18 Jan 2026

அம்ம வீடுகள்!

 

திருவனந்தபுரத்தில் உள்ள அம்ம(அம்மா) வீடுகள்
திருவாங்கூர் மரபு மற்றும் நினைவுகளை தன்னகத்தே தாங்கி நிற்கும் இடங்களாக உருவெடுத்திருந்தன.
அம்ம வீடுகள் என்பது திருவாங்கூர் அரசர்களின் மனைவிகள் வசித்த இல்லங்கள் ஆகும்.
முக்கியமான நான்கு அம்ம வீடுகள்:
அருமன,
வடசேரி,
திருவட்டாறு மற்றும் நாகர்கோவில் அம்ம வீடு ஆகும்.
17 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இந்த நான்கு அம்ம வீடுகள் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. பின்பு இவை கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரத்திற்கு இடம்பெயர்க்கப்பட்டன.
கார்த்திக திருநாள் (1758–1798) மகாராஜா அருமன, வடசேரி, திருவட்டாறு மற்றும் நாகர்கோவில் குடும்பங்களில் இருந்து வெவ்வேறு காலங்களில் நான்கு பெண்களை திருமணம் செய்து இருந்தார். அவர்களுக்காக திருவனந்தபுரத்தில் அம்ம வீடுகளை கட்டினார்.
அம்ம வீடுகள் உருவானது, அரசர்களும் சமூகத்தில் செல்வாக்கு கொண்ட குழுக்களும் இடையே நல்லுறவை நிலைநாட்டும் அரசியல் தந்திரமாகவும், அரச அதிகாரமும் சொத்துகளும் அரச குடும்பத்திற்குள் தக்க வைக்கும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.
திருவாங்கூர் அரசர்கள் மருமக்கத்தாய முறை (சகோதரி மகன் ஆளும் முறை) பின்பற்றியதால், அரச வாரிசு அரசரின் சகோதரியின் பிள்ளைகளுக்கே உரியது.
அரசர்கள் திருமணம் செய்த பெண்கள் பெரும்பாலும் செல்வாக்கு கொண்ட நாயர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்
முன்னர் முதலியார் மற்றும் சைவ வேளாளர் பிள்ளை சமூகங்களும் இருந்தன;
ஸ்ரீ மூலம் திருநாள் காலத்திற்குப் பிறகு அனைவரும் நாயர் சமூகத்திலிருந்து வந்தனர். இவர்கள் ராணிகளாக அல்ல, “அம்மச்சிகள்” என அழைக்கப்பட்டனர். அவர்களுக்கு தனி இல்லம் உட்பட பல சிறப்புரிமைகள் வழங்கப்பட்டன.
சமூக ஆதிக்கம் கொண்ட குழுக்களின் ஆதரவைப் பெற அரச குடும்பம் மேற்கொண்ட இத்தகைய நடவடிக்கைகளே அம்ம வீடுகள் உருவாகவும் வளரவும் காரணமாகின.
திருவனந்தபுரத்தின் மேற்கு கோட்டை வளாகத்தைச் சுற்றி நான்கு முக்கியன அமைந்துள்ளன.
அவை:
அருமன அம்மா வீடு
நாகர்கோவில் அம்ம வீடு
வடசேரி அம்ம வீடு
திருவட்டாறு அம்ம வீடு
இவை அனைத்தும் கார்த்திகை திருநாள் இராம வர்மா ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை.
கார்த்திகை திருநாளின் முதல் மனைவி காளி அம்மா நாகமணி அம்மா நாகர்கோவிலைச் சேர்ந்தவர்.
இரண்டாம், மூன்றாம், நான்காம் மனைவிகள் முறையே வடசேரி, அருமன, திருவட்டாறு ஆகிய இடங்களைச் சேர்ந்தவர்கள்.
இதற்கு இணையாக முக்கியத்துவம் வாய்ந்த மற்றொரு அம்ம வீடு தஞ்சாவூர் அம்ம வீடு (அல்லது வடசேரி படிஞ்ஞரே அம்மா வீடு) ஆகும். இதில் ஒரு பழைய எட்டுக்கட்டு மற்றும் ஒரு பெரிய இரு மாடிக் கட்டிடம் என இரண்டு கட்டிடங்கள் உள்ளன. தஞ்சாவூர் அம்ம வீடு தனித்துவம் கொண்டதாகத் தோன்றினாலும், அது வடசேரி வளாகத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது.
காலப்போக்கில் அரச மரபு மங்கியபோதும், மேற்கு கோட்டையின் ஆறாற்று சாலையை ஒட்டி அமைந்துள்ள இக்கட்டிடங்கள் இன்றும் , திருவாங்கூர் வரலாற்றின் ஒரு பகுதியை அமைதியாக எதிரொலிக்கின்றன.
மேற்கண்ட முக்கிய அம்மா வீடுகளுக்கு அப்பால், அரசரின் சகோதரர்களின் மனைவிகள் வசித்த சிறிய அம்ம வீடுகளும் உள்ளன.
அவை:
இரணியல் (அல்லது புளிமூட்டில்) அம்மவீடு
பங்களாவில்
அம்ம வீடு
கரமன புத்துமன அம்ம வீடு
கல்லடா அம்ம வீடு
கல்லம்பள்ளி அம்ம வீடு
ஸ்ரீவராகம் தளகுளத் அம்ம வீடு
முப்படிக்க அம்ம வீடு
இவற்றில் பெரும்பாலானவை இன்று சிதிலமடைந்தோ அல்லது நவீன தேவைகளுக்கேற்ப மறுகட்டமைக்கப்பட்டோ, தங்கள் மூல கட்டிடக்கலை வடிவத்தை இழந்துள்ளன.
அருமன, வடசேரி, திருவட்டாறு, நாகர்கோவில் மற்றும் தஞ்சாவூர் அம்மா வீடுகள் தங்கள் கட்டிடக் கம்பீரமும், திருவாங்கூர் வரலாற்றுடன் உள்ள தொடர்பும் காரணமாக, கேரள அரசு அங்கீகரித்த மாவட்ட வாரியான பாரம்பரியக் கட்டிடப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. 2008 பிப்ரவரி மாதத்தில் நகர மற்றும் கிராமத் திட்டமிடல் துறை தயாரித்த ஆவணங்களிலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன.
அருமன அம்ம வீடு,
முக்கிய அம்ம வீடுகளில் ஒன்றான அருமண அம்ம வீடு, கார்த்திகை திருநாள் இராம வர்மா (1758–1798), அவிட்டம் திருநாள் பாலராம வர்மா (1798–1810) மற்றும் ஸ்ரீ விஷாகம் திருநாள் இராம வர்மா (1880–1885) ஆகியோரின் துணைவியர் வசித்த இல்லமாக இருந்தது.
பெயரில் குறிப்பிட்டு இருப்பது போல, அருமன அம்ம வீடு கன்னியாகுமரி மாவட்டம், விளவன்கோடு தாலுகா, ஆற்றூர் பகுதியில் உள்ள அருமன குடும்பத்தைச் சேர்ந்தது. மற்ற அம்மா வீடுகளிலிருந்து அருமன அம்ம வீடு தனித்துவம் பெறுவதற்கு காரணம், வரலாற்று நபர்களைத் தெய்வமாக வழிபடும் மரபு ஆகும். இங்கு இரவிக்குட்டி பிள்ளை என்பவரின் சிலை இருந்தது; அவரை இளங்கத்து அப்புப்பன் என வழிபட்டனர்.
இரவிக்குட்டி பிள்ளை, கல்குளத்தை ஆட்சி செய்த ரவி வர்ம குலசேகரரின் மகன் என நம்பப்படுகிறது.
ஆவிகளை அழைக்கும் வேச்சுப்பூஜை மரபு, அருமன அம்ம வீட்டைத் தவிர வேறு எந்த அம்ம வீட்டிலும் இல்லை என்கின்றனர். விளவன்கோடு தாலுகாவில் இருந்த பழைய அம்ம வீடு விற்றபோது, அந்தச் சிலைகள் பெருந்தண்ணியில் உள்ள அருமன அம்ம வீடு வளாகத்திலுள்ள கணபதி கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன” என
கூறப்படுகிறது.
கணபதி கோவில் 1078 கி.பி.-இல் பூஞ்சாட்டுடைய பெருமாள் பாண்டிய பூபதி என அறியப்பட்ட ராம வர்ம வலிய கோயி ராஜா அவர்களால் கட்டப்பட்டது. மடத்தில் கணபதி என்றும் அழைக்கப்படும் இக்கோவில், அருமன அம்மா வீட்டிற்கு இணையான பழமையைக் கொண்டதாகக் கருதப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் உள்ள அருமன அம்ம வீட்டை “பெருந்தண்ணி மடம்” எனவும் குறிப்பிடுகின்றனர்.
மேற்கு கோட்டைக்கு அருகிலுள்ள பெருந்தண்ணியில் அமைந்துள்ள இந்தக் கட்டிடம், ஆறாட்டு சாலையை நோக்கி நிற்கும் மூன்று மாடி மையக் கட்டிடத்துடன் தன் தனித்துவ தோற்றத்தை இன்றும் காத்திருக்கிறது.
வளைவான நுழைவாயில்களுடன் கூடிய மையக் கட்டிடம் காலனித்துவ (பிரிட்டிஷ்) பாணியில், ஓடு கூரையுடன் உள்ள இணைப்புக் கட்டிடம் பாரம்பரிய கேரள கட்டிடக்கலை பாணியில் அமைந்துள்ளது. இவ்வாறு, அருமண அம்ம வீடு பிரிட்டிஷ் மற்றும் கேரள கட்டிடக்கலை பாணிகளின் கலவையாக விளங்குகிறது.
1858 ஆம் ஆண்டில் இளவரசர் விசாகம் திருநாள் ராம வர்மர் அவர்கள் தனது மனைவி பாரதி லக்ஷ்மி பிள்ளை அம்மச்சி அவர்களுக்காக மறுசீரமைக்கப்பட்டது. அருமன அம்மவீட்டின் கட்டிடக்கலை, மகாராஜா விசாகம் திருநாளின் வாசஸ்தலமான அனந்த விலாசம் அரண்மனையின் பாணியை பிரதிபலிக்கிறது. தூண்கள் மற்றும் வரண்டாவில் காணப்படும் தனித்துவமான பொறிப்புகள் இதற்குச் சான்றாகும்.
ஆட்சியிலிருந்த மகாராஜாக்களின் திருமணங்கள் பெரும்பாலும் அம்மவீடுகளில் ஒன்றைச் சேர்ந்த மணமகள்களுடன் நடைபெறுவது வழக்கமாக இருந்தது. திருமணத்திற்குப் பிறகும், அந்த மனைவிகள் அரசரின் மெருகுடனும் வைபவத்துடனும் தங்கள் குடும்பங்களைச் சந்திக்க வருகை தந்தனர். முக்கியமான பண்டிகை காலங்களில் அருமன அம்மவீட்டில் பிரமாண்டமான விழாக்களும் பண்பாட்டு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டிருந்தன.
சுதந்திரத்திற்குப் பிந்தையும் அரசாட்சி முடிவடைந்த பின்னரும், அம்மவீடு குடும்பத்தைச் சேர்ந்த பல சிறப்பு பெற்ற ஆளுமைகள் நீண்ட ஆண்டுகள் அருமன அம்மவீட்டில் வசித்து வந்தனர்.
இன்றைக்கு, தனது மிளிரும் புதிய வடிவில் வில்லா மாயாவாக விளங்கும் இந்த இடம், பாரம்பரிய கட்டிடக்கலையையும் பண்பாட்டு பாணி உணவுப் பண்பாட்டையும் தொடர்ந்து பாதுகாத்து வருகிறது. இதிலிருந்து உருவான நுட்பமான வாழ்வியல் பாணி, ஒரு மகத்தான வரலாற்று மரபை பிரதிபலிக்கிறது.
தற்போது
முத்தூட் பாப்பச்சன் குழுமம் நடத்தும் உயர்தர உணவகம் வில்லா மாயா, ஆக மாறி அமைதியின் உலகுக்குள் அழைத்துச் செல்லும் வகையில் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட, ருசியான உணவு வழங்கும் இடமாக திகழ்கிறது.
மாயா வில்லாஸ் (Maya Villas)” என்ற பெயர் பல இடங்களை குறிக்கக்கூடும். ஆனால் அதில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது இந்தியாவின் திருவனந்தபுரத்தில் உள்ள ‘வில்லா மாயா (Villa Maya)’ ஆகும்.

0 Comments:

Post a Comment