header-photo

கல்பற்ற நாராயணனின் சுமித்திரா என்ன சொல்கிறது?கல்பற்ற நாராயணனின் சுமித்திரா என்ற நாவல் வம்சி வெளியீட்டில் சைலஜா என்ற எழுத்தாளரின் மொழி பெயர்ப்பில் வந்துள்ளது. வாசிக்க சுவாரசியமான நாவல் தான். மொழி பெயர்ப்பில் மலையாள சுவை மணம் அடித்தாலும் வாசிக்க தூண்டும் எழுத்து நடை. நான் இங்கு கூற வருவது மலையாள எழுத்தாளரின் பெண் பார்வையை பற்றியே.

இக்கதையில் கதாநாயகி சுமித்திரா என்ற பெண்ணே. இவர் தனது 38 வது வயதில் இறந்து விடுகின்றார். எப்படி இறந்தார் ஏன் இறந்தார் என கடைசி பக்கம் வரை வாசிப்பவர்களை தேடவைத்து கொண்டிருக்கின்றார் ஆசிரியர். 

கதை ஆரம்பிக்கும் கதை தளம் சுமித்திர இறந்து கிடக்கும் மரண வீடு! அங்கு வரும் மனிதர்களும்,இயற்கை வளமான சூழலும்(காப்பி செடியும்)அதை ஒட்டிய மனிதர்களின் சிந்தனையும் கதாபாத்திர விவரணவும். மரணம் தரும் சிந்தனையும் ஒட்டியே கதை நகருகின்றது. எனக்கு வரும் சந்தேகம் இந்த குறும் நாவலில் வரும் காதாப்பாத்திரப்படைப்பை பற்றியே.

முதல் கதாபாத்திரம் சுமித்திரா. நல்ல குடும்பத்தை சேர்ந்தவள். ஒரு நகர்புறத்தில் இருந்து காட்டு பகுதியில் திருமணம் முடித்து குடிபெயர்ந்துள்ளார். மகள் உண்டு. பிரச்சினையில்லாத கணவர் தான். ஒரு நாள் தலைவலியுடன் இருக்கிறார். அப்போது அங்கு பாத்திரம் விற்க வரும் வியாபாரி ஒருவர் தலைவலிக்கு ஒரு மருந்து சொல்கின்றார் அவரே மிளகு செடியை இலையை பறித்து கல்லில் வைத்து அரைக்கின்றார், ஆனால் மருந்தை போடும் முன்  தலையை தடவி கொடுத்து அப்படியே அன்று அவளுடன் கதவை தாப்பாளிட்டு படுத்து கொள்கின்றார். அவள் செத்து கிடக்கும் உடலை பார்க்கும் போதும் அவளுடன் படுத்த உடலை எண்ணி பார்க்கின்றார். என்ன ஒரு ஆண் மனம்!!

சுமித்திராவுக்கு ஒரு தோழி கீதா. அவளோ கணவனை எருமை என்று அழைக்கின்றாள் கணவனுடன் படுப்பதை விட அவன் தம்பியுடன் படுக்கும் கதையை எண்ணி கொள்கின்றார்.
Sumithra (Tamil)

அடுத்து அங்கு தொழிலாளியான மாதவி என்ற கதாபாத்திரம். அதுடன் சுமித்திராவுக்கு நட்பு. அந்த பெண்ணோ 8 மணிக்கு, ஒருவன் 9 மணிக்கு வேறொருவன் 10 மணிக்கு இன்னொருவன் 10.30 க்கு அவளை தான்  பார்க்க வருவதாக சுமித்திரா சொல்கிறார்.இவர்கள் நட்பில் சுமித்திரா கணவருக்கு விருப்பவும் இல்லை.

எல்லா பெண் கதாபாத்திரங்களும் தன் கணவரை மதிப்பது இல்லை, உண்மையாக நேசிப்பதில்லை காதல் கொள்வதில்லை. ஆனால் வழியின் போகும் எத்தவனுடனும் உடல் உறவு கொள்ளுகின்றனர்.  காமமே வாழ்க்கை என்ற நோக்கில் பெண்கள் வாழ்கின்றனர் என்று சொல்ல வருகின்றனரா அல்லது பெண் உடலை வெறும் மாம்ச பிண்டமாக மட்டும் பார்க்கும் மனநிலையில்  உள்ளனரா. நவீன சிந்தனை எழுத்து என்ற பெயரில் எழுத்தாளர்கள் என்ன செய்தியை சமூகத்திற்கு கொடுக்க விளைகின்றனர். பெண் என்பவள் உடல் சுகம் தேடி அலையும் வெறும் மிருகமாக எண்ணுகின்றனரா.

 மேலும் ஒரு நிகழ்வில் ஒரு யானை ஒரு தமிழனின் குடும்பம் முன்பு குரல் எழுப்புகின்றது. இதையும் ஆசிரியன் தமிழன் மிருகம் என்பதால் மிருகமான யானைக்கு அவன் குரல் புரிவதாக கேலி செய்கின்றார். பகடி என்ற பெயரில் இத்து போன சொல்லாடல்கள் பழம்குடி மக்களை மிகவும் கேவலமான நிலையில் வண்ணித்திருப்பது, கொச்சு தம்புராட்டி(சின்ன மகாராணி) என்று அழைப்பதை எண்ணி கதாபாத்திரம் வெட்டி பந்தா காட்டுவது என கதாசிரியர் தன் அகக்குணத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்நூலை பற்றி. எஸ் ராமகிருஷ்ணன் போன்ற சிறந்த எழுத்தாளர்கள் அணிந்துரை என்ற பெயரில் மேலும் கதை சொல்லியிருப்பது சரியா என்றும் சிந்திக்க வேண்டுகின்றேன்.times of India article

மொழி பெயர்ப்பில் வந்த குறையா அல்லது கதை ஆசிரியர்  எழுத்தா page no 85 என்று தெரியவில்லை சுமித்திரா தன் கணவன் வாசுதேவனின் சித்தி மகள் என்று சொல்லியிருப்பதில் உறவு மட்டுமல்ல மறபு சிக்கலும் தெரிகின்றது.

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ok... thanks... from new android...

Suthandra Kumar said...

இனி அட மழைதான்

Avargal Unmaigal said...

மீண்டும் உங்கள் எழுத்தை, எண்ணங்களை பதிவாக பார்க்கும் போது மிக சந்தோசம்

Melchengam Kannan Palani said...

· Following · Annamalai University
oru sila thamizh arindha malayala writes ippadi thaan katha paaththirathai solkirarkal mam unga doubt sarithaan penmai patri nalla tha solraangal or some thing

Ramji Yaho said...


இத்ர மாத்ரம் என்ற சினிமா வடிவில்
மிக அற்புதமாக வந்துள்ளது .
ஸ்வேதா மேனோன் சுமித்ராவாக வாழ்ந்தே இருப்பார் .
முடிந்தால் பாருங்கள் படத்தை
வயநாடு வாழ்க்கை அப்படியே நம் கண்முன்னில்

Post Comment

Post a Comment