1 Jul 2010

சிங்கம்

சிங்கம் திரைப்படம்  என்னுடைய குழந்தையின்  வற்புறுத்தலால் நேற்று பார்க்க நேர்ந்தது.மேலும் சில காட்சிகள் எங்ளுடைய குடியிருப்புக்கு பக்கத்திலுள்ள நான்கு வழிச்சாலையில் எடுக்கபட்டது. படத்தில் வரும் பாட்டை பார்த்துடனே தரம் தெரிந்தது.(பாட்டு: எட்டி உதைப்பேன், மிதிப்பேன்.  பொலிஸ் என்றாலே அடிக்கணும், உதக்கனும் என  சட்டமா? காட்டுமிராண்டியா மாறியிட்டிருக்கோம்  எனதான்  இத்திரைபடங்கள் காட்டுகின்றது.


அதிலும் சூர்யா கொடுக்கும்  பாவனைகள் இருக்கே, கண்ணை உருட்டது,காலை தூக்குவது என எந்த நாகரிகவும் பின் பற்றாத படம். சமீப காலமா ஹீரோ பாத்திரங்களுக்கு  என்றே விவேக் ,வடிவேல் போன்ற எடுபிடிகள் போல், அவுஙக திட்டினாலும் அடிச்சாலும் வாங்கும் ஒரு தன்மான அற்ற,நாணம் அற்ற  ஒரு சமூகத்தை உருவாக்க துணிகின்றனர். பேருந்திலும் சரி பொதுஇடங்களில் இந்த நாகரிகம் அற்ற மொழிகளை தயக்க மின்றி வயது வித்தியாசம் இல்லாம பேச கத்து கொடுக்காங்க!இப்படங்கள் வழியாக!.
போன வாரம் சென்னை அம்பத்துரில் இருந்து தாம்பரத்திர்க்கு நெரிசாலான பேருந்தில் பயணம் செய்ய நேர்ந்தது. படியில் நின்று பயணித்துகொண்டே விடலை பசங்கள் அடிக்கும் கூத்தும் பேச்சும், அதற்க்கு ஈடு கொடுத்து  பெட்டை பெண்கள்  தமாஷ் ,அடி,கிள்ளுன்னு நெருக்கத்தில் பயணம் செய்த அலுப்பு தெரியாது என்னுடைய நிர்த்ததில் வந்து சேர்ந்தேன். ஒரு பைய்யன் கேட்கிறான் ஏய் மீணா, என் கூட வாரீயா,இடுப்புல வச்சு தூக்கிட்டு போறேன்,அதற்க்கு மீணா கூறும் பதில் ,டே உன்னால்  என்னை தூக்க முடியாது. இப்படி அப்படி சலிக்காம  நிர்த்தாம மாறி மாறி கொக்கி பொட்டு பேசி கிட்டே வாறாங்க.

அம்மாக்களும் சளச்சவங்க இல்லை, எங்க தெருவு பெண்கள் எல்லாம் இரவான கூட்டம் கூடி 10,11 மணிவரை பேசிகிட்டு இருப்பாங்க. எனக்கு ஒரு ஆர்வர் என்னவாக இருக்கும் பேச்சுன்னு. நானும் ஒரு மூன்று நாட்கள் போய் கூட்டத்தோடு உட்கார்ந்தேன். எல்லாம் படுக்கையறை, பக்கத்து வீட்டு பெண்களை பற்றியுள்ள தகாத கதைகள்.
விடலை பசங்க பேச்சை கேட்டு சிரிக்கலாம், இவுங்க பேச்சு ஒரே அருவருப்பாக இருந்தது.


தமிழ் படத்தை பார்ப்பதற்க்கு பதில் அழகான ஆங்கிலம் ,அரபி போன்ற வெளிநாட்டு திரைபடங்களை பார்க்க நமது மக்களை  உற்சாக படுத்தலாம்.ஆங்கில படம் என்றாலே பெண்கள் அணியும் ஆடைகளை நினைத்து சில அம்மாங்களுக்கு பயம் உண்டு.ஆனால் தேர்ந்து எடுத்து  பார்த்தால் மிகவும் நல்ல படங்கள் பிற மொழிகளில் தான் உண்டு .ஹிந்தி படங்ள் கூட நம்மவர் படங்ளை விட பரவாயில்லை.லொக்கேஷன் ,கதை என முன்னேறியுள்ளது.முத்த காட்சியை பற்றியும் அச்சம் கொள்ள தேவை இல்லை சுபம் என்று எழுதி கண்பிப்பதற்க்கு பதில் கடைசி காட்சியாக சேர்க்க பட்டிருக்கும். தமிழ் படத்தில கதாநாயகன்,நாயகி வரும்போது எல்லாம் இக்காட்சியால் நிறைக்க பட்டுள்ளது. பாடல் காட்சிகள் வரும் தமிழ் படம் கதாநாயகிகளை வைத்து பார்க்கும் போது  பயப்பட ஒன்றுமே இல்லை என தோன்றுகின்றது. சிங்கம் படத்தில் பாருங்க சூரியாவுக்கு சட்டக்கு மேல் ஒரு மேல் சட்டை. நிஜத்தில் நம் தமிழக ஆண்கள்  சட்டயே போடுவது கிடையாது பெரும் நேரங்களில். கதாநாயகிகளுக்கு உள் பாவாடை ,பனியன் தான் உடை!. தமன்னா, அனுஷ்கா  இவளுங்களுக்கு என்று தன்மானம்,சுரணை  இல்லயோ. பணம் பத்தும் செய்யும் தானே? அனுக்ஷா நடிக்கவா செய்யுது,ஒரே முறைப்பு தான். நார்னியா படத்தை தமிழில் எடுத்து நடிக்க வைக்கலாம்.பெண்களையும் ஒரு மனிதப்பிறவியா பார்க்காது அவர்களையும் மேஜை,கோப்பை,போன்ற ஜடப்பொருளாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.


சமூக புரட்சியாளர்களா ஆக விரும்பும்  ரஜினி, விஜயகாந்து, விஜய், சூர்யா என எல்லா நடிகர்களுக்குமே ஆடயற்றை பெண்களை தான் பிடித்துள்ளது போலும்
மேலும் ஈழபோருக்கு பின்பு சிங்கத்தை நினைத்தால் ராஜபட்சே தான் வருகின்றான்.தமிழ் சினிமாவிலோ சிங்கத்திடம் பாசப்பொழிவில்,சிங்கம்,பெண்சிங்கம்,இப்ப குட்டி சிங்க கதையை தாத்தா எழுதியிட்டு இருப்பாரோ? 



திரைப்படம் ஒரு மிக பெரிய கலை, கலைஞசர்கள் உருவாக்காது பணக்கார மூடனுகளிடம் இருந்தால் இப்படி தான் இருக்கும்.
முடிந்தால் இரான் படங்கள் Children Of Heaven, Baloon,Baran,Hindi movie-Tharee Zameen Par,Paa,English-Mighty Heart,Vertical limit,God Father,போன்ற திரைபடங்கள் பாருங்கள்.மக்கள் திருந்தாது மகேசர்கள் திருந்தபோவது சாத்தியமில்லை.

1 comment:

  1. //சமீப காலமா ஹீரோ பாத்திரங்களுக்கு என்றே விவேக் ,வடிவேல் போன்ற எடுபிடிகள், அவுஙக திட்டுநாலும் அடிச்சாலும் வாங்கி ஒரு தன்மான அற்ற ஒரு சமூகத்தை உருவாக்க துணிகின்றனர்.//

    இது அந்த காலத்துல இருந்தே இருக்கு மேடம்.

    எனக்கு தெரிஞ்சி தமிழ் படத்துலேயே நண்பன் பாத்திரம் நாயகனை டாமினேட் செய்வது நெஞ்சம் மறப்பதிலை படத்தில் மட்டும் தான். நண்பன், பேசும் போது அடிக்கடி நாயகனை "போடா ஃபூல்" என்பான்.

    //.....பற்றியுள்ள தகாத கதைகள்.
    விடலை பசங்க பேச்சை கேட்டு சிரிக்கலாம், இவுங்க பேச்சு ஒரே அருவருப்பாக இருந்தது.//
    Welcome to the real world.

    ReplyDelete