
எஸ்டேட் பகுதியில் பிறந்து வளர்ந்தவள் என்ற நிலையில் இப்படம் உண்மைக்கு நிகரானதா என்றால் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல உண்மைகளை மறைத்து தற்போது அவர்கள் தலைமுறை எதிர்கொள்ளும் பல துயர்களை, சவால்களை மறைத்த வெளிகொணர உதவாத படம் என்றே கூறுவேன். ஏற்கனவே தேனீர் என்ற நாவலில் தேயிலைத்தோட்ட வாழ்கையை பற்றி தேயிலதோட்டத்தில் வேலை செய்த தலைமுறையிலுள்ள டி. செல்வராஜ் அவர்கள் விவரித்துள்ளார்.டி செல்வராஜ் நாவல் தேனீர்! இவரே தோல் என்ற நாவலுக்கு இவ்வருடத்திற்கான சாஹித்திய அக்காடமி விருது பெற்றவர். தற்போது திண்டுக்கல்லில் வழக்கறிஞராக பணியாற்றும் இவரிடம் இப்படத்தை பற்றி வினவ தோன்றுகின்றது.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்கை சொர்கபுரி இல்லை என்றாலும் இது போன்ற நரகம் அல்ல. தற்போதைய அவர்கள் தலைமுறைய பற்றி எடுத்திருந்தால் இப்பெயர் மிகவும் பொருந்தும். கதைப்படி பார்த்தால் கூட ஒட்டுபொறுக்கியை ஒரு மனிதனாக பார்க்க தயங்கும் சூழலில் இருந்து தான் தேயிலை தோட்டம் தேடி வேலைக்கு செல்கின்றான். பஞ்சம் பிழைக்க சென்றவர்கள் தான் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இவர்களை வழி நடத்திய கங்காணிகள் தான் என்பதிலும் மாற்று கருத்து இல்லை. எஸ்டேட் நிர்வாகம் என்பது தொழிலாளர்கள் கங்காணிக்கு கீழும் கங்கணிகள் றைட்டர் என்ற மேலதிகாரிக்கு கீழும் றைட்டருக்கு மேல் அதிகாரியாக வெள்ளைக்கார மேலாளர்கள் என்று ஒரு அடுக்கு நிர்வாகம் தான் அங்குள்ளது. வீடுகளும் அதே போன்றே தொழிலாளர்கள் வரிசை வீட்டில் வசிக்கும் போது அவர்கள் மேல் அதிகாரிகள் தனி வீட்டுகளிலும் வெள்ளைக்காரர்கள் மக்கள் நடமாட்டம் அற்ற பங்களா போன்ற மாளிகையில் மலை மேல் தனித்து ராஜபோகமாக வசித்து வந்தனர்.

கங்காணிகள் பெரும் வாரியானோர் தலிது சமூகத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தனர், இவர்களை நம்பி தேயிலை தோட்டங்களில் தொழிலாளர்களாக வந்தவர்களும் தலிதுகள் தான். சுதந்திரம் பின்பு இவர்கள் சேவையை மறந்து இவர்களை புரக்கணித்தது நிர்வாகம். தற்போது அவ்விட அதிகாரத்தை பிடித்தது மலையாளி சூப்பர்வைசருகளே. அதிகாரிகளாக வந்த பலர் நாகர்கோயிலை சேர்ந்த நாடார் மற்றும் மலையாளி இனத்தவர் ஆவர். தமிழ் தொழிலாளர்கள் வெள்ளைக்கார ஆட்சியாளர்களால் மட்டுமல்ல தங்கள் குழுத்தலைவரான கங்காணி மற்றும் அதிகாரிகளாலும் துன்புறுபடுத்தபட்டுள்ளனர். இந்த கொடிய நிலை தேயிலை தோட்டங்களில் மட்டும் நிலவும் சூழலா என்று ஆராயும் போது தற்போதைய பிபிஓ துவங்கி அங்காடிதெருவில் காணும் கடைகள் முதல்கொண்டு தேடினால் விளங்கும்.
பாலா, தன் படம் வெற்றி பெற வேண்டும் என்ற வியாபார நோக்கில் அதீத கற்பனை
வளத்துடன் ஒரு மனநோயாளி மனநிலையுடன் தான் இப்படம் காட்சிப்படுத்தியுள்ளார் என சிந்திக்க
வேண்டியுள்ளது. வசூரி போன்ற கொள்ளைநோய் தாக்கிய இடத்தில் சேவையாற்ற வந்த கிருஸ்த தமிழ்
மருத்துவரை கேவலப்படுத்தி இஸ்லாமியர்களை தீவிரவாதத்துடன் ஒப்பிடுவது போல் கிருஸ்தவர்களை
மதமாற்றத்துடன் ஒப்பிட்டுள்ளது கண்டிக்க தக்கது.

பாலா கூற்று படி தேயிலை தோட்டத்தில் மதமாற்றம் உண்மையாக நிகழ்ந்திருந்தால் பெரும்வாரியான தொழிலாளர்கள் கிருஸ்தவர்களாக இருந்திருப்பார்கள். உண்மை நிலை என்னவென்றால் தொழிலாளர்களர்களில் பெரும்வாரியானோர் கிருஸ்தவர்கள் அல்ல.

தேயிலை தோட்டத்தில் ஒரு காலங்களில் பிழைப்பு தேடி சென்று இன்று திரும்பிய
தமிழர்களான எங்களின் நிலை பரதேசிகளை போன்றது என்பதே உண்மை தமிழக தமிழர்களாக
அங்கீகரிக்க மனம் இல்லாது வேலை வாய்ப்பிலும் சமூக அந்தஸ்திலும் மறுபடியும் ஒடுக்கப்படும்
சூழலிலே தற்போதும் உள்ளனர். பரதேசி என்று பாலா அத்துயரை பற்றி ஒரு படம் எடுத்தால் தற்காலைய
தேயிலை தொழிலாளர்கள் தலைமுறை நிலை பற்றி சொல்வதாக இருக்கும். அது அவர்கள் தலைமுறைக்கு விடிவாகவும் இருக்கும். வெள்ளைக்கார மொட்டையனை காட்டி இந்தியை கொள்ளைக்காரனை மறைக்கும் பாலா போன்றோர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு சாதகமாக அல்ல பாதகமாகவே நிலை கொள்கின்றனர்.statistics!
கவின்மலர்
கவின்மலர்
தற்பொழுதுதான் உங்களின் இந்தப் பதிவைப் படித்தேன். எனவே இத்தனை தாமதம்.பாலா போன்ற மன நோயாளிகளின் படைப்பை கொண்டாடும் துர்பாக்கியப் போக்கு ஒரு முடிவுக்கு வந்து விடும் என்று தோன்றுகிறது. மிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
ReplyDeleteநன்றியும் மகிழ்சியும்
Delete