22 Mar 2020

செல்லம்மாள் நினைவுக் குறிப்புகள். 1920- 2016


தனது தாயாரின் நினைவை பேண, மகள் காலச்சுவடு பதிப்பகம் ஊடாக வெளியிட்ட புத்தகம் இது. பதிப்பாசிரியர் அம்பை. 2017 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. கதை ஆசிரியை அமைதியான ஒதுங்கிய குணம் படைத்தவர். ஆதலால் தங்களுக்கு அவர் உள்ளக்கிடக்கையை புரிந்து கொள்ளவில்லை இன்னும் அங்கீகரித்து இருந்திருக்கவாம் என நாலாவது மகள் குறிப்பிட்டுள்ளார்

ஒரு பெண் தனது 16 வது வயதில் கொஞ்சம் வசதி வாய்ப்பு குறைந்த நாகர்கோயிலில் ( கரமனை) வீட்டில்  இருந்து  வசதியான வழக்கறிஞர் வீட்டில் திருமணமாகி திருவனந்தபுரம் வந்து சேர்கிறார். நாலு குழந்தைகளுக்கு தாயார் பொறுப்பான அம்மா , மனைவியாக வாழ்ந்தவர் தன்னுடைய மணவாழ்க்கையை பற்றி தான் எதிர் கொண்ட பிரச்சினைகளை எழுதி வைத்துள்ளார்.

இப்புத்தகம் ஊடாக நாம் அறிவது பிராமணர்களின் வாழ்க்கை சூழல் , கூட்டு ஜீவிதம், அவர்கள் பண்பாட்டு தள ஆசாரங்கள் , உறவு முறைகள் , குடும்ப அமைப்பின் மேல் சாதாரண பெண்கள் எழுப்பும் கேள்விகள், குடும்ப அமைப்பு, உற்றார் உறவினர் உறவுகளால்  பெண்கள் பாதிக்கும் விதம்.

சுவாரசியமான சில நிகழ்வுகளை அறிய முடிகிறது. பருவம் எய்வதற்கு முன்பே திருமணம் ஆகி கணவர் வீடு செல்லும் வழக்கம் இருந்துள்ளது. பரும்ஆன பின்பு சாந்தி முகூர்த்தம் போன்ற இத்தியாதி சடங்குகள் வைத்துள்ளனர்.அந்த இடைப்பட்ட காலம் கணவரை ஒளிந்து பார்த்து பழகுவது.
திருமணம் ஆன புதிதில் கணவருக்கு காசநோய் வந்ததுள்ளது. , வீட்டிற்கு விருந்துக்கு வந்த வடிவு என்ற தோழி விதவையாகும் நிகழ்வை பற்றி பயமூட்டும் தகவல்கள் சொல்ல சொல்ல பயந்தே போய் விட்டார். வாழ்நாள் முழுதும் விதவை நிலையை பற்றி சிந்திப்பதும், விதவை நிலை அவரை துரத்துவதுமாக இருக்கிறது.
விதவைகளை பற்றி பல இடத்தில் குறிப்பிட்டு விசனப்பட்டுள்ளார். விதவைகளை நடத்தும் விதம் பற்றி பல இடங்களில் எழுதியுள்ளார். தனது அம்மா , பாட்டி , தனது தங்கை விதவையானதும் அவர்கள் மனப்பாங்கையும் பல இடங்களில் தெளிவுப்படுத்தியுள்ளார்.  தனது பாட்டியின் தெளிவான கருத்தும் அவருடைய சுதந்திரமான   சிந்தனைக்கு உதவுகிறது. இருப்பினும் அது ஒரு பய மனோபாவமாகவே (போஃபியாகவே) வாழ்க்கை நெடுக துரத்தியுள்ளது.
நல்ல நட்புகளை பேண இயன்றிருக்கிறது. சினிவாவிற்கு நண்பிகளுடன் தனியாக சென்று வந்தது தனக்கு கிடைத்த பணத்தை தன்னுடனே வைத்திருக்க இயன்றுள்ளது. ( இன்றையவேலைக்கு போகும் பெண்கள் கணக்கில் பணம் உள்ளதா , என்றும் கேட்டால் விளங்கும் இன்றைய நிலை பற்றி)

அடுத்து செல்லம்மா திருமணம் முடிந்து வந்த வீடு ஒரு பெரும் கூட்டுக்குடும்பம். மாமனார் பெயர் பெற்ற வழக்கறிஞர் அவர் மனைவி இறந்ததும் இரண்டாவது ஒரு பெண்ணை மணம் முடிக்கிறார். அந்த இரண்டாம் மனைவிக்கும் மாமனார் மகளுக்கும் ஒரே வயது என சங்கடப்படுகிறார். விதவை நிலை பூண்டதும் ஆண்கள் உடன் திருமணம் முடிப்பதும் பெண்களுக்கு சமூக கட்டுப்பாடு உள்ளதையும் கேள்வி எழுப்புகிறார்.
பிரபல பின்னனி பாடகி ஜானகியை முன் நிறுத்தி ஒரு கேள்வி எழுப்புகிறார், பின்பு அவரே ஒரு முடிவிற்கும் வருகிறார்.ஜானகி தனது கணவரை இழந்ததும் வெள்ளைச்சேலை கட்டி கொண்டு  பொட்டு வைக்காது நிகழ்ச்சிகளுக்கு பங்கு பெறுவதை எதனால் என்று சிந்ஹிப்பதும் இந்து மதத்தொல் தான் இது போன்ற பாகுபடு என சாடுகிறார். இவருடைய இந்து மத எதிர்ப்பை இவர் மகன், மகள் ஏற்று கொள்ளவில்லை என்றும் வருந்துகிறார்.

அடுத்து புகுந்த வீட்டிலுள்ள நாத்தனாரை பிடிக்கவே இல்லை இவருக்கு. நாத்தி நாத்தி என பல இடத்தில் குறிப்பிட்டுள்ளார். நாத்தி தான் தன் பெரிய மகளையும் மகனையும் வளர்த்ததாகவும் அதனால் அந்த குழந்தைகள் தன்னை மதிக்கவில்லை எனும் வருத்தம் கொள்கிறார்.

அடுத்து செல்லம்மாவின் பிறந்த வீடு .அங்கு 7 பிள்ளைகள். மீனா திருமணமாகி விதவையாகி தந்தை வீட்டில் திரும்பி வந்தவர். செல்லம்மாவை திருமணம் முடித்து கொடுப்பது மாப்பிள்ளை பெரிய படிப்பு படித்தவர் வெளிநாடு, வெளியூர் போய் மகளுக்கு நிறைய நகை நட்டு போட்டு ஆடம்பரமாக வைத்திருப்பார் என்பது தான். தாய்க்கு ஏமாற்றம் கொடுக்கிறது. மகளை தரம் கிடைக்கையில் எல்லாம் சுதாரித்து தனிக்குடித்தனம் போக பரிந்துரைக்கிறார்கள், புகுந்த வீட்டு ஜெனங்களை வசை பாடுகிறார்கள். தன் மருமகன் அப்பா பிள்ளையாக இருப்பதில் வருத்தம் மட்டுமல்ல தன் மகன் இன்னும் சாமர்த்தியமாக வாழவில்லை என்ற தவிப்பும் உள்ளது. இயன்றளவு மகள் வீட்டிற்கு போவதை தவிற்கின்றனர். குறிப்பாக  தனது கணவர்  மரணப்பட்ட பின்பு மகள் வீட்டிற்கு வருவதை குறிப்பாக, நாத்தனார் சீத்தா முகத்தை எதிர் கொள்ள விரும்பவில்லை.
ஒரு முறை செல்லம்மா தம்பதிகள் வீட்டில் மகனுக்கு பூணூல் இடும் விருந்து விசேஷம். தன் தாயாரை அழைக்கிறார். தாயாரோ நான் விதவைக்கோலத்தில் உன் வீட்டில் காலெடுத்து வைக்க மாட்டேன். உன் நாததினார் இளக்காரமாக நடத்துவார் என்கிறார். தாயை எவ்வளவோ பரிவாக அழைத்தும் அவர் பணத்தை கொடுதது அனுப்பி விடுவார்.
அடுத்து தன் நாத்தனார் சீத்தாவை அழைக்க வருவார். அவரோ உன் அம்மா வருவா என்னால் வர இயலாது என்பார். உடனே நாத்தனாரிடம் , எனது அம்மா வரமாட்டார் என அடித்து சொல்வார்.

அம்மாவும் வரவில்லை.  செல்லம்மா வீட்டில் நிகழ்ச்சி முடிந்ததும் எல்லோரும் தூங்க கிளம்புவர்கள். தன் கணவரிடம் என் அம்மா வரவில்லை என்பதை ஏன் நீங்கள் பெரிது படுத்தவில்லை என கணவரிடம்  சண்டைபிடிக்க வருவார். அவரோ பொருட்படுத்தாது என்க்கு தூங்கபோகவேண்டும் நாளை வழக்கு மன்றம செல்ல வேண்டும் என்பதை கூறி ஒதுங்கி கொள்வார்.  அன்றைய இரவு கணவர் எங்கு படுத்து தூங்கினார் என் குறிப்பிடுகிறார்.   அடுத்த ஒரு முறை ஒரே திரைப்படத்தை தோழிகளுடன்  இரண்டாவது முறையும் பார்த்து விட்டு திரும்புகையில் மாமனார் வசைபாடுவார். கணவரிடம் முறை இடுகையில் நீங்கள் ஏன் உங்கள் அப்பாவை திட்டக்கூடாது என்கிற போது நீ திருப்பி அப்பாவை திட்டு என்னால் என் அப்பாவை திட்ட ஏலாது. உங்க அப்பனை என்று கதைக்காதே என் கண்டித்து விட்டு செல்வார்.
செல்லாம்மாவிற்கு கணவர் நிறைய சம்பாதிக்க ஆரம்பித்த்தும் நாம் ஏன் தனிக்குடிதனம் போகக்கூடாது என கெடுபிடியாக நிற்பதும் அல்லது தன்னை நாகர்கோயிலில் தனியாக குழந்தைகளுடன்  குடியமர்த்த கூறுகையில் அது ஒரு போதும் சரி அல்ல என்று கணவர் மறுத்து விடுவதும் துக்கம் கொள்ள செய்யும்.

நல்ல துணிமணிகள் இல்லை என ஒருபுறம் கூறுகையில் 1500 ரூபாய் கையில் வைத்திருந்தாலும் 20 ரூபாய்க்கு  உடை எடுக்கும் சிக்கனக்காரி செல்லம்மாவையும் காணலாம்.
நாத்துனார் செய்முறை கேட்டார் என தனது தாயிடம் எனக்கு இரண்டு சவரன் கல் மாலை  செய்து தரக்கூறுவார். தாயோ உனக்கு இளைய பிள்ளைகள் இங்கு உண்டு. என்னால் தர இயலாது எனக்கூறி செல்லம்மாவிடம் உள்ள நகையை உருக்கி கழுத்து மாலை செய்து கொடுப்பதும். சில நேரம் இது என்ன செல்லம்மா? என கேட்க வைத்திடுவார்.   பின்பு செல்லம்மாள் ஒரு தாலியை தொலைக்க,  உருக்கி கல் மாலை செய்தது கணவர் வீட்டில்ல் தெர்ந்து கடிந்து கொண்டாலும் மாமியார்  தனது மாலையை கழுத்தில் அணிய கொடுத்திருப்பார்.  பின்பு செல்லம்மா தாயாரே நாலு சவரனுக்கு மாலை செய்து கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மகள் திருமணம் முடிந்த் பின்பு தாயார் கற்பவதியாகுவதும் தனக்க மகளுக்கும் தன் தங்கைக்கும் ஓரிரு மாதங்கள் இடவெலியுடன் வள்ர்வதும் சுவாரசியம். செல்லம்மா திருமணம் முடிந்ததும் இரு பிள்ளைகள் பிறக்க அந்த பிள்ளைகளுக்கு 21, உம் 19 உம் வயது இருக்கையில் தனது நாலாவது பிள்ளையை வேண்டும் என்றே பெற்று வளர்ப்பதும் அவருடைய மாற்றத்தை காட்டுகிறது. 16 முழம் மடிசார் சேலையில் இருந்து 9 முழம் தெலுங்கு சேலைக்கு மாறினதை  குடுமப உறுப்பினர்கள் முறுமுறுப்பையும் தாண்டி பெரும் சாதனையாக குறிப்பிட்டுள்ளார். 9 முழம் சேலையை கொள்ளாது தனக்கு வாசிக்க  உள்ளது என் கடந்து சென்றது பெரும் வலியை கொடுக்கிறது.

செல்லம்மாவின் மகள் அணிந்துரையில் தனது அம்மா தனது அத்தையை இத்தனை குறை கூறியிருந்தாலும் உயிருடன் இருக்கையில் தன் செயலில்  வெளிப்படித்தினது இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செல்லாம்மாவின் உள் மனதில் வேண்டிய பரிவும் காதலும் அரவளைப்பும் கணவரிடம் கிடைக்காததும்  கணவர் வீட்டார் தன்னை மதிக்காததும் பெரும் துயராகவே இருந்துள்ளது.
40 வயதிற்கு மேல் கார் வசதியான வாழ்க்கையை அம்மா பகிர்ந்து கொள்ளாததையும் மகள் ஆச்சரியத்தோடு பார்க்கிறார். செல்லம்மாவிற்கு தான் நல்ல வெள்ளையாகவும் தன் கணவர் கறுப்பாகவும் இருந்ததும் கொஞ்சம் மன் வருத்தம் தான். தன் கணவர் வீட்டாரை தவிர்த்து மற்றவகள் தன்னை அழகு என புகழ்வதையும் ரசிக்கிறார். தன அழகு அடையாளம் சார்ந்து தான் கண்டுகொள்ளப்படவில்லை என்றும் கணவர் தான் விரும்பினது மாதிரி தன்னை  மட்டும் நேசிக்கும் தனக்காக வாதாடும் கணவராக இருக்கவிலலி என்பதும் அவருக்கு ஏமாற்றம் தான்.

புத்தகம் முழுக்க செல்லாம்மாவின் மனத்தாங்கல்களூம் கேள்விகலூம் வருத்தங்கலும் தான்.
செல்லாம்மாவிற்கான நல்ல சுதந்திர சூழலும் பரிவான சூழலும் இருந்தும் சில வரட்டு பிடிவாதங்களால் வாழ்க்கையை அன்ய்பவிக்காது கேள்வியோடே நகத்தி சென்ற வாழ்க்கை அத்துணை ஆரோக்கியமான முன்னெடுப்பா என சிந்திக்க வைக்கிறது.
செல்லம்மாவின் அம்மா தன் மகளுக்கு கொடுக்கும் அறிவுரையை குறைத்திருக்கலாம். பல இடங்களில் செல்லம்மாவை ஒரு தோல்வியின் , தியாகத்தின் கதாப்பாத்திரமாக மாற்ற அவருடைய அம்மாவின் பேச்சுக்கள் மறுக்க இயலாது.
செல்லம்மா தனது கணவர் 86 வயதில் மரிக்கும் வரை  கணவருடன் வாழும் சூழலும் கணவர் இறந்த பின் தனியாக தனிமையாக வாழ விருப்பபட்டதும் தனுடைய மகன் தயவில் பாதுகாப்பில் இருக்க விரும்பாது கணவர் சொத்து முழுதும் தன் பெயரில் இருந்ததால் பயணங்கள் , பிடித்த நட்புகள் என வாந்து மறைந்துள்ளார் என்பதை மகளின் எழுத்தில் இருந்து புரிந்து கொள்ள இயலும்.



0 Comments:

Post a Comment