் பொறாமை கொள்ளும் சூழலுக்கு அவளை தள்ளியது.   பின்பு எனக்கு மிகவும் பெரும் எதிரியாக மாறினாள்.   அவளுடைய அப்பா கம்னியீஸ்டு  என்பதால்  தர்க்கம் பேசுவதயே மூலதனமாக வைத்து என்னை மடக்குவதில் குறியாக இருந்தாள்.    ஒரு முறை அவளுடைய அம்மா ,என் அம்மாவிடம்  உங்க மகளை வகுப்பு தலைவியாக இருக்க அனுமதிக்காதீர்கள்.    என் மகளுக்கு மன உளச்சலை கொடுக்கின்றது என கூறியுள்ளார்.    எனது அம்மாவும்   "தலைவி ஆகி மலையாளிகள் கிட்டை வம்பு இழுக்காதே பேசாம பாடத்தை  மட்டும் படித்துவிட்டு வா" என  எனக்கு அறிவுரை கூறினார்.   இது என்னை மன அளவில் பெரும் ஊனம் ஆக்கியது.  இவ்வாறாக ஒவ்வொரு தமிழ் மாணவனுக்கும் ஒரு கதையிருக்கும்.
எனது  பெரியப்பா மகன்,அவன் மட்டும்  10 வகுப்பு வரை படித்து வந்திருந்தான்.  அவனுடைய இரு அண்ணாக்களும் 5 வகுப்பிற்க்கு மேல் மழைக்கு கூட பள்ளி வாசல் செல்ல தயங்கினர்.   அவன் சூழல் மிகவும் மோசமானதாக இருந்தது.   அவன் 10 வகுப்புக்கு வருவதென்றால்  அது ஒரு பெரும் சாதனையே.  எனது பெரியப்பாவும் பெரியம்மாவும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள்.  மிக சொற்பமான  வருமானம், நிறைய பிள்ளைகள். 
தேயிலை தோட்டங்களில்  வேலை நேரம் காலை  7  மணி என்பதால் பிள்ளைகள் துயில் எழுவதற்க்குள் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவர்.  பிள்ளைகள் முதல் நாள் மாலையிலுள்ள சாப்பாட்டை எடுத்து கொண்டு 8 மணிக்கு நடக்க ஆரம்பித்து விடுவர்.   பள்ளி வந்து சேரும் போது 9.30 மணி.  பள்ளி முடிந்தவுடன் நடக்க ஆரம்பித்தால் இருட்டும் முன் வீடு சேருவார்கள்.   6 மாதம் மழை, பெரும்வாரியான நாட்களில்  மின்சாரம் இருப்பதில்லை, சாப்பாடு கூட!   விடுமுறை நாட்களில் சிலர் வேலைக்கு செல்வர் சிலர்  விறகு  பெறுக்குவார்கள் அந்த வாரம் முழுவதும் பயண்படுத்த.  இப்படியான சூழலிலும் எனது சகோதரன் பள்ளிக்கு வந்தான்.    எங்களுடைய அரசியல் பள்ளியில் ஆரம்பித்துவிடும்.   அவன்  கம்முனிச்ஸ்ட் இயக்கத்தை சேர்ந்த SFI ல் இருந்தான்.   நான் நேரு ரசிகை என்பதால்  கை பக்கம்!(இப்போழுது எந்த பக்கவுமில்லை).   மேலும் கம்மினிஸ்ட் கூட்டத்தில் நிறைய கெட்ட பேச்சுக்களாகவே இருக்கும்.   அப்போழுது கேரளா மாநில கவர்னராக ராம் துலாரி என்ற பெண் இருந்தார். அவர் கையில்லாத சட்டை அணிந்தார் என கூட்டம் போடுவார்கள்.
என்னுடைய பெரியப்பா மகன் அரசியல் நன்றாக கதைப்பான்.   ஒரு முறை எங்கள் பள்ளி முதல்வரை கண்டபோது வேட்டியை மடக்கி கெட்டியிருந்தான் என்ற காரணத்தை கூறி 10 வகுப்பு தேற்வு எழுத விடாது தடுத்துவிட்டார்கள். அவனுடைய வாழ்க்கையும் திசை மாறி மாறி எப்படியோ ஆகிவிட்டான்.
பள்ளியில் என மட்டுமல்ல  கல்லைறைகளில் கூட சில பாரபட்சம் காணலாம். எங்கள் ஆலையங்களில்  ஜெபம் தமிழ், மலையாளம் என இரு மொழியில் நடைபெரும் . சில பாதிரியார்கள் தமிழில் ஜெபம் செய்தால் நான் மோட்சம் சேர மாட்டேன் என அடம் பிடிப்பார்கள்.   இன்னும் சிலரோ தமிழில் ஜெபிக்கின்றேன் என வார்த்தைகளை தப்பு தப்பாக கதைத்து மலையாளமே போதும் சாமி என சொல்ல வைத்து விடுவார்கள்.   சில மான ரோஷமுள்ள தமிழ் பக்தர்கள் நீ மலையாளத்தில் ஜெபி நான் தமிழில் தான் பாட்டு பாடுவேன் என்று அடம் பிடிக்கும் போது உங்க வால் குமளிக்கு கீழ் தான் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படும்.   ஒரு முறை எங்கள் ஆலயதிற்க்கு  ஒரு தமிழ் பாதிரியாரை நியமித்தனர். அவரோ உப்பும்சப்பும் அத்த பிரச்சனைக்கெல்லாம் ஜாதியை தூக்கி போட்டு இருந்த கொஞ்சம் தமிழர்களையும் பல பிரிவாக்கினார். 
6 மாதம் முன்பு எனது அம்மாவுடன் எனது ஊரிலுள்ள வங்கிக்கு சென்றபோது வங்கி அதிகாரி ,’மங்கி’ மாதிரி  மூக்கு கண்ணாடியூடை நோக்கினார்.  எனது அம்மா கொஞ்சம்  பணத்தை சேமிப்பு நிதியில் செலுத்த சென்றிருந்தார்.   வங்கி அதிகாரியோ நாளை வா….. என கத்திகொண்டிருந்தார். எனக்கு வீட்டிற்க்கு போக வேண்டாமா   ங்,ங்கி.,ங்ஊ என  திட்டுகின்றார்.   அம்மா கூறுகின்றார் 3 வது தடவையாக வருகின்றார்களாம்.   என் சிந்தனை எங்கள்  பல்கலைகழக வங்கிக்கு  சென்றது………..
மேலாளரின் அரியணையை நோக்கினேன்.   அவரோ   மலையாளி சேச்சிமாரிடம் சிரித்து சிரித்து கதைத்து கொண்டிருந்தார்.  ஒரு தமிழ் அம்மா அவர் மகன் ,மருமகள் மேல்அதிகாரியை காண கருணைவிழிகளுடன்  காத்து நின்று கொண்டிருந்தனர். அதிகாரி சேச்சிமாரை வழியனுப்பி விட்டு  கைய்யாலே  நாளை வா என உத்தரவிட்டான்.  அந்த இளம் பெண் பாரதி கண்ட புதுமை பெண் போல் அறை கண்ணாடி கதவை திறந்து உள்ளே சென்று வாகனம் வாங்க  வங்கி கடம்  வேண்டுமென்று பணிந்தாள் .  அதிகாரியோ  அவருடைய அலுவலக கோப்புகளில் நின்று கண் எடுக்காது ஏதோ பதில் கூறி கொண்டிருந்தார்.   அப்பெண் அறைக்கு வெளியில் வந்து அவரை(னை) திட்டுவது கேட்டது.   காலம் மாறினாலும் கோலம் மாறாததை கண்டு  என் மனம் கலங்கியது.

27 Aug 2010

அவனும் நானும்!

பேருந்து நிறுத்ததில் நின்று கொண்டிருந்த தனது கல்லூரி தோழியை, குடிபோதை  லாரி ஓட்டுனரால் கொல்லபட்ட சோக நிகழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருந்தார். எனக்கு மிகவும் கவலையளித்தது. ஆர்வ மிகுதியால் நட்பா, அல்லது காதலா என வினைவினேன். அது நட்பையும் கடந்தது.  ஆனால் காதல் அல்ல  என்றார்.!!!!  உண்மையில் இந்த விதமான உறவு நம் வாழ்க்கையிலும் கடந்து செல்வது உண்டு. நெருக்கமான நட்பு, தன்னலமற்ற அன்பு, காமமற்ற அன்பு என கூறி கொண்டே போகலாம். இவ்விதமான நட்பு பற்றி எண்ணி கொண்டிருக்கையில் எனது மனம் சர்ர்ர்ர்…. என 30 வருடத்தை பின்னோக்கி சென்றது.

 சபீர், என்ற என் தோழன் என்னுடன் டுயூஷனில் படித்தான். அவனும் நானும் போட்டி போட்டு படிப்போம். அவன் கணக்கு பாடத்தில் திணறி படித்தான்.  நான் பல முறை வீட்டு பாடம் முடிக்க உதவியுள்ளேன்.   அவனுக்கு என தின் பண்டங்கள் எடுத்து சென்றுள்ளேன்.  அவனுக்கு  கவலை என்றால் அன்று எனக்கு அந்த நாள் மகிழ்ச்சியாக இருக்காது.  அவன் ஒரு நாள் வரவில்லை என்றால் அவன் வீட்டுக்கு போய்  அவன் அம்மாவிடம் விசாரிக்காது மனம் அமைதி கொள்ளாது.  விடுமுறை நாட்களில் அவனை பார்க்க அவனுடைய வீட்டுக்கு சென்று வருவோம். அவனுடைய அப்பா கண் சிவப்பாக கோழிமுட்டை மாதிரி இருக்கும்.  சிரிக்கவோ, முறைக்கவோ மாட்டார். அவர் எங்கள் பகுதியிலுள்ள பெரும் தொழில் அதிபராக இருந்தார்.

சபீரின் அத்தை மகன் இந்த அடத்தில் உள்ளான்
பள்ளியில் யாராவது அடித்துவிட்டால் அவனுடைய தோழர்களிடம் சொன்னால் என் எதிராளிகளை கவனித்து விடுவார்கள். அம்மா என்னை 4 வயதில் டுயூஷன் அனுப்பி விட்டார்கள்.அப்போழுது எங்கள் ஊரில் பாலவாடி அல்லது ஆங்கில L.K.G,U.K.G வகுப்புக்கள் இருந்ததில்லை. கிளாடிஸ் டீச்சர் வீடு தான் எங்கள் பள்ளி! எங்கள் கிளாடிஸ் டீச்சர் அழகாக இருந்தார். ஆனால்  அவருடைய முகம்  அவர் வாழ்கை  போராட்டம் பற்றி சொல்லி கொண்டிருந்தது.


டீச்சரின் கணவர் காச நோயால் பாதிக்க பட்டிருந்தார். மகனும் முரடணாக இருந்தான்.  டீச்சரின் வீட்டில் விறகு அடுப்பு என்பதால் விறகு சரியில்லை என்றால் நாங்கள் புகை மூட்டத்திற்க்குள் தான் இருக்க வேண்டும்.  டீச்சரின் மகள் தனக்கு இருக்கும் காட்டத்தை கடுகு தாளிக்கும் போது வெளிப்படுத்துவார்.  ஒருவர் ஒருவராக நாங்கள் இரும ஆரம்பிப்போம். அது போகப் போக ஒரு பொழுது போக்காகவே மாறியது.  டீச்சர் மகள் எப்போழுது கடுகு தாளிப்பார் என காத்திருக்க தொடங்கினோம்.... தும்முவதற்க்காய்! டீச்சரின் அம்மா மிகவும் அழகான உயரமான  சற்று மனநலம் பாதிக்க பட்டிருந்தார்.   அவருடைய வேலையெல்லாம் கோழியையும்  குஞ்சுக்களையும் பராமரிப்பதே. அம்மா கோழிகளுடன் குஞ்சு கோழிகள் செல்வதே பார்த்து கொண்டு இருப்பது என் பொழுது போக்காக இருந்தது.

டீச்சருக்கு மூன்று தங்கைகள் இருந்தனர் ஒருவர் அப்போழுதுதான் திருமணம் ஆகியிருந்தார். இளைய தங்கை துணி தைத்து கொண்டே இருப்பார். யாரிடமும் அவ்வளவு பேசுவது   இல்லை. அவர் எப்போழுதாவது  கடைக்கு   செல்வார்.  அவர் சேலை கட்டி முடிக்க  ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகும்.  குட்டி-கூறா பவுடர் இடுவது தான்  புல் ஸ்டாப்!,  மேக்கப் முடித்து விட்டார், இனி விடைபெற போகின்றார் என்ற குறியீடாக இருந்தது. மேலும் பவுடர் மணம் இதமான மணமுள்ள காற்றை தந்தது எங்களுக்கு.                                                                                                                      
                                                                                                                                                                                ரீச்சருக்கு 3 சகோதரர்கள் உண்டு .  ஒருவர் பள்ளி ஆசிரியர் பயிற்சி பெற்றுகொண்டிருந்தார்   நான்  சேட்டை செய்தேன் என்று   அவரிடம் நிறைய அடி வாங்கியுள்ளேன்.   இனி ஒரு சகோதரர்; வீட்டுக்குள் காலெடுத்து  வைத்தவுடனே அவர்கள் வீட்டில் மகாபாரத போர் ஆரம்பித்து விடும் . சட்டி பானை எல்லாம் எடுத்து எறிவது உடைப்பது போன்ற சத்தம் கேட்கலாம் . முதல் சகோதரர் ஒரு வாகன ஓட்டியாக இருந்துள்ளார். விபத்தில் சிக்கி நடு முதுகு தண்டவடம் ஒடிந்து படுக்கையில் இருந்தார்.  அவர் தான் அங்கு அரசர் மாதிரி.   தண்ணீர், சாப்பாடு என அவரை  நல் முறையில் கவனித்து கொள்வார்கள்.  அவரிடம் அவர்கள் வீட்டில் அனைவரும் நடுங்கி நிற்பார்கள். சிலவேளைகளில் அக்குடும்ப சண்டையின் தீர்ப்பு வழங்கி கொண்டிருப்பார், சில வேளைகளில் அவர் நண்பர்களுடன் அரசியல் கதைத்து கொண்டிருப்பார். அவருடைய சத்தம் மட்டுமே எங்களுக்கு பரிசயமாக இருந்தது, . அவருடைய உருவம் சத்தம் எல்லாம் எனக்கு ஒரு வித பயத்தை கொடுத்துள்ளது. கிட்ட போய் பார்ப்பது கிடையாது. 



எனது குழந்தை பருவத்தில் , அதிக நேரம் எனது வீட்டை விட அங்கு இருந்தது போல் தான் உணருகின்றேன்  .எனது வீட்டில் எனது சகோதரனும் சகோதரியும் சிறு பிள்ளைகளாய் இருந்ததால் எனக்கு கிடைக்க வேண்டிய நிறைய சலுகைகள் மறுதலிக்கப்பட்டது. பல வேளைகளில் விட்டு கொடுக்கும் சூழலுக்கும் தள்ள பட்டேன்.  அதனால் டுயூஷன் வீட்டில் நான் செல்ல பிள்ளையாகவே வளர்ந்தேன்.

அங்கு காலை தமிழும், மதியானத்திற்கு மேல் மலையாள மொழியும் கற்று கொண்டேன்.  பள்ளியில்  சேர்த்த போது அம்மா, தாய் வழி கல்வி என்ற நோக்குடன் தமிழ் வகுப்பில் சேர்த்து விட்டார்கள்.  எங்கள் ஆசிரியை ‘குழந்தை டீச்சர்'(பெயர்).  முகம் எப்போழுதும் போர்களத்தில் நிற்பது போன்றே இருக்கும். மேலும் தமிழ் ஆசிரியர்கள், வித விதமாக அடித்தார்கள். சிலர் கை மொழியில் அடிப்பின் , சிலரோ தொடையில் கிள்ளுவர், சிலர் கட்டிபிடித்து கவுகூட்டு பக்கம் தேடி நுள்ளி வைப்பர். இலங்கயில் தமிழ் மக்களுக்கு ஆர்மிகாரர்கள் தெரிந்தது போலவே எனக்கு தமிழ் ஆசிரியர்கள் தோன்றினர். மேலும் எனது தோழன் சபீர், பமீஜா,போன்றவர்கள் மலையாளம் வகுப்பில்  இருந்ததால், அம்மாவிடம் சண்டை பிடித்து மலையாளம் வகுப்பில் சேர்ந்து கொண்டேன். அஸீஸ் சார், அயிஷா பீபி டீச்சர் எனக்கு ரொம்ப பிடித்திருந்தனர்.  பேபி டீச்சருக்கு நான் மலையாளம் பள்ளிக்கு சென்றதில்  துளியும் விருப்பம் இல்லை, கோபவும் கொண்டார்.

நானும் அவனுடைய வகுப்பில் கிட்ட கிட்ட உட்கார்ந்து கொள்வோம்.  எங்கள் நட்பு நன்றாக சென்றது. அவனுடைய கூட்டாளிகள் அப்பாஸ், ராஜன், ஜெயன் போன்றோர் எனக்கும் கூட்டாளிகள் ஆகினர். அதில் ராஜன் 2 வகுப்பு படிக்கும் போது வேறு பள்ளிக்கு சென்று விட்டான் இருந்தாலும் கடிதம் எழுதி கொள்வோம்.  ஒரு முறை அவனுடைய அப்பாவுடன்  எங்கள் வீட்டிற்கு என்னை பார்ப்பதற்கு  வந்திருந்ருந்தான் .  பின்பு அவனை கண்டதே இல்லை.

 பிந்து, மோன்சி, ஜெயா, ரமலத்து, ரஷீதா, லதா, போன்றவர்கள் வகுப்பு  தோழிகள் ஆகினர். சவுதாம்மா என்ற ஒருத்தி எங்கள் வகுப்பில் இருந்தாள் அவள் என்னை அடிப்பாள். அவளுடைய முகம் அம்மை வந்த தழும்புக்களால் பார்க்க கொஞ்சம் பயமாக இருந்தது. இவளை சரிகட்ட ஜெயாவின் உதவி தேவை பட்டது. ஒரு முறை சவுதாவை ஜெயா விரட்டி விரட்டி எனக்காக அடித்து விட்டாள்.  பின்பு என்னை பார்த்தால் பயந்து ஒதுங்கி சென்று கொண்டிருந்தாள்  அதன் பின் நாங்கள் உற்ற  தோழிகள் ஆகினோம். (ஜெயா தனது 21 வது வயதில் தன் மூன்று சகோதரிகளுடன்  குளத்தில் விழுந்து  தற்கொலை செய்து கொண்டாள்.)

வெள்ளி கிழமைகளில் எங்களுக்கு மதியம் மாணவர் கூட்டமைப்பு சம்மேளனம் நடக்கும்.  மாணவர்களே சேர்ந்து பாட்டு ,நடனம், பேச்சு என தொகுத்து வழங்குவோம்.எ ல்லோரிடம் காசு சேர்த்து; மிட்டாய், சந்தனம் வாங்கி பகிர்ந்து அளித்து வெள்ளி கிழமை என்பது எங்களுக்கு பெரும் விழா போன்றே இருக்கும்.  எங்கள் பகுதியில் கிடைக்கும் உண்ணி பூக்கள் கொண்டு மேசையை அலங்கரிப்போம்.

4  வது வகுப்பு வந்த போது ஆண்,பெண் என்ற பெரும் சண்டையில் உடைந்தது சபீறுடன் ஆன எனது தோழமையுமே.  அவனுடன் பேசினால் எங்கள் பெண்கள் சங்கத்தை அவமதித்தது போன்று ஆகி விடும் என்பதால் அவனை பார்த்தால் பேசுவதே இல்லை, 5-ம் வகுப்புக்கு பின்பு இரு பாலருக்கும் தனி தனி வகுப்பறை என்பதால் அவனை பார்க்கும் சூழலே அற்று போனது.  7 ம் வகுப்பு வந்த போது பள்ளி மாணவர் தலைவர் பதவிக்கு  எனக்கு ஓட்டு போட அவனிடம் கேட்டிருந்தேன்.  அவன் எனக்கு தான் ஓட்டு போட்டிருப்பான்/

பின்பு 10 வகுப்பு வந்த போது ஒரே வகுப்பில் டியூஷனில் கற்றோம்.  சிறு சிரிப்பை தவிற பேசி கொள்ளும் வாய்ப்பே உருவாக்கி கொள்ளவே இல்லை.   எங்கள் தோழமை அவன் மனதிலும் மாறாது இருந்துள்ளது என பின்பு அறிந்தேன் இன்னொரு பள்ளி நண்பன் வழியாக.  நான் மேற் கல்வி என வேறு பிரதேசம் சென்ற போது அவன் வியாபாரத்தில் வந்து விட்டான் அவனது தந்தையை போன்று.

திருமணத்திற்கு பின்பு எனது கணவருடன் அவன் கடைக்கு சென்ற போது கதைத்திருந்தேன்.  அவனுக்கு 3 குழந்தைகள் உள்ளதாக கூறினான். அவனுடைய குழந்தைகள், மனைவியை காண என்னை அழைப்பான் என நினைத்தேன் ஆனால் அவனுடைய மன நிலை எவ்வாறாக இருந்தது என தெரியவில்லை.  ஆகினும் நட்பு, அதையும் தாண்டி புனிதமான அன்பு அழியாதது என்று மட்டும் என் மனம் சொல்லியது!




23 Aug 2010

நல்ல கற்பனைகளும் கனவுகளும்





பதில் இடுகை வழியாக ஒரு பதிவரின் வலைப்பதிவை வாசிக்க பெற்றேன். 2035ல் ராஜபக்சே, பிராபகரன், சீமான் போன்றோரின் நிலையை பற்றி கற்பனையில் ஒரு பதிவு எழுதியிருந்தார். சில பகுதி ரொம்ப வன்மம் கொண்டதாக இருந்தது. இருப்பினும் ஈழப்போர் விடுத்த கடுமையான மனபோராட்டத்தை எண்ணியபோது அவர் எதிர் கொண்ட போரின் தாக்கத்தை வேறுவிதமாக கொட்டியுள்ளார் என எண்ணிகொண்டேன். அந்த பதிவிற்க்கு பதில் இடுகைதான் என்னை அதிற்ச்சி பெற செய்தது.  மறுஇடுகையில் ஒருவர் எழுதியுள்ளார் தென்தமிழகத்தில் பூமி அதிற்வு வந்து 3 லட்சம் பேர் மாண்டு போவார்ளாம் 2035! என்ன ஒரு கற்பனை வளம் என பாருங்கள் (26 -வருட ஈழ இன படுகொலையில் மாண்டுபோன மக்கள் 1 லட்சம் பேர்! )நம் மக்கள்,எதிற்மறையான கனவுகள் கற்பனைகளை விட நல்ல கனவுகள் காணலாம்.  யஹூத மக்கள் தங்கள் தேசம் ஒரு நாள் கிடைக்குமென தீர்க்கமாக கடவுளின் பெயரால் நம்பினர், எடுத்து காட்டாக ‘ஷிண்டேஸ் லிச்ட்டு’ ஸ்டிவன் ஸ்பீல் பெர்கின் திரைபடத்தில் அவர்களுடைய நிலையை சரியாக சித்தரித்திருப்பார்.  http://www.newsandentertainment.com/zMschindler.html.  இவ்வளவுத்துக்கும் தன் உடல் பலத்தைவிட மன பலத்தையே நம்பினர், அதே போல் தங்களுக்கு என ஒரு தேசத்தையும் பெற்று விட்டனர். சமீபத்தில் எனது பேருந்து தோழியிடன் ஈழ செய்தியை பற்றி கதைத்து கொண்டிருந்தபோது இவ்வாறே கூறினார், வாழ்க்கை ஒரு சுழற்சி ஆகையால் தோல்வியும், ஜெயவும் நிரந்தரமல்லை என;  இன்று தோற்றவன் நாளை ஜெயிப்பான் என நம்பிக்கை கொண்டோம்.




ஒரு வயதான பாட்டியும் நானும் நேரம் கொல்வதற்க்காய் கதைத்துகொண்டிருப்பது உண்டு. பாட்டி முழு பொழுதும் தொலைகாட்சி பெட்டி செய்தி பார்ப்பவர். பாட்டி வழி செய்திகளின் நேரடி ஒளிபரப்பு  எனக்கும் வந்தடையும். எனக்கும் க்ரயம்(crime) செய்தி மேல் நாட்டம் இருப்பதால் ஆற்வமுடன் கேட்பேன். வர வர பாட்டி க்ரயம் செய்தி மட்டுமே தரவேண்டும் என்ற பிடிவாதத்துடன் மகா மோசமான கொலை, கொள்ளை,தகாத உறவு,கற்பழிப்பு என எனக்கென்றே தணிக்கை செய்தது, செய்தி தர ஆரப்பித்துவிட்டார்.




சில வேளைகளில் இப்பாட்டியுடன் எங்கள் பகுதியில் உள்ள குன்றை நோக்கி நடைபயிற்ச்சி செல்வதுண்டு.  ஒரு முறை பாட்டி தன் கற்ப்பனை கதையை கட்டவழ்த்து விடுகிறார், பூமி மட்டும் குலுங்கிச்சு, இந்த பாறைகள் உருண்டு வந்து இங்கு இருக்கும் வீடுகள் எல்லாம் உடைந்து சுக்கு நூறாக்கி விடும்.(முதல் வீடு எங்களுடையது?),அதும் தீர்க்கமாக செல்கின்றார் 2012 ல் பெரியொரு அழிவு திருநெல்வேலிக்கு உள்ளதாம். அதிலும் பாட்டிக்கொரு மகிழ்ச்சி சொந்த வீடு வைத்துருப்பவர்களும் தெருவுக்கு வந்திடுவாங்களாம் அப்போழுது வாடகை வீடு, சொந்த வீடு என எல்லோரும் ஒரே மாதிரி ஆகிடுவாங்களாம். பாட்டியின் கம்னியூசம் இப்படியும் போகுதே என எண்ணி நொந்து கொண்டு இருந்துவிட்டேன்.




சமீபத்தில் குடிசை மாற்று வாரியம் 302 வீடு எங்கள் பகுதியில் கட்டியுள்ளது. பேருந்து ,கடைவசதிகள் பெருகும் என நான் நினைத்து கொண்டேன். மேலும் எங்கள் ஏரியா தலைவர் அசைவ சாப்பாட்டு சாப்பிடுவது இல்லை என்பதால் அசைவ கடைகள்(ஆடு,கோழி,மீன்) வருவதற்க்கும் தடை விதித்துள்ளார் . அவருடைய அதிகார மையம் செயல் இழக்கும் என்பதில் தான் எனக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால் பாட்டியின் கூற்று படி தெருவின் அமைதி பறிபோயிடும்,மேலும் பூமி தண்ணீர் குறைந்து விடுமாம்.சுகாதாரம் கெட்டுவிடுமாம்.






இப்போழுது ஒரு தண்ணீர் தொட்டி கட்டி கொண்டுருக்கின்றனர். பாட்டி என்னை அழைத்து சொல்கின்றார், டாங்கு கட்ட நல்ல ஆழமாக தோண்டுகின்றார்கள். ஆஹா பாட்டியும் ஆக்க பூர்வ்மான சிந்தனை ஓட்டத்திற்க்கு வந்து விட்டார்களா என நிமிர்ந்து பார்த்தால், அடுத்த வார்தை தான் தூக்கி வாரி போட்டது; பயன்படுத்தும் கம்பி சரியில்லையாம்,கட்டி முடிக்கும் போது டாங்கு தலை குப்புற விழுமாம்,விழுவது மட்டுமல்ல எதிர்புறத்திலுள்ள வீட்டை அடித்து கொண்டு போய் விடுமாம். இப்போழுது பாட்டி என்னை பார்ப்பதற்க்குள்ளாகவே ஒளிந்துவிடுவேன். இதும் ஒரு போபியாவே.




சிறு வகுப்பில் படிக்கும் போது( 8-12 வயதுக்குள்)சண்டையிட்டு கொண்டால் உன் கண்ணை காக்கா கொத்தும், என வழக்கடித்து கொள்வதே நினைவு வந்தது. எங்கள் நெல்லை செய்தியும் இதற்க்கு ஒத்திருப்பது உண்டு சில வேளைகளின்,தன் குடும்பத்தில் இரண்டு கொலை விழுந்தது என்றால் அவன் குடும்பத்தில் குறைந்தது நாலாவது விழ வேண்டும் என அரிவாளோடு வாழ்பவர்களை பத்திரிக்கை மூலம் படித்துள்ளேன். எல்லாம் மனித மனம் நாம் பழக்க படுத்திகொள்வதே!.




எனது வாழ்க்கையில் இருந்து நான் கற்றது நல்ல கனவு(தூக்கத்தில் அல்ல) காண வேண்டும் என்பதே, நம்மை பற்றி மட்டும் அல்லாது மற்றவர்களை பற்றியும் அவ்வாறே. வெறும் கனவு கைக்கூட எள்ளளவும் சாத்தியமல்ல என்று அறிந்தும் கனவு கண்டேன்,ஆனால் கனவுப்படியே நடந்தது. குழந்தைகளை நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்பதற்க்காகவே நானும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். ‘கல்லூரி ஆசிரியை’ என்ற கல்லூரி நாட்கள் கனவு ஒரு புறம் இருந்து கொண்டே தான் இருந்தது அப்போழுது வெறும் பட்டதாரி!. ஒரு நாள் என் கணவர் என்னிடம் வினைவினார் கல்லூரியில் முழு நேர பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டால் படிக்கின்றாயா என. என்னவர் கேலி செய்கின்றார் எனவே எண்ணினேன். அப்போழுது பட்டபடிப்பு முடித்து சரியாக 10 வருடம். ஆனால் இப்போழுது நான் ஒரு இளம் ஆராய்ச்சியாளர்!


வாடகை வீட்டில் வாழ முடிவதில்லை வசிக்கவே முடியும் என வந்த போது நானும் எங்களது மகன்களும் பொழுது போக்காக துண்டு தாளுகளில் வீட்டின் வரைபடம் வரைந்து எங்கள் கனவே வளர்த்தோம். பின்பு கனவு நனவாகி சொந்த வீட்டிலும் குடி புகுந்தோம்.




தமிழ் படங்களின் தாக்கத்தால் கணவர் என்றாலே ஒரு பயம் இருந்தது. எங்கள் கேரளாவில் கல்லூரியிலும் மற்றும் எங்களுடன் படிக்கும், சந்திக்கும் ஆண் நபர்கள்(நண்பர்கள்) சிவப்பாக, தாடி வைத்து,பார்க்க மென்மையாக காட்சி தருவர். நாங்கள் கண்ட மலையாள திரைப்பட ஹீரோக்களும் மோகன் லால்,மம்மூட்டி போன்றவர்களே.திருமணம் என வந்தபோது பச்ச தமிழன்தான் வேண்டும் என விரும்பிய போது ஒரு பயம் உள் மனதில் இல்லாதில்லை.ஆனாலும் நல்ல கனவே கண்டேன்.நான் கண்ட கனவு போலவே ஆருயிர் தோழராகவே எனது கணவர் கிடைத்தார்.




இப்போழுது சில மகன்களின் அம்மாக்களிடம் கதைக்கும் வாய்ப்பும் கிடைக்கும் போது நான் கண்டது அவர்களின் கனவே மருமகள் வருவாள்,வந்தவுடன் இவர்களிடம் சண்டையிடுவாள், மகனை பிரித்து விடுவாள்,அதற்க்கு முன்பு அவளை தனியாக குடிபுகுத்த வேண்டும் அவளிடம் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்.ஒரு முன் கருதல் தேவையே,அதற்க்கு என எதிர்மறையான கனவுகள் அல்ல தீர்வு,ஏன் அம்மாக்கள் மருமக்களை பற்றி நல்ல கனவு காண கூடாது?நான் எனது மருமகளை பற்றியும் அழகான கனவு காண ஆரம்பித்துவிட்டேன்.(என் மகன்கள் படிப்பது 7,3 வகுப்புக்களில்.)சிறுகுறிப்பு, என்னவரிடன் என் கனவை பற்றி பகிர்ந்து கொண்டிருந்தேன், பாபா- அத்தான் "என் மருமகள் நீல கண்ணுடன், வேற்று மொழி பெண்ணாக இருந்தால் எப்படி இருக்கும்" என  அவரிடம் கேட்ட போது, அவர் சொல்கின்றார் நல்லது தான் நீங்க இரண்டு பேரும் சண்டை போடது எங்களுக்கு புரியாது இருக்கும் என, அவருடைய கனவை பாத்தீங்களா?

22 Aug 2010

பெண்கள் கல்லூரியே இது நியாயமா?

பெண்கள் கல்லூரி கடந்தே எங்களது வீட்டிற்க்கு செல்ல வேண்டியுள்ளது. சமீபமாக ஒரு ஏழை மனிதர் கல்லூரி முன்பாக அழகிய சிவப்பு நிற ஊட்டி  ரோஸ், மல்லிகை போன்ற மலர்கள்  வித்து கொண்டிருந்தார். சுனாமியில் பாதித்த பகுதி போன்றே காட்சியளிக்கும் பூச்சற்ற கல்லூரியின் தோற்றம்  பூக்களால் புதுப்பொலிவுடன் அழகிய இளம் மங்கை போல் காட்சி அளித்து. 

சமீபத்தில்  அவ்வழியாக சென்றபோது பூக்காரரை காணவில்லை, அக்கல்லூரியில்  படிக்கும் தோழி வழியாக அறியபட்ட செய்தி 'பெரும் துயர்' போன்றே எனக்கு தோன்றியது. மாணவிகள் பூ வாங்குவதற்க்காய் கூட்டமாக நிற்ப்பதால் பூ விற்ப்பவரை கல்லூரியின் முன்பு நிற்க்க கூடாது என தடுத்து விட்டார்களாம்.

பூ விற்ப்பவர் ஒரு பரம ஏழை.ஒரு ஏழை குடும்பம் பிழைத்திருக்கும். அவருடைய குழந்தைகளும் மூன்று வேளை உணவு அருந்தி பள்ளி செல்லும் வாய்ப்பை பெற்றிருப்பாகள்.
ஏன், கல்லூரி மாணவிகள் கணிணி மைய்யத்தில், பேருந்து நிலையத்தில், பேருந்தில், கூட்டம் கூடி நிற்ப்பது மட்டும் அல்லாது  பல விதத்தில்  அராஜகம் பண்ணி கொண்டு தான் இருக்கின்றனர், கல்லூரி நிறுவாகத்தால் இதை  தடுக்க முடியுமா?. நான் கல்லுரிக்கு பயணிக்கும் பேருந்தில் இம்மாண்விகளில் சிலர்  இரண்டு மூன்று பேர் வந்து தன் தோழிகள் பத்து பேருக்காவது தனது புத்தகம் ,புத்தக பை மூலம்  சீட் பிடித்து விடுவார்கள். வயதானவர்கள் வந்தால்  கூட இருக்கை கொடுப்பது கிடையாது.   சில வேளைகளில் சண்டையிட்டு இருக்கை-seat  பிடிக்கும் சூழலுக்கு தள்ள பட்டுள்ளேன்.

சமீப காலமாக இரக்கம், அன்பு எல்லாமே ஞாயிருகளில்,, சர்ச்சுகளில் கேட்க்கும் வெறும் நற்செய்தியாக மட்டுமே கிருஸ்தவர்கள் மத்தியில்  மாறி வருகின்றது போல் தெரிகின்றது. சிறப்பாக ஆசிரிய பெருமக்களுக்கென சில மன- தொற்று நோய்கள் சமீப காலமாக வளர்ந்து வருகின்றது.

சமூக அக்கரை,மனித நேயம் என்பதை விட ஒழுக்கம்,கட்டுபாடு என பெயரில் மற்றவர்களை துண்புறுத்துகின்றனர்.அவர்கள் கண்ணில் எகத்தாளம், அகங்காரம் களியாடுவதை பல இடங்களில் உணரலாம்.

இவர்களிடம் கல்வி கற்று வரும்  மாணவர்களும்  இம்மனபாதிப்பினால் தான் ராகிங் போன்ற ஈன செயலில் ஈடுபடும் சூழலுக்கு தள்ளபடுகின்றனர்.

மாணவிகள் கல்லூரி  பருவத்தில் தான் பூ போன்றவற்றை வளமாக வாங்கி பயண்படுத்தும்  நேரம் மற்றும் ஆசை உள்ளது. ஆசிரியைகளின் மனதை விசாலபடுத்தாது மாணவிகள் நல்லதொரு கல்லூரி வாழ்க்கையை காணுவது கடினமே.

இப்போழுதும் என் கல்லூரி நாட்களை நினைத்து பார்ப்பது உண்டு. எங்கள் கல்லூரி விடுதிக்கு பூக்காரக்கா வராவிட்டால் அற்றைய தினமே வெறுமையாய் தோன்றுபவர்களும்  உண்டு.
 இப்போழுது பூக்கள் தோட்டதில் இருந்தாலும் கூட பறித்து தொடுக்க நேரம் இல்லை. அத்தான் மதுரை சென்றால் மல்லிகை பூ வாங்கி வருவார். சில வேளைகளில் வேலை பழு மத்தியில் பூ வைப்பதற்கே மறந்து விடும்.
கல்லூரி நாட்களில் நாங்கள் தோழிகள் ஒரு பந்து பூ என வாங்கி பங்கிட்டு வைத்த காலங்கள் மனதில் பூக்களாய் பூக்கின்றது.

15 Aug 2010

நானும் பிச்சைகாரர்களும்

என்னுடைய ஊரில் ‘மினி மார்கெட்’ என அழைக்க படும் ஓர் பகுதி உள்ளது. முக்கிய சாலையோரம், பேருந்து நிலையத்தின் மிக அருகாமையில்,  மற்றும் எங்கள் ஊர் காவல் நிலையத்திற்க்கு மிக அருகில் அமைந்த ஒரு  பகுதியாகும்.  தமிழகத்திலுள்ள குடிசைப்பகுதி போன்றுள்ள பகுதி. சிறுவயதில் என்னுடைய கவனத்தை ஈர்த்த ஓர் பகுதி.  தினமும் நாங்கள் பள்ளி செல்லும் போது இந்த பகுதியை கடந்து செல்ல வேண்டியிருந்தது.  அங்குள்ள மக்கள் எல்லோரும் பிச்சைகாரர்களாகவும் இருப்பது இல்லை.  சிலர் வீட்டு வேலைக்கு செல்பவர்கள்,வீட்டு கட்டுமான பணிக்கு செல்பவர்கள், கஞ்சா போன்ற பொருட்களை (சிறு தோதில்)கடத்துபவர்கள், வட்டிக்கு கொடுப்பவர்கள், பாலியல் தொழில் புரிபவர்கள் என பல தர மக்கள் இருந்தனர். இவர்கள் உரிய உடல் நலம் உள்ளோர் வேலைக்கு செல்லின், வழியற்றவர்கள் பிச்சை எடுக்க வருவர்.அவ்வாறு வரும் வேளைகளில்  எங்களுடைய  கடைகளுக்கு வெள்ளி கிழமைகளில் மட்டும்.குறைந்தது 25 காசுக்கு குறையாது கொடுக்க வேண்டும். இதிலும் குறைவாக 10-20 காசு கொடுத்தால் நம்மளிடமே தூக்கி எறிந்து விடுவார்கள்.இதற்க்கென ஆடையலங்காரம், ஒரு விதமான பாத்திரம், பை வைத்திருப்பார்கள். இந்த பிச்சகாரர்களில் ஒருவர் கூட மலையாளியாக பார்த்தது இல்லை .காரணம் பிச்சைக்கு என தொழிலை கையிலெடுக்கும் முன் தமிழ் பிச்சைக்காரன் அல்லது தமிழ் பிச்சைகாரியை மணம் முடித்து அக்மார்க்கு தமிழராக மாறிவிடுவர். இதனால் வகுப்புகளில் பாடம் நடத்தும் ஆசிரியர்களாகட்டும், பேராசிரியர்கள் ஆகட்டும் மாணவர்களுக்கு பிச்சைகாரர்களை பற்றி கூறும் போது பாண்டிகள் கண்டிடுண்டோ?அவரா தெண்டிகள் என விளக்கவுரை நடத்துவர்.(மலையாளம் வழி கல்வி கற்றதால் நேர் அனுபவம்)




இவர்களிடம் ரசிக்கும் படியான விஷயம் வாழ்க்கையை அணுவணுவாக ரசிச்சு வாழ்வதாக தோன்றும்.  நம் போன்ற மக்களுக்கு அவை அருவருப்பாகவும்(.அங்காடி தெருபடத்தில் காலை மிதித்து விளையாடுவதை நினைவுகூறவும்). பகல் முழுக்க அழுக்கு பிடித்த ஆடை, பரட்டை தலையுடன் அலையும் மக்கள் மாலை 4 மணிக்கு ஒரு கிலோ அரிசி வாங்கி சென்று கஞ்சியாக குடிப்பார்கள்.(கஞ்சி குடிப்பதை எப்படி அறிந்தேன் என கேட்க்கின்றீர்களோ.எங்க ஊரில் 6 மாதம் மழையாகதான் இருக்கும்,வாங்கும் பொருட்களை வைத்துள்ள அனுமானமே) 6 -7 மணிக்கு குளித்து,சுத்தமான ஆடை அலங்காரத்துடன் சினிமா தியேட்டருக்கு செல்வர். ஒரு குடும்பம் என அல்லாது 10 -15 குடும்பம் சேர்ந்து குட்டி குழந்தைகளுடன் குதூகுலமாக ஓடி செல்வார்கள் டிக்கெட் வாங்க. படம் முடிந்து செல்லும் போது ஆண்கள் குடித்து தள்ளாடி சிலர் கெட்டவார்த்தைகளுடன் சண்டையிட்டு செல்வர்,சில பெண்களும் தான்!


வாரத்துக்கு எல்லா நாட்களும் தியேட்டருக்கு வருவார்கள்.இந்த பகுதியில் ஒரு தொழுநோயால் ஒரு கை இல்லாதவனுக்கு இரண்டு மனைவி இருந்தனர். அவன் பிச்சை எடுக்கும் பணத்தை வட்டிக்கு கொடுப்பதாக கேள்விபட்டுள்ளேன்.அவனுடைய மனைவிகளை சாட்டையை வைத்து அடிப்பானாம். இரண்டாவது மனைவி அவனுடைய மகளுக்கு ஒத்த வயதில் இருந்தாள்.


அதே பகுதியில் தேனம்மா என்ற பிச்சைகாரி எனது பாட்டியை தேடி வந்து பேசி கொண்டிருப்பார். எனது அம்மா பாட்டியை திட்டுவார்கள் ஏன் பிச்சைகாரியிடம் மணிக்கணக்காக பேசி கொண்டிருக்கின்றீர்கள் என. அம்மாவுக்கு தேன்ம்மாவை பிடிக்காது ஏன் என்றால் எப்போழுதும் தன் பிச்சைக்கார கணவருக்கு பேன் பார்த்து கொண்டு இருப்பதால் தான்! ஆனால் பாட்டி தேனம்மாளை பற்றி கூறும் போது அவளுடைய விதி அவளை தெருவுக்கு கொண்டு வந்து விட்டது என கவலைபடுவார். எனது பாட்டி தேயிலை தோட்டதில் பணியாளராக வேலைபார்த்து கொண்டுருந்தபோது தேனம்மா அந்த எஸ்டேடில் புதிதாக மண்ம் முடித்து வந்துள்ளார். அவள் அணிந்த நகைகளை பெண்கள் அதிசயமாக பார்க்கும் அளவுக்கு இருந்துள்ளது. மூக்குத்தி, ஒட்டியாணம்,  வளையல்கள், என பார்க்கும் பெண்களுக்கு ஆச்சரியமாகவே இருந்துள்ளார். பார்ப்போரை பரிவுடன் பேசுவது, நலம் விசாரிப்பது என எல்லாருடனும் அன்பாக பழகி இருந்துள்ளார். இரண்டு குழந்தைகள் என ஆகிவிட வீட்டு வேலைக்கு உதவியாய் வந்த தன் தங்கை, பின்பு கணவருக்கு அன்பு மனைவி ஆகிவிட்டாள் என அறிந்ததும் புத்தி தடுமாறி வீட்டை விட்டு வெளியேறிய தேனம்மாவுக்கு அடைக்கலம் கொடுத்தது மினி மார்க்கெட் மட்டுமல்ல மினி மார்க்கெட்டில் குடியிருந்த பிச்சைகாரரும் தான். பிச்சைகார கணவர் இறந்த  பின்பு ஒரு மலையாளி வீட்டில் பணியாளராக இருக்கும் போது, ஆற்றில் துணிதுவைக்க சென்ற இடத்தில் ஆற்றிலே இறந்து போனார்.அவருடைய குழந்தைகளும் பிச்சைகாரர்களாய் மாறியது.


சரணாலயத்தால் மீட்க்கபட்ட சிறார்.
எனக்கும் ஒரு பிச்சைக்கார சிறுவன் நண்பன் ஆகினான். நான் செல்லும் ஆலய வாசலில் பிச்சை எடுத்து கொண்டிருப்பான். அவனுடைய அக்கா அவனுக்கு பிச்சை எடுக்க பயிற்ச்சி கொடுப்பாள். சத்தமா கேளுடா என கிள்ளிவிடுவாள்.அவன், மேடம் பிச்சை தாங்க என கருணைகுரலில் பிச்சை கேட்பான்.அவனிடம் சில தருணங்களில் பேசுவது உண்டு. ஒரு முறை அவனுடைய  அக்கா மாரியம்மா எங்கே,  என விசாரித்த போது வயசுக்கு வந்ததால் பிச்சை எடுக்க வருவதில்லை என கூறினான். அவன் இப்போழுது தன் தங்கைக்கு, தம்பிகளுக்கு பயிற்ச்சி கொடுத்து கொண்டிருந்தான்.அவனுடைய தாய் மடியில் இப்போழுதும் புதிதாக பிறந்த குழந்தை விளையாடி கொண்டிருந்தது. ஒரு முறை திருநெல்வேலியில் உள்ள குழந்தை சரணாயலத்திற்க்கு சென்ற போது அவனை அங்கு பார்த்தேன். மேடம் என்னை நினைவு உள்ளதா நான் படிச்சு பெளேன் ஓட்ட போறேன் என கூறினான். அவனிடம் உரையாடிய போது கேரளாவில் பிச்சை எடுக்கும் போது எவ்வகையான மொழி பயண்படுத்த வேண்டும்,எப்படி பாட்டு பாடி பிச்சை எடுக்க வேண்டும்  என சில டிப்சு தந்து கொண்டிருந்தான். அங்கு இவனை போன்ற குழந்தைகளை கவனிக்கும் ஊழியர், “நல்லா பேசுவான் வேலை செய்யதான் உடம்பு வளையாது” என சொல்லிகொண்டிருந்தார். பின்பு அவன் தங்கி படிக்கும் பள்ளிக்கு சென்ற போது ரொம்பவே மன அளவில் குழப்பத்தில் இருந்தான்.அப்போழுது அவனுடைய மனநிலை படிப்பதிலும் தன் சகோதரன், பெற்றோரிடம் சேரும்  நோக்கில் இருந்தான். பிச்சைகார குழந்தைகளுக்கு ஒரு நிலையான வாழ்க்கை மிகவும் கஷ்டமானது என அறியபட்டேன்.குறுகிய நாட்களில் பள்ளியை விட்டு தப்பி சென்றதாக கேள்விபட்டேன். இந்த மாதிரியான குழந்தைகள் நமது இரக்கத்தை விட நாம் காட்டும் வஞ்சனை அற்ற அன்பை, அவர்கள் உணர்வுகளை மதிக்கும் பண்பை  பெரிதும் விரும்புகின்றனர்.அவர்கள் விரும்பும் அங்கிகாரம் நாம் கொடுக்க துணிவது கிடையாது.


இதை போன்ற 10 பிச்சைகார குழந்தைகளுக்கு பாதுகாவலர்களை(local guardian) உருவாக்க வேண்டும் என நோக்கில் சில வசதிபடைத்தவர்கள், பேராசிரியர்கள்,பேராசியைகளை நெருங்கினேன். இதிலும் சிறப்பாக நான் சார்ந்த கிருஸ்தவர்களையும் அணுகினேன். சிலர் அநியாயத்திற்க்கு பரிதாப பட்டார்கள் . ஆனால் யாரும் ஆக்க பூர்வமாக செயல் ஆற்ற முன் வரவில்லை. சிலருடைய நாவிலுள்ள இரக்கம் மனதில் இல்லை என தெரிந்த போது நொறுங்கி போனது என் மனம்.

1 Aug 2010

'South Oxford ' என அல்வா கொடுக்கும் திருநெல்வேலி பள்ளிகள்.

  தமிழகம் முழுக்க தனியார் பள்ளிகள்State Board, Matriculation,Central board ,International sylabus  என பல பெயர்களில் கால கரணபட்ட கல்வி திட்டத்தையே அளிக்கின்றது.குழந்தைகள் மன அளவில் முன்னேரியுள்ளனர். அவர்களுக்கு தகுந்த பாட திட்டம் நடைமுறையில் இல்லாதது பெரும் குறையே.  இதற்க்கு காரணம் மாற்று கருத்தற்ற பள்ளி சூழலே.  பள்ளி தாளாளர்க்கு பள்ளி முதல்வர் அடிமை என்றால்,  பள்ளி ஆசிரியர்கள்  முதல்வருக்கு அடிமை,  மாணவர்கள் ஆசிரியர்களுக்கும்!


தொடர்பியல் முறையில் எவ்வளவோ முன்னேற்றங்கள் வந்துள்ளது, பள்ளிகள்  பின் பற்றும் விதம்  பழமையாகவே உள்ளது.ஆசிரியர்கள் இந்த சீனகாரர்கள் மாதிரி. நன்மையை விட தீமைய்  பற்றி  தான் கணக்கிடுவர் நம் ஆசிரியர்கள் .மீடியா மோசம் மீடியா மாணவர்களை சீரளிக்கின்றது என எவ்வளவு நாட்களுக்களுக்கு தான் குப்பை கொட்டுவாங்க என்று தெரியவில்லை.காணொளி,படங்கள் என பல யுக்திகளை கைய்யாளலாம்.சிறப்பாக தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி போன்ற  மொழி பாடங்களுக்காவது.
பொதுவாக ஆசிரியர்கள் அவர்களை புதுமை(update)படுத்துவது கிடையாது. அவுங்க TTC ,BEd படித்த காலத்தில் தான் வாழ்வார்கள்.
பேருந்தில் பயணிக்கும் போது, மற்றும் பொது இடங்களில்  ஆசிரியர்களை காணும் போது அவதானிக்க முடிந்தது; அவர்களுக்கு ஒரு சமரசமுள்ள மனம் கிடையாது, தன்னலம்,வரட்டு கவரவம் என மூழ்கி கிடக்கின்றனர்.  பார்வையிலே ஒரு எகத்தாளம்! இவர்களால் எவ்வாறு ஒரு தலைமுறையே வழி நடத்த முடியும். இப்போழுது பரவாலாக காணும் அபாயம் ,ஆசிரியர்களும் தரம், ஜாதி என மாணவர்களை பிரித்து பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
 பள்ளி தலைமையும்  ஆசிரியர்களின் ஆளுமையைய் மதிப்பதும் கிடையாது, அவர்கள் ஒரு பொருள் மட்டுமே.




இன்று தோட்ட வேலை செய்யும் நபர் தின கூலியாக   4 முதல் 5 மணி நேரம் வேலைக்கு 150  முதல் 200 ரூபாய் வாங்குகின்றார். அதே போல் நமது கழிப்பறையை சுத்தம் செய்ய வேண்டுமென்றால்  ஒரு நாட்களுக்கு 350 ரூபாய் கொடுக்காது ஆள் கிடைப்பது அரிது ஆனால் ஆசிரியர்கள் 2000-4000 ரூபாய்க்கு(பிரதி மாதம் )   கிடைக்க கூடும்.  தகுந்த ஊதியத்தை கூட்டு முயற்ச்சியாக வாங்க  வழி வகுப்பது கிடையாது, உதாரணத்திற்க்கு  துப்புறவு சங்கம் தெருவாரியாக வேலையாட்களை பிரித்து வைத்துள்ளது. ஆகயால் நமக்கு அடிமாட்டு வேலைக்கு ஆள் கிடைப்பது  சாத்தியமற்றது.  ஆனால் படித்தவர்களுக்கு ஒற்றுமை என ஒன்றில்லை.  போதாதற்க்கு இவர்கள் மத்தியில்  கழுத்தறுக்கும் போட்டி மட்டுமே நிலவுகின்றது. . சும்மா,  கிடைத்த சம்பளத்திற்க்கு வேலைக்கு சேருவது, ஆனால் கற்ப்பிப்பது மட்டும் அறைகுறையாக!  இந்த எல்லா பாதிப்பும் குழந்தைகள் படிப்பிலும்,வாழ்விலும் தாக்கத்தை ஏற்ப்படுத்துகின்றது.

மதுரை,கோயம்பத்தூர் பள்ளி தரத்தை விட மிகவும் கீழ் மட்டமாகவே நெல்லை மாவட்டம் உள்ளது.பள்ளி குழந்தைகளுக்கு சரியாக வாசிக்க கூட கற்று கொடுப்ப்து இல்லை. தனியார் பள்ளியில்  3 ம் வகுப்பு  குழந்தைக்கு வருடத்திற்க்கு   20 ஆயிரத்திற்க்கும் மேல் செலவாகுகின்றது,ஆகினும் tution எனும் தனி பாடத்திற்க்கு அனுப்பினாலே சிறப்பாக படிக்க இயல்கின்றது.
தனியார் பள்ளியில் பெற்றோர் கூட்டம்(parents meeting) என ஒன்று கிடையாது. ஒருவேளை  இருப்பினும் ஆங்கிலத்தில் பேசி ஒரு  பிரம்மையை உண்டாக்க  முயல்வார்களை தவிர ஆக்க பூர்வமான கருத்து பரிமாற்றம் நடப்பதாக புலன்ப்படவில்லை. சில அம்மாக்கள் இவ்வகையான கூட்டத்தை தங்கள் பிள்ளைகள் குறையை கூறும் ஒரு வழக்காடும் மன்றம் (கோர்ட்) மாதிரி எடுத்து கொள்வார்கள்.தொலைகாட்சி பார்ப்பதாக குறைபடுவர்.குறைகள் நீண்டுகொண்டே போகும்.


தேற்வு தாள் கொடுக்கும் படலம் என ஒன்று உண்டு. சில வீடுகளில் குடும்பத்துடன் வந்திடுவாங்க. அன்று குழந்தை தூக்கிலிடும் கைதி போல் தான். கை கட்டி கூனி குறுகி நிற்க்கும்,ஆசிரியை குற்ற மொழியே ஆரம்பிப்பார் 'தங்கிலீஷ்' என்ற மொழியில்! ஒரு பக்கம் அப்பா  ஆமா மிஸ் அடிங்க, படிக்கவே மாட்டுங்குதா, உடனே அம்மா,குழந்தை I.A.S பரிட்சையில் கோட்டை விட்டது போல் அழுதுடுவாங்க.



நிஜம் என்ன நிறைய வீடுகளில் அம்மா வானொலியில் விளம்பரம் வருவது போல் படி, படி என்று ஒரு சத்தம்  மட்டும் கொடுத்து விட்டு தொலைகாட்சி தொடர் கதைகளில் முழுகி விடிகின்றனர் என்பதே நிஜம்.



சமீப காலமாக சில பெயர்களில், மிக பெரும் அளவில் விளம்பரம் கொடுத்து வெறும் 10-15 சென்டு இடங்களில்  சில பள்ளிகளை ஆரம்பித்தனர் .அரசியல் அமைப்பு சட்ட படி பள்ளிகளுக்கு என சில அளவுகள் நிர்ணயித்துள்ளனர், மேல் நிலை பள்ளி என்றால் 3 முதல் 5 ஏக்கர் இடம்,உயர் மேல் நிலை பள்ளி என்றால் 5 முதல் 8 ஏக்கர் இடம். இவை எல்லாம் ஏட்டு சுரக்காய் என்று மட்டுமே எனில் சட்டங்களால் யார் பயண் அடைவர்.

 மேலும் கணிணி மயமாக்கபட்ட,குளிருட்ட பட்ட என பல வசதிகளை கூறி பள்ளிகள் ஆரம்பிக்கின்றனர். அவ்வாறாக ஆரம்பிக்க பட்ட பள்ளியே நெல்லை பப்ளிக் பள்ளி. வகுப்பு அறைகள்  குறுகியதும் கழிப்பிடங்கள் சந்திலும் பொந்திலுமாக அமைத்திருந்தனர்.  smart room  கற்ப்பித்தல் எனவும்   அறிமுக படுத்தியிருந்தனர்.ஒரே வருடத்தில்  மூடு விழா நடத்தி விட்டார்கள்.இதில் இந்த பணக்கார பெற்றோரை நினைத்தால் தான் பரிதாபமாக உள்ளது.வீட்டில் தான் பாதுகாப்பு,அந்தஸ்த்து என கூறி வீட்டு வளாகத்தினுள்ளில் வளர்ப்பார்கள். பள்ளியாவது இயற்க்கை வளம் உள்ளதாக பார்த்து சேர்க்கலாம் இல்லையா?
இப்படி திருநெல்வேலி பள்ளி படிப்பு பாதாளத்தை நோக்கி போய் கொண்டிருக்கின்றது. அடைமொழி south oxford யாவது தூக்கி எறிஞ்சுட்டு  அல்வா கொடுப்பதை நிறுத்தினால் யாவருக்கும் நல்லது. 


10 Jul 2010

சிங்கார சென்னையா? இல்லை,இல்லை அசிங்க சென்னையா?

சென்னை பட்டினம் மேல் ஒரு போதும் மதிப்பு-ஆசை இருந்தது இல்லை. ஆகினும் வேலை வாய்ப்பு அங்கு கொட்டி கிடக்கின்றது என அறியும் போது சென்னையை வெறுக்கவும் முடியவில்லை. கடந்த முறை நேர்முக  தேர்வுக்கு வந்த போது என் கல்லூரி தோழியின் வீட்டில் தங்கியிருந்தேன்.அருமையான அடுக்குமாடி குடியிருப்பு. அவர்கள் சொந்தமாகவே வாங்கி குடியிருப்பதால் மட்டுமல்ல , காற்றோட்டமான வீடு, வீட்டுக்கு சுற்றுபுறவும் தூய்மை,குடியிருப்பு பகுதியும் நகரத்தின் அமர்க்களம் அற்று அமைதியாக காட்சி அளித்தது. வீடு இருக்கும் பகுதியோ அம்பத்தூர், எனக்கு செல்ல வேண்டியதோ  தாம்பரம் பக்கத்திலுள்ள கல்லூரிக்கு! காலை 7.30 க்கு  புறப்பட்டு 9.45  ஆகியும் செல்லும் இடம் சென்றடைய முடியவில்லை. பேருந்தில் இருந்து ஒரு நிறுத்ததில் இறங்கி ஆட்டோவில் சென்றோம் ரூ.300 கொடுக்க வேண்டியிருந்தும்
நேரம் தவறாது நேர்முகத் தேர்வுக்கு சென்றதில் திருப்த்தி அடைந்தோம்  .

இம்முறை (கடந்த திங்கள் ) நேர்முக தேர்வு வேளச்சேரியாக இருந்ததாலும், அமெரிக்காவில் இருந்து வந்த  கணவருடைய சகோதரியை பார்க்கவும், குடும்ப உறவுகளையும் பலப்படுத்த வேண்டும் என்ற பன்முக தேவை இருந்ததால் வேளச்சேரியில் உள்ள சகோதரியின் வீட்டில் தங்க முடிவு செய்யும் சூழலுக்கு தள்ளபட்டோம்.
கடந்த இரண்டு நாட்களாக அங்கு மழை ,சிங்கார சென்னை என்று துணை முதல்வர் மட்டுமே அழைக்க வேண்டும்.வெறும் தூறல் மழைக்கே  எங்கு நோக்கினும் தண்ணீர் தேங்கி அசிங்க சென்னையாக காட்சி தருகின்றது. நடபாதைமக்கள்   சர்க்கசில் கோமாளி கயற்றின் மேல் நடப்பது போல் தான்
நடக்க வேண்டியுள்ளது.
நெல்லையை மழைக்காலங்களில் காணும் போது கொதிச்சு போவது உண்டு ஆனால்  சுத்தம் என வரும் போது பட்டணம்,  பட்டினம் என பாகுபாடில்லாது எல்லா ஊர்களுமே அசுத்தமாக இருப்பதில் ஒற்றுமையாக உள்ளது.
அரசு துறை சிறப்பாக கார்ப்பரேஷனின் பணி மக்களிடம் வரி வசூலிப்பதில் மட்டும் தான் இயங்குகின்றது போலும்.
பன்றி ,டெங்கு போன்ற காய்ச்சல்கள்  வரும் போது மட்டும் சுத்தம் சுகாதாரத்தை
பற்றி சிந்திப்பது உகந்ததா?
என்னுடைய வகுப்பு தோழன் பத்திரிக்கையாளராக பணிபுரிகின்றார். அவர்   கதை கருவுக்காய் மிகவும் சிரமபடுவதை காணும் போது சில பிரச்சனைகளை நாங்கள் பகிர்வது உண்டு. ஒரு முறை , வீட்டு முற்றத்தில் குழந்தைகளை மலம் கழிக்க பழக்கும் அம்மாக்களை பற்றி கூறிய போது, இது தமிழர்களின் அடையாளம்  என வாதிட்டார்.
எனது முதுகலை  செயல்முறை பாடத்திட்டத்தின்  காரணமாக பல கிராமங்கள் செல்லும் அரிய வாய்ப்பு ஏற்பட்டது.பல வீடுகளின் வாசல் படியோடு சேர்ந்து கழிவு நீர் செல்லும்  வழி (கால்வாய்) காணலாம். பல அம்மாக்கள் அக்-கழிவு நீர் கால்வாய்களில் தன் குழந்தைகளை  காலைக்கடன் செய்ய அனுமதிக்கின்றனர்.

இச்சுகாதார  சூழலை எண்ணியே  எங்களுடைய வீடு கட்டும் நிலம் புறநகர் பகுதியாக இருக்க வேண்டும் என விரும்பினோம். எப்போழுதும் சுத்தமான காற்று ,வீட்டை சுற்றி மரம் என கனவுகளோடு குடிபுகுந்தோம். 6 மாதங்களுக்கு முன்பிலிருந்து  ஒரு குடும்பம் வாடகைக்கு குடி வந்தது.அவர்கள் வீட்டு இரண்டு சிறு குழந்தைகள்  ஒவ்வொரு  முறையும் சாப்பிட்டு முடித்தவுடன் "அம்மா ஆய் வருது" என கூறி தெருவுக்கு வந்து விடுவார்கள். காலையில் எழுந்த உடன் கோலம்,சூரியனுக்கு காலையும் மாலையும் வணக்கம் என இயற்க்கையும் வணங்குகின்றனர்.
பைபிளில், மலம் கழிக்க ஒரு செயல் விளக்கம் கொடுத்துள்ளார்கள். மலம் மனித குடியிருப்பிலாகாது. கையில் ஒரு கம்பு போன்ற ஆயுத்தால் குழி எடுத்து  அதை உபயோக படுத்தி விட்டு மூட சொல்லபட்டுள்ளது. நம்மவர்களூம் பின் பற்றலாம்.
சிலருக்கு இயற்க்கை உபாதை இயற்க்கையோடு இருந்தால் தான் வரும் என கேள்வி பட்டுள்ளேன்.  அரசு ஊழியராக பணிபுரியும் ஒரு நபர் காலையில் அவருடைய இரு சக்கர வாகனத்தில் காலைக்கடன் செலுத்த செல்வார். அவருடைய மனைவியும், அவருடைய தாயாரும் நடந்து பின்பே செல்வர். எனது கற்பனை இவ்விதமாக செல்லும்  , நான்கு சக்கரவாகனம் வாங்கினால் எல்லோரும் குடும்பத்துடன் செல்லுவார்கள் போலும்!.
   

1 Jul 2010

சிங்கம்

சிங்கம் திரைப்படம்  என்னுடைய குழந்தையின்  வற்புறுத்தலால் நேற்று பார்க்க நேர்ந்தது.மேலும் சில காட்சிகள் எங்ளுடைய குடியிருப்புக்கு பக்கத்திலுள்ள நான்கு வழிச்சாலையில் எடுக்கபட்டது. படத்தில் வரும் பாட்டை பார்த்துடனே தரம் தெரிந்தது.(பாட்டு: எட்டி உதைப்பேன், மிதிப்பேன்.  பொலிஸ் என்றாலே அடிக்கணும், உதக்கனும் என  சட்டமா? காட்டுமிராண்டியா மாறியிட்டிருக்கோம்  எனதான்  இத்திரைபடங்கள் காட்டுகின்றது.


அதிலும் சூர்யா கொடுக்கும்  பாவனைகள் இருக்கே, கண்ணை உருட்டது,காலை தூக்குவது என எந்த நாகரிகவும் பின் பற்றாத படம். சமீப காலமா ஹீரோ பாத்திரங்களுக்கு  என்றே விவேக் ,வடிவேல் போன்ற எடுபிடிகள் போல், அவுஙக திட்டினாலும் அடிச்சாலும் வாங்கும் ஒரு தன்மான அற்ற,நாணம் அற்ற  ஒரு சமூகத்தை உருவாக்க துணிகின்றனர். பேருந்திலும் சரி பொதுஇடங்களில் இந்த நாகரிகம் அற்ற மொழிகளை தயக்க மின்றி வயது வித்தியாசம் இல்லாம பேச கத்து கொடுக்காங்க!இப்படங்கள் வழியாக!.
போன வாரம் சென்னை அம்பத்துரில் இருந்து தாம்பரத்திர்க்கு நெரிசாலான பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. படியில் நின்று பயணித்துகொண்டே விடலை பசங்கள் அடிக்கும் கூத்தும் பேச்சும், அதற்க்கு ஈடு கொடுத்து  பெட்டை பெண்கள்  தமாஷ் ,அடி,கிள்ளுன்னு நெருக்கத்தில் பயணம் செய்த அலுப்பு தெரியாது என்னுடைய நிர்த்ததில் வந்து சேர்ந்தேன். ஒரு பைய்யன் கேட்கிறான் ஏய் மீணா, என் கூட வாரீயா,இடுப்புல வச்சு தூக்கிட்டு போறேன்,அதற்க்கு மீணா கூறும் பதில் ,டே உன்னால்  என்னை தூக்க முடியாது. இப்படி அப்படி சலிக்காம  நிர்த்தாம மாறி மாறி கொக்கி பொட்டு பேசி கிட்டே வாறாங்க.

அம்மாக்களும் சளச்சவங்க இல்லை, எங்க தெருவு பெண்கள் எல்லாம் இரவான கூட்டம் கூடி 10,11 மணிவரை பேசிகிட்டு இருப்பாங்க. எனக்கு ஒரு ஆர்வர் என்னவாக இருக்கும் பேச்சுன்னு. நானும் ஒரு மூன்று நாட்கள் போய் கூட்டத்தோடு உட்கார்ந்தேன். எல்லாம் படுக்கையறை, பக்கத்து வீட்டு பெண்களை பற்றியுள்ள தகாத கதைகள்.
விடலை பசங்க பேச்சை கேட்டு சிரிக்கலாம், இவுங்க பேச்சு ஒரே அருவருப்பாக இருந்தது.


தமிழ் படத்தை பார்ப்பதற்க்கு பதில் அழகான ஆங்கிலம் ,அரபி போன்ற வெளிநாட்டு திரைபடங்களை பார்க்க நமது மக்களை  உற்சாக படுத்தலாம்.ஆங்கில படம் என்றாலே பெண்கள் அணியும் ஆடைகளை நினைத்து சில அம்மாங்களுக்கு பயம் உண்டு.ஆனால் தேர்ந்து எடுத்து  பார்த்தால் மிகவும் நல்ல படங்கள் பிற மொழிகளில் தான் உண்டு .ஹிந்தி படங்ள் கூட நம்மவர் படங்ளை விட பரவாயில்லை.லொக்கேஷன் ,கதை என முன்னேறியுள்ளது.முத்த காட்சியை பற்றியும் அச்சம் கொள்ள தேவை இல்லை சுபம் என்று எழுதி கண்பிப்பதற்க்கு பதில் கடைசி காட்சியாக சேர்க்க பட்டிருக்கும். தமிழ் படத்தில கதாநாயகன்,நாயகி வரும்போது எல்லாம் இக்காட்சியால் நிறைக்க பட்டுள்ளது. பாடல் காட்சிகள் வரும் தமிழ் படம் கதாநாயகிகளை வைத்து பார்க்கும் போது  பயப்பட ஒன்றுமே இல்லை என தோன்றுகின்றது. சிங்கம் படத்தில் பாருங்க சூரியாவுக்கு சட்டக்கு மேல் ஒரு மேல் சட்டை. நிஜத்தில் நம் தமிழக ஆண்கள்  சட்டயே போடுவது கிடையாது பெரும் நேரங்களில். கதாநாயகிகளுக்கு உள் பாவாடை ,பனியன் தான் உடை!. தமன்னா, அனுஷ்கா  இவளுங்களுக்கு என்று தன்மானம்,சுரணை  இல்லயோ. பணம் பத்தும் செய்யும் தானே? அனுக்ஷா நடிக்கவா செய்யுது,ஒரே முறைப்பு தான். நார்னியா படத்தை தமிழில் எடுத்து நடிக்க வைக்கலாம்.பெண்களையும் ஒரு மனிதப்பிறவியா பார்க்காது அவர்களையும் மேஜை,கோப்பை,போன்ற ஜடப்பொருளாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.


சமூக புரட்சியாளர்களா ஆக விரும்பும்  ரஜினி, விஜயகாந்து, விஜய், சூர்யா என எல்லா நடிகர்களுக்குமே ஆடயற்றை பெண்களை தான் பிடித்துள்ளது போலும்
மேலும் ஈழபோருக்கு பின்பு சிங்கத்தை நினைத்தால் ராஜபட்சே தான் வருகின்றான்.தமிழ் சினிமாவிலோ சிங்கத்திடம் பாசப்பொழிவில்,சிங்கம்,பெண்சிங்கம்,இப்ப குட்டி சிங்க கதையை தாத்தா எழுதியிட்டு இருப்பாரோ? 



திரைப்படம் ஒரு மிக பெரிய கலை, கலைஞசர்கள் உருவாக்காது பணக்கார மூடனுகளிடம் இருந்தால் இப்படி தான் இருக்கும்.
முடிந்தால் இரான் படங்கள் Children Of Heaven, Baloon,Baran,Hindi movie-Tharee Zameen Par,Paa,English-Mighty Heart,Vertical limit,God Father,போன்ற திரைபடங்கள் பாருங்கள்.மக்கள் திருந்தாது மகேசர்கள் திருந்தபோவது சாத்தியமில்லை.

28 Jun 2010

செம்மொழி

செம்மொழி மாநாட்டில் நிறைவேற்றபட்ட தீர்மானத்தை பகிர்ந்த  வலைப்பதிவை பார்த்த போது தமிழ் சினிமா காமடி மாதிரி இருந்தது. தமிழை மத்தியில் ஆட்சி மொழியாக்க வேண்டுமாம்.  தமிழகத்திலயே வழியே காணும். நம்மை அறிவாளின்னு காட்டிக்க ஆங்கிலம் தெரியாவிடிலும் தங்லிஷிலாவது  பேச வேண்டியுள்ளது. தண்ணிர் பிடிக்கும் பம்படியில் கூட அக்கா, மறைந்து மேடம் போட்டு பேசும் வழக்கம் வந்து வெகுநாளாகிவிட்டது. இதிலும் இந்த தமிழங்க இருக்காங்ளே வரட்டு கவுரவ பார்டீங்க!


என் மகனின் பள்ளி தோழனின் அம்மா என்னை மேடம் என அழைத்து பேசினாலும் நான் அக்கா என்று அழைக்கவே விரும்புவேன். அதனாலயே அவுங்க அவ்வளவாக என்னிடம் பேசமாட்டாங்க.  இதில் தொலைகாட்சியின் பங்கும் பெரிதுள்ளது. மலையாள சானலை பாருங்க சேச்சி (அக்கா),அம்மச்சி(அம்மா),சேட்டா(அண்ணா) என்ற சொற்களை தான் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் விரும்பி பயன்படுத்துவர். நம் தமிழ் மொழி சானல்  தொகுப்பாளிகள் தான்  மேடம்,சேர்,என்ற பதங்களை குப்பம்மாவுக்கும் சுப்பம்மாவுக்கும் அறிமுக படுத்தி கொடுத்து கொண்டிருப்பவர்கள்.


சமீபத்தில் ஒரு நேர் காணலுக்கு செல்ல வேண்டியிருந்தது, என்னுடைய புத்திசாலித்தனத்தை விட ஆங்கிலத்தில் உரையாடும் தகுதியால் மட்டுமே அளக்கபட்டேன்.


இந்த மாநா(னா)டு தீருமானமெல்லாம் போடுவதர்க்கு பதிலாக தமிழை எளிய முறையில், சுவாரசியமுடன் கற்ப்பிக்கும் முறைகளை கையாள  வேண்டும், கணிதம், அறிவியல் போன்ற பாடஆசிரியர்களை விட தமிழ் ஆசிரியைதான் என் குழைந்தைகள் பயப்படுவார்கள். பொதுவாக தமிழ் கற்ப்பிக்க ஆண்
 ஆசிரியர் கிடைத்தால்  ஓரளவு தப்பித்து விடலாம், பெண் வாத்தியாருங்க
 பேச்சு செயல் எல்லாமே  வெறுப்பை/சலிப்பை கொடுக்கும்.  வார்த்தைகள் அடாவடித்தனம்  நிறைந்ததாக  இருக்கும்.  மாணவர்களை மாடுகளை போன்று கையாளுவார்கள். பள்ளியில் பாருங்க தமிழ் ஆசிரியை தான் எண்ணை வடிஞ்ச முகத்துடன் கடுகு வெடிப்பது மாதிரி, அழகு ரசனை அற்ற உடை அலங்காரத்துடன் வருவர். கோபம் வந்தால் வாயில் இருந்து வரும் வார்த்தை எருமை,நாய்,மாடு ,சனியன் என்றே இருக்கும்..


நாங்க கேரளாவில் பிறந்து கேரளாவிலே வளர்க்கபட்டோம். பொது இடங்களில் தமிழ் பேசினால் மதிப்பை பெற இயலாது. ஆகையால் பேச்சு மொழியாக மலையாளத்தையும் கற்று கொண்டோம்.வீட்டில் பெற்றோரிடம் ,உறவினர்களிடமும் தமிழில் பேசியே மகிழ்ந்தோம். ஆனால் சில          தமிழர்கள் சிறப்பாக  பீர்மேடு,குட்டிகானம்,ஏலப்பாறை,போன்ற இடத்தை சேர்ந்த தமிழர்கள் மூக்கு வழியாக மலையாளத்தில் தான் முக்கி முக்கி பேசுவாங்க. தமிழ் பேசும் தமிழ்ர்களை பச்சை மலையாளியை விட கேவலமாக பார்ப்பார்கள்.


இன்னும் வேரு ரக தமிழர்கள்,சாத்தான்குள்ம், திருநெல்வேலியை சேர்ந்தவங்க  மலையாள மொழியை சுட்டு போட்டாலும் பேச மாட்டேன் என்று அடம் பிடிப்பாங்க..மலையாளிங்க கேணைன்னு கிண்டல் அடித்தாலும் பாண்டினு அழைத்து கேலி செய்தாலும் கண்டுக்காம நடந்துக்குவாங்க.ஏன்னா அவர்கள் மொழி பரிச்சயம் இல்லாததால் பேச இயலாத மையாகிவிடுவார்கள்.எங்களை போன்ற தமிழர்களுக்கு அவர்கள் மொழியும் படித்துள்ளதால் கிண்டல் அடித்தாலும் பதில் வழக்காடி அவர்களுக்கு இணையாக வாழ,பேச பழகியிருந்தோம்.பாண்டினு அழைத்தால் உங்க கொள்ளு தாத்தா தமிழர் தானே,உங்க மலையாளமொழியின்  தாய் மொழியே தமிழ்தான்னு கூறி தமிழையும் கத்து கொடுத்துடுவோம்.



எந்த மொழியானாலும் தெரிந்திருதால் பலம் தான். 
ஆனால் மலையாளமும் தமிழும் அற்ற களியாக்காவிளை போன்ற இடைத்தை சேர்ந்த தமிழர்களை என்ன சொல்வது என்று தான் தெரியவில்லை.மலையாளமும் பேசாது, தமிழும் பேசாது  கலவரம் கொண்டு அலையுவாங்க.  எங்க பல்கலைகழகத்தில் ஆசிரியர், மாணவர்கள் என பெரும் பகுதி இவர்களால் ஆக்கிரமிக்க பட்டுள்ளது. இளுத்து அழுது ஒரு மலையாளம் அல்லாத தமிழ் பேசி அறிவாளின்னு  படம் காட்டியே பொழைச்சு போறாங்க. செம்மொழி மாநாட்டிலே இவங்களுக்கு தமிழ் பேச கத்து கொடுக்க ஒரு தீருமானம்  போட்டிருந்தால் வரவேற்று இருக்கலாம்.
அவர் அவருக்கு அவர் மொழிதான் செம்மொழி! 




சதான் ஹுசைன் சொல்லியுள்ளார்,என்னடா இங்கிலிஷ், புஷ்,தஷ்ன்னு நம்ம அரபி மொழி போல்வருமா? ஆக கையாள தெரிந்த மொழியெல்லாம் அவரவருக்கு செம்மொழியே!

13 Jun 2010

ஜாஸ்மின் வெற்றி-குஷ்புவின் கருத்து?

 ஜாஸ்மின் இந்தவருட 10 ம் வகுப்பு தேற்வில் முதல் இடம் பெற்ற நெல்லை மாநகர பள்ளி மாணவி ஆவார். சமீபத்தில் குஷ்பு பேசிய போது தமிழக முதல்வரின் சாதனையாக  இதை குறிப்பிட்டார். மேலும் ஒரு தகவல் கூறினார்,ஜாஸ்மினுடைய தகப்பனார் வீடு வீடாக சென்று துணிவிற்ப்பவர் என்றும் , இப்படியுள்ள சூழலில் படித்த ஜாஸ்மின் முதல் இடம் பெற்றது முதல்வரின் சாதனை என்று.



ஜாஸ்மினுடைய அறிவாற்றலை கேலி செய்வதாகவே உள்ளது. என்ன முதல்வர் ஜாஸ்மினுக்காக பரிட்சை எழுதினாரா?. ஜாஸ்மின் படித்த பள்ளியை நோக்கின் த்மிழக அரசின் சாதனை புரியும். மாநகர பள்ளி ஆக இருந்தும் போதுமான வசதியற்ற பள்ளி இது. பழைய பேட்டையில்  குற்றாலம் செல்லும் ரோட்டு ஓரம் அமைந்துள்ளது.பள்ளியின் வாசல் துர்நாற்றம் வீசும் பொது ஓடை, போதுமான இடவசதியற்ற முற்றம் என அரசு பள்ளியின் முகமுத்திரயுடன் காட்சி  அளிக்கின்றது.பெண்கள் பள்ளியாக இருந்தால் 5 முதல் 8 ஏக்கர் சுற்றளவு இருக்க வேண்டும். இப்பள்ளியின் சுற்றளவு ஒரு ஏக்கர் கூட இருக்க வாய்ப்பு இல்லை.அங்கு படித்த ஒரு மாணவி  மூலமாக  அறியபட்டது சுகாதாரமுள்ள கழிப்பிட வசதி கூட இல்லை என்பதே. ஜாஸ்மின் பெயரில் விளம்பரம் பெரவேண்டும் என விரும்பும் அரசு   செய்யவேண்டியது மாணவியின்  இனியுள்ள பள்ளி  செலவை ஏற்ப்பது, வேலைக்கு உத்திரவாதம் அளிப்பது என்பதுதான்.

பள்ளி மற்றும் கல்லூரி சார்ந்து வழங்கும் பாராட்டு விருதுகள் எல்லாம் மாணவர்கள் நலனுக்கு உதவுகின்றதா என்றால் கேழ்விக்குறியே.பல்கலைகழக விருதுகள்(gold medal) வழங்கும் நிகழ்வுகளை   மாணவர்களுக்கு வழங்கும் ஒரு பாராட்டு விழா என்றால் கிடையாது என்பதுதான் உண்மை. அமைச்சர்களுக்கு மதிப்புவழங்குவதற்க்கும் ,அமைச்சர்கள்  தங்கள் கருத்துக்களை உரைக்கும் தளம் ஆகவே உள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்பு என்ற பெயரில் நடைபெறும் கூத்துக்களை கண்டு ரசிக்கலாம்.

விருது என்ற பெயரில்  அளிக்கப்படும் மெடலுடன் வேலைவாய்ப்பும் அளித்தால் சிறப்பாக கருதலாம்.  இல்லாவிடில் மெடல் மட்டும் பெறபடுவது கேலிகூத்தாகவும் சிலவேளைகளில் உணரபடுவதும் உண்டு. நான் பெற்ற  மெடலை  என் வகுப்பு தோழனிடம் காண்பித்தபோது இதுக்கு 50 ரூபாய் மதிப்பு வரும்.  தங்கம் அல்ல தங்கம் பூசிய தகரம் என கூறினான் . எனக்கு  அதிர்ச்சியை  கொடுத்தது. ஒரு வேளை ஒரு வேலை வாய்ப்பு கொடுக்க பட்டால் விருதுக்கு பதின் மடங்கு மதிப்பு கூடியிருகும். முயற்ச்சியுடன் படிப்பவர்களுக்கு  ஒரு உற்ச்சாகத்தையும் கொடுத்திருக்கும்.

குஷ்புவிடம் மறுபடியும் வரவேண்டியுள்ள  காரணம் ,ஜாஸ்மின் சாதனையை கலைஞரின் சாதனையாக கூறியுள்ளார். ப்ள்ளி வாசலை காண இயலாத பெண்கள்,தெருவோரங்களில் பிச்சை எடுக்கும் பெண்கள்,  குப்பை பெருக்கும் பெண்கள் யாருடைய சாதனை. குஷ்புவின் கணவருக்கு கலைமாமணி விருது கொடுத்து குஷ்புவை  அரசுவின் ஊதுகுழல் ஆக்கியுள்ளார்கள் போலும்.  சுந்தர் தனது படங்ளில் பெண்களை பயன்படுத்துவது  பரிதாபத்துக்குரியதே. கெட்ட வார்த்தைகளில் திட்டுவது, காதல் காட்சிகளில் கூட  முரட்டு பயலிடம் பம்பரம் கிடைத்துள்ளது போல் கைய்யாளுவதை கண்டுள்ளோம்.குஷ்பு போன்றோர் நாய்க்கு எலும்பு துண்டு கிடைத்தால் வாலை ஆட்டி நிற்ப்பது போல் நன்றாகவே மனப்பாடம் படித்து ஒப்பிக்குகின்றனர். பெண்கள் நாயகி போல் பொது மேடைகளில் காட்சி தருகின்றார் பேசுகின்றார். தண்டு எடுத்தவன் எல்லாம் வேட்டைக்காரன் என்பது இது தானோ?

8 Jun 2010

அலுப்பூட்டும் உரையாடல்கள்!

ஒருவரை ஒருவர் தொடர்பு படுத்திகொள்ள பேசுதல் பயன்படுகின்றது. எவ்வாறு பேச வேண்டுமென்று சிலருக்கு வரையரை கிடையாது. நாக்குதான் இலவச தொண்டு செய்கின்றதே என சிலர் பேசியே தொடர்பை முறித்து கொள்வார்க்ள்.
எங்க திருநெல்வேலியில் பேச துவங்கும் முன்பே ஒரு தேர்வு வைப்பின்,நீங்க என்னாளு, சொந்த ஊர்  ஏது, அப்புறம் பேசும் பகுதி முழுதும் எங்க ஆளுங்க இப்படி, எங்களிலே இதான் முறை, உங்க ஆளுங்களே இப்படித்தான் இப்படி அப்ப்டி திருநெல்வேலி நா-வாளாலேயை வகுந்துடுவாங்க.
இன்னும் கொஞ்ச வாத்தியார் பெண்டாட்டிக, எங்க வீட்டு சார் சொன்னாங்க ,எங்க சார் வந்தாங்கனு  பச்சபுள்ளயாட்டும் அழுவாங்க.
வேறு சில மனுஷாங்களை பார்த்தாலே நீங்க ஆஸ்பத்திரியில  சேர்ந்தது மாதிரி ஆயிடுவீங்க. என்ன மெலிஞ்ட்டே ,சொகமில்லயா, கறுத்து போயிறே அடையாளமே  தெரியலே, , சே ஏன் இப்படி இருக்கே சாப்பாட்டுக்கே வழியில்லையான்னு மாதிரி கேட்டுடுவாங்க. அவ்வளுவு நேரம்  நன்னா feel  பண்ணுன நம்மளே சோர்ந்திடுவோம்.
சரி சரி கல்வி அறிவு பத்தாத மக்கள்னு வடிவேல் மாதிரி மண்டயில அடிச்சுகிட்டு  சில மெத்தபடிச்ச   மேதைகள் பேசதை பாருங்க.
இவுங்க என்னுடன் MPhil  கற்க்கும் தோழி
ஜோசபின் நமக்கு வேலை கிடைக்குமா?
எனக்கு நம்பிக்கையே இல்லை.
வேலை கிடைகலனா என்ன பண்ணுவது?
வேலை கிடைத்தாலும் ரூ 6500  கிடைக்குமாம்.
இதை வைத்து  என்ன பண்ண்?
நீங்க முயற்ச்சி பண்ணுகின்றீர்களா?
எங்க ஊரில உங்களுக்கு கிடைக்காது!ஏன்ன எங்களுக்கு கொடுத்த பிறகு தான் நீங்க எதிர் பார்க்க முடியும்....
நீங்க முயர்ச்சி  பண்ணின college ல அவளெ எடுத்துட்டாங்களாம்..... அவ இருக்குத கல்லூரியில் நான் போகமாட்டேன்.
நீங்க தேர்வுக்கு படிச்சிட்டீங்களா? என்ன எழுதே?  4 பக்கம் எழுதனுமோ? நான் ஒற்றும் படிக்கலே......என்னத்தை படிச்சு......

சரி போதும் போதும்  என்று எண்ணி முணைவர் மாணவி ஒரு பேராசிரியரின் விடைபெறும் (sentoff)   மீட்டிங்ல பேசுகிறதை கவனித்தால்,  "நம் பேராசிரியர் சிரிப்புக்கு பெயர் பெற்றவர்   சிலரை பார்த்தவுடன் சிரித்து பேசுவார், பேசும் நபர் நகர்ந்தவுடன் அவன்கெடக்கான்  என கூறுவார் !"........எப்படியிருக்கு வாழ்த்துரை?
ஒரு இளம் முனைவர் ஆசிரியை  எப்படி பேசுகின்றார் என பாருங்கள், "பேராசிரியருக்கு ஒவ்வொரு செட்ல ஒருத்தரை தான் பிடிக்கும் , என்னைதான் எங்க  செட்ல பிடிக்கும் என்னை செல்லம் தான் கூப்பிடுவாங்க. (நாங்களும் அவருடைய மாணவர்கள் தான் நாங்க மட்டும் என்ன  தொல்லையா?)

சமச்சீர் கல்வி

தமிழக அரசு சமச்சீர் கல்வி என்ற பெயரில் புதிய பாடத்திட்டம் அறிமுகபடுத்தியுள்ளது.என்னுடைய சகோதரி மகன்  இத்திட்டத்தில் மாட்டியுள்ளான். இத்திட்டத்தின் கீழ்உள்ள பாடத்திட்டம்  கேரளா மற்றும் கர்னாடகா  மாநில பாடத்திட்டங்களை விட தரம் அற்று இருப்பதாக  கூறுகின்றனர்.  கல்வி தரம்  எல்லா மாநிலங்களிலும் சமச்சீர் பெற்றிருக்க வேண்டும் . இவ்விதம் உள்ள சீர் திருத்தால் நம் மாநில மாணவர்கள் தேசிய அளவில்  தரம் தாழ்த்த படும் சூழல் உள்ளது. உலகமயமாக்கல்  சூழல் கல்வி மட்டும் கல் யுகத்தை நோக்கீ சென்று கொண்டுருக்கின்றது. ஏற்கனவே தமிழ்நாடு  SSLC கேரளா SSLC  க்கு சமமாக மதிப்பது கிடையாது. நமது மாணவர்ளுக்கு பட்டபடிப்பு முடித்திருந்தால் கூட வங்கி க்கு சென்றால் ஒரு படிவம் வாசித்து நிரப்ப தெரிவது கிடையாது, பிழை இல்லாது எழுத தெரிவது கிடையாது ஏன்  ஒழுங்காக ஆங்கிலம் போகட்டும் தமிழில்  கூட பேச தயங்குகின்றனர்.(கடலையல்லா-loose talk).

ஆசிரியர்களின் தரத்தை உயர்த்தி தரமான கல்வி தருவதை விடுத்து மாணவர்களின் எதிர்காலத்தையே வீணடிக்கின்றனர். தனியார் பள்ளிகளில் ஆசிரியர்கள் பெறும் ஊதியம் ரு 1500  துவங்கி 4000 த்துக்கு உள்ளாகவே.கொத்தனார் (400* 30) கூட இவர்களை விட பல மடங்கு ஊதியம் பெருகின்றனர். தற்போது அரசு பள்ளி ஆசிரியரின் ஊதியத்தை கணக்கிட்டு  தனியார் பள்ளி ஆசிரியர்கள் தங்கள் கற்று கொடுக்கும் ஆற்றலை குறைத்து ஏனோ தானோ என்று கற்று கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். தனியார் பள்ளி  மாணவர்களும் tution போய் தான் தங்கள் படிப்பை சரிபடுத்திகொள்கின்றனர்.
 tதுவக்கபள்ளீ படிப்புக்கு  ஒரூ வருடத்திற்க்கு  குறைந்தது 20 ஆயிரம்  ரூபாய்  கொடுக்க நேரிடுகின்றது.  பள்ளி வாகன கட்டணமும்  அசுரனை போன்றுள்ளது.
 அரசு பள்ளிக்கு அனுப்பலாம் என்றால் ஒரு வகுப்பில் 100க்கும் அதிகம் மாணவர்கள், ஆசிரியர்கள்( ஆண் பெண் இருபாலரும்) வகுப்பறையே விட பக்கத்து தேனிர் கடை மற்றும் அரட்டை அரங்த்தில் காலம் தள்ளுகின்றனர்.இன்னும் சில  ஆசிரியைகள் தங்கள் தலையில் உள்ள பேன் எடுக்கவும் மாணவிகளையே பயண்படுத்துகின்றனர். பள்ளி வளாகம், கழிப்பறை எங்கு செல்லினும் சுத்தம் பராமரிப்பது கிடையாது.ப்ள்ளிக்கு தேவையான தண்ணீர்  எடுப்பதற்க்கும் மாணவர்களையே பயன்படுத்துகின்றனர்.
இதில் பணக்கார வீட்டு குழந்தைகள், அரசு அதிகாரிகளின் குழந்தைகள் central board ல் சேர்க்க ஆரம்பித்து விட்டனர். ஆக   சமச்சீர் கல்வியில் படித்து படித்த  ஏழைகளாக தமிழ் நாட்டுக்குள்ளயே இருக்க  வேண்டியது தான்.http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=9413:2010-06-06-19-51-35&catid=1126:10&Itemid=393

தில்லியில் படிக்கும் ராமதாஸ் பேரபிள்ளைகள் வெளிநாடுகளில் படித்த கலாநிதி சகோதர்கள் இருக்கும் போது ந்மக்கு ஏன் கவலை.கல்வி தந்தையர்களுக்கு வாழ்வு அளித்து விட்டு மானாட மயிலாட கண்டு நம் கவலையை களையுவோம். இத்ற்க்கு ஒரே வழி கல்வியை மத்திய அரசின் திட்டத்துக்கு கீழ் கொண்டு வர வேண்டும்.http://www.blogger.com/post-edit.g?blogID=8803242748745605782&postID=508094286872031209