header-photo

பெய்த நூல்! போ மணிவண்ணன்

பேராசிரியர் போ. மணிவண்ணன் அவர்களுடைய எழுத்தில் தகிதா பதிப்பகத்தால் வெளிவந்த 'பெய்த நூல்' என்ற புத்தகம்  பற்றிய  என் கருத்தை   பகிர்வதை பெருமையாக எண்ணுகின்றேன்.

 தமிழில் கட்டுரை கதைகள் வசப்படும் அளவுக்கு கவிதைகள் எனக்கு  புரிந்து கொள்ள கடினம் என்பதால் கவிதைகளை கண்டு தூர விலகி ஓடுபவளே. ஆனால் என்னை போன்றவர்களையும்  புரிய வைக்கும் எளிய  மொழி நடையில் தன் கவிதைகளை படைத்துள்ளார்.

என்னுரையில் துவங்கி தன்னுடைய எளிய மனித நேயமான குண நலன்களை வெளிப்படுத்துகின்றார். தன்னுடைய ஒவ்வொரு  வளர்ச்சியையும்  வாழ்க்கையில் நடந்த சம்பவங்களையும்  எளிமையாக பகிர்ந்துள்ளார்.  வாழ்கை என்னும் வட்டத்தில் பல துயர்கள், தோல்விகள்  கண்டு  துவண்டவர்களுக்கு தாழ்வுணர்ச்சியில் இருந்து மீண்டு வரவும்,  புத்துணர்ச்சி அளிக்கும் மருந்து என்பது மட்டுமல்ல தங்களாலும் முன்னேற இயலும் என்ற ஊன்று சக்தியாகவும் பேராசிரியருடைய கவிதைகள் இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. தமிழ் மொழி படிப்பவர்களாலும்  தங்கள் வாழ்கையை சிறந்த இடத்தை நோக்கி நகர்த்தி செல்ல இயலும் எனவும் தெளிவாக எடுத்துரைத்துள்ளார்.

முதல் கவிதையூடாக   போர் களத்தில் பொலிந்து போன ஈழக் குழந்தைகளை நினைத்து  துவங்கியுள்ளார். 'தீராநதி' என்ற கவிதை வழியாக தன்னுடைய  தீராத துயர் வேளையில் கூட அடுத்தவர்கள் அதனால் பாதிக்கக்கூடாது என்பதில் இருக்கும் சக மனித நேயம் விளங்குகின்றது.

வாழ்கைக்கு தேவையான நுணுக்கங்கள் அறிந்து கொள்ள வேண்டிய அறம் சார்ந்த பண்புகள் பற்றி பல கவிதைகள் வந்து செல்கின்றன.  உலகுக்கு தேவையான அமைதியை பற்றியும், சுதந்திர உணர்வு, சமூக  மாற்றம் என மனிதர்கள் புரிந்து செயலாற்றி வெற்றி கொண்டு வாழ வேண்டிய பல அரிய கருத்துக்கள் பரவிக் கிடக்கின்றன.

மரியாதைப் பெற யாருடைய முகமனையும் 
எதிர்பார்க்காதே 
உன்னை நீயே  வணங்கி கொள்" 

விவைத்து அவைத்து உங்ளை எவைப்கள் அவர்கள் தான். பக்கம்-82

போன்ற சுயமரியாதை கருத்துக்கள் ஓங்கி உள்ளது.

சமூகத்தில் நடக்கும் வன்முறைகள் கண்ட தார்மீக ரோஷத்தால், தமிழ் மொழி படும் பாடு கண்டு, பள்ளி சிறார்களின் கல்வி முறையை கண்டு, மரம் வெட்டுதல் போன்ற தீய செயல்களை கண்டு,  இயற்கை மேல் கொண்ட பரிவால் பல கவிதைகள் மனதை நெருடம் விதம் வரைந்துள்ளார்.

காலையில் விரிந்து மாலையில் வாடும் பூவின் நிலையை கூட எண்ணி மனம் வருந்துகின்றார். பாலுக்கு என பசுவை வதைக்கும் மனிதர்கள், தண்ணீரை  வியாபாரமாக்கும் சமூகச்சுழல், வாடகை வீடு, புண் பிடித்த இந்திய தேசத்தின் சுதந்திர விழா, வறும, யாரும் அக்கரை கொள்ளாத தெரு நாய் என பலருடைய பார்வைகள் செல்லாத இடங்களில் கேள்வி கேட்கும், வருந்தும்   குரலாகவே ஒலிக்கின்றது பேராசிரியரின் பல கவிதைகள்.

சமூகம் சிந்தனை மட்டுமல்லாது  தான் சார்ந்த நிகழ்வுகளையும் ஒரு சுய சரிதை போல் பதிந்து சென்றுள்ளார். தன்னுடைய தொடர்வண்டிப் பயண அனுபவங்கள், பேருந்தில் வீறிட்டு அழுத குழந்தையின் குரல், தன் கனவுகள், காதல் உணர்வுகள், தன் குழந்தையுடனான பொழுதுகள் என சொந்த வாழ்கையும் தொட்டு செல்கின்றது பல கவிதைகள் .

போற்றப்பட வேண்டிய பெண்கள் நிலையை கண்டு துயர் கொண்டு  தன் ஆழமாக சிந்தனையால்   "என்றிலிருந்து மனுஷி'(பக்கம் 63 ) என்ற கவிதையினூடாக சமூகத்திற்க்கு நினைவுப் படுத்துகின்றார். இன்னும் ஒரு படி மேல் போய் ' ஒரு குடும்பத்தின் ஜவுளி' என்ற கவிதை வழியாக துணி என்ற பொருளை சில துல்லிய அர்த்தங்கள் கொண்ட  வரிகளின் துணை கொண்டு சிந்தித்திராத பல அரிய கருத்துக்களையும் விட்டு சென்றுள்ளார்.

'பெய்த நூல்' என்ற தலைப்பில்  ( பகக்ம் 54 ) இடம் பெற்றுள்ள கவிதை பள்ளிச் செல்லும் ஏழை மாணவிகளின் அவர்கள் அணிந்துள்ள கிழிந்த ஆடைகள், போராட்டமான பேருந்து பயணத்தையும்,  அவர்களுடைய துயர் மிகு வாழ்கையையும் கண் முன் கொண்டு வந்துள்ளார். பெய்த நூல் என்பது கிழிந்த நூல் என அடையாளப்படுத்த பட்ட வார்த்தை தலைப்பாக வந்த போது பெய்த நூல்- புத்தகங்களின்  மழையாக கருத்துக்களின் சரங்களாகவே விளங்குகின்றது.

புத்தக அட்டைப்படம்  சிறப்பாக இன்னும் பல பொருட்களை எறிந்து செல்கின்றது.  சமூக அவலங்களை கண்டு நொந்து உருகிய கவிஞரின் கலங்கிய  மனக்கலவரம் கொண்ட மேகம், ஆறுதலுக்கென தான் வாசித்த  புத்தகங்களின் குவியல், அதின் மேல் தெரியும் தெளிந்த மேகம்.  கல்வியால் ஞானத்தால் தெளிவு உண்டு, பொற் காலம் உண்டு என உணர்த்துகின்றாரோ கல்வியாளரான கவிஞர்.
 வாழ்த்துக்கள். உங்கள் பார்வையில் சமூகத்தை பார்க்க  தங்கள் அடுத்த புத்தகத்தை எதிர் நோக்கி காத்திருக்கின்றோம்.  வாழ்த்துக்கள் வணக்கங்கள்!!!!!

2 comments:

Mani Vannan · Bharathiar University said...

எனது கவிதைத் தொகுப்பான 'பெய்த நூல்' -விமர்சனங்கள் பல கண்டிருக்கிறது.இது போல நிறைவான விமர்சனத்தை உங்கள் மூலம்தான் காண்கிறது.என் கவிதைகள் சொல்ல வந்ததை உங்கள் விமர்சனங்கள் தெளிவாக வாசகர்களிடம் எடுத்து வைத்திருக்கின்றன. நல்ல தமிழில் நல்ல விமர்சனம் கண்டு வாசித்த பூரிப்பில் இருக்கிறேன். நன்றி ஜோஸப்பின்

Doha Talkies said...

அருமையான தமிழ் நடை...

Post Comment

Post a Comment