12 Nov 2011

ஊழல்- பாடசாலையில்



ஊழல் ஊழல் எதிலும் ஊழல் எல்லாற்றிலும் ஊழல் என இந்தியா வாழ்க்கை/தமிழக வாழ்க்கை  தாறுமாறாகி விட்டது.   அரசியல் வாதிகள் அதிகாரிகள் என இயன்றவன் எல்லாம் ஊழலில் 2G, 3G , மணல் கொள்ளை என்ற பல பெயர்களில் உல்லாச வாழ்க்கை தான் நடத்தி கொண்டிருக்கின்றனர். அன்னா ஹசாரே போன்றவர்கள் திடீர் அவதாரம் எடுத்து ஊழல் ஒழிப்பு என உருவாகும் போது அருந்திதி ராய் போன்றவர்கள் ' இது நாடகம்' என்று படை எடுக்கின்றனர்.  இதிலும் கொடுமை ஊழலுக்கு தண்ணீர் பாய்ச்சி உரமிட்டு வளர்க்கும் சோனியா போன்றவர்கள் ஊழலை அழிக்க வேண்டும் என்று கூக்குரல் இடுவது இன்னும் நம்மை குழம்பி விடுகின்றது!  போனால் போகட்டும் போடா நாம் ஊழலற்று வாழுவோம் என்று முடிவெடுக்கும் போது; நம் குழந்தைகளுக்கு கல்வி நிலையங்களால் ஊழலுக்கு என வகுப்பு நடத்துவது தான் தர்ம சங்கடமான நிலையாக உள்ளது!

நேற்று, என் மகன் பாடசாலையில் நடந்த சம்பவம் இன்னும் என்னை நிலை குலைய செய்து விட்டது.  நெல்லை ரோட்டறி சங்கம் சார்பில் ஒரு பெரியவர் வந்து மாணாக்களுக்கு செடிகளை கொடுத்துள்ளார்.  இவர்களும் கையில் பிடித்து கொண்டு அரைமணி நேரம் ஐயா சொற்பொழிவு ஆற்றுவதை கேட்டு கொண்டு நின்றுள்ளனர்.   தன் இரு கரங்களையும் வீசி, நடந்து தன் சொற்ப்பொழிவை நிகழ்த்தியுள்ளார்.

"அருமை பள்ளி செல்வங்களை உங்கள் கையிலுள்ள செடியை பாருங்கள் அதை உங்கள் வீட்டில் நட்டு ஒரு நாளைக்கு ஒரு முறை , இரு நாளுக்கு ஒரு முறை; அல்லது வாரம் ஒரு முறையாவது தண்ணீர் ஊற்றுங்கள்.  ஒவ்வொரு இலையையும் கூர்ந்து கவனியுங்கள் அதன் அழகை பாருங்கள் இதுவே நீங்கள் இயற்கைக்கு செய்யும் நற் செயல்.   நாளை நான் உங்கள் வீட்டின் அருகில் வரும் போது, சார் பாருங்க நீங்க கொடுத்த செடி வளந்து விட்டது என்று என்னிடம் மகிழ்ச்சியாக காட்ட வேண்டும்……………….” இப்படி அரைமணி நேரம் கதைத்துள்ளார்.  குழந்தைகள் அரைமணி நேரவும் இந்த செடியை தன் கைகளில் ஏந்தி நின்றுள்ளனர்.  பள்ளி ஆசிரியர் இதை காமராவில் படங்களாக எடுத்து கொண்டிருந்துள்ளார்.   

இதன் க்ளைமாக்ஸுதான் என் சிந்தனையை கலைய செய்து விட்டது.   அந்த  ஆசாமி பேசி முடித்ததும் மாணவர்களை… உங்கள் கையிலுள்ள செடியை அப்படியே எடுத்த இடத்தில் வைத்து விடுங்கள் என கொடுத்த செடியை வாங்கியும் விட்டுள்ளார்.  நாளை இச்செய்தி பத்திரிக்கையில் உங்கள் பள்ளி பெயருடன் வரும் என்று கூறி மாணக்களுக்கு விடை கூறி சென்றுள்ளனர்.  


ஊழல் எப்படி புரிவது என்று ரோட்டறி போன்ற கிளப் மூலமாக கற்று கொடுக்கின்றர்களா என்பதே என் கேள்வி. இதற்க்கு உடந்தை பள்ளி தாளாளர் முதல்வர், ஆசிரியர்கள்!

இதே போல் இன்னொரு அனுபவம்.   2 வருடம் முன்பு. ரோட்டறி கிளப் சார்பில் நெல்லை பள்ளி மாணவர்களுக்கு ஒரு பொது தேற்வு வைத்து பரிசு கொடுத்தனர்.  மாலை 6 மணிக்கு பரிசை வாங்கி செல்ல பணியப்பட்டோம்.  6 மணிக்கு பெற்றோர் குழந்தைகளுடன் குழுமியிருந்தாலும் உறுப்பினர்கள் ஒவ்வொவொருவராக 7 மணி ஆகியும் வந்து சேரவில்லை!  பின்பு மாறி மாறி அவர்களுக்குள் பொன்னாடை போர்த்தி மகழ்கின்றனர்… புகழ்கின்றனர்... பெண் உறுப்பினர் உதட்டு சாயம் சகிதம் இன்னும் ஒரு மணி நேரம் பிந்தி அலங்காரத்துடன் வந்து சேர்ந்தார்.  பின்பு அவருக்கு ஒரே புகழ்ச்சி மாலைகள். கடைசியாக மாணவர்களுக்கு ஒரு கோப்பை கொடுக்கப்பட்டது.
                                                                                                                                                                                                      சமூகத்தில் பணத்தாலும் பதவியினாலும் கல்வியாலும் உயர்ந்த அந்தஸ்து படைத்தவர்கள் என எண்ணப்படும்-நம்பப்படும் சிலரே இதன் உறுப்பினர்கள்.  இவர்களுக்கு சமூகத்தில் ஒரு இடம், அடையாளம் தேவை என பள்ளி மாணாக்களை ஒரு கருவியாக பயண்ப்படுத்துகின்றனர். இந்த பணக்காரர்களுக்கு ஒரு பரிசு கோப்பை என்பது நாய்க்கு எலுப்பு வாங்கி போடும் செலவு மட்டுமே. இதை செய்து விட்டு விளம்பரவும் தேடி கொள்கின்றனர். ஆனால் பிஞ்சு குழந்தைகள் மனதில் அவர்கள் செயலால் நஞ்சை விதைக்கின்றனர்.

நல்ல மனது உடையவர்கள் என்றால் நெல்லை பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியை தத்து எடுக்கலாம் அல்லது 10 மாணவர்கள் படிப்பு செலவையாவது ஏற்பார்கள். ஆனால் அவர்கள் பகிட்டை பெருமையை தெரியப்படுத்த மாணவர்கள் தான் கிடைத்தார்களா? மாணவப்பருவம் என்பது எதையும் எளிதாக தன்னகப்படுத்தி கொள்ளும் வயது. இந்த மக்களில் ஈனச்செயலை மாணவர்கள் செயல்விளக்கத்தால் கற்க வேண்டுமா? வெளி நாடுகளில்; மனித நேயம்,  பங்களிப்பு, சமூக நீதி,  சேவை என்ற உயிரிய நோக்கம் கொண்டு துவங்கப்பட்ட ரோட்டறி சங்கத்தின் தமிழகப்பதிப்பின் அசிங்கத்தை கண்டு நொந்து விட்டோம். தங்கள் பணக்கார அற்ப்பத் தனத்தை தங்கள்  பணியாளர்களோடு நிறுத்த வேண்டும் அதை பள்ளியில் பிஞ்சு குழைந்தைகளின் மனதில் தினிப்பதில் நியாயமில்லை.

அமெரிக்காவில் ஹேத்தி பூகம்பம் பின் பல வெள்ளையர்கள் தங்கள் குழந்தைகளை போன்றே கறுப்பின குழந்தைகளையும் வளர்க்கின்றார்களாம்.  வாழ்வில் உண்மை மறைக்கப்பட்டு,  பித்தலாட்டம் ஏமாற்று என்பதை கல்வியோடு தினிப்பது கண்டிக்கதக்கது அது யாராக இருந்தாலும்! 

4 comments:

  1. நல்ல பதிவு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. சுயவிளம்பரங்களுக்கான, பொழுதுபோக்கிற்கான, தமது அந்தஸ்த்தைக் காட்டிக்கொள்ளும் இடங்களாக Lions club, rotary club போன்றவை மாறிவருவது வேதனைதரும் உண்மை.

    ReplyDelete
  3. Kumaresan Asak · Chief Reporter at Theekkathir ·
    இவர்களால் பொது இடத்தில் நாலு வார்த்தை கோர்வையாகப் பேச முடியாது, தமிழும் ஆங்கிலமுமாகப் போட்டுக் குதறி எடுத்துவிடுவார்கள். பார்வையாளர்கள் விழுந்தடித்து ஓடிவிடுவார்கள், அல்லது ஓட வைப்பார்கள்.

    ஆனால், பள்ளிக் குழந்தைகள் (வேறு வழியின்றி) கட்டுப்பட்டு கடைசி வரையில் உட்கார்ந்திருப்பார்கள். அவர்களிடம் தங்களுடைய தற்பெருமைகளை அவிழ்த்துவிடலாம்.

    தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரையில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் ஏதோ பயனுள்ள முயற்சிகளும் பயிற்சிகளும் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திப் பெற்றோரிடம் பணம் பறிக்கிற ஒரு ஏற்பாடு. அத்துடன் பத்திரிகையில் படத்துடன் செய்தி வந்தால் பள்ளிக்கூட வியாபாரத்துக்கு விளம்பரம்.

    ReplyDelete
  4. Ravi Lenin Stanley · Proprietor at Mercy Fabricators
    தனிப்பட்ட முறையில் உதவி செய்ய மனதில்லாதவர்கள் பலபேர் இது போன்ற club களில் அங்கத்தினர்களாக இருப்பதுதான் உண்மை. இவர்கள் இதன் மூலம் சமூக அந்தஸ்த்து கிடைக்கிறது என்று நினைக்கிரார்கள். இவர்களின் இன்னொரு முகம் இருக்கிறது...அதுதான் மது விருந்து, பெரிய கனவான்களெல்லாம் நடந்து கொள்கிற விதம் மிகவும் கேவலமாக இருக்கும். 4 வருடம் Lions club ல் இருந்து வெளியே வந்த அனுபவம் எனக்கு உண்டு. உதவி செய்கி றதர்க்கு மதிப்பெண்கள் கிடைக்கும் என்பதற்காக உதவி செய்கிறவர்கள் இவர்கள். இதை சேவை என்று சொல்வது சுத்த ஹம்பக்.

    ReplyDelete