2 Sept 2012

விலக்கப்பட்ட கனி : ஓரின சேர்க்கை!

 

ஓரின சேர்க்கைக்கு எதிரான  உச்ச நீதிமற்ற தீர்ப்புக்கு  உபவாசம் இருப்பதாக ஊழியர் மோகன் சி லாசரசுஸ் மற்றும் சீர்திருத்த கிருஸ்தவ பிஷப்பும்  அறிவித்துள்ளனர்.  ஓரின சேர்க்கை போன்றவை தனி மனித ஒழுக்கம்- சமூக சூழல்  சார்ந்தவை  என்ற சிந்தனையில் அணுகினால் ஓரின சேர்க்கைக்கு எதிராக உபவாசத்துடன் அல்ல சில ஆக்கபூர்வமான செயலாக்கத்துடன் முன்செல்ல வேண்டியுள்ளது கிருஸ்தவ சபைகள்.

ஒரு பெரும் திரள் மக்கள் சிந்தனை வளத்தில் பெரிதும் பின்புலனாக இருப்பதால்  தனி மனித ஒழுக்கம் சீர் பட அல்லது சமூக மாற்றம் நடைபெற கிருஸ்தவ சபை என்ன செய்கின்றது என்ற கேள்வி எழுகின்றது. ஆங்கிலயர்கள் காலத்தில் பெரிய சமூக பிரச்சனைகளை கையிலெடுத்த கிருஸ்தவம் இன்றைய நிலையில் எந்த கொள்கையும் இல்லாது  தேர்தலுக்கு தேர்தல் தங்கள் நிலையை மாற்றி கொண்டு அரசியல் ஆடுவது தான் நடந்து வருகின்றது. மேலும் கிருஸ்தவ சபையும் ஒன்றுக்கும் பத்தாக பிரிந்து கிடைப்பதால் ஒருமித்த கருத்தாக்கத்தில் வருவதிலும் சிக்கல்கள் உள்ளன. கருகலைப்பை கத்தோலிக்க சபை  எதிர்க்கும் போது சீர்திருத்தம் சபை மற்றும் பெந்தகோஸ்து சபைகள்  மிதமான நிலையிலும் இன்னும் பல சில சபைகள்   ஆதரிக்கும் நிலையிலுமே உள்ளனர்.

சபையார் பைபிள் பார்வையில் ஓரின சேர்க்கை மிகவும் கொடிய பாவச்செயலாக சொல்ல வருகின்றனர். ஆதாம் ஏவாளை கடவுள் ஆணும் பெண்ணாகவே படைத்தார் என்றும் சோதோம் கொமேறா போன்ற பட்டிணங்கள் கடவுளால் அழிக்கப்பட்டது இப்பாவச்செயலாலே என்றும்,  பைபிளில் பல வசனம் வழியாக (ரோம் 1:26 ல்)  எடுத்து கூறி மிரட்டுவதை விடுத்து ஆக்கபூர்வமான கருத்துக்கள் தகவல்கள்  மக்கள் பக்கம் சென்றடைய துணிந்துள்ளதா என்ற கேள்வி எழுகின்றது.

பண்டையகாலம் தொட்டே ஓரின சேர்க்கையாளர்கள் உண்டு எனிலும் ஐரோப்பில் 12 ஆம் நூற்றாண்டில் பெருகினர். இயற்கைக்கு மாறானது என்ற காரணத்தால் கிருஸ்தவம் எதிர்த்தது. ஆனால் அதையும் மீறி சில கிருஸ்தவர்கள் சார்பாகவே உள்ளனர் என்றும் கவனிக்க வேண்டியுள்ளது. ஆனால் ஆலய குருவாகவோ, சபை அதிகார இடங்களில் இருக்கவோ ஓரின சேர்க்கையாளர்களை அனுமதிப்பதில்லை என்பதையும் எடுத்து கொள்ள வேண்டியுள்ளது.

மன்னர் சவுள் மகன் ஜோனாத்தன் மற்றும் தாவீது நட்பை கூட ஓரின சேர்க்கையோடு இணைத்து சிலர் ஆராய்ந்துள்ளனர். (சாமுவேல்1:26)தாவிது-ஜோனாத்தன்!

இன்றைய தினம் ஒரு உபவாச கூட்டத்தால் மட்டும் ஓரின சேர்கையாளர்களுக்கு எதிராக குரல் கொடுப்பது என்பது ஏமாற்று வேலை தான். உண்மையில் ஓரின சேர்க்கையாளர்கள் இல்லாதாக்க வேண்டும் என்றால் ஓரின சேர்க்கையை பற்றி பைபிளில் கூறியுள்ள சில வசனங்களை மட்டும் எடுத்துரைத்து மிரட்டி பணியவைக்காது தகுந்த மருத்துவ-சமூக பிரச்சனைகள் பற்றி அலசி ஆராய வேண்டும். தேவையான விழிபுணர்வு கொடுக்க வேண்டும்.

ஓரின சேர்க்கையாளர்களாக குழந்தைகளை மாற்றுவதில் கிருஸ்தவ சபைகள் நடத்தும் அனாத ஆசிரம மற்றும் ஆலய சார்பானவர்கள் கூட இருப்பது மாறவேண்டும் உண்மையாக விசாரிக்கப்பட  வேண்டும். ஓரினை சேர்கை என்பது எதனால் இயற்கைக்கு எதிரானது என்றும் விளக்கி புரிய வைக்க வேண்டியதும் சபையின் கடமையே.


மேலும் ஓரின சேர்க்கையால் பாதிப்படைந்த இதில் அடிமையானவர்களை சமூகத்துடம் பேச வைக்க வேண்டும். அல்லாது பரிசுத்தம் என்று கூறி பொய் முகம் காட்டும்  சபையால் மக்களுக்கு சரியான தீர்வு கொடுக்க இயலாது அது வெறும் சட்டங்களும் மிரட்டல்களுமாகவே இருக்கும். 

சில ஓரின சேர்க்கையாளர்கள் கருத்துப்படி தொடர்ந்து விடுதியில் தங்கும் சூழல், தொடர்ச்சியான ஒரே நபருடனான் நட்பு, குடும்பம், போன்ற சமூக அமைப்பே காரணமாவதாக கூறுகின்றனர். மேலும் சிலர் ஹார்மோன் குறைபாடு என்றும் கூறினர். 

தீர்வு நிச்சயமாக சபையின் உபவாசத்தில் இருந்து அல்ல இந்த சமூக பிரச்ச்னையில் இருப்பவர்கள், மீண்ட்வர்களிடம் இருந்தே கிடைக்கும்.இவர்களை ஒருங்கிணைப்பது இவர்களை மதித்து சமூக மாற்றத்திற்க்கு முன்கொண்டு வருவது போன்ற  ஆக்கபூர்வமான ஒரு தளம் அமைத்து கொடுப்பதே தன் கடமையாக சபை செயல்பட வேண்டும். 

ஓரின சேர்க்கையாளர்களை இன்று பல நாடுகள் அங்கிகரித்து வருகின்றனர். மேலும் அமெரிக்க, இங்கிலாந்து ஏன் இஸ்ரயேல் நாட்டின் படையில் பணி செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது ஒரு சமூக நோயா, அல்லது ஏதாவது ஒரு பழக்கத்தின் அடிமைத்தனமா என்று ஆக்கபூர்வமான கருத்துரையாடல்கள் மூலமாகவே இதன் தீர்வை எட்ட இயலும். இன்று அரசியல் தலைவர்களிலும் ஒரு குழுவினர் ஆதரவாகவும் மறுகுழுவினரர் எதிராகவும் கருத்து தெரிவிக்கின்றனர். சபை பாபம் புண்ணியம், ஆதாம் ஏவாள் போன்ற சின்னப்புள்ளை கதைகளை விடுத்து மக்கள் தெரிந்து கொள்ளவேண்டிய தகவலை தருவதே நலமாக இருக்கும்!சபையில் ஓரின சேர்க்கை!

2 comments:

  1. கர்த்தரை வ‌ழிப‌டாத‌ ஆண்க‌ள் பெண்க‌ள் மீது தண்டணையாக‌ கட்டுக்கடங்காத காமத்தீயை பற்றி எரிய செய்து இழிவான பாலுணர்வு அதிக‌ரிக்க‌ செய்து அவர்களை தகாத ஓரினசேர்க்கை உறவு கொள்ள விட்டு விட்டார் கர்த்தர்.. – பைபிள்.

    புதிய ஏற்பாடு. NEW TESTAMENT.

    பைபிள்: உரோமையர். 1 அதிகாரம் ஸ்லோக‌ங்கள் 21 – 28

    BIBLE: ROMANS CHAPTER 1. VERSES 21. -28


    CLICK >>>>
    கர்த்தரை வ‌ழிப‌டாத‌வ‌ர்க‌ளுக்கு ஓரினசேர்க்கை தண்டணையாக ? <<<< TO READ.

    .

    ReplyDelete
  2. //ஓரின சேர்க்கையாளர்களை இன்று பல நாடுகள் அங்கிகரித்து வருகின்றனர்// ஓரின சேர்க்கை மட்டுமல்ல விபச்சாரத்தையும் பல நாடுகள் அங்கீகரித்து வருகின்றன. மனிதர்களின் விருப்பு வெறுப்பிற்காக கிறிஸ்தவத்தை மாற்ற முடியாது.
    //இவர்களை ஒருங்கிணைப்பது இவர்களை மதித்து சமூக மாற்றத்திற்க்கு முன்கொண்டு வருவது போன்ற ஆக்கபூர்வமான ஒரு தளம் அமைத்து கொடுப்பதே தன் கடமையாக சபை செயல்பட வேண்டும். // நல்ல கருத்து. அதே நேரம் இறை வேண்டுதல் என்பது எல்லா மதங்களுக்கும் பொதுவான ஒன்று. சமூக சேவையைக் கூட இறைத்துனையோடு செய்யவே எந்த ஆன்மீகவாதியும் விரும்புவான்.

    ReplyDelete