6 Nov 2011

கவலைக்கிடமான நிலையில் மணிமுத்தாறு பூங்கா !!!

நெல்லையில் நாங்கள் வசிக்கும் பகுதியில் மின்பழுது வேலை நடப்பதால் இன்று மாலை வரை மின்தடை என்று, 3  நாட்களுக்கு முந்தைய பத்திரிக்கையில் செய்தி வந்து விட்டது.   காலையிலே அவசர அவசர அவசரமாக சமையல், துணி துவைத்து முடித்து  எங்கள் வீட்டு தொட்டியில் தண்ணீர் நிரப்பி விட்டு 47 கி மீ பக்கத்திலுள்ள மணிமுத்தார் அணைக்கட்டு காண  பயணமானோம்.  இரண்டு வருடம் முன்பு போயிருந்தாலும் மழை பெய்து கொண்டு இருப்பதால் தண்ணீர் நிரம்பிய நீர் தேக்க தொட்டியை காணலாம் என்ற ஆசையில் இன்றைய பயணம் இருந்தது

சுற்றுமுற்றும் இருக்கும் 6 கிராமங்களின்  2756 ஏக்கர் நிலங்களில் வேளாண்மைக்கு தேவையான தண்ணீர் தரும்  மணிமுத்தாறு அணைக்கட்டு 1955-58 களில் கட்டப்பட்டுள்ளது.  இதன் கொள் அளவு 5511 மிலியன் குபிக் அடி ஆகும்.   62.4 கி.மீ பரப்பளவில், 2.9 கி.மி நீளம் கொண்ட இந்த டாம் நெல்லையின் ஒரு பிரதான சுற்றலா தளமாகும்டாமில் படகு சவாரி வசதியும் உண்டு.  கடல் மட்டத்திலிருந்து 1300 மீட்டர் உயரத்தில் மேற்க்கு தொடர்ச்சி மலையில் இருந்து புறப்பட்டு வரும் மணிமுத்து ஆறே இந்த அணையின் தண்ணீர் ஊற்று!

நாம் பழைய பேட்டை வழியாக பயணத்தை தொடர்ந்தோம்.  மழை பெய்துள்ளதால் வழி எங்கும் நிரம்பி வழியும்; அல்லி பூத்து தவழும் குளமும் ஓடும் நதிகளுமாகவே காட்சி தந்தது.   சேரமா தேவி, கல்லிடைக்குறிச்சி வழியாக சென்ற போது ஒரு பழைமையான ஆலையத்தின் சிறப்பான அமைப்பு ஈர்த்தால்  ஒரு படம் எடுத்த போது கோயில் சுற்று மதில் சுவரில் தொங்கி கொண்டிருக்கும் பாம்பை எங்கள் மகன் காட்டி தந்தார்.  

கல்லிடைக்குறிச்சி வந்து சேர்ந்த போது ஒரு டீ குடிக்கும் கடை அருகே எங்கள் வாகனம் நின்றது.   அதன் அருகில் இறந்த வீட்டு ஒப்பாரியும் கொட்டு சத்தவும் கேட்டு கொண்டிருந்தது.   பெண்கள் ஒரு சருவத்தில் 3 கிலோ அரிசி நல்லெண்ணை ஒரு தேங்காய் என வாங்கி கொண்டிருந்தனர்சில அழுது துவண்ட பெண்கள் கடைக்கு வந்து தேனீரும் பண்னும் வாங்கி சாப்பிட்டு கொண்டு;  ஒரு பூமாலை வாங்க வேண்டும் அவனிடம் கொடுத்தால் 10 ரூபாய்க்கு வாங்கி விட்டு 15 ரூபாய்ன்னு சொல்லிடுவான் நீ வாரீயாஎன கொஞ்சம் புரணியும் அடித்து கொண்டு நின்றனர். ஊழல் நம் அரசியல் தலைவர்களிடம் மட்டுமல்ல, கிராமத்திலும் மலிந்து விட்டதோ  என்று எண்ணி கொண்டு ஒரு தேனீர் 4 ரூபாய், ஒரு  பண் 3 ரூபாய் என வாங்கி சாப்பிட்டு விட்டு மறுபடியும் பயணம் ஆரம்பித்தோம்.

தமிழ்நாடு கனிமவளத் துறைக்கு சொந்தமான மார்பில் கல் வெட்டும் இடம் கடந்து சென்ற போது ஒரு படம் எடுத்ததை கண்ட காவலாளி இங்கு படம் பிடிக்க கூடாதுஎன கடமை உணர்வோடு தடுத்தார்.  நாமும் சரி என்று கதைத்து கொண்டு அடுத்த பக்கம் சென்று ஒரு படம் எடுத்து கொண்டு மணிமுத்தார்  நோக்கி போய் கொண்டிருந்த போது போலிஸ் பயிற்சி பள்ளிகள், அவர்கள் விடுதிகள், அதிகாரிகளின் குடியிருப்புகள் மிடுக்காக காட்சி அளிக்கின்றது.   எங்கும் போலிஸ் பயிற்சி மாணவிகள், மாணவர்கள் மயமாகவே இருந்தது.   சிரித்த முகம் போலிஸை கண்டாலும் 'போலிஸ்' நமக்கு அறியாத ஒரு பயத்தை தந்து மின்னி மறைகின்றதை உணர முடிந்தது.  வெள்ளை சீருடை அணிந்த போலிஸ் மாணவிகள் தான் இருமாப்பில் மிதி வண்டியில் நடமாடி கொண்டிருந்தனர்.

மணிமுத்தார் நீர்தேக்கம் வந்து விட்டோம்!  தங்க நிறத்திலான காத்திரமில்லாத ஒல்லியான திருவள்ளுவர் நம்மை வரவேற்கின்றார்.   நம் வாகனத்தை டாமின் அடிப் பக்கம் கொண்டு சென்று நிறுத்தினோம்.  எங்களுக்கு முன் ஒரு சிறு குழு சென்று திரும்பி கொண்டிருந்தது.  அதன் பக்கத்தில் படிகெட்டு வழியாக அணைக்கட்டின் மேல் பக்கம் செல்லலாம்.  வீட்டு மாடிக்கே செல்ல மடிக்கும் எனக்கு பெரும் பாடாக  இருந்தது படி ஏற்றம்!  மேல் பக்கம் சென்ற போது அவ்வளவு அழகு!  இயற்கை அழகும் மேற்கு தொடர்ச்சி மலையும், நேர்த்தியாக கட்டியுள்ள அணைக்கட்டும் சொல்ல வார்த்தைகள் இல்லாதிருந்தது.   இனிமையான மனதிற்கு இதமான காட்சியின் அணிவகுப்பாக  இருந்தது.  சுற்றி முற்றி எங்கு நோக்கினும் இயற்கையின் நளின நடனமாக இருந்ததுமனதில்லா மனதாக நாங்கள் கீழ் நோக்கி இறங்கிய வர; ஒரு அம்மா 3 குழந்தைகளுடன் மேல் நோக்கி வந்து கொண்டிருந்தார்.  பூட்டி யிட்ட வெளிக்கதவுக்குள் செல்ல சிறு பையன் முயன்று கொண்டிருந்தான்.  அம்மா சுற்றி முற்றும் நோக்கி விட்டு கீழை வர எத்தனித்து கொண்டிருக்க மேல் நடந்து வரும் மகளை கண்டு “ இங்க ஒன்னும் பார்க்க இல்லை..நீ ஏன் மேலே வாறேஎன்று தன் வெறுப்பை வார்த்தையால் உதிர்க்க மகள்எனக்கு மேல் வந்து பார்க்கனும்”  என்று நாகர்கோயில் தமிழில் கதைத்து கொண்டு விடாபிடியாக மேல் நோக்கி வந்து கொண்டிருந்தார்

சுற்றலாத் துறையின் ஆழ்ந்த நித்திரையை உணர்த்தியது நீர் தேக்கத்தின் அருகிலுள்ள பூங்கா வனம்.   உள்ளூர் மக்களுக்கு  ஆடு  மாடு மேய்க்கும் வனமாக மாறியுள்ளது அழகிய அமைப்பிலான பூங்கா!. பூங்காவிலுள்ள சிலைகள் உடைந்தும் பொலிவற்றும் காணப்படுகின்றது.  கப்பலோட்டி வா.வொசிதம்பரம் பிள்ளை ஒரு கை ஒடித்த நிலையில் நின்று கொண்டிருந்தார்.  கவலையுடன் திரும்பிய போது ஒரு குரங்கு கூட்டம் எங்கள் மகன் கையிலுள்ள தின்பண்டம் பறிக்கும் நோக்குடன்  கூட்டமாக நம்மை நோக்கி படை எடுத்தது.  அணைக்கட்டின் மேல் பக்கம் உள்ள அருவிக்கு செல்ல விருப்பம் கொண்டாலும் திடீர் மழை நம்மை விரட்டி மணிமுத்தார் ஊர் எல்கையில் கொண்டு விட்டது.

மகனுக்கு அருவில் குளிக்க இயலவில்லை என்ற வருத்தம். அவர் மனம் குளிர்விக்க ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து வீட்டு அருகில் வரும் முன், விரட்டிய மழை நம்மை பிடித்து கொண்டது. வீடு வந்து சேர்ந்த போது, பலத்த மழையால் காலையில்  துவைத்து இட்ட துணிகள் அசையில் மறுபடியும் குளித்து கொண்டிருந்தது!!!

22 comments:

  1. Thambirajah Elangovan · Subscribed · Paris, France

    மணிமுத்தாறைப் பார்த்து மழையையும் கொண்டுவந்து எம்மையும் குளிர வைத்தமைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  2. R.c. Palaniappan

    மிக அழகு காட்சிகள் ! மழை பெய்து அணைக்கட்டு தண்ணீர் நிரம்பி .விவாசாயம் செழிக்கட்டும் ! இனிய காலை வணக்கம் !

    ReplyDelete
  3. Subi Narendran

    இந்த படங்கள் அழகோ அழகு கொள்ளை அழகு. படம் பிடித்த கைகளுக்கு ஒரு மோதிரம், கண்களுக்கு பாராட்டு. இயற்கை, அழகாய் தெரிகிறது. Thanks a lot jos, for takeing me to the மணிமுத்தார்.

    ReplyDelete
  4. Punitha Vellasamy · Petaling Jaya, Malaysia
    தங்கள் எழுத்தில் லயித்த மனம், கவலைக்கிடமான மணிமுத்தாறு பூங்காவை நினைத்து வெம்பியது. கண்ணில் பட்ட அவல நிலையை எழுத்தில் வடித்தீர்கள் இதற்கு விடிவு பிறக்காதா என்ற நப்பாசையில். எழுத்தில் சித்தரிக்கப்பட்டதை, நித்திரையில் இருக்கும் சுற்றுலா துறையினை எழுப்பி இந்த அவல நிலையை மாற்ற யாரேனும் பரிந்துரை செய்தால், அது தங்கள் எழுத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான். ஆசை, நிராசையா? பொருத்திருந்து பார்போம்...

    ReplyDelete
  5. Sivasiva Denmark
    முத்துப்போல் நீர்த்துளிகள் மணிமணியாய் உருண்டோடும் மணிமுத்து ஆற்றை ஆதாரமாகக் கொண்ட மணிமுத்தாறு அணைக்கட்டை பார்க்கச்சென்று திரும்பும்வரை உங்கள் மனதில் எழுந்த சிந்தனைகள் வலிகள் கீறல்கள் அத்தனையும் சுமந்தது இவ்வாக்கம். ஈரத்துணிகள் திரும்பவும் நனைந்து தொங்கியது உங்கள் உள்ளத்தில் திரும்பவும் அதே உணர்வலைகள். அணைக்கட்டு பயணம் ஒரு சிறந்த சிந்தனையாளி என்றவகையில் சில காயத்தடன் உங்களை அனுப்பியுள்ளது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Srikandarajah கங்கைமகன் · Jaffna uni, colobmo uni, annaamalai uni
    மணிமுத்தாறு பார்ப்பதற்கு அவசரமாக சமைத்ததுபோல்தான் இருக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்படுவதற்காக அவசரப்படவில்லைபோல் தெரிகிறது. கோவலன் கண்ணகியை மதுரைக்கு அழைத்துச் செல்லும்போது இளங்கோவடிகள் அவர்கள் கடந்து சென்ற பாதைகளை மிகவும் அழகாக வர்ணித்திருந்தார். அதைவிட அழகான வார்த்தைகளில் கண்ணில_; தென்பட்டதை எல்லாம் தமிழால் கொட்டித் தீர்த்திருப்பது உங்கள் தனிச்சிறப்பு. எத்தனையோ இடங்களை உங்கள் வலைக்குள்ளேயே பிடித்து வைத்திருக்கின்றீர்கள். நமது மூதாதையர்களை (குரங்குக்) பார்த்ததும் கூட எனக்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. Karthikeyan Saravanan · Subscribed · Barathiyar university
    அருமையானதொரு பதிவு,அதற்கான படங்களும் அழகு பகிர்வுக்கு நன்றி...:)

    ReplyDelete
  8. Peruvaanan Bala கூறியுள்ள விதம் இலகு தமிழில் இம்சையாக அல்லாமல் இனிமையாக அமைந்துள்ளது , வாசிப்போரைக் கவரும் வண்ணம் நேர்த்தியாக ,கண்ட காட்சிகளை கண் முன்னே கொண்டு வர வைத்துள்ளீர்கள் ,இயற்கைக் காட்சிகளின் வனப்பு எதிலும் காண முடியாது .......... nalla pathivu

    ReplyDelete
  9. Rajini Sri wow must be a nice place .well said ...

    ReplyDelete
  10. Selvanathan Selva · Chennai Anna Univercity of Technology
    சுற்றுலா துறை கஜானா.
    சூறையாடப்படுகிறது
    சுழலும் அரசியலால்...
    கோட்டுக்குள் வேடமிடும்.
    கொடியவர்களிடம்
    வோட்டுக்கு காசு வாங்கும்.
    மக்கள் இருப்பதால்
    மமதையில் ஜெயிக்கிறான்
    மார்வாடியில் வைக்கிறான்
    மக்கள் வர்ப்பனத்தை....
    மக்கள் மனம் மாறுமா..

    ReplyDelete
  11. பொன்னர் அம்பலத்தார் ·
    நேர்முகவர்ணனை ஒன்றைக் கேட்பதுபோன்றும், நானே அந்த இடங்களினூடாகப் பயணிப்பதுபோன்றும் இருவித உணர்வையையும் ஒரே நேரத்தில் உங்கள் பதிவு எனக்குத்தந்தது.

    ReplyDelete
  12. Thambirajah Elangovan · Subscribed · Paris, FranceMay 23, 2012 9:41 pm

    மணிமுத்தாறைப் பார்த்து மழையையும் கொண்டுவந்து எம்மையும் குளிர வைத்தமைக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்..!

    ReplyDelete
  13. R.c. PalaniappanMay 23, 2012 9:41 pm

    மிக அழகு காட்சிகள் ! மழை பெய்து அணைக்கட்டு தண்ணீர் நிரம்பி .விவாசாயம் செழிக்கட்டும் ! இனிய காலை வணக்கம் !

    ReplyDelete
  14. Subi NarendranMay 23, 2012 9:42 pm

    இந்த படங்கள் அழகோ அழகு கொள்ளை அழகு. படம் பிடித்த கைகளுக்கு ஒரு மோதிரம், கண்களுக்கு பாராட்டு. இயற்கை, அழகாய் தெரிகிறது. Thanks a lot jos, for takeing me to the மணிமுத்தார்

    ReplyDelete
  15. Punitha Vellasamy · Petaling Jaya, MalaysiaMay 23, 2012 9:42 pm

    தங்கள் எழுத்தில் லயித்த மனம், கவலைக்கிடமான மணிமுத்தாறு பூங்காவை நினைத்து வெம்பியது. கண்ணில் பட்ட அவல நிலையை எழுத்தில் வடித்தீர்கள் இதற்கு விடிவு பிறக்காதா என்ற நப்பாசையில். எழுத்தில் சித்தரிக்கப்பட்டதை, நித்திரையில் இருக்கும் சுற்றுலா துறையினை எழுப்பி இந்த அவல நிலையை மாற்ற யாரேனும் பரிந்துரை செய்தால், அது தங்கள் எழுத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிதான். ஆசை, நிராசையா? பொருத்திருந்து பார்போம்...

    ReplyDelete
  16. Sivasiva DenmarkMay 23, 2012 9:43 pm

    முத்துப்போல் நீர்த்துளிகள் மணிமணியாய் உருண்டோடும் மணிமுத்து ஆற்றை ஆதாரமாகக் கொண்ட மணிமுத்தாறு அணைக்கட்டை பார்க்கச்சென்று திரும்பும்வரை உங்கள் மனதில் எழுந்த சிந்தனைகள் வலிகள் கீறல்கள் அத்தனையும் சுமந்தது இவ்வாக்கம். ஈரத்துணிகள் திரும்பவும் நனைந்து தொங்கியது உங்கள் உள்ளத்தில் திரும்பவும் அதே உணர்வலைகள். அணைக்கட்டு பயணம் ஒரு சிறந்த சிந்தனையாளி என்றவகையில் சில காயத்தடன் உங்களை அனுப்பியுள்ளது.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  17. Srikandarajah கங்கைமகன் · Jaffna uni, colobmo uni, annaamalai uniMay 23, 2012 9:43 pm

    மணிமுத்தாறு பார்ப்பதற்கு அவசரமாக சமைத்ததுபோல்தான் இருக்கிறது. மின்சாரம் துண்டிக்கப்படுவதற்காக அவசரப்படவில்லைபோல் தெரிகிறது. கோவலன் கண்ணகியை மதுரைக்கு அழைத்துச் செல்லும்போது இளங்கோவடிகள் அவர்கள் கடந்து சென்ற பாதைகளை மிகவும் அழகாக வர்ணித்திருந்தார். அதைவிட அழகான வார்த்தைகளில் கண்ணில_; தென்பட்டதை எல்லாம் தமிழால் கொட்டித் தீர்த்திருப்பது உங்கள் தனிச்சிறப்பு. எத்தனையோ இடங்களை உங்கள் வலைக்குள்ளேயே பிடித்து வைத்திருக்கின்றீர்கள். நமது மூதாதையர்களை (குரங்குக்) பார்த்ததும் கூட எனக்கு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. Karthikeyan Saravanan · Subscribed · Barathiyar universityMay 23, 2012 9:44 pm

    அருமையானதொரு பதிவு,அதற்கான படங்களும் அழகு பகிர்வுக்கு நன்றி...:)

    ReplyDelete
  19. Peruvaanan BalaMay 23, 2012 9:44 pm

    கூறியுள்ள விதம் இலகு தமிழில் இம்சையாக அல்லாமல் இனிமையாக அமைந்துள்ளது , வாசிப்போரைக் கவரும் வண்ணம் நேர்த்தியாக ,கண்ட காட்சிகளை கண் முன்னே கொண்டு வர வைத்துள்ளீர்கள் ,இயற்கைக் காட்சிகளின் வனப்பு எதிலும் காண முடியாது .......... nalla pathivu

    ReplyDelete
  20. wow must be a nice place .well said ...

    ReplyDelete
  21. Selvanathan Selva · Chennai Anna Univercity of TechnologyMay 23, 2012 9:45 pm

    சுற்றுலா துறை கஜானா.
    சூறையாடப்படுகிறது
    சுழலும் அரசியலால்...
    கோட்டுக்குள் வேடமிடும்.
    கொடியவர்களிடம்
    வோட்டுக்கு காசு வாங்கும்.
    மக்கள் இருப்பதால்
    மமதையில் ஜெயிக்கிறான்
    மார்வாடியில் வைக்கிறான்
    மக்கள் வர்ப்பனத்தை....
    மக்கள் மனம் மாறுமா..

    ReplyDelete
  22. பொன்னர் அம்பலத்தார் ·May 23, 2012 9:46 pm

    நேர்முகவர்ணனை ஒன்றைக் கேட்பதுபோன்றும், நானே அந்த இடங்களினூடாகப் பயணிப்பதுபோன்றும் இருவித உணர்வையையும் ஒரே நேரத்தில் உங்கள் பதிவு எனக்குத்தந்தது.

    ReplyDelete