31 Dec 2019

90 ஸ் தோழமை!

27 வருடங்களுக்கு பின்பு சந்தித்த பள்ளி தோழமைகள்.

 நாங்க முகம் பார்த்து பேசினது நாலாம் வகுப்பு வரை தான். ஏழாம் வகுப்பு வரை நீயா நானா என சண்டையிட்டு, மாறி மாறி ஆசிரியர்களிடம் மூட்டி விட்டு அடிவாங்கி கொடுத்த நாட்கள்.

 அடுத்த 3 வருடம் ஒளித்தும் மறைந்து பார்த்தும், பார்த்தும் பார்க்காதது மாதிரி,  கேலி பேசி ரோட்டின் இருவோரம் நடந்து சென்ற நட்புகள்.  பெண்களுக்கு ஒரு வழி என்றால் ஆண் மாணவர்களுக்கு இன்னொரு வழி . அவன் வகுப்பை கடந்து போனால் கூட, கொஞ்சம் கூட எட்டி பார்க்காமா கெத்தா எட்டு வைத்து நடக்க...
என்னடா பெரிய இவளுகளாட்டும் திமிறா போறா,
அவ பாவம்டா, அவ கூட போறா பாரு....
பெரிய உலக அழகிக....
அது விடு உனக்கு கிடைத்த காதல் கடிதத்தை எடு என ஒன்றாய் இருந்து வாசித்து கொண்டு
அந்த ஓட்டை ஓலப்பள்ளியில் இருந்து எட்டி பார்த்து கொண்டிருந்த மாணவர்கள்.

என்னடா இந்திரா காந்தி எப்படி இருக்கா? போம்மா இப்ப இதை கேட்டுகிட்டு. ஏன் பொண்டாட்டிட அடி வாங்கி தராம விட மாட்டே....

ஏய் அந்த தேயிலப்புர ஷெட்டு தானா....
 அப்புறம். என்ன அப்புறம். அவ வெளிநாட்டுல செட்டில் ஆயிட்டா
அப்போது அதையும் தெரிந்து வைத்திருக்க
ஏய் துபாயில் இருந்து வந்த சாபு சொன்னாமா
அப்ப நீ கேட்ட
விடுமா தாயே...
 அப்புறம்... நீ என்னடா படிக்கும் போது கிறிஸ்தவ சாமியாரா போகப்போறேன்னே....
யே ...அது விடு.
 இவ தான் என் மனைவி , இரண்டு ஆண் பிள்ளைகப்பா அடுத்து ஒரு பெண் பிள்ளைக்காக ஏங்கிட்டு இருக்கோம்.
என்னடா அனியாயம்... இனியும் ஏங்கிட்டு இருக்கியா ,
 டே கொல்லாதடா  நாங்கல்லாம் பேரப்பிள்ளைகளுக்காக ஏங்கிட்டு இருக்கோம்.

உன் விரலை காட்டு. எங்க வீட்டுக்கு டுயூஷன் படிக்க வந்த போது தானே தையல் மிஷனில் கைய விட்ட.
ஆமாப்பா இன்னும் அந்த தளும்பு இருக்கு பாரு...

என்ன மோனி ஒல்லி குச்சானா வெள்ளை வேட்டியை  ஒரு பக்க தும்ப மட்டும் பிடித்து கொண்டு ஈ ....ன்னு எங்க வகுப்பையே பார்த்துட்டு நிப்பயே?
நீ போம்மா  அத நினைக்குத மாதிரியா நிலைவரம். பொண்ணு காலேஜுல படிக்கா பையன் + 2 வில். .....
மோனி அந்த ரகசியத்தை தான் சொல்லி தொலையேன்.
அது அந்த உங்க வகுப்புல இருந்தாளே நெற்றில சந்தனம் வச்சு தலை முடியை விரிச்சு போட்டு வருவாளே....
அவ பேரு தான் மறந்திட்டு....

பொய் சொல்லாத அந்த ஷீலப்புள்ளை தானே?

நம்ம வகுப்புல அமர காதலுமா ஒருத்தன் இருந்தானே . சாரிடம் அடி வாங்குனானே..
அவனா....அவந்தான் குடிச்சு குடிச்சே செத்து போயிட்டானே
போன வருடம்.
இஸ்மாயில் தான் என்னன்னா கனவோடு இருந்தான். ரொம்ப கஷ்டபட்டு பட்டம் முடித்து அரசு தேர்வுலையும் தேர்வாகி ....அழகான இரண்டு சின்ன  பிள்ளைகளை விட்டுட்டுல்ல அந்த விபத்துல போயிட்டான்.
உன்னை தான்டா மறக்க முடியாது நீ மொறைக்கா நான் மொறைக்கா அந்த  பள்ளிமாணவர்கள் இலக்ஷன்ல என்ன தோற்கடிக்க என்னமா வேலை பார்த்தே...
அதை விடும்மா
அதை சமரசம் செய்ய தானே ஆரஞ்சு மிட்டாய் கொண்டு உன் கையில தந்தேன்.
இப்பவும் கவிதை எழுதுதையா
காதல்கடிதம் எழுதி கொடுத்து மாட்டினீயே
ஆமாம்மா உங்க கூட்டத்தில இருந்தவா தானே?
அப்புறவும் எழுதி கொடுத்து கொண்டு தான் இருந்தேன்... ஆனால் வேறு பிள்ளைக்கு

என்னம்மா இப்படி குண்டாயிட்டா?
மெலிய வீட்டுல மிஷின் வாங்கி போட்டுருக்காராம் கணவர், துபாய் பயணம் அழைத்து போகிறேன்னு சொல்லியிருக்காராம்.
ஆளுக்கு வேலை அப்புறம் தூக்கமாம்
என்னடி மாயா ஜாலம் 27 வருடத்திற்கு முன்பு பார்த்தது மாதிரியே இருக்கிறீக
என்ன மந்திரம்ப்பா...
உன் பொண்ணு உன்னை விடையும் அழகா பாடுதா
உங்க அப்பா மகிழ்ந்திருப்பாரே
நம்ம டான்ஸ் போட்டிக்கு உங்க அப்பா பாடுவார் பாரு இன்னும் மறக்கல

ஏன் அஜி வரலையாம்
அவனுக்கு லீவ் கிடைக்கலையாம்ப்பா
அன்று யாரிடவும் பேசாது மேரிகூடவே நடந்து போவாளே அவளாப்பா இது...நம்பவ முடியல
 அதுல ஒருத்தன் ஒருத்தியிடம் உனக்கு ஒரு உடாய்பு இருந்ததாமே
இது எவன்டா கிளப்பி விட்டது
யே....உண்மையை சொல்லு...
மனசுல கொஞ்சூண்டு அந்த ஓரத்துல
அவனுக்கு போன போடு கேட்டா போச்சு
அவனும் வீடியோ காள்ல வந்தான்
என்னடா இவனுக எல்லாம் உனக்கு காதல் இருந்துன்னு சொல்லுதானுக...
ஐய்யோ அம்மா அப்படி ஒன்னும் இருந்தது இல்லையேன்னு தலைதெறிக்க ஓட
நாங்ல்லாம் கேட்டவன பார்த்து இப்ப நம்புனையா கேனப்பயலேன்னு திட்ட

றீனா..... நம்ம ஆறாம் வகுப்புல நீ சொன்ன கதை ஞாபகம் இருக்காடி....

எந்த கதை?....அந்த கதையா
விடுப்பா அதை போய் இன்னுமா ஞாபகம் வச்சிருக்க...
நம்ம அப்படியே பருந்தன் பாற போவோமா. நம்ம தோழி திரேசாவிற்கு ஆச்சரிய விசிட் கொடுப்போம்.
நீயும் நானும் சண்டை பிடிக்கது கட்சிக்கு தானே
இப்போது எந்த அரசியலில் இருக்கே?

உனக்கு தெரியுமே நான் கேஎஸ்யூன்னு பின்பு
காங்கிரசில் இருந்தேன் இப்போது எந்த கட்சியிலும் இல்லை
நீயும் அஜியும் தானே முகநூலில் சண்டை போடுதீக
அவன் தான் கம்னீஸ்டுன்னு பேசுவான்ப்பா
ஆர்மி அனிலிடவும் வாக்கவாதம் தான்
அவன் சரியான சங்கி வெறியன்ப்பா
மைசூரில் இவனும் பிஜெபி
ஜிம்மி நீ எந்த கட்சி ?
நான் ஜெயிக்குத கட்சியில இருப்பேன்மா
நீ எப்பவும் அப்படி தானே
ஆமாப்பா பிழைத்து போக வேண்டாமா
பள்ளியில் படிக்கே ஒரே சட்டையை வைத்து கொண்டு கலர் பொடியில் முக்கி காய வைத்து கலர் கலரா சட்ட போட்டு வந்தவனாக்கும்
இப்போது நான் இருக்கும் வீடு கோடிக்கு பெறும்
ஷூபா உன்னை பார்த்தால் நம்ம அம்மினிக் குட்டியம்மா டீச்சர் மாலிரி இருக்க....
விடுங்கடி
கடந்த வருடம் இதே நாள் காலையில் இருந்து மாலை வரை 90 Batch  இவ்வாறாக பேசியும் சிரித்தும் பயணித்துக் கொண்டிருந்தோம்.

அன்று, நாங்க பிரிந்த போது இருந்த வயதில் இருந்த பிள்ளைகள் நாங்கள் மகிழ்வதை கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தனர்

எங்களை கடைசிவரை சூரல் கம்பின் துணையுடன் பேச ஏன் பார்க்கவே அனுமதிக்காது இருந்த லக்ஷ்மி குட்டியம்மா முதன்மை ஆசிரியர் இருந்திருந்தால் இந்த பச்ச பாசமலர் புள்ளைகளையா புரிந்து கொள்ளாமலே இருந்தோம்ன்னு நிச்சயமாக வருந்தியிருப்பார்கள்.

0 Comments:

Post a Comment