இன்றுடன்
என்னவர் விடைபெற்று 40 நாட்கள்!இன்னும் மனம் ஆறுதல் அடையவில்லையே? சிலர் நியதி என்கின்றனர்,
சிலரோ அவரின் விதி முடிந்து விட்டது என்கின்றனர். சிலர் இந்த துயரில்
இருந்து கரையேற அவர் வெளீ ஊருக்கு சென்றிருப்பதாக கருதக் கூறுகின்றனர்.
ஆறுதல் பட அறீவு துணிந்தாலும் அவரை நினைத்து அழாத நாட்களில்லை. அவரை நினையாத
கணங்கள் இல்லை. ஒரு குடும்பத்தை வழி நடத்தியவர். நாங்கள் ஒவ்வொருவரும்
ஒவ்வொருவிதமாக பாதிக்கப்பட்டு கரையேற இயலாது துயருற்று கலங்குகின்றோம். 18 வயதை எட்டாத பெரிய மகன் சின்னவர் 14 வது வயது அவருடைய சோகத்தை
அன்பான அப்பாவின் இழப்பை சரிகட்ட தெரியாது கலங்கும் வயது. என் நிலையோ
இன்னும் நிஜத்தை ஏற்று கொள்ள இயலாது தவிக்கும் மனநிலை.
எங்களையும்
கடந்து அவருக்கு இன்னும் பல உறவுகள். என் பெற்றோர்கள் வயதான சூழலில் கதி கலங்கி விட்டனர். என் சகோதரி குடும்பத்தில் இன்னும் வருத்தம் ஓயவில்லை. ஹெல்மெட் அணீந்திருந்தால் தப்பித்திருப்பாரோ எல்லா வாரவும் கோயிலுக்கு சென்றீருந்தால் தப்பித்திருப்பாரோ எனறூ பரிதபிக்கும் நிலை என் சகோதரர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருக்க கடந்த முறை அத்தான் முதல்
நபராக வந்திருந்ததை எண்ணி ஏங்குகின்றார். இன்னும் என் குடும்ப சித்தப்பா
சித்தி அத்தைகள் என எல்லோரும் பழக இனிமையான மனிதருக்கு எவ்வாறு நிகழ்ந்தது
என புலம்புகின்ரானர்.. என்னவர் வீட்டிலும் சூழல்.மிகவும் பரிதாபம். தன் தந்தைய் இராந்து எட்டு மாதம் கடக்காத நிலையில் தன் தாய்க்கு தணலாக இருந்தவர். தன் தாயாருக்கு சுகவீனம் என்றால் யாரையும்
எதிர்பார்க்காது மருத்துவ மனையில் இருந்து கவனிக்கும் மகனின் இழப்பு. தேவை என்ற போது பனம் கொடுத்து மனபலன் கொடுத்து உதவின சகோதரனின் பிரிவு.
இவர்களை எல்லாம் மிஞ்சி அவருடைய இழப்பை தாங்க இயலாது தவிக்கும் நண்பர்கள்.
நேற்று
வரை கார், கணவர் நிறுவனம், என்றிருந்த நிலையில் இருந்து இன்று
யாருமற்ற யாதுமற்ற நிலை. இவை எல்லாம் விளங்க மறுக்கின்றது, ஏதேதோ காரணம்
கூறி மனம் சமாதானம் அடைய துனீயும் போது இடித்த கார் பற்றிய தகவல்கள் பல
வேதனையான வருத்தப்படும் உண்மைகளை தருகின்றது.
ரோடு
மேல் ஏதோ சத்தம் கேட்கின்றது என ஓடி ரோடு மேல் வந்த சட்ட கல்லூரி
மாணவர்கள் கண்டது தலை உடைந்து மூளை சிதறிய நிலையில் மரித்து கிடக்கும் என்னவர்! முட்டிய கார் பின்னால் உறவினர்கள் கார் என மிகவும் உல்லாசமாக
தாறுமாறாக ஓட்டி வந்துள்ளனர். காலை எட்டு மணியாக இருந்தும் கூட கார்
ஓட்டினவன் குடித்திருந்துள்ளான்.அதை மறக்க தூங்கி விட்டேன் என கூறீயுள்ளான். சிலர் அவனை அடிக்க
பாய்ந்துள்ளனர். பின்னால் வந்தந்த காரில் எல்லோரும் தப்பித்து விட்டு கார்
முன் சீட்டில் இருந்த முதியவர் மட்டுமே போலிஸில் வாக்குமூலம்
கொடுத்துள்ளார். பின்பு சிலர் கூட திட்டமிட்டு என்னவர் வந்த வழியை மாற்றீ கூற முயன்றூள்ளனர். அந்த விபத்து நடந்த இடத்தின் மிக அருகில் கரும்பு ஜூஸ் விற்கும் நபரை கார்காரர்கள் சார்பாக கதைக்க வைத்துள்ளனர். இவரோ வீட்டின் அருகில் இருந்து நான்குவழி சாலைவழியாக இடது ஓரத்தில் பயணித்தவர் சில நொடிகளில் சாந்தி நகர் பக்க ரோட்டில் இறங்க வேண்டியவர்.
தங்களுடைய கேளிக்கையின் விளைவாக தங்களூடைய சுயநலம் சார்ந்த நிதானமற்ற கார் ஓட்டுதலால்
இருசக்கிர வாகனத்தில் பயணம் செய்த என்னவர் மரணத்திற்கு காரணமாகியுள்ளார்.
எப்படி விபத்தில் என்னவர் பலியாடு ஆகி கலங்க வைத்தாரோ அதே போன்று கார் என்ற வாகனத்தால்
இன்னொரு நபரின் உயிரை பலிவாங்கி கொலைக்காரர்களாக மாறீயுள்ளனர். தனி நபர் கார்களால் பல
விபத்துக்கள். விபத்துக்களை பொறுத்தவரை சட்டங்கள் கூட நபருக்கு நபர்
மாறுகின்றது. பல சட்டங்களும் சாட்சியங்கள் என்ற பெயரில் பொய்களால்
மூடப்படுகின்றது. அதே போன்று தான் இந்த விபத்தை நிகழ்த்திய ஓட்டுனரைக் கூட
சட்டம் உடன் தண்டிக்கவில்லை. தூங்கி விட்டேன் என தப்பித்து கொண்டான்.
ஒரு
விபத்தால் ஒரு நல்ல கணவர் , பாசமான தகப்பன் பாசமுள்ள மகன் மருமகன், நல்ல நண்அர் இழப்பு என பல இழப்புகள், ஒரு
நாளும் என்னால் இதை நம்ப இயலவில்லை. படைத்த இறைவனிடம் தான் கோபித்து
கொள்கின்றேன். . அத்தானிடம், அல்லது என்னிடம் குறை கண்ட தெய்வமே ஒரு கை காலையாவது
எடுத்து விட்டு அத்தானை தந்திருக்கக் கூடாதா? அவர் ஓடி வரும் வீட்டுப்படி ,
அவருடைய அழகிய பார்வை, நடை அவர் செயல்கள் எல்லாம் நினைக்க நினைக்க முள்ளாக
குத்துகின்றது. அவர் இனி இல்லை இனி அவர் வர மாட்டார் என்ற உண்மை என் வாழ்க்கையின் நம்பிக்கையை இருள் அடையச் செய்து விட்டது. இனி ஒவ்வொரு நாளும் கடமையை முடிக்கும் பயணமாகவே என் வாழ்க்கை அமையபோகின்றது. இனி மிஞ்சிய என் வாழ்க்கை உயிர்ப்பான ஒரு வாழ்க்கைக்கு ஒப்பாகாது.
சாலை விபத்தில் இந்தியாவை போன்றூ மோசமான நாடு இருக்க போவதில்லை. நான்கு வழிச்சாலையில் சில குறீப்பிட்ட இடங்களீல் தொடர்ந்து விபத்து நடைபெறூவது ரோடுகள் தரத்தையும் கேள்விக்கு உள்ளாக்குகின்றது. நான்குவழிச்சலையில் மக்களீடம் இருந்து பெறூம் சுங்க வரி நாட்களூக்கு நாள் அதிகமாகி கொண்டேபோகின்றது. டிரவிங் சாற்றீதழ் முறயாக யாரும் வேண்டுவதில்லை. ரோட்டிலுள்ள பயணத்தை உல்லாசமாக மாற்ற நினைக்கும் போது பலருடைய வாழ்க்கை அர்த்தமற்றூ அனாதமாக மாறூகின்றது.
கிடைத்த ஓர் தரவுப்படி வருடம் ஒரு லட்சத்திற்கு மேல் மக்கள் மரணீக்கின்றனர். இந்தியாவின் குற்றவியல் சட்டப்படி பிரிவு 304 ப்படி இந்திய சட்டத்தால் விபத்தால் பாதிப்படைந்தவர்களூக்கு 4600 டாலர் அபராதவும் ஏழு வருட சிறய் தண்டனை என்பதை 780 டாலர் அபராதம் ஒரு வருட சிறய் தண்டனை என குறத்து விதித்துள்ளனர். நமது நாட்டை பொறூத்த வரை சட்டம் ஆள் ஆளூக்கு மாறூபடுகின்றது. காரில் வருபவர்கள் கவனமாக ஓட்டியிருந்தால் ஒரு குடும்பம் அனாதமாகியிருக்காது. நாங்கள் அத்தானின் நினைவுகளீல் இருந்து வெளீவர இன்னும் 5 வருடம் ஆகலாம்.
எங்கள் ஆதரவு, பாசம், தலைமையாக இருந்தவரின் பிரிவு எங்களய் உருக்குலைய செய்து விட்டது. மேலும் தேவையான . சாற்றீதழ்கள் பெற பல பல சிக்கல்கள். ; அரசு பக்கம் இருந்து மக்களூக்கு உதவும் வண்ணம் எந்த திட்ட செயல் பாடுகளூம் இல்லை. முழுமையான பிரேத பரிசோதனைக்கு கூட ஒரு மாதம் மேல் ஆகும் என்கின்றனர். இப்படியாக எங்கள் வாழ்க்கை நாளூக்கு நாள் சுமையாக மாறூகின்றது
\
0 Comments:
Post a Comment