1995 ஆம் வருடம், தனது 78 வது வயதில்
265 வது போப் ஆக பதவி ஏற்ற போப் பெனடிக்ட்XVI, எட்டு வருடம் ஆகிவிட்ட நிலையில் தனது
பதவியை விட்டு விலகியுள்ளது பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
முதல் போப், யேசு கிருஸ்து தேற்வு செய்த தனது சீடர் சிமயோன்(பேதிரு) ஆவார். கல்வியறிவற்ற திருமணமாகி குடும்பஸ்தராக மீனவர் ஆவார். “என் பின்னே வா,… உன்னை மனிதர்களை பிடிப்பவரகளாக மாற்றுவேன்” என்ற வார்த்தையை கீழ்படிந்த அவர்; பின்பு தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படும் மட்டும் கிருஸ்துவின்
போதனைகளை பரப்புவதில் மும்முரமாக இருந்தார். யூத ஜனங்களுக்கு நற்செய்தி அறிவிப்பிக்கவே
பணியப்பட்டிருந்தார். ஆகையால் இஸ்ரயேல் தேசம் மட்டுமே தன் பணிதளமாக கண்டு செயலாற்றியவர்.
ரோமன் குடிமகனும் கல்வியில் சிறந்தவருமான பவுல் கிருஸ்தவம் தழுவிய போது கிருஸ்தவ போதனைகள் இஸ்ரேயல் தேசம் விட்டு ரோமா நாட்டிலும்
பரவ ஆரம்பித்தது. கிருஸ்தவத்தில் பிறப்பிடம் யூதா தேசமாக இருந்தும் தற்போது
அதன் தலைமை இத்தலி நாட்டின் பகுதியான வத்திக்கானில்
இடம் பெயர்ந்ததில்; வத்திக்கானை AD-313ல் போப்புக்கு பரிசாக
கொடுத்திருந்த கான்ஸ்டைன் என்ற முதல் கிருஸ்தவ சக்கரவர்த்தியின் பங்கு உள்ளது. 1929ல் போப்பின் தலைமையில் தனி நாடாக பிரகடனம் செய்து
கொண்டது.
போப் என்பவர் ஒரு மதத்தின் தலைமை குருமட்டுமல்ல, 110 ஏக்கர் பரப்பளவு கொண்ட வத்திக்கான் என்ற உலகிலே சிறிய நாட்டின் அதிபரும் ஆவார்.
அவர்களுக்கு என்றே தனி, ஆட்சி அதிகாரங்கள் உண்டு. சுவிஸ் ராணுவப்படையின் ஒரு குழு வத்திக்கான் காவல் சேவை புரிகின்றது. 800 மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பினும் உலகனத்திலுமுள்ள
கத்தோலிக்க கிருஸ்தவர்களின் கட்டுபாடு, கத்தோலிக்க துறைவிகள் பாதிரியார்கள் நடத்தும்
லட்சக்கணக்கு கல்லூரிகள், பல்கலைகழகங்கள்,
சேவை நிறுவனங்கள், இறையியல் கல்லூரிகள், கர்டினால்கள் என்ற உயர்நிலை குருக்கள், அவர்களின்
அடுத்த நிலை குருக்கள் பிஷப்புகள், பாதிரியார்கள், டீக்கன்கள், கன்னியகமடங்கள், என
ஒரு பெரும் நிர்வாகத்தின் கட்டுபாடும் வத்திக்கானிடம் தான் இருந்தது. 200 நாடுகளிலுள்ள 2.3 பிலியன் கத்தோலிக்க கிருஸ்தவர்களின் தலைவராக இருந்தாலும் உலகு அனைத்து மக்கள்
கவனவும் போப் பக்கம் இருந்ததை மறுக்க இயலாது. உலகில் நடந்த பல யுத்தங்களுக்கு காரணவும்,
கட்டுப்படுத்தும் படியான இடத்தில் வத்திக்கான் இருந்தது என்றால் மிகையல்ல!
கத்தோலிக்க கிருஸ்தவ சபையில் திருமுழுக்கு
பெற்ற உறுப்பினர்களாக இருக்கும் எவருக்கும் போப்பாக போட்டியிட தகுதி இருந்த போதும் தற்போதைய வழக்கப்படி 120 கர்டினால்களில் இருந்து
ஒருவரே போப் ஆக தேற்ந்தெடுக்கப்படுகின்றார். போப் தாமாக ஓய்வு பெறும் வழக்கம் பொதுவாக இருப்பதில்லை. அவர்கள் பதவி காலம் அவர்கள் மரணத்துடன்
நிறைவு பெறுகின்றதே வழக்கமாக இருந்து வந்துள்ளது. ஆனால் போப் பெனடிக்ட் தன் வயோதிகம் அதை சார்ந்த
ஆரோக்கிய நிலை கணக்கில் கொண்டு; தன் சுய விருப்பம் சார்ந்து பிரார்த்தனை தியானம் வழிகாட்டுதலால் விலகுவதாக அறிவித்துள்ளார். கண் பார்வை கேள்வி குறை உள்ளதாகவும் சொல்கின்றனர் மேல் மட்ட
அதிகாரிகள்.
பதவி விலகிய போப் பொதுவேதி நிகழ்ச்சிகளில்
பங்குபெற தடையுள்ளது. இனி வரும் மூன்று மாதங்கள் பேசாமடத்தில் வெளி உலகு
தொடர்பில்லாது இருக்கவும் உள்ளார். பதவியில் முத்திரைகள் ஆன கை விரலில் அணிந்துள்ள தங்க
மோதிரம் திருப்பி கொடுக்க வேண்டும். அதை அழித்து வரயிருக்கும் போப்புக்கு மோதிரம் அணிவிக்க
உள்ளனர். அதிகாரத்தில் அடையாளமான கிரீடம், செங்கோல் இனி ஓய்வு பெற்ற போப்பால் பயண்படுத்துவது இல்லை, மேலும்
சிவப்பு வண்ண காலணி அணிய தடை உண்டு. ஆனால் வெள்ளை உடையை தொடரவும் ஓய்வு பெற்ற போப்
என்று அறியப்படவும் உள்ளார். ஜோசப் ரேட்சிங்கர் என்ற இயற்பெயர் அல்லாது தன் பதவி பெயர் போப் பெனடிக்ட்XVI என்றே அறியப்படுவார்.
ஒரு பெரும் பதவியிலுள்ள மாபெரும் மனிதர்
தன் பதவியை விட்டு விலகி பதவி அதிகார பேராசை கொண்ட சமூகத்திற்கு வழி காட்டியுள்ளது
பாராட்டுதல்குரியது. அவருடைய துணிவான நேர்மையான மனநிலையையும் காட்டுகின்றது இது. பதவி துறைப்பது
என்பது சாதாரணம் அல்ல என்று இருப்பினும் இதன் முன்பும் நான்கு முறை நடந்துள்ளது. இதே போன்று போப் கிரோகரிXII
1415தாமாக முன் வந்து பதவி விலகியுள்ளார். போப் செலஸ்டின் V ல் 1294ல் தன் பதவி
விட்டு விலகிய பின், மனம் மாறி பதவியில் வரக்கூடும் என்ற சூழலில் வீட்டுகாவலில் வைக்கப்பட்ட நிலையில் 8 மாதம் கடந்து மரித்துள்ளார் என வரலாறு சொல்கின்றது. போப் பெனடிக்ட் IX குற்ற செயல்களில் ஏற்பட்டதால் பதவியில் இருந்து விரட்டப்பட்டுள்ளார். முதன்
முதலில் போப் ஆக இருந்து பதவி விலகி சென்றவர்18 வது போப்பான பொன்டைன் ஆவார். இது நிகழ்ந்தது 235ல் ஆகும்.
தற்போது பதவி விலகியுள்ள போப் ஜெர்மனியிலுள்ள
பூன் பல்கலைகழகத்திலுள்ள புகழ் பெற்ற இறையியல் பேராசிரியர் ஆவர். பின்பு இப்பல்கலைகழகத்தின்
துணை அதிபராகவும் உயர்ந்தவர். போப் என்ற வகையில் இவரை கண்டு வருவதை விட இவர் சொற்பொழிவை கேட்கவே பல பொழுதும்
மக்கள் விரும்பினர். கடவுளை பற்றிய அறிவை பாமரர்களுக்கு புரியும் வகையில் எளிய
முறையில் இறைவன் அன்பு- மனித அன்பு, நல்லிணக்கம் என்ற அடித்தளத்தில் பேசி வந்தவர் இவர்.
கடவுளில் அன்பு என்பது மனிதர்கள் சுமூகமான உறவில் துவங்குகின்றது என்று பல
முறை நினைவுப்படுத்தியவர். ஜெர்மன், பிரஞ்சு, லாட்டின், ஹீப்ரு, ஆங்கிலம், கிரீக் என
பல மொழிகளில் வல்லுனர். தன் பதவி கால முதல் மூன்று வருடம் உலக நாடு சுற்றுப்பயணத்தில்
விருப்பம் கொண்டிருந்தாலும் அடுத்த வருடங்களில் புத்தகம் எழுதுவதிலும் சொற்பொழிவு,
கருத்தரங்கம் என சுறுசுறுப்பாக இயங்கி வந்தவர். இவரில் கருத்தக்களை பல சமூகத்தினர்
பல முறை கேள்விக்கு உட்படுத்தியிருந்துள்ளனர். இஸ்லாமிய
மதத்தலைவர்கள், புத்த துறவி தாலாய்லாமா, ஹிந்து துறவிகளையும் சந்தித்து நல்லிணக்கம்
பேணி வந்தவர். மற்று மதத்தலவர்களை சந்தித்து ஆக்கபூர்வமான விவாதங்களுக்கும்
வழிவகுத்தவர். கிருஸ்த ஆலையங்களில் பயண்படுத்தும் பியானோ என்ற வாத்திய கருவி வாசிப்பதில்
விற்பகர். தன் பெரும் வேலைப்பழு மத்தியிலும் தன் உடன் பிறந்தவர்களையும் நேசிக்க மறக்காதவர்.
இப்படியாக தன் வாழ்நாள் முழுவது மனித உறவும் இறைவணக்கவும் ஒரே போல் புனிதமானது என்று
உணர்த்தி வந்தவர்.
சிலரால் நாத்திக போப் என்று கூட தூற்றப்பட்டார். தன் பதவி கடைசி நாட்களில் கிருஸ்தவ பாதிரிகளால் உருவான பாலிய ஊழல் சம்பவங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டவராக இருந்ததாக சொல்லியுள்ளனர். வத்திலீக்ஸ்
போன்ற விவாதங்களும் அவரை துரத்திய வண்ணம் இருந்தது. வத்திலீக்ஸில் இவருக்கு நம்பிக்கைக்குரியவரான சமையல்காரரை பயண்படுத்தியிருப்பதும் இதன் தூண்டுதலாக
இருந்தவரை இன்னும் கண்டுபிடிக்காத சூழலில் ஓய்வும் பெற்று விட்டார். வத்திக்கான் நிர்வாகம்
ஜெசுவிட், பெனடிக்ஷன், பிரான்சிகன் போன்ற சிறு குழுக்கள் கட்டுபாடில் இருந்தது போல்
தற்போது குரியா என்ற குழுவின் ஆதிக்கப்பிடியில் உள்ளதாகவும் சொல்கின்றனர். சபையை எளிய
தளத்திற்கு கொண்டு வர முயன்ற மாபெரும் மனிதர் இவர். பொதுவாக மதவாதிகள் என்றதும் ஊடகம்,
இணைய ஊடகம் போன்றவற்றை பயண்படுத்துவதை பாவச்செயலாக
பொருத்தி பார்க்கும் வேளையில் டிவிட்டர் போன்ற சமூக தளத்தின் தன் கருத்தக்களையும் பதிந்து
தன்னையும் சமூகத்துடன் ஒரு கண்ணியாக இணைத்து கொண்ட அவருக்கு விடை சொல்வது வருத்தமே.
போப் என்ற வார்த்தையின் பொருள் தந்தை என்பதாகும்.
தமிழர்கள் போப் ஆண்டவர் என்று அழைப்பதும் கேரளாவில் புனித போப் என்று அழைப்பதும் ஒரு
தலைமையை அதன் அதிகார மரியாதையில் காணாது அவர்களே
விரும்பாத புனிதம் என்ற பெயரில் ஒரு முகமூடியும் அணிவித்து சிறைப்படுத்துவதாக உள்ளது.
ஆனால் அந்த பதவி சார்ந்த எல்லா தாச்சுறுத்தல்களையும் தடைகளையும் உடைத்து கொண்டு தான்
கொண்ட கருத்துக்களை எழுத்தாலும் பேச்சாலும் பதிந்து வந்த போப் போற்றக் கூடியவர் ஆவார்.
ஒரு மதத்தலைவரின் மதிப்பும் அதன் தாக்கவும்
அதன் உறுப்பினர்கள் சார்ந்தே உள்ளது. அவ்வகையில் சபையின் அடித்தள உறுப்பினர்கள்
பற்றி அவர்கள் வாழ்கை பற்றி சபை அமைதி காப்பது துயரே. அடித்தள மக்கள் வாழ்கையை பக்தியில்
மட்டும் சுழல விட்டு, அவர்கள் போராலும் நோய், வேலையில்ல பிணிகளில் உழலும் போது சபை கண்மூடி
அமைதி காப்பதும் வருத்தமே. இஸ்ரேயல், ஈழம், எத்தியோப்பியா, அரபி நாடுகளில் கிருஸ்தவ அடித்தள
உறுப்பினர்கள் மற்றும் பாதிரியார்கள் பெரும் சவாலை சந்தித்தே வருகின்றனர். இவையில் வத்திக்கானின்
தாக்கம் ஆக்கவும் அறியும் படி இருப்பது கிருஸ்த சபை வளர்ச்சிக்கும் அதன் உறுப்பினர்கள்
வாழ்கை நலனுக்கும் மிகவும் தேவை. மதங்கள் வளர வளர அது ஒரு நிறுவனமாக உருமாறுவது அதன்
அடித்தள உறுப்பினர்கள் தலைமையின் கண்ணில் எறும்பாகவும், கடைநிலை உறுப்பினர்களுக்கு தான்
சார்ந்திருக்கும் மதத்தின் பிரமாண்டம் மலையாக கண்டு களியூறுவது வழியாகவும் அதன் நிழலில் மயங்கி கிடப்பதுமே உண்மை நிலையாக உள்ளது.
மிக விரிவான பதிவு. கிறீஸ்தவம், போப் பற்றிய பல தகவல்களை அறிந்து கொண்டேன். நன்றி
ReplyDeleteபோப் பற்றிய மிக விரிவான தமிழ் பதிவு .பல அறியா தகவல்களை அறிந்து கொண்டேன்.தமிழில் அதுவும் உங்கள் எழுத்தில் படிப்பதில் சந்தோஷமாக உள்ளது . தமிழில் இன்னும் பல நல்ல பதிவுகளை எழுதி வர வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான தகவல்கள் அடங்கிய பதிவு. மிக்க நன்றி.
ReplyDeleteபிரஞ்சுத் தொலைக்காட்சி அவர் பதவியில் இருந்த போது பேசியதை விட, பதவி விலகிய இப்போதே இவரைப்பற்றி மிக விரிவாகப் பேசுகிறது.
ReplyDeleteமக்கள் போப் எனும் போது எனக்கு "ஜோன் பால் 2" ஞாபகம் வருகிறார். எனினும் கத்தோலிக்கரான உங்கள் வார்த்தையை நான் மதிக்கிறேன்.
பல தகவல்களைத் தந்த விளக்கமான பதிவு.
ஜோசபைன்...
ReplyDeleteமுன்பே வாசித்துவிட்டேன்...மறுமொழி இட நேரம் இல்லாததால் அன்று இடவில்லை..
போப்பின் மேலும்...திருச்சபையின் மேலும் எனக்குள்ள பெரிய வருத்தம்...சிறுவர் பாலியல் விவகாரத்தை மூடி மறைத்து...சாதாரண விஷயம் போல் நடத்தியது...
அது மன்னிக்கமுடியா குற்றம்...மதத்தின் மீதுள்ள நம்பிக்கையை ஒருவர் இழக்க அது ஒன்று போதாதா?
நிறைய எழுதுகிறீர்கள்...என் வாசிப்பு அதற்கு ஈடு கொடுக்க முடியாது..-:)
நன்றி உங்கள் அழைப்புக்கு...
அன்புடன்
ரெவெரி