ஜெயகாந்தன் புத்தகம் வாசிக்க வேண்டும் என்ற பல நாள் ஆசை! அப்படி தான் இந்த நாவலை எங்கள் கல்லூரி நூலகத்தில் இருந்து எடுத்து சென்றிருந்தேன்.
இரு நாட்களில் வாசித்து முடித்தாகி விட்டது. துவக்கம் அருமையாக இருந்தது. கதை முடிச்சுக்கள் நகர்ந்து கொண்டே இருந்தது. முடிவு என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் மேலோங்க இரண்டு நாட்களில் படித்து முடித்தாச்சு. இதுவே எழுத்தாளர்களின் வெற்றியும். வாசிப்பவனுக்கு ஒரு எதிர்பார்ப்பை கொடுத்து, நகத்தி கொண்டே போவது. வாசித்து முடித்த போது உப்பும் உறப்புமற்று “சப்’என்று இருந்தது தான் ஏமாற்றம்.
இதில் இன்னும் ஒரு சிறப்பு இந்த கதை ஜெயகாந்தனால் படமாக்கப்பட்டு 1964 ல் வெளியாகி இந்திய ஜனாதிபதியிடம் இருந்து விருதும் பெற்றுள்ளது. காமராசரே கூறியிருந்தாராம் இது ’அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம்’ என்று. என்ன வகையில் இந்த கதை சிறப்பு என்று தான்தெரிய இல்லை!
கதாப்பாத்திர படைப்பை எடுத்து கொண்டாலும் 'சிட்டி பாபு' என்ற 12 வயது சிறுவனுக்கு கொடுத்த மரியாதையில் துளி கூட 'தங்கம்' என்ற தாய் கதாப்பாத்திரத்திற்கு கொடுக்கவில்லை. அந்த பெண் யாரும் நெறுங்க இயலா தீயாக இருந்தார், என்னேரவும் உழைத்தார் என்று புகழும் அளவிற்கு அறிவோடு இருந்தார் , என கதாப்பாத்திரத்தை கட்டமைக்கவில்லை.
தங்கம் நேர்மையை பற்றி கதாசிரியர் பல இடங்களில் கூறியிருப்பார். ஒரு வளரும் பையனின் பொறுப்பான அம்மாவாக இருக்கும் தங்கம் தன் மகனின் மனதை மாற்றாது இன்னொரு குழந்தைக்கு அம்மாவாகினதே சிறுப்பிள்ளைத்தனம் . சிட்டியை முகவரி இல்லாத ஒருவனுக்கு பெறுகிறார் அடுத்து அதை விட பாதகமாக ஒரு மகளை இன்னொரு முகவரியற்றவனுக்கு பெற்று கொடுக்கிறார்.
சேர்ந்து வாழ்வதில் தாலிகட்டும் முன்னே குழந்தை உருவாக்குவதில் இருக்கும் சிக்கலை பெண்கள் இழக்க போகும் சட்டஉரிமை பாதுகாப்பை பற்றி கூறாமல் இதை ஒழுக்கம், உணர்வு சார்ந்த நிலையில் நகர வைத்துள்ளார். அந்த பெண்ணுக்கு ; ஐந்து மாதம் கள்ள தொடுப்பாக இருக்கும் போது எழாத பல பிரச்சினைகள், ஒரு ஆண் மகனுக்கு மட்டும் மனைவியாக வாழ வீட்டிற்கு அழைத்து வரும் போது எழுகிறது.

மகன் 12 வயதுற்கு மீறின பக்குவவும் சிந்தனையும் அடவடித்தனவும் வன்மவும். ஆனால் அம்மாவை மட்டும் புரிந்து கொள்ள இயலா மனம். நான் ஏன் என் வீட்டை விட்டு போகனும் என பொருளுற்கு சொந்தம் கொண்டாடும் மகன், பெற்று வளர்த்தின அம்மாவை வெறுத்து, மறந்து விடுவான். அம்மா என்ற உயிரின் உரிமையை மறுத்து விடுவான்..அம்மாவிடம் வஞ்சம் தீர்க்க எடுத்த திட்டத்தில் புதிதாக வந்தவனை விரட்டி விட்டு, விட்டு சாப்பாட்டுக்காக வேலைக்கு போகும் அம்மாவை இகழ்ச்சியோடு பார்த்த மனநிலை, எத்தன கெட்ட வார்த்தைகள் தாய்க்கு எதிராக பிரயோகிக்கும் மனநிலை.கணவனை விட்டு விட்டு மன்னாருடன் ஓடி வந்த பக்கத்து வீட்டு அலமேலு வார்த்தையை கூட நம்பும் மகன் அம்மாவை நம்பவில்லை மன்னிக்க வில்லை.
சிட்டியினால், கேவலமான வாழ்க்கை வாழும் கன்னியப்பன் கூட திருந்துகிறானாம். ஆனால் சிட்டியை விட கன்னியப்பன் பல இடங்களில் மனித பண்பு உள்ளவனாக மனிதர்களை/பெரியவர்களை மதிப்பவனாக மிளிர்கிறான்.
வெறும் 16 வயதில் வாழ்க்கையை தொலைத்த பெண் ஒருவனுக்கு ஊர் உலகம் அறிய மனைவியாக இருக்க நினைத்தது அப்படி பெரிய தவறா?
தங்கத்தின் மாணிக்கத்துடனான உறவைக்கூட உடல் சுகத்திற்கான என்பது போல் எழுதி முடித்துள்ளார் ஜெயகாந்தன்.
காதலனாகவும் மகனாகவும் அண்ணனாகவும் பல உருவத்திலுள்ள ஆணாதிக்கத்தையும் எதிர் கொண்ட தங்கம் மரித்து போகுவது ஆணாத்திக்கததை எதிர்கொள்ளும் பெண்ணின் முடிவு மரணம் என்று அறுதியிட்டு கூறுவது போல் உள்ளது.
ஒரு பெண்ணின் அவலமான முடிவிற்கு நேரடியாகவோ மறைமுகமகவோ காரணமான மகனுக்கோ, இடையில் வந்து சேர்ந்த மாணிக்கத்திற்கோ எந்த இடத்திலும் பட்சாதாபமில்லை. தாயை மதிக்காதவன் தாய்க்கு பிறந்த குழந்தைக்கு அண்ணனாக மாறுவதுடன் அந்த கதாப்பாத்திரம் எல்லா புனிதவும் பெறுகிறது. கடைசியாக ஒரு உரையாடலையும் கதாசிரியர் விட்டு வைக்கவில்லை, “ எனக்கு அண்ணன் இல்லாததால் கட்டுபடுத்த ஆள் இல்லாததால் என் வாழ்க்கை சீர் கெட்டது. உன் பாதுகாப்பில் உன் தங்கையை கட்டுப்படுத்து வளர்த்து என்று.
பிடிக்காது பிறந்த குழந்தையை அப்புறப்படுத்தி; தங்கவும் மகனும் மறுபடியும் சேருவது போலவும், பழையது போல தங்கம் வேலை செய்து சந்தோஷமாக வாழ்கிறாள் என காட்டியிருக்கலாம். கதாசிரியருக்கு தங்கத்தை சாகடிப்பது தான் புரட்சி எழுத்தாக நினைக்கிறார்
பழைக காலங்களில் வீடுகளில் 10 -12 ம் குழந்தைகள் இருந்த வீட்டில் பதின்ம வயது குழந்தைகள் வளரும் போதே தாய்மார்கள் புது குழந்தைகளை பெற்று வளர்ப்பது சாதாரணமானதே.. மேலும் சிட்டி பாபு குடும்பம் வசிக்கும் தெரு வரிசை வீடுகளாக சராசரிக்கும் தாழ்நிலையில் வாழ்க்கை தரம் கொண்ட மக்கள் வசிக்கும் பகுதியாக இருக்கும். அங்கு இருக்கும் மனிதர்களே அன்னம்மா பாட்டி மாதிரி மனது விசாலமானவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படி இருக்க சிட்டி தாயின் மேல் கொள்ளும் உரிமை; பாசத்தை தொலைத்த ஒரு வகையான உடமைப்படுத்தலையே கூறியுள்ளது. தாய் என்றால் மகன் விருப்பத்திற்காக தன்உணர்வுகளை மறுதலித்து மகனுக்காக வாழும் ஜீவன் என்ற புனைவு எந்த வகையான சமூக முன்னேற்றம் கொண்டு வரும்.
ஜெயகாந்தன் எழுத்துக்கள் சமூகத்தில் பெரும் தாக்கததை ஏற்படுத்தி இருந்ததவை என வாசிக்கையில், தமிழ்ச் சமூகத்தின் இரண்டு தலைமுறைகளை ஆட்டிப்படைத்த கதை சொல்லி
எந்த வகையான தாக்கத்தை ஏற்படுத்தி வந்தார் என்பதே கேள்வி?
கன்னியப்பன் என்ற கதாப்பாத்திரம் கூறும் வார்த்தைகள் “ பொம்பளைகளே மோசம்டா... எங்க அம்மாவும் இப்படி தான்.... உங்க அம்மாவும் இப்படி தான். ஆனால் இந்த பசங்க துண்டு பீடி பொறுக்கி தின்னும் காவாலி பசங்க. அடுத்து சிட்டி வீட்டிற்கு போவான் தாய் கதவை திறந்து வெளியே வருவார். அவள் தலையில் சூடியிருக்கும் மல்லிகை பூ மணம் இவனுக்கு நாற்றமெடுப்பதாக தோன்ற்றும், ஒரு குழந்தையை வகிக்கும் அவள் வயிறு அருவருப்பை கொடுக்கும்.
ஜெயகாந்தன் போன்ற முற்போக்கு வாதிகள் இந்த மனநிலைக்கு பதிலான ஒரு மேன்மையான மனநிலையை தங்கள் கருத்துக்களை இளம் சமுதாயம் மேல் பரவ விடவில்லை. இதனால் தான் பெண் உடலை இன்றும் இச்சையோடும் அருவருப்போடும் பொருளாகவும், அணுகுவதை தவிற்து பெண் உடலுக்கு பின் இருக்கும் மனதை இது போன்ற எழுத்தாள்ர்கள் தன் எழுத்து ஊடாக வெளிப்படுத்தவில்லை.
மாணிக்கத்துடன் சயனித்து விட்டு, தங்கம் மனநிலைகளை எழுத்தாளர் விவரித்திருப்பார். எல்லாம் ஒரு வகையான தற்கொலைக்கு சமமான் எதிர்மறை எண்ணங்களால் தங்கம் பேசிக்கொண்டிருப்பார், ஆனால் மாணிக்கமோ சுகத்தின் உச்சியில் வாழ்க்கையை ரசித்து கொண்டு இருப்பான். அந்த சுயநலம் பிடித்த பொறுப்பற்ற மாணிக்கவும் அம்மாவையும் பையனையும் சேர்த்து வைத்து புனிதராக மாற்றியிருப்பார் ஆசிரியர். பக்கத்து வீட்டு அலமேலு கூட குழந்தையை கையில் வாங்குவதுடன் புனிதத்தன்மை அடைந்திருப்பார்.

ஜெயகாந்தனின் உண்மை வாழ்க்கையில் இரு மனைவிகள், இரு மகள்கள் என வாழ்ந்து வந்தவருக்கு தங்கத்திற்கு இரண்டாம் கணவர் என்ற விருப்பதை தன் கதையூடாக கரி தேய்த்து பெண் வாழ வேண்டும் என்றால் பெண் ஒழுக்கம் என்றால் முகவரி தெரியாத ஒருவனுக்கு பெற்ற மகனாக இருந்தாலும் மகனுக்கு பணிவிடை செய்து சொச்ச காலத்தை கடந்து போக வேண்டும் என்ற உபதேசத்துடன் கதை முடிகிறது.
ரஜனிகாந்த் நடிப்பில் தன் திரைப்படங்களில் உரையாடல்கள் வழி எப்படி பெண்களை ஆண்களுக்கு தாழ்ந்த கதாப்பாத்திரங்களாக கட்டமைத்தாரோ அதையே தான் ஜெயகாந்தனும் செய்து வந்துள்ளார்.
0 Comments:
Post a Comment